All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் “உயிரோடு கலந்தவள்!” - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 25 ❤



தன் முன் அமர்ந்திருந்த பெண்கள் ஒவ்வொருவரின் கண்களையும் ஆராய்ந்தான்....



அவனுக்குத்தான் தன் பின்னால் உள்ளவர்களை தெரியாது....ஆனால் அவர்களுக்கு தெரியுமல்லவா????



அதனாலேயே அவர்களின் கண்களை கூர்ந்து கவனிக்க துவங்கினான்.



அதில் ஓரத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் நேரே வாசல் புறமாக ஒருவன் கத்தியுடன் நின்றிருப்பது புரிய பார்வையை இன்னும் கூர்மையாக்கி அலசத் தொடங்கினான்.



அவன் டேபிளுக்கு முன்னே இருந்த டேபிளில் இருந்த இரண்டு பேரும் சாதாரணமாக சாப்பிடுவது போல் இருந்தாலும் அவனையும் அவன் மனையாளையும் அடிக்கடி திரும்பித் திரும்பி பார்த்திருப்து புரிந்தது.



அதேநேரம் சர்வர்களில் ஒருவன் வேலை செய்வது போல் பாவ்லா காட்டிக் கொண்டு இருந்தான்.



அவர்களுக்கு சந்தேகம் வராத வண்ணம் சட்டென அஷ்வினியிடம் குனிந்தவன் ஹஸ்கி வாய்ஸில்



"அஷு...நா பேசுறேன்னு நிமிர்ந்து பாக்காத" என எச்சரிக்கவும் அவனை பார்க்கப் போனவள் தலையை குனிந்தவாறே சம்மதமாக ஆட்டினாலும் மனது ஏதோ நடக்கப் போவது போல் திக்கென்றதில் பயந்து பொனாள் பாவையவள்....



"எ...என்ன தேவ்... எனி ப்ராப்ளம்?எனக்கு பயமா இருக்கு"



"ஷ்...அஷு நான்தான் பக்கத்துல இருக்கேன்ல... அப்பறமும் என்ன பயம்?"



"ம்..."



"இப்போ நா சொல்றத அடுத்தவங்களுக்கு சந்தேகம் வராத படி பண்ணு... ஓகே?"



"ஓகே"



"உன் நொண்ணன் அஜய்க்கு மேசேஜ் போட்டு அவன ஒடனே இங்க வர சொல்லு"



"பட் தேவ் அவரு எதுக்கு... நீங்க ரெண்டு பேருமே கண்டாலே முட்டிக்கிறீங்க?"



"அஷு... இந்த விஷயத்துக்கு வருண் சரிப்பட மாட்டான்... உன் ரவுடி அண்ணன் அஜய்தான் சரி... அவன வர சொல்லு...கமான் க்விக்" எனவும் அடுத்த நொடி அவனுக்கு மேசேஜ் போயிருந்தது.



மீண்டும் ஒருமுறை அலசியவன் அவர்கள் அங்கேயே இருப்பதை உறுதி படுத்திக் கொண்டு அசைட்டையாய் இருப்பது போல் காட்டிக் கொண்டான்.



நிலைமை புரியாத அஷ்வினியின் நண்பிகள் தங்களுக்குள் கிசுகிசுப்பதும் செல்ஃபி எடுப்பதுமாக இருக்கவும் அபியை அடையாளம் கண்டு கொண்டவன்



"அபி...எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே நீ?"எனவும் ஆச்சரியமாய் அவனை பார்த்தவள்



"சார்...நீங்க என்கிட்ட ஹெல்ப் கேட்டிருக்கீங்க...என்ன பண்ணனும் சார் சொல்லுங்க?"



அந்த சர்வர் இருந்த இடத்தை துள்ளியமாய் கூறியவன்



"அவன் பக்கத்தால போயி சாதாரணமா நடக்குறது மாதிரி அவன் மேல எதயாவது கொட்டி விட்டுடு" எனவும் ஏதோ விபரீதம் என்பதை நொடியில் புரிந்து கொண்ட அவளது லாயர் மூலை அதற்கான வேலையில் இறங்கத் தொடங்கியது.



மீண்டும் அஷ்வினியிடம் குனிந்து



"அஷு...பயப்புடாத... பயப்புட்டோம்னா அவனுங்க உஷாராயிடுவானுங்க" என்க டேபிள் அடியிலிருந்த அவன் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டவள் கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட கண்களை இறுக்க மூடி திறந்தவன் அவள் கைகளுக்கு தைரியமூட்டும் வகையில் அழுத்திக் கொடுத்தான்.



"அஷு...நா வாஷ் ரூம் போறேன்...பி கேர்புல்...ஓகே?"



"நோ தேவ் என்ன விட்டு எங்கேயும் போகாதிங்க..... உங்களுக்கு ஒன்னுன்னா என்னால தாங்கவே முடியாது" என்றவளை வளைத்து இறுக்கி அணைக்கவும் நண்பர் கூட்டம் "ஹோ...."என கூச்சலிட்டது.



அதில் சட்டென அவளை விட்டவன் அஜய் வருகிறானா என கவனமாய் அலச நல்லவேளையாக பக்கத்தில் ஏதோ வேலைக்கென்று வந்திருந்தவன் பதற்றமாய் உள்ளே நுழைந்தான்.



ரிஷி எழுவான் என எதிர்ப்பார்க்காதவர்கள் உஷாராக அதற்குள் அஜய் பக்கத்தில் வரவும் அவனை கூர்ந்து பார்த்தவன் வாஷ்ரூமிற்குச் சென்றான் வேட்டையாடப்போகும் வேங்கையின் வேகத்தில்.....



ரிஷி செல்வதை பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை....

தனியாக பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருப்பாள் என யூகித்து வந்தவனுக்கு ரிஷியும் கூடவே இருக்க எதற்காக அழைத்தாள் என்பதில் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்தது.



தான் வாஷ்ரூம் செல்லும் வினாடி கூட தன்னவளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என யூகித்தே பிரச்சினையை சட்டென சமாளிக்கும் திறன் கொண்ட அவனை வரவழைத்திருப்பது அவனுக்கு எங்கே தெரியப்போகிறது!!!



அவசரமாக அஷ்வினியின் பக்கத்தில் வந்தவன் அவள் தோல் தொடவும் ஏற்கனவே பயந்திருந்தவள் திடுக்கிட்டு திரும்பினாள்.



"ஹேய் அஷ்வி...ரிலாக்ஸ்... நான் தான் பயப்படாத" என்றவாறே ரிஷியின் இடத்தில் அமர்ந்து கொள்ள நண்பிகளின் கவனம் இவன் புறம் திரும்பியது போலவே சுற்றி நின்று கொண்டிருந்த எதிரிகளின் கவனமும் அவனிடம் திரும்பியது.



அபியின் தயவில் அங்கு போலி சர்வராக நின்றிருந்தவனுக்கு காபி அபிஷேகம் நடைபெற அவனும் எரிச்சலுடன் அபியிடம் ஏதும் சொல்ல முடியாமல் வாஷ்ரூம் சென்றான்.



தன் உடையில் இருந்ததை துடைத்துக்கொண்டு இருந்தவனின் பின்னால் வந்து நின்ற ரிஷி இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டபடி கால்களை சற்று அகற்றி அவனையே பார்த்தபடி நின்றிருந்தான்.



துடைக்கும் அவசரத்தில் முதலில் கவனிக்காமல் விட்ட அந்த சர்வர் திடீரென ரிஷி அவன் மூக்கை பொத்தவன் அவனைக் கண்ட அதிர்ச்சி ஒருபுறம் இருக்க அவனிடமிருந்து விடுபட திமிரினான்.



அப்பொழுதென்று பார்த்து வாஷ்ரூமிற்குள் யாரும் வராததும் நம்ம ஹீரோவுக்கு வசதியாய் போயிற்று!!!



அவனை அப்படியே இழுத்துக் கொண்டு சற்று ஒதுக்குப்புறமாய் இருந்த சுவற்று மறைவுக்கு கொண்டு சென்றவன் அவனை விடுவித்து அவன் சுதாரித்து ஓடும் முன் விட்டான் இடது கண்ணத்தில் பளாரென்று....



அவன் விட்ட அறையில் காது ஜவ்வு கிழிந்து இரத்தம் வராத குறையாக அவனின் காதுக்குள் கொய்ங்... எனும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததென்றால் அது மிகையாகாது....



அவன் தடுமாறி நிற்க அவன் முகத்தில் ஒரு குத்து விட்டவன் இரத்தம் வருவது தெரிந்தும் அடங்காமல் அவனை துவைத்து எடுத்து விட்டான்.



தாமதிக்காமல் கதிருக்கு அழைத்தவன்

"கதிர்... ஹோட்டல் சம்யுக்தாகிட்ட நம்மாளுங்கள அனுப்பு...அதுவும் பின்வழியா..." என்றவன் அவன் பதில் பேசுமுன் துண்டித்து விட்டான்.



பதற்றத்திலிருந்த அஷ்வினிக்கு நண்பர்கள் கேட்டது சீண்டியது எதுவுமே காதில் விழவே இல்லை.... ஏதோ திக்மிரமை பிடித்தவள் போல் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க விஷயம் தெரியாத அஜய்க்கு ரிஷியை கொன்று போடும் வெறி....



அவன் சற்றும் எதிர்பாரா விதத்தில் நடை பெற்றது அந்த சம்பவம்!!!



அடுத்தவர்களுடன் பேசிக் கொண்டே இருந்த கவி அஜய்யின் பின்னால் திடீரென ஒருவன்(வாசலில் கத்தியுடன் நின்றிருந்தவன்) கையில் கத்தியை ஓங்கயவாறு குத்துவதற்கு வரவும் "அண்ணா....பின்னால" என கத்தவும் சட்டென தன்னை சுதாரித்தவன் மேசே மேலிருந்த தண்ணீர் க்ளாஸை எடுத்து அவன் மண்டையிலேயே உடைத்தான்.



திடீர் தாக்குதலை எதிர்பார்க்காதவன் நிலை தடுமாறிய சமயம் அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டவன் பெண்களை பாதுகாப்பாக ஓரத்தில் நிற்குமாறு கூறி விட்டு அவனிடம் வந்து அவன் உயிர் நாடிக்கே ஓங்கி ஒரு உதை விட அவன் அப்படியே கீழே சரிந்தான்.



அதற்குள் ஏற்கனவே டேபிளில் இருந்த இரண்டு பேரும் அஜய்யின் பின்னால் கத்தியுடன் வந்து நின்றிருக்க வெளியிலிருந்து இன்னும் நான்கு பேர் வேறு தங்கள் ஆயுதங்களுடன் வந்து நிற்க அஷ்வி "அண்ணா" என கத்தவும் சட்டென அவன் திரும்பிய சமயம் பின்னாலிருந்தவன் கத்தியை அவன் கழுத்துக்கு குத்தப் போக அவன் கையை மடக்கி பிடித்தது ஒரு வலிய கரம்....



((வேற யாருங்க....எல்லாம் நம்மாளுதான்....))



வாஷ்ரூமிற்குள் பிடித்தவனை அவன் வந்த அடையாளமே தெரியாதவாறு தங்கள் ஆட்களிடம் ஒப்படைத்தவன் திரும்பி உள்ளே வரும் போது தான் இது நடந்தேறியது...



அவன் கையை கத்தியுடனேயே முறுக்க அவனிலிருந்து கத்தியும் விடுபட்டு கீழே விழுந்த மறுநொடி அஷ்வினி"தேவ்..." என பயத்தில் அலறியபடி ஓரெட்டு முன்னால் வைக்கப் போக



"அஷ்வினி...ஸ்டாப்... டோன்ட் மூவ்...ஸ்டே தேர்..." என்ற ரிஷியின் சீறலில் அபியை இறுக்க கட்டிக் கொண்டாள்.



தன் எதிராலியிடம் திரும்பியவன்

"என் மச்சினன் மேலயே கை வெக்க போறியா?" எனவும் அஜய்யின் முகத்தில் புன்முறுவல் பூத்ததுவோ...



"ஏன்டா...உனக்கு கொஞ்சம் கூட அறிவில்ல..... இப்போதான் ஒருத்தன உம்முன்னால அந்த காட்டு காட்டியிருக்கான்..... கொஞ்சமும் பயமே இல்லாம அவன் மேல கை வெக்க போற.... உன்ன என்னதான் பண்றது...ஹாங்... இந்த கைய ஒடச்சிடலாம்...ஓகே?"

சிரித்த முகமாய் எள்ளல் வழியும் குரலில் கேட்டுக் கொண்டிருந்தவனின் கண்கள் திடீரென பழிவெறி பளபளக்க அடுத்த நிமிடம் "அம்மா..."என துடித்துக் கொண்டே அவன் கீழே விழுந்தான்.



அதற்குள் அஜய்க்கு முன்னால் இருந்தவர்கள் அடிக்கத் துவங்க அவர்களை அவன் பந்தாடத் துவங்கி விடவும் அஜய்யிற்கு பின்னாலிருந்த மற்றையவனை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி....



அவனையும் அசால்ட்டாக அடித்து துவைத்தெடுத்தவன் அஜய்யின் புறம் திரும்ப உண்மையில் திடுக்கிட்டுத்தான் போனான்.



ஏனெனில் அஜய் அடித்துக் கொண்டிருந்தது அஷ்வினி இருந்த பக்கம்...ரிஷி தற்போது நின்றிருப்பது வாஷ்ரூம் பக்கம்....



இதில் இடையில் பின்னால் இருப்பவர் விளங்காத அளவுக்கு சுவர் வேறு இருக்க அந்த சுவற்றுக்கு பக்கத்தில் புதிதாக ஒருவன் நின்றிருந்ததை அஜய் கண்டிருக்க வாய்ப்பே இல்லை.... ரிஷிக்கு மட்டுமே அவன் தெரிந்திருக்க அவனோ அஜய்யின் முதுகுக்கு கூரிய ஒரு ஆயுதத்தை கொண்டு சென்று கொண்டிருந்தான்.



இப்போது ரிஷி அவனருகில் சென்றாலும் அதற்குள் அந்த கத்தி இறங்குவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்!!!



இப்படியிருக்க என்ன செய்வது என யொசித்தவன் சட்டென தன் அருகிலிருந்த டேபிளில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூஞ்சாடியை எடுத்து அவன் மண்டைக்கே குறி பார்த்து வீச அது சரியாக அவன் பின் மண்டையிலேயே சென்று மோதியது.



பட்ட வேகத்தில் அவன் தலை மட்டுமன்றி அவன் உடலும் முன் செல்ல அடுத்து நடக்கப்போவதை உணர்ந்த ரிஷி



"ஏய் அஜய் மூவ்..." என கத்தவும் அது அவனுக்கு விளங்கித் தொலைத்தால் தானே நகர!!!



கடுப்பான ரிஷி "டேய் அஜய்....மடயா மூவ்" என கத்தவும் தான் அவன் வார்த்தைகளில் கோபம் கொண்டு திரும்பியவன் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் கூரிய ஆயுதத்தை கண்டு ஸ்தம்பித்து தன்னிலையை இழுத்துப் பிடித்தவன் சட்டென விலகவும் அவன் முன்னிருந்தவனின் காது மடலை உரசிச் சென்று "ணங்"என்ற சத்தத்துடன் கீழே விழுந்து நர்த்தனமாடியது.



கோபத்தில் இருந்தவனின் முகம் நன்றியுணர்வோடு ரிஷியை பார்க்க அவன் அதை கண்டு கொள்ளாமல் தன்னவளிடம் விரைந்தான்.



அதில் அவனுக்கு இப்போது அவன் மேல் கோபம் வரவில்லை... ஆனால் ஏதோ ஒரு சுவாரஷ்யம்....



அவனை பற்றி முழுதாக அறிந்து கொண்டே ஆக வேண்டுமென்கிற ஆவல்!!!



இதில் அவர்களே எதிர்ப்பார்க்காதது தான் கமிஷ்னர் மதன்சிவாவின் வருகை....



எப்படி அந்த நேரத்தில் அங்கு வந்தான் என்பது தெரியாவிட்டாலும் தன்னை சுற்றி ஏதோ நடப்பது போலவே இருந்தது அவனுக்கு....



((அடேய் பக்கி...அவன் தற்செயலா வர்லடா... எல்லாம் கூட்டு கலவானிங்க...ஜாக்கிரத ஆமா))



அஷ்வினியிடம் போனவன் அவளிடம் நெருங்காமலேயே மதனிடம் சென்று விட அஜய் தன் தங்கையை நெருங்கினான்.



ஆறுதல் தேட தாய் மடியை எதிர்ப்பார்த்து இருந்தாளோ என்னவோ அவன் வந்து நின்றதுமே அவனை பாய்ந்து கட்டிக் கொண்டு கதறித் தீர்த்து விட்டாள்.



மதனிடம் கை குழுக்கியவன் நடந்ததனைத்தையும் ஒன்று விடாது கூறிவிட்டு அவர்களை தன்னிடம் விட்டு விடுமாறு கேட்டுக் கொள்ளவும்



"இவரு பேசாம போலீசுக்கே படிச்சிருக்கலாம்.... பாவம் எவன் டெட் பாடிய சூஸ் பண்ணி அவனுங்களுக்கு அனுப்ப போறாரோ....." என நினைத்து விட்டு வெளியே விறைப்பாய்



"அண்...அ..அது சார் சம்பவம் நடந்த இடத்துக்கு நாங்க வந்துட்டதால இதுல நிறைய ப்ரொஸீஜர்ஸ் இருக்கு அண்...சார்...அதனால..."

என்றவனை இடை நிறுத்தியவன் அவனை கூர்மையாய் அளவிட்டபடி



"சோ வாட்?கொல முயற்சி நடந்ததுக்கு ஆதாரமா உங்களுக்கு வேனா இவங்க தேவப்படலாம்... பட் எனக்கு இவங்க என் கண்ட்ரோலுக்கு வந்தே ஆகனும்... தட்ஸ் இட்" எதிர்த்து பேச வாயைத் திறந்தவன் அவன் குரல் கடுமையில் கப்பென மூடிக் கொண்டான்.



"ஓகே அண்..சார்" என்றவன் அப்போதுதான் தன்னை புருவம் சுருக்கி பார்த்திருக்கும் தன் ஆருயிர் நண்பியை கண்டான்.



அழுது அழுது சோர்ந்து போயிருந்தாலும் அவள் முகத்தில் குழப்ப ரேகைகள் அப்பட்டமாக வெளிப்பட்டதில் எங்கே இருந்தால் பேச வந்தே மாட்டி விடுவாள் என நினைத்தவன் அவசரமாக வெளியேறி விட்டான்...



அவனையே நெற்றி சுருக்கி பார்த்திருந்தவன் தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியபடி நிமிர்ந்தவனுக்கு அப்பொழுதுதான் தன் மனையாள் இருப்பதே மண்டையில் உறைக்க அவளருகில் செல்லவும் அவனை காண நின்றிருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க அவனை இறுக்கத் தழுவிக் கொண்டாள்.



நண்பர்களும் அஜய்யும் விடை பெற்று சென்றுவிட அவளை தன் கை வளைவுக்குள்ளேயே வைத்தவாறு வெளியேறினான்.



விதி வலியது....



இரவு....



வீட்டு ஹாலில் நாள்வரும் ஒருவித இறுக்கத்துடன் அமர்ந்திருந்தனர்.



அப்பொழுதும் கூட அஷ்வினி ரிஷியின் கைவைளைவுக்கு உள்ளேயே அமர்ந்து கொண்டு இருந்தாலும் அவளையும் மீறி உடல் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது.



அவனை இம்மியளவும் அசையவிடாது அவன் கையை இறுக்கப் பிடித்திருக்க அவள் பயமறிந்து அவனும் அவளை தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தான்.



முதலில் மௌனத்தை கலைக்க விரும்பிய கயல்



"ஏன் மாமா..." என்றுவிட்டு நாக்கை கடித்தவள்



"இல்ல...இவ்வளவு நடந்திருக்கு.... ஏன் நீங்க கால் பண்ணல?"



"நம்ம வீட்டு ஆளுங்கள அவனுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு.... அதனாலதான் ஆருவ கண்டாக்ட் பண்ணல"



"மாமா... நா ஒங்கள அண்ணானு கூப்புடட்டுமா?"



"வாட்....?அஷு அக்கா நா அண்ணனா?"



"வேற என்ன பண்றது மாமா... அஷ்விக்கு நா உங்கள மாமான்னு கூப்புட்றது புடிக்கலயாம்.... மீறி கூப்டா ஆருவ தாத்தான்னு கூப்புடுவேன்னு மெரட்றா" எனவும் ரிஷி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்க ஆரவ் அதிர்ச்சியாய் அஷ்வியை முறைத்தான்.



"ஏன் அம்மு உன் அக்காக்கு அவ புருஷன் மேல காதல்னா வேற பேரு சொல்லி கூப்புட சொல்லு.... அத விட்டுட்டு ஏன் இந்த அப்பாவி மேல கொலவெறி"

என்றுவிட்டு தன் நண்பியை மீண்டும் முறைக்க அவள் பயத்தை விடுத்து கலகலத்து சிரிக்க தன்னவள் சிரிப்பில் ரிஷிக்கும் புன்னகை பூத்தது.



"இப்போவே எனக்கு பதில் சொல்லுங்க மாமா" எனவும் சிரிப்பை நிறுத்திவிட்டு அவளை முறைக்க அவள் தன் மீது எடுத்துக் கொண்ட உரிமையில் அவன் காதல் இன்னும் கூடியது.



"அத்தான்னு கூப்புடு" என்றவனை ஆரவ் முறைக்க விஷயம் புரிந்தவனாய்



"ஓ..அதுல கூட சிக்கல்தானா?என்ன பண்றது கயல்..?ம்..?"



"அதெல்லாம் எனக்கு தெரியாது... ஒன்னு அண்ணாண்ணு கூப்புட்றேன்.... இல்லன்னா சார்னு கூப்புடுவேன்.... சொல்லிட்டேன் ஆமா?"



"என்னது..‌சாரா... அதுக்கு அண்ணனே தேவலை"



"அப்பொ அண்ணான்னே கூப்டலாம்ல?"



"நோ கயல்விழி....அது தப்புமா" பொறுப்புள்ளவனாய் எடுத்துக் கூறவும்



"மாமா....என் ஆரு பாவம்.... உங்க பொண்டாட்டி மானத்தை வாங்காம விடமாட்டா" எனவும் ரிஷி மறுபடி சிரிக்க அஷ்வினி கயலை ஆன மட்டும் முறைத்துப் பார்த்தாள்.



"ஆக என் தலதான் உருளப்போகுது....அதானே?"ஆரவ் போலிக் கோபத்துடன் தன் உயிர் நண்பியை முறைக்க



"இல்லங்க ஆரு தாத்தா.... உங்க மேல கை வைக்க யாருக்கு தைரியம்?"என கேட்டு அவனை அலறவிட ரிஷியும் கயலும் விழுந்து விழுந்து சிரித்தனர்.



"ஏய் ராட்சஸி... மரியாதயா ஒழுங்கா கூப்புடு....இல்லன்னா நானும் உன்ன ராட்சஸின்னே கூப்புடுவேன் பாத்துக்கோ"



"முடியாது போங்க ஆரு தாத்தா...."



"உன்ன...." என்றவாறு அவளை அடிக்கத் துரத்தவும் ரிஷியிடமிருந்து விலகி துள்ளி ஓடினாள் அவள்...



சிரித்துக் கொண்டு இருந்தவர்களுக்கு மேலும் சிரிப்பு வர சிரித்துக் கொண்டே இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.



இப்படி வாய்விட்டு சிரித்து எவ்வளவு நாளாயிற்று....

வெறிச்சோடிக் கிடந்த வீட்டுக்கு உயிர்ப்பை கொடுத்துக் கொண்டிருப்பவள் அவள்.....



மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைமோத தன்னலளையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் மேல் இன்னுமின்னும் காதல் பல்கிப் பெருகிற்று!!!



"தேவ்...என்ன காப்பாத்துங்க ப்ளீஸ்..."என கத்திக் கொண்டே வந்து அவன் பின்னே மறைய



"ராட்சஸி....மரியாதயா வெளிய வா"



"முடியாது ஆரு தாத்தா....."எனவும் ரிஷி மீண்டும் வாய்விட்டு சிரிக்க அவனையே நிம்மதியாய் பார்த்தான் ஆரவ்.....



எத்தனை நாளாயிற்று இவனை இப்படி சிரித்து பார்க்க.... தன் தோழிக்கு மானசீகமாய் நன்றி உறைத்தவன் வெளியே கோபம் போல் காட்டிக் கொண்டான்.



"அப்போ ஓகே...நீ வர மாட்ட அப்பிடித்தானே?"



"ஆமா தாத்தா.... அதிலென்ன சந்தேகம்?"



"அஷ்வீ...." என உண்மையில் பல்லை கடித்தவன்



"ஓகே ஓகே சரண்டர்.... நீ உன் காதல் புருஷன மாமான்னே கூப்டுகோ... நானே விட்டுத்தறேன்....அம்மு நீ அண்ணாவ அத்தான்னே கூப்புடு"எனவும் விழி விரித்து அவனை பார்த்தாள் கயல்விழி...



"ஆ...அஃது... அந்த பயம் இருக்கட்டும்...." என்ற அஷ்வி சற்று முன்னே வர அவள் தலையில் நங்கென கொட்டி விட்டு ஓட



"பாருங்க தேவ்....ஆருவ.... கொட்டிட்டான்... ரொம்ப வலிக்குது" தலையை தடவிக் கொண்டே தன் கணவனிடம் புகார் வாசித்தாள் அவள்....



"குட் ஜாப் ஆரு...காலைல எனக்கு கொட்டினல்ல...." என பழிப்பு காட்டி விட்டு கயலும் ஆரவ்வை இலுத்துக் கொண்டு தங்களறைக்கு விரைய



"இருடி...மாட்டாமயா போவ...." என்றவள் அப்போது தான் திரும்பி தன்னவனை பார்த்தாள்.



அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றில் கட்டுண்டு போனாள் பாவையவள்....



இன்னதென்று வர்ணிக்க முடியாதவொரு புதியதோர் உணர்வு மனமெங்கும் வியாபித்திருந்தது அவளுக்கு.....



வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும் ஓர் அவஸ்தையான உணர்வு....



இது தான் காதலா???



தன்னை தானே கேட்டுக் கொண்டவளுக்கு புரியாத புதிராய் ஒரு பதில்.....



அவனும் அவளையே இமைக்க மறந்து ரசித்திருக்க அவன் கண்களை சந்திக்க முடியாமல் கண்ணங்கள் சிவப்பேற தலையை குனித்துக் கொள்ளவும் இளம் முறுவலொன்று உதயமானது அந்த கட்டிளம் காளைக்கு!!!



அது அவனுக்காக என்றதில் மனது இன்னுமின்னும் அவள் பால் அடித்துச் செல்லப்பட அதை தடை செய்வது போல் ஒலித்தது அவன் மொபைல்....



முகத்தில் எரிச்சலை அப்பட்டமாக காட்டியவன் அழைப்பது கதிர் என்று தெரிந்ததில் யோசனையாய் அடண்ட் செய்து காதில் வைத்தவன்



"எஸ் கதிர்..." என்றவாறே தள்ளிச் செல்ல விட்டால் போதுமென்று தங்களறைக்கு ஓடியே விட்டாள் அவன் மனையாட்டி.....



ரூமிற்குள் வந்தவளுக்கோ இன்னும் படபடப்பு அடங்கிய பாடாய் இல்லை...



எப்படி உணர்கிறாளென்று அவளுக்கே தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க இதில் அவன் வேறு உற்றுப் பார்த்ததில் உண்மையில் இதயம் வேகமாக துடித்த சத்தம் தனக்கே கேட்குமளவுக்கு இருக்கவும் தான் அவன் நகர்ந்ததும் அவசரமாக வந்து விட்டாள்.



இதுவரை எப்படியோ ஆனால் இனி சத்தியமாக அவன் முகத்தை கூட பார்க்க முடியாமல் போகப் போகிறது என்பது மட்டும் தெள்ளென புரிந்து விட்டது அவளுக்கு....



இப்போது என்ன செய்வது?எப்படி அவனை தவிர்ப்பது என தீவிரமாக யோசித்தவள் அவன் வரும் முன் அவசரமாக பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.





ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்....



கதவை திறந்து கொண்டு புயலென உள்ளே நுழைந்தவன் இன்டர்காமில் கதிரை அழைத்தான்.



அவன் அனுமதி பெற்று கதிர் உள்ளே நுழைந்த மறு நொடி அவனுக்காகவே காத்திருந்தவன் போல்



"வொய் கதிர்.... எனிதிங் சீரியஸ்?" என்க



"எஸ் சார்... நமக்கு கிடச்ச தகவல்படி பாத்தா அடிபட்டு வந்தவனுங்கள்ள எல்லோருக்குமே ஒரே பூத்ல இருந்து தான் கால் வந்திருக்கு.... அதுவும் ஒரே நேரத்துல..."



"வாட்....பட் ஹௌ இஸ் இட் பாசிபிள் கதிர்?"



"அதான் சார் குழப்புது"



"வெயிட் வெயிட்....அந்த பூத் எந்த ஏரியா?"



"இராமநாதபுரம் சார்"பட்டென பதில் வந்ததில் அவன் கண்கள் இடுங்கியது.



"இராமநாதபுரம்?"



"எஸ் சார்...." எனவும் நெற்றியை சுருக்கி தலையை குனிந்தவன் தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியபடி நிமிர்ந்து



"ஹரிஷ்கு கால் பண்ணது எந்த ஏரியா?"



"அதுவும் இராமநாதபுரம் தான் சார்"



"வாட்...?"அப்பட்டமாக அதிர்ச்சி வெளிப்பட்டது அவன் குரலில்



"எஸ் சார்....இரண்டும் ஒரே பூத் தான்"



"....."



"சார் அனன்யாவோட மொபைல ட்ரேஸ் பண்ண சொல்லியிருந்தீங்க"



"எஸ்...என்னாச்சு...எனி இன்பர்மேஷன்?"



"அதுல இருந்து அஷ்வினி மேடத்துக்கு கத்தி குத்துப்பட்ட அன்றைய நாளுக்கு முன்னால கூட ஒரு தடவ அதே பூத்துக்கு கால் போயிருக்கு..."



"...."



"அப்பறம் அமெரிக்கா கால் ஒன்னு வேற இவங்களோட மொபைலுக்கும் அதே பூத்துக்கும் கணக்ஷன் ஆகியிருக்கு"

என்றவனின் கூற்றிலேயே தெரிந்து போனது அவனுக்கு நிச்சயம் ராகேஷாகத்தான் இருக்க வேண்டுமென்று....



ஆனால் அந்த பூத்தில் பேசுபவன்????



அவன்தான் அவனின் கண்ணுக்கு தெரியா எதிரி!!!!



அடித்து சத்தியமிட்டு கூறியது உள்ளுணர்வு...



ஒருதடவை உள்ளுணர்வுக்கு மதிப்பளிக்காமல் பட்ட துரோகம் போதும் அவனுக்கு....



எதிரியை நெருங்கிக் கொண்டிருப்பது புரிந்தாலும் மனதில் ஏதோ இடறியது....



கதிரை பார்த்து

"கதிர்....அந்த பூத் கிட்டவும் நம்ம ஆளுங்கள ஏற்பாடு பண்ணிடு.... அண்ட் நம்ம கம்பெனிய சுத்தியும் ஏற்பாடு பண்ணு... சந்தேகம் வர்றா மாறி எவன் மாட்டுனாலும் நம்ம இடத்துக்கு கூட்டி வா..." என்றவன் இன்னும் சிலபல வேலைகளை பிறப்பித்து விட்டு தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.



இரவு....



பால்கனியிலிருந்த சாய்வு நாற்காலியில் ஆரவ் அமர்ந்திருக்க அவன் பக்கத்தில் இருந்த நீண்ட பெஞ்ச்சில் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கயல்விழி.



இருவர் முகத்திலும் அப்படி ஒரு நிம்மதி...



எதனால்???



ரிஷியின் சிரிப்பை பார்த்துவிட்டு வந்த நிம்மதி கலந்த பூரிப்பு அது....



"அம்மு..."



"ம்... என்னடா?"



"நா இன்னக்கி எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?"

எனறவனை காதலாக பார்த்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.



அதில் அதே அளவு காதலுடன் அவளை பார்த்தவன்



"ஐ லவ் யூ சோ மச் அம்மு..."எனவும்



"சரி...என்ன சொல்ல வந்த?"



"அண்ணா முகத்துல பாத்த சிரிப்ப கண்டதுமே எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமாடி?"



"...."



"அவங்க மனசு விட்டு சிரிக்கிறத பாத்து எனக்கு அப்பிடியே அவங்கள அணச்சிகனும்னு தோனிச்சி அம்மு"



"செஞ்சிருக்க வேண்டியது"



"உன் வயித்தெரிச்சல எதுக்கு கொட்டிக்குவானேன்னு தான் பேசாம இருந்துட்டேன்டி" என்றுவிட்டு கண்ணடிக்கவும் அவனை முறைத்தவள் அவன் முதுக்குக்கே இரண்டு போடு போட்டாள்.



"அவர் எப்பவும் நல்லா இருக்கனும் அம்மு"என்றவனின் குரல் கரகரத்தது.



அதில் பதறிப்போய் அவன் தோலை தொட இலேசாய் முறுவலித்தவன்



"ஹீ இஸ் மய் ஹீரோ அம்மு...ஹீ இஸ் மய் டாட்..." என்றவனின் கண்களிலிருந்து மலுக்கென கண்ணீர் கண்ணத்தை தொட்டது.



அவனை தன் புறம் திருப்பி அவன் முகத்தை கைகளில் ஏந்தி கண்ணீரை துடைத்தவள் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.



"ஒனக்கு தெரியுமா அம்மு...டாட் இறந்தப்போ நா ரொம்ப அழுதேன்... என்னால அத ஜீரனிச்சிக்கவே முடியலடி... அப்போ அண்ணா என்ன செய்வார் தேரியுமா?"



"...."



"என்ன அவர் மடியில படுக்க வெச்சி நா தூங்கும் வர என் தலைய தடவிகிட்டே இருப்பாரு....ஆராவ ஏற்கனவே சமாதானம் பண்ணி தூங்க வெச்சிருப்பாரு"



"...."



"அவருக்கு கவல இல்லன்னு நெனக்கிறியா அம்மு... நோ...நா தூங்கும் வர இருந்துட்டு எழுந்து போய் நிலாவ வெறிச்சிகிட்டு மௌனமா அழுகுறத நா எத்தனயோ தடவ கண்டிருக்கேன் அம்மு... அவர் அழுதா நா அழுவேன்னு தெரிஞ்சி என் முன்னால சந்தோஷமாவே காட்டிக்குவாரு...ரியலி ஹீ இஸ் க்ரேட்"



"...."



"டாட்கு ஒரு தங்கச்சி இருக்காங்க அம்மு"



"என்னடா சொல்ற?"



"அவர் இறந்தப்போ வந்தாங்க... அது வர அவங்கள நா பார்த்ததே இல்ல...அண்ணாவும் தான்..."



"...."



"எதுக்காக வந்தாங்கன்னு நினைக்கிற?"



"அவங்க அண்ணாவ பாக்க"



"நோ அம்மு...அவங்க வந்தது டாட் ஓட சொத்த எடுக்குறதுக்காக"



"வாட்?"



"அது எல்லாமே அண்ணாவோட பேருலயும் என் பேரு அப்பறம் ஆராவோட பேருல இருக்குறத தெரிஞ்சிகிட்டு கோபமா பொய்ட்டாங்க"



"...."



"அவங்க போகும் போது தவறுதலா என் கை அவங்க மேல பட்டுடுச்சுன்னு எனக்கு அறஞ்சாங்க.... அடுத்த கண்ணத்துல விழ வேண்டிய அடிய என் அண்ணா வாங்கிகிட்டான்"



"...."



"அவரு ரொம்ப மெச்சூட் அம்மு... அத்தய கை நீட்டி எச்சரிச்சாரு அந்த வயசுலயே"



"...."



"டாட் இறந்தப்போ கூட அவர் அப்செட் ஆகி நா பாத்ததில்ல அம்மு...பட் ஆ...ஆராவோட பிணம் வீட்டு முன்னுக்கு வெச்சிருந்தப்போ...."

அவன் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது.அதை புறங்கையால் துடைத்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தான்.



"ஆ..ஆரான்னா அண்ணாக்கு உயிர் அம்மு... என்ன போல கெடயாது... அண்ணாவ போல ரொம்ப மெச்சூட்"



"ஆரு கஷ்டம்னா விடுடா...உன்ன பாக்க முடியல"அவளும் அழுதாள்.



"ஆ...ஆராவ...ஆராவ.."தொண்டை அடைத்தது அவனுக்கு...



"..."



"அவளுக்கு அப்போ பண்டிரெண்டு வயசு அம்மு....அ...அவள... அவள கசக்கிட்டாங்க அம்மு...மு...மு... முகமெல்லாம் ஆசிட்.... எ... எனக்கு பாக்கவே பயமா இருந்துதுடி"குழுங்கிக் குழுங்கி அழுதான் அவன்....



"ஆரு...ஆரு...வேண்டாம் விடு"



"அ...அண்ணா...அண்ணா அழுதாங்கடி.... என் கண்ணு முன்னால அவள கட்டிபிடிச்சிகிட்டு அ..அழுதாங்க....கதறி துடிச்சாங்கடி... என் ரிஷி அழுதத என்னால தாங்கிக்வே முடியல அம்மு.... நானும் அழுதேன்... அண்ணா அழுதுகிட்டே இருந்தாங்க... சாப்புடாம அவ போட்டோவையே கட்டிபிடிச்சிகிட்டு வெறும் தரைல தூங்குவாங்க அம்மு....ரா...ராத்திரி திடீர்னு ஆ..ஆரான்னு கத்துவாங்க... என்னால அவர பாக்கவே முடில அம்மு..."



"...."



"எ...எனக்கு ரொம்ப லோன்லியா ஃபீல் ஆச்சு... அதுக்கு மேல பொறுத்துக்க முடியாம அவர் கூடவே நானும் தரைல படுப்பேன்...அ... அப்பறம் தான் அ...அவருக்கு என்ன ஞாபகமே வந்துது அம்மு...."



"...."



"அதுக்கப்புறம் டோட்டலா சேஞ்ச் ஆவிட்டாங்க.... எனக்காக வாழ ஆரம்பிச்சாங்க அம்மு... அவங்குளுக்கான எந்த ஆசையையும் நா இது வர பார்த்ததே இல்லடி...."



"...."



"ஒரு அப்பாவோட பொறுப்பு எப்பிடி இருக்குமோ அத தான் எனக்கும் பண்ணினாங்க அம்மு.... எனக்கு அப்பாவா மட்டுமில்லாம அம்மாவாகவும் அரவணைப்பா இருந்தவரு அம்மு என் அண்ணன்..."



"..."



"அவரு என்கிட்ட அண்ணனா பாசத்த பொழிஞ்சத விட ஒரு அப்பாவாதான் கண்டிப்பு காட்டியிருக்காரு"



"ரியலி ஹீ இஸ் க்ரேட் டா..." என்றவளை தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டான்.



மனதிலில் அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை இறக்கி விட்ட நிம்மதி அவனுள்!!!!



........



அவனுக்கு பயந்து பாத்ரூமிற்குள் நுழைந்து ப்ரஷப்பாகிவிட்டு வெளியே வந்தவளை வெற்று அறையே வரவேற்றுக் கொண்டிருந்தது.



ஹப்பாடா என மூச்சு விட்டாலும் மனதின் ஓரத்தில் சின்ன ஏமாற்றம் ஒன்று பரவுவதை தடுக்கத்தான் முடியவில்லை....



நேரே பால்கனிக்கு சென்றவள் அதில் இருந்த கூடை நாட்காட்டியில் ஏறி அமர்ந்தபடி தனக்குள் மூழ்கிப் போனாள்.



இன்று ஆரவ் சொன்ன வார்த்தைகளே மீண்டும் மீண்டும் மனதில் அலைமோதிக் கொண்டிருந்தது.



அன்று அபி கேட்ட போது இதே வாயால் அவன் மேல் காதல் இல்லையென்ற மனது தான் இன்று காதல் தான் என்று அடித்துக் கூறுகிறது.



அவரும் என்னை லவ் பண்ணுவாரா? என்ற ஒற்றை கேள்வியில் இருந்த சந்தோஷமெல்லாம் காற்றுப் போன பலூன் போல் வடிந்துப் போயிற்று!!!



((அட மக்கே...உனக்கு வர முன்ன ஆள் டோட்டல் அவுட்மா))



அந்த மேனா மினுக்கி அனன்யாவால் பெண்களையே வெறுத்திறுப்பவனுக்கு தன் மீது காதல் வருமா என்பது சந்தேகமாகவே இருந்தது.



அவருக்கு வர்லன்னா என்ன...அதான் அவருக்கும் சேத்து லவ் பண்ண நா இருக்கேனே...



தான் காதல் சொல்லப் போகும் அழகிய தருணத்திற்காக காத்திருக்க தொடங்கிய இதே மனது தான் அவனை வெறுத்து ஒதுக்கவும் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை யாரந்த பேதைக்கு சொல்லி புரியவைப்பது!!!



தொடரும்......



16-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 26 ❤



லேப்பிலிருந்து கண்களை அகற்றி தன் இடது கையை உயர்த்தி மணி பார்க்கவும் அது இரவு இரண்டை தாண்டிக் கொண்டிருப்பதை உணர்த்த செய்து கொண்டிருந்ததை அப்படியே வைத்துவிட்டு லேப்டாப்பை மூடியவன் சோர்வாக சுழல் நாட்காலியில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.



இதற்கு மேலும் வீட்டுக்கு போக முடியாது என யோசித்தவன் தன் மனையாளுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.



ரிங் சென்றுகொண்டே இருக்க எடுக்கும் வழியை காணாததால் மீண்டும் மீண்டும் அழைக்க அது எடுக்கப்படாமலே போனது சலிப்பை உண்டாக்க சுவிட்ச் ஆப் பண்ணி விட்டு ஆபீஸ் அறையில் சென்று படுத்து விட்டான்.



***



இராமநாதபுரம்......



காலையிலிருந்து ஏதோ சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவனை ஆராய்ச்சியாய் தொடர்ந்து கொண்டே இருந்தது ஈஷ்வரியின் பார்வை....



கையில் சின்ன கட்டுடன் நுழைந்தவளை பார்த்து பதறித்தான் போனது அவள் மனம்....



என்னவென்று கேட்டதற்கு ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டு நேரே தங்களறைக்கு வந்தவன்தான்....



அதிலிருந்து இப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறான்.



ஆபீஸில் ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ என நினைத்தவள் அவனை இன்னுமின்னும் டென்ஷனாக்காமல் அவன் போக்கிலேயே விட்டு விட்டாள்.



இரவு வந்தும் சாப்பாடு வேறு வேன்டாமென்று மறுத்தவன் அப்படியே இருக்க அப்பொழுதுதான் ஆராய்ச்சியாய் படியத் தொடங்கியது அவள் பார்வை....



இதற்கு மேல் முடியாதென்று தோன்றி விட அவன் முன் வந்து நின்றவள்



"அஜய்...."எனவும் திரும்பிப் பார்த்தானே ஒழிய எதுவும் பேசவில்லை...



"அஜய்...எதுக்கு இப்பிடி இருக்கீங்க...ஆபீஸ்ல ஏதாவது பிரச்சினையா?"

என்றவள் அவன் தோலை தொட அப்பொழுதான் அவனுக்கு உணர்வே வந்தது போலும்...



"ஹாங்...என்ன கேட்ட?"எனவும் அவனை யோசனையாய் பார்த்தவள்



"என்னாச்சு அஜய்...எதுக்கு அப்சட்டா இருக்கீங்க... ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா?"



"இல்ல ஈஷ்வரி... எதுவும் ப்ராப்ளம் இல்ல"



"அப்பறம் எதுக்காக இப்பிடி யோசிச்சிகிட்டே உக்காந்திருக்கீங்க?"



"நீ தேவாவ பத்தி என்ன நினைக்கிற?"

சம்பந்தமே இல்லாமல் கேட்டு வைக்க



"நா என்ன கேக்குறேன் நீங்க என்ன பதில் கேட்டுகிட்டு இருக்கீங்க?"



"ப்ச்...சொல்லுடி...அவன பத்தி என்ன நினைக்கிற?"



"பட் எதுக்காக அஜய்?"ஏற்கனவே முறுக்கிக் கொண்டு திரிபவர்களுக்குள் மீண்டும் சண்டை வந்து விடக்கூடாதே என பயந்து போனாள் அவள்...



"கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடி?"



"அவரப் பத்தி என்ன இருக்கு நா சொல்ல?"



"ஐ மீன் அவன் கேரக்டர் பத்தி?"



"இப்போ எதுக்கு அவரப் பத்தின ஆராய்ச்சி?"



"சொல்ல முடியுமா முடியாதா?"



"ம்...நா பாத்த வரைல அவர் கண்ணுல எப்பவும் நேர்மை இருக்கும்.... அண்ட் அஷ்வி மேல நெறைய பாசம் இருக்கு...பட் காட்ட தயங்குறாறோன்னு சில நேரம் தோனியிருக்கு"



"ம்...அவனப்பாத்தா உனக்கு வேற யாரையாவது பாக்குறா மாறி ஃபீல் ஆகுதா?"



"நோ அஜய்....வொய்?"



"இல்ல....ஒன்னில்ல"



"நீங்க ஏதோ என்கிட்ட மறெக்கிறீங்க"



"இல்லமா...."



"ப்ச் மழுப்பாதீங்க அஜய்"



"சத்தியமா இல்லடி"



"சரி விடுங்க"



"நீ போய் தூங்கு....எனக்கு கொஞ்சம் வேல இருக்கு....அத முடிச்சிட்டு வந்துட்றேன்"



"சரி அஜய்...."என்றவள் எழுந்து சென்று விட மறுபடி மறுபடி இன்று நடந்ததை ஓட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தான்.





காலை.....



கூடை நாற்காலியில் அமர்ந்தபடியே உறங்கியிருந்தவள் சூரிய கதிர் அவள்மீது பட்டுத் தெறிக்கவும்தான் கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தாள்.



நேற்று நடந்தவை அனைத்தும் மீண்டும் ஞாபகம் வர ஒரே துள்ளலில் எழுந்தவள் அவசரமாக உள்ளே சென்று அவனைத் தேட அவன் இருந்தால்தானே???



கீழேயும் சென்று பார்த்துவிட்டு வந்தவள் ஜிம் அறையிலும் ஆபீஸ் அறையிலும் அவன் இல்லாது போகவே யோசனையாய் அமர்ந்திருந்தவளுக்கு நேற்று அவன் ஆபீஸ் சென்றது ஞாபகம் வர தன் மொபைலை தேடினாள்.



அது அங்கிருந்த ட்ரஸ்ஸிங் டேபிள் மேல் இருக்க அதை எடுத்துப் பார்த்தவள் அது நேற்று இரவே உயிர் விட்டிருந்ததை கடுப்புடன் பார்த்து விட்டு ஜார்ஜில் போட்டவள் அது உயிர்பெறும் வரை குளிக்கப் போனாள்.



சற்று நேரத்தில் வெளியே வந்தவள் வேலைக்கு போக தயாராகி விட்டு கையில் கோட்டுடன் வந்து தன் செல்போனை உயிர்ப்பித்தாள்.



உயிர்ப்பித்த மறுநொடி நோட்பிகேஷனில் "கமாண்டர் 50 மிஸ்ட் கால்ஸ்"என வந்து விழவும் அவசரமாக அவனுக்கு அழைக்க அது சுவிட்ச் ஆப் என்ற பதிலையே தந்து கொண்டிருந்தது.



மீண்டும் மீண்டும் முயற்சித்தவளுக்கு பலன் என்னவோ பூச்சியமாகவே கிடைக்க உள்ளுக்குள் இலேசாக உதறத் தொடங்கியது.



நேற்றிரவு இரண்டு மணியளவில் கால் வந்திருப்பதை பார்த்தவளுக்கு தன்னவனுக்கு என்னானதோ என்றதில் வெளிப்படையாகவே நடுங்க கீழே இறங்கி ஓடினாள்.



அதே நேரம் ஆரவ்வும் கயலும் காலேஜ் செல்ல தயாராகி கீழே வந்துவிட்டிருக்க இவள் ஓடி வருவதை பார்த்தவர்களுக்கும் பதற்றமாகிவிட்டது.



தன் உயிர் நண்பனை நெருங்கியவள்



"ஆரு...தேவ் நேத்து ஆபிஸ் போனவரு இன்னும் வர்லடா...போன் வேற சுவிட்ச் ஆஃப்னு வருது...நீ கதிர் அண்ணாக்கு கால் போட்டு தாடா"எனவும் அவள் சொற்படி கதிரை அழைத்தவன் அது உடனே ஏற்கப்படவும் அவள் பேசினால் தான் மனது நிம்மதி அடையும் என உணர்ந்தவன் அவளிடம் தன் மொபைலை நீட்டினான்.



"அ... அண்ணா"



"சொல்லுமா"



"தேவ் நல்லா இருக்காருல்ல?"



"ஆமா மேடம்...சார் கிட்ட இப்போதான் பேசிட்டு வந்தேன்....அவர் ஆபிஸ்ல தான் இருக்காரு....அவரு போன் சுவிட்ச் ஆப் ஆகிருச்சு"எனவும்தான் ஆசுவாசமாய் மூச்சை இலுத்து விட்டாள்.



"சரிண்ணா...நா அப்போ வேச்சிட்றேன்"

என்றுவிட்டு போனை அவனிடம் நீட்டவும் அவ்ரகள் இருவரும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க அவளுக்கும் சிரிப்பு வந்து விட்டது.



"என்னங்க மேடம்...புருஷன கொஞ்ச நேரம் காணோம்னதும் உயிரே நின்னுடுச்சோ"ஆரவ் வேண்டுமென்றே அவளை சீண்ட



"ப்ச்...போடா...நா பயந்துட்டேன் தெரியுமா"எனவும் கயல்



"தெரியுது தெரியுது" என அவள் பங்கிற்கு நக்கலடிக்க சங்கடமாகிப் போனது நம் அஷ்விக்கு....



அவளை பார்த்து சிரித்த ஆரவ்



"சரிடி...நாங்க கெளம்புறோம்"

என்றவாறே வெளியேறப் போக



"என்ன அவரு ஆபிஸ்ல விட்டுடுடா.... என் ஸ்கூட்டிய நேத்து அங்கேயே பார்க் பண்ணிட்டு வந்துட்டேன்" எனவும் அவளையும் கூட்டிக் கொண்டு தன் அண்ணனின் ஆபீஸுக்கு சென்றான்.



அவளை அங்கே இறக்கி விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட இவள் நேரே ஆபீஸுக்குள் சென்றாள்.



இதுவரை வந்தபோதெல்லாம் சுடிதாரிலேயே வந்திருக்க அவளை லாயர் சாரியுடன் கோட் சகிதம் கண்டவர்களுக்கு சற்று அதிர்ச்சி தான்.



அவள் அவனின் மனைவி என்பது யாருக்குமே அறிவிக்கப்படாமல் இருக்கவும் ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ என்றே எண்ணத் தோன்றியது அவர்களுக்கு.....



நேரே ரிஷப்ஷனில் இருந்த பெண்ணிடம் வந்தவள்



"எஸ்கியூஸ் மீ..."எனவும் திரும்பிப் பார்த்த சாருமதிக்கு வயிற்றில் புளியை கரைத்தது.



பின்னே முதல் முறை வந்த போதே அவள் அலற வைத்தவளாயிற்றே அவன் மனையாள்!!!



அன்று தேவ் அபாய்ன்மெண்ட் இல்லாமல் அனுமதி கொடுத்ததில் அஷ்வினி அவனுக்கு வேண்டப்பட்ட பெண் என நினைத்திருந்தாளே தவிர அவளுக்கும் உண்மை தெரியாது....



அதனாலேயே இன்று பவ்யமாக பேசினாள்



"எஸ் மேடம்?"



"உங்க கம்பனி எம்.டி ய கொஞ்சம் மீட் பண்ண முடியுமா?"



"மேம்...சார் முக்கியமான மீட்டிங்ல இருக்காரு...நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்"



"நோவே மிஸ்..."என்றவள் அவள் சேலையில் குத்தியிருந்த அவள் பெயரை பார்த்து விட்டு மேலும் பேசினாள்.



"மிஸ் சாருமதி...எனக்கு இப்போவே உங்க சார பாக்கனும்....என்னால வெயிட் பண்ண முடியாது... இட்ஸ் டூ லேட்"



"பட் மேம்...."



"நோ எஸ்கியூஸ்...இப்போவே கால் பண்ணுங்க"எனவும் எச்சிலை விழுங்கிக் கொண்டே அவனுக்கு அழைத்தாள்.



அவளுக்கு அனுமதி பெறாமல் கூட உள்ளே நுழையலாம் தான்...ஆனால் அந்த ரிஷப்ஷனிஸ்ட் சாருமதியை வேண்டுமென்றே வம்பிலுத்துக் கொண்டிருந்தாள்.



அவள் இவளை பார்த்து பயந்தது அவளுக்கு சிரிப்பை வரவழைக்கவும் அவளிடம் பேச்சுக் கொடுத்தாள்.



.....



மீட்டிங் அறையில் ப்ராஜக்டரின் முன்னால் தனது ப்ரஸன்டேஷனை விளக்கிக் கொண்டிருந்தவனின் போன் சிணுங்கியது.



அன்று முக்கியமான மீட்டிங் என்பதால் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாமென்று கதிரிடம் ஏற்கனவே அவன் கண்டிப்புடன் கூறியிருக்க இப்போது போன் அலறவும் எரிச்சல்தான் வந்தது அவனுக்கு.....



இங்கு அஷ்வினியின் வற்புறுத்தலில் மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருக்க அதை சுவிட்ச் ஆப் பண்ணிவிட்டு கதிரை முறைக்க அதில் வெடவெடத்துப் போனவன் அவசரமாக எழுந்து எஸ்கியூஸ் கேட்டு விட்டு வெளியே வந்தான்.



அதற்குள் திடீரென அவன் முன் வந்து நின்ற அஷ்வினியை பார்த்தவனுக்கு அவள் உள்ளே சென்றுவிட்டால் என்ற செய்வது என்ற பயமே மனம் முழுவதும் வியாபிக்க



"மேடம்....நீங்க சார் ரூம்ல வெயிட் பண்ணுங்க...உள்ள முக்கியமான மீட்டிங் போயிட்டிருக்கு"எனவும்



"முடியாதுண்ணா.... எனக்கு அவர பாத்தே ஆகனும்.... நா ஏற்கனவே ஆபிஸ் போக லேட்.... என் சீனியர் கிட்ட திட்டு வேற வாங்க இருக்கு...ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க"



"மேடம் சாரு கால் வந்ததுக்கே என்ன கண்ணாலேயே சுட்டு பொசுக்கிட்டாரு... இப்போ போனேன்னு வைங்க... என்ன போட்டு தள்ளிட்டு தான் மறு வேல பாப்பாரு"எனவும் சிரித்தவள்



"அப்போ ஓகே நானே போய்க்குறேன்..." என நகரப் போக



"மேடம் ப்ளீஸ் மேடம்...போகாதிங்க..."



"அப்போ நீங்க போங்க"



"...."



"அப்போ நா போறேன்"



"இ...இல்ல இல்ல நா..நானே போறேன்"என்றவன் தன் விதியை நொந்தவாறே உள்ளே நுழைய அவன் சோக முகத்தை பார்த்து நெற்றி சுருக்கியவன் எதுவும் பேசாமல் தன் உரையை தொடர அவன் எப்போது பார்ப்பான் என அவனையே பார்த்துக் கொண்டிரேந்தான் கதிர்...



கதிரின் கவனம் இங்கில்லை என அறிந்தவன் சற்று பிற்போடப்பட்டிருந்த ப்ரேக்கை அப்போதே கொடுத்து விட்டு கதிரிடம் வர அதற்காகவே காத்திருந்தவன் போல



"சார் மேடம்..."என நிறுத்தவும்



"அ...அஷு...அஷுக்கு என்னாச்சு?" சட்டென பதறியவனை பார்த்து சிரிப்புத் தான் வந்தது அவனுக்கு...



"மேடத்துக்கு ஒன்னில்ல சார்...ஆனா இருக்குறவங்க பூரா போய் சேந்துருவாங்க போல"



"வாட்?"



"மேடம் வந்திருக்காங்க சார்... உங்கள பாத்தே ஆகனும்னு அடம் பிடிக்கிறாங்க..." என்றவனின் வார்த்தைகளில் கோபத்திற்கு மாறாக அவனுக்கு சிரிப்பே வந்து தொலைத்தது.



கதிர் சொன்னதற்கான அர்த்தம் இப்போது புரிய



"நீ இவங்கள பாரு நா வந்துட்றேன்..."

என்றவன் தன்னவளை காண துள்ளிய மனைதை வெகு சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவசரமாக வெளியேறினான்.



எல்லோரையும் ஒரு வழி செய்துவிட்டு இருந்தவளோ தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல கண்ணாடியினூடு வெளியே தெரிந்த மாநகரத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.



உதட்டில் புன்சிரிப்புடனே அவளை நெருங்கியவன்



"அஷு...கேபினுக்கு வா..." என்றுவிட்டு முன்னே நடக்க அவ்வளவு நேரம் இருந்த தைரியம் அவனை பார்த்தவுடன் வடிந்து போக படபடப்புடன் அவனை பின்தொடர்ந்தாள் பேதையவள்!!!



அவள் வந்ததும் வராததுமாக அவளை இலுத்து சுவற்றில் சாற்றியவன் அவளை இறு பக்கமும் கைகளால் சிறை செய்ய விதிர்விதிர்த்துப் போனாள் அவன் மனையாள்.....



அவள் முகத்துக்கு அருகே குனிய அவள் சட்டென கண்களை இறுக்க மூடிக் கொள்ளவும்



"பாத்தே ஆகனும்னு தானே இவ்வளவு நேரம் துடிச்ச அஷு.... இப்போ உன் கண்ணு முண்ணாடி நிக்கிறேன்...என்ன பாக்காம கண்ண மூடினா என்ன அர்த்தம்?"என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்....



அப்போதும் அவள் கண்களை திறக்காமல் இருக்க



"கண்ண திறடி"



"....."



"இப்போ நீ கண்ண திறக்கலன்னா என்ன பாக்க புடிக்கலன்னு நெனச்சிக்குவேன்"

எனவும் படக்கென திறந்து அவனை பார்த்தவள் அது முடியாமல் போக தலையை கவிழ்த்துக் கொண்டாள்.



"ஓய்...என்னடி... என்ன பாக்க சொன்னா தரையையே உத்து உத்து பாத்துட்ருக்க?"



"...."



"என்ன பாரு அஷு"



"...."



"பாக்கமாட்டியா?"



"...."



"ஏன்?"என்றவன் ஒற்றை விரலால் அவள் நாடியை பிடித்து நிமிர்த்த அவன் கண்களை ஒரு நொடி நேருக்கு நேர் பார்த்தவள் இதயம் படபடவென அடித்துக் கொள்ள சட்டென கீழே குனிந்து விட்டாள்.



அவள் செய்கையில் அவன் வாய்விட்டு சிரிக்கவும் அவள் கண்ணங்கள் வெட்கத்தில் சிவந்து போக அதை இரசனையாய் பார்த்தவன் அவள் எதிர்பாரா நேரத்தில் அவளை தன்னோக்கி இழுத்து அவள் இதழ்களுடன் தன்னிதழ்களை பொறுத்தினான்.

இதற்கு முன்னும் அவளுக்கு முத்தமிட்டிருக்கிறான் தான்...ஆனால் இது அவனுக்குமே வித்தியாசமாகத் தான் தெரிந்தது.



இதுவரை அவன் முத்தமிட்ட போதெல்லாம் அவள் திமிரியதில்லை ஆயினும் அவளே இசைந்து கொடுத்துக் கொண்டிருப்பது இதுவே முதல்முறை....



அவள் மனதிற்குள் தான் நுழைந்து விட்டோம் என்பதற்கான சேதி அல்லவா அது!!!



அதை அறிந்ததாலோ என்னவோ அவளுள் இன்னுமின்னும் மூழ்கித்தான் போனான் அவன்...



அவளுக்கோ விவரிக்க முடியாத புதுவித உணர்வு....



இவ்வளவு நாள் அவன் முத்தமிட்ட போதெல்லாம் தோன்றாத உணர்வுகள் அவன் மேல் காதல் என்று தெரிந்து கொண்டதன் பின்னால் கிளர்ந்து எழுந்தனவோ!!!



அவளுடைய கை தானாக அவன் சிகைக்குள் நுழைந்து அழுத்திப் பிடிக்க அவள் செய்கையில் நம்ப முடியாமல் உள்ளுக்குள் இனிமையாக அதிர்ந்தான் அவள் காதல் கணவன்....



அவன் அறைக்கதவு பூஜை வேலை கரடி போல் தட்டப்பட சட்டென நடப்புக்கு திரும்பியவன் அவள் மூச்சு விடுவதற்காய் அவகாசம் கொடுத்துவிட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் அவளை பார்க்க அவளோ சங்கடமாய் கீழே தரையை பார்த்திருந்தாள்.



அவளை பார்த்து மர்மச் சிரிப்பு சிரித்தவன் "கம் இன்"எனவும் உள்ளே நுழைந்த கதிர் தயக்கமாய்



"சார்...அது வந்து மீட்டிங்... இந்த கண்ட்ராக்ட்கு அவங்க ஓகே சொல்லிட்டாங்க...பட் உங்க கிட்ட பேசனுமாம்" எனவும் தன் மனையாளை திரும்பிப் பார்த்தவன் கதிரிடம் திரும்பி



"ஃபைவ் மினிட்ஸ்ல வந்துட்றேன்...நீ போ"என்க அவன் சென்று விட அவளிடம் வந்தவன்



"அஷு யார்கூட வந்த?"எனவும்



"ஆ...ஆரு"வார்த்தை வரமாட்டேன் என்று அடம் பிடிக்க திணறினாள் அவள்....



"ம்...ஓகே... எப்படி போவ?"



"அ...அது...அது...நீங்க... ச்சி..நான்... என்...ஸ்கூட்டி..."

'கடவுளே இதென்ன சோதன?'



"ஓ..ஓ..ஸ்கூட்டியா?"



"ம்..."



"அது எங்க இருக்கு?"

வேண்டுமென்றே வம்பிலுத்தான்.



"உங்க ஆபீஸ் மு...முன்னால"

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒருவாறு சொல்லி முடிக்க



"என் ஆபீஸ் முன்னாடியா?"

போலியாக ஆச்சரியப்பட்டவன் மீண்டும்



"அதெப்படி அஷு இங்க வந்துது?"என்றுவிட்டு அவள் பதிலை எதிர்ப்பார்க்க



'இவங்க ஏன்தான் இன்னக்குன்னு பாத்து இப்பிடி பண்றாங்களோ'என நினைத்தவளுக்கு ஆயாசமாய் வந்தது.



அவள் பதில் பேசாமல் அமைதியாக இருக்கவும் போதும் என்று நினைத்தானோ என்னவோ



"சரி...போ"என விலகி நிற்க கோபித்துக் கொண்டானோ என சட்டென விழியுயர்த்தி அவனைப் பார்க்கவும் அவள் மனதை படித்தவன் போல் அவளை தன் புறம் இழுத்து நெற்றியில் இதழ் பதித்தவன்



"எனக்கு எந்த கோபமும் இல்லடா...நீ போ"எனவும் அவன் கனிவில் அவளுக்கு ஏனோ கண்கள் கலங்கி விட்டன.



அவள் கண்கள் கலங்கியிருப்பதை கண்டவன்



"ப்ச்...அஷு...என்னடா.... என்னாச்சு உனக்கு...எதுக்கிப்போ கண் கலங்கற?"எனவும் அவனை திடீரென இறுக்க அணைத்தவள்



"எப்போவும் என்ன விட்டுட்டு போக மாட்டிங்கல்ல தேவ்?"அவளை அண்ணார்ந்து பார்த்தபடி கேட்கவும் அவள் தலையை வருடியவன்



"ஊஹூம்....நீயா என்ன கழுத்த புடிச்சு வெளிய தள்ளினாலும் உன்ன விட்டு எங்கேயும் போகவே மாட்டேன் கண்ணம்மா" அவனின் கண்ணம்மா எனும் அழைப்பில் அவன் மேல் இன்னுமின்னும் பித்தாக அவள் அணைப்பு மேலும் இறுகியது.



அவனை மெல்ல விடுவித்தவன்

"நீ போ அஷு....உனக்கும் டய்ம் ஆகுதில்ல?"எனவும் அவனிடம் ஆமோதிப்பாய் தலையாட்டியவள் வெளியேறி விட சி.சி.டி.வியில் அவள் போவதை உறுதி செய்து விட்டே மீட்டிங் ஹாலுக்கு சென்றான்.





வெற்றிவேல் யுனிவர்சிட்டி.....



இவ்வளவு நாள் உயிர் நண்பனாக இருந்தும் அவன் காதல் விடயத்தை தன்னிடம் மூச்சு கூட விடவில்லையே என்ற கோபத்தில் சித்தார்த்தை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தான் ஆரவ்.



தான் சொல்ல வருவதை கூட காது கொடுத்து கேளாமல் தனக்கு பேசக் கூட அவகாசமளிக்காது தன்மேல் கொலை காண்டிலிருக்கும் நண்பனை அமைதியாய் அப்பாவியாய் பார்ப்பதை தவிர அவனுக்கும் வேறு வழியே இல்லாததால் கண்ணத்தில் கை குற்றியபடி அமர்ந்திருந்தான் சித்தார்த்.



"இவ்வளவு நாள் உங்கூட பழகி இருக்கேன்...ஏன் என் வாழ்க்கைல உன்கிட்ட நா ஷேர் பண்ணிக்காத ரகசியங்களே இல்லன்னு கூட சொல்லலாம்...ஆனா நீ எப்பவுமே என்ன வேத்து ஆளாதான் பாத்திருக்க இல்ல....ரொம்ப சந்தோஷம்"



"...."



"ரித்து மூலமா கயலுக்கு தெரிஞ்சு கயல் மூலமாதான் உன் விஷயம் எனக்கு தெரிய வேண்டி இருக்கு.... ஆக மொத்தத்துல நான்தான் உனக்கு கண்ணுக்கு தெரியவே இல்ல.... அப்படித்தானே?"



"...."



"சரி அது கூட விடு....அது ரித்து மட்டும் தான் லவ் சொன்ன டய்ம்ல நீ தூக்கிப்போட்ட விஷயமா கூட இருக்கலாம்...பட் இப்போ...காலேஜ் முழுக்க நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றது தெரிஞ்சிருக்கு.... அவங்க மூலமாதான் எனக்கு தெரிய வேண்டி இருக்கு"



"...."



"இனிமே நீயா வந்து என்கிட்ட பேசினாலும் நான் உன்கூட பேசுறதா இல்ல....."திரும்பி அமர்ந்து கொண்டு முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்ளவும் இதற்கு மேல் அமைதியாக இருந்தால் விபரீதம் என எண்ணியவன் அப்பொழுதுதான் அவன் திருவாயை திறந்தான்.



"ஆரு...நா சொல்றத....கொஞ்"



"பேசாத"



"டேய் என் சிச்சுவேஷனயும் நீ புரிஞ்சிக்க ட்ரய் ப்.."



"பேசாதன்னு சொன்னேன் உனக்கு"



"அப்பிடியெல்லாம் பேசாம இருக்க முடியாது"



"...."



"ரித்திய நானும் ஒதுக்கலாம்னு தான்டா நினச்சேன்... பட் அவ விடாம டார்ச்சர் குடுத்துட்டே இருந்தாளா.... அதனால நானும்..."என சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒருவன் ஓடி வந்து பதட்டத்துடன்



"சித்து....ஆரவ்...நம்ம டிபார்ட்மெண்டுக்கும் அடுத்த டிபார்ட்மெண்டுக்கும் அங்க வாய்த்தாக்கம் போயி அடிதடி ஆயிடிச்சிடா...."எனவும் இருவரும் ஒரு சேர மேசை மேல் பாய்ந்து வாசலை நோக்கி ஓடினார்கள்.



தொடரும்......



17-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 27 ❤



காலேஜில் நடந்து கொண்டிருக்கும் கைகலப்பு பற்றி தகவல் அறிவிக்கப்பட இருந்த மீட்டிங்களையெல்லாம் கேன்ஸல் செய்து அங்கே விரைந்தான் ரிஷி.



இங்கே வினோத் சொன்னதை கேட்டு பெஞ்சுக்கு மேலால் பாய்ந்து ஓடியவர்கள் அடிதடி நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு விரைந்தனர்.



ஏற்கனவே இவர்கள் வருவதற்குள் சண்டை முத்திப் போயிருக்க தங்கள் நண்பர்களை காப்பாற்ற இவர்களும் அடிதடியில் இறங்கி விட்டனர்.



கையில் கிடைத்தவர்களை எல்லாம் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த சித்தார்த் பின்னால் கட்டையுடன் வந்து நின்றவனை கவனிக்க தவற சற்று தூரத்திலிருந்தே இதை கவனித்த ஆரவ் எல்லோரையும் தள்ளி விட்டு தன் நண்பனை காப்பாற்ற விரைந்து வந்தவன் அவனை பிடித்து தள்ள அவனுக்கு விழ வேண்டிய அடி அவன் சற்று தலையை சாய்க்க தோலுக்கு படவும் பட்ட அடியில் அவன் தள்ளாட அவசரமாக அவனை பிடித்த சித்தார்த் அடித்தவனுக்கு காலால் ஓங்கி ஒரு உதை விட்டான்.



ஆரவ்வை வலுக்கட்டாயமாக இலுத்துக் கொண்டு போய் அவர்களை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்களில் கயலை அலசியவன் அவள் ரித்திகாவின் அருகில் கண்கள் கலங்க நின்று கொண்டிருந்தவளிடம் அவனை ஒப்படைத்துவிட்டு திரும்ப அவன் கையை இறுக்கப் பிடித்து தடுத்தாள் ரித்திகா.



அவளை திரும்பிப் பார்த்தவன்



"ரித்தி....பீ சீரியஸ்.... இப்போ நீ என்ன தடுக்குறதால நா போகாம இருப்பேன்னு கனவு கானாத...." என்றவன் அவள் கையை உதறி விட்டு சென்று விட்டான்.



அவன் மறுபடி கைகலப்பு நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு வர புழுதியை கிளப்பிக் கொண்டு வந்து நின்றது ரிஷியின் ரால்ஸ் ரோய்ஸ்.....



தடாரென கதவை திறந்து கொண்டு இறங்கயவனை கண்டு ஏற்கனவே கார் வந்ததில் ஸ்தம்பித்து அப்படியே நின்றிருந்தவர்களுக்கு அவன் கண்களில் தெரிந்த சீற்றத்தில் உள்ளுக்குள் பயப்பந்து உருள ஆரம்பித்தது.



தன் காள்கள் இரண்டையும் அகற்றி பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டபடி தீர்கக்மாக ஒருமுறை அனைவரையும் பார்துத்துக்கொண்டு இருந்தவனுக்கு அருகில் கையை பிசைந்தபடி வந்த நின்றார் அந்த காலேஜ் பிரின்ஸிபால்....



அவரை தீப்பார்வை பார்த்தவன் பியூனை அழைத்து ஸ்டுடன்ஸ் செர்மனை அழைத்து வரச்சொன்னவன் அவனுக்காக காத்திருந்தான்.



அவன் கட்டளைக்கு இணங்க ஆரவ்வும் அவன் அஸிஸ்டன் சித்தார்த்தும் வந்து நிற்க நிதானமாக பாக்கெட்டிலிருந்து கையை எடுத்தவன் விட்டான் ஒரு அறை....



ஏற்கனவே வலியில் இருந்தவனுக்கு நிலை கொள்ள முடியாமல் போக அவன் தோல்களை பிடித்தான் சித்தார்த்.



அவனையும் அருகில் அழைத்தவன் அவனுக்கும் அறைய தப்பு தங்கள் மீது தான் என்பதில் பற்களை கடித்துக் கொண்டு கை முஷ்டியை இறுக்கியபடி நின்றான்.



அவன் பற்களை கடித்து கோபத்தை அடக்குவதை கண்டவனுக்கு இன்னும் கோபம் தலைக்கேற மறுபடியும் அடிக்க கை ஓங்கவும்



"அண்...சார்... என் மேல தான் தப்பு....எனக்கு அடிங்க" என்றபடி அவன் முன் வந்து நின்றான் ஆரவ்.



அவனை உறுத்து விழித்தவன்

"ஸ்டுடன்ஸ் சேர்மேன்னா.... பிரச்சனய தீத்து வெக்கனுமே தவிர... நீயும் போயி அவங்க கூட சேந்து சண்ட போட்டிருக்க கூடாது... அண்டர்ஸ்டான்ட்?" என கர்ச்சிக்கவும் அமைதியாய் தலையை குனிந்தவன்



"ஐ அம் சாரி சார்....இனிமே இப்பிடி நடக்காது" எனவும் அவனை முறைத்தவன்



"சித்தார்த்தையும் கூட்டிகிட்டு என் கேபினுக்கு வா...."என்றுவிட்டு சென்றுவிட மாணவர்கள் புறம் திரும்பியவன்



"எல்லாம் க்ளாஸுக்கு போங்க....நா உங்க கூட வந்து பேசிக்கிறேன்..." என்க அதில் முன்னால் நின்றவன் தாங்க முடியாமல்



"ஆரவ்....சாரி மச்சான்..."எனவும் இலேசாக சிரித்து தலையை ஆட்டியவனை பார்த்து எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட அனைவரும் கோரஸாக மன்னிப்பு கேட்கவும்



"விடுங்க மச்சீஸ்...."என்றவன் சித்தார்த்தையும் அழைத்துக் கொண்டு ரிஷியிடம் விரைந்தான்.



***



"ரிக்ஷி....எதுக்கு இவ்வளவு லேட்?"



"சார் அது....வந்து"



"ம்...வந்து?"



"ஹாங்...வர்ற வழியில என் ஸ்கூட்டி ரிப்பேர் ஆயிடுச்சு வருண் சார்"



"பட் ரிப்பேரான ஸ்கூட்டியில தான்.... வந்தீங்களா மிஸஸ்.அஷ்வினி ரிஷிகுமார்?"



"அ...அது....அது...ஆ... ஆமா... மெக்கானிக் வந்து சரி பண்ணி குடுத்தாரு"



"ஓஹ்...."



"...."



"அஷ்வினி...நீ என் தங்கச்சிங்குறதால எல்லா விஷயத்துலயும் என்னால பொறுமயா இருக்க முடியாது..."



"...."



"ஊர் சுத்த போறதுன்னா படிக்காம வீட்லயே இருந்திருக்கனும்... அத விட்டுட்டு இங்க வந்து இனிமே இப்பிடி பண்ணாத...."



"...."



"உனக்குன்னும் சில பொறுப்புகள் இருக்கு...உன்ன நம்பி வர்றவங்கள என்கிட்ட ஒப்படச்சிட்டு போன...கொஞ்சம் கூட சின்ஸியாரிட்டி வேணாமா?"



"...."



"நீ என்னதான் நினைச்சிட்டு இருக்க அஷ்வினி... எல்லாத்தயும் பண்ணிட்டு அமைதியா இருந்தா மட்டும் எல்லாம் சரியாயிடுமா?" அவளின் பொறுப்பில்லா தனத்தை சுட்டிக்காட்டி உண்மையில் அவளுக்கு கோபமாய் திட்டிக் கொண்டிருக்க அவள் எதிர்க்காமல் அமைதியாய் இருந்தது இன்னுமின்னும் கோபத்தை கூட்டியது அவனுக்கு.....



"எஸ்கியூஸ் மீ..."என்ற குரலில் திட்டிக் கொண்டிருந்ததை அப்படியே நிறுத்தியவன் யாரென்று நிமிர்ந்து பார்க்க அங்கே அபி நின்றிருந்தாள்.



அவளை பார்த்து உள்ளே வர அனுமதித்தவன் திரும்பி தன் தங்கையை பார்க்க அப்போதும் அவள் தலையை குனிந்து கொண்டு இருக்கவும் கொஞ்சம் ஓவராகத்தான் ஏசிவிட்டோமோ என நினைத்தவன் அவளையே பார்த்திருக்க ஏதுமே அறியாத அபி அஷ்வினியிடம் வந்து



"அஷ்வி..."எனவும் நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கலங்கி இருந்தவளை பார்த்த வருண் துடித்துப் போனான்.



"அஷ்வி....உன்ன பாக்க அர்விந்துன்னு ஒருத்தர் வெளில வெயிட் பண்றாரு...."எனவும்



"நீ போ அபி...நா இதோ வந்துட்றேன்..."

என்றவள் அவள் போகவே இருக்கையிலிருந்து எழுந்து



"ஐ அம் சாரி சார்....இனிமே இந்த தப்பு நடக்காது" என்றவளின் குரலில் உண்மை இருக்க அவளின் இவ்வளவு நாள் சார் அழைப்பும் உண்மையாகவே வந்து விழுந்ததில் துடித்துப் போனான் அவள் அண்ணன்.



"ரிக்ஷி...நா உன் நல்லதுக்காக தானேம்மா சொல்றேன்..."



"எனக்கு புரியுது சார்...அதான் இனிமே இப்பிடி நடக்காதுன்னு சொன்னேனே"



"பட்..."



"அர்வி வந்திருக்கான் சார்...பாக்குறதுக்கு பர்மிஷன் குடுங்க"



"ஏய்....என்னடி?"



"வேல விஷயமா மட்டும் தான் பேசுவேன்"



"ப்ச்...ரிக்ஷி?"



"போகட்டுமா?"



"போ"



"தேங்க்ஸ் சார்..."என்றுவிட்டு வெளியேறி விட வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டான் அந்த பாசக்கார அண்ணன்.



***



அமெரிக்கா....



மெக்சிகோ நகரம்....



அதே நேரம் இரவு....



தன் ஹோட்டல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறே தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தான் ராகேஷ்....



ராகேஷ் கண்ணா!!!



ரிஷியை அழிப்பதற்காக அவனை நாடியது தப்போ என பல்லாயிரம் முறையாக யோசித்து நொந்து போனான் ராகேஷ்....



மீதம் இருப்பது அவனும் ரகுவும் மட்டுமே....



இந்த ரகுவும் சொதப்பி அவனிடம் அகப்பட்டுவிட்டால் மொத்தமாக மாட்டப்போவது உறுதி...



ஹரிஷ என்ன பண்ணி வெச்சிருக்கான்....

எங்கன்னு ஒன்னுமே புரியல...ச்சேஹ்....



இவன முன்ன மாதிரி பாசத்தால ஏமாத்த முடியாது...



என்ன பன்னலாம்????



பல எண்ண ஊர்வலங்களுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான் அவன்....



மொபைல் ட்ரேஸ் பண்ணப்படுகிறது என அறிந்ததிலிருந்து அந்த வழியையும் கைவிட்டாலும் ரிஷியை சுற்றி ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு வலயம் இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு...



((அட உண்மதான்யா))



நடந்து கலைத்தவன் தொப்பென கட்டிலில் அமர்ந்து அடுத்த தாக்குதலுக்காக என்ன செய்யலாம் என திட்டமிடத் தொடங்கினான்.



***



அர்விந்த் ஜாயின் பார்மாலிடீஸ் எல்லாம் முடித்து வரும் வரை அவனுடனேயே இருந்தாள் ஆனால் அமைதியாக....



அவனும் டென்ஷனில் முதலில் கவனிக்க தவற நேரம் செல்லச் செல்ல தான் அவனுக்கும் அது புலப்பட ஆரம்பித்தது.



அவளிடம் கேட்டு அவள் பதில் சொல்ல மறுக்க கெஞ்சிக் கூத்தாடி எப்படியோ விஷயத்தை வாங்கி விட்டவன் நேரே வருணிடம் சென்று காய்ச்சி எடுத்து விட்டுத் தான் ஓய்ந்தான்.



அவளை வம்பிலுத்து சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்குள் அவனுக்குத் தான் போதும் போதுமென்று ஆகிவிட்டது....



அதன் பிறகு சொல்லவும் வேண்டுமா...ஒரே அரட்டை தான்...



நேரம் செல்ல பசி வயிற்றை கிள்ளவும் வழமையாக வருணுடன் செல்பவள் இன்று அர்விந்துடன் சென்று விட்டாள்.



அவளுக்கு பழி வாங்க வேண்டும் என்றெல்லாம் இல்லை...அர்வியுடன் இருந்ததில் மறந்துவிட்டாள் என்பதுவே உண்மை....



சாப்பிட்டு விட்டு வரவும் தான் அவளுக்கு வருண் நினைவே வந்துத் தொலைக்க அவசரமாக அவனிடம் சென்றாள்.



"மே ஐ கம் இன் சார்"என்றவளின் குரலில் சட்டென நிமிர்ந்து



"வெல்கம் வெல்கம்"என்றான் சிரிப்புடன்....



அவனை முறைத்தவள்

"சார்...லஞ்ச் டைம் ஆகிடுச்சு...நீங்க சாப்புடல?"



"அண்ணா மேல அவ்வளவு அக்கறை இருக்குறவ கொஞ்சம் ஊட்டி விட்றது?"



"ஐ அம் சாரி சார்...அத நீங்க உங்க தங்கச்சிங்க கிட்ட தான் கேட்டுக்கனும்"



"எனக்கு தங்கச்சிங்க இல்லயே....நீ வேனும்னா எனக்கு தங்கச்சியா இருக்குறியா?"



"முடியாது சார்...எனக்கு ஏற்கனவே இரண்டு அண்ணங்க இருக்காங்க..."



"ஓ..ஓ...அவங்க பேரு தெரிஞ்சிக்கலாமா?"



"ஓ...ஷூர்...ஷூர்...சார்... ஒன்னு அஜய்...இன்னொன்னு கதிர்"



"அடிப்பாவி...அப்போ நானு?"



"நீங்க யாருங்க சார் எனக்கு?" எழுந்து அவளருகில் வந்தவன் அவள் தலையை பாசமாக தடவி



"ஐ அம் சாரி ரிக்ஷிமா..."எனவும் அவனை போலியாய் முறைத்தவள் சலுகையாய் அவன் தோலில் சாய்ந்து கொண்டாள்.







இரவு.....



அவளுக்காக சற்று நேரத்துடன் வீடு வந்து சேர்ந்த ரிஷி அவர்கள் மூவரும் ஹாலில் அரட்டையடித்துக் கொண்டிருந்ததை பார்த்து விட்டு மேலேறிச் சென்றான்....



சற்று நேரத்திற்கெல்லாம் ப்ரஷப்பாகிவிட்டு கீழிறங்கி வந்தவன் ரவிச்சந்திரனின் மகள் திருமணம் பற்றி சொல்லவும் கயல் முந்திக்கொண்டு



"அப்போ அவங்க கூப்டும் நீங்க ஏன் அத்தான் போகல?"



"அதுக்கிடையில என்னென்னவோ நடந்துடுச்சு கயல்.... அதான் நாளைக்கு ரிசப்ஷன் வெச்சிருக்காங்க பொயிட்டு வந்துடலாம்..."



"காலேஜ் இருக்கே அத்தான்.... நீங்களும் அஷ்வியும் குடும்ப சார்பா பொயிட்டு வாங்க... ஆருவுக்கும் கைல அடிபட்ருக்கு.... காலேஜும் கட் பண்ண முடியாது" என்றவளின் கூற்றில் கொஞ்ச நேரம் யோசித்தவன் "சரி" என்று தலையாட்ட மேலும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு எழுந்து செல்லவும் ஆரவ்வை நிறுத்தினான் ரிஷி.



அவன் திரும்பி நின்று கொண்டிருக்க அவனை தன் புறம் திருப்பி அவன் காயத்தை ஆராய்ந்தவன்



"ரொம்ப வலிக்குதாடா"எனவும்



"இல்லணா.... இட்ஸ் ஓகே"என்றான் பார்வையை சுவற்றில் பதித்து....



"யாரு அடிச்சது?"



'ஏன் அவனையும் ஹாஸ்பிடல்ல படுக்க வெக்கவா?'



"கேக்குறேன்ல....சொல்லுடா?"



"தெரியலணா.....முகத்த சரியா பாக்கல"



"சரி விடு.... இன்னும் என் மேல கோவமாதான் இருக்கியா?"



"....."



"இன்னைக்கு அறஞ்சது வலிக்குதாடா" என்று விட்டு அவன் கண்ணத்தை திருப்ப அவன் கையை தட்டி விட்டான் ஆரவ்.



அதில் சிரித்தவன்

"ஓகே ஓகே...பிடிக்கல...பட் எதுக்காக அப்பிடி நடந்துகிட்ட?"



"பாதிக்கப்பட்டது எங்க டிபார்ட்மெண்ட் ஆளு"



"நீ ஸ்டுடண்ட்ஸ் சேர்மேனுங்கறத மறந்துடாத"



"சாரிணா....பட் அவங்க செஞ்சதும் தப்புதானே?"



"தப்புதான்டா...ஆனா நீ அத வேற முறைல ஹேண்டில் பண்ணி இருக்கனும்"



"நாங்க போறதுக்குல அடிதடி ஆகிருச்சுணா... என்ன என்னதான் பண்ண சொல்ற?"



"ஓகே ஜஸ்ட் லீவ் இட்.... நாளைக்கு ரிசப்ஷன் பொயிட்டு வந்து நம்ம ரிசப்ஷன் பத்தி பேசனும்...."



"சரி"



"எதுக்கும் நீயும் வேலைய ஆரம்பிச்சுடு"என்றவன் அவன் தோலில் தட்டிக் கொடுத்து விட்டு செல்ல அவனையே புன்சிரிப்புடன் பார்த்திருந்தான் ஆரவ்.



......



சோஃபாவில் அமர்ந்து கையில் ஏதோ புத்தகம் ஒன்றுடன் அமர்ந்திருந்தவளை பார்த்தவாறே உள்ளே நுழைந்தவன் அவளை இடித்துக் கொண்டே அருகில் அமர்ந்தான்.



புத்தகத்தை மூடி வைத்தவள் வருணை பற்றி புகார் வாசிக்கத் தொடங்கினாள்.



"தேவ்..."



"என்னடி?"



"இன்னைக்கு வருண் என்ன ரொம்ப திட்டிட்டான்"



"எதுக்கு என் பொண்டாட்டிய திட்டுனான்?"



"அ..அது அது ப்ரண்ட்ஸ பாக்க கெளம்பினதுக்கும் இன்னக்கு ஆபீஸுக்கு லேட்டா வந்ததுக்கும்"



"என் பொண்டாட்டியவே ஏசுறானா... அவனுக்கு இருக்கு"என்றவன் அவளை இலுத்து தன் மடியில் போட்டுக்க கொள்ள அவ்வளவு தான்.... இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் ஜகா வாங்கிக் கொண்டது.



அவள் கழுத்து வளைவில் அவன் முகம் புதைக்க அவள் தேகம் சிலிர்த்து அடங்கியது.



தன் காதலை யெல்லாம் திரட்டி அவள் கண்ணத்தில் அழுத்த முத்தமிட அவள் கண்ணங்கள் செந்தனலாய் சிவந்து போனது.



அவளை தன்புறம் திருப்பி அவள் இதழ்களை முற்றுகையிட்டவன் கொஞ்சம் கொஞ்சமாய் அவளுள் கரைந்து போனான்.



((நாளை என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தால் மனிதன் கடவுளையே அல்லவா ஜெயித்து விடுவான்))



தொடரும்......



18-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 28 ❤



தன் நெஞ்சில் தலை சாய்த்து குழந்தை போல் துயில் கொள்ளும் மனைவியின் தரிசனத்தில் கண் விழித்த ரிஷி அவளையே இமைக்க மறந்து பார்த்திருந்தான்.



எத்தனை எத்தனை மாற்றங்கள்....

எல்லாம் இவளால் வந்தது அல்லவா???



இவனும் காதலித்திருக்கிறான் தான்...ஆனால் காதலிக்கபப்டுவது இதுவே முதன் முறை!!!



தன் வாழ்வில் இப்படி ஒருத்தி வந்து வாழ்க்கையையே வண்ணமயமாக்குவாள் என்று முன்பு யாராவது கூறியிருந்தால் சத்தியமாக பைத்தியம் என்று தான் எண்ணியிருப்பான்....



ஆனால் இன்று????



அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து எழுந்தவன் அவள் செய்கையில் மீண்டும் புன்னகைத்தான்.



அவன் டி-ஷர்ட் காலரை இறுக்கப் பற்றியிருந்த கையையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன் தலையை இருபக்கமும் ஆட்டி சிரித்து விட்டு மெதுவாக அவள் கைகளை விடுவித்தவாறே எழுந்து குளியலறை சென்றான்.



அவன் குளித்து முடித்து வெளியே வந்த போதும் அவள் இன்னும் உறக்கத்திலேயே இருக்க அவள் தூக்கத்தை கலைக்க மனம் இல்லாமல் உடற்பயிற்சி அறைக்குச் சென்று விட அப்போது தான் அவன் மனையாள் கண்களை திறந்தாள்.



அருகில் அவனில்லாது போகவும் அவனை காணாது எழுந்த ஏமாற்றத்தை மறைத்தவள் தானும் ரெடி ஆகிவிட்டு கீழே சென்று காப்பியை தயாரித்து எடுத்துக் கொண்டு படியேற ஆரவ் கீழிறங்கி வந்து கொண்டிருந்தான்.



ஏதோ யோசனையில் வந்து கொண்டிருந்தவனை கலைத்தது இவள் காட்டுக் கத்தல்.



அதில் திடுக்கிட்டு நிமிர்ந்தவன் அவளை முறைத்து



"எதுக்குடி கத்துற ராட்சஸி?"எனவும் தானும் முறைத்தவள்



"டேய்....ராட்சஸின்னு சொன்ன கொன்னுருவேன் பாத்துக்கோ"



"அப்படித்தான்டி கூப்புடுவேன்.... என்ன வேனா பண்ணிக்கோ"



"டேய் வேணாம்.... மறுபடி நானும் உன்ன தாத்தான்னு கூப்புடுவேன்"



"கூப்டுகோ.... எனக்கென்ன பயமா?" கெத்தாய் கேட்டு விட்டாலும் உள்ளுக்குள் உதறல் எடுக்கத் தான் செய்தது.



"தே....வ்....." என வீடே அதிரும்படி கத்தவும் பதறி அடித்துக் கொண்டு அவன் வெளியே வர அவள் காட்டுக் கத்தலில் கயலும் ரூமிலிருந்து வெளியே வந்தாள்.



வேலையாட்கள் உட்பட அனைவருமே பதைபதைப்புடன் நின்றிருக்க



"என்ன அஷு என்னாச்சு?" எனவும்



"இந்த ஆருவ பாருங்க தேவ்.... சும்மா ராட்சஸின்னு கூப்டுகிடே இருக்கான்" என்றவளின் பதிலில் தான் இலுத்துப் பிடித்திருந்த மூச்சையே விட்டான் அவன்.



"டேய் எதுக்குடா என் பொண்டாட்டிய ராட்சஸின்னு கூப்புட்ற?" எனவும் கயல் முந்திக் கொண்டு



"உங்க பொண்டாட்டியோட ஒர்ஜினல் நேம் அத்தான் அது..." எனவும் வாய் பொத்தி ஆரவ் சிரிக்க



"ஆரு தாத்தா....கையில காபி கப் இருக்கேன்னு பாக்குறேன்... இல்லன்னா.... உங்க வயச பாக்காம மேல ஊத்திருவேன்"



"அப்பிடி கூப்புடாதடி"என்றவன் தன் அண்ணனிடம் திரும்பி



"அண்ணா....உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி வை...அப்படி கூப்புடாதன்னு... இல்ல.."



"இல்லன்னா என்னடா பண்ணுவ?"அவள் எகிற



"கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருக்க மாட்டியாடி.... பெரியவங்க பேசிட்ருக்கோம்ல?"



"ஆமாமா பெரியவங்க தான்....ஆனா என் தேவ் இல்ல... நீ தான்" எனவும் ரிஷியும் கயலும் சிரிக்க அவள் காதை பிடித்து திருகினான்.



"ஆ....ஆ... வலிக்குது விடுடா தடியா....காபியை மூஞ்சில ஊத்துவேன் பாத்துக்க"



"இனி என்ன அப்பிடி கூப்புடுவியாடி?"



"ஆமா.....ஆ...ஆ... வலிக்குதுடா"



"பதில் சொல்லு விட்டுட்றேன்"



"அப்போ நீயும் என்ன அப்பிடி கூப்பிட மாட்டேன்னு சொல்லு"



"முடியாதுடி ராட்சஸி"எனவும் ரிஷியை முறைத்தவள்



"டேய் கமாண்டர்.... பொண்டாட்டிய ஒருத்தன் கஷ்டப்படுத்துறான் வந்து தடுக்கலாமில்ல?" என கத்தவும் கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் வாய் பிளந்தனர் வேலையாட்கள் உட்பட....



அவனோ சிரித்துக் கொண்டே



"டேய் விடுடா அவள" எனவும் அதிர்ச்சி மாறாமலேயே சிரித்துக் கொண்டு இருக்கும் அண்ணனை திரும்பிப் பார்த்தனர் ஆரவ்வும் கயலும்.....



கயல் மயங்கி விழாத குறையாக அவனை வாய் பிளந்து பார்க்க அஷ்வி



"அன்னக்கி கூட எனக்கு கை ஓங்கிட்டான் தெரியுமா தேவ்?"என அன்று ரிஷி காய்ச்சலில் ஆபிஸில் தங்கியிருந்த போது நடந்ததை மாட்டி விட



"ஆஹா...... போட்டு குடுத்துட்டாளே.... பாவி" என்று மனதில் நினைத்த ஆரவ் பயத்துடன் அண்ணனை பார்க்க அவன் பயந்தது போலவே சிரித்துக் கொண்டிருந்த அவன் முகம் சட்டென கோபத்தை தத்தெடுத்துக் கொண்டது.



"எதுக்காக?"என்ற அடக்கப்பட்ட கோபத்தில் கேட்டவனை பார்த்து இப்போது பயப்படுவது அவள் முறையாயிற்று....



பின்னே உன்னை பார்க்க வராததால் கை ஓங்கினான் என்று சொன்னால் அவன் சொல்லித்தான் என்னை பார்க்க வந்தாயா என அவள் மீதல்லவா கோபப்படுவான்.



ஆரவ்வை திரும்பிப் பார்க்க அவனோ வாய் பொத்தி சிரித்து விட்டு



"மாட்னியா ராட்சஸி.....நல்லா அனுபவி" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவன் வராத போனை காதில் வைத்துக் கொண்டு சென்று விட கயல் இருவரையும் மாறி மாறி பார்த்தவள்



"டாம் அண்ட் ஜெர்ரி ரெண்டும் போர் கொடி தூக்க போறாங்க போல.... நமக்கெதுக்கு வம்பு..."என நினைத்தவள் உள்ளே செல்ல திருதிருவென முழித்த அஷ்வினி சமாளிப்பாய்



"ஹி....ஹி...தேவ் ரிசப்ஷனுக்கு லேட் ஆகுதில்ல.....வாங்க பொலாம்....."

என்றவாறே அவனிடம் வர அவன் பார்வை கூர்மையடையவும் அவனை தவிர்த்து அறைக்குள் நுழைய தானும் நுழைந்தான்.



ஒரு கப்பை அவன் கையில் வழுக்கட்டாயமாய் தினித்தவள் தன்னுடையதை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்று விட்டாள்.



காபியை ஒரே மூச்சில் குடித்து முடித்தவன் அவள் திரும்பும் வரை பால்கனி கதவில் சாய்ந்து கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.



மனதிற்குள் ஆரவ்வை வருத்தெடுத்தவள் குடித்து விட்டு திரும்ப அவன் கண்கள் தன்னையே துளைத்திருப்பது கண்டு பட்டென தலையை குனிக்க அவளை நெருங்கி வந்தவன் பால்கனி கம்பியை இரு பக்கமும் பிடித்து சிறை செய்து



"அஷ்வினி...."என்றான் அழுத்தமாக.... அதில் கண்களை இறுக்க மூடியவள் அவனை மறந்தும் நிமிர்ந்து மட்டும் பார்க்கவே இல்லை....



"எதுக்காகன்னு கேட்டேன்"



"...."



"என்னப் பாரு...."



"...."



"என்னப்பாருன்னு சொல்றேனில்லடி"

என்றவன் அவன் தாடையை இறுக்கப் பற்றி நிமிர்த்த அவனையே பார்த்தவள்



"அ..அது...அது...உங்களுக்கு... காய்ச்சல் வந்தது...."



"ம்...வந்தது"என உறும வலியில் முகம் கசங்கியவள்



"வலிக்குது தேவ்"எனவும் சட்டென அவளை விட்டவன்



"சொல்லு"என்க



"காய்ச்சல் வந்தது எனக்கு தெ...தெரியாது.... நா...நா....அம்மா வீட்ல இருந்தேன்.... ஆருதான் நீங்க வீட்டுக்கு வர்லன்னு....."என்று விட்டு அவன் முகம் பார்க்க



"அப்போ அவன் சொல்லலன்னா நீ வந்திருக்க மாட்ட அப்படித்தானே?"



"இல்ல தேவ் நா.... வருண் அண்ணா" என்றவளை பேசாதே என்பது போல் கை நீட்டி தடுத்தவன் விருட்டென வெளியேறி விட அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.



***



அந்த துப்பட்டா பெண்ணை அதன் பிறகு அவன் பார்க்கவே இல்லை....



அவள் முகத்தை பார்க்க எழுந்த ஆவலை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டு இருந்தவனுக்கு மெதுமெதுவாக அவள் மேல் ஒரு ஈர்ப்பு வர ஆரம்பித்திருந்தது.



தன்னிலையிலேயே உழன்று கொண்டிருந்தவன் சற்று முன்னால் ஒரு பெண் கை காட்டி லிஃப்ட் கேட்டுக் கொண்டிருப்பது புரிய சட்டென காரை ஓரமாக நிறுத்தியவன் இறங்கி அவளை நோக்கி நடந்தான்.



அவளும் அவனை கண்டு கொண்டாள் போலும்.... மறுபக்கம் திரும்பி தன் துப்படட்டாவால் முகத்தை மூடி விட்டு மறுபடி அவன் பக்கம் திரும்பவும் அதற்குள் அவளை நெருங்கி இருந்தவன் அவள் கண்களை பார்த்து இன்பமாக அதிர்ந்தான்.



அவள் அவனுடைய துப்பட்டா கயல்விழிப் பெண்ணல்லவா!!!



அவளை பார்த்து சிரித்தவன்



"ஹாய்...நீங்க... அன்னக்கி என்கிட்ட தேங்க்ஸ் சொன்னவங்கதானே?" என்றான் எதிர்ப்பார்ப்புடன்.....



தன்னை அடையாளம் கண்டு கொண்டதில் அவள் புருவங்கள் மேலுயர



"என்ன இன்னுமா சார் ஞாபகம் வெச்சிருக்கீங்க?"

எனவும்



"ஆமா...அத விடுங்க.... எனக்கு சார் போடுறது விட்டுட்டு விஷ்வான்னு கூந்புடுங்க"



((என்னடா வருண் உனக்கு வந்த சோதன...சார்னு கூப்புடாதிங்கன்னு சொல்லி சொல்லியே உன் காலம் போயிரும் போல))



"வயசில பெரியவங்களுக்கு மரியாத தரனும் சார்"



"நா என்ன அவ்வளவு வயசாவா தெரியிறேன்?"

என்றவனை பார்த்து கலகலவேன சிரித்தவள் மீது ரசனையாய் படிந்தது அவன் பார்வை......



"ஓகே விஷ்வா....இனிமே கூப்புட்றேன்"



"எதுக்காக நின்னுகிட்டு இருக்கீங்க?"



"என் வண்டி பஞ்சர் ஆகிருச்சுங்க.... அதான் லிஃப்ட் கேட்டுக்கிட்டு இருக்கேன்...."



"இஃப் யூ டோண்ட் மைண்ட்....நா உங்கள ட்ராப் பண்ணவா?"



"உங்களுக்கு எதுக்கு விஷ்வா சிரமம்....நீங்க போங்க"



"அட வாங்கங்க"என்றவன் தன்னிலை மறந்து அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடக்க அவளோ உச்சகட்ட அதிர்ச்சியில் அவன் இழுப்புக்கு போய்க் கொண்டிருந்தாள்.



காரருகே வந்தவன் அப்போதுதான் தான் கையை பிடித்திருப்பது உணர்ந்து பட்டென விட்டவன்



"சாரி...சாரி...சாரி...நா...ஏதோ அவசரத்துல...சாரிங்க" எனவும் தன்னிலை அடைந்தவள்



"இட்ஸ்...இட்ஸ் ஓகே விஷ்வா" எனவும்



"ஐ அம் ரியலி சாரிங்க..."



"அய்யோ விடுங்க விஷ்வா..."என்றாள் அவனை இயல்பாக்கும் பொருட்டு....



அவள் கோபப்பட வில்லை என்பதில் நிம்மதியானவன் அவளுக்காக கார் கதவை திறந்து கொடுக்க முதன் முறை அவள் மனதும் அவன் செயலில் சலனப்பட்டதுவோ????



......



"ஏங்க நா பாக்குற டைம்ல எல்லாம் நீங்க துப்படட்டாவால முகத்த மறச்சிட்டுத்தான் இருக்கீங்க....ஏன் ஏதாவது நேர்த்திக் கடனா?" என்றவனை பார்த்து போலியாய் முறைத்தவள்



"ம்...ஆமா..."



"நெஜமாவா?"



"அட வெயிலுக்காக மறச்சது ஒரு குத்தமா?"



"அய்யோ அப்பிடி இல்லங்க....சும்மாதான்... பட் இப்போ திறக்கலாமே?"என்றான் ஆவல் மிண்ண....



"அ..அ..அது...ஹாங்..என் புருஷனுக்கு மட்டும் தான் காட்டனும்னு இருக்கேன்...."



"ஓ..."என்றவனது சுருதி இறங்கி ஒலிக்க அவனை திரும்பிப் பார்த்தவள் உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.



"சரி விடுங்க....அட்லீஸ்ட் உங்க பேரு சரி சொல்லுவீங்களா.....இல்ல அதுவும் உங்க புருஷனுக்கு மட்டும் தானா?" எனவும் அவனை திரும்பிப் பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.



தன் பார்வையை சாலைபுறம் திருப்பியவள்



"யா..."என ஆரம்பிக்கவும் அவன் போன் சினுங்கவும் சரியாக இருந்தது.



எடுத்து காதில் வைத்தவன்



"சொல்லு ரிக்ஷி...."



"என்னது வர்லியா?"



"ஏன் வர்ல?"



"மரியாதயா வா..."



"அவன முதல்ல திருத்தனும்"



"ஓகே பாய்மா"என்றுவிட்டு வைக்க அவன் பேசுவதையே பார்த்திருந்தவள் அவன் பேசி முடிக்கவும் சட்டென திரும்பி விட்டாள்.



அதற்குள் அவள் சொன்ன இடமும் வந்து விட



"ஓ... நீ காலேஜ் தான் படிக்கிறியா?"என்க



"ம்...ஆமா விஷ்வா...பய்" என்வாறே இறங்கிக் கொள்ளவும்



"பய்...."என்றவன் விடைபெற்று சென்று விட அவன் காரின் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.....



அவனின் துப்பட்டா விழியழகி!!!



***



வெற்றிவேல் யுனிவர்சிட்டி.....



முகத்தை தூக்கி வைத்தபடி அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தாள் ரித்திகா....



அவள் சொல்வதை கேட்காமல் கையை உதறி விட்டு சென்ற கோபம் அவன் மீது அவளுக்கு....



அதை புரிந்தும் ஏதும் நடக்காதது போலவே பேசிக் கொண்டிருந்தவனை பார்க்க பார்க்க கோபம் வரவும் திரும்பி அமர்ந்து விட்டாள்.



அதில் சிரித்தவன் எழுந்து அவள் புறமாய் வந்து அமர முகத்தை திருப்பினாள்.



அவளை தன்னை நோக்கி திருப்பியவன்



"ரித்திமா... உன் கோபம் புரியுது....பட் நா அந்த நேரத்துல அங்க போறத என்னால என்ன பண்ணி இருக்க முடியும்?"



"எல்லோர் முன்னாடியும் மாறன் அண்ணா அடிக்கும் போது எனக்கு எப்பிடி இருந்துது தெரியுமா சித்?"



"அய்யோ விடுடி...அண்ணாதானே"



"அதுக்காக?"



"எங்க மேல தான் தப்புன்னு எனக்கும் தெரியும் ஆருவுக்கும் தெரியும்.... அதனால தான் அந்த தண்டனய ஏத்துகிட்டோம்"



"அவங்க தனியா கூப்டு கண்டிச்சிருக்கலாமே சித்?"



"நோ ரித்திமா.... ஸ்டுடண்ட்ஸ் சேர்மேனுங்குற முறைல நாங்க பண்ணது முழுக்க முழுக்க தப்புதான்....அவங்களோட பிரச்சினைய என்னன்னு கேட்டு தீர்த்து வெக்காம நாமலும் போயி சண்ட போட்டது தான் அண்ணாக்கு கோவமே...."

என்றவனையே பார்த்திருந்தவள்



"ஐ லவ் யூ சித்..."என்றுவிட்டு அவன் தோலில் சாய



"என்னடி திடீர்னு?"என்க



"இல்ல.... இவ்வளவு நடந்தும் உங்களுக்கு அவங்க மேல கோபமே வர்லியா....அதான் உங்கள் நினச்சு எனக்கு பொருமயா இருக்கு" எனவும் அவள் நெற்றியில் இதழ் பதித்தவன்



"சரி நீ க்ளாசுக்கு போ.... எனக்கு சின்ன வேலயொன்னு இருக்கு...அத முடிச்சிட்டு உன்ன வந்து பாக்குறேன்... ஓகே?"எனவும் சரியென தலையாட்டியவள் சென்று விட மதனின் காலை அடண்ட் பண்ணி காதில் வைத்தான் சித்தார்த்....



***



ரிசப்ஷன் ஹாலை வந்தடையும் வரை அவனுக்கு மௌனமே மொழியாகிப் போக அவனிடம் கெஞ்சிக் கெஞ்சி ஓய்ந்து போனாள் அஷ்வினி ரிக்ஷிதா.....



முகத்தை கடுமையாக வைத்திருப்பவனுக்கு மனதிற்குள் அர்ச்சிக்க மட்டுமே முடிந்தது அவளால்...



அவனை எப்படி சமாதானப்படுத்துவது

என்று சத்தியமாக அவளுக்கு புரியவே இல்லை...



தன்னால் ஆன மட்டும் கெஞ்சிப் பார்த்து விட்டாள்....பலன் என்னமோ பூச்சியம் தான்....



இப்போ கொஞ்ச நாட்களாகத் தான் சண்டை எதுவுமில்லாமல் போய்க் கொண்டிருந்தது.



அதற்குள்ளாகவா இப்படி நடக்க வேண்டும்???



நினைக்க நினைக்க பெருமூச்சு தான் வந்தது அவளுக்கு....



கார் திடீரென நிற்கவும் அவனை நிமிர்ந்து பார்க்க



"இறங்கு..."என்றான் நேரே பார்த்தபடி....



அவன் பார்ப்பான் பார்ப்பான் என எதிர்ப்பாரத்தவள் அது பொய்யாகிப் போன ஏமாற்றத்துடன் வெளியே இறங்கி நின்று கொள்ளவும் அவனும் பார்க்கிங் ஏரியாவிற்கு சென்று நிறுத்தி விட்டு வர அவனுடன் இணைந்து உள்ளே நுழைந்தவள் அவனுக்கு கிடைத்த வரவேற்பில் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.



வந்தவர்களுடன் பேசியவாறே அவனும் நடந்து செல்ல தனித்து விடப்பட்டாள் மங்கையவள்....



அவனும் அவளை கவனித்ததாகவே தெரியவில்லை...

கோபத்தாலோ அல்லது மறந்துவிட்டானோ என்னவென்றாலும் அவளுக்கு ஏதோ போல் ஆகி விட ஓரமாக போடப்பட்டிருந்த டேபிளில் போய் அமர்ந்து கொண்டாள்....



ரவிச்சந்திரன் அவனிடம் நலம் விசாரித்து விட்டு மனைவி எங்கே என கேட்கவும் தான் அவனுக்கு அவள் நினைவே வந்தது.



சட்டென சுதாரித்தவன் சுற்றும் முற்றும் அவனவளை தேட அவள் ஒதுக்குப் புறமாக அமர்ந்திருப்பதை காணவும் தான் அவனுக்கு ஆசுவாசமானது.



அவரிடம் சொல்லிவிட்டு அவளை நோக்கி நடக்க திடீரென அவன் முன் வந்து நின்றாள் பூஜா...



ரவிச்சந்திரனின் உறவுக்காரப் பெண்....



ஒருவகையில் பார்த்தால் அவனுக்கும் உறவுதான்.... அவன் கண்டு கொண்டால் தானே அவனை நெருங்க....



இன்று சபை நாகரிகம் கருதி தன்னை ஒன்றும் செய்ய மாட்டான் என கணக்கிட்டவள் அவன் முன் வந்து நின்றாள்.



"ஹாய் தேவா....எப்பிடி இருக்க?" எனவும் அவளை மேலும் கீழும் பார்த்தவன் உதட்டை ஏளனமாக வளைக்கவும் அவளுக்கு அவன் உதாசீனத்தில் உள்ளுக்குள் பற்றி எரிந்தது.



அவள் அழகின் முன் எத்தனையோ பேர் மண்டியிட இவன் மட்டும் அவளை மனுஷனாக கூட மதிக்காதது அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை....



அங்கு ஒருத்தி இருப்பதே தெரியாதது போல் நகரப்போனவனை கை நீட்டி தடுத்தவள்



"தேவா...நல்லா இருக்கியா?" என்றாள் மறுபடியும்....



அவளை எரிச்சலாக பார்த்தவன்



"நல்லா இருக்கேன்னு பாத்தாலே தெரியுதில்ல ... அப்பறமும் எதுக்கு கேக்குற?"



"ஓகே ஓகே கூல்யா....உன் அரும தம்பி வர்ல?"



"அது உனக்கெதுக்கு?"



"தெரிஞ்சிக்கத்தான்"

என தோலை குலுக்கவும் பல்லை கடித்தவன்



"உனக்கு வேல இல்லன்னா எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?"என்க அவளோ கண்கள் மிண்ண



"யா ஷூர் தேவா...." எனவும்



"அப்போ கொஞ்சம் வழி விடு"என்றவன் அவளைத் தாண்டி தன் மனையாளிடம் சென்றான்.



அவனை கோபத்தோடு திரும்பிப் பார்த்தவளின் கண்கள் அஷ்வினகயை கண்டு இடுங்கியது.



அவளருகில் வந்தவன்

"எதுக்காக இங்க உக்காந்திருக்க?"

எனவும்



"பின்ன என்ன பண்ணனும்....உங்க படை பட்டாளங்களோட பின்னால வந்திருக்கனுமா?"

என்றாள் வெடுக்கென....



"ஆமா...வந்திருக்கனும்..நீ என் மனைவி.... அந்த நினைப்பு இருக்கா இல்லையா?"சற்று காட்டமாகவே கேட்டான் அவன்...



"அது உங்களுக்கு நினைப்பு இருந்தா நான் ஏன் இங்க வரப்போறேன்?"



"ப்ச்....சும்மா ஆர்கியூ பண்ணாம வா" என கோபபாபட அவனுக்கு பழிப்பு காட்டியபடியே அவன் பின்னே நடந்தாள் அவள்....



அவளை ரவிச்சந்திரனிடம் அறிமுகப்படுத்தியவன் அவளை தன் பக்கத்திலேயே இருத்திக் கொண்டான்.



அதை பார்த்து சிரித்தவர்

"நீ இரு தேவா...நா ஜனனிய (அவர் மனைவி) கூட்டிட்டு வந்துட்றேன்"

என்றுவிட்டு நகர அவளை பிடித்திருந்த கையை சட்டென உதறினான்.



அதில் புரியாது அவனை ஏறிட்டுப் பார்க்க அவன் முகம் இறுகியிருக்கவும் அவன் தன் மேல் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் உள்ளுக்குள் தவித்துப் போனாள்.



அதற்குள் ரவிச்சந்திரனும் அவர் மனைவியுடன் வந்து விட மீண்டும் நெருங்கி நின்றான்.



அவர் மனைவியிடம் அவளை அறிமுகப்படுத்தவும் அவளை திருஷ்டி கழித்தவர்



"ரொம்ப அழகா இருக்கமா"எனவும் அவள் தன் கணவனை திரும்பிப் பார்த்தாள்.



அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்....



வீட்டிலிருந்து இங்கு வரும் வரை அவளை திரும்பிக் கூட பார்க்காதவனுக்கு அப்போதுதான் அவள் அழகு அவனை உலுக்கியது.



அவன் உடைக்கு பொருத்தமாக ஆகாய நிற டிஸைனர் சாரியில் தேவதையென மிளிர்ந்தவளை பார்த்து அசந்து தான் போனான் அவன்....



ரவிச்சந்திரன் அவனை பார்த்து சிரிக்கவும் தான் தன்னிலை உணர்ந்தவன் அவளை விட்டு வலுக்கட்டாயமாக தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.



"உன் பேர் என்னமா?"எனவும் அவர் புறம் திரும்பியவள்



"அஷ்வினி ஆன்ட்டி.."என புன்னகைக்க



"சரி வா....நாம அங்க போலாம்"என அழைக்க அவள் அவனின் அனுமதி வேண்டி மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.



அவன் கண்களை பொத்தி போ என்றவாறு தலையசைக்க அவருடன் இணைந்து நடந்தாள் அவள்...



ரவிச்சந்திரனிடம் திரும்பி பிஸ்னஸ் விஷயமாக பேசிக் கொண்டிருந்தவனின் பார்வை அவ்வப்பொழுது தன் இணையை தழுவி மீண்டது.



மணமக்களுக்கு வாழ்த்திவிட்டு தான் கையோடு கொண்டு வந்திருந்த பரிசை மனைவி சகிதம் கொடுத்தவன் சாப்பிட்டு விட்டு வேலை இருப்பதாக கிளம்ப மாலையாகி இருந்தது.



"தேவ்....பீச் போலாமா?"எனவும் அவளை திரும்பிப் பார்த்தவன் எதுவும் பேசாமல் சாலையில் கண்களை பதிக்க



"ப்ளீஸ் தேவ்....ப்ளீஸ்..ப்ளீஸ்" என அவன் தோலை பிடித்து ஆட்ட சட்டேன காரை நிறுத்தியவன்



"கொஞ்ச நேரம் பேசாம வரமாட்டியா அஷ்வினி...எப்போ பாரு விளையாட்டு தான்" கோபமாக கத்திவிட்டு வண்டியை எடுக்க முகம் வாட அமைதியாகி விட்டாள்.



கார் நகராமல் இருக்கவும் தான் நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் பிரகாசமாக அவளையே பார்த்திருந்தவனின் உதட்டிலும் புன்னகை மலர்ந்தது.



அவன் கண்ணத்தில் தன் இதழை பதித்து விட்டு அவன் சுதாரிக்கும் முன் கதவை திறந்தவள் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடி விட்டாள்.



அவளை பார்த்து சிரித்தவன் "இம்சை"என முணுமுணுத்துவிட்டு தானும் இறங்கினான்.



அவள் கடலலையில் விளையாடும் அழைகையே கைகள் இரண்டையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டு கால்களை சற்று அகற்றி நின்றபடி கண்களில் காதலுடன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.



சூரியன் மறைந்து கொண்டிருந்த மாலைநேர வெளிச்சத்தில் அதற்கு இணையாக மிளிர்நந்தவளை பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.....



ஆடிக் களைத்துப் போய் அவனருகே வந்தவள் தொப்பென மண்ணில் அமர்ந்து அவன் கையையும் இலுத்து அமர வைத்தாள்.



வேண்டுமென்றே அவனை உரசிக்கொண்டு நெருங்கி அமர அவளை முறைத்து விட்டு தள்ளி அமர்ந்தான்.



சிரிப்பை அடக்கிவிட்டு மறுபடியும் நெருங்கி அமர



"ப்ச்...அதான் இவ்வளவு இடம் இருக்குல்ல....அப்பறம் என்ன?"



"எவ்வளவு இடம் இருந்தாலும் உங்க பக்கத்துல உட்காருறது போல வராதில்ல?"

என்றவளின் பதிலில் அவளை பார்த்தவன்



"நல்ல பதில் தான்.... பட் எனக்கு பிடிக்கல"என்றான் வேண்டுமென்று



"இட்ஸ் ஓகே தேவ்....என் மேல கோபத்துல இருக்கீங்கன்னு புரியுது"



"....."



"ஐ அம் சாரி"



"....."



"நா வேணும்னு அப்பிடி பண்ணல தேவ்.... வருண் அண்ணாவ வெச்சி உங்களுக்கு சப்ரைஸ் குடுக்கலாம்னு தான் இருந்தேன்... பட்... என்னென்னவோ நடந்துடுச்சு"



"....."



"இன்னுமே கோபமா?"என்றவள் அவன் ஷர்ட் காலரை பற்றி தன்னை நோக்கி இழுத்து அவன் முரட்டு இதழ்களை சிறை செய்ய அவன் கைகள் அவள் இடையை பிடித்து தன் பக்கம் இழுத்து இறுக்கிக் கொண்டது.



***



தன் வீட்டு பால்கனியில் நின்று கொண்டு தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்த அஜய்யின் மனம் முழுவதும் தான் கண்டு பிடித்த ரிஷியின் தகவல்களிலேயே வியாபித்திருந்து.



ஆரவ் கூட அறியாத தகவல்கள் அவை!!!



தன் தோல் தொட்டு திருப்பிய மனைவியை என்னவென்பது போல் பார்த்தான் அஜய்....



"அஜய் ஏதாவது ப்ராப்ளமா....ஏன் எப்போ பாரு ஏதாவது யோசிச்சிகிட்டே இருக்கீங்க?"



"நத்திங் ஈஷ்வரி...."



"பொய் சொல்றீங்க அஜய்...உங்க முகத்துலயே தெரியுது நீங்க ஏதோ குழப்பத்துல இருக்கீங்கன்னு"



"அதான் இல்லன்னு சொல்றேனே...."

எரிச்சலாய் அவன் மொழியவும் அவனையே அமைதியாய் பார்த்தாள்.



"ப்ச்...சாரிடி"என்றவன் அவளை அணைத்துக் கொள்ள அவன் நெஞ்சில் வாகாய் சாய்ந்து கொண்டவள்



"அஜய்...நம்ம அர்ஜு நாளைக்கு ஊருக்கு வரானாம்"எனவும் அவளை தன் முகம் பார்க்க செய்தவன்



"அவன இங்கேயே ஸ்கூலுக்கு சேத்துடுவோம்மா...."

வாழ்க்கையில் இலட்சமாவது தடவையாக தன்னவளிடம் கேட்டான் அஜய்....



"இன்னும் ஒரு வருஷம் தான் அஜய்....அம்மா கிட்ட நானும் பேசி பாத்துட்டேன்...."என்றுவிட்டு உதட்டை பிதுக்கி தலையை இல்லையென்று ஆட்டவும் ஒரு பெருமூச்சுடன் அவளை விட்டு தள்ளி மறுபக்கம் திரும்பி நிலவை வெறித்தான் அவன்....



தன் உயிரில் உருவான தன் மகனை பிரிந்திருப்பதன் வலி அவன் தினம் தினம் அனுபவிக்கும் ஒன்றுதான்....



ஆனால் இன்று ஏனோ சற்று கூடுதலாகவே வலித்ததுவோ???



ஈஷ்வரியின் தந்தை இறந்து ஒரு மாதத்தில் பிறந்தவன் அர்ஜு என்கிற அர்ஜுன்....



தாய், தந்தையின் இழப்பை தாங்க முடியாமல் ஏதோ பறிகொடுத்தவர் போல் இருக்கவும் அவரை மாற்ற எண்ணி அர்ஜுனை அவரிடமே எப்பொழுதும் கொடுத்து வைத்தது தான் வினையாகிப் போனது போலும்....



அவன் வளர்ந்தது என்னமோ தாய் தந்தையரிடம் தான் என்றாலும்... அவனுடன் அதிகமாக இருந்தது என்னமோ அவனுடைய பாட்டி மீனாக்ஷி தான்...



அவருடைய பூர்வீக ஊர் ஊட்டி...



ஈஷ்வரியின் வற்புறுத்தலின் பேரில் கொஞ்ச நாள் இராமநாதபுரத்திலேயே தங்கியவர் போகும் போது அஜய்யின் தலையில் இடியை இறக்கினார்.



அர்ஜுனை தன்னிடம் விட்டு விடுமாறும் அவர் தனிமையை போக்குவானென்றும் கேட்க நிலைகுலைந்து போனான் அவன்....



மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் தொண்டையில் சிக்கிவிட்ட முள் போன்று ஆகிவிட்டது அவன் நிலை....



அவர் கையெடுத்து கும்பிடவும் பதறிப்போனவனுக்கு சரி என்று சொல்வதை தவிற வேறு வழியே இறுக்க வில்லை.....



அதன்படி அவனை ஊட்டி கான்வென்டில் சேர்த்து விட இவனும் ஈஷ்வரியும் மாறி மாறி போய்விட்டு வருவது வழக்கமானது.



பார்த்து விட்டு விடைபெறும் போது அவன் அழும் அழுகையில் மனம் கணத்துப் போகும் அவனுக்கு....



அஷ்வினியின் திருமணத்திற்கு கூட அவன் வராமல் போனதில் அஜய்க்கு அவ்வளவு வருத்தம்...



அர்ஜுனுக்கு கண்டிப்பு காட்டும் அம்மாவை விட பாசத்தை மட்டுமே பொழியும் அப்பா என்றால் உயிர்!!!



அதனாலோ என்னவோ அவன் வீட்டுக்கு போகும் பொழுதெல்லாம் அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவான்.



அவன் முன் போய் நின்றவள்

"ஒரு அம்மாவா எனக்கு மட்டும் அவன பிரிஞ்சு இருக்குற வலி இல்லன்னு நெனக்கிறீங்களா அஜய்?"என்றவளுக்கு தன்னிலையை எண்ணி பொலபொலவென கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.



அதை பதறித்துடைத்தவன் அவளுக்கு ஆறுதல் சொல்ல தெம்பின்றி இறுக்க அணைக்க அவனின் கண்களிலும் ஈரம்....



"அஜய்...நா வேனும்னா அம்மா கிட்ட மறுபடி பேசவா?" பதில் அவனுக்கே தெரியுமாதலால் அமைதியாகவே இருந்தான்.



"ஐ அம் சாரி அஜய்...."



"விடுமா....எல்லாம் சரியாகிடும்...."

என்றவனுள் இன்னும் ஒன்றிப்போனாள் அவள்.......



***



வழமை போல் கயலின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டே அவளிடம் வளவளத்துக் கொண்டிருந்தான் ஆரவ்.....



"ஆரு...அர்விந்த் செப்டர் போடாமலேயே ரெண்டு பேரும் ஒன்னு சேந்துட்டாங்கடா...நமக்கு வேல மிச்சம்...."



"ம்..."



"இன்னைக்கு தனியா அவங்கள நா அனுப்பி வெச்சதே ரொமேன்ஸுக்குதான் தெரியுமா?"



"ம்..."



"டேய் அன்னக்கி...அத்தான் ரொம்ப திட்டிட்டாராடா உன்ன?"



"ம்..."



"அறஞ்ச ஒடனே அவர் முகத்த பாக்கனுமே?"



"ம்..."



"என்னடா ம்...ம்...நா பேசுறது காதுல விழுதா இல்லையா?" அப்போதும் அவன் ம் என்று சொல்லவே கடுப்பாகிவிட்டாள் அவள்....



கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க அவள் பேசுகிறாள் என நினைத்தவன் மறுபடி ம்..எனவும் பல்லை கடித்துக்கொண்டே அவன் முடியை பிடித்து ஆட்ட அப்போதுதான் நினைவுலகத்துக்கு வந்தான் ஆரவ்....



"ஓய்...வலிக்குது விடுடி...."என கத்தவும்



"யேன்டா....நா எவ்வளவு கஷ்டப்பட்டு இங்க பேசிட்டு இருக்கேன்....நீ என்னடான்னா ம் கொட்டிட்டு இருக்க....நா பேசுறத கேக்குறேன்னு காட்றதுக்காக நா அமைதியா இருக்கும் போதும் ம் கொட்றியா....உன்ன"

என திட்டிக்கொண்டே அவன் முடியை பிடித்து தலையை ஆட்ட



"ஆ...ஆ...விடுடி....வலிக்குது.... நீ அந்த ராட்சஸிக்கு தங்கச்சியா பொறந்ததுல தப்பே இல்லடி...."எனவும் அவனை மடியிலிருந்து தள்ளி விட்டவள் அவனை பார்த்து முறைத்தாள்.



தலையை தேய்த்துக்கொண்டே அவளை கொலை வெறியுடன் பார்த்து



"ஏன்டி இப்பிடி பண்ண?"எனவும்



"ம்...வேண்டுதல்"



"இப்பிடி எல்லாமா வேண்டுதல் வைப்பாய்ங்க"

என்றுவிட்டு மறுபடியும் அவள் மடியில் படுத்துக் கொள்ள மீண்டும் தள்ளி விட்டாள்.



"அம்மு செல்லம் ப்ளீஸ்டி...."என்றவன் வலுக்கட்டாயமாக தலையை வைத்து அவள் கையை தன் சிகை கோதுமாறு வைத்து விட இம்முறை அமைதியாக இருந்து விட்டாலும் அவள் கை அவன் சிகையை வருடுவதை நிறுத்தவே இல்லை....



"ஓய் என்னடி....மாமன் மேல கோபமா இருக்கியா....?"



"...."



"ரொம்ப சூடா இருக்கியோ?"



"இல்லயே அப்பிடியே குளுகுளுன்னு இருக்கேன்"



"நா வேற ஏதோ யோசனையில இருந்தேன் அம்மு...."



"இவரு பெரிய ப்ரைம் மினிஸ்டரு... நாட்டு மக்கள எப்பிடி காப்பாத்துறன்னு யோசிக்கிறாரு.... போவியா..."



"இதென்னடா சோதன....ப்ரைம் மினிஸ்டர் மட்டும் தான் யோசிக்கனுமா.... நாங்க எல்லாம் யோசிச்சா ஆகாதா?"





"போ...ஆரு...நா எவ்வளவு இன்ட்ரெஸ்டிங்கா பேசிட்டு இருந்தேன்...நீ என்ன கண்டுக்கல"



"சரி திரும்ப சொல்லுடி செல்லம்"



"முடியாதுடா"



"ப்ளீஸ்டி"



"எனக்கு வாய் வலிக்கும்...."



"இரு நா மருந்து தர்றேன்..."என்றவள் அவளை பேச விடாது தன்னை நோக்கி இழுத்து அவளிதழ்களை முற்றுகை இட்டான்.



***



அவன் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு அவன் தோலிலேயே சுகமாய் துயில் கொண்டிருந்தாள் பாவை.....



அவள் தூக்கம் கலைந்துவிடுமோ என பயந்து காரை மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தவன் அவ்வப்போது அவள் தலையை வருடிக் கொடுக்கவும் மறக்கவில்லை....



கார் ஒரு குழுங்கலுடன் வீட்டின் முன் நிற்க இலேசாக விழிப்புத் தட்டியது அவளுக்கு....



காரை பார்க் பண்ணி விட்டு அவள் பக்கம் வந்தவன் அவளை கைகளில் ஏந்திக் கொள்ள அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தவள் அவன் கழுத்து வளைவில் சுகமாய் தூக்கத்தை தொடர தலையாட்டி சிரித்தவாறே வீட்டுக்குள் நுழைந்தான்.



அவளை கட்டிலில் கிடத்தியவன் வழமையான அவள் செயலில் புன்னகை பூத்துவிட்டு அவள் கையை எடுத்து வைத்தவாறே நிமிர்ந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலை......

வெற்றிவேல் யுனிவர்சிட்டி....

"ஹாய் டா...."

"ஹாய் சித்து"

"இப்போ கை எப்பிடி இருக்கு...."

"ம்... பரவால்ல மச்சி"

"மதன் நடந்த விஷயத்தை சொன்னான்டா....அண்ணாக்கு டவுட் வந்திருக்குமோன்னு எனக்கு டவுட்டா இருக்குடா"

"ஆமா சித்து....நானும் அதயேதான் நேத்துல இருந்து யோசிச்சிட்டு இருக்கேன்டா"

"அன்னக்கு அஷ்வி மட்டும் மதன் கூட பேசி இருந்தான்னு வை.... மொத்தமா மாட்டி இருப்போம்"

"ஆமா மச்சான்....அந்த ராட்சஸி எப்போ பாரு என்ன மாட்டி விட்றதுலயே குறியா இருக்காடா....."

"ஹஹ்ஹஹ்ஹா....ஆரம்பிச்சிட்டியா?"

"சிரிக்காதடா...கடுப்பா இருக்கு"

"ஓகே ஓகே"

"நேத்து காலைல கூட அண்ணாகிட்ட கோர்த்து உட்டாடா ராட்சஸி...."

"நீ என்ன பண்ண?"

"அதுவா...அவள சும்மா வம்பிலுத்தேனா.... அவ அவளோட புருஷன கூப்டுடா....அண்ணாவும் அவ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டி பொம்மை மாறி ஆட்டிகிட்டே இருக்காங்கடா...."

"அப்போ அண்ணா மொத்தமா ப்ளாட்டா?"

"நூறு வீதம் மச்சான்...சந்தேகமே இல்ல"

"அவள பாத்து எத்தன வருஷமாச்சு தெரியுமாடா?"

"...."

"இன்னுமே பேசாம வீம்பு புடிச்சிட்டு இருக்காடா"

"பின்ன....உன்ன எவ்வளவு நம்பி இருந்தான்னா அவ வீட்லயே தங்க சொல்லி கூப்டு இருப்பா....நீ முகத்துல அடிச்சா மாறி முடியாதுன்னு சொன்னா உன் மேல கோபப்படாம கொஞ்சிட்டு தான் மறுவேல பாப்பா"

"டேய் ஏன்டா நீயும்?"

"உன் சிச்சுவேஷன அவளுக்கு நீ சொல்லி புரிய வெச்சிருக்கனும் மச்சான்....அத விட்டுட்டு நீயும் முடியாதுன்னு பொய்ட்ட....அவளும் அழுத்தக்காரி....பேசல"

"...."

"சரி எப்போ பேசுறதா இருக்க?"

"நா நெறய தடவ ட்ரை பண்ணிட்டேன்டா.... பட் நோ ரெஸ்பான்ஸிபிலிட்டி"

"சரி விடு....அவள மீட் பண்ண ஏற்பாடு பண்றேன்"

"தேங்க்ஸ் மச்சி..."என்றவனை முறைக்க

"ஓகே ஓகே நோ தேங்க்ஸ்...சாரி" எனவும் மீண்டும் முறைத்தான் ஆரவ்....

"வம்பே வேணாம்டா...நோ தேங்க்ஸ் நோ சாரி...."என உடனே சரண்டராகி விட்டான் அந்த பாசக்கார தோழன்....

***

"சார்..."

"சொல்லு கதிர்?"

"அன்னக்கு நடந்த மீட்டிங் சக்ஸஸ் ஆகிருச்சு"

"வாவ்...குட்..."

"அவங்களோட எல்லா ப்ராஜக்ட்டையும் நமக்கே தரேன்னு சொல்லி இருக்காங்க"

"...."

"பட்..."என நிறுத்த அவன் கண்கள் கூர்மையாய் அவனிடம் படிந்தது.

"ம்...பட்?"

"பட்...டில்லில தான் கண்ட்ராக்ட் ஸைன் பண்ணுவேன்னு சொல்லிட்டாங்க சார்"

"...."

"நானும் கேட்டு பாத்துட்டேன் பட்...முடியாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டாங்க"

"...."

"நீங்க வந்தா தான் கண்ட்ராக்ட் ஓகே பண்ணுவேன்னும் சொல்லிட்டாங்க சார்"எனவும் அவனுடைய வலக்கை நடு விரல் அவன் புருவத்தை தானாய் நீவி விட யோசனையில் ஆழ்ந்தான் ரிஷி....

ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்தவன்
"நீ போ கதிர்...நா உன்ன அப்பறமா கூப்புட்றேன்"
என்றுவிட்டு காலேஜ் கிளம்பினான்.

வெற்றிவேல் யுனிவர்சிட்டி.....

தன் இருக்கையில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்த ரிஷியை கலைத்தது கதவு தட்டும் சத்தம்...

"எஸ் கம் இன்..."என்றவன் உள்ளே நுழைந்த ஆரவ்வை பார்த்து உட்காருமாறு சைகை செய்து விட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

அவன் முகத்தில் படிந்திருக்கும் குழப்ப ரேகைகளை கவனித்த ஆரவ் தானும் குழம்பியவனாய்

"அண்...அது சார்..."எனவும் கண்களை திறந்து அவனைப் பார்த்தவன் அவன் தன்னால் குழப்பம் அடைந்திருப்பது கண்டு நேராக அமரந்தான்.

"வொய் அண்...சார்...எனி ப்ராப்ளம்?"

"ஆமா... ஆரவ்...ரிசப்ஷன் வெக்கனும்னு முடிவு பண்ணி இருந்தோம்ல....அதுல ஒரு சின்ன சிக்கல்"

"ஏன் சார் என்னாச்சு?"

"ப்ச்....இந்த சார் போடுறத முதல்ல நிப்பாட்றியா....இர்ரிடேட்டிங்"

"...."

"முக்கியமான காண்ட்ராக்ட் கெடச்சிருக்கு....அதுக்கு டில்லி போகனும்...இந்த ரிசப்ஷன் வேற வருதில்ல... அதான் என்ன பண்றதுன்னு தெரியல"

"நீங்க எப்போ டில்லி போகனும் அண்ணா?"

"தெரியலடா...கதிர் கிட்ட இன்னும் ஷுர் பண்ணல...மே பி வீக் எண்டிங்ல வரும்னு நெனக்கிறேன்" என்ற பதிலை கேட்டவனுக்கும் குழப்பமாகிவிட்டது.

"இன்று செவ்வாய்க்கிழமை...இவர் மே பின்னு தான் சொல்றாரே தவிர அதுக்கு முன்னாடியும் வர வாய்ப்பிருக்கு...." என ஏதேதோ எண்ணங்களில் உழன்றவன் அவனை பார்த்து

"அண்ணா....பிஸ்னஸ் பார்ட்டி மாதிரி தானே வெக்க வேண்டி வரும்...ஐ மீன் இவங்களுக்கு மட்டும் தானே தெரிய படுத்த இருக்கு..."

"ஆமாடா"

"அத்த வீட்டு ஆளுங்க ஏற்கனவே கல்யாணத்துக்கு வந்திருப்பாங்க.... சோ...நாம சிம்பிளா வெச்சா போதுமேண்ணா"

"...."

"மாமா அத்தயவெல்லாம் ஒன் டைமுக்கு வர சொல்லிடலாம்ணா.... மத்தபடி அவங்களுக்கு பெருசா வேல இருக்காது"

"...."

"ட்ரஸ் கூட அம்மு , அஷ்வி , எனக்கு அப்பறம் உங்களுக்கு தான் எடுக்க இருக்கு..... சோ நாம இன்னக்கே எடுத்தாலும் கூட வியாழக்கிழமைல ரிசப்ஷன் வெச்சி முடிச்சிடலாம்"
என்றவனை மெச்சுதலாக பார்த்தவன்

"ஓகே ஆரு...அப்பிடியே பண்ணிடலாம்....நீ அஷுவயும் கூட்டிட்டு கடைக்கு பொய்ட்டு வந்துடு.... நா அப்பறமா எடுத்துக்குறேன்....அதுக்குள்ள நா இன்பர்மேஷன் குடுத்துட்றேன்"
என்றவன் இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள ஏதோ கூற வந்த ஆரவ் அமைதியாகி விட

"என்னடா...ஏதாவது சொல்லனும்னா சொல்லு?"

"நத்திங் அண்ணா....அப்போ நா லீவ் சொல்லிட்டு கெளம்புறேன்"
என்றுவிட்டு வெளியேற தானும் வெளியேறினான் ரிஷிகுமார்.

.........

"முடியாது முடியாது முடியாது....."என கோர்ட் வாசலில் நின்று கொண்டு ஆரவ்விடம் மறுத்துக் கொண்டிருந்தாள் அஷ்வினி....

"அஷ்வி...ப்ளீஸ் ஏற்கனவே லேட் ஆகிடுச்சு..." சலிப்பாய் சொன்னாள் கயல்....

"முடியாதுடி...நீ மட்டும் உன் புருஷன் கூட வருவ...நா உங்க கூட வரனுமா?"

"அத அப்பறம் அண்ணாகிட்ட போய் கேளுடி....இப்போ கெளம்பு"

"முடியாது"

"ப்ளீஸ்கா"

"அக்கான்னு கெஞ்சினாலும் அஷ்வின்னு கெஞ்சினாலும் என் பதில் நோ நோ தான்" எனவும் ஆரவ்வும் கயலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க

"நீங்க ரெண்டு பேரும் கெளம்புங்க.... நா ஆபீஸ் போயி அந்த கமாண்டர கையோட இழுத்துட்டு வர்றேன்"என்றவள் அவர்கள் பதில் பேசும் முன் தன் டூவீலரில் கிளம்பிச் சென்றுவிட இருவரும் வேறு வழி இல்லாது கிளம்பி விட்டனர்.


ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்....

கோபத்துடன் ரிசப்ஷனிஸ் சாருமதியிடம் சென்றவள்

"எஸ்கியூஸ் மீ மிஸ்.மதி"எனவும் ஏதோ டைப் பண்ணிக் கொண்டிருந்தவள் விலுக்கென நிமிர்ந்து பார்த்து அஷ்வினியை கண்டதும் பயத்தில் எழுந்தே விட்டாள்.

"எஸ் மேடம்?"

"உங்க சிடுமூஞ்சி எம்.டிய பாக்கனும்"

"மேம்...."

"ரைட் நௌவ் மதி...அந்த கமாண்டர இப்போவே இங்க வர சொல்லு" என்க அஷ்வினியின் சிடுமூஞ்சி , கமாண்டர் எனும் விழிப்பில் அதிர்ச்சியானவள் பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கிவிட்டு கைகள் நடுங்க அவனுக்கு அழைத்தாள்.

மறுமுனை
"எஸ் சாருமதி"

"அ..அது..அது...சார் மேடம்... உங்கள இ...இங்க வந்து அவங்கள பாக்க சொல்றாங்க"

"வாட் நாண்சன்ஸ்....ஹூ ஆர் ஷீ?" என்று சீற அவளுக்கோ இதயம் தொண்டைக்குள் துடிக்கும் போல் இருந்தது.

"அ...அது...தெரியல சார்....அ... அன்னைக்கு கூட வந்திருந்தாங்களே"
எனவும் வந்திருப்பது தன் மனையாள் என யூகித்தவனுக்கு கோபம் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்து போனதுவோ!!!

உதட்டில் புன்னகை வந்து ஒட்டிக் கொள்ள
"அவள என்கிட்ட அனுப்பி வை..."எனவும் அவளது கையிலிருந்து வெடுக்கென போனை பிடுங்கி காதில் வைத்தவள்

"என்னால அங்கெல்லாம் வர முடியாது மிஸ்டர்.தேவ்....நீங்க இப்போ வந்தே ஆகனும்" என்றாள் கட்டளை போலும்....

"ஓகே ஓகே கூல் பேபி....இதோ நானே வர்றேன்"எனவும் படக்கென ரிசீவரை வைத்தவள் அங்கிருந்த சோஃபாவில் சட்டமாய் அமர்ந்து கொள்ள ஊழியர்கள் அனைவரும் ஹார்ட் அட்டாக் வராத குறையாக அதிர்ச்சியில் வாயை பிளந்தனர்.

பின்னே....தேவ் என்று மரியாதை இல்லாமல் அழைத்தது மட்டுமல்லாமல் அவனுக்கே அல்லவா ஆர்டர் போட்டு விட்டு அமர்ந்திருக்கிறாள்.

அனைவரும் அவனை சீறிப் பாயும் வேங்கையென நினைத்திருக்க அவளிடம் மட்டும் அவன் அடங்கிப் போவதன் மர்மம் என்னவோ???

காதல்!!!

அவன் வரமாட்டான் என இவர்கள் எதிர்ப்பார்த்திருக்க அவனோ அவர்கள் நம்பிக்கையை பொய்யாக்கி விட்டு புன்னகையுடனே அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அவனை சிரிப்பை பார்த்த ஒருவன் அருகில் இருந்தவனின் தோலை பிடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டான்.

அவளருகில் வந்தவன்
"அஷு..."எனவும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

"ஏன் கோபமா இருக்க?"பதில் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே அவளை சீண்டினான்.

"ஏன் உங்களுக்கு தெரியாதா?"

"தெரியலயே"

"பொய் சொல்லாதீங்க தேவ்....நா உங்க மேல கோபமா இருக்கேன்" கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

அதில் வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியவன்
"சரி வா...கேபினுக்கு போய் பேசலாம்....எல்லோரும் நம்மலயே பாக்குறாங்க"

"ஏன் பாத்தா என்ன....நல்லா பாக்கட்டும் அவங்க சிடுமூஞ்சி எம்.டியோட நிலமைய"

"எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல பேபி....பட்...நீ பண்றது பாத்து தான் சிரிக்கிறாங்க"எனவும் சுற்றி முற்றி பார்த்தவளுக்கு அவன் சொன்னது போலவே எல்லோரும் அவளையை பார்த்துக் கொண்டிருக்க சங்கடமாய் போய்விட்டது.

சட்டென இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவள் அவனை முறைக்க வாய்விட்டு சிரித்தவன்
"வா...."என்றுவிட்டு முன்னே நடக்க அவன் பின்னால் தலையை குனிந்த படியே சென்றாள் காரிகை....

...........

குனிந்த தலை நிமிராமல் இருப்பவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவன்

"ஓகே சோல்லுங்க மிஸஸ்.மாறன்... என்ன கோபம் என் மேல?"என்றது மட்டும் தான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவனைப் பார்த்து பொரியத் தொடங்கி விட்டாள்.

"ஏன் கோபம்னு நீங்க தெரியாத மாதிரி நடிச்சா நா நம்பிடுவேனா.... ஏன்தான் இப்பிடி இருக்கீங்களோ... அவன் அவன் பொண்டாட்டிய எவ்வளவு அழகா கவனிக்கிறான்....
நீங்களும் தான் இருக்கீங்களே.. கமாண்டர்... கமாண்டர்....ஆருவ மட்டும் அவன் பொண்டாட்டி கூட அனுப்பி வெச்சிட்டு என்னையும் அவங்க கூட போன்னு சொல்லியிருக்கீங்க....
எனக்கு மட்டும் நீங்க கூட இருக்கனும்னு ஆச இருக்காதா?" கோபமாய் துவங்கியவளுக்கு கடைசி வார்த்தை பேசப்பேச தொண்டை அடைத்து கண்களில் கண்ணீர் விழவா வெண்டாமா என கேட்டுக் கொண்டு நிற்க சட்டென அவளை இலுத்து அணைத்தான்.

அவளோ அவனிடமிருந்து திமிரியபடியே
"விடு...என்ன....விடுடா" என்றுவிட்டு அவன் நெஞ்சில் குத்த

"எனக்கு கொஞ்சம் ஒர்க்டி... அதனால தான் வர முடில...."

"விடு என்ன....நா மட்டுமே போய்க்குறேன்"

"ப்ச்....அதான் சொல்றேனில்லடி...."

"....."

"சரி கெளம்பு போலாம்" என்றவன் கதிருக்கு கால் பண்ணி சொல்லி விட்டு அப்போதும் அடம் பிடித்துக் கொண்டு இருந்தவளை வலுக்கட்டாயமாக இலுத்துக் கொண்டு சென்றான்.

தொடரும்.....

19-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 29 ❤



இராமநாதபுரம்.....



"அப்பா...." என கத்திக்கொண்டே கையை விரித்தவாறு ஓடி வந்த அர்ஜுன் தனக்கு முன்னால் மண்டியிட்டு தனக்காகவே காத்துக் கொண்டிருக்கும் அஜய்யின் கழுத்தை பாய்ந்து கட்டிக் கொண்டான்.



அவனை தானும் தூக்கி சுற்றியவன் அவனை இறுக்கி முத்தமிட்டான்.



"பா....எங்களுக்கு இந்த தடவ ஒன் மந்த் லீவ் விட்டு இருக்காங்க தெரியுமா?"குதூகலமாக சொன்ன தன் மகனை மீண்டும் முத்தமிட்டான் அஜய்....



"எப்பிடி இருக்க கண்ணா?" என்றபடியே அங்கே வந்தார் விஜயலக்ஷ்மி.



"நல்லா இருக்கேன் பாட்டி....நீங்க?" பெரிய மனுஷன் போல் கேட்டவன் அவரின் கைகளுக்கு மாறினான்.



அவன் உச்சந்தலையில் முத்தமிட்டவர்

"நல்லா இருக்கேன்டா.....ரொம்ப டயர்டா தெரியுறியே கண்ணா.... சாப்புட்டு ரெஸ்ட் எடுக்கலாமா?"



"ம் சரி பாட்டி"என்று தலையாட்டியவன் அவரிடம் கதை பேசிக் கொண்டே உள்ளே சென்றான்.



அதை கண்களில் துளிர்த்த நீருடன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த அஜய் தான் இருக்கும் இடம் கருதி சட்டென துடைத்துக் கொண்டான்.



அவ்வளவு நேரம் அர்ஜுனையே ஆர்ச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வருணின் கண்கள் அதை படம்பிடித்துக் கொள்ள அவனருகில் வந்து அவன் தோல் மீது கை வைக்கவும் அவனை ஏறிட்டுப் பார்த்தான் அஜய்.



"என்னாச்சு அஜய்?"



"நத்திங்டா"



"இத நா நம்புவேன்னு எதிர்பாக்குறியா?"



"...."



"அர்ஜுன் உன் பையன்னு புரியுது... பட் எதுக்காக அவன் உன்ன விட்டு தூரமா இருக்கான்... அவன் ஏன் நம்ம வீட்ல இல்ல.... எங்க தங்கி இருக்கான்... யார்கூட இருக்கான்? " அடுக்கடுக்காக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவனை பார்த்து ஒரு பெருமூச்சுடன் நடந்ததனைத்தையும் ஒன்று விடாமல் அப்படியே ஒப்பிக்க வாயடைத்துப் போனான் வருண்.



அவனுக்குமே என்ன சொல்வதென்று தெரியவில்லை ஆயினும் அந்த மீனாக்ஷியின் மீது ஏனோ அவனால் கோபப்படவும் முடியவில்லை....



அவர் நிலையும் பரிதாபத்திற்குரியது தான் என்றாலும் தன் இரட்டை சகோதரனின் நிலை!!!



அவனை அணைத்து விடுவித்தவன்

"டோன்ட் ஒர்ரிடா....எல்லாம் சரியாயிடும்"



"...."



"வேனும்னா உன் அத்தய போட்டுத் தள்ளிரலாமா?"அவன் மனநிலையை மாற்றும் பொருட்டு குறும்பாக வினவினான் அவன்.



"எனக்கும் சம்டைம்ஸ் அப்பிடியும் தோனியிருக்குடா....பட் அத்தையா பொயிட்டாங்களே!"

பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவனை பார்த்து உண்மையில் அலறியே விட்டான் வருண்.



"டே....ய்... நா சும்மாதான்டா கேட்டேன்" எனவும் வாய்விட்டு சிரித்தான் அஜய்.



பின்பு ஏதோ ஞாபகம் வந்தவனாய்

"ஏன் வருண் உனக்கு தேவாவ பாக்கும் போது யாரையுமே ஞாபகம் வர்றது இல்லையா?" என்க நெற்றி சுருக்கியவன்



"இல்லயேடா ஏன் கேக்குற?"



"இல்ல சும்மாதான்"

சமாளிப்பாய் சிரித்தவன் அங்கிருந்து நழுவி விட அவன் முதுகையே கண்கள் இடுங்க கூர்மையாய் துளைத்தது வருணின் பார்வை....



.....



அஷ்வினியை போலவே சமயலறை மேடையில் இருந்து கால் ஆட்டியபடி கதை பேசிக் கொண்டிருந்த அர்ஜுன் திடீரென



"ஆமா பாட்டி....என் கேர்ள் ப்ரண்ட்டு எங்க பொய்ட்டா....என்ன பாக்க கூட வர்ல?"



"உன் கேர்ள் ப்ரண்ட்டுக்கு கல்யாணம் ஆயிடுச்சு... அவ அவ புருஷன் வீட்ல இருக்கா கண்ணா"



"பொய் சொல்லாதீங்க பாட்டி.... அப்பிடி நடந்து இருந்தா என் கிட்ட என் கேர்ள் ப்ரண்ட் சொல்லாம இருந்திருக்க மாட்டா.... அவ எனக்கு தான் முதல்ல சொல்லி இருப்பா" அழ தயாராகவும் அவனுக்கு என்ன சொல்லி புரியவைப்பதென்று தெரியாமல் விஜி முழிக்க அவனருகில் வந்த ஈஷ்வரி



"உன் கேர்ள் ப்ரண்டு எங்கேயுமே போகல அர்ஜு....உனக்கு சப்ரைஸ் கொடுக்கலாம்னு கடைக்கு சாக்லேட் வாங்கிட்டு வர போயிருக்கா...."



"இல்ல நா நம்ப மாட்டேன்மா.... பாட்டி வேற ஏதோ சொன்னாங்க.... எனக்கு இப்போவே என் கேர்ள் ப்ரண்டு கிட்ட பேசனும்"என அடம் பிடிக்க அவனை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தவள் தூங்கி எழுந்ததும் அவளுக்கு அழைத்து தருவதாக சொல்லி தூங்க வைத்தாள்.



***



"அம்மு....இது நல்லாருக்கு"



"ஊஹூம்....எனக்கு புடிக்கல...."



"இது?"



"புடிக்கல"



"ஷ்ஷப்பா....இதுக்கு மேல என்னால முடிலடி...வந்து டூ அவர்ஸ் ஆகுது....நீ இன்னும் ஒன்னு கூட ஸிலெக்ட் பண்ணல..."என அலுத்துக் கொள்ள



"நாங்க அப்பிடித்தான் புடவ எடுப்போம்... உனக்கு டைம் வேஸ்ட்னா நீ கெளம்பு"என முறுக்கிக் கொள்ளவும் உடனே சரணடைந்தவன்



"அப்பிடி எனக்கு என்ன வேலதான் வந்துறபோகுது செல்லம்....நீ பொறுமயா எடு.... நா ஒன்னுமே சொல்லல தாயி"என்க அவள் உதட்டில் புன்னகை மலர்ந்தது.



முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டே அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தவனை பார்த்து கடைக்காரர் வாய் விட்டு சிரிக்க அவரை கொலை காண்டுடன் முறைத்தான் ஆரவ்....



"ஏன் தம்பி பேசாம பொஞ்சாதிய மட்டும் அனுப்பி விட்ருக்கலாமில்ல?"



"அத ஏன்னா கேக்குறீங்க....எனக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு அண்ணன் இருக்கானா.....அவன் என்ன இவங்க கூட போக சொல்லிட்டான் படுபாவி...."



"உன் அண்ணன்கிட்ட என்னால முடியாதுன்னு சொல்லி இருக்க வேண்டியது?"



"நானும் முடியாதுன்னு சொல்லத்தான் வாயத் திறந்தேனா...... அவன் திரும்பி பார்த்த பார்வைல வாய் கப்புன்னு மூடிகிச்சு"



"அவ்வளவு டெர்ரர்ராவா இருப்பாரு?"



"ச்சே ச்சே....அவ்வளவு இல்லண்ணே.... அவ்வ்வ்வளவு....."

எனவும் அவன் பதிலில் பக்கென சிரித்தாள் கயல்.



"அப்பவும் கேட்டாருண்ணா.... ஏதாவது சொல்லுனுமானு"



"அப்போ பாசக்கார அண்ணன் தான்...நான் வெற நீங்க சொன்னத பாத்து என்னென்னவோ நெனச்சுட்டேன் தம்பி"



"பாசக்காரன்தான்ணே இல்லன்னு சொல்லுவேனா?"



"அவர் கேட்டும் ஏன் தம்பி மறுக்கல?"



"அவரு என் பொண்டாட்டிய மட்டுமாண்ண கூட்டிட்டு போக சொன்னாரு... அவர் பொண்டாட்டிங்குற பேருல இருக்குற ராட்சஸியயும் சேத்தில்ல கூட்டிட்டு போக சொன்னாரு.....

அதனால முடியாதுன்னு சொல்ல முடியலண்ண... இதுல ஜோக் என்னன்னா அவ போயி அவர இலுத்துட்டே வந்துட்டா...."என்று விட்டு சிரிக்க தொடங்கினான்.



"ஏன் தம்பி உங்க அண்ணன் பொஞ்சாதி அவ்வளவு கொடுமக்காரியா?"



"கொடுமக்காரின்னாலும் பரவல்லண்ணே...அவ பிசாசு..." என்றவனுக்கு தலையில் கொட்டு விழ



"ஆ...அம்மா...ஏன்டி கொட்டுன?"என கயலைப் பார்த்து கேட்கவும்



"நான் எங்கடா உன்ன தொட்டேன்.... சாரு அப்பிடியே கொஞ்சம் பின்னாடி திரும்பி பார்த்தீங்கன்னா கொட்டுனது யாருன்னு தெரிஞ்சிடும்" என்க அவசரமாக பின்னால் திரும்பிப் பார்த்தவனுக்கு பத்ரகாளி போல் இடுப்பில் கை குற்றி நின்று கொண்டிருந்த தன் தோழியை பார்த்து பயத்தில் கண்கள் அகல விரிந்தது.



"ஹி...ஹி...ராட்...சி.. அஷ்விமா எப்போ வந்த...சொல்லவே இல்ல?"



"நீங்க பேச ஆரம்பிக்கும் போதே வந்துட்டேனுங்க சாரே...."என்றவள் சற்று எட்டி அவன் மண்டையில் மீண்டும் கொட்டி விட்டு முதுகிலே ஒரு போடு போட்டாள்.



"ஆ...வலிக்குதுடி ராட்சஸி..."அவனே வம்பை விலை கொடுத்து வாங்க கையிலிருந்த துணியால் மீண்டும் அடித்தாள்.



"நல்லா போடுக்கா ரெண்டு... வந்ததுல இருந்து கடுப்படுச்சிகிட்டே இருக்கான்"



"அடிப்பாவி.... காப்பாத்தலன்னாலும் பரவால்ல... அட்லீஸ்ட் வாயாலயாச்சும் தடுக்கலாம் இல்ல?"



"உனக்கு நல்லா வேணும்டா...." என்றவள் கைகட்டி வேடிக்கை பார்க்க நொந்து போனான் ஆரவ்.



அதற்குள் கடைக்காரர் வேறு

"என்ன தம்பி.... அண்ணிய பிசாசுன்னு சொல்லிட்டீங்க?" விட்ட இடத்திலிருந்து அவர் தொடர



"யோவ்...மரியாதயா போயிரு" என்றான் கடுப்புடன்....



"நா உனக்கு பிசாசாடா....கெழவா?"



"ஏய்...அப்பிடி கூப்புடாதன்னு சொல்லி இருக்கேன்லடி ராட்சஸி?"



"நீ மட்டும் கூப்புடுவ....நாங்க ஈ ன்னு இலிச்சிகிட்டு நிக்கனுமாக்கும்?"



"நா என்ன பொய்யா சொல்லிட்டேன்?"



"உன்ன..."என பல்லை கடித்தவள் விட்ட அடியை மீண்டும் தொடங்க அவனுக்கு கால் வரவும் அப்பாடா என நழுவி விட்டான்.



மூச்சு வாங்க நின்றவளிடம் கயல்

"ஏன் அஷ்வி....அத்தான் எங்க?"



"ம்...உன் அத்தான் பொத்தான்...கால் பேசப் பொய்ட்டாரு.... கமாண்டர்"



"நீ அந்த பக்கமா தானே இருந்த எப்போ இங்க வந்த?"



"தேவ் கால் வரவும் அந்தப்பக்கம் போனாரா....நான் உன்கிட்ட இந்த சேலைய காட்ட எடுத்துட்டு வந்தேன்.... இங்க வந்து பாத்தா அந்த தடியன் என்னயவே பிசாசுன்னு கத அலந்துகிட்டு இருக்கான்...."



"ஹா..ஹா..ஹா..சரி சரி டென்ஷன் ஆகாதடி....காட்டு"

என்றவளிடம் தான் அவளுக்காக எடுத்த இரண்டை காட்ட அவள் ஒன்று மட்டுமே போதும் என்று விட மற்றையதை எடுத்துக் கொண்டு தான் இருந்த கட்டத்திற்கு வரவும் ரிஷி அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.



ஆரவ்வின் நிலையை விட இவன் நிலை படு மோசம்ங்க....



அவன் தேர்வு செய்த எதையுமே அவள் திரும்பிக் கூட பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தாள்.



வந்து இரண்டு மணி நேரமாகியும் அவள் அவனை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை....



அம்மணிக்கு அவ்வளவு கோபம் அவ புருஷன் மேல....



இடையிடையே கால் வேறு அவனுக்கு வந்து கொண்டிருக்க கடுப்பாகிப் போனாள் பாவையவள்....



அவள் அருகில் இருந்த நாட்காலியில் அமர்ந்து போனை நோண்டத் துவங்கவும் அவனை நின்று முறைத்தவள் அவனிடம் வந்து அதை பிடுங்க



"அஷு....நானும் வந்ததுல இருந்து ஸிலெக்ட் பண்ணி தந்துகிட்டே இருக்கேன்....பட் ஒனக்கு எதுவுமே புடிக்கல....இன்னும் நா என்ன பண்ணனும்னு எதிர்பாக்குற?"சற்று எரிச்சல் மண்டியது அவன் குரலில்...



அவன் குரலிலுள்ள எரிச்சலை துள்ளியமாக இனம் கண்டு கொண்டவள் அவன் கையை இழுத்து அதில் போனை வைத்து விட்டு அவ்விடம் விட்டகல தோலை குலுக்கி விட்டு மீண்டும் மொபைலில் பார்வையை பதித்தவனுக்கு ஒரு நிமிடம் கூட தாண்டும் முன்னாள் அவளை சமாதானப்படுத்தாமல் இருக்க முடியாது என மனது அடம்பிடிக்க தொடங்கியது.



பாக்கெட்டில் மொபைலை போட்டவன் அவளை வேண்டுமென்றே உரசிக் கொண்டு வந்து நிற்க அவளோ அவனை திரும்பியும் பார்க்கவில்லை....



கடைக்காரரோ வந்ததிலிருந்து அவனைத்தான் ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.



அவனை எங்கேயோ பார்த்திருப்பது போன்றே இருக்க வாய்விட்டு கேட்க நாடி



"ஏன் தம்பி உங்கள நானு எங்கேயோ பார்த்திருக்கேனுங்க?" மனைவியை சீண்டிக் கொண்டிருந்தவன் சட்டென தன்னிலை அடைந்து



"என்ன எங்கயா பார்த்திருக்க போறீங்க....நா சாதாரண ஆளு"



"இல்ல தம்பி நெசமாத்தான் சொல்றேனுங்க"



"அட விடுங்கய்யா....என்ன போலவே பிஸ்னஸ் பண்ற இன்னொருத்தன் இருக்கான் அவனத்தான் டீ.வீல பாத்திருப்பீங்க"எனவும் சலேரென திரும்பி தன் கணவனை அடப்பாவி என்பது போல் பார்க்க அந்த மாயக் கண்ணனோ அவளை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டினான்.



"அதுவும் சரிதானுங்க"என்று விட்டு அமைதியாகி விட யாவையும் பார்த்துக் கொண்டிருந்த ஆரவ்வின் கண்கள் கலங்கியது.



அவன் மாறிவிட்டானல்லவா.... இல்லையில்லை அவன் நினைத்தது போல் அவனை மாற்றி விட்டாளல்லவா????



அதே துடுக்குத்தனம் நிறைந்த ரிஷி!!!



எவ்வளவு நாள் கனவு அவனது....



கண்களை துடைத்தவன் அரவமேதும் எழுப்பாமல் வந்த சுவடே தெரியாமல் திரும்பிச் சென்றவன் கயலை இறுக்கத் தழுவிக் கொண்டான்.



"மிஸ்டர்.மாறன்"



"சொல்லுங்க மிஸஸ்.மாறன்?"



"கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா?"



"முடியாதுங்க"



"அதான் இவ்வளவு இடம் இருக்குல்ல மிஸ்டர்.மாறன்?"



"எவ்வளவு இடம் இருந்தாலும் உங்க பக்கத்துல நிக்கிற மாறி வராதில்ல மிஸஸ்.மாறன்?" என்றவனை என்னுடையதை எனக்கே திருப்பிப் படிக்கிறாயா என்பது போல் பார்த்து விட்டு



"நல்ல பதில் தான் மிஸ்டர்.மாறன்.... பட் எனக்கு பிடிக்கல" என்றாள் உனக்கு நான் சளைத்தவள் இல்லை என்பது போல்.



அவள் வலையில் அவளே சிக்கிக் கொண்டதை எண்ணி மனதிற்குள் சிரித்தவன் அவளை இலுத்துக் கொண்டு ட்ரையல் ரூம் சென்றவன் அவள் சுதாரிக்கும் முன் அவளிதழ்களை சிறை செய்திருந்தான்.



அதில் அவள் அதிர்ந்து விழிக்க ஒற்றை கண்ணை சிமிட்டி வசீகரமாய் சிரித்துவிட்டு வெளியேற அவளோ இன்னும் அதே நிலையிலேயே நின்று கொண்டிருந்தாள்.



கொஞ்ச நேரம் கழித்து தன்னிலை அடைந்தவளுக்கு அப்போதுதான் தன் வாயாலேயே தனக்குத்தானேதான் ஆப்பு வைத்துக் கொண்டிருந்தது புரிய பின் தலையில் தட்டி சிரித்துக் கொண்டாள்.



மெதுவாக வெளியே வந்தவளின் கண்ணங்கள் அந்திவானமாய் சிவந்திருக்க அதை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவளவன்!!!



மீண்டும் அருகில் வந்து உரசிக் கொண்டு நின்றவன்

"ஏன் பேபி அமைதியாகிட்ட?" என்றவன் அவள் தலைகுனிந்து அமர்ந்திருக்கவும் வாய்விட்டு சிரித்தான்.



அதை கலைப்பது போல் அவளுடைய ஃபோன் சிணுங்க அதை எடுத்துப் பார்த்தவள் அதில் "அண்ணி " என ஒலிர யோசனையுடன் எடுத்து காதில் வைத்து



"சொல்லுங்கண்ணி"

என்றாள்.



மறுமுனையில் அண்ணியின் குரலல்லாது வேறு குரல் ஒலிக்கவும் முகம் விகசிக்க



"அர்ஜூ" என பரவசமானவளைப் பார்த்து நெற்றி சுருக்கினான் ரிஷிகுமார்.



"எப்போடா வந்த?"



"இன்னைக்கு தான்டி"



"அப்பிடியா...அஜய் என்கிட்ட சொல்லவே இல்லயே?"



"நீ எங்க இருக்க?"



"நான் ஷாப்பிங் பண்ணிட்ருக்கேன்டா"



"போ அஷ்வி....நா உன் கூட கோபமா இருக்கேன்"



"அய்யோ செல்லம் சாரிடா....உன் கேர்ள் ப்ரண்டுக்கு சின்ன வேல அதனாலதான் வர முடில" அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ரிஷிக்கு இங்கே புசுபுசுவென ஏறியது.அதை கவணிக்கும் மனநிலையில் அவள் இருந்தாளல்லவா அவனை பார்க்க...



"என் செல்லம்ல....பேசுடா"



"முடியாது போ...நான் பேச மாட்டேன்"



"அர்ஜூ பேசலன்னா உன் கேர்ள் ப்ரண்ட் அழுவால்ல....அவ அழுதா உனக்கு புடிக்குமா?"



"இல்ல புடிக்காது....நான் பேசுவேன்....நீ அழாத" அவன் அழத் தயாராக கெஞ்சி கொஞ்சி தான் நாளை வருவதாக வைப்பதற்குள் அவளுக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது.



போனை அணைத்தவள் அப்போதுதான் தன்னருகில் நின்று கொண்டிருந்த தன் கணவன் இல்லாது போனதை உணர்ந்து சுற்றும் முற்றும் தேட அவனோ சற்று தூரத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து முகம் இறுக போனை நோண்டிக் கொண்டிருந்தான்.



தனக்கு எடுத்ததை பேக் பண்ண சொல்லிவிட்டு அவனருகில் வந்தவளுக்கு அர்ஜுனிடம் பேசியதில் அவன் மீதிருந்த கோபம் சுத்தமாய் விலகிச் சென்றிருந்தது.



"தேவ்" என அழைக்க அவனோ அங்கே ஒருத்தி இருப்பதே தெரியாதது போல் தலையை குனிந்தே இருந்தான்.



"தேவ்"என அவனை உலுக்க என்ன என்பது போல் தலையுயர்த்திப் பார்த்தவனின் கண்களில் தெரிந்த அனலில் சற்று பயந்து தான் போனாள் மங்கையவள்.....



"ஏன் என்னாச்சு தேவ்...எதுக்கு கோபமா இருக்கீங்க?"



"யாருடி அர்ஜூ?"எனவும் தான் அவன் கோபத்திற்கான காரணமே புரிய அந்நேரம் சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டுப் போனாள்.அவனை வம்பிலுக்க எண்ணி



"என் பாய் ப்ரண்ட்....பேரு அர்ஜுன்"எனவும் ஆவேசமாய் எழுந்தவன் அவள் தோல்களை பற்றி



"வாட்...என்னடி சொன்ன பாய் ப்ரண்டா...அப்போ நா யாரு?"என சீற அவன் கொடுத்த அழுத்தத்தில் வலியில் முகத்தை சுருக்கி



"விடுங்க தேவ் வலிக்குது"எனவும் அவளை உதறித் தள்ளியவன் விருட்டென வெளியேறி விட்டான்.

அவன் ஒரு தடவை பட்ட வலியில் பெண்கள் விஷயம் என்றாலே உடனே இறுகிப் போகத் துவங்கி இருந்தது மனது... இதில் மனைவி வம்பிலுத்தது தெரியாமல் உதறித் தள்ளி விட்டான்..

கயலிடமும் விஷயத்தை சொன்னவள் அவனுக்கும் தானே ஆடை எடுத்துக் கொண்டு வெளியே வர அவன் அவளுக்காக காரில் காத்திருந்தான்.



எதுவும் பேசத் தோன்றாமல் முன்னால் ஏறிக் கொள்ளவும் சீறிக் கிளம்பியது ரிஷியின் ரால்ஸ் ராய்ஸ்.....







இரவு......



அவளை விட்டுவிட்டு கிளம்பியவன் தான் அதன்பிறகு அவன் வீட்டிற்கே வரவில்லை



போனும் சுவிட்ச் ஆப் என்று வர ஒழுங்காக சொல்லாத தன் மடத்தனத்தை எண்ணி தலையிலடித்துக் கொண்ட அதேநேரம் அவனை நினைக்க சிரிப்புத் தான் வந்தது.



இரவு பதினோரு மணிக்கு தள்ளாடியபடி வந்தவனை பார்த்து அதிர்ந்து தான் போனாள் அவள்....



அவன் விழப்போக ஓடிச் சென்று தாங்கிக் கொண்டவளுக்கு அவனிடமிருந்து வந்த மது வாடையில் குமட்டிக் கொண்டு வந்தது.



இதற்கு எல்லாம் தானே காரணமாகிப் போனோமே என்றதில் அதையும் பொறுத்துக் கொண்டு அவனை பிடித்திருக்க அவனோ ஆவேசமாக அவள் கைகளை பிடித்து தட்டி விட்டான்.



"விடு...டி....போ...என் கண் முன்னாடி நிக்காத போய்டு"



"தேவ்....அவன் நீங்க நெனக்கிற மாறி..."



"பேசாதடி.... கொன்னுடுவேன்.... இங்கே வலிக்குது தெரியுமாடி" என்றவன் தன் இதயத்தை ஒற்றை விரலால் தொட்டுக் காட்டிய படியே ஹால் சோஃபாவில் தொப்பென விழுந்து உறங்கி விட்டான்.



காலை....



தலையை பிடித்துக் கொண்டே எழுந்தவனின் முன்னால் அமர்ந்த வாக்கிலேயே அவள் உறங்கியிருப்பது கண்டு போதை தெளிந்தும் தெளியாமலும் கண்களை இறுக்க மூடித் திறந்தவனுக்கு தான் எப்படி இங்கே என்ற கேள்வியே மண்டையை குடைந்து கொண்டிருந்தது.



நேற்றிரவு பாருக்குள் நுழைந்தது வரை மட்டுமே ஞாபகம் இருக்க வெகுவாக குழம்பிப் போனான் அவளவன்!!!



அவன் ரூமிற்கு செல்ல எழுந்து கொள்ள விழிப்புத் தட்டியது அவளுக்கு...



போகும் அவன் கையை எட்டிப் பிடித்து தடுத்தவள்



"தேவ்...நா சொல்றத மொதல்ல கே..."



"ப்ச்.....உன்கிட்ட பேசவே எனக்கு பிடிக்கல...மரியாதயா கைய விடு"



"நீங்க நெறக்கிற மாறி அவனுக்கு..."



"விடுடி..."என்றவன் அவளை தள்ளிவிட்டு இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறிச் சென்று விட அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.



மேலிருந்து அணைத்தையும் பார்த்திருந்த ஆரவ் கீழிறங்கி வந்து அவளை கை பிடித்து எழுப்பி விட அவனை கட்டிப் பிடித்தே அழுது விட்டாள்.



அவள் தலையை ஆதரவாக தடவியவன்



"என்னாச்சு அஷ்வி?"எனவும் நேற்று நடந்ததனைத்தையும் அழுகையினூடே சொல்லி முடிக்க வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான் ஆரவ்.



அவன் சிரிக்கவும் அவளும் அழுது கொண்டே சிரிக்க



"ஆனாலும் நீ ரொம்ம்ம்ப பாவம்டி"



"போடா கிழவா"என்றவள் அவன் அடிக்கும் ஓடி விட்டாள்.



அவள் அறைக்குள் நுழைய அவன் அப்போதுதான் டையை கையில் எடுத்துக் கொண்டிருந்தான்.



அவனருகில் சென்றவள் வம்படியாய் டையின் இரு பக்கத்தையும் இரண்டு கைகளிலும் பிடித்து தன்னை நோக்கி இழுக்க அவன் முகம் அவள் முகத்தின் வெகு அருகில் வந்து நிற்கவும் உண்மையில் சற்று தடுமாறித்தான் போனான் அவன்....



"தேவ்..."என அவள் ஆரம்பிக்கவும் தன்னிலையை இழுத்துப் பிடித்தவன் நகர முயற்சிக்க அவளோ அவனை விடாது டையை அவள் கைகளுக்குள் இறுக்கி இருந்தாள்.



"என்ன பன்ற அஷ்வினி...விடு"



"நா சொல்றத கொஞ்சம் கேளுங்க தேவ்...ப்ளீஸ்"



"முடியாது....நீ முதல்ல விடு"



"அய்யோ தேவ்"



"ப்ச்....விடுடி...."



"டேய் கோஞ்சம் இருடா....நானும் பாத்துட்டே இருக்கேன்....என்ன சொல்ல வர்றேன்னு கூட கேக்காம அடம் புடிச்சிட்டு இருக்க....அவன் அஜய்யோட பையன்டா....வயசு ஆறு..."



"வாட்?"



"பின்ன...நா சொல்ல வந்தத சொல்ல விட்டியா....இதுக்கு போய் குடிச்சிட்டு வந்திருக்க..... கமாண்டர்.... போடா..."என்றவள் அவனை தள்ளி விட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொள்ள தலையில் அடித்துக் கொண்டான் ரிஷிகுமார்....

அவள் குளித்து முடித்து வெளியே வர அவளை பின்னாலிருந்து அணைத்து கழுத்தில் முகம் புதைத்தான் ரிஷி....



அதில் அவள் உடம்பு சிலிர்க்க அவனை தள்ளி விட்டவள் கோபமாய் அங்கிருந்து செல்ல அவள் கைகளை பிடித்து இழுத்தான்.



அவன் இழுத்ததில் அவன் மீதே வந்து மோதியவளின் கழுத்தில் தன் கைகளை மாலையாய் கோர்த்தவன்



"சாரி பேபி....இனிமே குடிக்க மாட்டேன்" எனவும் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் பார்வையில் குற்றம் சாட்டுவது இருக்க



"நீ அப்பிடி சொன்னா நா என்னன்னுடி நெனக்கிறது?"



"...."



"கொஞ்சமாத்தான்டி குடிச்சேன்"



"கொஞ்சமா....நீங்க..... எங்க நேத்து என்ன நடந்துதுன்னு சொல்லுங்க பாப்போம்"



"அது...அது..."



"இது தான் நீங்க கொஞ்சம் குடிச்ச லட்சணம்"



"சாரிடி"



"விடுங்க என்ன"என்றவள் அவன் கைகளை தட்டி விட்டு நடக்க



"ஓய்..."என கத்தினான்.அதில் சட்டென நின்று என்ன என்பது போல் திரும்பிப் பார்க்க தன் கையிலிருந்த பட்டனை பிய்த்து எடுத்தவன்



"பட்டன் கழண்டுடுச்சு....தச்சு கொடுடி"எனவும் அவனை பார்த்து முறைத்தாள்.



"வந்து சீக்கிரம் தச்சு கொடு பேபி... இன்னைக்கு ஆபீஸ்ல முக்கியமான வேல இருக்குடி" எனவும் பல்லை கடித்தவள் ஊசியையும் நூலையும் தேடி எடுத்துக் கொண்டு அவனிடம் வர அவன் அவளிடம் பட்டனை நீட்டினான் சிரிப்புடன்....



அவள் காரியமே கண்ணாக தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்க அவனோ அவள் முகத்தை வருடுவதும் இதழ்களை வடுடுவதுமாக இருக்க அவள் அவஸ்தையில் நெளியத் தொடங்கினாள்.



"ப்ச்...கொஞ்சம் சும்மா இருங்க மாறன்"



"முடியாதுடி பொண்டாட்டி"



"அப்போ நா போயிடுவேன்"



"போ"எனவும் விலகப் பார்த்தவளுக்கு ஒரு இஞ்ச் கூட நகரமுடியாமல் போகவே முறைப்புடன் திரும்பவும் தைக்கத் தொடங்கினாள்.



"ஏன்டி உனக்கு இப்போல்லாம் இவ்வளவு கோபம் வருது?"



"உங்க கூடவே இருக்கேன்ல அதான்" எனவும் அவள் தலையில் செல்லமாக கொட்டினான்.



"ஆ...வலிக்குதுடா கமாண்டர்...தடவி விடு"எனவும் சிரித்துக் கொண்டே தடவியவன்



"என்ன பாத்தாலே உச்சா போரானுங்க... நீ என்னடி கொஞ்சம் கூட பயமே இல்லாம இருக்க?"



"அவங்க எல்லாம் யாரோ...சோ.... பயப்பட்றாங்க...நான்தான் உங்க பொண்டாட்டியாச்சே.... உங்களப்போலதானே நானும் இருப்பேன்"என்றவள் தைத்து முடித்து விலகப் போக அவள் இடையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவள் இதழ்களில் கவி பாடத் தொடங்கினான்.



தொடரும்.......



20-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 30 ❤



"தேவ்.."

"என்னடி?"

"நா அம்மா வீட்டுக்கு பொய்ட்டு வரட்டுமா?"

"எப்போ திரும்பி வருவ?"

"அது நா இன்னக்கு ஈவ்னிங்குள்ள வந்துட்றேன்"

"...."

"ப்ளீஸ் தேவ்....அர்ஜூ கிட்ட வர்றேன்னு சொல்லி இருக்கேன்"

"சரி போ" என்று விடவும் அந்த பதிலில் ஏனோ அவளால் நகரக்கூட முடியாமல் போக அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவன் வேறெங்கோ பார்வையை பதித்திருக்க அவனை தன்னை நோக்கி திருப்பியவள்

"சிரிச்சிட்டே சொல்லுங்க தேவ்"

"ஈ...போதுமா....போ"

"இல்ல நா போகல"என அவனைத்தாண்டிச் சென்றவளின் கையை பிடித்து தடுத்தான்.

"ஏன் போகல?"

"நா அங்க போறதுல உங்களுக்கு விருப்பம் இல்லன்னு உங்க முகமே காட்டிக் குடுக்குது"

"...."

"அதனால போகல"

"போன்னுதானேடி சொல்றேன்"

"அத சிரிச்சிக்கிட்டே சொல்லுங்க" என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கூறியவளை பார்த்து உண்மையில் இப்போது அவனுக்கு சிரிப்பு வர அவனுடைய அக்மார்க் வசீகர சிரிப்பை உதிர்த்தவன்

"போடா...எனக்கு கோபமில்லை...பட் ஈவ்னிங் வந்துடு"எனவும் தான் அவள் முகம் பிரகாசமானது.



அவனை இறுக்க கட்டிக் கொண்டு அவன் நெஞ்சில் வாகாய் சாய்ந்து கொள்ள அவனும் அவள் தலையை தடவிக் கொடுத்தான்.



.......



அவனிடம் விடைப் பெற்று கயலிடம் வந்தவள் அவளையும் தன்னோடு அழைக்க அவள் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லவும்



"அப்போ சரி.... நா ஆபிஸ் போயி அபிக்கு இன்விடேஷன் குடுத்துட்டு அங்கே நிக்கிறேன்....நீ வேலய முடிச்சிட்டு அங்க வா...அப்போ நேரம் சரியா இருக்கும்"எனவும் கயலும் அதற்கு உடன்பட கிளம்பி விட்டாள்.



***



"ஹாய் அபி"

"ஹாய்டி....வா உக்காரு....உன்ன பாத்து ரொம்ப நாளாச்சு தெரியுமா?"

"அதான் இப்போ பாத்துட்டியே"

"உன்ன....சரி என்ன இந்த பக்கம்.... லீவ்லதானே இருக்க?"

"ஆமாடி....பட் உனக்காகத்தான் வந்தேன்"

"எனக்காகவா?"

"ம்..."என்றவள் தன் கையிலிருந்த கார்டை நீட்ட அதை வாங்கிப் படித்தவள்

"கங்ராட்ஸ்டி" எனவும் மெலிதாக சிரித்தாள் பெண்.

"இதையும் நம்ம ப்ரண்ட்ஸுங்க கிட்ட குடுத்துடுடி....என்னால அங்க வர முடியாது"

"சரிடி...."

"அப்பறம் எப்பிடி இருக்காங்க அம்மா...?"

"ஒரு இம்ப்ரூவும் இல்ல....இன்னும் அதே நிலைலதான் இருக்காங்க"

என்றவளுக்கு தன் தாயை நினைத்து கண்கள் கலங்க எழுந்து சென்று ஆதராவாய் அவளை அணைத்துக் கொண்டாள் அஷ்வினி.

"எல்லாம் சரி ஆயிடும்டி கவலப்படாம கடவுள் மேல நம்பிக்க வை"

கொஞ்ச நேரத்தில் தன்னை சமப்படுத்திக் கொண்டு கண்களை துடைத்தவள் வேறு பேச்சில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.



........



"அண்ணா...."

என்றபடியே உள்ளே நுழைந்த கயலை ஆச்சரியமாய் பார்த்தான் வருண்....

இருக்காதா பின்னே...இதுவரை இரண்டொரு வார்த்தைகள் மட்டுமே பேசியிருந்தவள் இன்று ஆபீஸ் வரை வந்திருக்கிறாளே...

ஏனோ அஷ்வினியிடம் இருக்கும் ஒட்டுதல் இவளிடம் இப்பொழுது வரை அவனுக்கு வரவே இல்லை...

அதற்கென்று அவள் மீது கோபமெல்லாம் எதுவுமில்லை.... என்றாலும் இதுநாள்வரை ஏதோ ஒரு தடை இருந்து கொண்டே இருந்தது.

அவளை தனக்கு தெரியாது என்றதில் வந்த குற்ற உணர்ச்சியாகக் கூட இருக்கலாம்.....

ஏதோ ஒன்று....எனினும் தானே சென்று பேசியிருக்க வேண்டுமோ என வருந்தத் தொடங்கினான்.

"வாம்மா...."எனவும் அவள் அவனின் முன் இருக்கையில் வந்தமர அவளைப் பார்த்து ஸ்நேகமாய் சிரித்தான்.

அவனை பார்த்து தானும் சிரித்தவள்

"எப்பிடிண்ணா இருக்கீங்க?" எனவும் அவனுக்கு அவள் பாசத்தில் தொண்டை அடைத்தது.

"நல்லா இருக்கேம்மா...நீ எப்படி இருக்க?"

"ரொம்ப சந்தோஷமா இருக்கேண்ணா"

"ஏன் திடீர்னு?"

"ஓ...அதுவா.... அஷ்வி அபி அக்காக்கு இன்விடேஷன் குடுத்துட்டு போக வந்தாங்க.... என்ன இங்கேயே வந்து பிக் அப் பண்ணிக்க சொன்னா... அதான் உங்கள பாத்துட்டு போலாமேன்னு வந்தேண்ணா"

"ஐ அம் சாரி கயல்...."

"எதுக்குணா?"

"இல்லமா....ஒரு அண்ணனா என்னோட பொறுப்புல இருந்து தவறிட்டேன்"

"அப்பிடியெல்லாம் எதுவுமே இல்லணா....நானும் உங்க கிட்ட வந்து பேசி இருக்கனும்.... ஏதோ ஒரு தயக்கம்.... ஏன்னு தெரியலணா....பட் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துது" என்றவள் கண் கலங்க கீழே குனிந்து கொள்ள எழுந்து அவளிடம் வந்தவன் அவளை ஆதரவாக அணைத்துக் கொள்ள பாரம் நீங்கியவளாய் தானும் சாய்ந்து கொண்டாள் அந்தத் தங்கை....

தலையை வருடிக் கொடுத்தவன் அவள் உச்சந்தலையில் முத்தமிடமுவும் அஷ்வினி உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"ஆஹா....ஆஹா....பாசமலர் நாடகம் அரங்கேறுகிறதே!" என நீட்டி முழக்கவும்

"நீ போடி....உனக்கு எப்போ பாரு பொறாமை தான்...."

"எனக்கு....அதுவும் உங்க ரெண்டு பேரையும் பாத்து... ஹா...ஹா...குட் ஜோக்"

"ரிக்ஷி நீ ஏன்டி இப்பிடி பொறந்திருக்க?"

"ஏன் ஏன் எனக்கு என்ன?"

"என் தங்கச்சி எங்க நீ எங்க?"

"ம்....உன் தங்கச்சி உன் பக்கத்துல நா வாசல்ல"எனவும் கலகலத்து சிரிக்கவும் கயலும் பக்கென சிரித்து விட்டாள்.

"உன்ன..."என அவள் காதை பிடிக்க

"ஆ...ஆ...வலிக்குது விடுங்க வருண் சார்"

"முடியாது"

"ப்ளீஸ்ணா"என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்சவும் அப்படியே உருகிப் போயிற்று அவனுக்கு....

சட்டென விட்டவன் பதறியபடி

"ரொம்ப வலிக்குதாமா?"எனவும் அவன் கைகளுக்கு அகப்படாமல் சற்று தள்ளி நின்றவள் அவனைப் பார்த்து சிரிக்க அவள் நடித்திருக்கிறாள் என்பது புரியவும் அவளை முறைத்து அது முடியாமல் போகவும் சிரித்து விட்டான்.

"சரியான வாலு" என்றவனின் மனம் அக்கா தங்கை இருவருக்குள்ளும் இருக்கும் வேறுபாட்டை எண்ணி சிரித்துக் கொண்டது.

"வருண் சார் நாங்க கெளம்புறோம்...."

என்றவள் அவனிடம் விடைப் பெற்றுச் செல்ல சிரித்துக் கொண்டவன் சந்தோஷ மனநிலையில் தன்னிடத்திற்குச் சென்றான்.



இராமநாதபுரம்......



"அர்ஜூ குட்டி"என கத்தியபடியே உள்ளே நுழைந்த தன் தங்கையை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் அஜய்.....

இவன் பிறந்ததிலிருந்து இதே மாதிரிதான் பண்ணிக் கொண்டிருக்கிறாள்.

என்ன வயது ஏறியது மட்டுமே வித்தியாசம்.... மற்றபடி அவள் செய்கையில் எந்த ஒரு மாற்றமுமே இல்லை....

கத்திக் கொண்டே தான் உள்ளே வருவாள்.... அம்மாவும் கண்டித்தாகி விட்டது உருப்படும் வழியைத்தான் காணோம்......

"அர்ஜூ...அர்ஜூ" அக்கா தங்கை இருவரும் மாறி மாறி அவன் பெயரை ஏலம் விட மேலே இருந்தவன் சத்தம் கேட்டு படிகளில் தடதடவென இறங்கி ஓடிவந்து அஷ்வினியின் கழுத்தை பாய்ந்து கட்டிக் கொள்ள அவளும் அவனை தூக்கி ஒரு சுற்று சுற்றினாள்.

கயல் வா என்பது போல் கையை நீட்ட அவளிடம் தாவியவன் கொஞ்ச நேரம் இருந்து விட்டு மீண்டும் அவனுடைய கேர்ள் ப்ரண்டிடமே போய்விட்டான்.

இது எப்பொழுதும் நடக்கும் ஒன்றுதான் ஆகையால் கயலும் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை....

இருவரும் ஒரு சேர தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களையும் சாக்லேடையும் கொடுக்க சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான் அஷ்வினியின் பாய் ப்ரண்ட்....

அதை பார்த்து சிரித்தவள் கயலுடன் அவனையும் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்று விட அப்போதுதான் கொயிலுக்கு சென்றுவிட்டு உள்ளே நுழைந்த விஜயலக்ஷ்மியும் ஈஷ்வரியும் மொட்டை மாடியில் கத்தும் சத்தம் கேட்கவும் யார் வந்திருப்பார்கள் என யூகித்து விட்டு சிரித்தவாறே அவர்களுக்கு ஜூஸ் தயாரிக்கச் சென்றனர்.

அதன்பிறகு பட்டம் விட்டு அடுத்த வீட்டு நாய்க்கு கல்லெறிந்து படம் பார்த்து அவனுக்காக சலிப்புடன் கார்டூன் பார்த்து என்று நேரம் போனதே தெரியாமல் கொட்டமடித்துக் கொண்டு இருந்தவர்களுக்கு இருள் கவ்வத் தொடங்கியது கூட மனதில் பதியவில்லை....

இருவரும் மொபைலை காரிலேயே மறந்து வைத்துவிட்டு வந்திருக்க அது சிணுங்கி சிணுங்கி ஓய்ந்து போனதுதான் மிச்சம்.



ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்.....



"கதிர்...."

"சொல்லுங்க சார்?"

"அந்த ப்ராஜக்ட் விஷயம் என்னாச்சு?"

"எல்லாம் ஓகே சார்....வர்ற சனிக்கிழமை டில்லி போகனும்"

"ஏற்பாடு பண்ணிட்டல்ல?"

"ஆமா சார்....எல்லாம் கரெக்ட்டா முடிச்சுட்டேன்...."

"ம்...ஓகே...அப்பறம் அந்த ஹரிஷோட நிலம என்னாச்சு?"

"இன்னும் மயங்கியேதான் இருக்கான் சார்"

"அந்த பூத் விஷயத்த கண்டு புடிச்சீங்களா?"

"நோ சார்.... அதுக்கப்பறம் அதுல இருந்து கால் போயும் இல்ல வந்தும் இல்ல சார்"

"இட்ஸ் ஓகே லீவ் இட்.... எல்லோருக்கும் இன்விடேஷன் குடுத்துட்டல்ல?"

"ம்... எஸ் சார்"

"இன்னைக்கு ஏதாவது மீட்டிங் இருக்கா?"

"நோ சார் நீங்க எல்லா மீட்டிங்ஸையும் கேன்ஸல் பண்ண சொன்னதால நீங்க டில்லி பொய்ட்டு வந்ததுமே வெச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க சார்"

"சரி நீ போ" என்றவனுக்கு டில்லி ப்ராஜக்ட் குறித்து மனதில் ஏதோ நெருடலாகவே இருந்தது.

அவர்களும் பல வருடமாக அவனுடன் பிஸ்னஸ் செய்பவர்கள் தான்...எனினும் ஏனோ மனது அலைபாய்ந்து கொண்டே இருந்தது.

கல்யாணம் ஆனதிலிருந்து அவளை பிரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டதே இல்லையாதலால் முதல் பிரிவு அவனுக்குமே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது.

இந்த விஷயத்தை இன்னும் அவளிடம் கூறவில்லை....

கூறினால் அழுது ஓய்ந்து போவாள் என்பது தெரிந்தே அமைதி காத்தான்.

நாளை ரிசப்ஷன் வேறு...

ஏதேதோ எண்ணங்களில் உழன்றவன் அஷ்வினிக்கு கால் செய்ய அவள் தூக்காததால் கடுப்பாகிப் போனான்.

வேலையெல்லாம் முடித்து விட்டு இரவு எட்டைத்தாண்டி இருக்க வீட்டிற்கு வந்திருப்பாள் என உற்சாகமாக வந்தவனுக்கு அவளில்லாது போனது ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஒரு சேர விதைத்தது.



காலை......



அவன் போகுமிடமெல்லாமே அவன் பின்னாலேயே தொடர்ந்தது அவள் பார்வை....

அதை அவன் சட்டை செய்யாதது அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல தன்னை பார்க்க மாட்டானா என ஏங்கியது மனது!!!

நேற்று இரவு வந்து சேர இரவு பதினோரு மணியாகிவிட்டது.

என்ன சொல்வானோ என்ன சொல்வானோ என பதைபதைப்புடன் நுழைந்தவளுக்கு அவன் அமைதி அவள் இதயத்தை குத்திக் கிழித்தது.

அவனிடம் பேச முயற்சிக்கலாமென்று பார்த்தால்.... ஊஹூம் அவன் அதற்கு அசைந்து கொடுப்பதாகவே தெரியவில்லை....

யாருடனோ வேண்டுமென்றே காலில் பேசிக்கொண்டு இருந்தான்.

அதன்பிறகு அங்கு ஒருத்தி நிற்கிறாள் என்பதே கண்ணுக்கு தெரியாதது போல முகம் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு சடுதியில் உறங்கியும் போனான்.

சரி காலை எழுந்ததும் பேசலாமென்று பார்த்தால் ராத்திரியை விட நிலைமை மோசமாகி இருக்க அவன் பார்வைக்காகவே தவம் கிடப்பது போல் அவனையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தாள் பெண்.

காலை எட்டு மணிக்கு ரிசப்ஷன் ஏற்பாடு செய்திருக்கும் ஹோட்டலுக்கு வேறு போக வேண்டும்....

இப்போதே மணி ஏழைத் தாண்டியிருக்க அவன் தயாராகியும் அவன் பேசும் வரை காத்துக கொண்டிருந்தாள் காரிகை!!!

ஏழரையை தாண்டியும் அவள் அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.

கயலும் ஆரவ்வும் வேறு மூன்று தடவை வந்து அழைத்து விட்டு போய்விட்டார்கள்.

இருந்தும் அழைக்க வேண்டியன் அழைத்தாலல்லவா மனது நிம்மதியாகும்...

அவனோ சோஃபாவில் காலுக்கு மேல் கால் போட்டு தோரணையாய் அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

"இப்போ கொஞ்ச நாளா அவன கெஞ்ச வெச்சதுக்காக பழிவாங்கிட்ருக்கான் பாவி" என அர்ச்சனை வேறு நடந்து கொண்டிருந்தது வேறு கதை....

மணி ஏழு ஐம்பது.... ஊஹூம் இதற்கு மேல் முடியாது என தோன்றிவிடவே எழுந்து ரெடியாகச் சென்று விட்டாள்.



ரிசப்ஷன் ஹால்......

அந்த ஹோட்டலின் பின் புறமே வண்ண வண்ண விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டு ஜெகஜ்ஜோதியாய் மிண்ணிக் கொண்டிருந்தது.

ஸ்டேஜின் வலப்புறம் ஆரவ் கயல் தம்பதியினரும் இடது புறம் தேவ் அஷ்வினி தம்பதியினரும் நின்று கொண்டிருந்தனர்.

என்ன ஒரே ஒரு வித்தியாசம்!!!

ஒரு தம்பதி கண்ணாலேயே அடுத்தவர்களை பருகிக் கொண்டிருக்க இன்னோரு தம்பதியில் ஒருத்தி மட்டும் தன்னவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"தேவ்"

"...."

"தேவ்"

"...."

"ப்ளீஸ் தேவ்"

"...."

"தே....வ்"

"...."

"நானும் கெளம்பலாம்னு தான் இருந்தேன் தேவ்... பட் அர்ஜூ என்ன விடவே இல்லை.... என்னால அவன் அழுகுறது பாத்துட்டு விட்டுட்டு வரவும் முடில"

"...."

"மோபைல கார்லயே மறந்து வெச்சிட்டு வந்துட்டேன் தேவ்.... சாரி"

"...."

"நீங்க கால் பண்ணியிருப்பீங்கன்னு எனக்கு தெரியும் பட் அந்த நேரத்துல எதுவுமே தோனல தேவ்"

"...."

"தேவ்..."என மறுபடி சிணுங்க அவளை திரும்பிப் பார்த்தான்.

அதில் அவள் முகம் மலர்ந்து போக தலை குனிந்து

"சாரி..."என்றுவிட்டு நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் அவளை கண்டு கொள்ளாது யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தது புரிய இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரகரவென கொட்டத் தொடங்கி விட்டது.

பேசி முடித்து திரும்பியவனின் கண்களில் அது தவராது பட்டு விட அவளை அணைத்து ஆறுதல் கொடுக்க பரபரத்த கைகளை அடக்குவதற்குள் பெரும் பாடு பட்டுப் போனான் அந்த ஆறடி ஆண்மகன்!!!!

அடுத்தவர் கண்களுக்கு பட்டால் தப்பாக எண்ணக் கூடும் என நினைத்தவள் அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டாள்.

ஆபீஸிலுள்ள அணைவருக்குமே இப்போதுதான் தங்கள் எம்.டி பணிந்து போனதற்கான காரணமே தெரிய வந்தது.

அதிலும் மதிக்கு சொல்லவே வேண்டாம் அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வராத குறை தான்.....

என்றாலும் அஷ்வினியை நினைத்து அவளையும் மீறி சிறு புன்னகை உதயமாகத்தான் செய்தது.

அவளின் எம்.டிக்கு அஷ்வினி துணையாகக் கிடைத்ததில் அவளுக்கு பரம சந்தோஷம்....

"இவரை மாத்த இவங்க தான் சரிபட்டு வருவாங்க"என நினைத்தவள் சந்தோஷமாகவே வளைய வந்தாள்.

"ஆரு அக்காவுக்கும் அத்தானுக்கும் ஏதோ பிரச்சின போலடா"

"ஏன்டி?"

"அக்கா அழுதுட்டு கண்ண தொடக்கிறத நா பாத்தேன்"

"இரு நா போய் என்னன்னு கேட்டுட்டு வந்துட்றேன்"

"வேணாம் ஆரு....அவங்க பாத்துப்பாங்க நீ இங்கேயே இரு"

"பட்?"

"இருன்னு சொல்றேல்ல"

"ஹூம்...ஓகே"

என்றவன் தோலை குழுக்கிவிட்டு அமைதியாகிவிட்டான்.

குனிந்த தலை நிமிராமல் இருப்பவளையே கூர்ந்து பார்த்தவன் அவள் நிமிர சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான்.

அதை கண்டு கொண்டவளின் உதட்டில் புன்னகை தவழ அவனை இடித்துக் கொண்டு நின்றாள்.

அப்போது தான் மேடையேறிய ரவிச்சந்திரனிடம் பேசிக் கொண்டிருந்தவன் அவள் திடீரென இடிக்கவும் சற்றே தடுமாறி சுதாரித்து நின்று விட்டு அவளை திரும்பி முறைத்தான்.

அதை ஏற்கனவே எதிர்பார்த்தவள் போல் கவனமாக அவனைத் தவிர்த்து பார்வையை தன் நண்பிகளின் பக்கம் திருப்பினாள்.

வீடு வரும் வரை இதுவே தொடர அவன் தான் பெரும் அவஸ்தைக்கு ஆளாக நேர்ந்தது.

அவள் ப்ரஷப்பாகிவிட்டு வருமுன்னே அவன் ப்ரஷப்பாகிவிட்டு வந்து கட்டிலில் தூங்குவது போல் கண்ணை மூடி நடிக்க சோபாவை விடுத்து கட்டிலுக்கு சென்றவள் அவன் நெஞ்சில் தலை சாய்த்து படுக்க சடுதியில் உறங்கியும் போனாள்.

அவள் மூச்சுக்காற்று சீறாக வருவதை உறுதி செய்தவன் மெதுவாக கண்களை திறந்து அவளை ரசித்துப் பார்த்தான்.

தூக்கத்திலும் அவள் உதட்டில் புன்னகை உறைந்திருந்ததை பார்த்து அவனுக்கும் புன்னகை வந்தது.

"சரியான இம்சடி நீ" என முணுமுணுத்தவன் அவள் முகத்தையே காதலாய் பார்த்துக் கொண்டிருந்தான்.



காலை......



அன்று வெள்ளிக்கிழமையாதலால் நாளை செல்வதற்குரிய ஏற்பாடுகள் அவனுக்கு நிறைய இருக்க அசதியில் தூங்கிக் கொண்டிருக்கும் தன் மனையாளின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு எழ அவளோ அவன் டி-ஷர்ட்டை இறுக்கப் பிடித்திருந்தாள்.

அதில் வழமை போல் புன்னகைத்தவன் அதை எடுத்து வைத்துவிட்டு குளியலறை நோக்கிச் சென்றான்.

அவளை எழுப்ப மனமில்லாமல் கிளம்பிச் சென்றுவிட்டான்.

காலை பத்து மணிக்கு பின்னரே விழுப்புத் தட்டியது அவளுக்கு....

அவ்வளவு நேரம் தூங்கியும் உடல் அசதியாய் உணர பசி வயிற்றை கிள்ளியும் கண்மூடி படுத்திருந்தாள்.

கயல் வந்து சாப்பிட அழைத்து விட்டு போகவும் கஷ்டப்பட்டு எழுந்து தன்னை சுத்தப்படுத்தி விட்டு கீழிறங்கிச் சென்றாள்.

அங்கு ஏற்கனவே ஆரவ்வும் கயலும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க தானும் அமர்ந்தவள் சாப்பாட்டை பிய்த்து ஒரு வாய் வைத்திருக்க மாட்டாள்.... குமட்டிக் கொண்டு வர அருகிலிருந்த வாஷிங் பேஷன் அருகே ஓடியவள் குடல் வெளியே வந்து விழுமளவு அணைத்தையுமே கொட்ட பதறி அருகில் ஓடி வந்த ஆரவ்வின் கைகளிலேயே மயங்கிச் சரிந்தாள்.

.......

மெதுவாக விழிப்புத் தட்ட கண்களை திறந்து சாய்வாக அமர்ந்து கொண்டவளை இறுக்கத் தழுவி அவள் கண்ணத்தில் முத்தமிட்டாள் கயல்....

எதற்கென்று தெரியாத போதும் அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் அவளையும் தொற்றிக் கொள்ள புன்னகைத்தவள்

"ஏன் கயல் என்னாச்சு?"எனவும்

"உன்னப் போலவே ஒரு குட்டி ராட்சஸி வரப்போறா.... ஒன்னயே இந்த உலகம் தாங்காது இதுல இன்னொன்னா" டாக்டரிடம் பேசிவிட்டு அவளுக்கு பதில் கூறியவாறே உள்ளே நுழைந்தான் ஆரவ்.

அவன் சொன்ன செய்தியில் கண்கள் ஆனந்த அதிர்ச்சியில் விரிய அவள் முகமும் சந்தோஷத்தில் விகசித்தது.

"கங்க்ராட்ஸ் அஷ்வி"என கயல் மீண்டும் தழுவிக் கொள்ளவும் தன்னிலை அடைந்தவள் அவளை தானும் அணைத்து விடுவித்து விட்டு அருகிலிருந்த தலையணையை எடுத்து ஆரவ்விற்கு விசிறி அடித்தாள்.

அதை லாவகமாக கேட்ச் பிடித்தவன்

"அம்மு நா சொன்னதுல என்ன தப்பு இருக்கு சொல்லு?" தன் மனைவியையும் துணைக்கு அழைக்க அவளும் இரக்கமே இல்லாமல் அவனுடன் சேர்ந்து அவளை கலாய்த்து தள்ளி விட்டனர்.



இரவு.....



கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனை வெற்று அறையே வரவேற்க சட்டென கோபம் மூண்டது அவனுள்....

சுற்றும் முற்றும் பார்வையை அலசிக் கொண்டிருந்தவனின் கண்கள் திடுமென கட்டப்பட கோபத்தில் இருந்தவனின் முகம் அடுத்த நிமிடம் கனிவை தத்தெடுத்துக் கொண்டது.

அவனை கைபிடித்து அழைத்துச் சென்றவள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த பால்கனியின் நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த பெரிய ஓவியத்தின் முன்னால் கொணர்ந்து நிற்க வைத்தாள்.

அவன் கண்களில் கட்டப்பட்டிருந்த கருப்புத் துணியை அவிழ்க்க அவன் பார்வை நேரே அவனுக்கு முன்னால் இருந்த ஓவியத்தில் பதிந்தது.

கோர்ட் சூட்டுடன் மனைவியை அணைத்தபடி கண்களில் காதலுடன் இவன் நின்றிருக்க அவளோ அவனுக்கு பிடித்த ஆகாய வண்ணச் சேலையில் கையில் பூக்குவியலாய் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையுடன் நின்றிருந்தாள்.

கண்கள் அவளைப்போலவே ஆனந்த அதிர்ச்சியில் விரிய திரும்பி மனைவியை கேள்வியாய் பார்த்தவனின் கேள்வியை புரிந்து கொண்டவள் போல் ஆம் என்பது போல் கண்களை மூடித் திறந்த அடுத்த நொடி அவன் இறுகிய கையணைப்பில் இருந்தாள் அவனவள்!!!

அவள் முகமெங்கும் முத்த மழை பொழிந்தவன் "தேங்க்ஸ்டி....ரொம்ப தேங்க்ஸ்" என்றவனின் கண்கள் அவனையும் மீறி கலங்கத்தான் செய்தது.

அவன் அணைப்பில் பாந்தமாக அடங்கி இருந்தவளின் மனதில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.





சென்னை விமான நிலையம்......



தன் அணைப்பில் இருந்து கொண்டு அழுது வடிந்து கொண்டிருப்பவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் விழி பிதுங்கிப் போய் நின்றிருந்தான் ரிஷி.

நேற்றிரவு டில்லி செல்வதாக கூரியதிலிருந்து இப்படித்தான் இருக்கிறாள்.

தன்னிலையை எவ்வளவு விளக்கிக் கூறியும் அதை ஏற்க மறுத்து அழுதுகொண்டே தான் இருக்கிறாள்.

என்ன செய்வதென்று புரியாமல் ஆரவ்வை பாவமாகப் பார்க்க அவள் அருகில் வந்தவன்

"ஓய் ராட்சஸி.... இன்னும் கொஞ்ச நாள் தானேடி.... உன் டேம கொஞ்சம் மூடினேன்னா எங்களுக்கும் உதவியா இருக்கும்" என்றவனின் பேச்சு அவள் காதில் விழுந்தால்தானே.....

ப்ளைட்டுக்கு டைமாகவும் வேறு வழியில்லாமல் தன்னிலிருந்து அவளைப்பிரித்து ஆரவ்விடம் ஒப்படைத்தவன் திரும்பி நடக்க அவன் கைகளை கெட்டியாக பிடித்திருந்தாள் அவள்.....

தன் மறுகையால் அவள் கையை பிரித்தெடுத்தவன் அவளை திரும்பிப் பார்க்க சக்தியற்று முன்னே நடக்க அவள் கைகளோ அவனை நோக்கி நீட்டியபடியே இருந்தது.



தொடரும்.......



22-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 31 ❤



சஞ்சனா ஹாஸ்பிடல்....



பித்துப் பிடித்தவள் போல் இடிந்து போய் அமர்ந்திருக்கும் தன் தங்கை வெறித்துப் பார்த்தபடி சுவற்றில் சாய்த்து நின்றிருந்தான் அஜய்.....



வருணும் ஆரவ்வும் கதவருகே முகம் இறுக நின்றிருக்க அர்விந்த் வெளியே போயிருந்தான்.



விஜயலக்ஷ்மி அஷ்விக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அதே நேரம் இராமநாதனின் தோலில் தேம்பியபடியே இருந்தான் அர்ஜுன்.



ஈஷ்வரியை கட்டிப் பிடித்து கதறிக் கொண்டிருந்த தன் அடுத்த தங்கையை பார்த்து அவன் மனது ரணமாய் வலித்தது.



அதைவிட அவனின் செல்லத் தங்கையின் நிலை.....???



வாழ்க்கையில் எதிர்ப்பாராத் திருப்புமுனை!!!



அவன் மனது ஒரு வாரத்திற்கு முன்னால் நடந்ததை மீண்டும் அசை போடத் தொடங்கியது.



(ஒரு வாரத்திற்கு முன்...



ரிஷி டில்லி சென்று அன்றோடு இரண்டு நாட்கள் நிறைவடைந்தது.



அஷ்வினியின் வீட்டினருக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டு அவர்களும் குதிக்காத குறையாக அவள் நலம் கருதி இராமநாதபுரத்திற்கே அழைத்து வந்து விட்டிருந்தனர்.



ஒரு வேலை கைதொட்டு செய்ய விடாமல் மகாராணியாகவே பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் முகத்தில் தெரிந்த சோகம் அவர்களையும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது.



அஜய் வருண் ஈஷ்வரி எவர் வம்பிலுத்தாலும் அமைதியாக இருந்து விட கடைசியாய் அர்ஜுன் கூட அவள் கையை பிடித்து விளையாடக் கூப்பிடவும் சரி என்று தலையசைத்தவள் முன்னைய உற்சாகமின்றி எதையோ பறி கொடுத்தவள் போல் உற்கார்ந்திருக்க வருண் தான் தன் நண்பனுக்கு அழைத்து புலம்பித் தள்ளிவிட்டான்.



இத்தனைக்கும் ரிஷி தவறாமல் அவளை அழைத்து பேசிவிட்டுத்தான் அவன் வேலைகளையே கவனிப்பான்.



முதலில் இரண்டு நாள் என்றிருந்த பயணம் ஏதோதோ காரணங்களால் ஒரு வாரமாக நீண்டு விட்டது.



ஆரவ்வும் கயலும் அவ்வப்போது வந்து விட்டுப் போவார்கள்.



அவர்களுக்கும் செமஸ்டர் எக்ஸாம் வருவதால் அவளுடன் தங்க முடியாத நிலை...



அவன் வரும் நாள் மட்டும் கொஞ்சம் உற்சாகமாக இருப்பவள் அதன் பிறகு மீண்டும் பழைய நிலைதான்....



அவன் சென்று நான்காம் நாள் காலை அந்த இடிச் செய்தியில் தான் கண்களையே திறந்தாள்.



"அவளின் கணவனுக்கு ஆக்ஸிடென்ட்"



யார் எப்போது எப்படி சொன்னார்கள் என்பதெல்லாம் அவள் மண்டையில் பதியவே இல்லை...



கயல் அழுதுகொண்டே விஷயத்தை சொல்லவும் ரிஸீவர் கையிலிருந்து நழுவ அப்படியே மயங்கிச் சரிந்தாள்.



சத்தம் கேட்டு ஓடி வந்த வருண் அனைவருக்கும் தகவல் சொல்ல அதற்குள் தண்ணீர் தெளிக்கப்பட்டதில் மெதுவாக கண்களை திறந்தவள் திக்கித் தினறி தான் கேட்ட விஷயத்தை சொல்லி அழ குடும்பமே ஸ்தம்பித்துப் போனது.



அதன் பிறகு ஆரவ்விற்கு கால் எடுத்து தகவல் கேட்டு ஹாஸ்பிடல் விரைய அஷ்வினி அழுது கொண்டே டாக்டர் மறுக்க மறுக்க உள்ளே சென்று அவன் பக்கத்திலேயே அமர்ந்து விட்டாள்.



அவள் நுழைந்ததை அவன் ஆழ்மனம் உணர்ந்து கொண்டதோ என்னவோ அதன் பிறகு ஐந்து மணி நேரத்திற்கு பிறகு தான் அவனுக்கு சுயநினைவே வந்தது.



அவன் சுயநினைவடைந்ததில் ஆச்சரியப்பட்டுப் போன அந்த டாக்டர் அதன் பிறகு அஷ்வினியை தடுக்கவில்லை....



ஆனால் அதன் பிறகு நடந்தது!!!!



அவன் அசைவில் ஆவலும் காதலுமாய் அவள் அவனை நோக்கிக் கொண்டிருக்க மெதுவாக கண்களை திறந்தவன் அவளை அறிமுகமற்ற பார்வை பார்த்து



"யார் நீ?" எனவும் அவளுக்கு உலகம் அப்படியே நின்று போன உணர்வு....



அவன் அப்படிக் கேட்டதில் வெளியே வந்து அப்படி அமர்ந்தவள் தான் அவனை நார்மல் வார்டுக்கு மாற்றி இன்றோடு ஒரு கிழமை முடிந்தும் அதே நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறாள்.)



"அஷ்வி..."எனும் அழைப்பில் தன்னிலை அடைந்தான் அஜய்.



அவனுடைய மகன் அர்ஜுன் தான் அவளை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தான்.



என்ன செய்து என்ன பயன்???



எல்லாம் தான் முடிந்துவிட்டதே!!!



ஆண்மகன் அவனுக்கே அவள் நிலையை நினைத்து கண்கள் கரித்துக் கொண்டு வந்ததென்றால் அவளுக்கு....



இப்படி இருப்பது குழந்தையை பாதிக்குமென்று விஜயலக்ஷ்மி தலைப்பாடாய் அடித்துக் கூறினாலும் கூறிய விஷயம் முதலில் அவளை பாதிக்க வேண்டுமல்லவா???



ஆரவ்வையும் வருணையும் தவிர அவன் யாரிடமுமே பேசவே இல்லை...



பேசவே இல்லை என்பதை விட முகம் பார்க்கவே மறுத்துவிட்டான் என்பதுதான் சரியாக இருக்கும்.



அதேநேரம் ஆரவ்விற்கு டாக்டர் சொன்ன விடயங்களிலேயே மனது உழன்று கொண்டிருந்தது.



அஷ்வினி வெளியே வந்து தொப்பென அமரவும் என்னவோ ஏதோவென்று உள்ளே ஓடினான் ஆரவ்.



கண்களை மூடி இருந்தவன் திடுமென கதவு திறக்கப்படவும் கண்களை திறந்து பாத்தவனின் வாய் "ஆரவ் " என முணுமுணுக்க அவன் அழைப்பிலேயே ஆரவ்விற்கு கொஞ்சம் பொறி தட்டத் தொட்ஙகியது.



அவன் யோசனையாய் நிற்க உள்ளே நுழைந்தார் டாக்டர்.



அவனை பரிசோதித்தவாறே

"ஹௌ ஆர் யூ மிஸ்டர்.மாறன்?" எனவும் அவர் அழைப்பில் அவன் கண்கள் இடுங்கியது.



ஆனாலும் அவர் ஆர்.கே என அழைக்காததில் அப்படி ஒரு நிம்மதி!!!



"ஐ அம் பைன்" என்க அவர் அடுத்து சொன்ன வார்த்தைகளில் அவன் உடல் விறைத்ததில் தான் அவர் அவனை யோசனையுடன் பார்த்தார்.



"நீங்க ரொம்ப லக்கி மாறன்....இப்படி ஒரு வொய்ப் கிடைக்க உண்மையில் நீங்க புண்ணியம் செஞ்சி இருக்கனும்"



"வாட்?" என அதிர்ந்து கத்தியவனின் உடல் விறைப்புற அவர் அவனை யோசனையாக பார்த்தாரென்றால் ஆரவ்விற்கோ மனது திக்கென்றாகிவிட்டது.



"என்ன உளர்றீங்க டாக்டர்?"



"மிஸ்டர்.மாறன் உங்களுக்கு?"என்று நிறுத்தியவர் சட்டென சுதாரித்து ஆரவ்வை காட்டி



"இவர் யாருன்னு தெரியுதா?" எனவும் அவன் அதற்கும் கோபப்பட்டான்.



"இவன் யாருன்னு எனக்கு தெரியாதா....இவன் என் தம்பி ஆரவ்" அழுத்தம் திருத்தமாக வந்து விழுந்தன அவன் வார்த்தைகள்....



"ஓகே ஓகே நீங்க டென்ஷன் ஆகாதீங்க மாறன்" என்றவர் உடனடியாக ஆரவ்வை அழைத்துக் கொண்டு தனதறைக்குச் சென்றார்.



"மிஸ்டர்.ஆரவ்..... உங்க அண்ணனுக்கு இதுக்கு முதல்ல யாராவது பெண்களால துரோகம் நடந்திருக்கா?" என்றவரை திகைத்துப்போய் பார்த்தவன் நிலைமையின் தீவிரம் உணர்ந்து அவன் வாழ்வில் நடந்த அணைத்தையும் கூறி முடித்தான் அஷ்வினியின் கர்ப்பம் தரித்திருக்கும் விஷயம் உட்பட....



கேட்டுக் கொண்டிருந்த அந்த மூன்றாம் பனிதருக்கே அஷ்வினியின் நிலை மனைதை அசைத்து விட்டது...



இருந்தாலும் கூறியே ஆக வேண்டிய கட்டாயத்தில்

"லுக் மிஸ்டர்.ஆரவ்... இப்போ மாறனுக்கு ஏற்பட்டிருக்குறது ஒரு வகை ஸிலக்டிவ் அம்னீஷியா"எனவும் ஆரவ்வின் கண்கள் அதிர்ச்சியாய் விரிந்தது.



"அவருக்கு தான் துரோகம் செய்யப்பட்டு வெளிநாடு போன வரைதான் தற்போதைக்கு ஞாபகத்துல இருக்கு"



"...."



"அண்ட் இன்னொரு முக்கியமான விஷயம்.... பெண்கள்னாலே வெறுத்து ஒதுக்குன அப்போதைய மனநிலைதான் இப்போவும் இருக்குறாரு.... அதனாலதான் நான் ஒருத்தங்கள மனைவின்னு சொன்னதும் அவரால அத ஏத்துக்க முடில"



"...."



"உங்க விஷயத்துக்கு கொபப்ட்டதுக்கான காரணம் அவர் இன்னுமே உங்கள ராகேஷோட தம்பியா நினக்கிறதாலதான்"



"பட்....?"என்றவனுக்கு தொண்டை அடைத்தது.



"எஸ் ஆரவ்....அவன் என் தம்பின்னு சொன்னதுக்கான காரணம் உங்களையும் திருப்பி இழந்துட கூடாதேன்னுதான்"



"அப்போ அஷ்வி?"



"...."



"சொல்லுங்க டாக்டர்?"



"அவங்கள உன்னோட மனைவின்னு அறிமுகப்படுத்தலாம்... பட் அவரோட மனநிலைக்கு அது ஒத்து வராது.... அவங்கள அதிகமா காயப்படுத்த வாய்ப்பிருக்கு....அண்ட்... அவங்க அவரால காயப்படுத்தப்பட்றது அவங்க வயித்துல வளர்ற குழந்தைக்கு தான் ஆபத்து"



"என் அஷ்வி பாவம் டாக்டர்.... என்னாலயே இத தாங்க முடில....அவளால எப்பிடி?" அடக்க முடியாமல் கண்ணீர் வழிய அவருக்குமே கண்கள் கலங்கத்தான் செய்தது.



"கடவுள் மேல நம்பிக்கை வைங்க மிஸ்டர்.ஆரவ்"



"எ...எப்பிடி டாக்டர் முடியும்?"



"முடியும்....அவங்க ரெண்டு பேரோட காதல் அவங்கள ஒன்னு சேர்க்கும்" என்றவர் அவன் தோலை தட்டிவிட்டு செல்ல அவனுக்கும் அவர் பதிலில் சற்று தெம்பு வந்தாலும் இதை எப்படி அவளிடம் சொல்லி தேற்றுவது என்பதில் மீண்டும் வாடிப் போனது மனது.



மெதுவாக இராமநாதனிடம் விஷயத்தை கூற அவர் தான் எல்லோரையும் சமாளித்து எப்படியோ கூறி முடித்திருந்தார்.



அவர் கூறும் போது அவரையே பார்த்திருந்தவளின் பார்வை அவர் முடித்ததும் மீண்டும் திரும்பி விட்டது.



இதோ இப்போதும் கூட அப்படியேதானே அமர்ந்திருக்கிறாள்.



இதற்கு என்னதான் வழி???



ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்தவன் வருணும் அவளையே கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது தெரிய தனக்கும் அது தாக்க சொர்ந்து போனான்.



"ஆரவ்....ரிக்ஷிய என்னால சத்தியமா இப்பிடி பாக்க முடிலடா"



"...."



"ரெண்டு நாள் பிரிவுக்கே எப்பிடி இருந்தா தெரியுமா?"



"...."



"ஏன் ஏன்டா இவன் வாழ்க்கைல மட்டும் இப்பிடி நடக்குது?"



"...."



"நோ எனக்கு நம்பிக்கை இருக்கு ஆரு... அவங்க ரெண்டு பேரோட காதல் ஜெய்க்கும்" என்றவனுக்கு அப்போதுதான் ஆரவ்விடமிருந்து சிறு முறுவல் பதிலாக கிடைத்தது.



சொன்னால் மட்டும் தான் வேதனை இருப்பவர்களென்று கூற வேண்டுமா???

சொல்லாமல் அமைதியாய் இருப்பவர்களுக்குள்ளும் பல சொல்ல முடியாத வேதனை மறைந்து கிடக்கத்தான் செய்கின்றது.



"நீ இரு ஆரு நா போயி அவன பாத்துட்டு வந்துட்றேன்" என்றவன் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய ரிஷி சாய்வாக அமர்ந்து ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தான்.



அவன் அருகில் போய் அமரவும் தன் சிந்தை கலைந்தவன் ஸ்னேகமாய் புன்னகைத்தான்.



"இப்போ எப்பிடி இருக்கு மச்சி?"



"ஐ அம் பைன் மச்சான்"



"...."



"ஆரவ் எங்க?"



"அவன் வெளியிலதான்டா இருக்கான்"



"ஏன் உள்ள வர்ல?"



"அது...அ...அவன்...அவன் மனைவிய வீட்ல விட போறேன்னு சொன்னான்"



"ஓஹ்..."



"...."



"அ...அந்த பொண்ணு எங்க?"



"எந்த பொண்ணுடா?"



"அதான் நா முழிக்கும் போது என் பக்கத்துல படுத்திருந்தாளே?"



"அ...அ..அவ..அவ..." என அவன் திணறிக் கொண்டிருக்கும் போதே அவன் அடுத்த கேள்வியை கேட்டான்.



"யாரு அவ...ஒரு வேல நர்ஸா.... ஆனா அவ கழுத்துல தாலி தொங்கிச்சே.... கலர் ட்ரஸ் வேற போட்டிருந்தாளேடா?"



((அடப்பாவி...யாரு யாருன்னு கேட்டுட்டு இவ்வளவு கவனிச்சிருக்கியேடா))



"ஆ..ஆமா ஆமா நர்ஸ் தான்.... உ...உன்ன கவனிக்காறதுக்காக போ..போட்டிருந்தான் ஆரவ்"



"அவள மாத்திட சொல்லு.... கல்யாணமான பொண்ணயா போடுவான்?"



"அப்போ கண்ணிப் பொண்ணு ஓகேயா?"



"டேய்...."



"..."



"எனக்கு யாரு உதவியும் தேவை இல்ல..." என்றான் முகம் இறுக...



"...."



"அவ புருஷன் எங்க?"



'பாவி எல்லாத்தயும் மறந்துட்டு கேக்குறான் பாரு'



"அது...அது...அவன்..அவருக்கு உ... உடம்பு முடிலடா....அதான்..." என சமாளிக்க அவன் பதிலில் அவனுக்கு ஏனோ எரிச்சல் படர்ந்தது...



அந்த தாலியை பார்த்ததிலிருந்து வந்த எரிச்சல்....



அவள் கணவனை அவனுக்கு சத்தியமாக பிடிக்கவில்லை....



"அவனுக்கு உடம்பு முடிலன்னா அவன் பக்கத்துல இருக்காம அவ என் பக்கத்துல என்ன பண்றா?"



"பணக்கஷடமா இருக்கலாம் மச்சான்"



"பாத்தா அப்பிடி தெரியலயே?"



"நீ அவள பாத்தியா?" வருண் திடுமென கேட்டு விட்டதில் சற்று தடுமாறித்தான் போனான் அவன்.



"இ...இல்லயே"



"அப்போ எதுக்குடா அவள பத்தியே விசாரிச்சிட்டு இருக்க?" எனவும் எதுவும் சொல்லத் தோன்றாமல் அமைதியாகிவிட்டான்.



அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாது திணறிக் கொண்டிருந்தவனுக்கு அப்படி கேட்டதன் பிறகே ரிஷியின் ஆழ்மனம் புரியத் துவங்கயது.



இருந்தும் வேண்டுமென்றே திரும்பவும் வேறு கேள்வி கேட்க அவன் அமைதியானதில்தான் சற்று ஆசுவாசமானான் அவன் நண்பன்.



அவளை அவன் எப்படி மறப்பான்???



அவனின் உயிரோடு கலந்தவளல்லவா அவள்!!!



***



"அஷ்வி....ப்ளீஸ் ஒரே ஒரு வாய்தான்டா...." கையில் சாப்பாட்டை வைத்துக் கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தார் விஜயலக்ஷ்மி.



விட்டத்தை வெறித்துக் கொண்டு கால்நீட்டி அமர்ந்திருந்தவள் மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை....



அன்றுதான் அவனை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அனுப்பி இருந்தார்கள்.



அவனின் கண்ணில் படாமல் இவளை அழைத்து வந்து விட்டான் ஆரவ்....



அவனை பிடித்து தள்ளிவிட்டு தன்னறைக்கு வந்து கதவடைத்தவள் குழுங்கிக் குழுங்கி அழுதாள்....



அழுதால் ஆறிவிடும் காயமா அவளது???



யார் வந்து தட்டியும் கதவை திறக்காதவள் விஜயலக்ஷ்மி வந்து அழவும் தான் கதவை திறந்து விட்டு போய் அமர்ந்துவிட்டாள்.



அதிலிருந்து கெஞ்சிக் கொண்டுதான் இருக்கிறார் அவள் அசைந்து கோடுத்தால்தானே....



***



வருணிற்கு தாய் தந்தை இல்லையென்பது வரையே ரிஷிக்கு தெரிந்திருக்க அந்த எண்ணத்திலேயே அவன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு அழைக்கவும் முதலில் மறுத்தே விட்டான் வருண்.



ரிஷி நீ தனியாதானே இருக்க.... எங்க கூட தங்குறதுக்கு என்ன என்று கேட்ட பிறகே தான் செய்யவிருந்த மடத்தனம் புரிய ஆமோதித்து விட்டான்.



பின்னே உண்மையைக் கூறினால் அஷ்வினி யாரென்பது தெரிய வந்து விடுமல்லவா???



அதை நீயே கூறாவிட்டாலும் நான் விடமாட்டேன் என்பது போல் இருந்தது அவன் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக ஆரவ்விடம் கேட்ட கேள்வி.



கயலுடன் மாடிக்கு செல்லப் போனவனை தடுத்த ரிஷியின் கேள்வியில் மூவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.



"ஆரவ்...."



"என்னண்ணா?"



"நான் கண்ணு முழிச்சதும் டாக்டர் என் வொய்புன்னு ஏதோ சொன்னாரே..... எனக்கு கல்யாணமாயிடுச்சா என்ன?"



"அ....அ...அது...அது"



"பொய் சொல்லனும்னு நெனக்காத ஆரவ்....அவர் தெளிவாத்தான் கேட்டாரு"



"ஆ...ஆமாண்ணா"



"எங்க அவ....?"



"அது..."



"ஓ...அவளும் அந்த அன்னயாவ மாதிரி ஏமாத்திட்டு பொய்ட்டாளா?" கோபத்தில் கத்த அவனை விட கோபத்தில் வாய் திறக்கப் போன கயலின் கையை அழுத்திப் பிடித்தான் ஆரவ்.



அதற்குள் வருண் அவசரமாக இடைபுகுந்து

"இல்ல நோ மச்சான்.... அவ அப்பிடி பட்டவ இல்ல"



"பின்ன?"இகழ்ச்சியாய் வளைந்தது அவன் உதடு....



இப்போது என்ன செய்வது... சொன்னால் பொய் சொன்னாயா என கேட்பானே....



பரவாயில்லை இவனை பார்க்காமல் வேதனை அனுபவிப்பதற்கு பார்த்துக் கொண்டாவது காயப்படட்டுமே



"அது...அந்த பொண்ணு இ... இப்போ கோ...கோயிலுக்கு போனா ....வ...வ... வந்துடுவா" என்க அவனை கூர்ந்து பார்த்தவன்



"இத நா நம்பனுமா?"என்றான் ஆத்திரத்துடன்.



"...."



"அவள நா இப்போவே பாக்கனும்....ரைட் நௌவ்" என கர்ச்சிக்க கயல் நடுநடுங்கிப் போனாள்....



அவள் பார்த்த ரிஷி இல்லை இவன்...இவன் வேறு...



பயந்து போய் அவனை பார்க்க அவள் பார்வையில் என்ன கண்டானோ அவன் கோபம் சற்றே மட்டுப்பட



"அவள என் ரூமுக்கு அனுப்பி வை" என்றவன் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறிச் சென்று விட்டான்.



மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள கயல்



"ஆரு....அஷ்விய உடனே அழச்சிட்டு வா...." எனவும் அதை ஆமோதித்தான் வருண்.



"கடவுள் விட்ட வழி ஆரவ்....இப்போ நமக்கு வேற வழி இல்ல"



"பட் அண்ணா...."



"அத்தானால என்னக்குமே அஷ்விய காயப்படுத்த முடியாது ஆரு போ...."எனவும் ஒரு பெருமூச்சுடன் அவன் வெளியேறிச் செல்ல வருணுக்கு அறையொன்றை ஒதுக்கி கொடுத்து விட்டு தன்னறைக்குச் சென்றாள் கயல்.



......



அதைவிட இங்கு ரிஷியின் நிலைமை தலைகீழாக இருந்தது.



அறை என்னவோ சுத்தமாகத்தான் இருந்தது....இருந்தாலும் என்னவோ ஒரு வெறுமை....



அது என்னவென்று இணம் காண அவனால் முடியாமல்தான் போயிற்று!!!



கட்டிலில் தொப்பென விழுந்தவனுக்கோ கோபப்பட்டதாளோ யோசித்ததாளோ தலை விண்விண்னென்று தெறித்தது.



தலையை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்து எழுந்தமர்ந்தவனுக்கு ஒரு பெண்ணின் முகம் மிண்ணி மறைந்ததில் மூச்சு முட்டுவது போல் உணர்ந்தவன் எழுந்து பால்கனிக்குச் சென்றான்.



வெளிக்காற்றில்தான் கொஞ்சம் ஆசுவாசமானது போல் இருந்தாலும் அந்த இடத்தில் ஏதோ.... ஏதோ ஒரு பிணைப்பு இருப்பதாகவே தோன்றியது அவனுள்....



வெளியே அலசிக் கொண்டிருந்தவனின் மனம் சட்டென தன் திருமணத்தில் வந்து நின்றது.



"நான் எப்படி திருமணம் செய்திருப்பேன்.... ஒரு வேலை கட்டாயத் திருமணமாக இருக்குமோ.... இல்லையென்றால் சுயநினைவின்றி அவள் கழுத்தில் தாலி கட்டி இருப்பேனோ....இருக்காது... நிச்சயம் இருக்காது.... எனக்கு சுயநினைவு இல்லாமல் இருந்தாலும் அவளுக்கு இருந்துதானே இருக்கும்.... ஒருவேல ஏமாற்றி...ச்சே...ச்சே.. அவ்வளவு முட்டாளா நான்... ஆரவ்விற்காக வேறு வழியில்லாமல் திருமணம் செய்து கொண்டிருப்பேனோ...." என நினைக்கத் தொடங்கிய மனது பின்னால் அரவம் கேட்கவும் சட்டென தடைபட திரும்பிப் பார்த்தவனின் கண்கள் உண்மையில் ஆச்சரியத்தில் விரிந்தது.



அவள் தான் நின்றிருந்தாள்!!!!



அவளுடைய கணவன் வேறு யாரோ என்று தான் நினைத்திருக்க கடைசியில் அது தான் தானா???



அப்போ எதுக்கு வருண் பொய் சொல்லனும்....ஓ...நா டாக்டர்கிட்ட கோபப்பட்டதுக்கு மறைக்க நெனச்சிருப்பானோ....



தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருந்தவன் தனக்கு முன் நின்றிருந்தவளை கண்களால் அளவெடுக்கத் துவங்கினான்.



அழுது அழுது ஓய்ந்து போயிருப்பாள் போலும்....



ஆனால் ஏன் அழனும்....ஓ...என்னை கொல்ல திட்டமிட்டு சொத்து கைக்கு வந்து சேராத கவலையோ...



((ஏன்டா...நீ நல்ல விதமா யோசிக்கவே மாட்டியா?))



சொத்துக்காகத்தான் என்று முடிவெடுத்தவனின் முகம் பாறை போல் இறுகிப் போயிற்று....



"சொத்துக்காகத்தான் என்ன திருமணம் முடிச்சிருக்கன்னு எனக்கு தெரியும்....பட்....நீ நெனக்கிறது எப்பவுமே நடக்காது" என்றவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தவளின் கண்களை கண்டவனுக்கு அதற்கு மேல் நாவை அசைக்கவே முடியாமல் போக கண்களை இறுக்க மூடிக் கொண்டவன் சட்டென மறுபக்கம் திரும்பி நின்று விட்டான்.



மௌனமாய் கண்ணீர் வடித்தவளுக்கு எதிர்காலம் பெரும் பூதாகரமாய் வந்து பயமுறுத்தியது.



வாழ்க்கை முழுதும் இப்படியே தான் இருந்துவிடுமா....???



தொடரும்......



23-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 32 ❤

காலையிலேயே தன் முன் வந்து நின்று தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து எரிச்சலாக வந்தது ரிஷிக்கு....

எப்போதுமே அழுதுகொண்டே தான் இருப்பாள் போலும் என எண்ணிக் கொண்டவனுக்கு அவள் கண்களில் தெரிந்த வலியில் உள்ளுக்குள் வலித்தது மட்டும் புரியாமலே போனது.

இதுவரை அவன் அறிந்து ஒரு வார்த்தை கூட அவள் வாயிலிருந்து வராதது வேறு அவனுக்கு எரிச்சலூட்டியது என்றே சொல்லலாம்.

மகாராணி பேசினால் முத்து கொட்டி விடுமோ என ஏளனமாக நினைத்தவன் அவளை முறைத்து விட்டு எழுந்து சென்றான்.

இனி அழவே கூடாது என முடிவெடுத்து விட்டாலும் நடைமுறையில் சாத்தியப்படாது என நினைக்கவே செய்தது மனது....

இதோ அது உண்மையும் கூட எனும் வகையில் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

அவன் வெளியே வந்த போதும் அதே நிலையிலேயே இருந்தவளை பார்த்து
"ஏன் இன்னும் இங்கேயே நிக்கிற...ஓ...ஓ..மயக்க வந்தியாக்கும்?" என்றவனின் நெருப்புத் துண்டங்களாக வந்து விழுந்த வார்த்தைகளை கேட்டும் அவள் தலை கவிழ்ந்தே இருந்தாள்.

உள்ளுக்குள் வலித்த போதும் அவனுக்காகவே பொறுத்துப் போனாள் மங்கை!!!

வாயத் திறந்து பேசுறாளா பாரு...என முணுமுணுத்துக் கொண்டவன்

"காபி எனக்கு வேண்டாம்.....நீ விஷம் கலந்திருக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?"

அவளா....அவளா அவனுக்கு விஷம் கொடுக்கப் போகிறாள்....அப்படியே இருந்தாலும் அவளல்லவா அதை முதலில் அருந்துவாள்...
அவளைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டான்....

கண்ணீர் கரகரவென கொட்டத் தொடங்க அதை அவசரமாக துடைத்தவள் நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு காபி கப்பை தன் வாயருகே கொண்டு சென்றாள்.

அவன் நெற்றி சுருக்கவும் அவனைப் பார்த்துக் கொண்டே ஒரு மிடர் அருந்திவிட்டு மீண்டும் அவனிடம் நீட்டவும் உண்மையில் அவனுக்கு உடல் தூக்கி வாரிப்போட்டது.

அவளைத் திகைத்து நோக்கியவன் அவளையும் காபியையும் மாறி மாறி பார்த்து விட்டு விருட்டென வெளியேறி விட்டான்.

அதை அவள் அவன் தன்னை இன்னும் நம்ப வில்லை என எடுத்துக் கொள்ள அவனுக்கோ அது பெரும் யோசனையாய் அமைந்துவிட்டது.

கூடவே வலித்தது!!!

தலையை கோதிக் கொண்டே கீழிறங்கி வந்தவனை மற்ற மூவரும் கலவரத்துடன் பார்க்க அவன் அதை கண்டு கொண்டால்தானே....

என்ன நடந்திருக்க கூடும் என யூகிக்க முடியாதவர்களுக்கு உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது.

கோபத்தில் ஏதாவது செய்து விட்டானோ???

மற்ற நேரமாக இருந்திருந்தால் பரவாயில்லை.....அவன் உயிரை சுமந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் எதுவும் ஆகிவிடக் கூடாதே என்றிருந்தது.

"என்ன மச்சி சீக்கிரம் எந்திரிச்சுட்ட.... காபி குடிக்கிறியா?" வருண் கேட்கவும் சட்டென மிண்ணி மறைந்தது அவள் செய்கை....

"ஆங்....அது...நா குடிச்சிட்டேன்" தெரிந்தே பொய் சொன்னான்.

அவளை கீழாக நினைத்து விடக் கூடாதே என்றிருந்தது உண்மையிலும் உண்மை....

இது தான் மறைந்தும் காதலா???

அதை கேட்ட மூவருக்கும் அப்போதுதான் ஆசுவாசப் பெருமூச்சே வந்தது.

அவனின் இந்த பதிலை எதிர்பாராவிதமாய் அவளும் கேட்க நேர்ந்ததில் அவளுக்கு அதிர்ஷ்டமே....

உதட்டில் சிறு புன்னகை ஒன்று கூட தோன்றி மறைந்தது...

அவனுக்கு நினைவுகள் இல்லாமல் போயிருக்கின்றனவே தவிர மனதும் அதற்குள் அவளுக்கான காதலும் அப்படியேதான் இருக்கிறதென்பது தெளிவாக புரிந்து போயிற்று அவளுக்கு.....

சற்று முன் நடந்த காயம் கூட பனிக்கட்டியாய் உருகித்தான் போனது....

அவள் முகத்தில் சட்டென மின்னி மறைந்த புன்னகையை ஆரவ்வின் சி.பி.ஐ கண்கள் அழகாக படம் பிடித்துக் கொள்ள அவனுக்குள் ஏதோ பாரம் இறங்கி விட்ட உணர்வு....

இனி அவள் பார்த்துக் கொள்வாள்!!!

***

"உண்மையில் சோர்ந்து தான் தெரிகிறானா.... இல்லன்னா நம்ம கண்ணுக்குத் தான் அப்பிடி தெரீதோ"

அவனை இப்படியும் அப்படியுமாக எப்படியும் பார்த்தாகிவிட்டது....

ஆனால் அவன் முகம் பளிங்கு போல் உண்மையை பிரதிபளித்துக் கொண்டிருக்க மெதுவாக அவன் கார் கண்ணாடியை தட்டினாள்.

((அட எல்லாம் ட்ராஃபிக்குல தானுங்க))

சட்டென நிபிர்ந்தவனின் முகத்துக்கு வெகு அருகில் தெரிந்தது அவனுடைய துப்பட்டா விழியழகியின் கண்கள்!!!

இவள் எங்கே என மடத்தனமாக யோசிக்கவிருந்த மனதை அடக்கியவன் கார் கண்ணாடியை கீழே இறக்கினான்.

அவளைப்பார்த்தே ஒரு மாதத்திற்கும் மேலாகிறது என்றிருக்க அவனுக்கு இருந்த பிரச்சனையில் அவளை சுத்தமாகவே மறந்தே பொயிருந்தான்.

அல்லது அவன்தான் கவனிக்காமல் போய்விட்டானோ???

"சார்....விஷ்வா என்னாச்சு?" எனவும் நீண்ட நாளைக்குப் பிறகு வாய் விட்டு சிரித்தான் அவன்.

அவன் சிரிப்பை பார்த்து ஹப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு விட்ட தன் மனதின் போக்கை எண்ணி ஒரு திடுக்கிடலுடன் நிமிர்ந்தாள் அவள்.

"இதுக்கு நீ விஷ்வா சார்னே கூப்டிருக்கலாம்"என்றுவிட்டு நகைக்க அவனுடன் தானும் நகைத்தவள்

"ஆமா....எதுக்கு விஷ்....விஷ்வா.... கலக்கமா இருந்தீங்க?" சட்டென விஷயத்தை போட்டே உடைக்கவும் அவன் பார்வையில் ஒரு மின்னல் வந்து போனது.

"இல்ல ஒன்னுமில்லங்க"
என்றவனுக்கு அப்போதுதான் அவள் பெயர் கூட தெரியாதது நினைவு வர அதை கேட்கப்போனவனை தடுத்தாள் அவள்

"நீங்க சொல்றத நா நம்புறதா இல்ல விஷ்வா....பட் சொல்ல புடிக்கலன்னா விடுங்க" என அவள் முடித்துவிட அவசர அவசரமாக அதை மறுத்தான் வருண்.

"இ..இல்ல இல்ல அப்பிடி எதுவும் இல்லங்க....நாம இங்க எப்பிடி பேசுறது.... ஏதாவது காபி ஷாப் போலாமா?" எனவும் சற்று யோசித்தவள்

"ம்..."என்றுவிட்டு நிமிரவும் சிக்னல் விழவும் சரியாக இருந்தது.

அவன் காரையே பின் தொடர்ந்து போனவள் அவன் ஏதோ ஒரு காபி ஷாப்பில் நிறுத்தவும் நிறுத்திவிட்டு தானும் இறங்கி உள்ளே சென்றாள்.

"ம் சொல்லுங்க விஷ்வா....என்ன பிரச்சினை?"

"அதுக்கு முன்னாடி ஒன் கன்டிஷன்"

"கன்டிஷனா....பீடிகை எல்லாம் பலமாக இருக்கே"

"...."

"ஓகே ஓகே சொல்லுங்க?"

"உன் பேரென்ன?"

"எதுக்கு?"

"உன் பேர் சொன்னா தான் நான் சொல்லுவேன்"

"என் பேரு யாழினி"என்றாள் மென்னகையுடன்....

அதை ரசித்து அனுபவித்தவனுக்கு ஏதோ ஒன்று உறுத்த

"நீ எதுக்காக காபி ஷாப்ல கூட உன் துப்பட்டாவ மறச்சிகிட்டு இருக்க?"என்க தூக்கிவிரிப்போட நிமிர்ந்து அமர்ந்தவள்

"விஷ்வா ப்ளீஸ்....நீங்க சொன்ன கண்டிஷனுக்கு தான் நான் ஒத்துகிட்டேன்ல அப்பறமும் என்ன?" என்றாள் கெஞ்சலாக...

அதில் அவனுள் ஏற்கனவே வேர் விடத் தொடங்கியிருந்த சந்தேகம் வலுப்பெற அவள் எதிர்பாரா வண்ணம் அவள் முகத்தை மூடியிருந்த துப்பட்டாவை பிடித்து இழுக்க கடைசி நேரத்தில் சுதாரித்து விலகியவள் அருகிலிருந்த வாஷ்ரூமிற்குள் ஓடினாள்.

ஈரெட்டில் அவளை அடைந்தவன் அவளை சுவற்றில் சாய்த்து துப்பட்டாவை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்கவும் அவள் திரை விலக அவன் கண்கள் அதிர்ச்சியில் தெரித்து விடுமளவு விரிந்தது.

***

ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்.....

கதிருக்கு மட்டுமே விஷயம் தெரிவிக்கப்பட்டு அவனும் இதை யாரிடமும் சொல்ல கூடாது என கண்டிப்பாக கூறப்பட்டிருந்தது.

ரிசப்ஷன் முடிந்து மறுநாளே அவன் டில்லி போய்விட்டது யாருக்கு ஆச்சரியத்தை கொடுத்ததோ இல்லையோ அது சாருமதிக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

ஆனால் இன்று நடந்ததைத்தான் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியாமல் போனது....

அப்பப்பா.... அவன் பார்த்த பார்வையை நினைக்கவே இப்போதும் குளிரெடுத்தது அவளுக்கு....

டில்லி போகும் இருந்த ரிஷி இல்லை இவன் என்பது மட்டும் அவள் மண்டையில் நன்கு உறைத்தது.

அவன் முகம் பாறை போல் இறுகி இருந்தாலும் அவனிடம் குட் மார்னிங் சொல்பவர்களை அலட்சியப்படுத்தாமல் சிறு தலையசைப்புடன் கடந்து செல்லும் பழக்கம் உண்டு அவனிடம்....

இதை அவளே எத்தனையோ தடவை கண்டும் இருக்கிறாள்...

ஆனால் இன்று???

வழமை போலவே அவன் வரும் போது எழுந்து நின்றவள் சிறு புன்னகையுடன் குட் மார்னிங் சொல்ல அவன் பார்த்த பார்வையில் அவளின் சப்த நாடியும் ஒடிங்கிப் போயிற்று....

அதில் எட்ட நில் என்ற சேதி இருந்ததே தவிர மருந்துக்கும் அறிமுகமான பார்வை அல்ல அது!!!

ஏன்...ஏன்..ஏன்...????

அதுவே அவளுக்கு முதல் அதிர்ச்சியாக இருந்தது என்றால் இடைவேளையில் அவனைப் பற்றிப் அலுவலர்கள் பேசிய பேச்சுக்கள் மற்றுமொரு அதிர்ச்சி...

இவன் சொன்னதற்கு இணங்கி ஒரு பேப்பரை டைப் செய்து கொண்டு கொடுக்க ஒரு சின்ன பிழைக்கு அவரை காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சு எடுத்துவிட்டது மட்டுமல்லாமல் அதை முகத்தில் விசிறி அடித்தானாம் என்று மாதவி அக்கா கண் கலங்க சொன்ன போது அவளுக்குமே பாவமாகிப் போனது....

பேசாமல் அஷ்வினி மேடமிடம் சொல்லுவிடுவோமா என்ற எண்ணத்தை உடனே கைவிட்டு விட்டாள்.

ஏனென்றால் ஆபிஸ் விஷயம் அவரிடம் கொண்டு போவது அவமானமாக தோன்றிய அதே வேளை அவரிடமே அவரின் புருஷனை பற்றி புகார் செய்ததாக தோன்றிவிடுமே....

அவளே எதிர்பாராத விதமாக அஷ்வினி அன்று ஆபிஸ் வந்திருந்தாள்.

அவ்வளவு சந்தோஷத்துடன் வரவேற்றவளுக்கு அவளுடன் பேசிய பின் எல்லாமே வடிந்தே போயிற்று....

அவளுடைய குழந்தைத்தனமான மூலத்தில் மருந்துக்கும் புன்னகை என்பதே இல்லை...‌

கண்களில் அத்தனை வலி!!!
அமைதியே உருவாக வந்து நின்றவள்
"எஸ்கியூஸ் மீ மிஸ்.சாருமதி" எனவும் அவசரமாக இருக்கையிலிருந்து எழுந்தவள்

"வாங்க மேடம்...."என்றுவிட்டு ரிசீவரை எடுக்கப் போக அதை அவசரமாக தடுத்த அஷ்வினியை புரியாமல் பார்த்தாள் பேதை!!!

"வே...வேணாம் மதி....எனக்கு பர்மிஷன் கேட்டு குடு"என்க

"பட் மேடம்...நீங்க..." எனப்போனவளை தடுத்து நிறுத்தி

"எதுவும் கேக்காத மதி ப்ளீஸ்.... கதிர் அண்ணா கிட்ட பேசு ப்ளீஸ்"எனவும் அவளுக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.

"எடுன்னு சொன்னா எடுக்கப் போறேன்.... நீங்க அதுக்காக ஏன் மேடம் என்கிட்ட கெஞ்சுறீங்க?" என்றவள் கதிருக்கு அழைத்தாள்.

.......

"மே ஐ கம் இன் சார்?"

"கம் இன்" என்றவன் அதை தொடர்ந்து உள்ளே நுழைந்த கதிரை என்னவென்பது போல் பார்க்க

"சார்....அது மேடம் வந்திருக்காங்க.... உங்கள பாக்கனுமாம்"
என்றவனை உறுத்து விழித்தவன்

"மேடமா....யாரந்த மகாராணி....?" என்றான் எகத்தாளமாய்....

அதிலெல்லாம் கதிர் ஒன்றும் அவ்வளவாக அதிர்ந்து போய்விடவில்லை....
நிதானமாகவே தான் பதில் கூறினான்.

"அஷ்வினி மேடம் சார்"

"யாரது?"என்றான் வெகு அலட்சியமாக....

உள்ளுக்குள் பக்கென்றதில் அதிர்ந்து அவனை பார்த்து

"சார்....உ...உங்க ஒய்ப் அஷ்வினி சார்"என்றான் அழுத்தமாக....

அந்த பேரை இப்போதுதான் உன்னிப்பாக கவனித்தவனின் முகத்தில் உணர்ச்சிக் கலவைகள்!!!

அந்தப் பெயர் அவன் மனதின் அடி ஆழம் வரை சென்று தாக்க உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டவனுக்கு தலை வேறு தெறித்து விடுவது போல் வலிக்க தன் இரு கைகளாலும் இறுக்கப் பற்றியவன் அப்படியே இருந்து விட்டான்.

அவன் கண் முன் சில நிழற்படங்கள் மங்கலாக தோன்றி மறைந்தன.

(இவன் கோபமாய் ஒரு பெண்ணை முறைத்துக் கொண்டு நிற்கிறான்...
அவளோ அவன் கோபத்தை அலட்சியமே செய்யாமல் அவன் பெயரை கேட்டு கெஞ்சிக் கொண்டிருக்கிறாள்....
இவன் மறுக்க அதே பெயர்.... கதிரின் வாயால் வந்த அதே பெயரைத்தான் அவளும் சொல்கிறாள்....ஆனால் ஒரு பிடிவாதத்தோடு...)

அவன் தலையை தாங்கிப் பிடிக்கவுமே கதிர் பயந்து போய் அஷ்வினியை அழைத்து வந்து விட்டான்.

அவசரமாக அவளருகில் வந்தவள் அவன் தோல் மீது கை வைக்க அவனுக்குள் அந்தத் தொடுகை புதுசாகத் தோன்றவே இல்லை....

"தே...தேவ் என்னாச்சு....என்ன பண்ணுது?" எனவும் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவளின் கண்களில் தெரிந்த தவிப்பில் அவன் இதம் தடம் புரண்டதென்றால் அவளது அழைப்பு காலம் காலமாய் காத்திருந்து கேட்க நினைத்தது போல் இருந்தது.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன்

"என்னாச்சு தே...வந்து ஹாஸ்பிடல் போலாமா?" என்றவளது கேள்வியில் மாய வலையிலிருந்து மீண்டவன் போல் அவளை உதறித் தள்ளினான்.

அவன் தள்ளியதில் சற்று தடுமாறியவள் மேசையின் நுனியை பிடித்து தன்னை சமப்படுத்திக் கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"வெளிய போ...."என அவன் சீற அதிர்ந்து போய் அவனைப் பார்த்தவளை வார்த்தைகளால் குத்திக் கிழித்தான் அவளவன்!!!

"ஓ...ஓ....நா பலவீனமா இருக்கும் போது என்கிட்ட பேசினா.... என்ன ஈசியா மயக்கிரலாம்னுதான் இப்போ வந்து பேசுறியா....வீட்ல அவ்வளவு அமைதியா இருக்குறவ இந்த நிலைல மட்டும் பேசினா நா மயங்கிருவேன்னு தப்பு கணக்கு போட்டுட்ட"

அவன் அவ்வளவு கீறியும் அவள் கண்கள் கலங்கக் கூட இல்லை என்பது தான் அதிசயமே!!!

அப்படி ஒரு தெளிவு முகத்தில்....

சலனமே இல்லாமல் அவனைப் பார்த்தவளின் பார்வையில் அதற்கு மேல் அவனால் பேச முடியாமல் போக முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான் காளை....

தான் கொண்டு வந்த சிற்றுண்டியை மேசை மேல் வைத்தவளை உணர்ச்சியற்றுப் பார்த்தவன்

"எனக்கு எதுவும் வேண்டாம்.... எடுத்துட்டு போ..." என எரிந்து விழ அவன் பேச்சை கண்டு கொள்ளாமல் அவனுக்கு பரிமாறியவள் அவன் கண் முன்னே அனைத்தையும் ஒரு தடவை சாப்பிட அவனுக்கு இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல் வலித்தது.

"எதுலயும் விஷம் கலக்கல....." என்றவள் கதவருகே செல்ல அவளை தடுத்து நிறுத்தியது அவன் குரல்.

"எங்க போற?"

"...."

"கேக்குறேன்ல?"

"வீட்டுக்கு"

"நீ எங்கயும் போக கூடாது.... இங்கேயே இரு" என்றவன் அவன் பாட்டிற்கு சாப்பிடத் தொடங்க அவள் முகத்தில் மீண்டும் புன்னகை.....

எதுவும் பேசாமல் அங்கிருந்த உயர் ரக சோஃபாவில் போய் அமர்ந்தவளுக்கு கருவுற்றிருப்பதால் உடல் அதிக அசதியாக இருக்க முகத்தை கைகளில் தாங்கியவாறு அமர்ந்து விட்டாள்.

அவளையே கண்களால் தொடர்ந்து கொண்டிருந்தவனுக்கு மனதிற்குள் ஏதோ பிசைய

"நீ சாப்டியா?"எனவும் விலுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் தெரிந்த மின்னலை துள்ளியமாக படம் பிடித்தது அவன் கண்கள்....

"இ...இல்ல....இல்ல.‌...எனக்கு பசிக்கல" என்றவள் அவசரமாக எழுந்து வெளியேறப் போக

"ப்ச்.... மறுபடியும் எங்க போற?" என்றான் அப்பட்டமான எரிச்சலில்....

அவனை நிதானமாக திரும்பிப் பார்த்தவள்

"வாஷ்ரூம்"என்க அவன் அமைதியாகி விட அதையே அவன் சம்மதமாக எடுத்துக் கொண்டவள் கதவின் கைப்பிடியை பிடிக்கப் போன சமயம் மீண்டும் தடுத்தது அவன் குரல்...

"ஏன்....இங்கேயும் வாஷ்ரூம் இருக்குல்ல...‌அப்பறம் வெளிய போவானேன்?"
என்றவன் அவளுக்கு பேசுவதற்கு அவகாசமே கொடுக்காமல்

"உள்ள போ " எனவும் மறுக்கத் தோன்றாமல் உள்ளே ஓடினாள்.

அவள் ஓடுவதிலிருந்தே எதுவோ சரியில்லை என யூகித்தவன் சாப்பாட்டை விட்டு எழுந்து அவள் பின்னே விரைந்தான்.

அவள் எல்லாவற்றையுமே முழுவதுமாக வாந்தியெடுத்து விட்டு விழ தள்ளாடவும் அவளை தாங்கிப் பிடிப்பதற்காக வாசலருகே வந்தவனால் அதற்கு மேலே ஒரு அடி கூட நகர்த்த முடியாமல் போயிற்று!!!

அப்போது கண் முன் வந்த நிழற்படங்கள் இப்போது அறையினுள்ளே நடப்பது போலவே இருந்தது அவனுக்கு....

(அவன் கட்டிலில் அமர்ந்திருக்க ஒரு பெண் அவனருகே ஒரு வாய் சாப்பாட்டை நீட்ட அதை கோபமாக இவன் தட்டி விடுகிறான்.....
அவளின் முகத்தில் அதற்கான பிரதிபலிப்பாக உன்னை நான் அறிவேன் என்பது மட்டுமே தெரிய கோபமோ வெறுப்போ முகச் சுழிப்போ சிஞ்சிற்றும் இல்லை......
மறுபடியும் நீட்ட சாப்பாடு தட்டு பறந்து போய் நங் என்ற சத்தத்துடன் சாப்பாடு முழுவதும் சிதறி தெறித்து விழுகிறது....)

தன்னை நிலைப்படுத்த முடியாமல் கதவு நிலையை இறுக்கப் பிடித்துக் கொண்டவனுக்கு வியர்த்து வழிந்தது.

அதையும் மீறி அவள் விழுந்து விடுவாளோ என்ற பதற்றம் தான் அவனை அதிகமாகத் தாக்கியது.

முயன்றான் முடியவில்லை....

கண்கள் சொருக கால்கள் தள்ளாட ஆரம்பிக்க அப்படியே கீழே சரிந்தான்.



சஞ்சனா ஹாஸ்பிடல்....

இன்னும் ரிஷி மயங்கியே இருக்க அவனைப் பற்றி கவலையாக சொல்லிக் கொண்டிருந்தார் மருத்துவர்.

வருணும் ஆரவ்வும் தான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

"இப்போ என்னதான் பண்றது டாக்டர்?" கவலையே உருவாக விசாரித்தான் வருண்.

"என்னாலயும் சரியா யூகிக்க முடில மிஸ்டர்.வருண்.....இவர அதிகமா யோசிக்க விடாதீங்கன்னு சொல்லியிருந்தேன்....நீங்க அத மீறியிருக்குறதால வந்த வினை இது" எனவும் ஆரவ்விற்கு சுருக்கென்று தைத்தது.

"நோ டாக்டர் நாங்க மீறல..... அண்ணாதான் அஷ்வி வந்தே ஆகனும்னு பிடிவாதம் பிடிச்சாங்க.... எங்களால வேறு ஒன்னுமே பண்ண முடில"

"இப்போ இத எப்பிடித்தான் ஹேண்டில் பன்றது டாக்டர்?"வருண் கேட்க அவர் மௌனித்தார்.

"அவங்க கூட இருக்குறதும் பிரச்சினை.....அவங்க அவர விட்டு தூரமா போறதும் பிரச்சினை" என்றவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை....

"இதுக்கு வழியே இல்லையா டாக்டர்....அஷ்வி நிலம....அவள அண்ணாவ விட்டு தூரமா போக சொல்றீங்களா?" என கேட்டுக் கொண்டிருக்கும் தண்ணீர் க்ளாஸ் உடையும் சத்தம் கேட்டு மூவரும் திடுக்கிட்டு திரும்ப அங்கே ரிஷி மீண்டும் ருத்ரமூர்த்தியாய் மாறி இருந்தான்.

மூவருக்கும் அவன் கோபத்துக்கான காரணம் என்னவென்று புரியாவிட்டாலும் இப்போது இவ்வளவு கோபம் அவனை பாதிக்கும் என்பதை புரிந்து டாக்டர் அவசரமாக அவனிடம் விரைந்தார்.

"மிஸ்டர்.மாறன்....கன்ட்ரால் யுவர் செல்ஃப் .... இது உங்க உடம்புக்கு நல்லதில்ல"

"எங்க அவ..... எனக்கு அவ வேணும் டாக்டர்.... அவள என்கிட்ட இருந்து விலக்க நெனச்சா.....யாரையும் உயிரோட விடமாட்டேன்" கிட்டத்தட்ட கத்தினான்...

மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் அதிர்ச்சியாக பார்க்க

"வருண்....அவ எங்க....அவ...அவக்கு ஒன்னில்லல்ல....ந..‌‌..ந... நல்லா தானே இருக்கா?" எனவும் அதிர்ச்சியிலிருந்து மீண்டவன்

"எஸ் மச்சான்.‌...அவ நல்லா இருக்கா...நீ கோபப்படாதடா ப்ளீஸ்"அவன் கெஞ்சவும் கோபம் சற்றே மட்டுப்பட மூச்சை நன்றாக இழுத்து விட்டான்.

"நீங்க கோபப்படாம இருங்கண்ணா..... நா இதோ அவள அனுப்பி வெக்கிறேன்....."
என்றவன் மற்ற இருவரையும் வெளியே வருமாறு கண்ஜாடை காட்டி விட்டு வெளியேற அவர்களும் வெளியேறினர்.

சற்று நேரத்தில் பதற்றமாய் உள்ளே நுழைந்தவளின் உச்சி முதல் பாதம் வரை அலசி ஆராய்ந்தவன் அவளுக்கு எதுவும் இல்லை என்றதும் தான் சற்றே ஆசுவாசமானான்.

அவனைப் போலவே அவனை முழுதாக ஆராய்ந்தவளுக்கு எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல் போக ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டு கதறினாள்.

அவன் உச்ச கட்ட அதிர்ச்சியில் சிலையாகிப் போக அவள் ஏதேதோ பிதற்றினாள்....

"முடில....தேவ் செத்துடலாம் போல இருக்கு.....ஏன் நமக்கு மட்டும் இந்த நிலம..... என்னால இதுக்கு மேலயும் தாங்கிக்க உடம்புலயும் சரி மனசுலயும் சரி தெம்பே இல்ல தேவ்.... உங்கள இந்த பேரு சொல்லி கூட கூப்புட வேணாம்னு சொல்லிட்டாங்க....எப்பிடி தேவ் என்னால முடியும்?" இன்னும் ஏதேதோ சொன்னாள்....

ஆனால் அவன் அவளை உணர்ந்தானா என்பது சந்தேகமே...

ஆம் அவன் மருந்தின் வீரியத்தில் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.....

தொடரும்.......

24-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 33 ❤



இரவு....



கால்களை மடக்கி அதில் தன் முகத்தை பதித்தபடி அமர்ந்திருந்தாள் யாழினி....



கண்களில் நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்க ஏனோ அவளுக்கு அதை துடைக்கக் கூட எண்ணம் வரவில்லை போலும்...



இன்று காலையில் அவன் தன் முகத்தை பார்த்ததும் அவன் கண்களில் தெரிந்த வெறுப்பு....



அதற்கு தானல்லவா காரணம்....எல்லாம் தன் மடத்தனம்!!!



(நான்கு வருடங்களுக்கு முன்பு.....



அப்போது அவள் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த நேரம்....



அழகும் கூடவே பயமும் இருப்பதால் சீனியர்கள் அவளிடம் சேட்டை செய்வதை வீட்டில் கூட சொல்லவில்லை அவள்...



ஆனால் அவளின் துரதிஷ்டமோ வருணின் துரதிஷ்டமோ அவர்கள் வம்பு பண்ணும் இடங்களிலெல்லாம் எதிர்பாரா விதமாக வருணைத் தான் அவள் காண நேர்ந்ததில் அவன் உருவம் அவளுள் ஆழமாய் பதிந்து போயிற்று....



ஒரு நாள் பஸ் ஸ்டாண்டில் அதே மாணவர்கள் வம்பிலுக்கவும் வேறு வழியில்லாமல் தன் தந்தையிடம் விஷயத்தை சொல்லிவிட அவர் என்ன ஏதென்று கூட விசாரிக்காமல் போலிஸ்டேஷன் அழைத்துச் சென்று கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார்.



பயத்தில் நடுங்கிய போதும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தடுமாறாமல் எப்படித்தான் பதில் சொன்னாளோ....அது அவளுக்குத் தான் வெளிச்சம்....



பெயரைத் தவிர வேறு எதுவும் தெரியாததால் அவர்கள் நாளை ஆளை அடையாளம் காட்டும்படி சொல்லவும் இவளும் தலையாட்டி விட்டு வந்து விட்டாள்.



அடுத்தநாள் உண்மையில் வம்பு பண்ணியவர்கள் போலிஸை கண்டதும் ஒதுங்கிக் கொள்ள விதி செய்த சதியால் வருணை அடையாளம் காட்டினாள் அந்தப் பேதை!!!



"இவர் தான் சார்...."



"இவரா....இவர் அப்பிடி பண்ற ஆளில்லமா....அவர் ஒரு நேர்மையான லாயர்....நீ நல்லா பாத்து சொல்லு..."



"எனக்கு நல்லா தெரியும் சார்....அவர்தான்..."என அவள் உறுதியாய் கூறிவிட இவர்களும் வேறு வழியில்லாமல் அவனிடம் வந்து விஷயத்தை போட்டுடைக்க அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது...



யார் அந்தப் பெண் என்றே தெரியாது...இதில் எங்கிருந்து வம்பிலுக்க???



அவனும் ஓரிரண்டு தடவை அந்த பாடசாலை மாணவர்கள் வம்பிலுப்பதை கொண்டிருப்பதால் விஷயத்தை தெளிவாக அந்த அதிகாரிகளுக்கு விளக்கி விட்டான்.



ஆனால் அவள் மேல் ஏற்பட்ட கோபம்....வெறுப்பு...???



அவளை எரித்து விடுபவன் போல் பார்த்துவிட்டு அங்கிருந்து அவன் சென்று விட அந்த அதிகாரி அவள் தந்தைக்கும் அவளுக்கும் நடந்ததை விளக்கிக் கூற தன் மடத்தனத்தை எண்ணி அதிர்ச்சியானாள் பேதை....



என்ன செய்து என்ன பயன்...



அதன் பிறகு அவனை எங்கு தேடியுமே கிடைக்காமல் போக குற்ற உணர்ச்சியிலேயே காலத்தை கடத்திக் கொண்டிருந்தாள் அவள்....



மன்னிப்பு கேட்டாலாவது கொஞ்சம் மனம் அமைதி அடைந்திருக்குமோ என்னவோ!!!



இது நடந்து கொஞ்ச நாளில் யாரோ ஒருவரின் திருமண விழாவிற்கு சென்று வந்து கொண்டிருந்த தாய் தந்தையர் இருவருமே உயிரிழக்க தான் செய்த பாவம் தான் அதற்கு காரணம் என இன்னும் தனக்குள் ஒடுங்கிப் போனாள்.



வள்ளி....அதாவது ரித்திகாவின் அம்மா யாழினியின் தந்தையின் ஒன்றுவிட்ட தங்கை...



அவரே அவளை பொறுப்பெடுத்துக் கொள்ள ரித்துவுடன் வளரத் தொடங்கினாள் பெண்....



இருவருக்கும் ஒரே வயது ஆதலால் எதையும் மறைக்காமல் அவளிடமே கொட்டி விட்டாள்.



இப்போதும் கூட அவள் கல்லூரிக்கே வரச் சொல்லி ரித்திகா வற்புறுத்த அவள் விரும்பும் பாடம் அதில் இல்லையென்பதால் அதை மறுத்து வேறு கல்லூரிக்கு சென்று விட்டாள்.)



அவள் அருகில் வந்தமர்ந்த ரித்திகா அவள் தோல் தொட்டு எழுப்ப அவள் கண்ணீரைக் காணவும் பதறிப் போனாள்.



"யாழி...எதுக்குடி அழற...என்னாச்சு?" என்றவளை கட்டிப் பிடித்து கதறிக் தீர்க்க அவள் முதுகை ஆதரவாய் வருடிக் கொடுத்துக் கொடுத்தாள் ரித்து...



அழுது முடிந்து சற்று ஆசுவாசமானவளிடம்



"ஏன் யாழி....என்னாச்சு?"

எனவும்



"நா...நா...நான் இன்னக்கி விஷு என்ன பாத்துட்டான் ரித்து"



"என்னடி சொல்ற?" என்க இவ்வளவு நாள் நடந்ததனைத்தையும் அழுகையினூடே சொல்லி முடிக்க



"அப்போ அவங்க என்ன பண்ணாங்க?"



"ஒன்னுமே பண்ணல ரித்து....பட்... விஷு கண்ல தெரிஞ்ச வெறுப்புல நா துடிச்சு பொய்ட்டேன்டி"



"நீ...நீ...வந்து விஷ்வா சார லவ் பண்றியா?"



"ஆமா...ரித்து..ஐ லவ் விஷு....நாளு வருஷமா லவ் பண்றேண்டி....அவரு அன்னக்கி என்ன விட்டு பொய்யட்டாரு பட்.... அவரையே நெனைச்சு நெனச்சு நா உள்ளுக்குள எவ்வளவு துடிச்சிருக்கேன் தெரியுமா?"



"...."



"அவர தேடாத இடமே இல்ல ரித்து...எந்த ஆம்பளய பாத்தாளும் அவரா இருக்குமோன்னு தான் தோனும்"



"...."



"அதிஷ்டவசமாத்தான் அன்னக்கி ட்ராஃபிக்ல பாத்தேன்....பட் பேச பயமா இருந்துது"



"..."



"துப்பட்டாவால மறச்சிட்டு அவர் கூட பேசினேன்.... எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா?"



"...."



"ஆனாலும் என்னப்பத்தி சொல்ல பயம்...பின்ன காணாம பொய்ட்டாருன்னா அத தாங்குற சக்தி என்கிட்ட சத்தியமா இல்லடி"



"...."



"பட்....இன்னயோட எல்லாம் முடிஞ்சு போச்சு"என்றவளின் கண்களிலிருந்து கரகரவென கொட்டத் தொடங்க அதை துடைத்து விட்டவள்



"நோ யாழி அழக்கூடாது....உன் பக்க நியாயத்த முதல்ல நீ சாருக்கு புரிய வை....அப்பறம் உன் லவ்வ தைரியா சொல்லு.... ஏத்துக்குறதும் ஏத்துக்காததும் அவங்க இஷ்டம்"



"முடியாதுடி....என்னால என் லவ்வ விஷு கிட்ட சொல்ல முடியாது...அவர் மறுத்துட்டா என்னால தாங்க முடியாதுடி"



"சரி வேணாம்....அப்போ மன்னிப்பு?"



"அது நிச்சயமா கேட்பேன் ரித்து... இல்லன்னா குற்ற உணர்ச்சியிலேயே நா செத்துடுவேன்"



"ஏய் என்னடி இப்பிடியெல்லாம் பேசுற?"



"...."



"எதுவும் யோசிக்காம தூங்கு யாழி....பாத்துக்கலாம்"

என்றவள் அவள் படுக்க தானும் மறு பக்கம் வந்து படுத்தாள்.





சஞ்சனா ஹாஸ்பிடல்.....



தன் கையை இறுக்கிப் பிடித்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தன் கணவனை வெறித்துப் பார்த்தாள் அஷ்வினி....



தன்னை உணர்கிறானா இல்லாயா என்பது தெரியவில்லை ஆனால் வெறுக்கவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவிப்பது மட்டும் நன்றாக தெரிந்தது.



இப்போது பிடித்திருப்பவன் எழுந்தவுடன் உதறுவான்....



எல்லாம் தெரிந்தும் ஏற்றுக் கொள்ளத்தயாராகாத மனதை என்ன சொல்லி தேற்றுவதென்றுதான் அவளுக்கு புரியவே இல்லை....



முதல்ல ஆருகிட்ட டாக்டர் என்ன சொன்னார்னு கேக்கனும் என எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவனில் லேசாக அசைவு தெரிய குனிந்திருந்தவள் சடாரென அவனை திரும்பிப் பார்த்தாள்.



கண்கள் அசைய மெதுவாக இமைகளை திறந்தவன் தனக்கருகில் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணை பார்த்து புருவம் சுருக்கினான்.



அதுவும் கொஞ்ச நேரத்தில் தெளிய அவளை விடுத்து ரூமை சுற்றும்முற்றும் பார்த்தவன் மீண்டும் அவளிடம் படரவிட்டு



"நீ எதுக்காக இங்க இருக்க?" என்றான் சுள்ளென்று...



எதிர்பார்த்தது தான்!!!



ஒரு பெரு மூச்சுடன் எழுந்தவள்

"வந்து....ஆரு இங்க தான் இருந்தான்....இப்போதான் வெளிய போனான்"



"நீளமா வசனம் பேசுற... முன்னேற்றம் தான்" எனவும் அவள் உதட்டில் புன்னகை மலர்ந்தது.



"கொஞ்ச நேரம் வாய வெச்சுகிட்டு சும்மாவே இருக்க மாட்டியாடி"



அன்றொரு நாள் தன் அண்ணன் கேட்டது ஞாபகம் வர வந்த புன்னகை சடுதியில் மறைந்தும் போயிற்று...



"இல்ல...வந்து நா..போறேன்" என்றவளை தடுத்து நிறுத்தி இருந்தது அவன் பிடி....



இதற்கும் ஏதாவது சொல்வானோ என்ற பயத்துடன் அவனை திரும்பிப் பார்க்க அவனும் அப்போதுதான் அதை கவனித்திருப்பான் போலும்....



அவளுடைய கைகளிலேயே பதிந்திருந்தவனது பார்வை சட்டென அவளை நோக்கியது....



அதில் தெரிந்த பயம் அவனுக்கு பிடிக்கவில்லை....



"ப்ச்...." எரிச்சலில் கையை தட்டி விட்டவன் மறுபக்கம் திரும்பி விட்டான்.



அவன் மனம் என்ன நினைக்கிறதென்று அவனுக்கே புரியவில்லை...



அவளை ஒதுக்கச் சொல்லி மூளை கட்டளை இட்டுக் கொண்டே இருந்தாலும் இந்த மனதைத்தானே பின்பற்றி தொலைக்கிறான்...



அவனையே கொஞ்ச நேரம் பார்த்திருந்தவள் விருட்டென வெளியேறி விட்டாள்.



மீண்டும் கதவை திறந்து கொண்டு வருண் உள்ளே வரவும் தான் அவள் சென்றதே அவனுக்கு தெரிந்தது.



"ஆர் யூ ஆல்ரைட் மச்சி?"



"ம்..."



"நாளைக்கு போலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு...."



"ப்ச்..."



"என்னடா?"



"எனக்கு இங்க இருக்க பிடிக்கல"



"இன்னைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மச்சான் ப்ளீஸ்"



"...."



"ஆரவ்வே உன்கூட இருக்கேன்னு சொல்லிட்டான்"



"வாட்?"



"என்ன வாட்?"



"ஆரவ் தேவயில்ல....அந்த பொண்ண இருக்க சொல்லு" எனவும் வருணுக்கு வந்த சிரிப்பை அடக்குவது பெரும் பாடாகிப் பொனது.



"நோ மச்சான்...அவ காலைல இருந்து உன் பக்கத்துலயே தான் இருக்கா....பாவம்டா ரொம்ப டயர்டா வேற தெரியிறா"



"அதெல்லாம் எனக்கு தெரியாது.... அவதான் இருக்கனும்...தட்ஸ் இட்"



"ஓகே ஓகே டென்ஷனாகாதடா....

ரிக்.... அந்த பொண்ணயே இருக்க சொல்றேன்"



"...."



"மச்சான் எனக்கொரு சந்தேகம்டா?"



"வாட்?"



"இல்ல...உனக்கு அந்த பொண்ண புடிச்சிருக்கா?"



"இல்ல"பட்டென அவன் பதில் சொன்ன விதத்தில் விழித்தான் வருண்.



"அப்போ எதுக்குடா அவள டார்ச்சர் பண்ற?"



"நா அவள டார்ச்சர் பண்றேனா?"



"இப்போ தானே சொன்னேன் டென்ஷனாகாதன்னு"



"...."



"பின்ன அவளே வேனும்னு அடம் புடிக்குற.... அவளுக்கு டயர்ட்னாலும் கேக்கவே மாட்டிங்குறியே அதான் சொன்னேன்"



"....."



"சரி விடு...."என்றவனுக்கு தன் தங்கையின் உடற்சொர்வு கண் முன் தெரிய மீண்டுமொருமுறை கேட்டான்.



"மச்சி...."



"என்னடா?"



"வேனும்னா நா தங்கிகட்டுமா.... அவள பாத்தாளே பாவமா இருக்குடா" எனவும் ரிஷியின் கண்கள் அவனை கூர்மையாய் துளைக்க



"இ...இல்லடா... ஜஸ்ட் பாவமேன்னு சொன்னேன்....அவ்வளோதான்..." என்றான் சமாளிய்யாய்....



"நீ போ....அவள இப்போவே வர சொல்லு" என்றான் பிடிவாதமாக...



"அ...அது...அவள ஆரு வீடு வரைக்கும் கூட்டிட்டு போயிருக்கான்டா"



"வாட்....ரப்பிஷ்....யாரு கிட்ட கேட்டு என்ன விட்டு போனா...அவ இப்போ இங்க இருக்கனும்" என்றவனை பாவமாய் பார்த்தான் வருண்.



இவனுக்கு உண்மைலயே மறந்து போச்சா....இல்லன்னா நடிக்கிறான்னானே புரிய மாட்டீங்குது என மனதிற்குள் நினைத்துக் கொண்டவனுக்கு கடவுளாகப் பார்த்து அஷ்வினியை அனுப்பியே வைத்து விட்டார் போலும்....



வெளியே நின்று கொண்டு அவனுக்கு அழைக்க அவசரமாக அடண்ட் செய்து காதுக்கு கொடுத்தான்.



"அண்ணா....ஆரு என்னமோ வேல இருக்குன்னு அவசரமா கெளம்பி பொய்ட்டான்....கோஞ்சம் என்ன வீட்ல விட்டுட்றியா?"எனவும் எப்பொழுதும் போல் இப்பொழுதும் உள்ளுக்குள் வலி எழுந்தது அவனுக்கு....



ரிஷிக்கு இப்படி ஆனதிலிருந்து அண்ணா என்று தான் அழைக்கிறாள்...



இவ்வளவு நாள் கேட்டது ஏனோ அவனுக்கு அந்நேரம் பிடிக்காமல் போனது...



ஓரிரண்டு வார்த்தை அல்லது தேவைக்கு மேல் பேசவே மாட்டாள்....



பழைய குறும்புத்தனம் அடியோடு அழிந்து போய் அமைதியே உருவாக வலம் வருபவளை பார்த்த அந்த சகோதரணின் மனம் துடிக்கத் தான் செய்தது....



என்னதான் செய்வது???



பதில் கூறாமல் போனை அணைத்தவன் தன்னை கேள்வியாய் பார்த்துக் கொண்டிருக்கும் ரிஷியிடம்



"ஆர்.கே....நீ இரு நா இதோ இப்போ வந்துட்றேன்" என்றவன் அவன் பதில் பேசும் முன் அங்கிருந்து வெளியேறி விட்டான்.



அவன் வெளியேறியதுமே இவனுக்கு மீண்டும் சுரீரென்று தலை விட்டுவிட்டு வலிக்கத் துவங்கியது.



இதற்கு அவன் அறிந்து வைத்திருக்கும் மருந்து அவள்.



ஆம் அவளேதான்!!!



அவள் அவனுடன் இருக்கும்போது மட்டுமே இது போன்று அவனுக்கு வராமல் இருக்கிறது.



அதற்காகத்தான் அவளை தன்னுடனேயே இருக்கச் சொல்லி அவன் கேட்டதும்...



தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டவனுக்கு மீண்டும் சில நிழற்படங்கள்....



(இப்போது அந்தப் பெண்....அதே பெண்ணா என்றா எல்லாம் அவனுக்கு தெரியாது....ஆனால் இதுவரை கண்டு கொண்டதில் அவள்தான் வந்து கொண்டிருந்தாள்... அதுவும் முகம் மங்கலாக.....

இப்போது அவள் ஒரு ஹாஸ்பிடல் பெட்டில் படுத்துக்கொண்டிருக்க அவன் புயலென உள்ளே நுழைகிறான்.... அவள் மீது அப்படி ஒரு கோபம்.....அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அறைய கையோங்க அவள் கண்களில் கண்ணீருடன் இவனைப் பார்க்கிறாள்....

தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு அவளுக்கு கோபத்தில் ஏதேதோ திட்டுகிறான்.....)



உள்ளே நுழைந்தவளின் கண்களில் அவன் அவ்வாறு தலையை பிடித்துக் கொண்டிருப்பது தெரிய ஓடிச் சென்று அவன் தோல் மீது பதட்டமாய் கை வைத்து உலுக்கினாள்.....



அவள் தொடவுமே அவனுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிழற்படங்கள் மங்கி கடைசியில் இல்லாமலேயே போயிற்று....



அதன் பிறகு தான் அவளை நிமிர்ந்தே பார்த்தான் அவன்....



"எ...என்னாச்சு....நா....நா... வேனும்னா டா...டாக்டர கூப்டடுமா?" என்றுவிட்டு நகரப் போனவளின் கையை இறுக்கப் பிடித்து தடுத்தான் அவன்.



அவள் என்னவென்று திரும்பிப் பார்க்க

"தேவயில்ல....நீ இங்கேயே இரு" எனவும்



"இ...இல்ல தே...வந்து உங்களுக்கு"



"இருன்னு சொல்றேன்ல....எதுக்கு பிடிவாதம் பிடிக்குற?" தேவையே இல்லாமல் எரிந்து விழுந்தவனை பார்த்து எதுவும் பேசாமல் அவன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள்....



அவளையே கோபமாக நோக்கி

"எங்க போன?"என்றான் மொட்டையாக....



அவள் புரியாமல் விழிக்க

"ப்ச்....இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி எங்க போனன்னு கேட்டேன்"



"அ..அது வீட்டுக்கு..."



"யாருகிட்ட கேட்டு போன?" என சீற மானசீகமாய் தலையில் வைத்துக் கொண்டவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை....



"சா...சாரி..." என்றாள் மென்குரலில்....



அதில் அவன் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டதோ!!!



அதற்குள் வருண் சாப்பாடு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைய அதிலும் இவள் கலந்து கொள்ளாமல் வேண்டாமென்று விடவும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதைதான்....



"ஏன் ஏன் வேண்டாம்....காலைல கூட சாப்புடல....மரியாதயா வந்து சாப்புடு"என கத்தத் தொடங்கவும் அவனை அடக்கிய வருண் தன்னை பாவமாய் பார்த்துக் கொண்டிருந்த தங்கையிடம் கண்களால் கெஞ்சினான்....



கருவுற்றதிலிருந்து சாப்பாடு என்றாலே வாந்தி எடுத்துத் தொலைப்பவளிடம் கெஞ்சுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவனுக்கு....



எவ்வளவு மறுத்தும் முடியாமல் போக அவன் கோபப்படக் கூடாதே என்ற ஒரே காரணத்திற்காக வந்து அமர்ந்தாள்.



சாப்பிட்டு விட்டு வருண் கிளம்பி விட மீண்டும் தனித்து விடப்பட்டனர் இருவரும்....



"நீ இங்க படு....நா அந்த சோபால படுத்துக்குறேன்"

எனவும் அதிர்ந்து போனவள் அவசரமாக அதை மறுத்தாள்.



"இ...இல்ல இல்ல....நீங்க இங்க படுங்க நா...நா அங்கேயே படுத்துக்குறேன்"

என்றுவிட்டு அவன் கோபப்படுவதை கண்டு கொள்ளாமல் போய் படுத்துவிட அவளை முறைத்து விட்டு அவளையே பார்த்தவாறு உறங்கிப் போனானான் அவளுடைய கணவன்!!!



***



"வாட்....என்னடா சொல்ற...அப்போ இது ஆக்ஸிடென்ட் இல்லையா?" சித்தார்த் அதிர்ந்து போய் கேட்க இல்லையென்று தலையாட்டினர் ஆரவ்வும் மதனும்....



"மதன்....இத சும்மா விடக்கூடாதுடா.... போட்டுத்தள்ள தான் ப்ளான் பண்ணி இருப்பானுங்க.... பட் அதிஷ்டவசமா தப்பிச்சிட்டதுல அடக்கி வாசிக்கிறானுங்கன்னு நெனக்கிறேன்"என்ற ஆரவ்வின் கூற்றை ஆமோதித்தான் மதன்.



"எஸ் மச்சான்....நீ சொல்றது தான் நடந்திருக்கனும்....ஆனா ஆள் யாருன்னு தெரியாம என்னடா பன்றது?" எனவும் மூவரும் யோசனையில் ஆழ்ந்தனர்.



ஆரவ் திடீரென ஏதோ தொன்றியவனாய்



"மச்சீஸ்...அண்ணா செய்ற சின்ன துரும்பு கூட கதிருக்கு தெரியாம போக வாய்ப்பே இல்லடா....அண்ட ஐம் ஷூர்....இந்த விஷயத்துல அண்ணா நம்மளவிட ரெண்டு மூனு ஸ்டெப்ஸ் முன்னாடியே போயிருப்பாங்க.... கதிர் கிட்ட பேசினா ஏதாவது க்ளூ கெடக்கலாம்" எனவும் மற்ற இருவரின் முகமும் பிரகாசமானது....



ஆனால் சித்தார்த்திற்கு உள்ளுக்குள் கொஞ்சம் நம்பிக்கை சரிய



"இவ்வளவு விஸ்வாசமா இருக்குறவரு நம்ம கிட்ட சொல்லுவாருன்னு என்ன நிச்சயம்டா....?"என யோசனையாய் கேட்டவனைப் பார்த்த ஆரவ்



"டோன்ட ஒர்ரி மச்சி....இத நா பாத்துக்குறேன்....நீங்க ரெண்டு பேரும் அந்த ட்ரைவர கவனிங்க"



"சரிடா....அஷ்வி எப்பிடி இருக்கா?" என்ற மதனின் கேள்வியில் ஆரவ்வின் முகம் வேதனையில் கசங்கியது.



"அவள அப்பிடி பாக்கவே ரொம்ப ஹேர்ட்டிங்கா இருக்குடா" என்றவனுக்கு தொண்டை அடைத்தது.



அவன் தோலில் ஆறுதலாக கைவைத்த சித்தார்த்



"கவலப்படாத மச்சி....எல்லாம் சரியாகிடும்"



"அந்த ஒரு நம்பிக்க மட்டும்தான் இருக்கு மச்சான்...."



"அண்ணாக்கு இப்போ எப்பிடி இருக்கு மச்சி?"மீண்டும் வினாவை தொடுத்தான் மதன்.



அவன் அப்படி கேட்டதும் அவனின் செய்கை கூடவே ஞாபகம் புன்னகை பூத்தவன்



"அவருக்கு இப்போ பரவால்ல மச்சான்....ஆனாலும் சும்மா சொல்லக் கூடாதுடா அவரோட லவ்வ...."என்றுவிட்டு நடந்தது அணைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி முடிக்கவும் மற்ற இருவரும் அவனோடு சேர்ந்து சிரித்தனர்.



"ரியலி ஹீ இஸ் க்ரேட் மச்சான்"என்றான் சித்தார்த் சிரிப்பினூடே...



"கேட்டா அஷ்விய பிடிக்கலயாம்..... ஆனா அவ என்கூட தான் இருக்கனும்னு அடம் பிடிக்கிறாருடா"



"மறைந்தும் காதலா??"மதன் குறும்பாக வினவவும் மீண்டும் அங்கே புன்னகை குடி கொண்டது.





காலை.......



முதலில் கண் விழித்த ரிஷி சோஃபாவில் தூங்கிக் கொண்டிருந்தவளை பார்க்க ஒரு நிமிடம் மனது திக்கென்றது.



புயல் போல் கீழே இறங்கி கீழே விளப்பார்த்தவளை ஓரெட்டில் அடைந்து மண்டியிட்டவன் தன் கைகளை அவள் கண்ணங்களில் வைக்க அவளோ அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.



அதிர்ந்து விழித்தவன் அவள் ஏதோ பேசிக் கொண்டிருப்பது புரிய காதை கொஞ்சம் குனித்துக் கேட்கத் தொடங்கினான்.



"ப்ளீஸ் போகாதிங்க தேவ்.... என்கூடவே இருங்க ப்ளீஸ்....நீங்க டில்லி போறதுல எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்ல தேவ்....நம்ம கொ...கொழந்...."

என்றவளுக்கு அதற்கு மேல் முடியாமல் கண்ணீர் வழியத் தொடங்கி விட்டது.



அவள் அழைப்பு உயிரின் அடி ஆழம் வரை சென்று தாக்க அவள் கண்ணீரை துடைத்து விட்டவனுக்கு அவள் வார்த்தைகள் எங்கோ கேட்டது போலவே இருந்ததில் யோசனையானான் அவன்....



ஆம் அது அன்று டில்லி போக முன் பால்கனியில் வைத்து அவள் அழுது கொண்டே சொன்ன வார்த்தைகள் அவை!!!



இப்போது அவனுக்கு யோசிக்க தலை வலிக்கவே இல்லை என்பதுதான் விந்தையே!!!



எவ்வளவு யோசித்தும் விடை தெரியாமல் போக அவளையே பார்க்கத் துவங்கிவிட்டான்....



கையை எடுக்கவும் வழியில்லை என்பதை விட அவனுக்கு எடுக்க விருப்பமில்லை என்பதே பொருந்தும்.



எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ அவள் அசையவும் அவசரமாக பார்வையை வேறு பக்கம் திருப்ப மெதுவாக கண்களை திறந்தவள் பதறிப் போய் எழுந்தமர்ந்தாள்.



"ச....ச...சாரி...சாரி" அவள் மன்னிப்பு வேண்டவும் எழுந்து கொண்டவன் எதுவும் பேசாமல் போக கோபித்துக் கொண்டானோ என அஞ்சியவள் அவசரமாக எழுந்து அவனிடம் வந்தாள்.



"சாரி தே...வந்து சாரி ப்ளீஸ்....."

"ப்ச்...விடு" என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் போகவும் தான் இவளுக்கு மூச்சே வந்தது.



அவன் பாத்ரூம் சென்று கழுவி விட்டு வர அவன் வந்தவுடனே இவளும் உள்ளே நுழைந்தாள்.



இவள் வெளியே வரும்போது வருணும் ஆரவ்வும் வந்திருக்க அவர்களை பார்த்து புன்னகைத்தவள் வருண் காஃபியை நீட்ட மறுக்கவும் ரிஷி திரும்பிப் பார்த்த பார்வையில் கப்பென்று வாயை மூடிக் கொண்டவள் அதை வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடிக்க அவளவனின் இதழ்கடையோரம் முதன் முறை சின்ன புன்னகையொன்று தோன்றி மறைந்தது.



ஆரவ் மீண்டும் ஒருமுறை டாக்டரிடம் சென்று விசாரித்து விட்டு வர நால்வரும் கிளம்பி வீட்டுக்குச் சென்றனர்.



கயலும் காலேஜ் போகாமல் வீட்டிலேயே இருந்ததால் வீட்டை பூட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை....



.......



கதவை தாழிட்டு விட்டு கயலை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான் ஆரவ்....



கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாகிவிட்டது அவளிடம் பேசி....



அவன் ஹாஸ்பிடலிலேயே இருந்துவிட தவறி ஓரிரண்டு நாட்கள் வீட்டிற்கு வந்தாலும் அந்நேரம் அவள் உறங்கியிருப்பாள்.



இவனும் கேஸ் விஷயமாக அலைய பேசுவதே குறைந்து போனது அவர்களுக்குள்....



அவன் அணைப்பில் பந்தமாய் அடங்கி நின்றவளை திருப்பி இழுத்து அணைத்துக் கொண்டான்.



"ஐ லவ் யூ அம்மு"



"...."



"ஏய் என்னடி?" தன் டீ-ஷர்ட்டில் ஈரத்தை உணரவும் அவளை அவசரமாக பிரித்தவன் அவள் முகம் தாங்கி தன் கட்டை விரலால் அவளுடைய கண்ணீரை துடைத்து விட்டான்.



"என்ன அம்மு....ஏன் அழற?"



"...."



"சொல்லுமா?"



"நீ என்ன கண்டுக்கவே இல்ல....நா எப்பிடி தவிச்சு போனேன் தெரியுமாடா?" என்றவளை பார்த்து வாய்விட்டுச் சிரித்தவன் மீண்டும் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.



"ஐ அம் சாரிடி"



"...."



"ஒனக்கு தான் நடந்தது தெரியுமில்லடி.... என்ன என்னதான் பண்ண சொல்ற?"



"...."



"இன்னுமே கோபமா?"



"இல்ல"என சிணுங்கியவள் அவனை இன்னும் இறுக்க அணைத்தாள்.



.......



வந்ததும் வராததுமாக அவன் லேப்டாப்போடு கட்டிலில் அமர்ந்து விட வேறு வழியில்லாமல் ஒரு புத்தகத்துடன் சோஃபாவில் அமர்ந்தவள் அசதியில் அப்படியே உறங்கியும் போனாள்.



கொஞ்ச நேரம் கழித்து லேப்பிலிருந்து கண்களை அகற்றியவனுக்கு அப்போதுதான் அவனிடம் தன் மொபைல் இல்லாததே ஞாபகம் வந்தது.



இவ்வளவு நாள் காணாதது அவனுக்கு அன்றுதான் உறுத்தியது போலும்!!!



லேப்டாப்பை கட்டிலில் அப்படியே வைத்தவன் அப்போதுதான் சோஃபாவில் கையில் புத்தகத்துடனே உறங்கிவிட்டிருந்தவளை கண்டு அவளருகில் சென்றான்.



அவளுடைய கையிலிருந்த புத்தகத்தை அவளில் தூக்கம் கலையாதவாறு எடுத்து வைத்தவன் அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு சென்று கட்டிலில் கிடத்த அவள் அவனுடைய டீ-ஷர்ட்டை இறுக்கப் பிடித்திருந்தாள்.



அவளையும் அவள் செய்கையையும் மாறிமாறிப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் பூகம்பம் வெடிக்கத் தயாரானது.



தொடரும்......



25-04-2021.
 
Status
Not open for further replies.
Top