All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"கல் நெஞ்சே கசிந்துருகு " கதைப் பகுதி

Status
Not open for further replies.

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி அப்போது தான் கல்லூரிக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தான். அவனது அலைபேசி ஒலிக்கவும் , அதை எடுத்து பேசியவனுக்கு தினேஷ் சொல்லிய செய்தியை கேட்டதும் அவனை கொன்று விடும் அளவுக்கு கோபம் வந்தது. ஆனால் அவனது கோபத்தை தினேஷிடம் காட்டும் நேரம் இதுவல்லவே..

தினேஷிற்கு பயமாக இருந்தது. ஆதியின் கோபத்தைப் பற்றி அவன் அறிந்ததே. அன்று அவன் அடித்த அடி இன்றும் அவன் நினைவில் இருக்கிறது. ஆனால் தற்போது மதியல்ல முக்கியம். தனை சிநதித்தவன் " ஆதியை அழைத்தான்.

"ஆதி...... ஆதி..... லைன்ல இருக்கியா.... ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு. நா இவ்ளோ பிராப்ளம் ஆகும்னு நினைக்கல. என் மேல நீ கோபமா இருக்கேனு தெரியும். ஆனா இப்ப மதிய காப்பத்துறது தான் முக்கியம். ப்ளீஸ் ஏதாச்சும் பண்ணு"

ஆதியும் அதை தானே சிந்தித்துக் கொண்டிருந்தான். "சரி நா பாத்துக்குறேன். நீ போன வை" என்று கோபத்தை அடக்கியக் குரலில் சொன்னான். எங்கே பேச பேச தன்னுடைய கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாதோ என்று நினைத்தவன் அலைபேசியை கட் செய்து விட்டு யோசிக்க ஆரம்பித்தான்.

அவன் இருக்கும் இடத்திலிருந்து மதி ஆபத்தில் சிக்கியிருக்கும் இடத்தை அடைய வேண்டுமானால் அரை மணி நேரம் ஆகும். அதுவரை மதிக்கு பாதுகாப்பில்லை என்றெண்ணியவனுக்கு சட்டென நினைவில் வந்தது அவர்களது தொழிற்சாலையில் மேனேஜராக வேலைப் பார்க்கும் முத்துக் குமார்.


அவருக்கு அழைத்தவன் விவரத்தை சொல்லிவிட்டு அந்த பகுதியில் வசிக்கும் தங்களது வேலையாட்கள் மூலம் மதியை தேட சொன்னான். தனது தந்தையிடம் கூட இதுபற்றி தெரிவிக்க வேண்டாம் என அவரிடம் கட்டளையிட்டவன் தானும் மதியை தேடி புறப்பட்டான்.


அவனது மனம் முழுவதும் மதியே நிறைந்திருந்தாள். அவளது அழகு யாரையும் திரும்பி பார்க்க வைக்கக் கூடியது. அதனால் அவளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிட கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொண்டான். அவளிடம் அவன் வம்பு செய்த நினைவுகளும் பயத்தில் விரிந்த அவளது கண்களுமே அவனது நினைவில் நின்றன.

ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை தன்னுடைய ஆட்களைத் தொடர்பு கொண்டு அவளைப் பற்றி விசாரித்தான். காலையில் கல்லூரி, பள்ளி, வேலை என அனைவரும் பயணிக்கும் நேரம் என்பதால் கூட்ட நெரிசல் அதிகமாகவே இருந்தது. அப்படி இருந்தும் அரை மணி நேரத்தில் போக வேண்டிய இடத்தை இருபது நிமிடங்களில் அடைந்தான்.

அவன் அந்த கோவில் இருந்த இடத்தை அடைந்ததும் மணியின் கார் ஓரமாக நின்றிருப்பதை பார்த்தவாறு அந்த சந்துக்குள் செல்ல வண்டியை வேகமாக செலுத்தினான். அந்த நொடி வரை இல்லாமல் அவனது இதயம் துடிக்கும் ஓசை அவனுக்கு கேட்டது.

அவனைச் சுற்றியிருந்த உலகம் அவனது கண்முன்னே மறைந்தது போல தோன்றியது. மதி மதி என அவனது மனம் ஓலமிட அந்த சந்தை அடைந்தான். மதிக்கு எதுவும் நடந்திட கூடாது. இது மட்டும் தான் அவனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவன் அந்த இடத்தை அடைந்தவுடன் அவனது ஆட்கள் அவனை எதிர் கொண்டனர்.

அவர்களது முகத்தில் கலவரம் தெரிந்தது. அதைப் பார்த்த நொடி ஆதியின் மனம் துவண்டது. தான் நடக்க கூடாது என நினைத்தது நடந்து விட்டதோ!!! மதி...... மதி........ அந்த நிமிடம் அவன் மனதில் மதி மட்டுமே நிறைந்திருந்தாள்.

ஆனால் அவன் முகத்தில் எதையும் காட்டாது இறுக்கமாகவே வைத்திருந்தான். அவனது ஆட்களில் ஒருவன் அவனை நெருங்கி மெதுவாக விஷயத்தை சொன்னான். அப்போது தான் ஆதிக்கு உயிர் வந்ததை போல இருந்தது. ஒரு நிமிடம் நின்று தன்னை அமைதி படுத்திக் கொண்டவன். மதியைக் காண விரைந்தான்.

அந்த சந்தை நோட்டமிட்டவாறே அவன் நடந்தான். ஆள் நடமாட்டமில்லாத பகுதி. இங்கே என்ன நடந்தாலும் யாருக்கும் எதுவும் தெரியாது. அருகருகே வீடுகள் இருந்தன. அவற்றிலும் யாரும் வசிக்காமல் தூசிப் படிந்து கிடந்தன. அதனைத் தாண்டி சற்று தூரத்தில் பாட்டில்கள் , உடைந்த பொருட்களின் பகுதிகள், பழைய துணிகள் என்று பல பொருட்கள் அங்கே குவித்து வைக்கப் பட்டிருந்தன. மொத்தத்தில் அந்த இடம் ஒரு குப்பை கிடைங்கை போல காட்சி அளித்தது.

அவனுக்கு தினேஷ் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. " ஆதி...... நா தினேஷ் பேசுறேன். ப்ளீஸ் போன வச்சுடாத. இது மதி சம்பந்தப் பட்ட விஷயம். மதியோட உயிருக்கு ஆபத்து . அவள காப்பாத்து" என கடகடவென சொல்லி முடித்தான். முதலில் ஆதி அதை நம்ப வில்லை.

ஆனால் மதி என்ற பெயரைக் கேட்டதும் அவனது மனதில் ஒரு அதிர்வு தோன்றியது உண்மை. அவனது அமைதி தினேஷை பயமுறுத்தியதோ என்னவோ அவனே மீண்டும் தொடர்ந்தான். "ஆதி.... நா சொல்றத நீ நம்பலயா.... நா பொய் சொல்லல. என்ன நடந்துச்சுனா" என்றவன் மதியும் கண்டது முதல் அவளை துரத்தியது வரை சொல்லி முடித்தான்.

"நா அவள பயமுறுத்த தான் நினச்சேன். ஆனா அவ ஓடிப் போவானு நா நினைக்கல. நா அவ பின்னாடியே ஓடுனேன். அப்பதான்" என்றவன் எச்சில் விழுங்கும் சப்தம் ஆதிக்கு தெளிவாக கேட்டது.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தினேஷின் பயம் ஏனோ ஆதியின் இதயத் துடிப்பை அதிகரித்தது."சொல்லு.... மதிக்கு என்னாச்சு"

"ஆதி ஒரு ஆள நாலஞ்சு பேரு துரத்திட்டு வந்தாங்க. படத்துல பாக்குற மாதிரி இருந்துச்சு. அவங்க எல்லாரும் முகத்த முடியிருந்தாங்க. கையில நிறைய ஆயுதம் இருந்துச்சு. எனக்கு என்ன நடக்க போகுதுனு தெரிஞ்சுடுச்சு. அவங்க என்ன பாக்குறதுகுள்ள நா பயந்து திரும்பி ஓடி வந்துட்டேன். கொஞ்ச தூரம் வந்ததும் தான் மதி ஞாபகம் எனக்கு வந்துச்சு. எனக்கு பயமாயிருக்கு . ஏதாவது பண்ணு ஆதி. அவங்க மதி போன பக்கம் தான் போனாங்க. மதிய ஏதும் பண்ணுறதுக்கு முன்னாடி காப்பாத்து ஆதி" என்றான்.

அதை நினைத்துக் கொண்டே அந்த இடத்திற்கு வந்தவன் தன்னுடைய ஆட்கள் சொன்ன தகவலின்படி அட்டைப் பெட்டிகள் குவிந்து கிடந்த பகுதியை நோக்கிச் சென்றான். அவன் செல்லும் பாதையில் சரியாக அந்த அட்டை பெட்டிகள் இருந்த பகுதிக்கு சற்று முன் நிறைய இரத்தம் சிந்திக் கிடந்தது.

அதை மிதித்து விடாமல் கவனமாக நடந்தவன் நடந்திருக்கும் நிகழ்வை யூகித்தான். சற்று குரலை உயர்த்தி பேசினாலே பயம் கொள்ளும் மதி இன்று எப்படி பயத்திருப்பாள் என்பதை அவனால் உணர முடிந்தது. அந்த குவியலுக்கு பின்புறம் சென்றவன் அதிர்ந்து போய் நின்றான். அவனது ஆட்கள் அவனை சுற்றி நின்றனர். இந்த உலகில் தன்னுடைய மரணத்திற்கு அஞ்சாதவர்கள் கூட தன்னவர்களின் சிறு துன்பத்தில் துடித்து போய்விடுவார்கள். ஆதியின் நிலையும் அது தான்.

"தம்பி இங்க எதுவோ தப்பா நடந்திருக்கு... யாரையோ என்னவோ பண்ணிருக்காங்க. இந்த பொண்ணு இங்க ஒளிஞ்சிருந்தது அவனுங்களுக்கு தெரியல போல. இல்லனா அவ்ளோ தான். பயத்துல மயக்கம் போட்டுட்டாங்க போல. நாங்க வந்து எல்லா இடத்துலயும் தேடுனோம். இவங்க இங்க மயங்கி கிடந்தாங்க.

உங்களுக்கு சொல்லலாம்னு போன போடப் போனோம். நீங்களே வந்துட்டிங்க. நல்லா மகாலெஷ்மி மாதிரி இருக்கு தம்பி பொண்ணு. நல்ல வேள அந்த பாவிங்க கண்ணுல படல. நீங்க தான தம்பி சொன்னீங்க. அவங்களுக்கு எந்த பிரச்சனயும் வராம பாத்துகணும். ஆனா அவங்கள யாரும் நெருங்க கூடாதுனு. அதான் நீங்க வர வரைக்கும் காவலா நின்னுகிட்டு இருந்தோம்" என்றார் அங்கிருந்தவர்களில் வயதில் பெரியவர்.

அவனது செவிகளில் அவர் பேசுவது விழுந்தாலும் கவனத்தில் எதுவும் பதியவில்லை. அவர்களில் ஒருவரிடம் திரும்பியவன் தன்னுடைய பைக் சாவியைக் கொடுத்து அதனை எடுத்ணு வருமாறு கூறினான். அங்கிருந்த அனைவரிடமும் நன்றியுரைத்தவன் மறந்தும் இதனை வெளியில் சொல்லக் கூடாது என எச்சரித்தான்.

அவர்களும் அவனுக்கு உத்திரவாதம் அளித்தனர். தங்களுடைய சின்ன முதலாளியைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதுவரை அவன் அவர்கள் யாரிடமும் பேசியதில்லை. ஆனால் தன்னிடம் வந்து பேசுபவர்களை தொழிலாளி என்று ஒதுக்குபவன் கிடையாது.

எப்போதும் கம்பீரமாய் இருக்கும் முதலாளியின் முகத்தில் என்று தான் பதட்டத்தைப் பார்க்கிறார்கள். இனி அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அவர்கள் அவனிடம் விடைப் பெற்றனர். அவர்கள் சற்று தூரம் செல்லும் வரை அமைதியாக இருந்தவன் அவர்களது தலை மறைந்ததும் அப்படியே மண்டியிட்டு மதியின் அருகே அமர்ந்தான்.

"மதி...... மதி...... என்னப் பாருடி.....
கண்ணத் திறந்து பாருடி... " என அவளது கன்னத்தை தட்டியவன் அவளை தனது கைகளில் ஏந்தினான். அவளை ஏந்தியபடியே அவளது காரினில் அவளை அமர வைத்து அவளை முகத்தினில் அங்கிருந்த பாட்டிலிலிருந்து தண்ணீர் தெளித்து எழுப்பினான்.

"மதி..... கண்ணத் திறடி..... உனக்கு ஒண்ணும் ஆகல.... நல்லா தான்டி இருக்க... " என்று மீண்டும் கெஞ்சினான். ஆனால் அவளோ கண்களைத் திறவாமல் மயங்கி கிடந்தாள். ஆதிக்கு பயம் வந்தது" ஏய்...... கண்ணத் திறனு சொல்றேன்ல.... இப்ப திறக்கப் போறியா இல்லையா" என்று கத்தியவாறு அவள் முகத்தில் மீண்டும் தண்ணீர் தெளித்தான்.

அவனது கோபக் குரல் மதியின் ஆழ் மனதைத் தொட்டது. கண்களைப் பிரிக்க முடியாமல் அவள் திணற , அவள் விழியின் கருமணிகள் அசைவதைக் கண்டு ஆதிக்கு நம்பிக்கை வந்தது. அவன் மீண்டும் தண்ணீர் தெளித்து , அவளது கன்னத்தைத் தட்டி பெயரைச் சொல்லவும் மதி அவளது அழகிய விழிகளை மெல்லத் திறந்தாள்.

கண்விழித்தவள் ஆதியை அங்கு எதிர்ப் பார்க்காததினாலும், ஏற்கனவே நடந்து விட்ட நிகழ்வுகளின் தாக்கத்தாலும் மிரள ஆரம்பித்தாள். காரை விட்டு இறங்கி ஓட முயற்சித்தாள். அவளை தடுத்தவன் , பொறுமையாக பேச முயற்சி செய்தான்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மதி..... சொன்னா கேளுடி. எந்த பிரச்சனையும் இல்ல. நீ நல்லாருக்க" என்று பொறுமையாகவே சொன்னான். ஆனால் அவளோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவ்விடத்தை விட்டு போவதிலேயே இருந்தாள். அவளது மூளை ஆதியைக் கூட அடையாளம் காட்டவில்லை. அதிர்ச்சியிலிருந்து வெளிவர முடியாமல் பைத்தியம் போல நடந்து கொண்டாள்.

சின்ன சிறு விஷயத்திற்கே அழும் மதி இன்னும் அழாமல் இருப்பணைக் கண்ம இதற்கு மேலும் பொறுமையை கடைபிடிக்க முடியாது என்றெண்ணி " மதி....." என்று கோபமாய் அழைத்து அவளை ஓங்கி அறைந்தான். அவனது அறையில் அவளது உதடு கிழிந்து இரத்தம் வந்தது. ஆனால் அவளுக்கு நிகழ்காலம் புரிந்தது.


அவளது நினைவுகள் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர தன்னருகில் அமர்ந்திருந்த ஆதியைப் பார்த்தாள். "ஆது...... ஆது..... " என்றவள் அவன் தான் சற்று முன்னர் தன்னை அடித்தான், அவனைக் கண்டாலே தனக்கு பயம் வரும் என எல்லாவற்றையும் மறந்து தனக்கு தெரிந்த ஒருவனைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியிலும், அவள் பார்த்த நிகழ்வுகளின் தாக்கத்திலும் தன்னிலை மறந்து அவனை இடக்கரத்தினைக் கெட்டியாக பிடித்தவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவளது நிலையை உணர்ந்த ஆதி ஆதரவாக அவளது தலையை தடவிக் கொடுக்க அவளது அழுகை குறையவில்லை. ஆது.... ஆது..... என்றழைத்துக் கொண்டு அவள் இடைவிடாமல் அழுவதைப் பார்த்த ஆதிக்கு முதன் முறையாக மனம் வலித்தது. அதே நேரம் அவளது இந்த நிலைக்கு காரணமான தினேஷ் , அந்த முகம் தெரியாத நபர்களை கொன்று விடும் கோபம் இருந்தது.

அவளை சமாதானப் படுத்துவது தான் இப்போது முக்கியம் என நினைத்தவன், தனது தோளில் புதைந்திருந்த அவளது முகத்தை நிமிர்த்தினான். " மதி.... என்ன பாரு . உனக்கு ஒண்ணும் ஆகல. நீ நல்லா தான் இருக்க. அதனால அழுகைய நிறுத்து"

அவன் இதுவரை யாரிடமும் இவ்வளவு பொறுமையாகவும், மென்மையாகவும் பேசியது கிடையாது. அவனது முகத்தை பார்த்த மதி பயத்தில் அரண்டு விழித்தாள். "என்னாச்சு மதி. ஏன் பயப்படுற. " அவனுக்கு அவளது பயம் பிடிக்கும் தான். அதற்காக அவளை எப்போதும் சீண்டிக் கொண்டு இருப்பான் தான். அப்போதெல்லாம் அவளது முகத்தில் தெரிவது தவறு செய்து விட்டு தன்னை அடித்து விடுவார்களோ என அஞ்சும் சிறு குழந்தையின் பயமே. அதை தான் அவன் ரசித்தான். ஆனால் இன்று அவள் முகத்தில் தெரிவது மரண பயம்.

"மதி சொன்னா கேளு. உனக்கு ஒண்ணுமில்ல. சரி வா உன்ன உங்க வீட்டுல விட்டுட்டு நா போறேன். வீட்டுக்கு போனா எல்லாம் சரியாகிடும். அதுக்கு முன்னாடி ரொம்ப பயந்துருக்க . சூடா எதையாவது குடிச்சா சரியாகிடும் . " என்று அவளது தலையை மென்மையாக வருடிக் கொடுத்தப்படி அந்த இடத்தை விட்டு காரை கிளப்பினான்.

மதி அமைதியாக வந்தாலும் அவனது தோள்களை விட்டு விலகவில்லை. வழியில் தெரிந்த உணவகத்தில் காரை நிறுத்தியவன் கீழே இறங்க முயன்றான். அப்போது தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தான். மதி அவனது கரத்தினை இறுக பிடித்துக் கொண்டு அவனை விட மறுத்தாள்.

இதுவரை அவனாக தான் அவளிடம் பேசுவான் மதி அவனிடம் ஒதுங்கி தான் இருப்பாள். இன்று அவளது நடத்தையில் மாற்றம் தெரிந்தது. பயத்தினால் அவள் அவ்வாறு செய்வதாக நினைத்தவன் " மதி... கைய விடு . அப்ப தான் உனக்கு ஏதாவது வாங்கிட்டு வர முடியும். "

அவள் முடியாது என்பது போல் தலையசைக்க ஆதிக்கு தான் தலை சுற்றியது. இது வரை அவன் எந்த பெண்களிடமும் நெருங்கி பழகியதில்லை. தன்னுடைய நண்பர்களிடம் கூட பொறுமையாக பேசியதில்லை. யாருக்கும் எந்த பணிவிடையும் செய்ததில்லை. அவனது வாழ்வில் இருந்த இரு பெண்களும் அவனிடம் பாசம் மட்டுமே காட்டியுள்ளனர். அவர்களது தேவைகளையோ , வேதனைகளையோ அவன் அறிந்ததில்லை.

மதியை எப்படி கையாளுவது என்று அவனுக்கு புரியவில்லை. கோபத்தை முடிந்த அளவு கட்டுபடுத்தி அவளை நெருங்கியவன் "மதி." என்றழைத்தவன். அவளது கையிலிருந்து தனது கரத்தினை பிரிக்க முயன்றான்.

அவ்வளவு தான் மதி பயத்துடன் அவனை அனைத்துக் கொண்டாள். ஆதி இதனை எதிர்ப்பார்க்க வில்லை. அதிர்ந்து போய் நின்றான். சில நொடிகள் தடுமாறியவன் அவளை தன்னிடமிருந்து பிரிக்க முயல்கையில் மதி பயத்தில் உளற ஆரம்பித்தாள்.

"ஆது.... ஆது ...... எனக்கு பயமாயிருக்கு. என்ன விட்டு போகாதீங்க. அவங்க...... அவங்க என்ன கொண்ணுடுவாங்க. நா பாத்தேன். அவங்கள பாத்தேன். பாவம் மாமா அவர என் கண்ணே முன்னாடியே கொண்ணுடாங்க.
எனக்கு எவ்ளோ பயமா இருந்துச்சு தெரியுமா??? அவங்க மாமாகிட்ட முதலாளி மேல அவ்ளோ விசுவாசமா?? எத்தன நாள் உன் முதலாளியோட பொண்ணு தப்பிப்பானு பாக்குறேனு சொல்லி சொல்லியே...." என்றவள் கதறி அழுதாள்.

ஆதி அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான். அங்கு நடந்திருக்கும் நிகழ்வை அவனும் அறிந்திருந்தானே..அதனால் தான் அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்டு அவளை துன்புறுத்த எண்ணாமல் அவளை இயல்பாக்க எண்ணினான்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதி சொன்னதை கேட்டு அதிர்ந்தது மட்டுமின்றி குழம்பியும் போயிருந்தான் ஆதி. யாரை மாமா என்றழைக்கிறாள் என நினைத்தவன் மெதுவாக அவளிடம் கேட்டான்.

"மதி.... என்ன சொல்ற.... மாமானு யார சொல்ற. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு"

அவளோ அவளது அழுகையை தான் தொடர்ந்து கொண்டிருந்தாள். ஆதிக்கு கோபம் தான் வந்தது. அவனும் எவ்வளவோ கோபத்தை கட்டுப்படுத்த முயன்றாலும் மதியின் செயல் அதை தூண்டிக் கொண்டே இருந்தது.

"மதி.... நீ சொன்னா தான். எனக்கு புரியும். நீ யார சொல்ற. இறந்து போனவர உனக்கு முன்னாடியே தெரியுமா"

"ஆது.... அவரு.... அவரு.... மாமா.... ரொம்ப நல்ல மாமா" என பயத்தில் திக்கி திணறினாள்.

ஆதி ஒன்றும் சொல்லாமல் அவளது கையைத் தட்டிக் கொடுத்து அவளை பேசுமாறு ஊக்குவித்தான்.

"அவரு எங்க ஜுவல்லரி ஷாப் இருக்குல அங்க மேனேஜரா இருக்காரு. அவரு ரொம்ப நல்லவரு. யார்கிட்டயும் கோப பட மாட்டாரு. அப்பா அவர பத்தி நிறைய சொல்லுவாங்க. என்ன அவருக்கு ரொம்ப பிடிக்கும். எப்பவும் என்கிட்ட பாசமா பேசுவாரு.

வேல விஷயமா அடிக்கடி வீட்டுக்கு வருவாரு. வரும் போதெல்லாம் எனக்கு ஏதாவது வாங்கிட்டு வருவாரு. கடைசியா போன வாரம் வந்தப்போ எனக்கு கிப்ட் குடுத்துட்டு காலேஜ் போகும் போதும் வரும் போதும் பத்ரமா பாத்து போ. எங்கயும் தனியா போகாதனு சொன்னாரு.

அவ்ளோ பாசமா இருப்பாரு. என் முன்னாடியே அவர கொன்னுட்டாங்க. " என தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். ஆதி அவள் சொன்னவற்றை தான் சிந்தித்தான்.

'இது மதிக்காக நடந்ததா.... மதி தான் அவர்களுக்கு இலக்கு எனில் இவளை எளிதாக அணுகியிருக்கலாமே.... கல்லூரிக்கு வந்து போகும் போது இவளுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லையே... அதனால் தானே அந்த தினேஷ் இன்று இவளிடம் வம்பு செய்ய முடிந்தது.

அதனால் இவளை நெருங்குவது ஒன்றும் கடினமில்லையே.... அப்படி என்றால் இவள் மாமா என்றழைப்பவர் யாரைக் காப்பாற்ற நினைக்கிறார்.

ஒரு வேளை அவர்களது இலக்கு மதி இல்லையென்றால் , இறந்து போன மனிதர் எதற்கு மதியிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கை செய்தார்.

என்ன நடக்கிறது.... எது உண்மையாக இருக்கும்.... என்று யோசித்தவனுக்கு ஏதோ தோன்ற அவனது மொபைலை எடுத்து அதில் எதையோ டைப் செய்து பார்த்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே இருந்தது. போன மாதம் நடந்த கொலையைப் பற்றிய விவரங்களை தான் ஆதி பார்த்து கொண்டிருந்தான்.

'குடிபோதையில் நிதானம் இழந்து அப்பாவி முதியவரை கொலை செய்த இளைஞன்' என்ற தலைப்பின் கீழே அதன் விரிவான செய்தி இருந்தது.

அதைப் படித்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அவர் மதியின் கம்பெனியில் மேனேஜராக வேலைப் பார்த்தவர் தான்.

யோசிக்க யோசிக்க அவனுக்கு தலைவலி தான் மிஞ்சியது. என்ன நடக்கிறது என அவனுக்கு புரியவில்லை. ஒருவேளை இதுயெல்லாம் மதிக்காக எனில் அவள் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறாள் என அவனது மனம் அடித்து சொன்னது.

'அவளது உயிருக்கு எதுவும் ஆக விடமாட்டேன்... மதி ரொம்ப நல்ல பொண்ணு. என்ன நடந்தாலும் சரி மதியை யாரும் நெருங்க முடியாது. இனிமேல் அவ என்னோட பொறுப்பு.

மதி கண்ணுல மரண பயத்த வரவச்சவங்களுக்கு என் கையால தான் சாவு. மதி....' என்றெண்ணிக் கொண்டிருத்தவன் தன்னை அனைத்திருந்த மதியை குனிந்து பார்த்தான். பயத்திலும், அவ்வளவு நேரம் அழுததிலும் , ஆதியிடம் பாதுகாப்பாக இருப்பதால் அவளது கண்கள் உறக்கத்தை தழுவியிருந்தன.

தன்னைக் கட்டிக் கொண்டு சிறு பிள்ளை போல உறங்குபவளை கண்டவனுக்கு அவள் மீது பரிவு தோன்றியது. அவளது பாதுகாப்பு தான் இனி தனக்கு முதல் வேலை என்றெண்ணியவனுக்கு அவளது மேல் ஒரு உரிமை உணர்வு தோன்றியது.

தான் இருக்கும் இடம் , நிலை எல்லாவற்றையும் மறந்து அவனும் சற்று நேரம் அமைதியாக கண்முடினான். ஆனால் சில நொடிகளிலேயே நிதர்சனம் விளங்க மதியை பாதுகாப்பாக அவளது வீட்டில் விட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அவளது உறக்கத்தை கலைக்காமல் மிகவும் சிரமபட்டு காரினை ஓட்டினான்.

அவளது வீட்டிற்கு அருகில் வந்ததும் "மதி உங்க வீடு வந்துடுச்சு. எழுந்தரி " என்று மதியை எழுப்பினான். அவனது உலுக்கலில் கண் விழித்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளது வீட்டிற்கு அருகில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தவள் மெல்ல தலையை நிமிர்த்திப் பார்க்க ஆதியின் தாடையில் மதியின் தலை இடித்தது.

அப்போது தான் சுயநினைவிற்கு வந்த மதி தான் அவனை அனைத்தபடி இருப்பதைப் பார்த்து அவசரமாக விலகினாள். ஆதியோ எதையும் கண்டுகொள்ளாது "மதி உங்க வீட்டுல உண்மைய சொல்லட்டா"

"வேணாம்.... நா சொல்லிக்கிறேன். நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்"

"சரி... வா.." என்றவன் அவளது வீட்டினை அடைந்தான். காலையில் கல்லூரி சென்ற மகள் திரும்பி வந்தது மதியின் தாய்க்கு ஆச்சர்யமாய் இருந்தது. அதிலும் அவளது தோற்றம் அவருக்கு பயத்தை தூண்டியது.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவள் அணிந்திருந்த வெள்ளை நிற பேண்ட்டும் , துப்பட்டாவும் அழுக்காகிருந்தன. பேயறைந்தாற்போல் இருந்த அவளது முகத்தினை கண்டவர் "மதி என்னடா ஆச்சு. ஏன்டா ஒரு மாதிரி இருக்க" என்ற படி அவளை நெருங்கியவர் அப்போது தான் ஆதியைக் கவனித்தார். யார் இவன் என்ற சிந்தனையுடன் அவனைப் பார்த்தாலும் "உள்ள வாப்பா" என்று அவனையும் அழைத்தார்.

வீட்டிற்குள் நுழைந்ததும் மதி தனது தாயைக் கட்டிக் கொண்டாள். அவளது உடல் நடுங்கியது. அதில் பயந்தவர் "என்னாச்சுடா..... சொல்லுமா" என பதற

அதுவரை அமைதியாக இருந்த ஆதி அவரை தனியாக அழைத்தான் "என்னோட பேரு ஆதித்யா. மதியோட சீனியர். அவளுக்கு ஒண்ணும் இல்ல . நீங்க பயப்படாதீங்க. இன்னைக்கு காலேஜ் போறப்போ கோவிலுக்கு போகணும்னு நினச்சு கார்லேர்ந்து இறங்கி நடந்து போயிருக்கா.

தெரு நாய் ஒன்னு இவள துரத்திருக்கு. பயந்துபோய் ஓடுனவ அந்த இடத்துல நடந்த ஒரு அசம்பாவிதத்த பாத்துட்டா. அதான் பயந்துருக்கா. நல்ல வேளையா எங்க வேலையாட்கள் அந்த இடத்துக்கு போயிருக்காங்க.

இவளோட ஐ.டி ய பாத்து என்னோட காலேஜ்னு தெரிஞ்சதும் எனக்கு போன் பண்ணாங்க. நா போய் அவள கூட்டிட்டு வந்துட்டேன்.

இப்போதைக்கு அவ கிட்ட எதுவும் கேக்காதீங்க. உங்களுக்கு என்னோட உதவி எப்ப தேவைனாலும் எனக்கு கூப்டுங்க.

இது எங்க வீட்டு அட்ரெஸ், என்னோட போன் நம்பர் கூட இருக்கு. அவள பத்ரமா பாத்துகோங்க. தயவு செஞ்சு அவள யாரும் திட்டாதீங்க. நா வரேன்மா" என்ற படி அவர் பேசவே இடம் கொடுக்காமல் பேசியவன் மதியின் புறம் பார்வையை வீசியபடி வெளியேறினான்.

அவன் செல்லும் வரை அவனது கம்பீரத்திலும் , அவனது பேச்சிற்கு குறுக்கே பேச முடியாத படி தடுக்கும் அவனது கூர்மையான பார்வையிலும் , தன் மன குழப்பத்திலும் அமைதியாக இருந்தவர் அவன் சொன்னதை ஒரு முறை யோசித்துப் பார்த்தார்.

தன்னுடைய பெண்ணிற்கு எந்த அசம்பாவிதமும் நிகழ வில்லை என அறிந்ததும் அந்த தாயுள்ளம் சற்று ஆறுதல் அடைந்தது. அவருடைய கணவனுக்கும், மதியின் அத்தை மகனான வினய்க்கும் போன் செய்து விஷயத்தை சொன்னார்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் இருவரும் வீட்டில் இருந்தனர். இருவருடைய முகமும் பதட்டத்தைக் காட்டியது. மதியின் அறையை அடைந்தவர்கள் அங்கே மதி உறங்கி கொண்டிருப்பதைப் பார்த்து நிம்மதியுற்றனர்.

"தேவி அந்த பையன் தந்த விசிட்டிங் கார்ட (visiting card) தா" என்றார் மதியின் தந்தை. அந்தக் கார்டை பார்த்தவர் வினய்க்கும் அந்த கார்டை காட்ட இருவரது முகமும் நிம்மதியுற்றன.

"மாமா... ஆதி குரூப்ஸ் ஆப் கம்பெனி ஓனர் திலீபன் வீட்டு அட்ரஸ். அவர் பையன் பேரு ஆதினு நினைக்கிறேன். அப்ப அந்த பையன் தான் மதிய காப்பாத்துனதா. "

"அப்படி தான் நினைக்கிறேன் வினய். அந்த பையனுக்கு நன்றி சொல்லனும்" என சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரது அலைபேசி அடித்தது.

எடுத்து பேசியவரின் முகத்தில் துயரமும் கோபமும் கலந்திருந்தன. அப்படியே ஓய்ந்து போய் இருக்கையில் அமர்ந்தார்.


அதில் பயந்து போன வினயும் , தேவியும் அவரிடம் விவரம் கேட்க தங்களிடம் வேலை செய்யும் சுகுமாறனை காலையில் யாரோ கொலை செய்துவிட்டதாக கூறியவர் நல்ல ஊழியரையும், நண்பனையும் இழந்த துயரத்தில் இருந்தார்.

வினய்க்கு அதிர்ச்சியாக இருந்தது. சுகுமாறன் நல்லவர். யாரிடமும் பகைமை இல்லாதவர். அவரை யார் கொலை செய்திருப்பார்கள் என யோசித்தவனுக்கு இன்னொரு விஷயமும் நினைவிற்கு வந்தது.

ஒரு மாதத்திற்கு முன்பு தங்களது அலுவலகத்தில் பணிபுரிந்த பிரபாகரன் கொலை செய்யப் பட்டது. அவனது மனதிற்கு ஏதோ தவறாக நடப்பதாக தோன்றியது.

இரண்டு மாதத்திற்குள் தங்களது அலுவலகத்தில் பெரிய பதவியில் இருந்த , மற்றவர்களால் நல்லவர்கள் என்றழைக்கப்பட்ட இருவர் கொலை செய்யப்பட்டது சாதாரண நிகழ்வாக தோன்றவில்லை.

இப்போதைக்கு இதை தனது மாமாவிடம் சொல்லி அவரை பயமுறுத்த எண்ணாதவன் , தன்னுடைய காவல் துறை நண்பனுக்கு போன் செய்தான்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 13

அந்த சிவன் கோவிலுக்குள் நுழைந்த அத்துவிற்கு கண்ணீர் வந்தது. ஆண்மகன் அழக் கூடாது என்ற வாசகமும் அவனுக்கு மறந்து போயிருந்தது.

தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்காக மகிழ்வுடன் இருப்பதை போல நடித்தவனுக்கு இவ்விடத்தில் அப்படி எந்த ஒரு கட்டாயமும் இல்லாததால் அவனது மனதின் உணர்வுகளை அவனது முகம் கண்ணாடி போல பிரதிபலித்தது.

பிரகாரத்தின் உள்ளே நுழைந்தவனுக்கு தன்னுடைய அம்முவின் நினைவு வந்தது. முன்னொரு நாள் இதேக் கோவிலில் தாங்கள் இருவரும் இணைந்து வந்து வணங்கியதை நினைத்தவன், மீண்டும் அந்த நொடி வராதா என்று ஏங்கினான்.

எப்போதெல்லாம் அம்முவின் நினைவு அவனை வாட்டுகிறதோ, இந்த கோவிலுக்கு வந்து விடுவான். அவனது காதலின் ஆதி முதல் அந்தம் வரைக் கண்டது இந்த கோவில் அல்லவா.

தன்னவளின் தன் மீதான காதலை உணர்ந்து கொண்டதும் இந்த கோவிலில் தான். அவளுடன் இணைந்து காதல் வாழ்க்கைக்காக இறைவனிடம் வேண்டியது இந்த கோவில் தான், கடைசியாக அவள் அவனை பிரியும்முன் அவளை பார்த்ததும் இங்கு தான்.

அவனுடைய மனம் முதன் முதலில் தன்னுவளுடைய காதலை உணர்ந்த தருணத்தை நினைவுக் கூர்ந்தது.

எப்போதும் எல்லாரையும் சிரிக்க வைத்து , மற்றவர்களை மகிழ்வாக மாற்றிய ஹரிணி தன் வாழ்வின் மகிழ்ச்சியை இழந்து நின்றாள்.

அத்து மீது அவள் உயிரையே வைத்திருந்தாள். அவன் பணக்காரன் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவளின் ஏழ்மை நிலையையும் அவள் அறிந்திருந்தாள். அவள் மேல் அவளது பெற்றோர்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் உணர்ந்தவளால் காதலை சொல்ல முடியவில்லை. காதல் எதையும் எதிர்பார்த்து வருவதில்லையே.

பணம் இருக்கிறதா.. இல்லையா... நல்லவரா... கெட்டவரா... அழகானவரா.... அன்பானவரா.... நமக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்வரா.... என எதையும் அது ஆராய்வதில்லை.

அப்படி ஆராய்ந்து நன்மை மட்டுமே கிடைக்கும் என தெரிந்த பின் வருவது காதல் இல்லையே....

ஹரிணி அத்துவின் மேல் வைத்திருந்த காதலுக்கு எல்லையில்லாமல் இருந்தது. அதை வரையறுத்திட அவளுக்கு வார்த்தைகள் கூட போதாது.

அவனிடம் தன்னுடைய காதலை சொல்ல வேண்டும் என அவள் நினைக்க வில்லை. தினமும் அவனை தூரத்தில் இருந்து பார்க்கும் நொடிக்காகவே கல்லூரி வந்தாள். இவ்வளவு நிகழ்வுக்கிடையிலும் அவள் தனது படிப்பில் கவனத்தை செலுத்த தவறவில்லை.

எப்போதும் வகுப்பில் முதல் மாணவியாகவே இருந்தாள். அத்துவும் , ஹரிணியும் எப்போதும் முதல் நிலையிலேயே இருந்தனர். ஒருமுறை கூட ஒருவர் மற்றவரிடம் தோற்கவில்லை.

எல்லாருக்கும் அது தான் ஆச்சரியமாக இருந்தது. எப்படியாவது இருவரும் சமநிலையிலேயே இருந்தனர்.

ஹரிணியின் பெற்றோர்களும் மகளது நடவடிக்கையில் தெரிந்த மாற்றத்தைக் கண்டு கொண்டனர். தங்களுடன் இருக்கும் போது இயல்பாய் இருக்கும் மகள் தனிமையில் எதையோ இழந்தது போல இருப்பதை அவர்களும் பார்த்தனர்.

மகளாகவே தங்களிடம் கூறும் வரை அவளை வற்புறுத்தக் கூடாது என எண்ணியவர்கள் அவளிடம் ஹாய் திறந்து எதையும் கேட்கவில்லை. கல்லூரியிலும் யாருக்கும் கூறாமல் தன்னுள்ளேயே எல்லாவற்றையும் புதைத்துக் கொண்டு வெளியில் காட்டிக் கொள்ளாமல் நடமாடினாள் ஹரிணி. தன் வாழ்நாள் முழுவதும் அத்துவை நினைத்தே வாழ்ந்திட முடிவு செய்தாள்.

விதி நாம் நினைப்பதை நடக்க விடுவதில்லையே... அன்று கல்லூரியில் அனைவரையும் கேம்ப்- ற்க்கு அழைத்து சென்றனர்.

அருகிலுள்ள ஊர்களுக்கு சென்று அங்குள்ள கோவில், பள்ளி, தெருக்கள் என சுத்தம் செய்வார்கள் மாணவர்கள்.

முதலில் மறுத்த ஹரிணி கட்டாயம் அனைவரும் செல்ல வேண்டும் எனக் கூறவும் வழியின்றி ஒத்துக் கொண்டாள்.

அன்றைய தினம் அவளது இதயத்தில் மறைந்திருந்தக் காதலை தன்னுடைய மன்னவன் உணரப் போகிறான் எனத் தெரியாமல் சோகமாக இருந்தாள் ஹரிணி.

எல்லா மாணவர்களையும் ஏற்றிக் கொண்ட கல்லூரிப் பேருந்து அவர்களை குறிப்பிட்ட பகுதியில் இறக்கி விட்டு விட்டு சென்றது.

மாணவர்கள் அனைவரும் குழுக்களாக பிரிந்து சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கினர். அத்துவும் , ஹரிணியும் கோவிலை சுத்தம் செய்யும் குழுவில் இருந்தனர்.

மாணவர்கள் அனைவரும் அங்கு மண்டியிருந்த முட்செடிகளை அகற்றிக் கொண்டிருந்தனர். பெண்கள் குப்பைகளை வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.

அத்து கோவிலின் முன்பகுதியில் முட்செடிகளை அகற்ற, ஹரிணியோ கோவிலின் பின்புறம் இருந்தாள். அவளது மனம் ஏனோ கவலைக் கொண்டிருந்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு அத்துவிற்கு அருகில் செடிகளை வெட்டிக் கொண்டிருந்தவனின் கையிலிருந்து தவறிய கத்தி அத்துவின் கரத்தினை பயம் பார்த்தது.

வலியில் அத்து " அம்மா" என்ற கத்தவும் அங்கிருந்த அனைவரும் ஒன்று கூடி விட்டனர். அவனது வலது கரத்தினில் காயம் ஆழமாக இருந்தது. இரத்தம் நிற்காமல் வழிய , மாணவர்கள் அனைவரும் பதறி ஒருவன் முதலுதவி பெட்டியை எடுக்கவும், ஒருவன் தண்ணீர் கொண்டு வரவும்
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருவன் வகுப்பாசிரியரை அழைத்து வர என ஒவ்வொரு திசையில் ஓடினர்.

அத்துவோ கண்களை இறுக மூடிக் கொண்டு தன்னுடைய வலியை கட்டுப்படுத்த முயற்சித்தான். அங்கிருந்த பெண்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தனர்.

அத்துவின் சப்தம் கேட்டு வந்த ஹரிணிக்கு ஒரு நொடியில் உலகமே நின்றது போலிருந்தது. அவனது கரங்களில் வழிந்த இரத்தத்தைப் பார்த்தவளது கண்கள் அவளது வலியினை கண்ணீராக கொட்டியது.

இரத்தம் நிற்காமல் வருவதைக் கண்டவள் , தன்னை திடப்படுத்திக் கொண்டு அவனை நெருங்கினாள். அவனுக்கு வலித்ததைவிட அவளுக்கு தான் அதிகம் வலித்தது. அவனது கரத்தினை தொட விழைகையில் இவளது கரம் நடுங்கியது.

அவளது நடுங்கும் கரங்களால் அவனது கரத்தினை மென்மையாகப் பற்றினாள். அவளுடைய கண்ணீர் துளிகள் அவனது கரத்தினில் விழுந்தன.

தனது கரத்தினை ஒரு பெண்ணின் கரம் தொடுவதை கண்களை மூடியிருந்த அத்து உணர்ந்த போது , அவனது கரத்தினை எடுத்துக் கொள்ள இயம்பினான்.

ஆனால் அவன் உணர்ந்த பெண்ணவளின் மென்மையான கரத்தின் நடுக்கமும், அவளது கண்ணீரும் அதனை செய்ய விடாமல் அவனைத் தடுக்க, கண்களை திறந்து பார்த்தான்.

இதுவரை அவனிடம் பேசாமல் இருந்த ஹரிணி , அழுது கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

அவளோ அவளது சிந்தனையில் மூழ்கியிருந்தாள். அவளது துப்பட்டாவை எடுத்தவள் அவனது காயத்தை பட்டும் படாமல் துடைத்து விட்டாள். பின்பு தன்னுடைய கைகுட்டையை எடுத்து அவனது காயத்தை சுற்றி இரத்தம் வெளியேறாமல் கட்டினாள்.

அவன் வலியில் "ஸ்ஸ்ஸ்" முனங்க அவளோ துடித்து விட்டாள். "சாரி... சாரி... " என அவள் உளறிக் கொண்டிருந்தாள்.

இதுவரை அவன் அவளை சரியாக கூட பார்த்ததில்லை . இன்று அவனது பாதத்தின் அருகே மண்டியிட்டு தன்னுடைய வலியைக் கண்டு துடிக்கும் அவளை ஆழ்ந்து பார்த்தான்.

பேரழகி என கர்வம் கொள்ள வைக்கும் அழகிருந்தும் , அனைவரிடமும் அன்பாய் இருப்பவளை அந்த நொடி அவனுக்கு பிடித்திருந்தது.

தன்னுடைய கல்லூரியில் பயிலும் ஒருவனுக்கு காயம் பட்டதற்காக இப்படி துடிக்கிறாளே... எவ்வளவு நல்ல மனம் என வியந்தான்.

மாணவர்கள் வந்து முதலுதவிப் பெட்டியிலிருந்த பொருட்களின் மூலம் அவனுக்கு கட்டு போட்டனர். ஹரிணியின் கைகுட்டையை கழட்டி எறிந்து விட அதனை எடுத்துக் கொண்ட ஹரிணிக்கு தன்னுடைய நிலையும் இது தான் என புரிந்தது.

யாருக்கும் ஹரிணியின் செயல் வித்தியாசமாய் படவில்லை. ஏனெனில் அவள் எப்போதும் யாரையும் துன்பப்பட விட்டதில்லை.

அனைவரும் அங்கிருந்து செல்ல முயல்கையில் அத்துவிற்கு ஹரிணிமின் நினைவு வந்தது. அவளுக்கு நன்றியுரைக்க வேண்டுமென அவனது மனம் விரும்ப அவளைத் தேடினான். அவளது தோழிகள் அவள் இறைவனை தரிசிக்க சென்றாக சொல்ல, அங்கே சென்றான்.

அனைவரும் சென்று விட்டதாக எண்ணிய ஹரிணி இறைவனிடம் கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டிருந்தாள்.

"எனக்கு என்ன தண்டன வேணாலும் குடு. நா தாங்கிக்குறேன். ஆனா அவருக்கு எதுவும் தராத. என்னால தாங்கிக்க முடியல. அவரு வலியில துடிச்சப்ப பாக்க முடியாம செத்துடலாம் போல இருந்துச்சு.

கையில ஆழமா காயம் பட்டுருக்கு. ரொம்ப வலிக்கும். நினச்சாலே எனக்கு வலிக்குது. என்னோட ஆசயெல்லாம் ஒண்ணுதான் அவரு எப்பவும் சர்தோஷமா இருக்கணும்.

அவருக்கு வர கஷ்டமெல்லாம் எனக்கு வரணும். அவருக்கு எதுவும் வரக்கூடாது. " என்று வாய்விட்டு மனமுருகி கண்ணீர் வழிய வேண்டினாள்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அத்துவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. ஹரிணி தன்னை விரும்புகிறாளா?? அதுவும் இந்த அளவிற்கா????

இதுவரை அவள் அவனிடம் பேசியதுக் கூட கிடையாதே.... எத்தனையோ பேர் அவளிடம் காதல் சொல்ல மறுத்தவள் அவனை நேசிக்கிறாளா????

அவனுக்கு காதலில் நம்பிக்கை இல்லை. இதுவரை நிறைய பெண்கள் அவனிடம் காதல் சொல்லியிருக்கிறார்கள். அதையெல்லாம் கடந்தவனுக்கு ஹரிணியின் காதல் ஒரு புது வித உணர்வை தந்தது. அது காதல் அல்ல. விடைத் தெரியா ஒன்று...
அவன் அவளிடம் ஒன்றும் கூறாமல் மௌனமாய் திரும்பி வந்தான். அன்றிலிருந்து அத்து ஹரிணியை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

அவனது காயம் ஆற சரியாக இருபது நாட்கள் ஆனது. இந்த இருபது நாட்களும் ஹரிணி அத்துவை நினைத்து நினைத்து தன்னையே மறந்திருந்தாள்.

தினமும் அவளது பார்வை அவனது கரத்திலுள்ள காயத்தை பார்வையிடும் .. அதை தான்டி அவள் அவனைப் பார்த்தது கிடையாது. ஒவ்வொரு நாளும் காயம் ஆறுவதைக் காணும் போது அவளது கண்களில் சிறு மின்னல் வந்து போகும்.

அத்துவும் அவளது நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அவன் மேல் உயிரையே வைத்திருப்பது அவனுக்கு தெரிந்தது. தினமும் அவளது பார்வை தனது கரத்தினை வருடும் போது அவனுக்கு புதுவித உணர்வு தோன்றியது.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதலில் அவளிடம் இந்த காதலெல்லாம் வேண்டாம் என சொல்ல நினைத்தான். ஆனால் அவள் நான் உன்னை காதலிக்க வில்லை என்று கூறிவிட்டால். எதற்கிந்த வம்பு நாட்கள் சென்றால் அவளே இதை மறந்து விடுவாள் என நினைத்தான்.

ஆனால் அவளது காதல் நாளுக்கு நாள் அதிகமாவதைப் பார்த்த அத்துவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் மேல் அவள் வைத்திருந்த காதல் பணத்துக்காக இல்லை என அவனும் உணர்ந்து கொண்டான்.

காதலிக்கப் படுவது எவ்வளவு சுகமானது என்பதை அவன் உணர தொடங்கினான். அவனுக்கு இது பிடித்திருந்தது. தான் அவளுடைய காதலை அறிந்து கொண்டதை அவளுக்கு காட்டாமல் அவளை தவிக்க வைத்தான்.

தினமும் கல்லூரிக்கு வந்தவுடன் அவளது பார்வை தனது காயத்தினை வருடும் என அறிந்தவன், வேண்டுமென்றே அன்றொரு நாள் தன்னுடைய இடத்தினை விட்டு மாறி அமர்ந்தான்.

இதையறியாத ஹரிணி வகுப்பிற்குள் நுழைந்ததும் அத்துவை தேட அவன் இல்லையென்றதும் அவளது முகம் பொலிவிழந்தது. வந்த கண்ணீரை கட்டு படுத்த முடியாமல் வெளியே செல்ல எழுந்தாள்.


தான் நினைத்தது போலவே அவள் தன்னை தேடியதும் மகிழ்ந்த அத்து, தன்னை காணவில்லை என்றதும் அவள் முகத்தில் தெரிந்த சோகம் தனக்காக எனும் போது அவனது உள்ளம் மகிழ்ச்சியில் தத்தளித்தது அவனையறியாமலே..

ஆனால் கண்ணீரோடு அவள் எழுந்து செல்ல முயல்வதைக் கண்டவன் அவளை சோதிக்காமல் அவளுக்கு முன்பே சென்று தன்னுடைய இடத்தில் அமர்ந்தான். அவன் வந்ததைப் பார்த்ததும் அவளது கண்ணீர் காணாமல் போனது.

மற்றொரு நாள் வேண்டுமென்றே அவள் பார்க்கும் போது தனது கரம் வலிப்பதாக அவன் நாடகமாட அடுத்த நொடி அவளது கண்கள் பதட்டத்துடன் அவனை தழுவியது. அவனது மனமோ மகிழ்ச்சியில் திளைத்தது.

அவனுக்கு உண்மையிலேயே வலிப்பதாக எண்ணியவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. அதனைப் பார்த்தவனோ 'எனக்கு ஒன்னுனா உன்னால தாங்க முடியாத ஹனி.. என்ன விட நீதான் துடிக்கிற. ஏன் என்ன இந்த அளவு லவ் பண்ற. நா அதுக்கு தகுதியானவனா??? உண்மையிலேயே நா ரொம்ப குடுத்து வச்சவன்' என்று தன் மனம் கவர்ந்தவளிடம் மனதோடு பேசிக் கொண்டிருந்தான்.

ஆம் அவன் மனதில் ஹரிணியின் மீது காதல் வந்து பல நாட்களாகி விட்டன. ஆனால் அதை அவன் அவளிடம் சொல்லவில்லை.

ஹரிணி அழுவதைப் பார்த்து மற்றவர்கள் அவளிடம் என்னவென்று விசாரிக்க , தன்னுடைய சிந்தனையிலிருந்து வெளிவந்த அத்து , தன்னுடைய நண்பர்களிடம் இப்போது வலி குறைந்து விட்டது எனக் கூறினான்.

அவன் அப்படி சொன்னதும் அவளது முகத்தில் பதட்டம் மறைந்து நிம்மதி தெரிந்தது. தன்னுடைய தோழிகளிடம் தலைவலி எனக் கூறியவள் , வகுப்பை விட்டு வெளியே சென்று விட்டாள்.

அவளை பின்தொடர்ந்து செல்ல வேண்டுமென்று தோன்றினாலும் அவளது பெயருக்கு தன்னால் எந்த களங்கமும் வரக்கூடாது என்றெண்ணியவன் அமைதியாக அமர்ந்திருந்தான். அவனது மனம் அவளையே சிந்தித்து கொண்டிருந்தது.

மதிய உணவு இடைவேளைக்கு பின்பு அனைவரும் வகுப்பிற்கு வந்தனர். ப்ரியா தனது தோழி ஹரிணியை திட்டிக் கொண்டிருந்தாள்.

"என்னதான்டி உனக்கு பிரச்சன. அவ்ளோ தூரம் கெஞ்சுறேன் சாப்டாம வர. ஏற்கனவே தலவலி. இதுல சாப்டலனா. ஏன்டி இப்படி பண்ற" எனக் கத்திக் கொண்டிருந்தாள்.

அதைக் கேட்ட அத்துவிற்கு தன்மேலேயே கோபம் வந்தது. விளையாட்டாக செய்ததற்காக தன்னவள் உண்ணாமல் இருப்பது அவனுக்கு வலித்தது. அவன் அமர்ந்ததும் ஹரிணியின் கண்கள் அவனது காயத்தைப் ஆராய்ந்தன.

இதனைப் பார்த்த அத்துவிற்கு வார்த்தைகள் வரவில்லை. ' ஹனி.... ஏன் என்ன இந்த அளவு லவ் பண்ற. நா உனக்காக ஒண்ணுமே பண்ணது இல்லயே. அப்றம் ஏன் ??? '

காதல் எதையும் எதிர்பார்த்து வருவதில்லையே!!!!!
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 14

அத்துவின் வாழ்க்கை அழகாக சென்றுக் கொண்டிருந்தது. அவனது காதலி அவனிடம் காதலை சொல்லவில்லை , இவனும் அவளிடம் காதலை சொல்லவில்லை. ஆனாலும் இருவருமே காதலில் திளைத்திருந்தனர்.

ஹரிணிக்கு அத்துவின் மனதில் தன் மீது காதல் இருப்பது தெரியாது. அவள் பிறப்பு எடுத்ததே அவனைக் காதலிப்பது என்பதை போன்று அவனைக் காதலித்தாள்.

நாட்கள் அழகாக நகர்ந்தன. அத்துவின் கரத்திலிருந்த காயம் ஆறிவிட்டிருந்தது. ஆனால் அதன் பின்னும் ஹரிணியின் முகத்தில் ஒரு அலைப்புறுதலை அத்து கண்டான்.

'என்னாச்சு. அதான் எனக்கு சரியாகிட்டே. அப்புறமும் ஏன் இப்படி டல்லா இருக்கா' என சிந்தித்துக் கொண்டிருந்தான். இப்போதெல்லாம் அவள் அவனை பார்ப்பது கூட கிடையாது. அதை உணர்ந்த அவனது மனம் அந்தப் பார்வைக்காக ஏங்கியது.

ஆனால் பெண்ணவளோ தன் மீது அவனுக்கிருந்த காதலை அறியாமல் தன்னுடைய ஏழ்மையை கருத்தில் அவனிடம் விலகி இருக்க முடிவு செய்தாள்.

காதல் இனிமையானது தான். அது எந்த அளவு இனிமை தருகிறதோ அதே அளவு துன்பமும் தரும். எத்தனை தடை போட்டாலும் உடைத்து விட்டு ஒருவன் மனதில் வரும் காதலானது அவனை வீரனாகவும் மாற்றும் கோழையாகவும் மாற்றும்.

தன் மனதில் உள்ள காதலை தன் இணையிடம் சொல்வதற்குள் அது தரும் வலியையும் , சுகத்தையும் வார்த்தையால் சொல்லிட இயலாது. காதலை சொல்லிவிட்டு அதற்கான விடையை தெரிந்து கொள்ள காத்திருக்கும் நொடியானது பல முறை இறந்து பிறப்பதற்கு சமமானது.

இங்கே இவர்கள் இருவரும் காதலித்தாலும் அதை வெளிப்படுத்தாமல் அமைதிக் காத்தனர். ஒரு நாள் அத்துவின் நண்பன் ஒருவன் " உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்டா. எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும். முடியாதுனு மட்டும் சொல்லிடாத" என்றான்.

அத்துவும் அவன் என்ன சொல்லப் போகிறான் என்றுத் தெரியாமல் அத்துவும் தன் நண்பனிடம் "சொல்லு நிதிஷ் நா என்ன பண்ணணும். "

" டேய் என்கூட ஒரு இடத்துக்கு வரணும். "

"அவ்ளோ தானடா. கண்டிப்பா வரேன்"

"டேய் மச்சான்.... நா ஹரிணிய லவ் பண்றேன்டா. அவ கிட்ட சொல்ல போறேன். பயமா இருக்குடா. என் கூடவே இருக்கியாடா"

அவன் சொல்லி முடித்ததும் அதிர்ந்து போனான் அத்து. அவனது காதலியிடம் ஒருவன் காதல் சொல்ல விழைகிறான். அதற்கு அவனே துணை செல்ல வேண்டும். படத்தினில் தான் இது போல காட்சிகளை பார்த்திருக்கிறான். இன்று அவனுக்கே நடக்கும் என அவன் நினைக்கவில்லை.

அவனால் அவனைக் கட்டுப் படுத்திக் கொள்ள இயலவில்லை. ஹரிணியின் மீது அவனுக்கு இருந்த ஆழமான காதலை அந்த நொடியில் உணர்ந்து கொண்டான். மணக்கும் ஒருத்தியை மட்டுமே மனதில் சுமக்க எண்ணியவன் அவள் காதலின் வலிமையால் அவளை சுமக்கிறான்.

இனி அவள் இன்றி அவன் வாழ்வு இல்லையென்பதை அவன் அறிவான். தன் மீது உயிரையே வைத்திருந்தும் அவள் ஏன் அவனிடம் காதல் சொல்லவில்லை என்று அவனது மனம் சிந்தித்தது.

எதுவாயினும் இனியும் தன்னுள் மலர்ந்திருக்கும் காதலை அவளிடம் சொல்லாமல் இருப்பது தவறென தோன்ற ஒருவழியாக தன்னுடைய தயக்கத்தைக் கைவிட்டான்.

தன்னவளிடம் தன் காதலை சொல்லப் போகிறோம் என்றதும் அவனது மனம் பல வித உணர்வுகளில் சிக்கித் தவித்தது. ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் , மறுபுறம் பயமாகவும் இருந்தது.

"மச்சி..... என்னடா யோசிக்கிற. ரொம்ப நேரமா கூப்டுட்டு இருக்கேன்டா" என்று நிதிஷ் அவனை உலுக்கவும் சுயநினைவிற்கு வந்தவனுக்கு நண்பனை நினைத்து பாவமாய் இருந்தது.

ஹரிணியிடம் தன் காதலை சொல்லாமல் நிதிஷிடம் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. ஒன்றும் பேசாமல் அவன் மௌனமாய் இருந்தான். "டேய் வாடா.... " என்று நிதிஷ் அத்துவின் கரம் பிடித்து இழுத்து சென்றான்.

அவர்கள் நேராக போய் நின்றது ஹரிணியின் முன்புதான். இருவரது மனதிலும் ஹரிணியிடம் தன் காதலை சொல்ல வேண்டுமென்ற வேகம் இருந்தது.


அத்து தன்னை சமன் செய்து கொண்டு பேச தொடங்குவதற்கு முன் நிதிஷ் பேச ஆரம்பித்தான்.

"ஹரிணி..... என்னத் தப்பா நினைக்காத நா உன்ன லவ் பண்றேன். உனக்கு பிடிச்சிருந்தா ஓ.கே சொல்லு. இல்லனாலும் பரவால்ல. " பல திணறல்களுடன் அவன் சொல்லி முடித்தான்.

அவனுக்குப் பின்னால் இருந்த அத்துவின் முகத்தினை பார்த்தவள் மெல்ல கண்களை மூடித் திறந்தாள்.
இவ்வளவு வலியை தருமா காதல். மரணத்தின் வாயிலில் இருக்கும் ஒருவன் உயிர்வலியை எப்படி அனுபவிப்பானோ அதைவிட அதிகமாக அதிகமான வலியை அந்த நிமிடம் அவள் அனுபவித்தாள்.


வயிற்றுக்குள் ஏதோ பிசைய, தொண்டைக்குள் கனமாக ஏதோ அடைத்திருப்பதை போல வார்த்தைகள் வெளி வர மறுத்தன. கண்களில் கண்ணீர் கசிந்தன.

"என்ன மன்னிச்சிடுங்க நிதிஷ். எனக்கு காதல்ல நம்பிக்கை இல்லை. யாரு மேலயும் காதலும் வராது. தேவயில்லாமா உங்க வாழ்க்கைய வீணாக்காதீங்க. என் கிட்ட இனிமே இந்த மாதிரி பேசாதீங்க "
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்று உறுதியான குரலில் சொல்லியவள் அவ்வளவு தான் என்பதுபோல் அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்( அப்படி காட்டிக் கொண்டாள்)

தன்னை உயிரினும் மேலாக விரும்புபவள் சொன்ன பதிலில் அத்து குழம்பி போனான். இதற்கு மேலும் பொறுமை வேண்டாம் என எண்ணியவன் " ஹரிணி .... நா...." என ஆரம்பித்தவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அதில் கோபம் இல்லை, வலி இல்லை, ஏமாற்றம் இல்லை வெறுமை மட்டுமே இருந்தது. அத்துவால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. அவன் மீண்டும் பேச ஆரம்பிப்பதற்குள் அவனை கை நீட்டித் தடுத்தவள் " தயவு செஞ்சு போங்க. என்னத் தனியா விடுங்க" என்று கத்தியபடி வகுப்பை விட்டு வெளியேறிவிட்டாள்.

அத்து அதிர்ச்சியில் சிலையென நின்றிருக்க , ஹரிணியோ சற்று முன் நடந்தவற்றையே நினைத்துக் கொண்டிருந்தாள்.

லைப்ரரியில் புத்தகம் எடுப்பதற்காக சென்றிருந்த ஹரிணி வழியில் தன்னவன் தனிமையில் அமர்ந்திருப்பதைக் கண்டாள். வகுப்புகளில் கூட அவள் அவனை பார்ப்பதில்லை. இன்று ஏனோ அவளது மனம் படபடப்பாக உணர்ந்தது.

இனம் புரியா பயம் அவளை சூழ்ந்து கொள்ள ஆறுதல் தேடி அலைந்தது அவள் மனம். நீல நிற சட்டையும் , கருப்பு ஜீன்ஸ்ம் அணிந்து எதையோ யோசித்து கொண்டிருந்த தன்னவனை பார்த்தவளுக்கு அவனருகில் இருந்தால் போதும் என்று தோன்ற ஆறுதல் தேடி அவனுக்கு தன்னை தெரியாத வண்ணம் சற்று தொலைவில் அமர்ந்தாள்.

அவளது பார்வை பல நாட்களுக்கு பிறகு அன்று தான் அவனை உச்சி முதல் பாதம் வரை வருடியது. அவனது தடித்தப் புருவத்தைப் பார்த்தவளுக்கு அதனை தொட்டுப் பார்க்க ஆசை வந்தது. அவன் கையில் அணிந்திருந்த வெள்ளிக் காப்பு அவனுக்கு மேலும் அழகு சேர்த்தது.

அவ்வளவு பணம் இருந்தும் எளிமையாக இருந்தவனை கண்டவள் தன்னையும் மறந்திருந்தாள் நிதிஷ் வந்து அவனிடம் பேசும் வரை.


நிதிஷ் வந்தவுடன் அவள் எழுந்து செல்ல நினைத்தாள். ஆனால் அப்போது தான் நிதிஷ் அவளை விரும்புவதாக அத்துவிடம் சொல்லவும் அதிர்ந்து நின்றாள். அத்து பதிலேதும் கூறாமல் அமைதியாக நிற்கவும் அவளுக்கு அழுகை பெருகியது.

தன்னவன் மனதில் தான் இல்லை. தன் மனதை உரைக்கவும் வழியில்லை. எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்தவளுக்கு கோபம் , அழுகை, ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளும் ஒரே நேரத்தில் தோன்றின.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் மெதுவாக தன் வகுப்பிற்கு சென்று அமர்ந்தாள். அந்த நேரம் தான் அத்துவும் , நிதிஷும் அவளிடம் வந்தனர்.

நிதிஷ் காதலை சொல்லி முடித்தவுடன் தன் காதலை மனதில் புதைத்துக் கொண்டு பதில் சொன்னாள். ஆனால் அத்து பேச முயலவும் நிதிஷூக்காக பேசப் போகிறான் என்றெண்ணியவள் அவனை பேச விடாமல் தடுத்து விட்டு தனியாக வந்து விட்டாள்.

இன்னும் சிறிது நேரம் அமைதி காத்திருந்தாள் அவளவன் காதலை சொல்லியிருப்பான்.விதி வலியதா இல்லை இவர்கள் வலியவர்களா??. அவளுக்கு தெரியவில்லை அவளது காதல் கைசேரும் நாளில் தான் அதன் பிரிவு நாளும் எழுதப்படும் என்பது.
 
Status
Not open for further replies.
Top