All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் “உயிரோடு கலந்தவள்!” - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 15 ❤



வெற்றிவேல் யுனிவர்சிட்டி.......



வகுப்பில் அமர்ந்திருந்த கயல்விழிக்கு வருணை பார்க்கும் வரை இருப்புக் கொள்ளவில்லை ஆரவ் சொன்ன செய்தியில்.....

எவ்வளவு வாதாடியும் இன்று காலேஜ் போயே ஆக வேண்டுமென்று அனுப்பி வைத்துவிட்டான் ஆரவ்...

இன்று முக்கியமான அஸைமண்ட் சப்மிட் பண்ண வேண்டியிருந்ததால் அவளும் அடம் பிடிக்காமல் கிளம்பி வந்து விட்டாள்.

அருகில் அமர்ந்திருந்த ரித்துவை சோகமாக திரும்பிப் பார்க்க அவளோ வேறு ஏதோ யோசனையில் இவளை கண்டகொள்ளவே இல்லை....

அன்று இரண்டு கேங்கையும் சஸ்பெண்ட் செய்ததிலிருந்து இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறாள்.கேட்டதற்கு கூட எதுவும் சொல்லாமல் திரும்பவும் விட்டுப்பிடிப்போம் என இவளும் விட்டு விட்டாள்.இன்று கேட்டே ஆக வேண்டும் என தீர்மானித்தவள் அவள் தோல் தொட்டு



"ரித்து...." என அழைக்க அவளிடம் பதிலில்லாமல் போகவும்



"ரித்திகா...." என அவளை உலுக்கி கத்த திடுக்கிட்டு திரும்பி முறைத்தவள்



"எதுக்குடி இப்பிடி கத்துற?"



"நா ஒழுங்கா கூப்டப்பவே என்னன்னு கேட்டிருந்தீன்னா....நா எதுக்குடி கத்த போறேன்"



"ஹி...ஹி....கூப்டியா செல்லம்.... எனக்கு கேக்கவே இல்லயே....."



"கேக்காது கேக்காது...அது எப்பிடி கேக்கும்"



"சாரிடி செல்லம்....சரி எதுக்கு கூப்ட?"



"சொல்லமுடியாது போடி..."



"என் செல்லம்ல....சாரிடி" என காதை பிடிக்கவும்



"சரி சரி கால்ல விழுந்துடாத...."



"என்கிட்ட மாட்டாமயா போயிருவ.... சரி என்னன்னு சொல்லு"



"ம்...அத நீதான் சொல்லனும்"



"புரியிறா மாறி பேசவே மாட்டியா நீ?"



"ப்ச்...எதுக்கு எப்போ பாரு ஏதோ யோசிச்சிகிட்டே இருக்க?"



"யாரு...நா..?"



"நடிக்காத ரித்து..... சொல்ல புடிக்கலன்னா வேணாம்"



"ஹே....அப்பிடி இல்ல கயு...."



"....."



"அது..." என்றவளை முறைக்க



"கோவப்படாதடி...." என்றவள் நடந்த அனைத்தையும் ஒன்று விடாது தன் தோழியிடம் கூறியவள் கண் கலங்க கீழே குனிந்து கொள்ளவும் அவளை தன் புறம் திருப்பி கண்ணீரை துடைத்து விட்டவள்



"ரித்து...."



"....."



"என்ன பாருடி...."



"......"



"ஆரு என்கிட்ட சித்தார்த் அண்ணாவ பத்தி சொல்லி இருக்காங்கடி... அவங்களுக்கு லவ்னாலே புடிக்காதாம்.... யாருகிட்டயும் அதிகமா பேச மாட்டாங்களாம்.... அப்படி இருக்குறவங்க உன்ன சீண்டியிருக்காங்கன்னா நீ அவங்கள ஏதோ ஒரு வகைல பாதிச்சிருக்கேன்னுதானே அர்த்தம்?"



"பட்...எம்மேல லவ் வரவே வராதுன்னு சொன்னாருடி... அதுதான் என்னால தாங்கிக்க முடில...."



"அது சும்மா சொல்லியிருப்பாங்கடி"



"இல்ல கயு..."



"ப்ச்...சொன்னா கேக்கனும்டி"



"இப்போ என்னதான் பண்ணனும்குற?"



"அவங்கள சும்மா விட்டா அவங்க விலகி தான் போவாங்க....நீ என்ன பன்றன்னா.... அவங்கள எப்பவும் டிஸ்டர்ப் பண்ணிட்டே இரு"



"அப்போ என்ன லவ் பண்ணுவாங்கல்ல கயு....?" எதிர்பார்பாய் கேட்டவளிடம் ஆமோதிப்பாக தலையசைத்தாள் கயல்விழி.



ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்.....



கதவு தட்டும் சத்தத்தில் இருவரும் ஒருசேர திரும்பிப் பார்க்க அங்கே முகம் முழுதும் இரத்தக் கரையுடன் இளைத்தவாறு நின்றிறுந்தாள் அனன்யா.



அவளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அஷ்வினி அவளையுமறியாமல் தேவ்வின் கைகளை இறுக்க பற்ற அவள் அதிர்ச்சியறிந்து அவளை திரும்பி பார்த்தவன் அவள் கைகளை அழுத்த.... அவன் கொடுத்த அழுத்தத்தில் அவனை பார்த்து விட்டு மீண்டும் அனன்யாவை ஏறிட அவளோ இரு கைகளையும் சேர்த்து கும்பிட்டு



"ரி....ரிஷி....ப்ளீஸ்...எ...என்ன காப்பாத்து...." என்றவள் மயங்கி விழப்போக அஷ்வினி ஓடிச் சென்று அவளைப்பிடிக்க தன் கையை உதறியதில் ஏற்கனவே கோபத்திலிருந்தவன் அவள் அனன்யாவை தாங்கிப் பிடிக்கவும்

" அஷ்வினி" என கத்த அவன் கத்தியதில் உடல் துக்கிவாரிப் போட சடாரென திரும்பியவளிடம்



"என்ன பண்ணிட்டிருக்க நீ?அவ யாருன்னு தெரியுதா இல்லயா?"



"பட் தேவ்....உயிருக்கு போராடிட்டு இருக்கறவங்க கிட்ட மனசாட்சி இல்லாம என்னால நடந்துக்க முடியாது.... அது எதிரியா இருந்தாலும்....."



"அவ எதிரி இல்லடி துரோகி"



"தேவ் ப்ளீஸ்.....என்ன தடுக்கனும்னு நெனக்காதீங்க.." என்றவள் அவன் மேலும் பேசும் முன் கயலுக்கு அழைத்து



"கயல்....நீயும் ஆரவ்வும் உடனே ஆபீஸ் வந்துடுங்க.... நா ஹாஸ்பிடல் போறேன்....என்கிட்ட இப்போ எதுவும் கேக்காத... நா வந்து பேசறேன்..." என்று அவளே பேசிவிட்டு கட் பண்ணவள் அவனிடம்



"தேவ்...இப்போ அவங்க ரெண்டு பேரும் வந்துடுவாங்க... அதுக்குள்ள நா ஹாஸ்பிடல் பொய்ட்டு வந்தட்றேன்...."



"......"



"கதிர் அண்ணா கூட போறேன்" என்றவள் கதிரின் உதவியுடன் அவளை கூட்டிக் கொண்டு சென்றுவிட்டாள்.



அவள் செல்வதையே பார்த்திருந்தவனுக்கு நெஞ்சில் ஒரே ஒரு கேள்வியே மோதிக்கொண்டிருந்தது.

"உனக்கு என்ன விட அவதான் முக்கியமா பொய்ட்டால்ல அஷு....?"



***



ஹாஸ்பிடல்......



அது ஒரு தனியார் மருத்துவமனை என்பதால் எந்த விதமான விசாரணைகளுமின்றி உள்ளே அனுதிக்கப்பட்டாள் அனன்யா...



வயிற்றில் கத்தி குத்தியிருந்ததில் அதிகமான இரத்தம் வெளியேறியிருக்க அஷ்வினி பதறியபடியே வர அவள் பதற்றம் கதிரையும் தொற்றிக் கொள்ள அவசரமாகவே வண்டியை செலுத்தியிருந்தான்.



.......



ஆபீஸ்......



ஆரவ் வேலையை முடித்துவிட்டு வெளியில் வரவும்தான் கயல் கால் பண்ணி கூறியது.... அவளை தனியாக வர சொன்னவன் தன் அண்ணனுக்கு தான் என்னவோ ஏதோவென்று பயந்து வந்திறங்கவும் கயலும் ரித்திக்காவுடன் காலேஜிலிருந்தே வந்திறங்கவும் சரியாக இருக்க மூவரும் சற்று பதற்றத்துடனேயே உள்ளே நுழைந்தனர்.



அங்கு ரிஷி மட்டுமே தனித்திருக்க வெகுவாய் குழம்பிய ஆரவ் "இவ அண்ணாவ விட்டுட்டு எங்க போய்த்தொலஞ்சா..... அண்ணா எதுக்கு இவ்வளோ கொபமா இருக்காங்க...... என்னத்த பண்ணித் தொலச்சாளோ...." என நினைத்தவன் எதுவும் பேசாமல் நின்று கொள்ள கயல்



"மா....மாமா...அஷ்வி எங்க.... நீங்க மட்டும் இருக்கீங்க? எதுக்கு ஹாஸ்பிடல் போனா?" எனவும் எதுவும் பேசாமல் அவளை முறைத்த முறைப்பில் கயல் வாயை கப்பென மூடிக்கொள்ள ரித்திக்காவொ பயந்து கயலின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள்.



அவள் ரிஷியை இதுவரை பார்த்ததேயில்லை......

டிவி , மகஸின்களில் மட்டுமே அவனை கண்டிருந்தவள் இன்று கண்கள் சிவக்க பெட்டில் படுத்திருப்பவனின் தோற்றத்தில் பயந்தே போனாள்.



ஆரவ்விற்கு யாரிடம் கேட்பதென்றே புரியவில்லை... ஹாஸ்பிடல் போயிருக்கிறாள் என கயல் சொன்னது அப்போதுதான் ஞாபகம் வர படபடப்பாகவே இருந்தது.



எங்கே என்று இவனிடம் கேட்கவும் முடியாது.... அவளிடம் கேட்கவும் முடியாது எனும் நிலையில் கதிர் ஞாபகம் வரவும் " ஒரு நிமிஷம் " என்றுவிட்டு வெளியில் வந்தவன் கதிருக்கு அழைத்தான்.



"சார்....சொல்லுங்க சார்..."



"எங்க இருக்கீங்க கதிர்?"



"சார் மேடத்தோட ஹாஸ்பிடல் வந்திருக்கேன்"



"ஓஹ்....நீங்களுமா..?அஷ்வினி எங்க?"



"மேடத்துகிட்ட குடுக்கட்டுமா சார்?"



"இல்ல... இல்ல வேணாம்...எதுக்கு ஷாஸ்பிடல் போயிருக்கீங்க?"



"அது சார் ஒரு பொண்ணுக்கு வயித்துல கத்தி குத்தியிருக்காங்க...."



"வாட்....எப்பிடி நடந்துது?பட் அது எப்பிடி அஷ்விக்கு தெரியும்?"



"அந்த பொண்ணு நா சொல்ல சொல்ல கேக்காம அதுபாட்டுக்கு கதவ தொறந்துகிட்டு போயிடுச்சி சார்....பேசிட்டிருக்கும் போதே திடீர்னு மயங்கிடுச்சு... மேடம் தான் பதறிட்டாங்க... பட் மாறன் சார் ரொம்ப கோபமா மேடத்துக்கு திட்னாரு..."



"அவ பேரு ஏதாவது?"



"அது....ஆ...அனன்யான்னுதான் மேடம் சொல்லிட்டிருந்தாங்க சார்...."



"வாட்...டேமிட்.... அனன்யா.... அவ எப்பிடி?"



"தெ...தெ...தெரியல சார்..."



"இப்போ எங்க அவ?"



"ஐ.சி.யு ல அட்மிட் ஆக்கியிருக்கு சார்"



"ஓகே கதிர்...."என்றவன் கோபத்தை கட்டுப்படுத்த தலையை அலுத்தக் கோதிக் கொண்டான்.



"இடியட் என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கா.....பட்....அந்த அனன்யா எப்பிடி...?" அவனுடைய சி.பி.ஐ மூளை அவசரமாக யோசிக்க தொடங்க அதை தடை செய்வது போல் உள்ளிருந்து கேட்டது கயலின் பதற்றமான குரல்....



"மாமா...என்ன பன்றீங்க?" என மறுபடியும் அவள் கேட்கவும் அவசரமாக உள்ளே நுழைந்தவன் அங்கே ரிஷி எல்லா பொருட்களையும் விசிறி அடித்துக் கொண்டிருப்பதை பார்த்து



"அண்ணா என்ன பண்றீங்க? உங்க உடல் பலவீனமா இருக்கு... ரிலாக்ஸ்ணா..." என்றவாறே அவனை தடுக்கப்போக ஏதோ உடைக்க கையிலெடுத்தவன் அப்படியே அதை போட்டு விட்டு " இடியட் " என்று மெத்தையில் குத்த அவனருகில் வந்த ஆரவ்



"அண்ணா ப்ளீஸ்... ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க.... அவ மறுபடி எதுக்கு வந்திருக்கான்னு பாக்கலாம்.... அதுக்கப்பறம் அஷ்வினி கிட்ட பேசலாம்... ரிலாக்ஸ்....." எனவும் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொள்ள



"இவருக்கு மட்டும் காய்ச்சல் இல்லாம இருந்துது இன்னக்கி கன்பார்மா ஒரு கொல விழுந்திருக்கும்...." என நினைத்தவன் ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்று யோசிக்கத் தொடங்கினான்.



***



ஹாஸ்பிடல்......



முகத்தை மூடியபடி அமர்ந்திருந்த அஷ்வினி கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவசரமாக எழுந்து அவரருகே சென்று



"டாக்டர்.....என்னாச்சி பொழச்சிகிட்டாங்கல்ல....?"



"கிரிடிகல் ஸ்டேஜ தாண்டிட்டாங்க.... பட் இன்னும் சுயநினைவு இல்லாமதான் இருக்காங்க... ஒன் அவர் கழிச்சிதான் சொல்ல முடியும்...." என்றவர் சென்றுவிட



"இன்னும் ஒன் அவரா..?தேவ் ரொம்ப கோபத்துல இருப்பாரே...." என நினைத்தவள் தொப்பென அமர்ந்து விட்டாள். அவளையே பார்த்திருந்த கதிர் அருகில் வந்து



"மேடம்...ஆரவ் சார் கால் பண்ணாரு...ரொம்ப கோவப்பட்டாரு"



"மேடம்னு சொல்லாதீங்கண்ணா... ஏற்கனவே எதிர்பாத்தது தான் விடுங்க..."



"பட்...."



"எண்ணண்னா பன்றது... இன்னும் ஒன் அவர் ஆகுமாமே....தேவ்வ நெனச்சாதான் பயமா இருக்கு"

என்றவளை பார்த்து "கோவத்துக்கு இலக்கணமா இருக்குறவருக்கு இப்பிடி ஒரு பொண்டாட்டியா..." என நினைத்தவன் அமைதியாக இருந்துவிட்டான்.



அவள் கண் விழித்து விட்டதாக தாதி ஒருவர் வந்து சொல்ல டாக்டர் அனுமதிக்கவும் உள்ளே சென்று



"அனன்யா... ஐ ஆம் மிஸிஸ்.அஷ்வினி தேவமாறுதன்.... என்ன அடையாளம் தெரியும்னு நெனக்கிறேன்... உங்களுக்கு உதவி பண்ணது மனிதாபிமான அடிப்படைலதான்... உங்க அட்ரஸ் சொன்னீங்கன்னா நானே விட்டுடுவேன்..." என்றவள் அனன்யாவை பார்க்க அவளோ மௌனமாக கண்ணீர் வடிக்கவும்



"ஐ...ஐ...ஐ ஆம் சாரி அனன்யா..."



"பரவல்லங்க... செஞ்ச தப்புக்கு தண்டனையா நினச்சிக்குறேன்... தேங்ஸ்....நீங்க போங்க...."



"பட் எப்பிடி போவீங்க?"



"எனக்குன்னு யாரும் இல்லங்க...நா சமாளிச்சிக்குறேன்..."



"வாட்...என்ன சொல்றீங்க?"அவள் அமைதியை பார்த்து கொஞ்ச நேரம் யோசித்தவள்



"உங்களுக்கு உடம்பு சரியாகும்வர எங்க வீட்ல தங்கிகோங்களேன்?"



"இல்லங்க வேணாம்...ரிஷி ஏற்கனவே உங்க மேல கோபத்துல இருப்பான்.... என்னால பிரச்சினை வேணாம்.."



"தேவ்வ நா சமாளிச்சிகுறேன் அனன்யா.... நீங்க என்கூடதான் தங்குறீங்க" என்றவள் அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் ஒரு அறையில் விட்டுவிட்டு நேரே ஆபீஸுக்கு சென்றாள்.



ஆபீஸ்......



ரித்துவும் கயலும் உள் அறையில் இருக்க ஆரவ் கேபினில் நின்று கொண்டு அதன் நீள அகலத்தை அளந்து கொண்டிருந்தான்



என்ன யோசித்தும் அனன்யா எப்படி திடீரென்று ரிஷியை தேடி வந்திருப்பாள் என்பதை யூகிக்க கூட முடியவில்லை அவனால்.....



திடீரென கதவு திறக்க சட்டென திரும்பியவன் அங்கே அஷ்வினி நுழையவும் கோபத்துடன் அவளருகில் சென்று



"அஷ்வினி " எனவும் அவனை பார்த்து பயந்தாலும் கையை கட்டிக் கொண்டு அவனை பார்த்து



"நீ என்ன கேக்க வரன்னு எனக்கு தெரியும் ஆரவ்.... நா மனிதாபிமான அடிப்படைல தான் உதவி செஞ்சேன்.... செய்வேன்...." என்றவளை புருவம் சுருக்கி பார்த்து



"செய்வேன்னா.....?"



"நம்ம வீட்லதான் குணமாகும் வர தங்க போறா?"



"யூ... ஸ்டுப்பிட்... யார கேட்டு முடிவெடுத்த?அண்ணாக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?"



"அத பாத்துக்கலாம் மிஸ்டர்.ஆரவ்.... இப்போ வழி விடுங்க...." என்றவள் அவன் பதிலை எதிர்பாராது உள்ளே நுழைய அவசரமாக எழுந்த கயல் அருகில் வந்து பேசப்போக



"நா உன்கிட்ட அப்பறம் பேசுறேன் கயல்...." எனவும்



"சரி அஷ்வி...."என்றவாறே வெளியேறி விட அறையை சுற்றுமுற்றும் அலசியவள் என்ன நடந்திருக்கும் என யூகிக்கவும் பயத்தில் மனது திக்திக்கென அடித்துக் கொண்டது.



தன் கையை மடித்து கண்களுக்கு மறைவாக வைத்து படுத்திருந்தவன் அஷ்வினி வந்தது தெரிந்தும் அசைந்தானில்லை....



அவன் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் தன்னை கண்டுகொள்ளாதது தெரிந்தும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.பேசினால் கோபப்படுவான் என தெரிந்திருந்தாலும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்



"தேவ்...."என கையை பிடிக்க அவளை தள்ளிவிட்டு சடாரென எழுந்தமர்ந்து அவளை கண்கள் சிவக்க பார்த்தவன்



"பேசாத....மீறி பேசின கொண்ணுருவேன்"



"தேவ்...நா சொல்றத கொ...."



"கெட்டவுட்..."



"தே...."



"ஐ செட் கெட் அவுட்...இடியட்"



"முடியாது...."



"முடியாதூ......அப்போ நா போறேன்" என எழுந்தவன் தடுமாறி விழப்போக அவசரமாக எழுந்து அவனை பிடித்தவளை சுவற்றில் சாய்த்து கழுத்தை பிடித்து இறுக்க அவன் பிடியில் வலித்தாலும் கண்களை இறுக்க மூடி கட்டுப்படுத்த அதுவும் முடியாமல் போகவும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.



அதை கண்டு என்ன நினைத்தானோ கையை எடுத்தவன் "ச்சேஹ்...." என்றுவிட்டு உடல் ஒத்துழைக்காமல் போக கட்டிலில் அமர்ந்துவிட்டான்.



அவன் விட்டவுடன் இறுமியவாறே இருந்தவள் அவன் அமரவும் அவன் காலை பிடித்துக் கொண்டு



"ஐ...ஆம் சாரி தேவ்....ப்ளீஸ்...அவ உயிருக்கு போராடிட்டு இருந்தா.... என் கண் முன்னால ஒரு உயிர் துடிக்கும் போது என்னால எப்பிடி தாங்க முடியும் சொல்லுங்க... அவ செத்திருந்தான்னா கடவுள் என்ன மன்னிச்சே இருக்க மாட்டாரு.....அவ எப்பிடி பட்டவளாவும் இருந்திருக்கலாம்.. பட் இப்போ அவ திருந்திட்டான்னு தோனுது....ப்ளீஸ் தேவ்.."



"....."



"தேவ்....அவ குணமாகும் வர நம்ம வீட்லதான் தங்க போறா...." என்றவளது பேச்சில் அவளை கூர்ந்து பார்த்தானே ஒழிய ஒரு வார்த்தை பெசவில்லை....



"தேவ்.....ஏதாவது பேசுங்க ப்ளீஸ்...."



"......."



"தேவ்...." என்றவள் அவன் நெற்றியை தொடப்போக மறுபக்கம் திரும்பிவிட்டான்.மனம் வலித்தாலும் வந்த கண்ணீரை உள்ளிழுத்தவள் எழுந்து ஆரவ் வாங்கி வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து வந்து வாயருகே கொண்டு செல்ல சாப்பாட்டுடன் அவள் கையை தட்டிவிட அதில் கீழே விழுந்து சிதறியது.

இதை உன்னிடம் நான் எதிர்பார்தேன் என்பது போல் பார்த்தவள் மீண்டும் இன்னொரு கவளத்தை நீட்ட

"ப்ச்...." என்றவன் அதையும் தட்டிவிட்டான்.

ஒரு பெருமூச்சுடன்



"தேவ்....என் மேலுள்ள கோவத்த எதுக்கு சாப்பாட்டுல காட்றீங்க....? ம்...சாப்புடுங்க" என்றவள் மறுபடி நீட்ட அவள் கையிலுள்ள தட்டை பறித்து விசிறி அடிக்க அது அறை முழுவதும் தெரித்து விழுந்தது.



அவள் எதுவும் பேசவுமில்லை...... அதிர்ச்சியாகவுமில்லை.... நிதானமாக நடந்து சென்று அவன் மாத்திரையை எடுத்தவள் தண்ணீர் க்ளாஸுடன் அவனிடம் வந்து



"என் கையால நா தர்றது தானே புடிக்கல.... பக்கத்துல வெச்சாலும் குடிக்க போறதில்ல....சோ...." என்றவள் வெளியில் சென்று அனைவரையும் அழைத்தவள் ஆரவ்விடம் திணித்து விட்டு ஓரமாக நின்று விட்டாள்.



உள்ளே வந்தவர்கள் அதிர்ந்து இருவரையும் மாறி மாறி பார்த்திருக்க அஷ்வினி ஆரவ்விடம் மாத்திரையை திணிக்கவும் அவளை முறைத்துவிட்டு வேறு வழியில்லாமல் ரிஷியிடம் நீட்ட அனைவர் முன்னிலையிலும் ஏதும் செய்ய இயலாமல் அவளை பார்த்துக் கொண்டே குடித்தான்.



விதி வலியது........

............

வீடு வந்து சேரும் வரை எவரும் எதுவும் பேசவில்லை..... அனைவருக்கும் மௌனமே மொழியாகிப் போக ரித்துவை அவள் வீட்டில் இறக்கி விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.



வந்ததும் வராததுமாக யாரையும் கண்டு கொள்ளாமல் அனன்யாவுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைய ரிஷிக்கு வந்ததே கோபம்....

அனைவரும் இருந்தபடியால் எதுவும் செய்யமுடியவில்லையாயினும் அவன் கண்கள் சிவந்திருப்பதிலிருந்தே அவன் கோபம் புரிந்தது ஆரவ்விற்கு....



அவனிற்குமே எரிச்சலாகத்தான் இருந்தது அஷ்வினியின் செய்கை... ஏன்தான் இப்பிடி நடந்துக்குறாளோ என சலித்துக் கொண்டவன் ரிஷியை கைத்தாங்கலாக கொண்டு போய் ரூமில் விட்டு வந்தான்.



அனன்யாவின் அறை.....



வலியில் முகத்தை சுழித்துக் கொண்டு படுத்திருப்பவளை கைகட்டி நின்று ஒரு கணம் பார்த்திருந்தாள்.



அவளுக்குமே அவள் செய்கை பிடிக்கவில்லை தான்.... இருந்தும் என்னதான் செய்வது?

மனம் முழுவதும் அனன்யாவின் மேல் வெறுப்பு இருந்தாலும் இப்போது அதை காட்டும் நேரமல்லவே!

உயிருக்கு போராடிக்கொண்டிரும் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கிறாள் அவ்வளவே..... மற்றபடி அவள் திருந்தியிருந்தாலும் திருந்தப்போவதில்லை என்றாலும் அதை பற்றி அவளுக்கு கவலையில்லை....



இதை யாவற்றையும் புரிந்து கொள்ளாமல் அவள் மீது கோபம் காட்டினால் அவளும் என்னதான் செய்வது???



அனன்யா இந்த வீட்டிலிருந்து போகும் வரை அவளிடம் யாரும் பேசப்போவதில்லை என்பதுவும் அவளுக்கு தெரிந்துதான் இருந்தது. இருந்தும் அவளாய்த்தான் பேசுகிறாள்....



இப்போது ரிஷியிடம் நிற்காமல் வந்ததற்கு காரணம் அவன் உதாசீனம்தான்.... அவள் ஏதாவது செய்யப்போக அவன் கோபம் இன்னுமே கூடுமே ஒழிய குறையப் போவதில்லை என்பது அவளுக்கு தெரியாதா என்ன?!!.....



((ஆனால் அவளுக்கு தெரியாத ஒன்று...அவள் அருகில் வந்தால் கோபப்படுபவன் தான் அவள் இல்லாமல் போகவும் கோபப்படுவான் என்பது.....))



வீடு வந்து சேரவே மாலையாகியிருந்தது....

ஒரு பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியே வந்தவள் நேரே சமையலறை சென்று காபியை போட்டு எடுத்துக்கொண்டு மாடியேறினாள்.



இரண்டு கப்புகளை கயலிடம் கொடுத்தவள் மற்றையதை எடுத்துக் கொண்டு தன் அறை நோக்கி சென்றாள்.



ரிஷி பெட்டில் அமர்ந்தவாறு கண்களை மூடி சாய்ந்திருக்கவும் அவனருகே சென்று "தேவ்..." எனவும் கண்களை திறந்து அவளையும் காபி கப்பையும் ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் திரும்பவும் கண்களை மூடிக் கொள்ள அவளுக்குத்தான் தொண்டை அடைத்தது.



இதற்காகத்தானே விலகி இருக்கிறாள்.... தன் விதியை நொந்தவள் அவனருகில் இருந்த மேசையில் கப்பை வைத்துவிட்டு பால்கனிக்கு சென்று நின்றுகொண்டாள்.



அவன் அமைதியில் மனது வலிக்க கண்களிலிருந்து அருவியாய் இறங்கிக் கொண்டே இருந்தது கண்ணீர்.....



அருகில் அரவமில்லாமல் போக கண்களை திறந்தவன் அவள் பால்கனியில் நிற்பது கண்டு புருவ முடிச்சுடன் நெற்றி சுருங்க பார்த்துவிட்டு தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.



அழுது கொண்டிருந்தவளையும் யோசனையில் ஆழ்ந்திருந்தவனையும் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது அஷ்வினியின் மொபைலின் சிணுங்கல்.....



இருவரும் ஒரு சேர திரும்பிப் பார்க்க அது ஒருமுறை அதிர்ந்து அடங்கி மறுபடியும் அழைக்க மறுபக்கம் திரும்பி கண்களை துடைக்க அதை கண்டுகொண்டான் ரிஷி....



அவசரமாக வந்து அதை எடுத்து காதில் வைத்தவளையே தொடர்ந்தது அவன் ஆராய்ச்சிப் பார்வை......



"சொல்லு அண்ணா" அவள் அழைப்பிலேயே ஏதோ நடந்திருக்க வேண்டும் என யூகித்து விட்டான் போலும்



"என்ன ப்ராப்ளம் ரிக்ஷி?" என்றான் அஜய்..... அவன் ரிக்ஷி என எப்போது அழைப்பான் என்று அவளுக்கா தெரியாது.....



"ஒன்னுமில்ல அஜய் " என்றாள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு



"ஒன்னுமில்லன்னா எதுக்கு அழுதிருக்க? உண்மய மறெக்க ட்ரய் பண்ணாத"



"இல்லடா....எனக்கு ஒன்னுமில்ல...."



"சரி.....இன்னக்கி கயல்கூட வருவல்ல?" என்றதும்தான் அவளுக்கு வருண் நிணைவே வந்தது.....



எவ்வளவு ஆசையாக வந்தாள் தன் கணவனிடம் விஷயத்தை பகிர..... எல்லாம் கனவாய் போனதோ!!!

அழுகை முட்டிக் கொண்டு வந்தது....ஃபோனை கையிலிருந்து எடுத்து வாய் பொத்தி கேவலை அடக்கியவள்



"இல்ல அஜய்.....கயல்... ஆரவ் அப்பறம் தேவ் மூனு பேரும் வருவாங்க.... எனக்கு கொஞ்சம் முக்கியமான வேல இருக்கு"



"நீயும் கட்டாயம் வர...."



"முடியாது அஜய்...." அவன் ஃபோனை வைத்திருந்தான். அதை ட்ரஸ்ஸிங் டேபிளில் வைத்தவள் ரிஷியிடம் வந்து நின்று தலை குனிந்தவாறே



"இன்னக்கி....அ... அம்மா வீட்டுக்கு பொய்ட்டு வரீங்களா?" அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அமைதியாகவே இருக்க அவள் மேலும் தொடர்ந்தாள்.



"இந்த நிலமைல போறது கஷ்டம்னு எனக்கு தெரியும்....பட் ப்ளீஸ்...." என்றவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.



இருவர் கண்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதோ!!!! அவளின் கண்கள் இறைஞ்சுதலாய்... அவனதோ குற்றம் சாட்டுவதாய்...



அவன் வெடுக்கென தன் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொள்ளவும் கதவு தட்டப்படவும் நேரம் சரியாக இருந்தது.திரும்பி பார்த்தவள் அங்கே கயல் நின்றிருக்கவும்



"வா...கயல்...எதாவது வேணுமா?" என கேட்டவாறே அவளிடம் செல்ல



"இல்ல அஷ்வி....அம்மா கால் பண்ணாங்க... அதான்...."



"ஓஹ்....நா வர்ல... தேவ்வ கூட்டிட்டு போறியா?" எனவும் அவளை அங்கிருந்தே முறைத்தவன் கயலிடம்



"நீங்க போய்ட்டு வாங்க கயல்...நா வர்ல" எனவும் அஷ்வி கயலிடம் வருணுக்காக பார்வையால் கெஞ்ச அதை புரிந்து கொண்டவளாய்



"மாமா ப்ளீஸ்.... முக்கியமான விஷயத்துக்காகதான் அம்மா கூப்டிருக்காங்க.... ப்ளீஸ் மாமா...."எனவும் அஷ்வி முறைத்தாளே ஒரு முறைப்பு.....



"இவ எதுக்கு நம்மல மொறக்கிறா... சரியாத்தானே பர்ஃபோமன்ஸ் குடுக்குறோம்...பத்தாது போல" என யோசித்தவள்



"ப்ளீஸ்...மாமா...ப்ளீஸ்.."



"இல்ல கயல்...நீங்க போ..."



"முடியாதுன்னு சொல்லாதீங்க மாமா... அக்காவும் வர்ல...நீங்களும் வர்லன்னா எப்பிடி?"



"உன் அக்காவ கூட்டிட்டு போக வேண்டியது தானே?"



"அவக்கு வேலன்னு சொல்றா"



"அப்படியென்ன நெட்டி முறிக்கிற வேல?" சற்று கடுப்புடனே கேட்டான்



"அத உங்க பொண்டாட்டிகிட்டயே கேக்க வேண்டியது"

எனவும் அவன் மௌனமாகிவிட அஷ்வினியின் உதட்டில் கீற்றாக புன்னகை அரும்பியது.



"மாமா....ப்ளீஸ்...." எனவும்



"உன் அக்காவயும் வர சொல்லு கயல்..." என்றான் எங்கோ பார்த்தபடி...அதில் சட்டென அவன் புறம் திரும்பியவள் அவனுக்கு கோபம் வரும் என தெரிந்தும்



"நா அனன்யா கூட இருக்கனும்" என்றாள். அவளை கண்கள் சிவக்க பார்த்து முறைத்தவன் கயலிடம்



"நீ போ கயல் நா குளிச்சிட்டு வந்தட்றேன்..." உடம்பிலுள்ள சூடு சற்று மட்டுப்பட்டு தெம்பாக இருக்கவும் சரி என்றான்.



"தேங்ஸ் மாமா...."என்றவள் சிட்டாய் பறந்து விட வாசலிலேயே நின்றுவிட்டாள்.பின்னே அவனிடம் யாரு வாங்கி கட்டிக் கொள்வது...



மெதுவாக எழுந்து குளியலறை சென்று கதவடைக்கவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது. அவனுக்கு துணியை எடுத்து வைத்தவள் அனன்யாவை பார்க்கச் சென்றாள்.



அனைவரும் ஹாலுக்கு வந்திருப்பது கண்டு தானும் வெளியே வந்தவள் அவளை இரு ஆண்களும் முறைத்துக்கொண்டு நிற்பதை கண்டு கொள்ளாமல் கயலிடம் மட்டும் விடை பெற்றாள்.



அவர்கள் மூவரும் வெளியேறிய அடுத்த நிமிடம் அனன்யாவின் அறையிலிருந்து " அம்மா..." என சத்தம் வரவும் அங்கு ஓடியவள் அறையில் அவள் அமர்த்திவிட்டு போன கமலம் அம்மா கீழே இரத்த வெள்ளத்தில் கிடக்க அவருக்கு முன் கையில் கத்தியுடன் குரூரமாய் நின்றிருந்த அனன்யாவை பார்த்து உறைந்து போனாள் அஷ்வினி....


தொடரும்.........



05-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 16 ❤



"அம்மா...." கத்தியவாறே ஓடிப்போய் அவரை உலுக்க அவரோ அதற்குள் உயிரை விட்டிருந்தார்.

ஆக்ரோஷமாய் எழுந்தவள் அவளுக்கு அறையப் போகுமுன் அந்த கத்தி அவள் வயிற்றுக்குள் இறங்கியிருந்தது.



அஷ்வினி கீழே சரியவும் கத்தி கத்தி சிரித்த அனன்யா தன் வயிற்றுக்கு போட்டிருந்த கட்டை அவிழ்கவும் அதிலிருந்து சிவப்பு நிறத்தில் திரவம் மாறி ஒன்று வெளியேற அதையும் பிய்த்து எடுக்கவும் தான் தெரிந்தது நேற்று கூட இதிலிருந்து தான் ஒழுகியிருக்கிதென்று....



அவள் அதிர்ச்சியை பார்த்து கத்தி கத்தி சிரித்தவள்

"என்ன அஷ்வினி.... எதுக்கு இப்போ என்ன ஷாக்கா பாத்துட்டு இருக்க? ஓ...நேத்து நா நடிச்சத நம்பிட்டியா... ச்சு...ச்சு...ச்சு... பாவம் நீ.... எல்லோரையும் எதிர்த்துட்டு என்ன கூட்டி வந்து ஏமாந்துட்டல்ல?ஹூம்... என்ன செய்றது உன் கேரக்டர் அப்பிடி.... இப்போ பாரு....சோ சேட்..." பேசிக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு கண்கள் சொறுக ஆரம்பித்துவிட்டது. அதை அறியாதவளோ இன்னும் பேசினாள்.



நார்மலாக பேசிக் கொண்டிருந்தவள் திடீரென கண்கள் பழிவெறியில் பளபளக்க



"உன் புருஷன் என் அப்பாவயும் என் அக்ஷுவயும் கொல்லுவான்... அத நான் கைகட்டி வேடிக்க பாக்கனுமா?சும்மா ஆப்படிச்சா வலிக்காதுல... அதான் அவன் இடத்துக்கே வந்து அவன் பொண்டாட்டியவே போட்டு நா யாருன்னு ஒரு சின்ன டெமோ காட்டினேன் செல்லம் வர்ட்டா.." என்றவள் அவளை தாண்டிப்போய் கதவை திறக்க அதுவோ வெளியால் லாக் பண்ணப்பட்டிருந்தது.



***



கார் கேட்டை தாண்டி கொஞ்ச தூரம் சென்றிருக்கும்... ஏனோ மூவரின் மனதும் படபடவென அடித்துக்கொள்ள ரிஷி



"ஆரு.... நாம திரும்பி வீட்டுக்கு போயிரலாம்டா.... நாம நெனக்கிற அளவுக்கு அஷ்வினி அங்க தனியா இருக்குறது பாதுகாப்..." என சொல்லிக் கொண்டிருக்கும் போது ரிஷியின் போன் ஹை டெஸிபலில் கத்த துவங்கியது.



அதை அவன் எடுக்கு முன் கட்டாகி அடுத்தது ஆரவ்வினது சிணுங்க கலவரமான ரிஷி



"சாமிண்ணாவான்னு பாரு ஆரு..." என சொல்லாமுடிக்க அதுவும் கட்டாகி கயலது போன் சிணுங்க அதை எடுத்தவள்



"சாமி அண்ணாதான் மாமா...." என்றவள் அடண்ட் செய்து காதில் வைக்க பரபரப்பாக ஒலித்தது அவர் குரல்



"அம்மா...அம்மா...நம்ம அஷ்வினி பாப்பாவ அந்த பொண்ணு கத்தி.." எனும்போதே அவரின் கெட்ட காலமோ இவர்களின் கெட்ட காலமோ அவரின் போன் பேலன்ஸ் இல்லாமல் கட்டாகிவிட இவளுக்கு அதே நேரத்தில் டவர் கிடைக்காமல் போக "ஹலோ..ஹலோ...." என்றவள்



"மா...மாமா....ஆ...ஆரு... அஷ்விய அந்த பொண்ணு கத்தின்னு என்னமோ சொல்றாரு.. எனக்கு பயமா இருக்கு" என்றவளது கூற்றில் ரிஷிக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. அடுத்த நிமிடம் கார் ஆரவ்வின் கைகளில் சீறிப்பாய பதினைந்து நிமிடங்களில் வீட்டின் முன் கார் க்ரீச்சிட்டு நின்றது.



காரை நிறுத்து முன்னே பாய்ந்து இறங்கிய ரிஷி புயல் போல் வீட்டுக்குள் நுழைய அதற்குள் ஹாலுக்கு வந்திருந்த சாமி



"தம்பி.... பாப்பா அந்த ரூம்ல....அந்தப் பொண்..." அடுத்ததை கேட்கவெல்லாம் அவன் அங்கு இல்லை....



பூட்டியிருந்ததை திறக்க கூட அவகாசமில்லாதவன் போல் உடைத்துக் கொண்டு போனவனின் இதயம் தாறுமாறாக துடிக்க "அஷூ......"என கத்திக் கொண்டே அவளை மடியில் ஏந்தியவன்



"ஏ....ஏ...ஏய்...அஷு...அஷு...ஒன்னில்ல... ஒ...ஒன்னில்ல... நாம நாம ஹாஸ்பிடல் போலாம்டா... இங்க....பாரு....உ....உன் தே...தேவ்டி... அ...அஷு எந்திரிடி..." என்றவனின் பேச்சுக்குரல் அவள் ஆழ்மனதை தட்டியெழுப்ப



"தே..தேவ்..சாரி..ந..." என்றவளின் தலை மறுபக்கம் சாய ரிஷி "நோ....." என கத்தவும்தான் அதிர்ச்சியில் வாசலில் நின்றிருந்தவர்கள் நிகழ்காலத்திற்கு வந்தனர்.



"அக்கா..."என கத்திய கயல் அவளருகில் செல்லப்போக அவளை எட்டிப்பிடித்து நிறுத்திய ஆரவ் வெளியே அஷ்வியை கொண்டு வருவதற்காக கயலோடு சேர்ந்து வெளியேறியவன் அவளை அங்கே நிறுத்திவிட்டு அவசரமாக சென்று காரை ஸ்டார்ட செய்ய கயல் முன்னால் ஏறிக்கொள்ள அஷ்வியுடன் ரிஷி பின்னால் ஏறவும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் பிரபல தனியார் மருத்துவமனையில் நின்றது ஆரவ்வின் கைங்காரியத்தில்....



அவள் ஐ.சி.யு வில் அட்மிட் பண்ணப்பட தன் சக்தியெல்லாம் வடிந்தாற் போல் தொப்பென சோஃபாவில் அமர்ந்த ரிஷியை அவசரமாக பிடித்தான் ஆரவ்.



"அண்ணா... கண்ட்ரோல் யுவர் செல்ஃப்...அவளுக்கு ஒன்னும் ஆகாது...." என்றவனின் குரலுக்கு சுவற்றில் சாய்ந்து எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தவனின் பார்வை ஒருசொட்டுக் கூட அசையவில்லை....



அவனின் கையை அழுத்திக் கொடுத்தவன் எழுந்து சுவரில் சாய்ந்து அழுதுகொண்டிருக்கும் தன்னவளின் பக்கம் சென்று அவள் தோல் தொட்டு



"அம்மு...." என்றதுதான் தாமதம் அவனை கட்டிப் பிடித்து கதறிவிட்டாள்.அவள் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தவன்



"அம்மு....அழாதடா....அஷ்விக்கு ஒன்னும் ஆகாது.."



"ஆ...ஆரு..அக்...அக்கா..."



"ஓன் அக்காதான்டா....அவளப்பத்தி ஒனக்கு தெரியாதா... நம்மல விட்டு எங்கயும் போக மாட்டா..."



"இ...இ...இல்ல ஆரு...ர...ரத்தோம்..."



"ஷ்....அம்மு மனச போட்டு கொலப்பிக்க கூடாது... அவளுக்கு எதுவும் ஆகாது....நீ வேண்ணாபாரு..." என பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் ஃபோன் அலற அதை எடுத்து பார்த்தவன் அதில் " அத்தை " என ஒலிரவும் கைகள் நடுங்க அடண்ட் செய்து காதில் வைக்க



"மாப்ள... ஏன் இவ்வளவு நேரம்....பிரச்சின ஒன்னுமில்லயே..."



"இ....இல்ல அத்தை...அஷ்விக்கு...."



"அஷ்வாக்கு என்னாச்சி?" கலவரமாய் ஒலித்தது அவர் குரல்



"சின்ன ஆக்ஸிடண்ட்...." அவ்வளவுதான் சொன்னான் மறுபக்கம் சத்தத்தையே காணாமல் போக



"அத்த... அத்த...." என்றவனின் குரலுக்கு பதிலளித்தது அஜய்யின் குரல்



"அஷ்விக்கு என்னாச்சு?"



"அது...அது...சின்ன ஆக்ஸிடண்ட்...."



"வாட்..எந்த ஹாஸ்பிடல்?"



"விமல் ஹாஸ்பிடல்...." என்றவனின் கால் கட்டாகியிருந்தது.



குடும்பத்தினர் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். கோர்ட்டிலிருந்து நேரே அங்கு கொஞ்சம் லேட்டாகி வந்தவன் முதலில் கண்டது அஜய்யிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்த ஆரவ்வைத்தான்.



நடந்து கொண்டிருந்தவன் சட்டென ப்ரேக் பிடித்தார் நின்றுவிட்டான்.அவனுக்கு எதுவுமே புரியவில்லை....



தன் தாயை கட்டியணைத்துக் கொண்டு ஒரு சின்ன பெண் வேறு அழுது கொண்டிருக்க அவர் அவளின் தலையை வருடி ஆறுதல் படித்தியவாறே அவரும் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.



இன்று காலையில் நடந்த அஷ்வியுடனான பேச்சுவார்த்தை ஞாபகத்தில் அலைமோத சட்டென அவள் தான் கயல் என யூகித்தவன் ஆரவ் கயலுடைய கணவனாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தவனுக்கு மனதில் அத்தனை நிம்மதி!!!



ஆனால்....ஆர்.கே??? என மனதில் நினைத்தவனது சந்தோஷம் நொடியில் வாடிப்போனது...



((விஜயலக்ஷ்மியும் கயலும் ரிஷியை மறைத்து நின்றுகொண்டிருந்ததால் அவன் ரிஷியை காண வாய்ப்பு இல்லாமல் போயிற்று))



எதேச்சையாக திரும்பிய ஆரவ்வின் கண்களில் வருண் பட அவன் வாய் தானாக முணுமுணுத்தது அவன் பெயரை.....



"வருண் அண்ணா..." என்றவனின் குரலில் ரிஷியை அலசிக்கொண்டிருந்தவன் சடாரென அவன் புறம் திரும்ப அவனை வாரி அணைத்துக்கொண்டவனை தானும் அனைத்தான் வருண்.



அந்த இறுகிய அணைப்பில் எத்தனை எத்தனையோ செய்திகள் அடங்கி இருந்தனவோ!!!



சட்டென விலகியவன்

"ஆர்.கே..?" என கேள்வியாய் நிறுத்த ஆரவ்வின் கண்கள் போன திசையை கண்டு இதயம் அதிர வேக எட்டுக்களால் அந்த இடத்தை நெருங்கியவன் தலையை கையால் தாங்கிப் பிடித்து அமர்ந்திருந்தவனை கண்ட மாத்திரத்தில் "ஆர்.கே.." என்றவாறு கைகள் நடுங்க தோல் தொட இவ்வளவு நேரம் வேறு எங்கோ உலகத்தில் இருந்தவன் சலேரென நிமிர்ந்து பார்தான் குரல் வந்த திசையை!!!



அஷ்வியின் குடும்பத்தினர் வந்த விஷயமே தெரியாது அவனுக்கு...... அவன் மனம் முழுவதும் இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த தன் மனையாளின் பிம்பமே!!!!



வருணுக்கும் உள்ளே அஷ்வினி இருப்பது தெரியாது.... அவன் கோர்டிலிருந்தே வந்திருக்க அவனுக்கு விஷயம் தெரிவிக்கப்படவில்லை.....

ஹாஸ்பிடல் பெயர் மட்டுமே கூறப்பட்டிருக்க பதற்றத்துடன் வந்து சேர்ந்தான்.



இங்கு வந்து பார்த்தால் ஆரவ் நின்று கொண்டிருக்க அதிர்ச்சியில் அப்போதுதான் சுற்றுமுற்றும் பார்த்தான். கயலை கண்டு ஆரவ்வை யூகித்தவனுக்கு அஷ்வி ரிஷியின் மனைவியாய் இருப்பாளென அவனுக்கு எங்கே தெரியப் போகிறது...



தன் தோல் தொட்ட நபரை கண்டு அதிர்ச்சியில் வேகமாக எழுந்த ரிஷி ஷாக்கடித்தவன் போல் வருணை பார்க்க.... வருணின் கண்களிலும் அப்பட்டமாய் அதிர்ச்சி தெரிந்தது.



அதிர்ச்சியிலிருந்து விலகிய வருண் கண்கள் கலங்க " மச்சி..." என அழைத்தவன் ரிஷியை இறுக்க அணைத்தான்.



எத்தனை வருடங்களாகிவிட்டது அவனை பார்த்து... குற்ற உணர்ச்சியில் தவித்துப் போயிருந்த இருவருக்குமே ஆறுதலாக இருந்தது அந்த அணைப்பு......

ரிஷிக்கு அவனை நம்ப மறுத்தது என்றால்... அவணுக்கு தெரிந்தும் தன் நண்பனை தனியே விட்டுப்போனது குற்றவுணர்வாக இருந்தது.



டாக்டர் மாஸ்கை கழட்டியபடியே வெளியே வர தன் நண்பனை விட்டு விலகி அவசரமாக அவரிடம் செல்லவும் மீண்டும் குழப்ப ரேகை படர்ந்தது வருண் முகத்தில்.... அதை கண்டு கொண்ட விஜயலக்ஷ்மி



"இந்த தம்பிதான் நம்ம அஷ்வாவ கட்டியிருக்குறவரு..." எனவும்



"வாட்..."என உச்சகட்ட அதிர்ச்சியில் கத்த அவனை புரியாமல் பார்த்தவரிடம்



"அ...அப்போ... ரிக்ஷி தான் உள்ள இருக்காளா?" குரல் நடுங்கியது அவனுக்கு...

அருகில் நெருங்கிய ஆரவ் " ஆமாம் " என்பதுபோல் தலையை அசைக்க இப்போது நிலை தடுமாறி அமர்வது அவன் முறையாயிற்று...



அதற்குள் டாக்டரை நெருங்கிய ரிஷி

"எ....எ..என் அஷுக்கு ஒன்னில்லல்ல டாக்டர்?" எனவும்



"இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது மிஸ்டர். மாறன்.... கத்தி ஆழமா குத்தியிருக்குறதும் இல்லாம ப்ளட்டும் அதிகமா லாஸ்ஸாகியிருக்கு.... இன்னும் அவங்க சுய நினைவுக்கு கூட வராம இருக்காங்க...." என்றவரின் பேச்சில் மொத்தமாக இடிந்து தரையில் அமர்ந்தான் தி க்ரேட் பிஸ்னஸ் மேன் ரிஷிகுமார் தேவமாருதன்...



ரிஷி இடிந்து போய் தரையில் அமர அவனை பிடிக்கப் போன ஆரவ்வின் காலரை கோபமாக பிடித்து அஜய்



"என்கிட்ட என் அஷ்விக்கு சின்ன ஆக்ஸிடென்ட்னு தானேடா சொன்ன... இப்போ டாக்டர் என்னமோ கத்தி குத்துன்னு எல்லாம் சொல்றாரு... மரியாதயா உண்மய சொல்லு..இல்ல..." அவனை உலுக்க அதற்குள் அவனிடம் வந்த கயல் " அண்ணா அவர விடு" என்றவாறே ஆரவ்வை பிரித்தெடுத்து விட்டு அவனிடம் திரும்பி



"ஆரு மேலயோ மாமா மேலயோ எந்த தப்பும் கிடயாது அண்ணா... அஷ்வி மேலதான் தப்பு..இதுக்கு மேல எதுவும் கெக்காத ப்ளீஸ்..." எனவும் வேறு வழியில்லாமல் அமைதியாகி விட்டான்.



அதற்குள் ரிஷியை சேரில் அமர வைத்துவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட தன்னை கடிந்து கொண்ட விஜயலக்ஷ்மியை முறைத்து விட்டு ஈஷ்வரியின் அருகில் போய் நின்றான் அஜய்.



கோஞ்ச நேரம் கழித்து உள்ளே நுழைய்போன டாக்டரிடம் திடீரென வந்து நின்ற ரிஷி



"மிஸ்டர்.அர்ஜுன் எனக்கு அஷுவ பாக்கனும்" என்றான் ஏதோ முடிவெடுத்தவனாய்.....



அதை மறுக்க வாய் திறந்தவர் அவன் கண்களில் கண்ட உறுதியில் ஏதோ புரிந்து கொண்டவராக ஆமோதிப்பாய் தலையசைத்து அடுத்த அறிவுரை கூறும் முன் அவன் உள்ளே சென்றிருந்தான்.



அவன் அதிரடியில் ஸ்தம்பித்தாலும் அவனை நினைத்து அவருதடுகளில் மர்மப் புன்னகை ஒன்று தோன்றாமல் இல்லை.....



உள்ளே நுழைந்தவன் அவளருகில் சென்று அமர்ந்து அவள் கைகளை தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்தவன் அவளையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.



அவள் மீது அளவுகடந்த கோபம் இருந்த அதே நேரம் நெஞ்சின் ஓரம் வலி ஏற்படுவதை உணர்ந்துதான் இருந்தான்.



அந்த வலிக்கான காரணம் காதல் என்பதைத்தான் அவள் இரத்த வெள்ளத்தில் இருந்து அவன் நெஞ்சு அவளுக்காக துடித்த போதே கண்டு விட்டானே!!!



ஆம்.... அவன் அவளை காதலிக்கிறான்.

எப்போது காதல் வந்ததென்று கேட்டால் அதற்கு விடை அவனுக்கு தெரியாதுதான்.....

ஆனால் இப்போது இந்த நொடி அவள் உயிருடன் வேண்டும் அவனுக்கு... அது மட்டுமே மனது ஜபம் போல் உச்சரித்துக் கொண்டிருந்தது.



மெல்ல எழுந்து அவள் நெற்றியில் தன் உதட்டை ஒற்றி எடுத்தவன்



"அஷு....." என்றான் உள்ளத்தை உருக்கும் குரலில்...



அக்குரலில் தூக்கிக் கிடந்த அவள் ஆழ்மனம் விழித்துக் கொண்டதுவோ!!!



"அஷு.... திரும்ப என்கிட்ட வந்துடுடி ப்ளீஸ்.... எனக்கு நீ வேனும்டி.... இனிமே நீயா என்ன விட்டு விலகி போகனும்னு நெனச்சா கூட நா அதுக்கு அனுமதிக்க மாட்டேன்... டு யூ நோ ஒய் பேபி? பிகாஸ் யூ ஆர் மைன்..... எனக்கு சொந்தமானவள்டி நீ.... அப்பறம் எப்பிடி உன்ன என்ன விட்டு போக அனுமதிப்பேன் சொல்லு?" என்றவனின் கண்களில் இருந்து இரு சொட்டு நீர் துளிகள் அவள் கையை தீண்ட கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவு அடைந்து கொண்டிருந்தாள் அவள்....



"எப்பவும் பட்டாசு மாறி பேசிகிட்டே இருப்பியே அஷு.... இப்போ எதுக்குடி அமைதியா இருக்க... உனக்கு ஒன்னு தெரியுமாடி? நீ பேசாம அமைதியா இருந்தா எனக்கு புடிக்காது.... எஸ் ஐ நோ நீ பேசினா எரிஞ்சு விழுவேன்....பட் நீ பேசாம இருக்குறப்போ எனக்கு இங்க என்னமோ பண்ணும்டி....." என்றவன் ஆள்காட்டி விரலால் தன் இதயத்தை சுட்டிக் காட்டினான்.



" அஷு...எந்திரிடி..... நா சொல்லியும் கேக்காம அவள அனுமதிச்சல்ல... ஏன்டி எப்போவும் என்மேல ஒனக்கு நம்பிக்கையோ அக்கறையோ இல்லல்லடி?" என்றவனின் கை திடீரென அழுத்தப்பட நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் அத்தனை மகிழ்ச்சி!!



பின்னே அவன் மனையாள் கண்விழித்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.



அவளை அணைத்து யமுத்தமிடத் துடித்த இதயத்தை அடக்கி முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு அவளை பார்க்க அவளோ இன்னும் அவனையே தான் பார்த்துக் கொண்டிதாள்.



அவனின் காய்ந்து போன கண்ணீர் கோடுகள் அவன் அழுதிருக்கிறான் என்பதை பறைசாற்றனாலும் அவன் முகமோ அதற்கு மாறாக கோபத்தை தத்தெடுத்திருப்பதை தான் குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.



அவள் குழப்ப விழிகளை கண்டு கொண்டவன் வேகமாக எழுந்து வெளியே செல்ல எத்தனிக்க அவன் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டவள் கண்ணீருடன் அவனை ஏறிட அவளை திரும்பிப் பார்த்தவன் அவள் கண்ணீரை கண்டு துடித்துப் போனாலும் வெளியில் விறைப்பாகவே நின்றான்.



"சாரி... தே...வ்" அந்த வார்த்தைகளை கூட அவளால் சொல்ல முடியாமல் வலித்தது போலும்.வேதனையில் முகம் சுருங்க



"வீட்டுக்கு போய் பேசிக்கலாம் அஷ்வினி.... நீ ஸ்ட்ரைன் பன்னிக்காத.... நா டாக்டர வர சொல்றேன்" என்றவன் அவள் கைகளை விலக்கி விட்டு சென்றுவிட விழவா வேண்டாமா என எட்டிப் பார்த்திருந்த கண்ணீர் மலுக்கென கண்ணத்தை தொட்டது.



((இதுங்கள எப்போ சேத்து வெச்சு நாம எப்போ கதய முடிக்கிறது.... ஷ்ஷப்பா..முடில🥱))



அதன் பிறகு நடந்ததெல்லாம் ஜெட் வேகம் தான்....



இன்றுடன் வீடு வந்து இரண்டு நாள் ஆகியிருந்தது. அவனை அன்று கண்டது தான் அதன் பிறகு அவனை காணவே இல்லை...

வேண்டுமென்றே தான் தவிர்த்திருந்தான்.



அவனிடம் அனுமதி வாங்கிய விஜயலக்ஷ்மி அவளை தங்கள் வீட்டுக்கே அழைத்து வந்துவிட அவனோடு பேசுவது என்ன பார்ப்பதே அரிதாகிப் போனது.



வருணுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டு அவனும் அவள் முகத்தை பார்க்காமல் கோபம் காட்டிக் கொண்டிருந்தான்.



அஜய்க்கு விஷயம் தெரிந்தாலும் அஷ்வியுடன் பேசினான். அவனுக்குத்தான் அவள் முகம் கசங்குவதே பிடிக்காதே!! முதலில் கோபமாக பேச அவள் அழவும் அதற்கு மேல் அவனுக்கு கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை....



ஆரவ்வை சொல்லவே வேண்டாம்...ஏதோ தெரியாத மூன்றாவது நபரை பார்ப்பது போல் பார்த்து வைத்தான்.



வீட்டினருக்கு அந்த விஷயத்தை சொல்லாது ஏதேதோ சொல்லி சமாளித்து வைத்திருந்தனர் ஆண்களணைவரும்......



கயலும் அடம்பிடித்து அம்மா வீட்டுக்கே வந்திருந்தாள்.



ரிஷியின் வீடு.....



தன் லேப்டாப் முன் அமர்ந்து ஏதோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆரவ்.புருவ மத்தியில் முடிச்சு விழ கண்களை இறுக்க மூடிக்கொண்டவன் அன்று நடந்ததை அலசத் தொடங்கினான்.



அவனுக்கு அனன்யாவை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனதால் அஷ்வினி வந்து அவள் வீட்டில் தங்கப் போவதாக கூறிச் சென்றதுமே உடனே வீட்டில் ஒருவருக்கு அழைத்து அவள் ரூமில் மினி கேமராவை அங்கு மேசைக்கு மேலிருந்த பென் ஹால்டரில் பொருத்திவைத்துு விட்டான். கதவு அடைபட்டதும் ஷாக்காகி நின்றவள் அடுத்த நிமிடம் வீட்டு ஜன்னலை உடைத்து பாய்ந்திருந்தாள். அதைத்தான் அவன் இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்ததும்.



அவளுக்கு எதிரான ஆதாரம் கைகளில் இருந்தாலும் அவனுக்கு குழப்பமாக இருந்தது ஒரு விடயம் தான்.



இதுவரை இந்த வீட்டுக்கே வந்திராதவளுக்கு பின் பக்க வழி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை....

அப்படியிருக்க அவளுக்கு யாரோ இந்த வீட்டிலிருந்து உதவியிருக்கிறார்கள். உதவியவர் யார் என்பதே இப்போதைய அவனுடைய சந்தேகம்.



அந்த வீடியோவை திரும்ப திரும்ப ஓடவிட்டுப் பார்த்தவனுக்கு குழப்பம் அதிகரித்தே ஒழிய சந்தேகம் தீர வழியைக் தான் காணோம்.



அதில் அஷ்வினியிடம் அனன்யா கொலையை பற்றி பேசிய விஷயம் அவனுக்கு ஏற்கனவே தெரிந்தது தான்....

அதற்காகத்தானே இப்படி ஒன்று நடக்கும் என்று எதிர்பார்த்துத் தானே அவன் ரிஷிக்கு காவலுக்காய் அதே காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறான்.



கொலை தாக்குதல் ரிஷிக்கு வருமென்று பார்த்தால் அஷ்வினியை அல்லவா அது தாக்கியிருக்கிறது.



இது ஆரவ் கொஞ்சமும் எதிர்பார்க்காதது!!!

நல்ல வேளையாக அவள் உண்மையை கூறும் போது அஷ்வினி மயங்கியிருந்தாள். இல்லாவிட்டால் இன்று நடந்திருப்பதே வேறு என நினைத்தவன்

" ஷிட்.." என்றவாறே முடியை அழுத்தக்கோதிக் கொண்டு சித்தார்த்திற்கு கால் பண்ணி காதில் வைத்தவாறே பால்கனிக்கு சென்றான். அவன் காலை அவனும் எதிர்பார்த்திருந்திருப்பான் போலும் உடனே அடண்ட் பண்ணியிருந்தான்.



"சித்து...ஏதாவது க்ளூ கெடச்சிருக்கா?"



"ஆரு....நானும் பாத்தேன்டா...எனக்கு சாமிண்ணா மேலதான் சந்தேகமா இருக்கு..."



"என்னடா சொல்ற?"



"ஆமாண்டா....நீ சொன்னத வெச்சு பாக்கும் போது அன்னக்கி வேலக்காரங்க யாருமே வீட்ல இல்ல.... சாமி அண்ணன் லீவுல வீட்டுக்கு போயிருந்திருக்காரு.... ரைட்?"



"ம்...ஆமா.. பட்?"



"அவருக்கு அங்க வெச்சு தான் இவளால மிரட்டலோ இல்லண்ணா பணமோ.. ஏதோ ஒன்னால மிரட்டப்பட்டோ ஆசகாட்டியோ இருந்திருக்கனும்"



"அப்பிடியே வெச்சிகிட்டாலும் அவர் எதுக்குடா கால் பண்ணியிருக்கனும்?"



"விஸ்வாசம் மச்சான்.... நீங்க சோறு போட்ட இரத்தம் ஒடம்புல ஓடுதுல்ல?"



"டேய் தெளிவா பேசுடா...ஒரு மண்ணாங்கட்டியும் வெளங்கித்தொலக்கல"



"... "



"டேய் சிரிக்காத....

கடுப்பாகுது..."



"ஓகே... ஓகே.. மச்சி கூல்... இப்போ சொல்றேன் கேளு..."



"சரி...சொல்லித்தொல"



"எல்லோரும் வீட்டுக்கு போயிருக்க அவர் மட்டும் எப்பிடி வந்தாரு?"



"அதான்டா எனக்கும் குழப்புது"



"அப்பிடி வந்தவரு அனன்யா வந்திருக்குறதே தெரியாம எப்பிடி கதவ லாக் பண்ணுவாரு?"



"அப்போ அனன்யாவ ஏக்கனவே சாமிண்ணாக்கு தெரியும்குறியா?"



"எஸ் அஃப்கோர்ஸ் ஆரு..... லீவுல ஊருக்கு போயிருந்தவரு திடீர்னு எப்பிடி வந்து அதுவும் நீங்க கெளம்பின ஒடனே வந்திருப்பாரு..."



"பட் எதுக்குடா லாக் பண்ணனும்?"



"இவ்வளவு செஞ்சவருக்கு குற்ற உணர்ச்சியா இருந்திருக்கலாம்... அதுவும் அஷ்விய பார்த்த உடனே..."



"பட் வொய் மச்சி?"



"டேய் கேள்விக்கி பொறந்தவனே... என்ன கொஞ்சம் பேச விடுடா"



"ஹி..ஹி..நீ சொல்லு மச்சி"



"அஷ்விக்கு புடிச்ச வேலையாள் யாரு?"



"சாமிண்ணாதான்டா..வொய்?"



"மறுபடியும் கேள்வியா?"



"சரி...சரி சொல்லு"



"அனன்யாக்கு உதவி செஞ்சவருக்கு அஷ்விய பாத்த ஒடனே மனசு கேக்காம வெளியாள லாக் மண்ணியிருப்பாரு"



"இருக்கலாம்டா....இந்த வாலு (அஷ்வி) ஏதாவது அவருக்கிட்ட ஒலறியிருப்பா... நா அவகிட்ட கேக்குறேன்டா..."



"யாரு... நீ... அவகிட்ட?"



"ஆமா"



"இதுவர ஒரு வார்த்த பேசாம மூஞ்ச திருப்பிகிட்டு இருக்குற நீ?"



"அ...அது...அது..."



"டேய்..டேய்.. நடிக்காதடா"



"ரொம்ப ஓவரா பண்றா மச்சி" அவன் குற்றப்பத்திரிகை வாசிக்க அதில் சிரித்த சித்தார்த்



"அவளைப் பத்தி தான் ஒனக்கே தெரியுமேடா... கோச்சிகிட்டு இருந்தாலும் மனசளவுல கவலப்பட்டுட்டு தான் இருப்பா"



"......."



"டேய்...போய் பேசுடா... பாவம்... அண்ணா வேற பேசியிருக்க மாட்டாரு "



"ஆமாண்டா... அவ உள்ள இருக்கும்போது எவ்வளவு உடஞ்சி போய் தெரிஞ்சாரு தெரியுமா? எவ்வளவு துடிச்சாரு... இப்போ எதுவுமே நடக்காத மாறி அவள பாக்ககூட செய்யாம வீட்ல இருக்காருடா"



"அது உரிமக் கோபம் மச்சி... கொஞ்சம் கொளுத்தி போட்டோம்னா பத்திக்கும்"



"ம்... ஆமாண்டா... அத்த குல தெய்வ கோயிலுக்கு போகனும்னு சொன்னாங்க பாக்கலாம்...அது இருக்கட்டும் நீ எப்போ கல்யாணம் பண்றதா ஐடியா?"



"டீட்..." எனும் சப்தத்தில் ஃபோன் கட்டாகியிருப்பதை உணர்ந்தவன்



"படுபாவி வெச்சிட்டான்...பிடி குடுக்க மாட்டேங்குறானே" என நினைத்தவன் தன்னவளுக்கு அழைப்பு விடுத்தான்.



***



பால்கனியில் சாய்வு நாற்காலியில் கையிரண்டையும் தலைக்கு கொடுத்தவாறே கண் மூடி அமர்ந்திருந்தான் ரிஷி.



மனம் முழுதும் அனன்யாவின் செய்கையில் எரிமலை போல் வெடித்துக் கொண்டிருக்க முகம் ஏதோ சாதித்தவனாய் சாந்தமாய் இருந்தது!!!



ஆம்... அனன்யா அவனின் கஸ்டடியில் தான் இருக்கிறாள்.லவ் வந்தது தெரியாத போதே அஷ்வினிக்காக துடித்தவன் இப்போது மட்டும் விட்டுவிடுவானா என்ன?



மெதுவாக கண்களை திறந்தவன் தூரத்தில் தெரிந்த நிலாவை பார்த்தான். அதில் கூட தன் மனையாளின் பிம்பம் தெரிவது போலவே இருந்ததுவோ!!



தனக்குள் சிரித்துக் கொண்டவன் அவளைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்து போக அவன் யோசனையை தடை செய்வது போல் சினுங்கியது அவன் மொபைல்...



"ப்ச்..."என எரிச்சலில் எடுத்தவன் அதில் " மை சண்டக்கோழி " என ஒலிரவும் எரிச்சலில் இருந்தவனின் முகம் சூரியனாய் ஜொலித்தது.

அழைத்தது அவன் மனைவியாயிற்றே!!!



இது தினமும் நடப்பதுதான்... அடித்து ஓயும் வரை கால் பண்ணிக் கொண்டே இருப்பவள் அதுவும் எடுக்கப்படாவிட்டால் சாரி கேட்டு மேசேஜ் பண்ணிக் கொண்டே இருப்பாள்.



"என்ன தவிக்க விட்டல்ல...இப்போ நல்லா அனுபவி" என நினைத்துக் கொள்பவன் மறந்தும் எடுக்கவே மாட்டான்.



காலை.....



ஆரவ் ஏற்கனவே சென்றிருக்க கிரீச்சிட்டு வந்து நின்றது ரிஷியின் பிலக் ரால்ஸ் ராயல்ஸ் கார்....



கதவை திறந்து கொண்டு இறங்கி உள்ளே செல்ல அடியெடுத்து வைத்தவனின் கால் தடைப்பட்டு நின்றது அங்கு கண்ட காட்சியில்......



தொடரும்........



06-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 17 ❤



தன் காரிலிருந்து ஸ்டைலாக இறங்கி உள்ளே நுழையப் போனவன் அங்கே வீட்டின் முன் கார்டனில் ஒய்யாரமாக அமர்ந்து யாரோ ஒருவனுடன் சிரித்து பேசிக் கொண்டுடிருத்த தன் மனையாளை பார்த்தவனின் கால்கள் உள்ளே செல்ல மறுத்து கண்கள் சிவந்து போனது பொறாமை கோபத்தில்.....



"நான் வந்தது கூட தெரியாமல் அப்படியென்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது" என நினைத்தவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.



அவளை முறைத்து விட்டு கோபமாக உள்ளே நுழையப் போனவனை எதேச்சையாக வாசல் பக்கம் கண்களை சுழல விட்டவள் அப்போது தான் கண்டு கொண்டாள் போலும்!!!



முகம் முழுதும் சந்தோஷத்துடன் "தேவ்..." என முணுமுணுத்ததில் தானும் வாசல் பக்கம் கண்களை திருப்பினான் விஜயலக்ஷ்மியின் அண்ணன் மகன் "அர்விந்த்"



அஷ்வியின் புரம் கண்களை திருப்பி

"யாரு அஷ்வி இந்த ஹேண்சம்?"



"தேவ்டா....என் புருஷன்"



"ஓஹ்....இவர்தான் அந்த லக்கி பாயா?"



"ம்...ம்....இரு வந்துட்றேன்" என எழுவதற்குள் அவன் வீட்டு வாசல் படியை நெருங்கியிருக்க இவள் "தேவ்..." என கத்தியழைக்கவும் சட்டென நின்றாலும் அவளை திரும்பிப் பார்க்கவில்லை.....



கொஞ்ச தூரம் நடந்து வந்தவளுக்க அதற்கு மேல் முடியாமல் போக



"தேவ்...என்னால இதுக்கு மேல முடியல..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்...." என்றவள் இவன் அவளை தூக்க எண்ணி அவள் புரம் திரும்ப அவளோ அர்விந்திடம்



"அர்வி....என்ன கொஞ்சம் தூக்குறியாடா?" எனவும் ரிஷிக்கு காதில் புகை வராத குறை தான்....



"சரி அஷ்வி...இரு வர்றேன்" என்றவன் ரிஷி பார்த்த பார்வையில் தயங்கி



"அ...அது...அது...அஷ்விம்மா நீ ஏன் உன் புருஷன் கிட்டயே தூக்க சொல்லக் கூடாது?"



"அவர் அங்க இருக்காருடா...நீதானே பக்கத்துல இருக்க..."



"பட்...எனக்கு சின்ன வேல இருக்கு அஷ்வி"



"ஒரு வேலயுமே இல்ல...நான் ஃப்ரீனு இப்போதானேடா என்கிட்ட சொன்ன?"



"அது அப்போ...இது இப்போ" என வசனம் பேசியவன் அவள் திரும்பவும் ஏதோ கேட்க வாயெடுக்கு முன் சென்று விட அஷ்வினி திரும்பி ரிஷியை பார்க்க அவனோ கைகளிரண்டையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டபடி அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.



"இந்த கமாண்டர் எதுக்கிப்போ நம்மல முறைக்கிறான்" என நினைத்தவள்



"தேவ்...வந்து...நா.." என கூறிக் கொண்டிருக்கும் போதே அவளை தன் கைகளில் ஏந்தியவனை பயத்தில் கண்கள் மூடி அவன் கழுத்தில் தன் கரங்களை மாலையாக கோர்த்து அவன் நெஞ்சில் ஒன்றவும் அவளை பார்த்து தன் கீழுதட்டை கடித்து வந்த சிரிப்பை அடக்கியவாறே உள்ளே நுழைந்தான்.



நடந்த யாவற்றையும் அடக்கப்பட்ட சிரிப்புடன் மேலே பால்கனியில் நின்றவாறு பார்த்துக்கொண்டிருந்த ஆரவ் தானும் கீழிறங்கி வந்தான்.



ரிஷி ஹாலுக்குள் நுழைய அங்கே கயல் காலேஜ் போகாமல் கால் ஆட்டியபடி டீ.வி பார்த்துக்கொண்டிருக்க இவன் நுழையவும் அவசரமாக எழுந்தவள் "வாங்க மாமா..." எனவும் தான் திடுக்கிட்டு விழித்தாள் அஷ்வினி.



அதற்கிடையில் சத்தம் கேட்டு விஜயலக்ஷ்மியும் ஈஷ்வரியும் ஹாலுக்கு வர ஆரவ்வும் அவர்களை பார்த்தவாறே வந்து நின்றான்.



எல்லோரும் வரவும் சங்கடப்பட்ட அஷ்வி இறங்க முற்பட... எங்கே அவளுக்கு அசைக்க கூட முடியாமல் போனது.



"வாங்க மாப்பிள்ள..." என வரவேற்ற விஜயலக்ஷ்மியிடம்



"அத்த என்ன பேரு சொல்லியே கூப்புடுங்க.." எனவும் அவன் பணிவான பேச்சில் மகிழ்ந்தவர்



"இருக்கட்டும் மாப்பிள்ள... அஷ்வாவோட ரூம் மேல இருக்கு" என காட்டியவரை நன்றியுடன் பார்த்தவன் மேலேறிச் சென்றான்.



பெண்களிருவரும் உள்ளே சென்றதும் அவர்களையே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த கயல்



"ஆரு....."



"......."



"டேய்...ஆரவ்"



"என்ன அம்மு?"



"நம்ம மாமாவாடா இது....அம்மாகிட்ட அவ்வளவு தன்மயா பேச வேற செய்யறாரு..."



"அதான்டி நானும் ஷாக்கடிச்ச மாறி பாத்துட்ருக்கேன்"



"டேய்....என்னடா நடக்குது.. டாம் அண்ட் ஜெர்ரி ரெண்டும் எப்போடா ஒன்னு சேந்தாங்க?"



"அது தெரிஞ்சா நா எதுக்குடி ஷாக்காகப் போறேன்?"



"நீ சொல்றதும் சரிதாண்டா...ஆரு இப்பிடியும் இருக்குமோ?"



"எப்பிடி?"



"இல்ல....அஷ்விக்கு கத்தி குத்துபட்டதுல நடக்க முடியாம மாமா பாவமேன்னு தூக்கிட்டு வந்திருப்பாரோ?"



"பாவமேன்னு தூக்கிட்டு வர்லடி.... பொறாமைல தூக்கிட்டு வந்தாரு"



"புரியிறா மாறி பேசவே மாட்டியாடா நீ?" என்றவளிடம் வெளியே நடந்ததை சொல்ல



"ஓஹ்ஹோ...அப்பிடி போகுதோ கத? அப்போ நாம இன்னும் கொஞ்சம் பத்தி விட வேண்டியதுதான்"



"சித்துவும் அதத்தான்டி சொன்னான்"



"யாரு நம்ம சித்தார்த் அண்ணனா?"



"ம்...ஆமா..."



"என்ன சொன்னாரு?"



"கொஞ்சம் கொளுத்தி போட்டோம்னா பத்திக்கும்னு சொன்னான்"



"சொந்த காதலிய புரிஞ்சிக்க முடில... ஆனா ஊருல உள்ள எல்லாரையும் சேத்து வெக்க ஐடியா குடுக்க தெரிது...." என முணுமுணுக்க



"சத்தமா பேசுடி" என்றான்.



"அப்போ அர்வி அத்தான வெச்சே சேத்துரலாம்னு சொன்னேன்"



"ஏய்...அவனுக்கு அத்தான் பொத்தான்ன அறஞ்சிறுவேன் பாத்துக்கோ"



"இதேதுடா வம்பா போச்சி...அத்தான அத்தான்னு தானே கூப்பிட முடியும்?"



"அதெல்லாம் எனக்கு தெரியாது... என்ன தவிற வேறு யாருக்கும் நீ அப்பிடி கூப்புட கூடாது சொல்லிட்டேன்"

என முகத்தை தூக்கி வைக்கவும் அவன் பாவனையில் அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.



"அவங்களுக்கு கொளுத்தினாதான் பத்தும்... உனக்கு கொளுத்தாமயே பத்துதேடா "



"ஒன்ன...." என காதை பிடிக்க



"ஆஹ்....வலிக்குது விடுடா..."



"இனிமே சொல்லுவ?"



"சத்தியமா சொல்லமாட்டேன் விடுடா தடியா..."



"அடிங்..ஒனக்கு என்ன பாத்தா தடியன் மாறி தெரியுதாடி?"



"ச்சே...ச்சே...இல்லங்க ஆரவ் சார்.. ஒங்களப்போய் அப்பிடி சொல்லுவாங்களா?"



"அடங்குறாளா பாரு..." என்றவன் தலையில் கொட்டி விட்டே விட்டான்.காதை தேய்த்து விட்டுக் கொண்டவள்



"ஆரு...நீ சொல்ற லாஜிக் படி பாத்தா நா மாமான்னு ரிஷிய கூப்புடறது அஷ்விக்கு புடிக்கல போலடா"



"அண்ணனயே பேரு சொல்லி கூப்புட்றியா?"



"அத விட்டுட்டு விஷயத்துக்கு வாடா"



"ஓகே ஓகே..கண்டினியூ பண்ணு"



"நா சொல்லி முடிச்சிட்டேன்டா எரும "



"கூல் செல்லம்....திரும்ப சொல்லு"



"முடியாது போடா"



"ப்ளீஸ்டி" என கெஞ்சவும் அன்று அனன்யா வீட்டுக்கு வந்த போது தான் கூப்பிடச் சென்று அவனை அப்படி அழைத்ததற்காய் முறைத்ததை சொன்னாள்.



"ஆக... அஷ்விக்கும் லவ் இருக்குங்குறியா?"



"ஆஃப் கோர்ஸ் ஆரு...."



"என்னடி பண்ணலாம்?"



"நீயே சொல்லு"



"மொதல்ல ரிஷிய வெளில கொண்டு வரலாம் அப்பறமா.. உன் அக்காக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்"



"மாமாவ எப்பிடிடா?"



"அதான் அர்விந்த் இருக்கான்ல... பயபுள்ள லண்டன்லயிருந்து வந்து எங்க கிட்ட சிக்கியிருக்கான்"



"அடப்பாவிகளா... நடு ஹால்ல வெச்சி புருஷனும் பொண்டாட்டியும் எனக்கு அடி வாங்கி தர ஐடியா பண்றீங்களேடா... இது உங்களுக்கே நியாயமா இருக்காடா?" வராத கண்ணீரை துடைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் அர்விந்த்.



அவனை பார்த்து இருவரும் சமாளிப்பாய் சிரிக்க



"அந்த ஹேண்ஸம் கையால எனக்கு அடி கண்பார்ம்...அப்படித்தானே?"



"என்ன அர்வி நீ.... அஷ்விக்காக அடி கூட வாங்கிக்க மாட்டியா?" என பாவமாக கேட்ட கயலிடம்



"அவரு முறைச்ச முறைப்புக்கே உள்ளுக்குள இன்னும் உதறுது.... இதுல அடி வேறயா?"



"ப்ளீஸ் அர்விந்த்..." ஆரவ்வும் தன் பங்கிற்கு கெஞ்ச வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள வேண்டியதாய் போயிற்று அவனுக்கு.....



***



தன்னை மெதுவாக பெட்டில் சாய்த்து படுக்கவைத்த தன்னவனையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அஷ்வினி.



அவள் பார்ப்பது தெரிந்தாலும் வேண்டுமென்றே வெளியேறப்போனவனின் கையை பிடித்தவள்



"தேவ்..." எனவும் அதற்கு பதிளலிக்காது அமைதியாகவே நின்றான்.



"தேவ்...." "...." "தே....வ்" "..."



"மிஸ்டர். ரிஷிகுமார் தேவமாருதன்" என்றவளை



'அப்போ இவளுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு...இருந்தும்...'என நினைத்தவன் சலேரென திரும்பிப் பார்க்க அதற்காகவே காத்திருந்தவள் போல்



"சாரி..." எனவும் அவனுக்கு சற்று முன் இருந்த மனநிலை மாறி அங்கே கோபம் குடியேற வெடுக்கென அவள் கையை தட்டி விடவும் அவளுக்கு முகம் சோர்ந்து போனது.

"தே...தேவ்....சாரி... தெரியாம பண்ணிட்டேன்.."

"நீ தெரியாம பண்ணியா?அவள நம்பாதன்னு அவ்வளவு சொல்லியும்... நீ என்ன மதிக்காம போனல்ல?"



"....."



"அது கூட விடு...என் கடந்த காலம் பத்தி தெரிஞ்சும் என்ன உதறிட்டு அவகிட்ட போயிருக்க?"



"இல்ல தேவ்....நா உங்கள உதறிட்டு போக நெனக்கல்ல....அவ உயிருக்கு....."



"நீ என்கிட்ட எதுவும் விளக்கம் தர தேவயில்ல.... உன் இஷ்டம் போலவே இருந்துக்க... நா எதுவும் சொல்ல போறதில்ல" என்றவனின் முன் வந்து நின்றவள்



"என் இஷ்டம் போல அப்போ நா செத்து போயிட்..." என சொல்லி முடிக்கவில்லை அடுத்த நிமிடம் அறைந்த அறைய கை ஓங்கியவன்



"என்னடி சொன்ன? இடியட்" திட்டிக் கொண்டே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.



((அடித்த கை தான் அணைக்கும் போலும்!!!))



அவனது இறுகிய அணைப்பில் இருந்தவாறே அவள் கதற அவள் கண்ணீர் அவன் ஷர்ட்டையும் தாண்டி அவனது நெஞ்சை நனைக்க அவளை இன்னும் தன்னுள் ஆழமாய் புதைத்துக் கொண்டான்.



அந்த அணைப்பு அவளுக்கும் தேவயாகவே இருக்க விசும்பலினூடே



"நா பண்ணினது த.. தப்புதான்... அ.... அதுக்காக என்ன பாக்க கூட மாட்டேன்னா... எ...எனக்கு கஷ்டமா இருக்காதா? வருண் அண்ணா ஆரு எல்லாம் பேசாதப்போ மனசு கஷ்டமா இருக்கு தான்... பட்...நீங்க பேசாம இருக்குறப்போ செத்துடலாம் போல இருக்கு தே...தேவ்"



"ப்ச் மறுபடி மறுபடி எதுக்குடி சாவ பத்தி பேசிட்ருக்க?"



"இப்போ கூட கோவப்பட்றீங்க?"



"பின்ன நீ செஞ்சு வெச்ச வேலக்கு உன்ன கொஞ்சுவாங்க பாரு?"



"அதான் சாரி கேக்குறேன்ல?"



"சாரி கேட்டா ஆச்சா?"



"அப்போ என்னதான் பண்ணனும்?" அவன் அணைப்பிலிருந்து திமிறி விடுபட்டவள் அவனை பார்த்து கேட்க



"......"



"சொல்லுங்க தேவ்?"

அவளுக்கும் வேறு எப்படித்தான் கேட்பது என சத்தியமாய் புரியவே இல்லை...



"....."



"நா வேணும்னா தோப்புக்கரணம் போடட்டுமா?" என கேட்டவளை பார்த்து சிரிப்பு வந்தாலும் ஏதோ ஞாபகம் வந்தவனாய்



"அன்னக்கி எதுக்குடி அம்மா வீட்டுக்கு போகனும்ன?" என்றான் பிடிவாதக் குழந்தையாய்...



"அது...அது...அது எதுக்கிப்போ.... என்ன மன்னிப்பீங்களா மாட்டீங்களா?"



"முடியாது....நீ அத சொல்ற வர இப்பிடியே கெஞ்சிகிட்டு இரு...." என்றவன் விருட்டென்று வெளியேறிவிட அவள் ஓய்ந்து போய் அமர்ந்து விட்டாள்.



கட்டிலில் தொப்பென ஓய்ந்து போய் அமர்ந்தவளுக்கு வயிற்றில் சுளீரென வலியெடுக்கு "அம்மா.."என சுவாதீனமாய் முனக திரும்பவும் உள்ளே நுழைந்தவனின் லேஸர் கண்கள் அதை படம்பிடித்து அவளை கோபத்துடன் முறைத்தது.



அவனை கண்டவள் முகத்தை சாதாரணமாக மாற்ற அவளை பார்த்தவாறே அழுத்தமான காலடிகளுடன் அவன் முன்னே வர அவளோ பயத்தில் படக்கென எழுந்து நின்றுகொண்டாள்.



"வலிக்குதுல்ல....சொன்னா கேட்டுக்கனும்" என்றவனின் வார்த்தைகளில் அவளும் பொங்கி விட்டாள்



"சும்மா சும்மா அதையே சொல்லிட்டிருக்காதீங்க அதான் மன்னிப்பு கேக்குறேன்ல இருந்தும் இப்பிடியே நடந்துகிட்டா என்ன அர்த்தம்?"



"மன்னிக்கலன்னு அர்த்தம்"



"ப்ச்....ஏன் தேவ் இப்பிடி பண்றீங்க?"



"நீ இப்பிடி இருக்கும்போது நா அப்பிடி இருக்குறதுல என்ன தப்பு?"



"ஒரு தப்புமே இல்லங்க சார்..... எல்லா தப்புமே என்மேல தான் போதுமா?"



"நா ஒனக்கு சார் ஆ?"



"நீங்கதானே பேரு சொல்லி கூப்புட்ற வேல வெச்சுக்காதன்னு சொன்னீங்க?"



"ஆமா சொன்னேன் அதுக்கென்ன இப்போ?"



"அதனாலதான் சார்னு கூப்டேன்"



"அப்பிடி கூப்புடாத"



"நீங்க தானே சொன்னீங்க?"



"ஆமா... இத மட்டும் காதுல வாங்கிக்க ...நா சொன்னத செய்ய கூடாதுன்னு தான் நேர்த்தி கடன் வெச்சிருக்கியே" என்றவனின் குத்தல் பேச்சில் அவள் அமைதியாகிவிட



"ப்ச்..." என அவன் அலுத்துக் கொள்ளவும் விழியுயர்த்தி பார்த்தவள்



"சாரி தேவ்.. ஐ ஆம் ரியலி சாரி" என்றாள் இறைஞ்சும் குரலில்...

அதற்கெல்லாம் அசருபவனா அவன்?அவளை தீர்க்கமாக பார்த்தபடி



"நா வர்றேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு நகரப்போனவனின் தடுத்தது அவள் கேள்வி



"எங்க போறீங்க?"



"வீட்டுக்கு"



"இதுவும் வீடுதான்"



"நா இல்லன்னு சொல்லலியே?"



"அப்பறம் எதுக்கு போறீங்க?"



"ஏன் அதையும் உன் கிட்ட கேட்டுட்டு தான் செய்யனும்னு ஏதாவது சட்டம் இருக்கா?"



"நா அப்பிடி சொல்லல"



"பின்ன?"



"படுத்தாதீங்க தேவ்.."



"இப்போ மட்டும் பேரு வருது"



"அது அப்பிடித்தான்... அத விடுங்க... எதுக்கிப்போ கெளம்ப போறீங்க?"



"இதுக்கு நா ஏற்கனவே பதில் சொல்லிட்டதா ஞாபகம்"



"அப்போ நா கேக்க கூடாதுங்குறீங்களா?"



"அது உன் இஷ்டம்"



"முடிவா என்னதான் சொல்ல வர்றீங்க?"



"நா வருண பாக்கத்தான் வந்தேன்.... அவனில்லன்னா போகாம என்ன பன்றது?"



"அப்போ...ப்ரண்டு வீடுன்னு வந்திருக்கீங்க?"



"யெஸ்..."



"என்ன பாக்க தோனவே இல்ல?"



"....."



"ப்ரண்டுக்காக வந்தவரு எதுக்காக என்ன தூக்குனீங்க?"



"நா தூக்காம அந்த வீணாப்போனவனா தூக்குவான்?"



"அர்விய ஒழுங்கா கூப்புடுங்க"



"முடியாதுடி"



"ஏன் முடியாது? அவர் என் அத்தான்"



"அதுக்கு நா என்ன பன்றது?"



"பொண்டாட்டி சொந்தங்கள மதிக்க கத்துக்கோங்க"



"நா எதுக்கு மதிக்கனும்?"அவன் கேட்ட கேள்வி அவளை வாள் கொண்டு அறுத்தது.



'நா எதுக்கு மதிக்கனும்னா என்ன அர்த்தம்?என்ன நீங்க பொண்டாட்டியா நெனக்கலன்னுதானே அர்த்தம் தேவ்?' என நினைத்தவளுக்கு மனது ரணமாய் வலிக்க அமைதியாகி விட்டாள்.



அவள் அமைதிதான் அவனுக்கு பிடிக்காதே!!!ஏதோ ஒரு வேகத்தில் கேட்டுவிட்டான்தான்... ஆனால் அதற்கு அவள் எப்படி அர்த்தம் எடுத்து அமைதியாய் இருக்கிறாளென்பது அவனுக்கா தெரியாது...



"அஷு..."



"....."



"பேசமாட்டியா?"



"....."



"ஐ...ஐ...ஐ..ஐ அம் சாரிடி"



"....."



"நா கோபத்துலதான் சொன்னேன்டி"



"....."



"எனக்கு உன்கிட்ட கோபப்பட கூட உரிம இல்லயா?"



"என்ன உரிமைங்க?" என்றவளின் கேள்வியில் அதிர்ந்து அவளை பார்த்து



"சாரிடி"



"நீங்க ப்ரண்ட பாக்க வந்திருக்கீங்க... அவரோட தங்கச்சி எனக்கு உரிம இல்லதான்"



"ஏய்...நீ அவனோட தங்கச்சி இல்ல என்னோட பொண்டாட்டி அண்டர்ஸ்டான்ட்?"



"....."



"ப்ச்...அதான் சாரி கேக்குறேன்லடி?"



"நீங்க கேட்டா நா உடனே மன்னிக்கனுமா?"



"......"



"நா கேட்டா நீங்க மன்னிக்காம நீ என் பொண்டாட்டியே இல்லங்குற மாறி பேசுவீங்க.... ஆனா நீங்க கேட்டா நா உடனே மன்னிச்சிடனும் அப்படித்தானே?"



"எதுக்கும் எதுக்கும் முடிச்சு போட்ற?"



"ஏன் கேட்டதுல என்ன தப்பு?"



"தப்புதான்... நீ பண்ணது வெற நா பண்ணது வேற?"



"ஆமாமா.... வேறதான்.."



"ப்ச்..."



"...."



"மன்னிக்க முடியுமா முடியாதா?"



"....."



"பேசுடி" என்றவனை ஏறிட்டுப் பார்த்தவளின் கண்கள் கலங்கியிருந்ததை கண்டவன் உள்ளுக்குள் துடித்துப் போனான்.



அவள் கண்ணீரை துடைத்து ஆறுதலாய் நெஞ்சில் சாய்க்க பரபரத்த கைகளை வெகு சிரமப்பட்டு அடக்கியவன் இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொள்ள அவளோ அவனை திரும்பியும் பாராது குளியலறைக்குள் புகுந்து கொள்ள தோளை குலுக்கி விட்டு தானும் கீழிறங்கி சென்றான்.



***



சாப்பாட்டு மேசையில் அனைவரும் அமர்ந்திருக்க விஜயலக்ஷ்மி அவர்களை எப்படி அழைப்பதென்று தெரியாமல் கைகளை பிசைந்துகொண்டு நின்றிருக்க அவரை சங்கடப்படுத்தாமல் கீழிறங்கி வந்த ரிஷியை கண்டதும் தான் அவருக்கு ஆசுவாசப் பெருமூச்சே வந்தது.



படிகளில் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தவனை "தம்பி..." என அழைக்க அதற்குள் அவரை நெருங்கியிருந்தவன்



"என்ன அத்தை?"என்றான் பணிவாய்



"வந்து சாப்புடுங்க"



"இல்ல அத்தை... எனக்கு ஆபீஸ்ல இருந்து அர்ஜன்ட்டா வர சொல்லி கால் வந்திருக்கு....இன்னொரு நாள் கண்டிப்பா சாப்புட்றேன்"

என்றவன் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் சென்றுவிட இவரும் ஒரு பெருமூச்சுடன் வந்து பரிமாரத் துவங்கினார்.



இது எதையுமே கவனிக்காமல் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தஆரவ்வின் கால்களை கயல் ஓங்கி மிதிக்க "ஆ...அம்மா..." என கத்தவும் அனைவரும் அவனை விசித்திரமாக பார்க்க அவர்களிடம்

"ஹி...ஹி... ஒன்னுமில்ல சும்மா..." என சமாளித்தவன் கயலை கடுப்புடன் முறைத்து விட்டு அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்



"என்னடி?"பல்லை கடித்தான்.



"மாமா சாப்புடாம பொய்ட்டாங்க...நீ என்னடான்னா இந்த காட்டு காட்டிட்ருக்க?"



"என்னது...அண்ணா பொய்ட்டாங்களா?எதுக்குடி என்கிட்ட முன்னாடியே சொல்லல?" என்றவனை முறைக்க



"சரி சரி கொவப்படாத செல்லம்... கோவமா போனாங்களா என்ன?"



"தெரியலடா....அஷ்வியும் இன்னும் கீழ வர்ல"



"மறுபடியும் போர் கொடி தூக்கிரிச்சுங்களோ?"



"இருக்கலாம் ஆரு... இப்போ என்ன பண்றது?"



"இரு அம்மு அஷ்வி வரட்டும்.... என்னன்னு பாத்துடுவோம்" என கூறிக் கொண்டிருக்கும் போதே அவள் கீழிறங்கி வரும் அரவம் கேட்க பின்னால் திரும்பிப் பார்த்தான் ஆரவ்.



சிவந்திருந்த விழிகள் அவள் அழுதிருப்பதை பறைசாற்ற அவளை ஊன்றிப் பார்த்தான்.



இன்னும் கண்கள் கலங்கியே இருக்க பெயருக்காய் உதடுகளில் புன்னகையை தவழவிட்டிருப்பது தெரிந்தது.



அங்கிருந்த அனைவரும் அவளை பார்க்க அவளோ அவனை கண்களால் துலாவினாள்.



ஊஹூம்....எங்குமே இல்லை...

போய்விட்டானா?திரும்பவும் கண்ணத்தை தொட இருந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு



"மா...அவரு எங்க?"எனவும் அவளை ஆராய்ச்சியாய் பார்த்தவர்



"தம்பி கெளம்பி பொய்ட்டாருடா...நீ வந்து சாப்புடு"



"எனக்கு பசியில்லமா..." என திரும்ப...ஈஷ்வரி



"காலைலயிருந்து நீ எதுவுமே சாப்பிடலயே அஷ்வி...அது எப்படி பசிக்காம போகும்?"



"....."



"வா வந்து சாப்பிடு"



"எனக்கு வேண்டாம் அண்ணி" அவள் போய்விட தாய் மனது மகளின் வாழ்க்கையை நினைத்து பரிதவித்து.



***



காண்ப்ரன்ஸ் ஹாலில் ப்ராஜக்டர் முன் தன் இருக்கையில் அமர்ந்து தன்முன் விளக்கிக் கொண்டிருப்பவனில் கண்கள் இருந்தாலும் மனம் என்னவோ தன் மனையாளிலேயே உழன்று கொண்டிருந்தது.



கை தட்டும் சத்தத்தில் தன் சிந்தை கலைந்தவன் தானும் சேர்ந்துகொண்டு கை தட்டிவிட்டு டீலிங் பேசி முடித்துவிட்டு கைச்சாத்திட்டுவிட்டு நிமிர அங்கே கதவை திறந்து கொண்டு ரவிச்சந்திரன் உள்ளே நுழையவும் அவசரமாக எழுந்தவன் அவருடன் கை குழுக்கிவிட்டு ஸ்னேகமாக புன்னகைத்தான்.



அவர் ரகுநாத்தின் நண்பர் மற்றும் உறவினர். அவனுடைய பிஸ்னஸ் வேல்டில் எல்லோருமே ரகுநாத்திற்கு தெரிந்தவர்கள் தான்... பலர் நட்பு பாராட்டினாலும் அவருக்கு விரோதியாய் செயற்பட்டவர்கள் இவனுக்கும் விரோதியாய்த்தான் இருந்தனர்.



அதை எப்போதுமே அவன் பொருட்படுத்தியதே இல்லை... எப்போதுமே இறுக்கத்துடன் இருப்பவனிடம் அவர்களும் அதிகமாய் பேச மாட்டார்கள்.



"வாங்க அங்கிள்...உங்காருங்க" அவருக்கு இருக்கையை காட்டிவிட்டு தானும் அமர்ந்தான்‌.



"நல்லா இருக்கியா தேவா?"



"இருக்குறேன் அங்கிள்...நீங்க?வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா?"



"இருக்காங்க தேவா...வர்ற புதன்கிழமை என் பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருக்கேன்... அவஷியம் ஆரவ் கூட வந்துருப்பா"



"ஓஹ் கங்க்ராட்ஸ் அங்கிள்"



"அப்பறம்... நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்க?" எனும் கேள்வியில் அதிர்ந்து போனவனுக்கு அப்போதுதான் அது மண்டையில் உறைத்தது.



திருமணம் இராமநாதபுரத்தில் நடந்ததால் யாருக்கும் அவன் திருமணமும் ஆரவ்வின் திருமணமும் அறிவிக்கப்படவில்லை..



திருமணம் முடிந்து ரிசப்ஷன் இங்கே வைத்துக் கொள்ளலாமென கடமைக்காக வாக்களித்தவனுக்கு நடந்த களேபரத்தில் அது மறந்தே போய்விட்டது.



அதுவும் அன்று இருந்த மனநிலையில் அதை சொல்லி தப்பித்து விட்டான்....ஆனால் இன்று???



சட்டென தன்னை சுதாரித்து



"எனக்கு திருமணமாகிடிச்சு அங்கிள்"



"வாட்?"



"ஆமா அங்கிள்...ஆருவுக்கும் தான்"



"என்னப்பா சொல்ற?"



"இராமநாதபுரத்துல நடந்ததால யாருக்கும் தெரியல"



"பட்..."



"ஐ நோ அங்கிள்..... ரிசப்ஷனுக்கு ஏற்பாடு பண்ணனும்"



"சரி தேவா...அப்போ உன் பொண்டாட்டியயும் கூட்டிட்டு வந்துடு" என்றவர் விடை பெற்றுச் சென்றுவிட சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தவன் கோர்ட்டை கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் தன் காரை இராமநாதபுரத்துக்கே செலுத்தினான்.



தொடரும்.......



07-04-2021.
 
Last edited:

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 18 ❤



இடையில் ரிசப்ஷனுக்கு தேவையான வேலைகளை பார்த்து முடித்துவிட்டு வர தாமதாகி இருந்தது காளைக்கு...



கலைந்த முடியுடன் ஷர்ட் கை முழங்கை வரை ஏறியிருக்க கோர்ட்டை முதுகுக்கு பின்னால் வைத்து இடது ஆள்காட்டி விரலால் பிடித்தபடி டயர்டாக நுழைந்தவனை கண்ட விஜயலக்ஷ்மிக்கு அவன் மேல் கனிவு பிறக்க அவசரமாக வாசலுக்கு வந்தவர்



"வாங்க தம்பி.."எனவும் தான் ஹாலில் பேசிக் கொண்டிருந்த ஆரவ் , அஜய் , இராமநாதன் மற்றும் வருண் என அனைவருமே திரும்பிப் பார்த்தனர்.



வருணும் எழுந்து அவனருகில் வந்து



"வா மச்சி...ரொம்ப டயர்டா தெரியுறயேடா?" என விசாரிக்கவும்



"அதெல்லாம் ஒன்னுமில்லடா... கொஞ்சம் வொர்க் இருந்தது அதான்..." என்றவனிடம் விஜயலக்ஷ்மி



"சரிப்பா வந்து சாப்பிடு..." எனவும்



"நா ப்ரெஷ்ஷாகிட்டு வந்துட்றேன் அத்த..." என்றவன் படியில் கால் வைத்துவிட்டு பின்பு ஞாபகம் வந்தவனாய்



"அஷு சாப்புட்டாளா அத்த?" எனவும் சாப்பாட்டு தட்டுடன் கீழிறங்கி வந்து கொண்டிருந்த கயல்விழி



"இல்ல மாமா... அஷ்வி நீங்க போனதுலயிருந்து சாப்புடாம பிடிவாதம் பிடிச்சிட்டுருக்கா... இப்போ கூட பாருங்க வேணாம்னு என்ன அனுப்பிட்டா" என்று தட்டை காட்ட வலக்கை நடுவிரலால் தன் புருவத்தை நீவியவன் விஜியிடம்



"நீங்க ரெண்டு பேருக்கும் எடுத்து வைங்க அத்தை...நா அவக்கூட வர்றேன்..." என்றவன் வருணிடம் தலையசைத்து விட்டு மேலேறிச் செல்ல ஆரவ்வை பார்த்து கண்ணை சிமிட்டிய கயல் கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு சமையலறைக்குள் சென்று மறைந்தாள்.



***



கால்கள் இரண்டையும் கட்டிக் கொண்டு முழங்காலில் முகம் புதைத்து அமர்ந்திருந்தவளின் தோற்றம் மனதை அசைக்க எதுவும் பேசாமல் சென்று ப்ரஷப் ஆகிவிட்டு வந்தவன் அவள் தோல் தொட அம்மா என நினைத்து



"நான்தான் எனக்கு பசிக்கலன்னு சொல்றேனில்ல விஜி.... வேணாம்னா விடேன்" என எரிச்சலாக கூற



"அஷு..." எனவும் விலுக்கென தலையுயர்த்தி பார்த்தவளின் கண்கள் அவனைக் கண்டு ஆச்சரியத்தில் விரிந்து பின் வெடுக்கென அவன் கையை தட்டிவிட்டு எழுந்து வெளியேறப்போக அவள் கையை எட்டிப் பிடித்து நிறுத்தினான் கணவன்.



"எதுக்கு சாப்பிடல அஷு?"



"....."



"என்மேல இருக்குற கோபத்த எதுக்கு சாப்பாட்டுல காட்டிக்கிட்டு இருக்க?" என்றவளுக்கு அன்றைய நாள் ஞாபகம் வர அவனை திரும்பி பார்த்தாள்.



அவனுக்கும் அதுதான் ஞாபகம் வந்தது போலும்!!! இளம் முறுவலொன்றை உதிர்த்தவன் அவளை தன் பக்கம் இழுக்க அவன் மேல் வந்து மோதியவளை வளைத்து



"இப்போ நீயா வரியா?இல்ல...நானா தூக்கிட்டு போகட்டுமா?" எனவும் அதற்கு பதிலளிக்காமல்



"எனக்கு பசிக்கல...நீங்க போய் சாப்பிடுங்க" என்றவள் அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள ஏற்கனவே டயர்டாக இருந்தவனுக்கு அது எரிச்சல் மூட்ட



"இப்போ எதுக்கு சும்மா ஸீன் க்ரியேட் பண்ணிட்டிருக்க?" என்றான் வெடுக்கென...அதில் விடுபட போராடிக் கொண்டிருந்தவள் ஸ்தம்பித்து அவனை பார்க்க அவளை விட்டவன்



"வா வந்து சாப்புடு..."என்றவாறே முன்னே நடக்கவும் அவள் அசையாது அங்கேயே நின்றாள்.



அவளை திரும்பிப் பார்த்தவன்



"இப்போ நீ சாப்புடலன்னா நா மறுபடி வீட்டுக்கு போய்டுவேன்" எனவும் ரோஷமாய் அவனை இடித்துக் கொண்டே முன்னே நடக்க சிரித்துக் கொண்டே அவளை பின் தொடர்ந்தான் ரிஷி.



அஷ்வினிக்கு கோபத்தை நீண்ட நேரம் இழுத்துப் பிடிக்க தெரியாது.



இவளின் அக்குணம்தான் அவனுக்கு சாதகமாய் அமைந்ததுவோ!!!



அவன் வந்து சேரும் முன்னரே அவள் வந்து அமர கயல் மனத்திற்குள் "பார்டா... நாங்க கூப்டா பசியில்ல...புருஷன் கூப்டா மட்டும் வந்துருமோ?" என மானசீகமாய் சிரித்துக்கொண்டாள்.



ரிஷியும் வந்தமர இருவருக்கும் சாப்பாடு பரிமாறிய விஜயலக்ஷ்மி அவர்களுக்கு தனிமை குடுத்து ஒதுங்கிக் கொண்டார்.



அஷ்வினி சாப்பாட்டை கைகளால் அளந்து கொண்டிருக்க



"நா ஊட்டணும்னு எதிர்பார்த்துதான் சாப்பிடாம இருக்கியா?" என சீண்டவும் அவனை முறைத்தவள்



"உங்களுக்காக இங்க யாரும் ஏங்கிட்டு கெடக்கல" எனவும்



"ஈஸ்ஸிட்?" என போலியாய் ஆச்சரியப்பட்டவனை பார்த்து தலையை குனிந்து கொள்ள



"எனக்காக அப்போ நீ ஏங்கல?"



"இல்ல..மிஸ்டர். ரிஷிகுமார் தேவமாருதன்"



"ப்ருவ் பண்ணு"



"வாட்?"



"அதான் எனக்காக ஏங்கலன்னியே அத ப்ரூவ் பண்ணு"



"நா எதுக்கு ப்ரூவ் பண்ணனும்?"



"அப்போ எனக்காக ஏங்கியிருக்கேன்னு நா எடுத்துக்குவேன்"



"நோ...இல்ல...உங்களுக்காக நா ஏங்கவே இல்ல"



"இல்ல நீ ஏங்கியிருக்க"



"இல்ல"



"ஆமா"



"இல்ல"



"ஆமா"



"ப்ச்...இல்ல"



"ஓகே..இல்ல"



"ஆமா" என்றவளுக்கு அவன் சிரிப்பு சத்தத்தில் தான் சொன்னது நினைவு வர



"இல்....ல நீங்க சீட் பண்றீங்க" என சினுங்கவும் அதை ரசித்தவன்



"நீயா தான் ஆமான்ன....இப்போ என் மேல பழி போடாத"



"முடியாது முடியாது" என அவள் தலையாட்ட அவள் ஆட்டலுக்கு இசைந்தவாறு அவள் கூந்தலும் நர்த்தனமாட கட் முடி முன்னால் வந்து விழவும் அதை ஒதுக்கியவாறே அவனை பார்க்க அவனும் இவளையேதான் பார்த்துக் கொண்டிருக்கவும் கண்ணங்கள் வெட்கத்தில் நாணத்தை பூசிக் கொள்ள தலை குனிந்து விட்டாள்.



"க்கும்....நாங்க பார்க்கலப்பா..." எனும் கயலின் குரலில் தன்னுணர்வடைந்தவன் தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டு அவசரமாக சாப்பிட்டு எழுந்து விட்டான்.

அவனுடனேயே அவளும் எழுந்து கொள்ள கைகழுவி விட்டு திரும்பியவனிடம் அவள் துடைக்க துண்டை நீட்ட அவளை தவிர்த்தவன் வேறு எங்கோ பார்த்தபடி துடைத்துவிட்டு அவளிடம் நீட்டியவன் மாடியேறப்போக அவனை தடுத்தார் இராமநாதன்.



"மாப்பிள்ள உங்க கூட கொஞ்சம் பேசணும்" எனவும் சரி என்றவாறு தலையசைத்து விட்டு ஹாலுக்கு வர இராமநாதன்



"விஜயா......எல்லோரையும் கூப்புடு" என்றவரின் கட்டளைக்கு இணங்க அனைவரும் வந்து சேர



"உக்காருங்க மாப்பிள்ள..."என்றவர் அவன் அமர்ந்ததும் நேராக விடயத்திற்கு வந்தார்.



"கல்லாயணமாகி மறுவீட்டுக்கு கூப்டும் ஏதோ வேலைன்னு வரமுடியாதுன்னு சொல்லிட்டீங்க... ஆனா... குடும்பத்துல என்னென்னமோ நடந்துட்டு இருக்கு... குல தெய்வ கோயிலுக்கு போயிட்டு வந்தோம்னா மனசு சஞ்சலம் நீங்கும்னு நெனக்கிறோம்... நீங்க என்ன சொல்றீங்க மாப்பிள்ளை?



"அது...நா வர்.."என ஏதோ சொல்ல வாயெடுக்க தலைகுனிந்திருந்த அஷ்வினி விலுக்கென நிமிர்ந்து பார்க்க அவளை கண்டுகொண்டவன்



"ஐ...மீன் நா வர்றேன் மிஸ்டர்.இராமன்" என்றவனின் பதிலில் பார்த்தாளே ஒரு பார்வை.... அது எதற்கென்று புரிந்து கொண்டவன்



"அ..அது.. மா..மாமா.. எ....எப்போ போறதா முடிவு பண்ணியிருக்கீங்க?" எனவும் இவ்வளவு நேரம் இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்த கயலுக்கு "அட...மாமா.......மொத்தமாவே விழுந்துட்டாறா?கண்ணாலேயே கண்ட்ரோல் பண்றா..." என நினைக்காமல் இருக்க முடியவில்லை...



வருணுக்கும் ஆரவ்விற்கும் அதை விட ஆச்சரியம்....

"ஆர்.கேக்கு வார்த்தை தந்தியடிக்குதா?" என நெஞ்சில் கைவைக்காத குறையாய் ஒருவர் முகத்தை ஒருவர் ஒரு சேர திரும்பிப் பார்த்துக் கொள்ள இதை யாவையுமே மனது உணர்ந்தாலும் அமைதியாகவே இருந்தான்.



பின்னே அவனே பாடுபட்டு அவளை வழிக்கு கொண்டு வந்திருக்கிறான்.

எதிர்த்து சண்டை போட்டாலாவது பரவாயில்லை...

பொசுக்கென்று கண்ணீர் விடுபவளை வைத்து கொண்டு அவனும் எவ்வளவு தான் கோபத்தை இழுத்துப் பிடிப்பது...



"நாளைக்கு காலைல போறதா ஏற்பாடு மாப்பிள்ள....." இராமநாதன் பதிலளிக்க குனிந்து வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியவன் பின் நிமிர்ந்து



"சாயந்தரம் வந்துடுவோம்ல?"



"இல்ல மாப்பிள்ள...ரெண்டு நாள் தங்கிட்டுத்தான் வர்றதா முடிவு.... வேலயிருந்தா நீங்க..." என்றவரை இடைமறித்து



"இல்ல...இல்ல..இட்ஸ்..இட்ஸ் ஓகே...மிஸ்ட்... ஐ மீன் மாமா"



"சரி மாப்பிள்ள" என எழப்போக



"மாமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றதும் கேள்வியாய் அமர



"அது.... ரிசப்ஷன் வெக்கலாம்னு சொன்னது.... இடையில ஏதேதோ வேலைல முடியாம போச்சு... நீங்களும் இத பத்தி பேசாததுனால எனக்கும் மறந்துடிச்சி... அதுமட்டுமில்லாம இங்க கல்யாணம் நடந்ததுனால மதுரைல யாருக்கும் இது பத்தி அறிவிக்கல்ல... அதான் ரெண்டு பேருக்கும் சேத்தே ரிசப்ஷன் வெக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்" அவன் சொல்லி முடிக்க அங்கே பலத்த மௌனம் நிலவியது.



கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தவர்

"சரி மாப்பிள்ள.... வெச்சிடலாம்.... ஆனா எப்போ?"



"அடுத்த வீக்ல வெக்கலாம்" என்றான் எல்லாவற்றையும் தீர்மானித்து விட்டவனாய்....

அவர் மீண்டும் யோசனையில் ஆழ



"செலவு நா பாத்துக்குறேன் மிஸ்ட்.... ஐ மீன் மாமா... நீங்க மத்த ஏற்பாட்ட பாருங்க" எவ்வளவு முயன்றும் அந்த அழைப்பு மட்டும் அவனுக்கு இயல்பாய் வந்து தொலைக்கவே இல்லை...



அனைவரும் கலைந்து செல்ல தானும் எழுந்தவன் அப்போதுதான் அங்கே ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த தன் மனையாளை கண்டவன் அவளிடம் சென்று



"அஷு..." எனவும் அவளிடம் பதிலற்றுப்போக மீண்டும்



"அஷு...." என்றான்... ஊஹூம்....அவள் அங்கேயே இல்லை...அவள் தோலை பிடித்து உலுக்கி



"அஷ்வினி...." எனவும் திடுக்கிட்டு திரும்பியவள்



"என்ன தேவ்?"



"ம்..நொன்ன தேவ்...நான் கூப்டுடே இருக்கேன்...என்னன்னு கூட கேக்காம அப்பிடி என்ன யோசன உனக்கு?"

"அதுவா...என் ப்ரண்ட்ஸ் உங்கள பாக்கனும்னு சொன்னாங்க... அதான் எப்பிடி கூப்புட்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்..." எனவும் அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் பின் தோலை குழுக்கிவிட்டு சென்றுவிட்டான்.



காலை......



இராமநாதன் , விஜயலக்ஷ்மி , வருண் ஒரு காரிலும்.... அஜய் மற்றும் ஈஷ்வரி அஜய்யின் பைக்கிலும் கயலும் ஆரவ்வும் தங்கள் காரிலும் ரிஷி மற்றும் அஷ்வினி அவர்கள் காரிலும் அர்விந்த் அவனுடைய பைக்கிலும் போவதாய் முடிவெடுத்திருக்க அஷ்வினி பண்ணிக் கொண்டிருந்த ரகளையில் விஜயலக்ஷ்மி கையை பிசைந்து கொண்டிருக்க ரிஷி அவளை கண்களாலேயே எரித்து விடுபவன் போல் நின்றிருந்தான்.



"விஜி....ப்ளீஸ்..... என்னால அவ்வளவு தூரம் கார்ல ட்ராவல் பண்ண ஒத்துக்காதுன்னுதான் உனக்கே தெரியுமே? இவ்வளவு நாள் அர்வி அத்தான் கூடத்தான் பைக்ல போவேன்... இன்னக்கி மட்டும் என்ன வந்தது?ப்ளீஸ் விஜி..." என மறுபடி கெஞ்ச அர்விந்த் மனதிற்குள்



"ஆஹா நம்மல அடி வாங்க வெக்காம ஓய மாட்டா போலயே" என நினைக்க விஜயலக்ஷ்மி



"அஷ்வா....அது கல்யாணத்துக்கு முன்னாடி..." என்றுவிட்டு பாவமாய் ரிஷியை பார்க்க அவனோ இவள் இதற்கு என்ன சொல்லப் போகிறாள் என்பது போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.



"விஜி ப்ளீஸ்...என்னால முடியாது அப்பறம் வாந்தி வரும்... உனக்கே தெரியும்ல?நா பைக்ல தான் வருவேன்" என்றாள் பிடிவாதமாய்....



தடார் என்ற சத்தத்தில் மூவரும் திரும்பிப் பார்க்க ரிஷி கோபமாக காரை உறும விட்டுக் கொண்டிருந்தான்.

கோபமாக திரும்பிய விஜயலக்ஷ்மி



"அஷ்வினி....இப்போ தம்பி கூட கார்ல போகல்ல....அப்பறம் நா மனுஷியாவே இருக்க மாட்டேன்" எனவும் இதுவரை கண்டிராத தாயின் கோப முகத்தில் பயந்து காரிலேயே ஏறிக் கொண்டாள் பெண்.



"அம்மு"



"ம்.."



"அம்மு..."



"என்ன ஆரு...?"



"சும்மாதான்டி... கூப்டனும்னு தோனிச்சி கூப்டேன்"



"மாமா பாவம்லடா?"



"ஏன்?"



"அவரு கடந்த காலத்தை நீ சொன்னதுலயிருந்து எனக்கு அவர பாக்கும் போது பாவமா இருக்கும்டா"



"அவரப் பாத்து பரிதாபப்படுறது அவருக்கு புடிக்காது அம்மு.."



"ஓஹ்..."



"அது இருக்கட்டும்.... நீ வருண் அண்ணா கூட பேசி நா பார்த்ததே இல்லயே... கோவமா இருக்கியா என்ன?"



"அதெல்லாம் ஒன்னில்லடா.... அஷ்வியோட டென்ஷன்ல அவரோட பேசல..... அப்பறம் அவரு வேலைக்கு பொய்ட்டாரு...நா காலேஜ்.... அதுவுமில்லாம அவரு நா பொறந்தப்போ இல்லேல்ல...அதான் இயல்பா பேச வர மாட்டேங்குதுடா..."



"நீ சொல்றதும் சரிதான்...அப்பறம்?"



"அப்பறம்னா?"



"நம்மல பத்தி பேசலாமேடி.....இப்பிடி மனசு விட்டுப் பேசி எவ்வளவு நாளாச்சு தெரியுமா?"



"ஆமா...ஆரு.....உண்மதான்...." என்றவள் ஏதேதோ பேச அவர்கள் தங்கள் உலகுக்குள் முழ்கிப் போனார்கள்.



***



ரிஷியின் முகம் பாறை போல் இறுகி இருக்க அவனிடம் பேசவே பயந்தவள் அவனை அடிக்கடி திரும்பிப் பார்த்து கொண்டே வர அவனோ கருமமே கண்ணாக காற்றை கிழித்துக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தான்.



கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தவளுக்கு அதற்கு மேல் முடியாமல்



"கொஞ்சம் மெதுவா போங்க தேவ்...ப்ளீஸ்" என்றவளின் பேச்சில் கார் இருந்ததை விட இன்னும் வேகமெடுக்க அவன் தோலை இறுக்கப் பற்றிக்கொண்டு கண்களை மூடிக் கொள்ளவும் தான் திரும்பி அவளை பார்த்து விட்டு வேகத்தை குறைத்தான்.



பிடித்த கை பிடித்தபடியே இருக்க மெதுவாக கண்களை திறந்தவள்



"எனக்கு வாந்தி வருது.." எனவும் திடீரென ப்ரேக் போட்டு நிறுத்திய அடுத்த நிமிடம் கதவை திறந்து கொண்டு வெளியேறியவள் குடல் வெளியே வந்து விடுமளவு எல்லாவற்றையும் கொட்ட அவசரமாக காரை ஓட்டிய தன் மடத்தனத்தை எண்ணி தலையிலடித்துக் கொண்டவன் வாட்டர் பாட்டிலோடு அவளருகில் போய் நின்றான்.



ஆசுவாசமாய் நிமிர்ந்தவள் அவன் நீட்டிய தண்ணீரை வாங்க குடித்துவிட்டு மறுபடியும் அவனிடமே நீட்ட அதை கையிலெடுத்தவன் அவளுக்காக கார் கதவை திறந்து விட அவனை ஒரு நிமிடம் நின்று பார்த்தவள் எதுவும் பேசாமல் ஏறிக் கொள்ள கதவை மூடிவிட்டு தானும் ஏறி ஸ்டார்ட் செய்தான்.

சீட்டில் கண் மூடி சாய்ந்திருந்தவள் கண்களை திறவாமலே



"தேவ் எனக்கு ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும்" எனவும் அவளை திரும்பிப் பார்த்தவன்



"ட்ரஸ் கொண்டு வந்திருக்கியா இல்லண்ணா கடைலதான் வாங்கனுமா?" என்க



"விஜி கிட்ட தான் என் ட்ரஸ் எல்லாம்"



"சரி...நா பாக்குறேன்" என்றவன் கொஞ்ச தூரம் சென்று ஒரு பெரிய துணிக்கடை முன் நிறுத்திவிட்டு அவளை பார்க்க அவளோ அசதியில் உறங்கியிருந்தாள்.



அவள் தலையை தடவி

"என்னடா பண்ணுது...ரொம்ப கஷ்டமா இருக்கா?" என கனிவாக கேட்கவும்



"இல்ல தேவ்... ஆமா எதுக்கு நின்னிருக்கோம்...அதுக்குள்ளாகவா வந்து சேந்துட்டோம்?"



"இல்ல அஷு ட்ரஸ் வாங்கனும்னு சொன்னியே... அதான்"



"ஓஹ்..."என்றுவிட்டு அமைதியாகி விட



"என்னாச்சு வேற கடை பாக்கலாமா?"



"...."



"அஷு.... என்னாச்சு?"



"அ..அது..நீங்களே போய் வாங்கிட்டு வர்றீங்களா?" என தயங்க



"இதுக்கு ஏன் இவ்வளோ தயங்கற?"



"இல்ல... வந்து.."



"இரு நானே வாங்கிட்டு வர்றேன்..." என்றவாறே காரை ஓரமாக பார்க் பண்ணிவிட்டு இறங்கியவன் வேளியாலேயே லாக் பண்ணியவாறு கடைக்குள் நுழைவதை இரு ஜோடி கண்கள் வன்மத்துடன் படம் பிடித்துக் கொண்டன.



சில மணி நேரங்களில் திரும்பி வந்தவன் தன் மனையாளிடம் அவன் கொண்டு வந்த ட்ரஸ்ஸை நீட்டி



"இங்க உள்ள போய் மாத்திக்கிறியா... இல்லைன்னா வேற இடம் பாக்கலாமா அஷு?" எனவும்



"இ..இல்ல தேவ் நா இங்கேயே மாத்திட்டு வந்துட்றேன்"என்றவள் அவனிடமிருந்து அதை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே சென்றாள்.



இதையும் அந்த கேமிரா அழகாக உள்வாங்கிக் கொண்டது.



அஷ்வினி தன் வேலையை முடித்துக்கொண்டு வந்து ஏறிக்கொள்ளவும் மீண்டும் கார் பயணப்பட துவங்கியது.



கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவள்



"சாரி...."எனவும் யோசனையாய் அவளைப் பார்த்து



"எதுக்கு?"என்க



"உங்களுக்கு என்னால எவ்வளவு சிரமம்"



"ஆமாமா..."என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்... அவன் குரல் மாற்றத்தை உணர்ந்து பட்டென கண்களை திறந்து அவனை திரும்பிப் பார்க்க அவனோ அவளை தவிர்த்து சாலையில் கண்களை பதித்திருந்தான்.



"இல்ல...வந்து..நா.."



"ஷட் அப் அஷ்வினி" என அவன் உறும அவன் அழைப்பிலேயே அவன் கோபத்தை புரிந்து கொண்டவள் கண்கள் கலங்க அமைதியாய் இன்னும் தள்ளி அமர்ந்தாள்.



தன்னை கஷ்டப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவன் அப்போதுதான் அவள் மாற்றத்தை கவனித்தான்.



திறந்தாள் விழுந்துவிடுபவள் போல் கதவை ஒட்டி அம்ரந்திருப்பதை...



"ஷிட்..."என தலை முடியை கோதிக்கொண்டவன் காரை ஓரமாக நிறுத்துவிட்டு அவள் புறம் திரும்பி



"அஷ்வினி...." என்றவாறே அவள் தோல் தொட அவன் கையை வேகமாக தட்டிவிட்டாள்.



அவள் கோபத்தில் சிரித்தவன் அவள் இரு பக்கமும் பிடித்து தன் பக்கமாக திருப்பி



"அஷ்வினி..." என்க



"...."



"என்னப் பாரு"



"...."



"நீயா கற்பன பண்ணி எனக்கு சிரமம்னு சொன்னா எனக்கு கோபம் வராதா?"



"அ... அதுக்காக?" என விசும்பவும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்



"ஓகே ஓகே...நா இனிமே கோபப்பட மாட்டேன்"



((அடப்போடா.....உன்ன நாங்க நம்புறதா இல்ல...என்ன நண்பா நா சொல்றது?))



அவனிடமிருந்து விடுபட திமிரி

"ஒன்னும் வேணாம் போடா" என்றவள் அவனை தள்ளிவிட்டு தள்ளி அமரவும் சிரித்துக் கொண்டே காரை எடுத்தான்.



***



"ஆரு....டேய்....

பசிக்குதுடா..."



"கொஞ்சம் இரு அம்மு....நல்லா ஹோட்டலா பாக்கலாம்"



"இப்போ நிறுத்தினியே ஹோட்டல்.... அதுக்கு என்ன குறைன்னு வண்டிய எடுத்த?"



"ஹொட்டலா அது.... இடம் சுத்தமா இல்ல அம்மு..அதனால் தான் வேணாம்னு நெனச்சேன்"



"நமக்கு சாப்பாடு தான்டா முக்கியம்"



"அம்மு...அடம் பிடிக்காதமா... எனக்கென்ன உன்ன பட்டினி போடனும்னு வேண்டுதலா?"



"ப்ச்....சரி"



"அத கொஞ்சம் சிரிச்சுட்டு சொன்னாதான் என்னவாம்?"



"ஈ...ஈ..ஈ.....போதுமா?"



"போதாதுன்னா மறுபடி சிரிப்பியா?"



"கடுப்ப கெளப்பாத"



"கோபப்படாம இறங்கு செல்லம்...." எனவும் தான் சுற்றி முற்றி பார்த்தவள் அவனை முறைத்து விட்டு இறக்கவும் தானும் இறங்கி உள்ளே சென்றான்.



அங்கே ஏற்கனவே அனைவரும் வந்திருக்க அவளுக்கும் குஷியாகிப் போனது.ஆரவ்வை தொட்டு



"ஆரு...அங்க பாரு எல்லோரும் இங்க தான் இருக்காங்கடா....."



"சரி நீ போ நா ஆர்டர் பண்ணிட்டு வந்துட்றேன்....."எனவும் அவள் "சரி" என்றுவிட்டு வருணிடம் போய் அமர இவனும் ஆர்டர் சொல்லிவிட்டு வந்தமர்ந்தான்.



"அம்மா அஷ்வியும் தேவாவும் இன்னுமா வர்ல?" என்ற அஜய்யிடம் வருண்



"இப்போதான் பேசினான்டா.... ரிக்ஷிக்கு வாந்தின்னு அவன படுத்தியெடுக்குறா போல.... நீங்க சாப்பிடுங்க நாங்க மெதுவா வரோம்னு சொல்லிட்டான்"



"இதுக்காக தான் காலைல அப்பிடி அடம் புடிச்சாளா அத்த? " எனும் ஈஸ்வரியின் கேள்விக்கு ஆரவ்வும் கயலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு



"என்னது.... அஷ்வி கார்ல அண்ணா கூட போக மாட்டேன்னு அடம் புடிச்சாளா?"



"அதுக்கு மாமா என்ன பண்ணாங்க?" என இருவரும் மாறி மாறி கேள்வி கேட்க அர்விந்த்

நடந்ததை கூற ஆரவ் சிரிப்பை அடக்க படாத பாடு பட்டுக் கொண்டிருக்க கயல் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.



"அர்வி...நல்ல வேல நீ மாமாட தர்ம அடியில இருந்து தப்பிச்சடா..." என்றுவிட்டு மறுபடி சிரிக்க அவள் எதற்காக அப்படி சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்ட அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது.



***



"அஷு...இப்போ என்ன பண்ணிட்டேன்னு அமைதியா இருக்க?"



"ம்...வேண்டுதல்"



"என்ன வேண்டுதல்?"



"உங்க கூட பேச கூடாதுன்னு"



"எதுக்காக?"



"ஆசை"



"ஈஸ்ஸிட்?"



"ஆ...மா"



"உனக்கு பசிக்கல?"



"....."



"மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு சொல்லாம சொல்றியா?"



"எனக்கு பசியில்ல"



"எனக்கு ரொம்ப பசிக்குது...நீ வேணும்னா எனக்கு கம்பனி தர்றியா?" என்றவனை முறைக்க



"கூல் பேபி...இறங்கு"



"நா ஒன்னும் பேபி‌ இல்ல..." ரோஷமாய் முகத்தை திருப்ப



"பட் நீ பண்றது எல்லாம் அப்பிடித்தான் இருக்கு"



"...."



"அஷு ஏற்கனவே லெட் ஆவிடிச்சி.... அவங்க எல்லாம் ஆல்ரெடி நெருங்கிட்டாங்க...நாம தான் லேட்"



"நானா உங்க கூட வரன்னு சொன்னேன்?"



"ஓ... அப்போ அந்த வீணாப்போனவன் கூட வர்றது தான் உனக்கு புடிச்சிருக்கு"



"அர்விய ஒழுங்கா கூப்புடுங்க" அவளும் பதிலுக்கு எகிற அவன் கதவை திறந்து கொண்டு இறங்கி சென்று விட சட்டமாய் கைகளை கட்டிக்கொண்டு காருக்குள்ளேயே அமர்ந்து அர்ச்சனை பண்ணத் தொடங்கிவிட்டாள்.



"கமாண்டர்...இவன் கோபப்பட மாட்டானாமா.....சொல்லி ஒன் அவர் கூட ஆகல.... அதுக்குள்ள எங்க இருந்து தான் வருமோ தெரியல... டெர்ரர் ஆபீஸர்....இவன்லாம் பிஸ்னஸ் பண்ணலன்னு யாரு அழுதா?பேசாம மிலிட்டரில சேத்து விட்டுடனும்.... எப்போ பாரு மூஞ்ச உர்ருன்னு வெச்சிகிட்டு..... இந்த வருண் அண்ணாவும் ஆருவும் எப்பிடித்தான் சமாளிக்கிறாங்களோ? ச்சே..ச்சே.. அவங்க கிட்ட எல்லாம் இந்த கமாண்டர் கோபப்பட மாட்டான்.... அதுக்குதான் அவன் பொண்டாட்டி நா இருக்கேனே... அப்பறம் எப்பிடி அவங்க கிட்ட கோபப்படுவான்... கயல் கிட்ட கூட சமாதனமாத்தான் பேசுறான் நமக்கிட்ட மட்டும் தான் டெர்ரர் மூஞ்சி... கமாண்டர்...." அவனை ஒருமையில் அழைத்து திட்டிக் கொண்டிருந்தவள் "இறங்கு அஷ்வினி" எனும் அவனின் அழுத்தமான அழைப்பில் தூக்கி வாரிப்போட நிமிர்ந்து பார்க்க அவனோ அவள் பக்கமாக அவளையை கூர்ந்து பார்த்தபடி கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.



"இவன்...ச்சி.. இவரு எப்போ வந்தாரு?சும்மாவே ஆடுவான்... இப்போ சலங்கை வேற கட்டிவிட்டுருக்கியே அஷ்வி..... என்ன பண்ணுவான் அடிப்பானோ... ச்சே ச்சே அடிக்க மாட்டான்... அப்போ அன்னக்கி மாறி மூஞ்ச கிட்ட கொண்டு வருவானோ?அதுக்கு அடியே மேல்.... அவன் கிட்ட வந்தா மட்டும் நமக்கு ஏன்தான் படபடன்னு வருதோ... போதாக்குறைக்கு வாய் வேற வார்த்தை வராம போக்கு காட்டும்... இப்போ என்ன பன்றது பேசாம கால்ல விழுந்துடலாமா....

அஷ்வி உனக்கு அறிவில்லன்னு கமாண்டர் சொல்றது சரிதான் போல... பப்ளிக்ல கால்ல விழுந்தா உன் இமேஜ் என்ன ஆகும்?" அவளுக்கும் மனசாட்சிக்கும் உள்ளுக்குள் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்க இவனோ மீண்டும்



"அஷ்வினி இப்போ இறங்க போறியா இல்லையா?" எனவும் திடுக்கிட்டு திரும்பியவள் அவசரமாக இறங்க



"வா..." என்று உறுமியபடியே அவன் முன்னால் செல்லவும் அவனுக்கு வாயை வளைத்து பழிப்பு காட்டிவிட்டு அவனை தொடர்ந்தாள்.



அதுவரை அவனுக்கு மனதுக்குள் மீண்டும் அர்ச்சித்தபடியே வந்தவள் யாரோ ஒருவரின் வரவேற்பு குரலில் தான் தன்னிலிருந்து மீண்டு யாரென்று பார்க்க அங்கே ஹோட்டல் மேனேஜரே இவனை வாயெல்லாம் பல்லாக வரவேற்றுக் கொண்டிருப்பது புரிய சட்டென விழியுயர்த்தி ஹோட்டல் பெயர் பலகையை பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.



_"சத்யா"_ அது ஒரு பிரம்மாண்டமான செவன் ஸ்டார் ஹோட்டல்... அதைப்பற்றி அவளும் கேள்விப் பட்டிருக்கிறாள்.ஏன் நண்பிகளுடன் இங்கே வருவதற்கு கனவு கூட கண்டிருக்கிருக்கிறாள். இப்போது என்னடாவென்றால் அந்த ஹோட்டல் மேனேஜரே இவனை வாசலுக்கு வந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்.

அவ்வளவு பெரிய ஆளா நம்மாளு.... என நினைத்தவள் அப்போதுதான் சுற்றும்முற்றும் கண்களை சுழல விட்டாள்.



ஆங்காங்கே என்ன எல்லா இடத்திலுமே இவன் போஸ்டர்கள் தான் தொங்கிக் கொண்டிருந்தது.



ஆளை மயக்கும் வசீகர சிரிப்புடன் ஆண்மையின் இலக்கணமாய் நின்று கொண்டு இருந்தவனையும் மேனேஜரிடம் படு ஸ்டைலாக இடது கையால் முடியை கோதியவாறு பேசிக் கொண்டு இருப்பவனையும் அவளைப் போலவே ஆச்சரியத்துடன் பலர் பார்த்துக்கொண்டு இருப்பதை கண்டவளுக்கு " இவன் என் கணவன் " எனும் பெருமிதம் பொங்கி வழிந்த அதேநேரம் அவன் உயரத்தில் சுணங்கியது மனது!!!



மிரண்டு போய் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருப்பவளை திரும்பிப் பார்த்தவனுக்கு சிரிப்புத் தான் வந்தது.



இவ்வளவு நேரம் தன்னை அர்ச்சித்துக் கொண்டிருந்தவள் இப்போது தன்னை பார்த்தே மிரண்டு கொண்டிருக்கிறாள்.



அவனுக்கு அவளிடம் பிடித்ததே அது தானே!!!எதையும் எதிர்ப்பார்க்காமல் கொடுக்கும் தன்னலமில்லா அன்பு...



தன்னை யாரென்று தெரியாதவர் இல்லையென்ற நிலையிலிருந்தவனை பெயர் அறியும் முன்னே தாளியில் கை வைக்கப் போனதற்காக அறைந்தவளாயிற்றே அவன் மனையாள்!!!



மீண்டும் அவளிடமே வந்தவன்



"இங்கேயே நிக்கிறதா உத்தேசமா பேபி?" என்றவனின் குரலில் அவனை திரும்பிப் பார்த்தவளுக்கு இன்னுமின்னும் ஆச்சரியம் கூடிக் கொண்டே போனது.



எவ்வளவு பெரிய இடத்திலிருப்பவன்.... என்னை மணந்தது மட்டுமல்லாமல் எந்த பந்தாவுமே காட்டாமல் எனக்காக மீண்டும் வந்திருக்கிறானே!!!

நினைக்க நினைக்க மனதிற்க்குள் புல்லரித்துப் போனது....



அவள் மனநிலையை படித்தவன் போல் அவளை தோலோடு அணைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்.



அவனுக்கு எதிரே அமர்ந்து கொண்டவளுக்கு எதுவும் பேசத் தோன்றவே இல்லை....



ஏனோ மனது அலைபாய்ந்து கொண்டே இருக்க காரியமே கண்ணாக குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.



அவனுக்கு அதை பார்க்க கூட நேரம் கிட்டவில்லை போலும்...ஒருவர் மாற்றி ஒருவர் வந்து அவனிடம் பேசிக்கொண்டே இருந்தனர்....



அதில் இளைஞர்கள் தொடக்கம் பெரிய பெரிய பிரமுகர்கள் வரை அடக்கம்.....



அதற்கெல்லாம் அவளுக்கு ஒன்றுமே நடக்கவில்லை...அடுத்து வந்ததே ஒரு பெண்கள் பட்டாளம்!!!!



அனேகமாக கல்லூரி மாணவிகளாகத்தான் இருக்க வேண்டும்...



அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் அவர்களின் கூச்சலில் தான் தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.



அவர்களும் இவனை கண்டுதான் கூச்சலிட்டனர் என்பது அவர்கள் நெருங்கி வந்து அவனிடம் ஆட்டோக்ராஃப் கேட்கும் போதுதான் தெரிந்தது.



திரும்பி அவன் முகத்தை ஆராய்ந்தாள்.அதில் எரிச்சல் மண்டிக்கிடந்ததே தவிர துளி சுவாரஷ்யம் இல்லை...



அவர்கள் கெஞ்சுவதை பார்க்க பார்க்க எரிச்சலாகத்தான் இருந்தது அவளுக்கு!!



அதில் ஒருத்தி அவன் மடியில் விழுந்து விடுபவள் போல் உரசிக்கொண்டு நின்றிருந்ததை பார்க்க பற்றிக்கொண்டு வந்தது....



இவள்தான் வேண்டுமென்ற உரசுகிறாளென்றாள் இவனுக்கு எங்கே போனது புத்தி?கோபமாய் நினைத்தவள் அவனை முறைக்க எதேச்சையாக அவள் புறம் திரும்பியவன் அவள் கண்களில் கண்ட கோபத்தில் அவள் இதயத்தில் புகைந்து கொண்டிருக்கும் பொறாமையில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.



அவர்கள் மீண்டும் செல்ஃபி என கெஞ்ச துவங்கவும் சாப்பாட்டை வைத்துவிட்டு எழுந்தே விட்டாள்.



அவர்களை விலக்கிக் கொண்டு அவளிடம் வரும் முன் அவள் காரில் போய் அமர்ந்திருந்தாள்.



அவளுக்கு சாப்பாட்டுடன் காரில் ஏறியவன் அவளை பார்த்துக்கொண்டே காரை கிளப்ப அவளும் எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தாள்.



***



இவர்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் மாலையே போய் சேர்ந்திருக்க இவர்கள் வந்து சேர இரவாகிவிட்டது.



பேச்சற்ற மௌனங்கள் கூட சில நேரங்களில் அழகுதான் போலும்!!!



அவளையும் அறியாமல் அவன் தோலில் தலை சாய்த்து அவன் கைகளையே கட்டிக் கொண்டு குழந்தை போல் உறங்குபவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு....



இடையில் வாந்தி என நான்கு முறை அவனை படுத்தி எடுத்துவிட்டுத்தான் உறங்கினாள்.



வாந்தி எடுத்தாளாவது பரவாயில்லை....ஒவ்வொரு தடவையும் ட்ரஸ் மாற்ற வேண்டும் என கூறும் போது தான் அவனுக்கு என்னடாவென்று இருந்தது.



சத்தியமாக அவன் ஒரு பயணத்தை இவ்வளவு தாமதமாக கடத்தியதே இல்லை....



ஆனால் இன்று அது கூட அவனுக்கு சுகமாகவே தெரிந்தது தான் விந்தை!!!



காரை நிறுத்திவிட்டு அவளை கையில் ஏந்தியவாறு அந்த பழைய கால வீட்டுக்குள் நுழைந்தவன் தானும் உடை மாற்றி வந்து அவளருகே படுத்துக் கொண்டான்.



காலை....



அவன் நெஞ்சில் சுகமாய் அவள் தலை சாய்த்து படுத்திருக்க அவனோ அவளை தனக்குள் அணைத்தபடி படுத்திருந்தான்.



முதலில் கண் விழித்தது ரிஷி தான்.....



தனக்கு ஏதோ பாரமாக தெரிய கண்களை திறந்து பார்த்தவன் இனிமையாக அதிர்ந்து போனான்.



அவன் கை வளைவுக்குள் அவன் மனையாள்!!! அதுவும் அவன் நெஞ்சின் மீதே தலை சாய்த்துப் படுத்திருந்தாள்.



தூக்கத்தில் அவள் தன்னிடம் நகர்ந்து வந்திருக்க வேண்டும் என யூகித்தவன் அவளையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.



அவளிடம் இலேசாக அசைவு தெரிய அவசரமாக கண்களை மூடி தூங்குவது போல் பாசாங்கு செய்யவும் தான் அவள் கண்களை திறந்தாள்.



அவனின் சீரான மூச்சுக் காற்றின் மூலம் அவள் அவன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருப்பது மண்டையில் உறைக்க உள்ளம் திடுக்கிட முகம் நிமிர்த்திப் பார்த்தவளுக்கு அவன் முகம் வெகு அருகில் தெரியவும் மூச்சடைத்துப் போனது.



கைகளை மெதுவாய் அவன் முகத்திற்கு கொண்டு போனவள் அவன் மீசையின் ஓரத்தை விரல்களால் சுருட்டி விட அவன் வேண்டுமென்றே தலையை அசைக்கவும் அவன் எழுந்துவிட்டான் என நினைத்து கையை அவசரமாக விலக்கிக் கொண்டவள் அவனிடம் மீண்டும் அசைவில்லாது போக மறுபடியும் கையை மீசையின் அருகே கொண்டு போக அவன் கை சட்டென அதை தடை செய்வது போல் பிடிக்கவும் விதிர்வதிர்த்துப் போனாள் அஷ்வினி....



அதற்குள் அவன் அவன் அவளை சாய்த்து அவள் கைகளிரண்டையும் சிறை செய்தவனாய் அவளை கீழே வைத்து இவன் மேலே படுத்திருந்தான்.



அவனை விழி விரித்து பயத்துடன் அவள் பார்த்திருக்க அவனோ அவளை சீண்டும் விதமாக



"என் மீச என்ன அவ்வளவு அழகாவா இருக்கு?"ஒற்றை புருவம் உயர்த்தி அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு மூச்சடைத்தது.



"அ....அ..அது...வ...வ.. வந்து...நீங்க...இல்ல...நா..."



"நீ..."



"வ...வந்து...ஐ...ஐ..மீன்.."



"ம்...சொல்லு...நீ.." அவன் இன்னும் குனிய கண்களை இறுக்க மூடிக் கொள்ளவும் அடுத்த நிமிடம் அவள் செவ்வதரங்கள் அவனின் முறட்டு அதரங்களுக்குள் அடங்கியிருந்தது.



தான் செய்து கொண்டிருந்த மடத்தனம் அப்போதுதான் அவனுக்கு எச்சரிக்கை மணி அடிக்க அவளை விட்டு அவசரமாக எழுந்தவன் அவள் கண்கள் திறக்கும் முன்னே குளியலறைக்குள் சென்று விட்டான்.



அவன் குளித்து முடித்து வெளியே வரும்போது அவள் பிரம்மை பிடித்தவள் போல் கட்டிலில் எழுந்தமர்ந்திருத்தாள்.



இவனோ எதுவுமே நடக்காதது போல்



"அஷு..... எதுக்காக இப்படி உக்காந்திருக்க...கோயிலுக்கு போகனுமில்ல கிளம்பு..." எனவும் அவளை நிமிர்ந்து பார்த்தவள் குழம்பிப் போனாள்.



ஏற்கனவே அது கனவா இல்லையா என மண்டையை பிய்த்துக் கொள்ளாத குறையாக குழம்பியிருந்தவள் அவனின் இயல்பான பேச்சில் இன்னும் குழம்பிப் போனாள்.



"தே..தேவ் நீ.. நீங்க இப்போ என்ன..."



"உன்ன... உன்ன என்ன பன்னேன் நான்?"



"அது..அது...ஒன்னுமில்லயே....."

என்றவள் தப்பித்தோம் பிழைத்தோம் என குளியலறைக்குள் புகுந்து கொள்ள அவள் நிலையை பார்த்து வாய் விட்டு சிரித்தான் ரிஷி...



***



சிகப்பு நிற பாவாடைக்கு வெள்ளை நிற தாவணி அணிந்து கொலுசு சத்தம் சலசலக்க மாடியிலிருந்து இறங்கி வந்தவளை பார்த்தவன் இமை மூட மறந்து அப்படியே நின்றுவிட்டான்.



இவ்வளவு நாள் வைட் சாரி மற்றும் சுடிதாரிலேயே அவளை கண்டிருந்தவனுக்கு அவளின் இன்றைய அபார அழகு அவனை அடித்து வீழ்த்தியது உண்மையிலும் உண்மை!!!



விஜியின் முன் வந்து நின்றவள்



"விஜி எப்பிடி இருக்கேன்?" என தலை சாய்த்து கேட்க அவளை திருஷ்டி கழித்தவர்



"ரொம்ப அழகா இருக்கடா.... இவ்வளவு வருஷமா நான் இங்க வர்றப்போ எல்லாம் போட சொன்னா போட மாட்ட இன்னக்கி மட்டும் என்னாச்சு?" அவள் குட்டை அவர் வெளிப்படுத்த ரிஷியின் கண்கள் அவளை ஆவலாய் வருடியது.



"மாமா நாங்க எல்லோரும் இங்க தான் இருக்கோம்"என கயல் கத்த தன்னிலையை இழுத்துப் பிடித்தவன் சமாளிப்பாய் சிரித்து விட்டு வெளியேற அவளை திரும்பி முறைத்தாள் அஷ்வினி!!!!



***



வருணுடன் பேசியபடியே அவன் மேலே ஏறிக்கொண்டிருக்க அவளோ அர்விந்துடன் கலகலப்பாய் சிரித்த படி அவனுக்கு சற்று இடைவெளி விட்டு பின்னால் வந்து கொண்டிருந்தாள்.



((அவன் திரும்பி பாத்தான்...மவனே நீ செத்தடா அர்வி!!!))



கொஞ்ச தூரம் நடந்தவள் அப்படியே அமர்ந்து விட

"ஏய் எந்திரிடி... இன்னும் எவ்வளவு நடக்க இருக்கு" அர்விந்தும் அவளுடன் தேங்கிவிட்டு கடுப்புடன் சொல்ல



"முடியாது அர்வி...கால் வலிக்குதுடா....எப்போவும் போல இன்னக்கும் நீயே தூக்குடா" என்றவளுக்கு நேற்று ஹோட்டலில் நடந்தது நினைவு வர அவனை பழிவாங்க நினைத்தவள்



"வேணாம் வேணாம்... தேவ் கிட்ட தூக்க சொல்லுடா" எனவும் அவளை பார்த்து அவன் முழிக்க சட்டென எழுந்தவள்



"ஓய்....வருண் சார்...." என கத்த "இவ ஒருத்தி...சார் சான்று படுத்துறா மச்சான்" என ரிஷியிடம் சொல்லியவாறே திரும்ப சிரித்துவிட்டு தானும் திரும்பினான் ரிஷி....



"வருண் சார்..."



"என்னடி?"



"உங்க ஃப்ரெண்டு கிட்ட என்ன தூக்கிட்டு போக சொல்லுங்க சார்... எனக்கு கால் வலிக்குது"



"ஏன் அத நீயே சொல்ல வேண்டியது?"



"சொல்ல முடியுமா முடியாதா?" என்றவளை முறைத்து விட்டு ரிஷியிடம்



"மச்சி போடா... இல்லைன்னா இந்த சாரு போட்றத நிறுத்தவே மாட்டா" என அவன் கெஞ்ச வாய்விட்டு சிரித்தவன் அவளை நோக்கி செல்லவும் திடீரென எங்கிருந்தோ அவனை நோக்கி வந்த தோட்டாவை அர்விந்த் கண்டு "அண்ணா...." என கத்திக் கொண்டே அவனை பிடித்து தள்ள அந்த தோட்டா அங்கிருந்த கல்லில் பட்டு சிதறவும் சரியாக இருந்தது.



தொடரும்.....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 19 ❤



கோயிலுக்கு படியேறிக் கொண்டிருந்த அனைவருமே அதிர்ந்து பயத்தில் கூச்சலிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓட தன் தலையை பிடித்தவாறெ குனிந்திருந்த அர்விந்திடம்



"அர்விந்த் நீ நம்ம குடும்பத்த கூட்டிட்டு மேல போ... அவங்கள பாத்துக்கோ... நா இதோ வந்தட்றேன்...."



"சரி அண்ணா" என்றவன் நிமிர தானும் நிமிர்ந்த ரிஷி போக எத்தனிக்க அவனை போக விடாமல் தடை செய்து பிடித்திருந்தது ஒரு கை....



அர்விந்த் என நினைத்தவன் எரிச்சலுடன் திரும்ப அங்கே அவள் மனையாள் நின்றிருப்பதை பார்த்து அதிர்ந்தவன் "ஓஹ்...ஷிட்....இவள எப்பிடி மறந்தேன்" என நினைத்தவன் ஏற்கனவே தாமதமாகிவிட்டது உணர்ந்து கையை உதற அதை கெட்டியாக பிடித்திருந்தவள்



"இ.. இல்ல தேவ் நீங்க போக கூடாது... எனக்கு பயமா இருக்கு தேவ்... ப்ளீஸ் போகாதீங்க...." என கெஞ்ச



"அஷ்வினி சிச்சுவேஷன புரிஞ்சிக்க ட்ரை பன்னு..... விடு கையை" என்றவனது கையை இன்னும் இறுக்கியவள்



"மு... முடியாது... நா விட மாட்டேன்"



"அஷ்வினி.... லேட் ஆவிடிச்சி... விடுடா ப்ளீஸ்"



"முடியாது முடியாது"என அவள் மீண்டும் அடம் பிடிக்கவும் கோபத்தில் பல்லை கடித்தவன்



"சொன்னது கேக்க மாட்ட" என்றவாறே அவளது கையை உதறி விட்டு



"போ..."என உறும



"இல்ல நா போக மாட்டேன்..."



"போடின்னு சொல்லிட்டே இருக்கேன்..."என்றவன் கோபத்தில் அவளை அறைந்து விட்டு ஒரே பாய்ச்சலில் தன் எதிராளியை தேடிப் போனான்.



***



இரவு.....



ரிஷியை தவிர குடும்பத்தினர் அனைவருமே செய்வதறியாது ஹாலில் டென்ஷனாக அமர்ந்திருக்க அஷ்வினி வாசலிலேயே தவிப்பாய் நின்று கொண்டிருந்தாள்.



ரிஷியின் கட்டளைப்படி அவர்கள் பூஜையை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்துவிட ஆனால் அவர்கள் இருவரும் தான் இன்னும் வீடு வந்து சேர்ந்த பாடில்லை....



வருணும் ஆன மட்டும் முயற்சி செய்து பார்த்துவிட்டான்.

மொபைல் சுவிட்ச் ஆஃபென மட்டுமே தகவல் வந்து கொண்டிருந்தது.



ஏழு மணியளவில் ரிஷியை தேடிப்போன ஆரவ்வும் அஜய்யும் கூட திரும்பி வந்துவிட அஷ்வினிக்குத்தான் மனது திக் திக் என்று அடித்துக் கொண்டது.



இரவு 10 மணி.....



அவளை எவ்வளவு சமாதானப்படுத்தியும் அது முடியாமல் போக தானும் அவளுடனேயே வாசலில் நின்றுகொண்டான் ஆரவ்.



கார் வந்து நிற்கும் சத்தத்தில் பரிதவிப்புடன் வெளியே பார்த்திருந்தவள் அவன் வாசலில் கால் வைத்த அடுத்த நொடி தன்னவனை தாவி அணைத்திருந்தாள்.



எதிர்பாரா அணைப்பில் கொஞ்சம் தடுமாறியவன் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு அவளை இறுக்க அணைத்தான்.



அவள் தேம்பி அழவும் அவள் முடியை கோதியவன்



"ஷ்.... அழக்கூடாது டா... அதான் நான் வந்துட்டேன்ல?" சமாதானப்படுத்த முயன்றான்.



"நா...நா...ரொ... ரொம்ப பயந்துட்டேன் தே..தேவ்"



"அஷு..." என்றவாறே அவளை விலக்கப் போக அவளோ அவனை இன்னும் ஒன்ற



"அஷு.... வீட்டுக்குள்ள போலாம்டா.... பாரு எல்லோரும் வாசல்ல நம்மலயே பாத்துட்டு நிக்கிறாங்க" அவளிடம் பதிலற்றுப் போக அவள் மனநிலையை உணர்ந்து அவளை தன் கை வளைவுக்குள்ளேயே வைத்தவாறு உள்ளே சென்றான்.



"அண்ணா என்னாச்சு யாரு அவங்க?"



"மாப்பிள்ளை உங்களுக்கு ஒன்னுமில்லல்ல?"



"மச்சான் எதுக்கு இவ்வளோ லேட்?"



"தேவா அடியேதும் படலியே?" ஆளாளுக்கு ஒரு கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க பொதுவாக



"இல்ல எனக்கு ஒன்னில்ல...ஐ அம் ஆல் ரைட்... பிஸ்னஸ் எதிரிங்க தான்... கொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க...." என அவன் பேசிக் கொண்டே போக பயத்தில் அவனை இன்னும் இறுக்கினாள் பாவை....



அவள் தோலுக்கு தன் கைகளால் அழுத்தம் கொடுத்து ஆறுதல் படுத்தியவன்



"ஐ அம் சாரி... எனக்காக காக்க வெச்சிட்டேன்..." எனவும் அதை மறுத்த வருண்



"என்னடா பேசுற...காக்க வெச்சிட்டேன் அது இதுன்னு...நீயும் எங்க குடும்பத்துல ஒருத்தன் தாங்குறத மறந்துறாத"



"அது இல்லடா நா..."



"தம்பி எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்ல... நீங்க போங்க...." என அவனை அனைவரையும் அனுப்பி வைத்தவர்



"அஷ்வா தான் உங்கள நினச்சு ரொம்ப பயந்துட்டா.... "



"நீங்க போய் தூங்குங்க அத்த.... நா பாத்துக்குறேன்"



"தம்பி சாப்பாடு...?"



"இல்ல எனக்கு வேண்டாம்...அஷு சாப்புட்டாளா அத்த?"



"இல்ல தம்பி உங்கள பாத்தா தான் சாப்புடுவேன்னா...."



"இட்ஸ் ஓகே நா பாத்துக்குறேன்... நீங்க போங்க..." என்றவன் அவளை கூட்டிச் சென்று அவள் மறுக்க மறுக்க பாலை அருந்த வைத்துவிட்டு தன் அணைப்பிலேயே தங்கள் அறைக்கு சென்றான்.



***



"எனக்கென்னவோ அண்ணா எதையோ மறைக்கிறாங்கன்னு தோனுது அம்மு...." கயலின் மடியில் படுத்தவாறே வினவினான் ஆரவ்.



"ஏன் ஆரு?"



"இல்லடி... இவ்வளவு நாளா பிஸ்னஸ் பண்றாங்க.... அப்போல்லாம் இல்லாத இந்த திடீர் எதிரி எங்கிருந்து முளச்சான்?"



"உனக்கு தெரியாம இருந்திருக்கலாமேடா..."



"நோ வே அம்மு....அண்ணாவோட சின்ன மூவ் கூட எனக்கு அத்துப்படி..."



"....."



"நா பேசாம விட்டதுக்கு அப்பறம் தான் ஏதோ நடந்திருக்கு...."



"அதான் இப்போ பேசுறியே ஆரு....?"



"இல்ல அம்மு... அவங்க கூட சந்தர்ப்ப வசத்தால தான் பேசியிருக்கேனே தவிர முன்ன மாதிரி சகஜமா பேசுறதில்ல..."



"மாமா கூடவும் பேசுறதில்ல.... அஷ்வி கூடவும் பேசுறதில்ல.... இப்போல்லாம் நீ ரொம்ப முறிக்கிக்குற ஆரு...."



"தப்பு பண்ணா தண்டன குடுத்துத் தான் ஆகனும் அம்மு"



"பட் பேசாம இருக்குறதால பிரச்சின தீராது ஆரு... மாமாவும் அஷ்வியும் வேனும்னே அப்படி பண்ணலன்னு உனக்கே தெரியும்... பின்ன எதுக்கு பேசாம இருக்கனும்?"



"....."



"திரும்ப ஒரு தடவ யோசி ஆரு.... மாமா என்ன சொல்ல வர்றாங்கன்னு கேளு"



"சரிங்க மேடம்...."குறும்பாய் அவளிடம் கண் சிமிட்டியவன் அவளை வளைத்து அவளிதழுக்குள் தன் இதழை பொருத்தினான்.



.........



ப்ரஷப்பாகிவிட்டு வந்தவனை தவிப்புடன் பார்த்திருந்தவளை இழுத்து தனக்குள் வைத்துக் கொண்டவன்



"ஒரு பொண்ண காணும் அஷு" என்றான் அதிரடியாக....



"வாட்?"



"நா அவக்கிட்ட அசந்து போனதே அவ தைரியத்துலதான்..." வேறு ஒரு பொண்ணை பற்றி பேசவும் இருந்த மனநிலை மாறி அங்கே கோபம் குடியேற



"நீங்க எதுக்கு அவக்கிட்ட அசந்து போனீங்க?"



"அவ தைரியத்துல தாம்மா.." என்றான் வேண்டுமென்றே....



"ப்ச் நா அதுவா கேட்டேன்?"



"பின்ன?"



"நீங்க எதுக்கு அவள பாத்தீங்க?" என்றவளது கேள்விக்கு பதில் சொல்லாமல்



"கலகலன்னு இருப்பா..."



"நா என்ன கேட்டேன் நீங்க என்ன சொல்றீங்க?"



"தாலியில கை வைக்கப் போனதுக்கு எனக்கே அறஞ்சான்னா பாத்துக்கோயேன்"



"நீங்க எதுக்கு அவ தாலியில கை வெக்கப்..." என்றவளுக்கு அப்போதுதான் அவன் தன்னை சொல்கிறான் என புரிய



"தேவ்..." என சிணுங்கிக் கொண்டே அவன் நெஞ்சில் குத்த அதை சுகமாய் தாங்கிக் கொண்டவன்



"அவள இப்போ காணும் அஷு... அவளுக்கு பதிலா கொபமா பேசினா கூட அழுது வடியுற பொண்ண தான் இப்போ பாக்க முடிது" என்றுவிட்டு அவள் தலையை தடவி



"காலைல அறஞ்சது ரொம்ப வலிச்சுதாடா...?"என மென்மையாய் கேட்டவனிடம் மறுப்பாய் தலையசைத்தவள்



"இல்ல தேவ்.... எனக்கு நீங்க அடிச்சது கூட உணராம தான் பயந்து போய் இருந்தேன்" என்றவளின் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை படுக்க வைத்து விட்டு நிமிரவும் அவன் கைகளை பிடித்தவள்



"என்கிட்டயே படுங்க தேவ்... பயமா இருக்கு" என கெஞ்ச அங்கே சோஃபாவும் இல்லாததால் நேற்று போலவே மறுபக்கம் வந்து படுத்துக் கொண்டான்.



***



அமெரிக்கா....



மெக்சிகோ நகரம்....



"டாட்.... எவ்வளவு கஷ்டப்பட்டு குறி வெச்சது எப்பிடி டாட் மிஸ் ஆச்சு....?" கோபமாய் ஒருவன் கத்திக் கொண்டிக்க அவனுக்கு முன்னே அவன் ஜாடையிலேயே ஒருவர் கோட் சூட்டுடன் காலுக்கு மேல் கால் போட்டு தோரணையாய் அமர்ந்திருந்தார்.



"டாட் அவன் சாதாரண ஆள் இல்ல.... எப்பிடியும் நம்மாள பிடிச்சிருப்பான்..... அவ எனக்கு வேணும் டாட்... அதுக்கு அவன் சாகனும்...." கண்களில் காம வெறி மின்ன அவன் சொன்ன விதம் அவனுக்கு முன் அமர்ந்திருந்தவரையே ஒரு நிமிடம் ஆட்டம் காண வைத்தது.



காலை.....



முன்னைய நாள் போலவே தன் நெஞ்சில் தலை சாய்த்து அவள் படுத்திருந்தாலும் ஏனோ அவனால் அதில் கலந்து சந்தோஷப்பட முடியவில்லை....



ஏதேதோ எண்ணங்கள் தோன்றி மனது அவனை அலைக்கழிக்க அதற்கு மேல் முடியாதவனாய் அவளை தன்னிடமிருந்து தள்ளிவிட்டு எழ முயற்சிக்க அவளோ அவன் மனநிலை அறியாது அவனின் டீ-ஷர்ட்டை இறுக்கமாக பற்றிப் பிடித்திருந்தாள்.



ஒரு நொடி அவளையும் அவள் செய்கையையும் நினைத்து உதட்டில் கீற்றாக புன்னகை அரும்பினாலும் வந்த வேகத்திலேயே அது சென்றுவிட அவள் கையை பிரித்தெடுத்தவன் எழுந்து குளியலறை சென்றுவிட்டான்.



அவன் குளித்து முடித்து வெளியே வரும் போது கூட அவள் தூங்கிக் கொண்டிருக்க அவளை எழுப்பாது ரெடியாகி கீழே இறங்கி வந்தான்.



இராமநாதனை தவிர மற்ற ஆண்கள் அனைவரும் ஜாகின் சென்றிருக்க ஹாலுக்கு வந்தவன் இராமநாதனிடம் சென்று



"மிஸ்டர் ராமன்.... எனக்கு அர்ஜன்ட் வொர்க் இருக்கு நா கிளம்புறேன்" என்றவனை கண்டு எழுந்தவர்



"இன்னக்கி மட்டும் இருந்துட்டு நாளைக்கி போகலாமே மாப்பிள்ள..." எனவும் அதை மறுத்தவன்



"இல்ல மிஸ்டர்.ராமன் நா இன்னக்கே போயாகனும்" என்றவன் அவர் ஏதோ சொல்ல வந்ததை கூட காதில் வாங்காது காரிலேறி சென்று விட்டான்.



.........



அவன் சென்று கொஞ்ச நேரம் கழித்து எழுந்தவள் கண்களை மூடிக் கொண்டே கைகளால் அவனை துலாவ அவனில்லாது போகவும் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள்.



அவன் கீழே இருப்பானென தன்னைத்தானே சமாதானம் பண்ணிக் கொண்டவள் அவசரமாக எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தாள்.



இப்பொழுதெல்லாம் ஏனோ அவன் அருகாமையை அதிகம் தேடியது அவள் மனது.



அவனை பார்க்காமல் பேசாமல் நேரம் கூட நகர்வேனா என அழுச்சாட்டியம் செய்தது.



அவள் கீழே இறங்கி வரவும் ஜாகிங் போன நாள்வரும் உள்ளே நுழையவும் சரியாக இருக்க அவர்கள் கூடவும் அவன் செல்லாது எங்கே சென்றிருப்பான் என நினைத்தவள் அவர்களை பார்த்து சிரித்து விட்டு தன் தாயை தேடிச் சென்றாள்.



"விஜி....தேவ் எங்க?"



"அதென்னடி புருஷன பேரு சொல்லி கூப்புட்ற பழக்கம்?"



"காலைலயே ஆரம்பிக்காதமா.... அவரு எங்கன்னு சொல்லு ப்ளீஸ்..."



"எனக்கு தெரியாது அஷ்வா...."என்ற பதிலில் குழம்பியவள்



"அண்ணி... நீங்களாவது பாத்தீங்களா?" என தவிப்புடன் கேட்க அவளை பார்த்து சிரித்த ஈஷ்வரி



"நா கீழ வரும்போது மாமா கிட்ட பேசிட்டிருக்குறத பாத்தேன்... அப்பறம் பாக்கல அஷ்வி....ஏன் உன்கிட்ட சொல்லிட்டு போகல்லயா?" என்றவருக்கு உதட்டை பிதுக்கி இல்லை என தலையாட்டியவள் தன் தந்தையை தேடிச் சென்றாள்.



"ப்பா..."



"என்னம்மா?"



"தேவ் எங்க?"



"ஏதோ அவசரம்னு அப்போவே கெளம்பி பொய்ட்டான்மா..."



"எ...எங்கப்பா?"



"ஊருக்குத் தான்... ஏன் உங்கிட்ட சொல்லாம பொய்ட்டாரா?"



"அதெல்லாம் இல்லப்பா... நா தூங்கிட்டு இருந்தேன்ல... டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நெனச்சிருக்கலாம்" என மலுப்பியவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.



நேற்று நன்றாகத்தானே பேசினாரு...என்னாச்சி? என யோசித்தவள் அங்கு நிற்கப் பிடிக்காமல் மேலேறிச் சென்றாள்.



***



வழக்கத்திற்கு மாற்றமாக காரை நிதானமாக செலுத்திக் கொண்டிருந்தான் ரிஷி.



மனது கடலலையை போல் ஆர்ப்பாட்டமாக ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது.



அவனால் ஒரு நிலையில் இருக்க முடியாமல் போக சாலையோரமாக காரை நிறுத்தியவன் கண்களை மூடி இருக்கையில் சாய அவன் மறக்க நினைத்த நினைவலைகள் அவன் அனுமதி இன்றியே அவனையும் அதற்குள் இழுத்துக் கொண்டது.



(ஆரவ்வை தேடி அஷ்வினி போக அவர்களிருவரையும் தேடி இவன் போன அன்று......



ஆரவ்வின் நினைவில் கடற்கரைக்கு காரை திருப்பியவனை மறித்தவாறு வந்து நின்றது வைட் கலர் பி.எம்.டப்பள்யூ காரொன்று!!!



எரிச்சலில் பல்லை கடித்தவன் மறுபுறமாக வெட்டப் போக அதனையும் மறைத்தவாறு வந்து நின்றது இன்னொரு கார்....



தவறுதலாக வந்திருக்குமென நினைத்து திருப்பப் போனவன் இன்னொரு கார் வந்து நிற்கவும் புருவம் சுருக்கி பார்த்து விட்டு தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியபடி நிமிர்ந்தவன் என்னதான் செய்கிறானென பார்த்து விடலாம் என நினைத்து விட்டு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டான்.



முதலில் மறைத்தவனுக்கு அது கடுப்பை கிளப்பியிருக்க வேண்டும்.....



கதவை திறக்க வந்த தன் அடியாளை எட்டி உதைத்து விட்டு தானே இறங்கி நின்றவன் ரிஷியை பேசுமாறு ஒருவனிடம் தலையசைக்க அவன் வந்து ரிஷியின் கார் கண்ணாடியை தட்டினான்.



அவனை அலட்சியமாய் திரும்பிப் பார்த்தவன் வேண்டுமென்று சோம்பல் முறித்து விட்டு சீட்டில் சாய வந்தவன் திரும்பிச் சென்று நடந்ததை அவனிடம் கூற அவனுக்கு ஒரு அறை விட்டவன்



"இடியட்.... அவன் என்ன பண்ணான்னு உனக்கு ரிப்போர்ட் பண்ண சொன்னேனா.... போ...போயி அவன இழுத்துட்டு வா...." என கத்த அதில் நடுங்கிப் போனவன் மறுபடியும் வந்து கார் கண்ணாடியை தட்ட இம்முறையும் அவனை அதே அலட்சியப் பார்வை பார்த்தவன் சாய்ந்தவாறே கண்களை மூடிக் கொள்ள அவன் மறுபடியும் அவனிடம் சென்று நடந்ததை சொல்ல கோபத்தின் எல்லை கடந்தவன் அவனை அடித்து உதைத்து விட்டு இன்னும் இருவருக்கு கண்களை காட்ட அவனை கடுப்பேற்றியது போதும் என்று நினைத்தானோ என்னவோ அவர்கள் வருமுன்னே கதவை திறந்து கொண்டு இறங்கியவன் காதை குடைந்து விட்டு



"நானும் நல்லவனா இருக்கனும்னுதான்டா நெனக்கிறேன்.... ஆனா விட மாட்டானுங்களே" என அலுத்துக் கொள்ள அதில் தலைவர் போல் இருந்தவன்



"தோ பாரு மாறன்..... உனக்கும் எனக்கும் போட்டி பிஸ்னஸ்குள்ளதான்.... நீ தேவயில்லாம என் பர்ஸனல் லய்ஃப்குள்ள மூக்க நொலச்சிக்கிட்டு இருக்க... ஒழுங்கா தள்ளிப் போய்டு...." என மிரட்டவும் வாய் விட்டு சிரித்த ரிஷி



"டேய் பிஸ்னஸ்ல நீ பிரச்சின பண்ணாலே உன்ன நா கண்டுக்குறதில்ல... இதுல உன் பர்ஸனல் லய்ஃப்குள்ள நா எப்பிடி வருவேன் சொல்லு?"



"ஏய் நடிக்காதடா..... அஷ்வினி என்ன லவ் பண்றது தெரிஞ்சி தானே அவள உன் கம்பனிக்கு வர வெச்சிருக்க...." என கோபமாக கத்தவும் ஒரு நிமிடம் இடுங்கியது ரிஷியின் கூர் விழிகள்.......



பின்பு அது பொய்யோ என நினைக்கும் வகையில் சாதரணமாக மாற



"என்ன மாறன்.... உன்ன எனக்கு தெரியாதுன்னு நினச்சிட்டு இருக்கியா மரியாதயா என் அஷ்வினிய விட்டுடு"



" என்னது உன் அஷ்வினியா.... குட் ஜோக் மிஸ்டர்.ராம்.... அப்பறமா சிரிச்சுக்கலாம்..."



"ஏய்...."



"எஹ்...அடங்குடா.... இன்னொரு தடவ என் அஷ்வினின்னு உன் வாயால வந்துது அப்பறம் உடம்புல உயிர் இருக்காது"



"வேணாம் மாறா..... அவ எனக்கு சொந்தமானவ நீ குறுக்க வராத..."



"என் பொண்டாட்டி எப்பிடிடா உனக்கு சொந்தமாவா..... லாஜிக்கா யோசிக்கவே மாட்டியா நீ?"



"வாட்...." என்றவனுக்கு இந்த விடயம் புதிது.... அவன் இதை எதிர்பார்க்காதது அவன் தோற்றமே காட்டிக் கொடுக்க அவனை அலட்சியப் படுத்திவிட்டு காரை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்....



அப்போது அவன் இருந்த மனநிலையில் அதை ஆராயவெல்லாம் அவனுக்கு நேரமே இல்லை....



அதை அவன் பெரிது படுத்தவும் இல்லை நேற்று வரை....



நேற்று நடந்த கொலை முயற்சி அஷ்வினிக்கானதென அவன் நினைத்திருக்க அது தனக்கானதென தெரிந்ததில் வெகுவாக குழம்பிப் போனான்.



தொழில்முறையில் பகை வருவதும் அவர்கள் குடும்பத்தை குறி வைப்பதும் வழமையாக நடப்பது தானென்பதால் தான் தன்னை பழமிழக்க வைக்க வேண்டுமென்று அஷ்வினியை குறிவைத்திருக்க வேண்டுமென கணித்தவனின் கணிப்பு முதல் முறையாக தோற்றுப் போனது!!!



தன்னை குறி வைத்து சுட்டவனை சாகும் வரை அடித்து உதைத்துக் கூட கேட்டு விட்டான்.... ஊஹூம் அவனிடமிருந்து சில புகைப்படங்கள் மட்டுமே கிடைத்தனவே தவிர அவன் வாயை திறந்தானில்லை....



அப்புகைப்படங்கள் தான் ஓர் இரவில் அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது!!!



அவை அனைத்தும் அஷ்வினியினதும் ராமினதும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்.....



அதை வைத்து அவளை சந்தேகப்படுவது முட்டாள்தனமென்று மூளை அடித்துக் கூறி சத்தியம் செய்தாலும் காதல் கொண்ட மனதுக்குத் தான் அது புரியவே இல்லை.....



அவள் தன்னை ஏமாற்றி விட மாட்டாளென முழு நம்பிக்கை இருந்தாலும் ஏற்கனவே காதலால் துரோகம் இழைக்கப்பட்டவனுக்கு அது அவளை விட்டு தள்ளி இருக்க தூண்டியது.



அதனால்தான் அவளிடம் சொல்லாமலே கிளம்பி வந்து விட்டான்.



***



தன் ஃபோனை எடுத்து அவனுக்கு அழைக்க அது ரிங் போய் கொண்டிருந்ததே தவிர எடுக்கப்படும் வழியைத் தான் காணோம்.



தன்னை வேண்டுமென்றே தவிர்க்கிறானென இதயம் கணக்க கண்ணீர் மடை திறந்த வெள்ளம் போல் வழிந்து கொண்டே இருந்தது.



"நான் என்ன தப்பு செய்தேன்" எவ்வளவு முயன்றும் அவளால் அதற்கான விடையை கண்டு பிடிக்கவே இயலாமல் போயிற்று!!!



மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும் அது ஏற்கப்பட



"தேவ்...."



"சொல்லு அஷ்வினி?"



"எதுக்காக என்ன விட்டு போனீங்க?" அவள் விசும்ப அதில் தடுமாறியவன்



"ஆபீஸ்ல அர்ஜன்ட் மீட்டிங்..." பட்டுக் கத்தரித்தார் போன்றிருந்த அவன் பேச்சில் அவளுக்கு இன்னும் அழுகை கூட பட்டென வைத்து விடவும் ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவனுக்கு அது உதாசீனமாய் பட இவ்வளவு நேரம் நிதானத்தில் இருந்தவனின் நிதானம் காற்றில் பறந்தது.



அவளை காயப்படுத்தக் கூடாதென நினைத்தவன் கோபம் தலைக்கேற திரும்பவும் வீடு நோக்கி வண்டியை செலுத்தினான் அவளை காயப்படுத்தி விடும் நோக்கில்....



அவன் கூறப் போகும் அந்த சொற்களே அவர்கள் பிரிவுக்கான அடித்தளமாய் அமையப் போகிறதென்பதை அப்போது அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை!!!!



தொடரும்......



10-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 20 ❤



சீறிப் பாய்ந்து வந்த காரிலிருந்து இறங்கி புயலேன உள்ளே நுழைந்தவனை கண்ட அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டனர்.



அவன் கண் சிவப்பே அவனின் ஆக்ரோஷமான கோபத்தை பறைசாற்ற என்னதான் நடந்திருக்குமென ஊகிக்க முடியாதவர்கள் அவனிடம் கேட்கப் பயந்து அமைதியாக அவனை பார்த்தனர்.



"அஷ்வினி...."என வீடே அதிரும் படி அவன் கர்ச்சிக்க அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.



அவள் கீழே இறங்கி வராமலிருந்தது வேறு அவன் கோபத்தை தாறுமாறாக எகிறச் செய்ய மேலே ஏறப் போனவனை தடை செய்தான் ஆரவ்



"அண்ணா....நீ இப்போ ரோம்ப கோபத்துல இருக்க.... என்ன தப்பு நடந்திருக்கும்னு யாருக்கும் தெரியாது பட்.... இந்த நிலைல நீ அவகிட்ட பேசினா பிரச்சினைல தான் முடியும்... கொஞ்ச நிதானமாகினதுக்கு அப்பறம் பேசு...." என்றவனை திரும்பிப் பார்த்த பார்வையில் அவன் தோலிலிருந்த ஆரவ்வின் கை தானாக கீழே இறங்கி விட்டது.



வருண் சுதாரிப்பதற்குள் ரிஷி கதவை நெருங்கியிருந்தான்.



தடாரென கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் பால்கனியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்த அஷ்வினியை பிடித்து திருப்பி விட்டான் ஒரு அறை....



அவனை கண்ட சந்தோஷம் ஒரு புறமிருக்க திடீரென அவன் அறைந்ததில் கண்ணத்தை பிடித்துக்கொண்டு அவனை அதிர்ந்து பார்க்க அவள் அதிர்ச்சியையெல்லாம் உணரும் நிலையில் அவன் இருந்தால்தானே!!!



அவள் தாடையை இறுக்கப் பற்றியவன்



"எதுக்குடி கால கட் பண்ண?" என சீறவும் அவன் பிடித்ததில் வலிக்க கண்களில் கரகரவேன நீர் வழிய அவன் பிடியை தளர்த்தி அவள் தோல்பட்டயை இறுக்கி



"சொல்லுடி... எதுக்கு கட் பண்ண?வேற எவன் கூடயாவது பேசிட்டிருந்தியா....?" அவன் கேள்வியில் அதிர்ந்து அவனை பார்க்க



"சும்மா நடிக்காதடி.... அந்த ராம லவ் பண்ணிட்டு என்ன ஏமாத்தலாம்னு கனவு கண்டுட்டு இருந்தியா?" ராம் எனும் பெயரில் அவள் உடல் நடுங்கத் தொடங்க அதை உணராதவனோ இன்னுமின்னும் அவளை வார்த்தைகளால் குத்திக் கிழித்தான்.



"அவ பணத்துக்காக என்ன லவ் பண்ற மாதிரி நடிச்சா...நீ ???? உனக்கென்னடி வேணும்... அதான் அவன் கிட்டயும் பணம் கொட்டி கெடக்குள்ள.... அப்பறம் என்ன எதுக்குடி கல்யாணம் பண்ணிகிட்ட??? உடம்புக்காகவா????"

அவன் கடைசியாய் கேட்ட கேள்வியில் நெருப்பு தீண்டினாற் போல் காதை இறுக்க பொத்திக் கொண்டவள் "நோ...." என கத்த அப்போது தான் சுயநினைவை அடைந்தவன் போல் அவளை உதறித் தள்ளிவிட்டு மடங்கி அமர்ந்தவளை வெறித்துப் பார்த்தான்.



நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் ஒரு துளியும் கண்ணீர் இருந்ததற்கான அடையாளமே இல்லை.....



அவ்வளவு நேரம் பேசாமல் அமைதியாக இருந்தவள் வாய் திறந்து கேட்ட கேள்விகளில் அவன் இதயம் ஒரு கணம் நின்று துடித்து.



"அந்த அயோக்கியன் மேல இருந்த சின்ன நம்பிக்கை கூட என் மேல வராத அளவுக்கு நா தகுதி இல்லாதவளா பொய்ட்டேனில்ல தேவ்?" குரலில் கலக்கமில்லை.... கோபமில்லை..... ஏன் வலி கூட இருந்ததாக தெரியாத உணர்ச்சி துடைத்த குரல்!!!



இப்போது அதிர்ந்து பார்ப்பது அவன் முறையாயிற்று போலும்....



"இவ்வளவு நாள் உங்க கூட இருந்த என்ன கடைசில.... உ....உங்க உடம்புக்காக கல்யாணம் பண்ணிகிட்டவன்னு நெனச்சிட்டீங்கள்ள தேவ்?"



"......"



"ரொம்ப நன்றி தேவ்..... உங்க கூட இருந்துக்கு பரிசா ரொம்ப பெரிய வார்த்தயால என்ன இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க"



"...."



"பணத்துக்காக உங்களுக்கு துரோகம் பண்ண அவள விட நான் இப்போ உங்களுக்கு இழிவா தெரிஞ்சிட்டேனில்ல தேவ்?" அவனை கடைசியாக ஒரு அடிபட்டப் பார்வை பார்த்தவள் நகர எத்தனிக்க அவளை எட்டிப் பிடித்தவன்



"நோ அஷு...ப்ளீஸ் போய்டாத....அஷு....அஷு...."



"அஷூ...."என கத்திக் கொண்டே திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான் ரிஷி....



அவன் பக்கத்தில் அஷ்வினி இல்லை...



அவன் கார் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்க அவன் காருக்குள் தான் அமர்ந்திருந்தான்.



ஏ.சி போடப்பட்டிருக்கும் காருக்குள்ளேயே அவனுக்கு வியர்த்து வழிய அது கனவு என யூகிக்வே சற்று நேரம் எடுத்தது அவனுக்கு....



மொபைல் சினுங்களில் சட்டென அதை எடுத்துப் பார்க்க "மய் சண்டக்கோழி" இருபது மிஸ்ட் கால்ஸ் என நோட்டிபிகேஷன் வந்து விழுந்திருக்க உண்மையில் அவன் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.



எங்கே எடுத்தால் கனவு கண்டது போல் நடந்து விடுமோ என நினைத்தவன் அதை சுவிட்ச் ஆப் பண்ணி விட்டான்.



அவனுக்கு அவள் வேண்டும்!!!



வாழ்க்கையில் ஒரு தடவை அடிப்பட்டு எழுந்தவனுக்கு அவளுடைய குறும்புத் தனமே உயிர்ப்பை கொடுத்திருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை!!!



அவளுக்கு யாருடன் வேண்டுமானாலும் நிச்சயம் நடந்து இருக்கலாம் ஆனால் இப்போது அவள் அவன் மனைவி....



மனதில் உறுப்போட்டுக் கொண்டவனுக்கு அவள் குடும்பத்தினர் மீது கட்டுக் கடங்காத கோபம் எழுந்தது....



அவர்கள் தானாய் கேட்கவில்லை இவன்தான் ஆரவ்விற்காக சம்மதம் சொன்னான் என்பது வசதியாக அந்நேரம் அவனுக்கு மறந்து போனது!!!



கதவை திறந்து கொண்டு வெளியே இறங்கியவன் தன் பலம் கொண்ட மட்டும் காரை உதைத்தான்....



அப்பொழுதும் அவன் கோபம் குறைந்த பாடாய் தெரியவில்லை....



***



மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைப்பெடுக்க அது அணைத்து வைக்கப்பட்டிருந்ததில் தவித்துப் போனாள் அஷ்வினி!!!



என்ன செய்வது என யோசித்துக் கொண்டு இருந்தவளின் போன் திடீரென சிணுங்க தேவ் என நினைத்து எடுத்தவளுக்கு ஏதோ புது நம்பரிலிருந்து கால் வரவும் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்தது.



அது கட்டாகி மீண்டும் அதே எண் திரையில் ஒளிர "ஒரு வேலை..." என என்னென்னவோ எண்ணங்கள் மனதில் அலைபாய அதை ஏற்று காதில் வைக்க மறுமுனை



"நீங்க மாறன் சாரோட வொய்புங்களா?"



"ஆ...ஆமா...எ.. என்ன விஷயம்?"

ஒரு ஹாஸ்பிடல் பெயரை சொன்னவன்



"அவர் ரோட்டுல அடிபட்டு கெடந்தாரு... அவர் போன் வேற சுவிட்ச் ஆப் ஆக பாத்துது.... கடைசியா அதுல இருந்த நம்பருக்கு கால் பண்னேன்"



"வா...வாட்...தே..தேவ்கு ஒன்னில்லல?"



"அது எனக்கு தெரியாதுமா....அவர ஹாஸ்பிடல்ல பாவமேன்னு சேத்தேன்..." என்றவர் கட்டாக்கி விட பதற்றத்தில் மூளை வேலை நிறுத்தம் செய்ய யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறினாள்.



ஆண்கள் வேலைக்கு சென்றிருக்க பெண்கள் சமயலறையில் இருந்ததுவும் விதி செய்த சதியாய் போயிற்று!!!



***



தன் பலம் கொண்ட மட்டும் காரை உதைத்தவன் முடியை அழுத்தக் கோதி தன்னை நிலைப்படுத்த முயன்றான்.



கொஞ்ச நேரத்தில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவனுக்கு திடீரென உள்ளுணர்வு எச்சரிக்கை மணி அடிக்க மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது.



யாருக்கோ ஏதோ ஆபத்து நடக்க போவது போல் இருக்க அவசரமாக வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.



வெளியிலேயே வண்டியை நிறுத்தி விட்டு அவசரமாக உள்ளே ஓடினான்.



திடீரென வந்து நின்ற மருமகனை கண்ட விஜயலக்ஷ்மி



"வாங்க தம்பி... காலைலயே கெளம்பி போனீங்க..." அவர் கேள்விக்கு பதிலளிப்பதை விட்டு விட்டு பெண்கள் அனைவரும் நலமா என அலசியவன்



"வருண்... அஜய்.. ராமன்.. ஆரு எல்லாம்?" என அவன் கேள்வியாய் நிறுத்தவும்



"அவங்களும் கெளம்பிட்டாங்க தம்பி...ஏன் ஏதாவது அவசரமா?"



"நோ....நோ....சும்மாதான் கேட்டேன்" என்றவனுக்கு அஷ்வினி கண்களில் படாதது அப்பொழுதான் மண்டையில் உறைக்க



"அஷ்...அஷ்வினி எங்க?"



"அவ மேல ரூம்ல தலவலின்னு படுத்திருக்கா தம்பி..." எனவும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.



இருந்தும் மனது திக்திக் என அடித்துக் கொள்ள இரண்டிரண்டு படிகளாக தாவி தடாரென கதவை திறந்தவனுக்கு வெற்று அறையே அவனை வரவேற்க இதயம் வேகமாக அடிக்கத் துவங்க எல்லா இடத்திலும் அவளை தேடியவன் கீழே வந்து



"அத்த..." என கத்தவும் அவரும் என்னவோ ஏதோவென்று மீண்டும் வந்து



"என்ன தம்பி என்னாச்சு?'



"அ....அஷ்வினி ரூம்ல இ...இல்ல"



"என்ன தம்பி சொல்றீங்க?" என்றவர் நிற்க முடியாமல் தள்ளாட அவரை அமர வைத்தவன் "ஈஷ்வரி..."என கத்தவும் வெளியே வந்தவள் அவசரமாக விஜயலக்ஷ்மியிடம் ஓடி வந்து



"அத்த...என்னாச்சு...?என்ன பண்ணுது?" என படபடப்பாக வினவவும் ரிஷி



"ஈஷ்வரி...நீ...நீங்க அ.. அஷ்வினிய பாத்தீங்களா?"



"இல்ல தேவா...எ...ஏன்?" அவளுக்கு பதில் சொல்லவெல்லாம் அவன் அங்கே இல்லை....



வேளியே நின்ற சிக்யூரிடியிடம்



"அங்கிள்.... அஷ்வினி வெளிய போறத பாத்தீங்களா?"எனவும் அவர்



"ஆமா தம்பி இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் படபடப்பா வெளிய வந்து ஆட்டோல ஏறி இந்த பக்கமா போனாங்க" என அவர் தகவல் சொல்லவும் அடுத்த நிமிடம் அவர் காட்டிய திசையில் சென்று மறைந்தது ரிஷியின் ரோல்ஸ் ராய்ஸ்....



***





தான் சொன்ன பாதை அல்லாது ஆட்டோ வேறு பாதையில் செல்வதை கண்டவள்



"அண்ணா... ஹாஸ்பிடல் ரோடு இந்த பக்கம் " எனவும்



"அம்மா... அங்கனக இருக்குற டீ கடைல என் முக்கியமான பொருள் ஒன்ன வெச்சிருக்கேன்... அத எடுத்துட்டு அப்பிடிக்கா போயிரலாம்மா...."



"அண்ணா கொஞ்சம் சீக்கிரம்...ப்ளீஸ்..."



"சரிம்மா..." கொஞ்ச தூரம் சென்று ஆட்டோவை நிறுத்தியவர் வெளியே இறங்க சுற்று முற்றும் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.



ஆள் நடமாட்டமே இல்லாத சாலையில் பலகையால் பெயருக்கு மறைத்தது போலிருந்த அந்த கடையை பார்த்ததும் அவளுக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது.



கையிலிருந்த பையில் போன் வைப்ரேட் ஆகவும் அவசரமாக திறந்து கையில் எடுத்தவளுக்கு "கமாண்டர் காலிங் " என வரவும் உடல் தூக்கிப் போட்டது.



உடனே அடண்ட் செய்து காதில் வைத்து



"தே...தேவ்...நீ...நீங்க...உங்களுக்கு...."



"அ...அஷு...எங்க இருக்க?" எனும் அவனின் குரலில் தான் ஏமாற்றப்பட்டு இருப்பது புரிய



"தெ... தெரியல தேவ்...நீங்க ஹாஸ்பிடல்..."அவ்வளவு தான் திடீரென இருபுறமும் வந்து ஏறியவர்கள் அவள் மூக்கை மயக்க மருந்து தடவிய கைக்குட்டையால் மூட போன் நழுவி கீழே விழ மயங்கி சரிந்தாள் அஷ்வினி!!!



"ஹலோ... ஹலோ....அஷு...." என கத்திக்கொண்டே இருந்தவனுக்கு திடீரென அவர்கள் பேச்சுக் குரல் கேட்க தானும் உன்னிப்பாக கவனிக்க துவங்கினான்.



"ஆமாங்கய்யா..."



"ஆமாமா..இப்போதான்"



"அந்த பொண்ணு மயங்கிடுச்சு"



"இல்லங்கய்யா... நீங்க சொன்னீங்கன்னு தான் அவ மேல கை வெக்காம இருக்கோம்"



"இல்ல...இல்ல... இது வர யாரும் ஃபாலோ பண்ணதா தெரியல"



"சரிங்கய்யா.... நம்ம அரிசி குடோன் தானே?"



"சரிங்கய்யா...சரிங்கய்யா...அப்போ நாங்க வந்தட்றோம்"

எதிர் முனையில் என்ன பேசப்பட்டதோ அவனுக்கு பதில் பேசிக் கொண்டிருந்தவனின் குரல் மட்டுமே அவனுக்கு கேட்க அதை கட் பண்ணியவன் உடனே கமிஷ்னருக்கு அழைத்தான்.



"ஐ அம் மதன்சிவா ஹியர்"



"மிஸ்டர்.மதன்...ஐ அம் மாறன்"



"சொல்லுங்க மிஸ்டர்.மாறன் எனி ஹெல்ப்?"



"எஸ்...மதன்... நா ஒரு நம்பர் தர்றேன் அது எந்த ஏரியா லொக்கேஷன்ல இருக்குன்னு ட்ரேஸ் பண்ணி சொல்ல முடியுமா?"



"ஓ...சுவர்...மாறன்" என்றவருக்கு தன் மனையாளின் நம்பரை அனுப்பி வைத்தவன் அவர் காலுக்காக காத்திருக்க தொடங்கினான்.



ஸ்டிரிங் கியரில் தலை சாய்த்தவனுக்கு கடைசியாக தன் நெஞ்சில் தலை சாய்த்து குழந்தை போல் உறங்கி கொண்டிருந்தவளின் பிம்பமே மீண்டும் மீண்டும் அலைமோதியது.



தன் கனவு கண்டதன் அர்த்தம் அப்போது தான் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பிக்க ராமின் முகம் மின்னலென மனக்கண் முன் மின்னி மறையவும் திடுக்கிட்டு எழுந்தவன் ராமிற்கு அழைக்க போனை எடுக்க அப்போது தான் கமிஷ்னரிடமிருந்து மீண்டும் கால் வந்தது.



"சொல்லுங்க மதன்"



"மாறன் அது ஒரே இடத்துலதான் நிக்கிறதா காட்டுது"



"வாட்?"



"ஆமா... மிஸ்டர் மாறன்...இ ப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னுக்கு தான் உங்க கூட பேசப்பட்டிருக்கு.... பட் ஸ்டில் அதே இடத்துல தான் அது இருக்கு"



"ஓகே...."என காலை கட் பண்ணியவன் "ஷிட்...ஷிட்....ஷிட்..." என ஸ்டிரிங் கியரில் குத்திவிட்டு தலையை அழுத்தக் கோதிக் கொண்டான்.



கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டிருக்க அடுத்த என்ன செய்வது என தெரியாமல் வாழ்க்கையில் முதன் முறையாக செயலற்று நின்றிருந்தான் ரிஷிகுமார் தேவமாருதன்!!!





***



இதற்கிடையில் ஈஷ்வரி மூலம் அஜய்யிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க அவன் எல்லோருக்கும் தெரிவித்திருக்க அடுத்த பத்தாவது நிமிடம் வெளியே போயிருந்த அனைவரும் வீட்டிற்குள் குழுமியிருந்தனர்.



தன் மகளுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை என விஜயலக்ஷ்மி அழுது புலம்பிக் கொண்டிருக்க அஜய் கோபத்தில் ஈஷ்வரியிடம் கத்திக் கொண்டிருந்தான்.



"நெத்து தான் அப்பிடி நடந்துதுன்னு தெரியுமில்ல....இருந்தும் அவளப் பாக்காம அப்பிடி என்ன நெட்டி முறிக்கிற வேல?"



"இல்ல அஜய் அவ ரூம்ல தான் இருந்தா...ஆனா.."



"ஆனா...என்ன ஆனா...ரூம்ல இருந்தவ மாயமா மறஞ்சு போனாளா?"



"அஜய்... அவ எங்க யாருகிட்டயும் பேச கூட இல்ல... தலவலின்னு சொன்னதால அவள டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு விட்டுட்டேன்"



"ச்சேஹ்...." என்றவன் ஃபோனை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு போனான்.



இராமநாதனும் அர்விந்தும் இன்னும் வந்து சேராமலிருக்க ஆரவ் அஷ்வினிக்கும் வருண் ரிஷிக்கு அழைத்துக் கொண்டும் இருந்தனர்.



***



தலை விண் விண் என்று வலிக்க கண்களை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு திறந்து பார்த்தாள் அஷ்வினி.....



தான் எங்கிருக்கிறோம் என பார்த்து தெரிந்து கொள்ள கூட முடியாத அளவுக்கு கும்மிருட்டாக காணப்பட்டது அந்த இடம்.....



தன் உடலை அசைக்க முடியாமல் இருக்கவும் தான் தான் கட்டி வைக்கப் பட்டிருப்பது புரிந்தது அவளுக்கு......



திடீரென லைட் போடப்பட்டதில் கண்கள் கூச கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.



கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவரின் கால் தடம் தனக்கு அருகில் நெருங்கி விட்டதை உணர்ந்தவள் பட்டென கண்களை திறக்க அதற்குள் அவளருகே வந்துவிட்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு உடல் ஒரு முறை தூக்கிப் போட பயத்தில் சேரின் கைப்பிடியை இறுக்க பற்றியவள்



"நீ...நீ...நீயா...?" என மிரள அவள் நடுக்கத்தை பார்த்து வாய் விட்டு சிரித்தவன் அவளை அங்குலம் அங்குலமாக ரசித்தவாறு



"நானேதான் செல்லம்....என்ன திரும்ப பாப்பேன்னு எதிர் பாக்கலேல?"



"நீ..நீ...எப்பிடி உயிரோட... நீ...நீ செத்துட்டதா..."



"நா செத்துட்டனா....அப்போ உன் கண் முன்னாடி நிக்கிறது என்னோட ஆவியா?"



"எ...எ...என்ன விட்டுடு ப்ளீஸ்..."



"என்ன செல்லம் நீ...உன்ன விட்டுட்றதுக்காகவா அவ்வளவு கஷ்டப்பட்டு அமெரிக்கால இருந்து இங்க வந்தேன்"



"உ...உ....உனக்கு என்ன...வே.. வேணும்?"



"சொன்னா தந்துடுவியா....?"



"பணம் தானே வேனும்....நா...நா... தந்துட்றேன்... ப்ளீஸ் என்ன விட்டுடு"



"ச்சு...ச்சு....ச்சு... என்ன பாத்தா பணத்துக்காக கடத்தினவன் போலவா இருக்கு?"



"....."



"எனக்கு என்ன வேணும்னு கேட்டல்ல.... சொல்லிடவா.... நீ தான் வேணும்.... ஓகே தானே?" அவன் பார்வை போன இடங்களில் அவளுக்கு பற்றி எரிந்தது.



"உன்ன ஒரு தடவ மிஸ் பண்ணிட்டேன் உன் நொண்ணனால..... பட் செல்லம் இந்த தடவ பக்காவா ப்ளான் பண்ணி உன்ன தூக்கியிருக்கேன்... .உன்ன பத்தின சின்ன துரும்பு கூட வெளி போக முடியாத அளவு.... எல்லாம் பக்காவா இருக்கு"



"...."



"நீ இவ்வளோ அமைதியானவளா செல்லம்...ஏதாவது பேசுமா...." அவள் எதிர் பாரா நேரத்தில் அவள் இதழை கவ்விக் கொள்ள ஆன மட்டும் அவனிடமிருந்து விடுபட போராடியவளுக்கு அது முடியாமல் போக மூச்சுக்கு தினறி மறுபடியும் மயங்கினாள்.



***



நெஞ்சின் ஒரத்தில் திடீரென சுலீரென வலிக்க தன்னவளுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்த ரிஷி கண்களை இறுக்க மூடித்திறந்தான்.



குனிந்து தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியபடி நிமிர்ந்தவனின் கண்களில் தெரிந்த வெறி அவன் எதிரிக்கான சாவு காலம் நெருங்கி விட்டதென்பதை பறைசாற்றியது.



அடுத்த நிமிடம் புயலென சீறிப் பாய்ந்தது ரிஷியின் ரோல்ஸ் ராய்ஸ்!!!



காரிலுள்ள புளூ டூத்தை ஆன் பண்ணி கதிருக்கு அழைக்க மறுமுனை



"சார் சொல்லுங்க சார்?"



"கதிர் ராமோட அப்பா கேசவன் அடுத்த அரைமணி நேரத்துல என் கஸ்டடியில இருக்கனும்"



"எஸ் சார்" என்றவனின் அழைப்பு துண்டிக்கப்பட அவன் உதட்டில் மர்மப் புன்னகை மின்னியது.



அவனுக்கா தெரியாது எதிரியின் பலவீனம்!!!



எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்பதை கற்றிராவிட்டால் இந்த சின்ன வயதில் இவ்வளவு பெரிய தொழில் அதிபராய் ஆகியதற்கு மதிப்பே இல்லாமல் போய் விடுமே....



அடுத்த அரைமணி நேரத்தில் கேசவன் கடத்தப்பட்டிருந்தார்!!!



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸின் முன் வலுக்கிக் கொண்டு வந்து நின்ற காரிலிருந்து இறங்கியவன் எதுவுமே நடக்காதது போல் நிதானமாக நடந்து வந்ததை பார்த்த கதிருக்கு உள்ளுக்குள் குளிர் பரவத்தொடங்கியது.



கோபத்தில் இருப்பனை கண்டிருந்தால் கூட அவனுக்கு அவ்வளவு பயம் ஏற்பட்டிருக்காது போலும்!!!



கேசவனின் முன் தோரணையாய் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் அவரை கூர்ந்து பார்த்த படி



"சோ.... மிஸ்டர் கேசவன்... உங்களுக்கு உயிர் வாழ விருப்பம் இல்ல அப்படித்தானே?"



"தோ பார் மாறா.... ராம் எங்க இருக்கான்னு எனக்கும் தெரியாது.... மரியாதையா என்ன விட்டுடு...."



"நா உங்க கிட்ட ராம பத்தி கேக்கவே இல்லியே... மிஸ்டர் கேசவன்...." என்றவனது பதிலில் அதிர்ச்சியாய் அவனை பார்க்க அவனோ கதிருக்கு ஏதோ கண் காட்டவும் கையில் டிரில்லர் மிஷினோடு வந்தவனை பார்த்தவருக்கு பயத்தில் வியர்த்து வழியத் துவங்கியது.



"கதிர்... அந்த ராமுக்கு போன போட்டு மிஸ்டர் கேசவனோட நிலமைய கொஞ்சம் தெளிவா எடுத்து சொல்லு" என நக்கலாக கூறியவன் கெசவனை திரும்பிப் பார்த்தான்.



"மாறா... வேணாம் விட்டுடு..." என கெஞ்சத் தொடங்கிய வேலை ராமின் குரல் நக்கலாக ஒலிக்க ஆரம்பிக்க அதை விட நக்கலால அவன் பேசுவதை கேட்டான் ரிஷி



"தி க்ரேட் பிஸ்னஸ் மேக்னட் ரிஷிகுமார் தேவமாறுதனோட பி.ஏ இந்த ராம் கிட்ட உயிர் பிச்சை கேட்டு கால் பண்ணுவான்னு நா நெனச்சி கூட பாக்கல"



"...."



"என்ன மி...ஸ்...ட...ர்.... மா...ற...ன்... உன் பொண்டாட்டி என்கிட்ட இருக்கான்னு தெரிஞ்சுமா நீ இன்னும் அமைதியா இருக்க?"



"....."



"இந்த நேரத்துல கூட நிதானமா இருக்க உன்னால மட்டும் தான் முடியும்.... ஐ அம் ப்ரௌட் ஆப் யூ..." என போலியாக சிலாகித்தவனுக்கு எதிர் பக்கம் சிரிப்பு சத்தம் கேட்க



"மாறா... என்னால முடியாதுன்னு நெனச்சி தானே என்ன அலட்சியப்படுத்தின..... இப்போ என்னாச்சின்னு பாத்தியா உன் பொண்டாட்டி என் கைல..."



"......"



"பரவால்ல ப்ரஷ் பீஸாதான் வெச்சிருக்க... உதட்டுல முத்தம் குடுத்ததுக்கே மயங்கிட்டா... இப்போ நா அவ உடலயே தொட போறேன்னு தெரிஞ்சா செத்துப் போயிடுவால்ல...?" மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்த ரிஷிக்கு இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிற சூழ்நிலை கருதி அடக்கியவனை பார்த்து கதிருக்கு வியக்காமல் இருக்க முடியவே இல்லை....



கதிருக்கு கண்ணசைக்க அவன் ட்ரில்லருடன் அருகே வரவும் இவ்வளவு நேரம் ஏளனமாக ரிஷியை பார்த்துக் கொண்டிருந்தவரின் முகத்தில் மரண பயம் தெரிய



"மாறா... வேணாம் விட்டுடு ப்ளீஸ்..." என்ற குரலில்



"டாட்..." என அவன் அதிரவும் வாய்விட்டு சிரித்த ரிஷி



"என்ன மிஸ்டர்.ராம் அனுப்பிடலாமா?" எனவும்



"நோ.... வேணாம் மாறா.... விட்டுடு அவர....நா..நா... உன் அஷ்வினிய விட்டுட்றேன்"



"என்னது... என் அஷ்வினியா....?அன்னக்கி உன் வாய் வேறு என்னமோ சொல்லிச்சே?"



"மாறா...ப்ளீஸ்...வி... விட்டுடு"



"இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல என் பொண்டாட்டி வீட்ல இருக்கல்ல.... அப்பறம் உன் அப்பன பறலோகத்துலதான் பாப்ப.... அன்டர்ஸ்டாண்ட்?" உறுமியவனின் குரல் நிதானமாய் வந்து விழுந்தாலும் அதிலுள்ள சீற்றமே சொல்லாமல் சொல்லியது அவன் சொன்னதை செய்பவன் என்று!!!



தொடரும்.....



11-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 21 ❤



மயக்கத்தில் இருந்தவளை தண்ணீர் அடித்து எழுப்ப முயன்றான் ராம்....



தந்தைக்கு ஏதாவது செய்து விடுவானோ என்ற படபடப்பில் கையிலிருந்த குவளை கூட நடுங்கிக் கொண்டிருக்க அவன் அடியாட்களோ அவனுடைய செய்கையை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.



திடீரென அடிக்கப்பட்ட தண்ணீரில் திடுக்கிட்டு கண்களை திறந்தவள் அவன் முகத்தை அருகில் பார்த்து அருவருப்பில் முகத்தை சுழிக்க அவள் மயக்கம் தெளிந்து விட்டது தெரிந்து அவன் அடியாளிடம்



"டேய்... இவள அவ வீட்ல பத்திரமா இறக்கி விட்டுடுங்க.... இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள இவ அவ வீட்ல இருக்கல்ல நீங்க உயிரோட இருக்குறத மறந்துருங்க...."

ரிஷியிடம் காட்ட முடியாத கோபத்தை அவர்களிடம் காட்டிக்கொண்டு இருந்தான்.



இது தன் கணவனின் கைங்காரியமாகத்தான் இருக்க வேண்டும் என யூகித்தவளுக்கு உதட்டோரம் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது!!!



***



காலை கட் பண்ணிய கதிர் ரிஷியின் கட்டளைக்காக காத்திருக்க



"கதிர்.... இவன் எதுக்குடா நம்ம இந்த உலகத்துல இன்னும் வாழ்ந்துட்ருக்கோம்னு தினம் தினம் நோந்து சாவனும்" என்றவன் எழுந்து கொள்ள



"அதான் என் புள்ள உன் பொண்டாட்டிய சொன்னமாறி விட்டுட்டால்ல" அவர் வாதாட தலையை இரு புறமும் ஆட்டி சிரித்தவன்



"நா உன்ன விட்றதா அவன்கிட்ட சொல்லவே இல்லயே"என்றவன் வாசல் வரை சென்று திரும்பி



"கதிர்..."எனவும்



"சார்...?"



"நாளக்கு காலை விடியல அந்த ராம் கண்ணால பாக்க கூடாது"



"ஓகே சார்..."ஆமோதிப்பாய் தவையசைத்தவனை பார்த்து தானும் அசைத்து விடைபெற்று விட கேசவன் பக்கம் திரும்பினான் கதிர்...



இப்பொழுதெல்லாம் அவனுக்கு ரிஷியை ரொம்பவே பிடித்துப் போனது....



அவன் என்ன செய்ய சொன்னாலும் உடனே தலையாட்டும் செய்கைக்கு பின்னால் "அவர் எது செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும்" என்ற பெரும் நம்பிக்கையே மறைந்து கிடந்தது.



வெளியே வந்தவன் விடாமல் அழைத்துக் கொண்டிருக்கும் வருணுக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே அடண்ட் செய்தவன் பதற்றமாக



"மச்சி... எங்கடா இருக்க?ரி...ரிக்ஷிக்கு ஒன்னுல்லல?" என்றவனின் கேள்வியில் கையை உயர்த்தி மணியை பாத்து விட்டு



"நத்திங் வருண்... அவ இப்போ வீட்டுக்கு வந்துடுவா... பாத்துக்கோ...."

என்றவனின் பதிலில் வெகுவாக குழம்பிப் போனான் வருண்.



"பட்...நீ....என்னடா நடக்குது?"



"அப்பறம் பேசிக்கலாம் மச்சி..." என்றவன் பட்டென போனை வைத்துவிட வருணுக்கு என்னதான் நடக்கிறது என்று இருந்தது.



***



ரிஷியின் வார்த்தைகள் பொய்க்காமலேயே வருண் போனை வைத்த அடுத்த நிமிடம் வீட்டின் முன் கார் சத்தம் கேட்கவும் அங்கு விரைந்தனர் அனைவரும்....



நடக்க கூட முடியாமல் தள்ளாடிக்க கொண்டு வருபவளை வருண் சட்டென தாங்கிப் பிடிக்க அஜய்க்கோ அளக்க முடியாத கோபம் ரிஷியின் மீது....



இவளை தனியாக அனுப்பி விட்டு அவன் என்னதான் செய்து கொண்டிருக்கிறான்....

நினைக்க நினைக்க உள்ளுக்குள் கோபம் கூடிக் கொண்டே போனது....



விஜயலக்ஷ்மி தாவி அவளை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட அவளும் அதற்கு மேல் முடியாமல் கட்டிப் பிடித்து அழுதே விட்டாள்.



ஆரவ் தான் நிலைமை உணர்ந்து இப்போது எதுவும் அவளிடம் கேட்க வேண்டாம்.... எதுவானாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறி அவளை கயலோடு ரூமிற்கு அனுப்பி வைத்தான்....



அப்போதைய சூழ்நிலையை சீர் செய்து விட்டாலும் அண்ணா எதுக்காக இன்னும் வீட்டுக்கு வர்ல?அஷ்வி கூட எதுக்காக துணை இருக்காம ஆபிஸ்ல இருக்காரு.... போன்ற கேள்விகள் வண்டு போல் மண்டையை குடைந்து கொண்டே இருந்தது.



அங்கிருந்த அனைவருக்குமே அதே கேள்விதான் குழப்பிக் கொண்டிருக்க அவர் அவர் யோசனையில் மூழ்கிப் போயினர் அனைவரும்......



எல்லோரையும் விட வருணுக்குத் தான் பலத்த யோசனையாய் போயிற்று!!!



அவன் அறிந்த வரை ரிஷியிடம் தெரிந்த இந்த நிதானம் புதிது....



கோபம் கூட அன்று பார்த்திருக்கிறான் தான் எனினும் இப்போதுள்ள கோபம்.... அதில் தெரிந்த சீற்றம் எல்லாமே புதிதாய் தெரிந்தது.



ஆரவ் அதற்குப் பின் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லியிருந்தாலும் ரிஷியின் கேரக்டர் இந்த அளவுக்கு மாறிப் போயிருக்குமென அவன் நினைத்துப் பார்க்கவே இல்லை என்பது தான் உண்மை....



அன்றிருந்த ரிஷிக்கும் இப்போது இருப்பவனுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் தெரிந்தது......





***



அந்த நாள் ஒரு வித குழப்பத்திலேயே அனைவருக்கும் கழிய இரவாகியும் கூட ரிஷி வீட்டுக்கு வராதது எல்லோருக்கும் ஒரு வித பயத்தை கொடுத்திருக்க அஜய்க்கோ அவனை கொன்று போடும் வெறி!!!



இந்த நேரத்தில் தன் தங்கையின் பக்கத்தில் ஆறுதலாக இருக்க வேண்டியவன் அவன் வீட்டுக்கே வராமலிருப்பது ஏனோ விட்டேற்றியாய் இருப்பது போலவே தோன்றிற்று....



ரூமிற்குள் அடைந்து கிடந்தவளுக்கோ கண்ணீர் நிற்காமல் வழிந்து அவள் தலையனணையை நனைத்துக் கொண்டிருந்தது....



ராமின் செய்கை ஒரு புறமென்றால் தன்னவனின் விலகல் இன்னொரு புறமென மனதை தாக்கிக் கொண்டிருந்து.



ராம் முத்தமிட்ட தன் உதட்டை ஆன மட்டும் கழுவி விட்டாள்....ஏன் இப்பொழுது கூட அதை நினைத்து அறுவருப்பில் துடைத்துக் கொண்டு தான் இருக்கிறாள்....



ஆனால் அந்த உணர்வு நின்ற பாடாய்த்தான் தெரியவில்லை....



இரவு 8 மணி



முகத்தில் ஒரு வித இறுக்கம் குடி கொண்டிருக்க உள்ளே நுழைந்த ரிஷியை பார்த்து ஹாலில் அவனுக்காக காத்துக் கொண்டிருந்த அனைவரும் எழுந்து நின்றனர்.



அவர்களை புருவ முடிச்சுடன் பார்த்தவன் ஹாலுக்கு செல்ல அனைவரும் அவனை கேள்வியாய் நோக்குவது கண்டு நடந்தது அனைத்தையும் கூற அப்போழுதான் அவர்களுக்கு அவன் வராததற்கான காரணமே புரிந்தது.



மனது சமாதானமானாலும் ஏன் இவ்வளவு நேரம் என நுனி நாக்கு வரை வந்த கேள்வியை தங்களுக்குள்ளேயே அடக்கிக் கொள்ள அஜய்க்கு மட்டும் அப்படி இருக்க முடியாமல் போனது போலும்....



ஏற்கனவே கத்தி குத்துபட்ட விஷயத்தில் அவன் மேல் இருந்த கோபமும் சேர்ந்து கொள்ள பாய்ந்து அவன் சட்டை காலரை பிடித்து விட்டான்.



சத்தியமாக இப்படியொரு நிகழ்வை அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவே இல்லை....



அதிர்ச்சியில் அவர்கள் உறைந்து போய் நின்றிருக்க அஜய்



"எல்லோருக்கும் சமாதானமான காரணம் சொல்லிட்டா சரியா போச்சா.... என் பொண்டாட்டின்னு வாயால மட்டும் சொல்லிட்டா பத்தாது.... செயல்லயும் இருக்கனும்" என கத்த அப்போதுதான் அனைவரும் சுயநினைவுக்கே வந்தனர்.



ரிஷி அவனையும் தன் ஷர்ட் காலரையும் ஒரு பார்வை பார்த்தவாறே நிதானமாக அவன் கைகளை விலக்கி விட்டு தன் காலரை சரி செய்தவன் அவன் எதிர்பார்க்கா நேரத்தில் விட்டான் ஒரு அறை....



இப்போது அதிர்ந்து நிற்பது அஜய்யின் முறையாயிற்று!!!



எல்லோரும் அவனையும் அஜய்யையும் மாறி மாறி பார்த்திருக்க



"என் பொண்டாட்டின்னு செயல்லயும் காட்டினதுக்கு சாட்சி தான் உன் தங்கச்சி இப்போ வீட்ல இருக்கா..... தப்பு உன் தங்கச்சி மேல இருக்கே தவிர நா எதுக்கு லேட்டா வரேன்னு ஆராய்ச்சி பண்ற பண்ற வேல உங்களுக்கு தேவயில்லாதது..... அவள காணோம்னு பைத்தியக்காரன் மாறி அலஞ்சது எனக்கு மட்டும் தான் தெரியும்.... அவ சொல்லாம வீட்ட விட்டு வெளிய போனதுல எப்பிடி தேட்றதுன்னு தெரியாம நின்னுட்டு இருந்தப்போ வந்தியா....?இல்லல்ல.... அவள விசாரிக்கிறத விட்டுட்டு என்கிட்ட எகிறினா அப்பறம் நானும் உங்களுக்கு யாருன்னு காட்ட வேண்டி இருக்கும்" அவன் அஜய்யை பார்த்து அடிக்குரலில் கர்ச்சிக்க அனைவருமே அவனின் இந்த பரிணாமத்தில் ஸ்தம்பித்து நின்று விட்டனர்....



யாருக்கும் என்ன பேசுவதென்றே புரியவில்லை....ஒரு அண்ணனாக அஜய்யின் பக்கம் நியாயம் இருந்தாலும் ரிஷியின் கோபத்துக்கும் நியாயம் இருக்கவே செய்ததில் என்ன செய்வதென தெரியாமல் நின்றிருந்நதனர்.....



அஜய்யின் கத்தல் சத்தம் கேட்டு வெளியே வந்து நின்றிருந்தவளுக்கு அவன் உதிர்த்த வார்த்தைகளில் மனது வெகுவாக காயம்பட்டு போனது.....



அவன் மட்டுமா பதறினான்..... தெரியாத எண்ணிலிருந்து திடீரென அவனை ஹாஸ்பிடலில் சேர்த்திருப்பதாக கூறியதில் அவளுக்கு வந்த பதற்றம்!!!!



அதை வார்த்தையால் வடித்து விடவும் தான் முடியுமா???



இது எதுவுமே தெரியாமல் அவள் மீது மட்டுமே பழி போட்டால் என்ன அர்த்தம்.....



கதவு அறைந்து சாத்தப்பட்டதில் அவளும் பேசியது யாவும் கேட்டு விட்டாள் என யூகித்தவன் கண்களை இறுக்க மூடி திறந்தான்.



அஜய்யும் கோபமாக தங்களறைக்குள் சென்று விட அவனையே பார்த்திருந்தவன் அனைவரையும் முறைத்து விட்டு தானும் சென்றான்.



...........



கட்டிலில் விழுந்து முகத்தை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தவளை பார்த்தவன் ஒரு பெரு மூச்சுடன் சென்று ப்ரஷப்பாகிவிட்டு வந்தான்.



அவன் திரும்பி வரும் போது அவள் கட்டிலில் இல்லை!!!



ஆள்காட்டி விரலையும் நடு விரலையும் செர்த்து தன் நெற்றியை தேய்க்க அவள் சாப்பாட்டு தட்டுடன் உள்ளே நுழைந்தாள்.



அவளையே அவன் பார்த்திருக்க அவனிடம் வந்தவள் அதை நீட்டவும் அவளுடைய செய்கையில் கோபம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போக அவனுடைய இதழ்கள் தானாக மலர்ந்தது.



அவனிடம் நீட்டிவிட்டு வேறேங்கோ பார்வையை பதித்திருந்தவளின் சிறுபிள்ளைத்தனமான கோபம் அவனுக்கு இன்னும் சிரிப்பைத் தான் வரவழைத்தது.



அதை அவளிடமிருந்து எடுத்து அருகிலிருந்த சின்ன மேசையில் வைத்தவன் நகரப்போனவளின் கையை பிடித்து இழுக்க அவன் மேலேயே வந்து விழ அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் அடுத்த நிமிடம் அவள் இதழ்களை முற்றுகையிட்டு இருந்தான்....



அவளை காணாது தான் தேடிய தவிப்பை அந்த ஒற்றை இதழ் முத்தத்தில் தீர்த்துக் கொண்டு இருந்தான்!!!!

கொஞ்ச நேரம் கழித்தே அவள் கண்ணீரின் சுவையை உணர்ந்தவன் அவளை விட்டு பட்டென விலகி அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்ள அவனை கட்டிப் பிடித்து மீண்டும் கதறினாள்.



அவளை அழவிட்டவன் அவள் அழுகை நிற்காமல் தொடர்ந்து கொண்டே போகவும்



"அஷு....எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத.... அதான் உன் பக்கத்துல நா இருக்கேன்ல..... என்ன மீறி அவன் உன் மேல கை வெச்சிடுவானா?"



"அ...அ...அவன்... என்ன...கி...கிஸ்..."

அவள் என்ன சொல்ல வருகிறாள் என புரிந்து கொண்டவனின் இரத்தம் கொதித்தது.இருந்தும் கட்டுப் படுத்தியவன்



"அதான் மனச போட்டு குழப்பிக்காதன்னு சொல்றேன்ல?"



"நா....நா...ரொம்ப ப...ப... பயத்துட்டேன் தே...தேவ்" என்றவளின் அணைப்பு இன்னும் இறுக



"ஷ்...அழக்கூடாதுடா.... நா பக்கத்துல இருக்கும் போது என்ன பயம்...ம்?"



நடந்த யாவற்றையும் திக்கித் தினறி அவள் சொல்லி முடித்து மீண்டும் அழ ஆரம்பிக்க இவளுக்கு தன் வழியில் சொன்னால்தான் சரிப்பட்டு வருவாள் என நினைத்தவன்



"ப்ச்...இப்போ அழறத நிறுத்தப் போறியா இல்லையா அஷ்வினி?"என அதட்டவும் அவள் கண்ணீர் சட்டென நின்று போனது....





காலை.....



பேப்பரின் முதல் பக்கத்திலேயே முக்கிய செய்தியாக இடம் பெற்றிருந்த ராமின் கொலை சம்பந்தமான நியூசை பார்த்து அதிர்ந்து நின்றான் ரிஷி.....



தன் கையிலிருந்த பேப்பரை பார்த்து அதிர்ந்து நின்றவன் அடுத்த நிமிடம் ஏதோ தோன்ற அவசரமாக தங்களறைக்குள் சென்றை தன் ஃபோனை எடுத்து கதிருக்கு அழைத்தான்.



"கதிர்..."என சீறவும் என்னானதோ என்று பதறி



"சா...சார் எ..என்னாச்சு?"எனவும்



"அவன விட்டு பிடிக்கலாம்.... விடுன்னுதானே சொன்னேன்... என்ன பண்ணி வெச்சிருக்க?"



"சார்....பு...புரியல"



"இடியட் நியூஸப் பாரு"

எனவும் அவசரமாக டி.வியை ஆன் பண்ணி பார்த்தவனும் அதிர்ந்து போனான்.



"சார்...இது வேற யாரோ பண்ணிருக்காங்க சார்...."



"வாட்...?"



"எஸ் சார்..... பண்ணலாம்னு இருந்தப்போதான் நீங்க வேணாம்னு கால் பண்ணீங்க... அதனால விட்டுட்டோம் சார்" என்றவனின் பதிலில் வெற்றியை சுருக்கியவன் தன் வலக்கை நடுவிரலால் புருவத்தை நீவியபடி



"நீ எங்க இருக்க?"



"ஆபீஸுக்கு தான் கெளம்பிட்ருக்கேன் சார்....."



"ஓகே தென்....நீ ராமோட அப்பாவ ஹாஸ்பிடல்ல சேத்துடு...நா வந்துட்றேன்..."



"ஓகே சார்"என்றவன் இணைப்பை துண்டிக்க தானும் துண்டித்தவன் ப்ரெஷ்ஷாகி விட்டு "அஷ்வினி...." என மேலிருந்து அழைக்கவும் அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருந்தவள் ஈஸ்வரியிடம் அதை கொடுத்து விட்டு மேலேறிச் சென்றாள்.



அவள் அறைக்குள் நுழைந்ததும் ஏற்கனவே தயாராகி இருந்தவனை யோசனையாய் பார்த்துக் கொண்டே அவனருகில் சென்று



"என்னாச்சு தேவ்.... எங்க கெளம்பிட்டீங்க?" எனவும் அதில் கலைந்து



"அஷு....நா ஊருக்கு கெளம்புறேன்.... ஆபிஸ்ல நிறைய வொர்க் பெண்டிங்ல இருக்கு.... என்னால் இங்கேயும் அங்கேயும் அலஞ்சிட்டு டய்ம் வேஸ்ட் பண்ண முடியாது.....சோ...நா கெளம்புறேன்...." என்றுவிட்டு அவள் முகத்தை பார்க்க அவள் அமைதியாக இருக்கவும் மீண்டும்



"நீங்க திரும்பி வர்றதுக்கு இன்னும் ஒன் வீக் ஆகும்னு ராமன்...ஐ...ஐ.. மீன் மாமா சொன்னாரு..."



"பட் தேவ் நீங்க கோயிலுக்கு வராததுனால அம்மா ஏற்கனவே ரொம்ப பயந்து இருக்காங்க... இன்னும் ஒரு நாள் நின்னு கோயிலுக்கு போய் கும்புட்டுட்டு கெளம்புங்க ப்ளீஸ்...."



"அஷ்வினி நா சொல்றத புரிஞ்சிக்க ட்ரை பண்ண மாட்டேன்னு யாருக்காவது ப்ராமிஸ் பண்ணி இருக்கியா என்ன?"



"....."



"நா டய்ம் கெடச்சா வர ட்ரை பண்றேன்..."



"....."



"ஏய் ஏதாவது பேசுடி"



"....."



"அஷு நா சொல்றது புரியுதா இல்லையா?"



"புரியுது தேவ்...பட் ப்ளீஸ் அம்மா நிம்மதிக்காகவாச்சும்"



"இல்ல அஷு...என்னால இதுக்கு மேல இங்க இருக்க முடியல"



"தேவ் ப்ளீஸ் ஒன் டே..."



"ப்ச் அஷ்வினி....உங்கிட்ட சொன்னது தப்பா போச்சு" என்றுவிட்டு தலையை அழுத்தக் கோதிக் கொள்ள அவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் வார்த்தைகளில் முகம் சட்டென வாடியது.



"இப்போ எதுக்கு சிம்பதி க்ரியேட் பண்ற?" இருந்த டென்ஷனில் அதற்கும் எரிந்து விழ வழுக்கட்டாயமாக சிரிதெது வைத்தவள்



"பொய்ட்டு வாங்க பாய்...." என்றுவிட்டு நகர்ந்து விட தோலை குலுக்கியவன் ஒரு பெரு மூச்சுடன் கீழே வந்து அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.







தங்கள் அறை பால்கனியில் நின்று கொண்டு அதே பேப்பரை பார்த்து விட்டு சித்தார்த்துக்கு கால் பண்ணினான் ஆரவ்



"மச்சான் சொல்லுடா....நானே பண்ணலாம்னு இருந்தேன்"



"சித்து நியூஸ் பாத்தியா?" பரபரப்பாக கேட்ட குரலில் அவசரமாக டி.வியை ஆன் பண்ணி பார்த்தவன் அதிர்ந்து போனான்.



"என்னடா இது?"



"எனக்கும் ஒன்னுமே புரியல மச்சான்....அண்ணா பண்ணியிருக்க மாட்டாங்கன்னுதான் தோனுது"



"பட்?"



"இல்லடா....அவரும் பேப்பர் பார்த்து ஷாக் ஆயிட்டாரு"



"வாட்...என்னடா சொல்ற?"



"கேஸ் ரொம்ப சிக்கலாக முன்ன அண்ணாவ காப்பாத்தனும்டா"



"எஸ் மச்சான்....நீ இப்போ எங்க இருக்க?"



"அத்தயோட ஊர்லதான்டா"



"ஓகே மச்சான்....நீ நேரா கமிஷ்னர் ஆபீஸ் வந்துரு...நாம மதன் கிட்ட பேசிக்கலாம்"



"ஓகே டா..."என வைத்தவன் தானும் வீட்டில் சொல்லி விட்டு கிளம்பிச் செல்ல வருணின் ஃபோன் அலர அதில் ஒளிர்ந்த "மதன்சிவா" எனும் பெயரை பார்த்தவன் உடனே அடண்ட் பண்ணி காதில் வைக்க



"அண்ணா..."என்ற மதனின் பதற்றமான குரலில்



"எ...எ..என்னாச்சுடா? எதுக்கும் பதட்டமா இருக்க?"



"நீங்க கெளம்பி ஆபீஸ் வாங்க பேசிக்கலாம்"

என்றுவிட்டு கட் பண்ணி விட இவனும் அவசரமாக கிளம்பிச் சென்றான்.



ஒருவர் பின் ஒருவராக கிளம்பிச் செல்வதை பார்த்த இராமநாதன் யோசனையாய் அவர்களை பார்த்திருந்தார்.



***



ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்



தன் மேசை மேலிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்தான் ரிஷி.



அவனுக்கு முன் அவனையே பார்த்தவாறு நின்றிருந்த கதிர்



"சார்... இது வேறு யாரோ தான் பண்ணியிருக்கனும்.... அதுவும் உங்க மேல பழி விழனும்குரதுக்காக" கை அந்தரத்தில் நிற்க அவனை நிமிர்ந்து பார்த்தவன்



"சோ... நாம கேசவன கடத்தினது இங்க யாருக்கோ தெரிஞ்சிருக்கு"



"எஸ் சார்... அதேதான் நானும் யோசிச்சேன்"



"எனக்கு சி.சி.டி.வி ஃபூடேஜ் வேனும் கதிர்.... அதோட நம்ம கம்பனி ஒர்க்கர்ஸ் எல்லோர் கூடவும் ஒரு மீட்டிங் அரேன்ஜ் பண்ணு"



"ஓகே சார்....."என்றுவிட்டு திரும்ப ரிஷி மீண்டும்



"கதிர்..."எனவும் அவசரமாக திரும்பியவன்



"சார் சொல்லுங்க சார்"எனவும்



"இன்னக்கி எல்லா மீட்டிங்ஸயும் கேன்சல் பண்ணிரு"



"பட் சார்....அந்த மல்கோத்ரா கூட முக்கியமான ப்ராஜக்ட் மீட்டிங்கு ஸைன் பண்ணி இருக்கீங்க"



"டூ வட் ஐ சே " என சீறவும்



"ஓ... ஓகே சார்" என்றவன் தப்பித்தால் போதும் என வெளியேறி விட்டான்.



***



தன் கமிஷ்னர் இருக்கையில் மதன் அமர்ந்திருக்க அதற்கு முன்னால் டென்ஷனுடன் அமர்ந்திருந்தனர் ஆரவ்வும் சித்தார்த்தும்....



முதலில் அமைதியை கலைக்க விரும்பிய மதன்



"ஆரு....இந்த...ஜேய், அக்ஷயா அப்பறம் அந்த அனன்யாவோட அப்பா... இவங்க பக்கத்துல இருந்து தான் ரிஷி அண்ணாக்கு எதிரி தாக்குவாங்கன்னு இவ்வளவு நாள் நாம எதிர்பார்த்த அண்ணாவ பாதுகாத்தா இவன் திடீர்னு எங்க இருந்துடா வந்தான்"எனவும் சித்தார்த்



"தெரிஞ்சா நாங்க எதுக்குடா இங்க வரப்போறோம்" என கடுப்படிக்க அவனை முறைத்த ஆரவ்



"அதான் மச்சான் எனக்கும் புரியல...."எனவும் மதன்



"எவ்வளவு பாதுகாத்தும் அனன்யா அஷ்விய குத்தும் வர வேடிக்க பாத்துட்டு தானே இருந்த"



"ப்ச்....நீ வேற... அவ ரொம்ப புடிவாதமா இருந்தாடா....நா சொல்றத காதுல கூட வாங்கிக்கல...." ஆரவ் அலுத்துக் கொள்ளவும் சித்தார்த்



"அதெப்பிடிடா அவள நீ நம்பி வீட்டுக்குல விட்ட?"



"நா எங்கடா நம்பினேன் அந்த ராட்சஸி தான் நா சொன்னத கூட கேக்காம என் மேல கோவிச்சுகிட்டு அவள நம்பி தங்க வெச்சா" பல்லை கடித்துக்கொண்டு ஆரவ் சொன்ன விதத்தில் சிரித்த மதன்



"அஷ்வி கூட சண்ட போடாம ஒனக்கு இருக்க முடியாதா மச்சான்?" எனவும் இருவரையும் மாறி மாறி பார்த்த சித்தார்த்



"டேய்...அந்த வாயாடிய பத்தி பேசுறத விட்டுட்டு அண்ணாட மேட்டருக்கு வாங்கடா..." என்க ஆரவ் திடீரென



"டேய்... இந்த எதிரி அண்ணாக்கிட்டயே கண்ணாமூச்சி ஆடுறான்னா கண்டிப்பா அண்ணாக்கு தெரிஞ்சவனாதான் இருக்கனுமில்லடா?"



"நோ சேண்ஸ் ஆரு... அண்ணாக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லடா"

சித்தார்த் மறுக்கவும் அதை ஆமோதித்த மதன்



"அப்கோர்ஸ் ஆரு..... ரிஷி அண்ணாக்கு தெரிஞ்சவனா இருந்திருந்தா இன்னேரம் டெட் பாடியாதான் இருந்திருக்கனும்"

எனவும் மறுபடி யோசனையானான் ஆரவ்.



***



சமையல் கட்டுக்கு மேல் இருந்து கொண்டு கால் ஆட்டியபடியே அமைதியாய் இருக்கும் அஷ்வினியை வம்பிலுத்துக் கொண்டிருந்தாள் கயல்விழி.



"அஷ்வி... மாமா கூட எப்ப பாரு ரொமான்ஸ்ல இருக்குறதால தான் அவர பாக்காம ஏங்கி போயிருக்கா... வேனும்னா நீங்களே பாருங்க அண்ணி" எனவும் அஷ்வியை பார்த்த ஈஷ்வரி



"இருக்கலாம் கயல்... எப்போ பாரு வாய் ஓயாம பேசிகிட்டே இருக்குவளுக்கு நல்ல ட்ரீட்மென்ட் தான் குடுத்திருக்காரு உன் மாமா" என்க அஷ்வினிக்கு நேற்றைய இதழ் முத்தம் மனக்கண்ணில் வந்து போக பட்டென தலையை குனிந்து கொள்ளவும்



"அடப்பார்ரா..... அஷ்விக்கு வெக்கம் கூட வருது" மீண்டும் கயல் சீண்டவும் அவளை முறைத்தவள்



"ஏன் நீ கூட தான் ஆரு கூட ரோமான்ஸ் பண்ணிகிட்டு இருக்க... நா ஏதாவது சொன்னேனா...வாய மூடிட்டு இரு.... நானே கடுப்புல இருக்கேன்"



"உன் வீட்டுக்காரர் மேலுள்ள கோவத்த எதுக்குடி என் மக மேல காட்ற?"பரிந்து கொண்டு வந்தார் விஜயலக்ஷ்மி.



"அந்த கமாண்டர் இருந்தா ஏன் நான் இவகிட்ட காட்ட போறேன்...." அவன் கோபப்பட்டு விட்டு போனதில் தன்னையும் மீறி அவன் மீதுள்ள கோபத்தில் வாயை விட



"என்னது கமாண்டரா...?" மூவரும் கோரஸாக அதிர்ந்து அவளை பார்க்க அப்போதுதான் தான் உளறி விட்டதை உணர்ந்தவள்



"ஹி...ஹி...அது சும்மா... விஜி...ஏதோ வாய் தவறி வந்துடுச்சி"அவள் சமாளிக்க அவர் கையிலிருந்த கரண்டியுடன் அடிக்க வரவும் அவருக்கு அகப்படாமல் பாய்ந்து ஓடியவள் அப்போதுதான் சமையல் அறைக்குள் நுழையப்போன அர்விந்தின் பின் மறைந்து கொண்டு எட்டிப் பார்க்க விஜி



"டேய் தள்ளி நில்லு... இல்ல அவக்கு விழ வேண்டியது உனக்கு விழும்"



"அய்யோ அத்த...உங்க குடும்பத்துக்கே ஏன் இந்த கொலவெறி?" என அலறவும் சிரித்த அஷ்வி



"விஜி.... பாவம் பச்ச புள்ள கெஞ்சுறான்ல....விடு" என்க



"நீ ஒழிஞ்சிருக்குறது அவன் பின்னால... இதுல நீ அவனுக்காக கெஞ்சுறியா?"



"என்ன விஜி நீ? அர்விய என்ன விட்டா யாரு காப்பாத்துவா?"எனவும் அர்விந்த்



"ஆமாமா உன்ன விட்டா என்ன யாரு அந்த பாஸ் கிட்ட இருந்து காப்பாத்துவா?" அவன் ரிஷியின் நினைவில் உளற கயல்



"அர்வி...உலறாதடா " அவன் அருகே வந்து மெதுவாக முனக



"யாருடா உன்னோட பாஸ்?"

அதிமுக்கியமான கேள்வியை கேட்டு வைத்தாள் அஷ்வினி.



"அத்த இந்த பேய்க்கு அடிக்காம இன்னும் என்ன பண்றீங்க?" விஜயலக்ஷ்மியை திசை திருப்பி விட்டவன் நகர்ந்து விட அவருக்கு பழிப்பு காட்டிவிட்டு ஓட



"ஏய் நில்லுடி....இரு வர்றேன்" என்றவன் சொன்னதற்கு சம்பந்தமே இல்லாமல் சிரித்துவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கினார்.



***



கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த வருண் ஆரவ்வை அங்கு எதிர்பார்க்காது ஷாக்காகி நிற்க அவனும் ஷாக்காகி எழுந்து நின்றான்.



இருவருடைய மனநிலையையும் உணர்ந்த மதன்



"அண்ணா வாங்க..."என சகஜமாக்க முயல



"ஆரு....இங்க என்னடா பண்ற?"என்ற வருணிடம்



"அ...அது வந்து அண்ணா.... ஆ...ப்ரண்டு....ப்ரண்ட பாக்க வந்தேன்"



"யாரு சிவா உன் ப்ரண்டா?"



"ஆ...ஆமா...ஆமா"

அவனை நம்பாத பார்வை பார்க்க



"நீங்க பேசிட்டு இருங்கண்ணா... நாங்க இதோ வந்துட்றோம்"

சித்தார்த்தின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியேயே சென்று விட்டான்.



"உக்காருங்கண்ணா..."

என்ற மதனை சந்தேகமாக பார்த்து விட்டு அமர்ந்தவன்



"உண்மய சொல்லு... ஆரு என்ன வேல பாக்குறான்?" அவன் திருதிருவென முழிக்க



"எனக்கு ஏற்கனவே ஆர்.கேயோட கொலை கேஸ் விஷயத்தில டவுட் தான்... எப்பிடிடா இந்த கேஸ் பரபரப்பாகாம ஸ்மூத்தா பொய்ட்டிருக்குன்னு...... இப்போதானே புரியுது"



"வந்து அண்ணா....அது..."



"அவனுங்கள உள்ள வர சொல்லு"



"இதோ..."என்றவன் எழுந்து வெளியே செல்ல வருணின் முகத்தில் புன்னகை பூத்தது ஆரவ்வின் ரிஷி மீதான பாசத்தில்....



அவர்கள் இருவரையும் கையோடு அழைத்து வர எழுந்து ஆரவ்விடம் வந்தவன்



"சோ....அண்ணன காப்பாத்த போலிஸ் வேலைக்கு படிச்சு... அவன் செய்ற கொலயெல்லாம் அவனுக்கே தெரியாம வேற கேஸ் போட்டு மூடியிருக்க?"



"அது வந்து இல்லண்ணா...நா வந்து"



"ஒரு நண்பன் கமிஷ்னர்.....

இன்னொருத்தன் சி.பி.ஐ ஆபீஸர்...நீ?" என்றவனது கேள்வியில் சித்தார்தும் அதிர்ந்து பார்க்க



"ஐ அம் சாரிணா....அண்ணாக்கு ஏதாவது ஆகிடுமோன்னு..."ஆரவ் தடுமாற



"உன்ன நெனச்சா எனக்கு பெருமயா இருக்குடா" என்றவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தவன்



"அண்ணா...." என கட்டிக் கொள்ள தானும் அணைத்து விடுவித்தவன்



"நீ மன்னிப்பு கேட்டன்னா நானும் தான் மன்னிப்பு கேக்கனும்" என்றவனை புரியாது பார்க்க



"கோர்ட்டுக்கு கேஸ் வந்தும் அத திச திருப்பி ரிக்ஷிய என் அஸிஸ்டனா சேத்துகிட்டேன்...."



"அப்போ உங்களுக்கும்?"



"ம்....தெரியும் டா... ஆர்.கே க்கு எதிரா ரிக்ஷி வாதாடின கேஸ் தோத்து போறதுக்கே நான் தான் காரணம்.... என் நண்பன் காப்பாத்துறதுக்கு வேற வழி தெரியல" என்றவனை ஆனந்த அதிர்ச்சியாக பார்த்தனர் இருவரும்...



((அட நாளு பேரும் அப்போ கூட்டு கலவானிங்களா.... என்னாமா நடிச்சிருக்காய்ங்கயா...))



உடனே மதன்

"ஆராதனாவ கொன்னதுக்கான சரியான தண்டனயத்தாண்ணா ரிஷி அண்ணா அவங்களுக்கு குடுத்திருக்காங்க" எனவும் அதை ஆமோதித்த சித்தார்த்



"பட் இந்த விஷயம் அஷ்விக்கு தெரியுறது ரொம்ப ஆபத்து" எனவும் ஆரவ்



"ஆமாடா....ஆரா விஷயம் அவளுக்கு தெரியாததுனால அண்ணாவ விட்டு போகவும் வாய்ப்பிருக்கு .... ஜாக்கிரதயா இருக்கனும்" என்றவனுக்கு அவனாலேயே அந்த விடயம் அஷ்வினிக்கு தெரிய வரப்போகிறது என்பது அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை....



விதி வலியது.....



தொடரும்......



12-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 22 ❤



அந்த ஊரில் இருக்க முடியாது என வேலையை காரணம் காட்டி வந்தவனுக்கு முழுதாக இருபத்து நான்கு மணி நேரம் முடிவதற்கு முன்னரே எப்போதடா தன்னவளை பார்ப்போம் என்றாகிவிட்டது.



இந்த மாதிரி உணர்வெல்லாம் அவனுக்கு புதிது....



காதலித்திருக்கிறான் தான்...இல்லையென்று சொல்லுவதற்கில்லை ஆயினும்.....

அனன்யாவை இந்த அளவுக்கு பார்க்க வேண்டும் என்றெல்லாம் மனம் அடம் பிடித்ததில்லை என்பது தான் உண்மை.....



இத்தனைக்கும் அவளிடமிருந்து ஒரு அழைப்புக்கூட வரவில்லை....



அதுவே அவன் காலையில் அப்படி பேசிவிட்டு வந்ததற்கு கோபமாய் இருக்கிறாள் என்பதை பறை சாற்ற இதழ்கள் தானாக மலர்ந்தது தன்னவளின் சிறுபிள்ளை தனத்தில்.....



மணி காலை ஒன்பது என காட்டவும் டையை சரி செய்தவன் உழியர்களுக்கு இடையேயான மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என நினைவு வந்தவனாய் எழுந்து மீட்டிங் அறையை நோக்கி சென்றான்.



***



கமிஷ்னர் ஆபீஸ்.....



நான்கு பேரும் அந்த கண்ணுக்கு தெரியாத எதிரியை பற்றி தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.



"ஆரு....ஆர்.கேயும் இப்போ அவன பத்திதான் தேடிகிட்டு இருப்பான்னு தோனுது"என்ற வருணிடம்



"ஆமாண்ணா..... பட் இத இப்பிடியே விட்டுட கூடாது.... ரொம்ப ஆபத்தா முடியும்" அவனையே பார்த்திருந்த மதன்



"மச்சி... அஷ்வி கடத்தப்பட்ட உடனே அண்ணா கால் பண்ணி நம்பர ட்ரேஸ் பண்ண சொன்னாங்க... நானும் பண்ணி அது சக்ஸஸ் ஆகாம போகவும் எனக்கும் ராம் மேல தான் டவுட்.... அவன் நம்பர ட்ரேஸ் பண்ணா அண்ணா தான் பேசிட்டிருந்தாங்க....

அப்போ அவன் பம்புனத பாக்கனுமே..... பட் இதெல்லாம் வெச்சி பாக்கும் போது ராமோட அண்ணா பேசினத நான் பர்ஸனலா ட்ரேஸ் பண்ண மாதிரியே அந்த எதிரியும் ட்ரேஸ் பண்ணி இருக்கனும்....

அதனால்தான் அண்ணா மேல பழி விழனும்குறதுக்காக ராம கொல பண்ணி இருப்பான்" தன் மனதில் பட்டதை மதன் சொல்லவும் இவ்வளவு நேரம் அந்த கோணத்தில் இருந்து அதை யோசித்து பார்க்காதவர்களுக்கும் அதுவே உறுதியாகவும் சித்தார்த்



"ஸோ.... நம்ம டிபார்ட்மெண்ட்லயும் அந்த எதிரிக்கு உதவுற கருப்பு ஆடோன்னு சுத்திகிட்ருக்கு"



"அப்போ அவன புடிச்சா எதிரிய கண்டு புடிச்சிடலாமேடா?"

வருண் கேள்வி எழுப்பவும் அதை மறுத்தான் ஆரவ்.



"இல்லண்ணா.... அவனுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை.... ஏன்னா.... இவ்வளவு பக்காவா ப்ளான் பண்ணி பண்ணவன் தான் யாருங்குற அடையாளத்த காட்டியிருக்க மாட்டான்"ஆரவ் உறுதியாக மறுத்து விட மதன்



"அடையாளத்த காட்டியிருக்க மாட்டான்தான் மச்சான்.... பட்.... அந்த கருப்பு ஆட்ட புடிச்சா சின்ன க்ளூவாவது கெடக்கும்ல?"



"மதன் சொல்றது கரெக்ட் மச்சி...."சித்தார்த்தும் அதையே ஆமோதிக்க நாள்வரும் அதற்கான வேலையில் ஈடுபட துவங்கினர்.



***



வெளியில் மகிழ்ச்சியாக காட்டிக்கொண்டு இருந்தாளும் அவன் கோபமாக பேசிவிட்டு போனதில் மனது கலங்க வெளியே தோட்டத்துக்கு வந்து விட்டாள் பாவை....



கையிலிருந்த மொபைலையே வெறித்த படி அமர்ந்திருந்தவளின் பக்கத்தில் இடித்துக் கொண்டு வந்தமர்ந்தாள் கயல்....



அவளை முறைத்து விட்டு ச்சு கொட்டியவாறே தள்ளி அமரவும்



"அஷ்வி... நீ ரொம்ப மாறிட்டடி" எனவும் புரியாது கயலை பார்க்க



"பின்ன.... கோபப்படாத உனக்கே கோபம் வருதே?"



"நா கோவப்பட்டேனா?"



"இல்லங்குறியா?"



"ஆமா...."



"சரி விடு....எதுக்காக இங்க தனியா வந்து உக்காந்திருக்க?"



"ம்... வேண்டுதல்"



"மாமாக்காகவா?" என்றவளை மீண்டும் முறைத்து விட்டு



"அந்த கமாண்டருக்காக வேண்டுறத விட சுவத்துல போய் முட்டிக்கலாம்" என்றாள் முணுமுத்தவாறே....



"ஆமா நீ எதுக்கு அவர மாமாங்குற?"



"அக்காவோட புருஷன மாமான்னு சொல்லாம வேற எப்பிடி கூப்புட்றதாம்?"



"ஏன் அத்தான்னு சொல்லு"



"முடியாது"



"ஏன்... ஏன் முடியாது?"



"நா மாமான்னு சொல்றதுல உனக்கென்ன பிரச்சின?"



"எனக்கு ஏனோ பிடிக்கல..."



"ஏனோன்னா என்ன அர்த்தம்?"



"ப்ச்... பிடிக்கலன்னா பிடிக்கல... அவ்வளவு தான்..."



"நா அப்படித்தான் கூப்புடுவேன்"



"ஓஹ் அப்போ சரி... நானும் ஆருவ தாத்தான்னு கூப்டுக்குறேன்"



"என்னா...து .... லூசா நீ? "



"நீ எப்பிடி வேனா நினச்சிக்கோ...."



"நீ அப்பிடி கூப்புட கூடாது சொல்லிட்டேன்"



"அப்பிடித்தான் கூப்புடுவேன்.... அதுக்கு இப்போ என்னாங்குற?" இவளிடம் எகிறினால் வேலைக்காகாது என்பதனை உணர்ந்த கயல்



"ப்ளீஸ் அக்கா....என் செல்லம்ல..." என கொஞ்ச



"அடச்சீ கொஞ்சாத.... நா அப்பிடி சொல்லாம இருக்கணும்னா நீ தேவ்வ மாமான்னு கூப்புட கூடாது" கன்டிஷன் வைத்து பேசினாள் தமக்கை....



"அத்தான்னும் என்னால கூப்புட முடியாதுடி"

அப்பாவியாய் சொன்னவளை பார்த்து சந்தேகமாய்



"ஏனாம்?" எனவும்



"யேனன்னா என் புருஷஷோட உத்தரவு" அதை கேட்டு கலகலவென சிரித்த அஷ்வினி



"அப்போ இத உன் என் கட்டளைன்னே எடுத்துக்கோ" என்றாள் கேசூவலாக....



"நா எப்பிடித்தான் கூப்புட்றது அஷ்வி...?"



"எப்பிடி வேணா கூப்டுகோ...மாமாவ தவிர" கண்டிப்புடன் கூறியவளை மறுக்க வாய் திறக்க அவளது போன் அலரவும் அது அப்படியே தடை பட



"ஒன் மினிட்..."என்றவள் எழுந்து உள்ளே செல்லவும் தன் போனை எடுத்து தன்னவனுக்கு அழைத்தாள்.



முதல் அழைப்பு கட் ஆக வேண்டுமென்றே தவிர்க்கிறானென நினைத்தவள் மீண்டும் அழைத்தாள்.



அதுவும் கட் ஆகவும் அவனை சீண்ட எண்ணி மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும் கோபமாக அடண்ட் பண்ணியவன்



"ஒரு மனுஷன் கட் பண்றான்னா... அவன் முக்கியமான வேலைல இருக்கான்னு புரிஞ்சிக்க தெரியாத அளவுக்கு முட்டாளா நீ?" உச்ச கட்ட கோபத்தில் கத்த கண்கள் கலங்க விக்கித்துப் போய் ஃபோனை பட்டென வைத்து விட்டாள்.



***



மீட்டிங் அறையில் தீவிரமாக அனைவரையும் விசாரித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் மீண்டும் மீண்டும் அழைப்பெடுக்கவும் எரிச்சலாகி விட கத்தி விட்டான்.



போனை ஆஃப் பண்ணி பாக்கெட்டுக்குள் போட்டவன் தான் கத்தியதில் தன்னை ஷாக்காகி பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் முறைக்க கதிர் மீண்டும் விசாரிக்க தொடங்கினான்.



ஒவ்வொருவரையும் தன் கூரிய விழிகளால் எடை போட்டுக் கொண்டே வந்தவனின் கண்கள் சட்டென ஒருவரின் மீது நிலைகுத்தி நின்றது.



ஆம்.... அதே பரீச்சயமான கண்கள்....அவனே தான்...ஹரிஷ்....

அவன் எப்படி இங்கே?

மூலை மறத்துப் போனவனாய்.... அதி உயர் மின்சாரம் தாக்கப்பட்டவனை போல் அவனை இமை மூடாமல் பார்க்க அவனுக்கோ தான் ரிஷியின் கண்களில் பட்டு விட்டோமே எனும் பயத்தில் வியர்த்து வழிந்தது.



அப்பிடி யார பாக்குறாரு...என யோசித்தவாறே தானும் அத்திசை நோக்கி பார்த்த கதிர் அவன் வியர்த்து விறுவிறுத்து நின்ற தோற்றம் சந்தேகத்தை கிளப்ப ஓரெட்டில் அவனை நெருங்கிச் சென்றவன் அவன் தப்பிக்காமல் இறுப்பதற்காக அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.



கதிர் அவனை பிடிக்கவும் தான் தன்னிலை அடைந்தவன் ஆக்ரோஷமாய் அவனை நெருங்கி அவன் காலரை பிடித்து உலுக்கியவாறே



"ஏய்....நீ...நீ... ஹரிஷ்...என்னடா பண்ற இங்கே?அந்த வீணாப்போன துரோகி நாய் அனுப்பி வெச்சானா? இடியட்..."என அவனிடம் கத்தியவன் கதிரிடம் திரும்பி



"கதிர் இவன நம்ம கஸ்டடிக்கு கொண்டு போ...." என கர்ச்சிக்கவும் அந்த அறையே அவன் போட்ட சத்தத்தில் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது.



ஊழியர்கள் அனைவரும் நடுக்கத்துடன் அவன் கோபத்தை பார்த்துக் கொண்டு நின்றிருக்க கஷ்டப்பட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் அதையும் மீறி அவன் குரலில் சீற்றம் தெரியத்தான் செய்தது.



"நா நேர்மைய உங்க கிட்ட இருந்து எதிர்பாத்து உங்க எல்லோரையும் நம்பனதாலதான் நீங்க எல்லாம் இன்னும் கம்பெனில வேலைல இருக்கீங்க.... இன்னொரு தடவ யாரும் தப்பு பண்ண நெனச்சா கூட அவங்கள உருத் தெரியாம அழிக்கிறதுக்கும் தயங்க மாட்டேன்... ஜாக்கிரதை!!!" விரல் நீட்டி எச்சரித்தவன் அங்கிருந்து விறுட்டென வெளியேற இருந்த அனைவருக்கும் அவன் சீற்றத்தில் முதுகுத்தண்டுவடம் சில்லிட்டுத் தான் போனது.......



தன் கேபினில் ஓரத்தில் போடப்பட்டிருந்த அந்த உயர் ரக சோஃபாவில் தான் போட்டிருந்த கோர்ட்டை கலற்றி தூக்கி எரிந்தவனுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவது பெரும் பாடாகிப் போனது!!!



டேபில் மேலிருந்த அணைத்து பொருட்களும் அடுத்த நிமிடம் கீழே விழுந்து சிதற தன் தலையை இரு கைகளாலும் இறுக்க பிடித்துக் கொண்டவன் "ஆ......"என வெறி பிடித்தவன் போல் கத்திக் கொண்டே மீதமாயிருந்த தன் லேப்டாப்பையும் கீழே போட்டு உடைத்து நொறுக்கினான்.



அதே ஆக்ரோஷத்துடன் மேள் தளம் நோக்கி சென்றவன் அந்த கண்ணாடிக் கதவை காலால் உதைத்து திறக்க ஹரிஷை பிடித்துக் கொண்டிருந்த கதிருக்கே ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது.



உள்ளே கட்டி வைக்கப்பட்டிருந்த மூவருக்கும் ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் பயம் கண்களில் அப்பட்டமாக வந்து போனாலும் அடுத்த நிமிடம் தெனாவெட்டாய் அவனை பார்த்துக் கொண்டு நின்றனர்.



அவனுக்கு இப்போது நிதானம் தேவை என்பதை மூலை உணர்ந்தாலும் மனது அதற்கு கட்டுப்பட மறுத்து அவன் கோபத்தை மென்மேலும் கூட்டிக்கொண்டு இருந்தது.



அனன்யா அதை இன்னும் தூண்டி விடத்தான் எண்ணினாளோ என்னவோ!!!



"என்ன மிஸ்டர்.ரிஷிகுமார் தேவமாருதன்.... எதுக்கு இவ்வளவு கோபம்?ஓ...ஓ... ஹரிஷ்ஷ கண்டதுனாலேயா..... இதுக்கே இப்பிடீன்னா இனிமே நடக்க போறதுக்கெல்லாம் என்ன பண்ண போற?கொன்னுடுவியா.... எத்தன கொல பண்ணன்னு உன் அரும அப்பாவிப் பொண்டாட்டிக்கு தெரிய வரும்போது உன் நிலம?அய்யோ பாவம்..." போலியாய் வருத்தப்பட்டவளை பார்த்தவனுக்கு அவளை கொன்று போடும் வெறி..... இருந்தும் அதை செயல்படுத்த முடியாத சூழ்நிலை.....



அவன் அமைதியாய் இருப்பதை பார்த்த ஹரிஷ் கத்தி கத்தி சிரித்துக்கொண்டே கண்களில் பழிவெறி மின்ன அவனை பார்க்க அவனோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவனை வெறித்தான்.



நண்பன் என்ற சொல்லுக்கே தகுதியற்றவனாகிப் போனதன் மாயம் என்னவோ!!!



நினைக்க நினைக்க மனம் ரணமாய் வலித்தது.



யாரும் வேண்டாமென்றுதானே அவர்கள் கேட்டதை தூக்கியடித்து விட்டு விலகிச் சென்றான்.

அப்படியிருந்தும் ஏன்‌ இந்த வெறி???



கதிர் ரிஷியின் உணர்ச்சி துடைத்த முகத்தை பார்த்து என்ன நினைத்தானோ......

இருக்கும் தைரியத்தையெல்லாம் திரட்டி அவனிடம் வந்தவன் என்ன நடந்தாலும் பரவாயில்லை என நினைத்து அவன் அனுமதி இன்றியே அவனுடைய கைகளை பற்றிக் கொண்டவன் அவனை இலுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான்.



வெளியே வந்து கையை விட்டவன் பயந்து போய் அவன் முகத்தை பார்த்து விளக்கம் சொல்வதற்காய் வாயை திறக்க அவனை கை நீட்டி தடுத்த ரிஷி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறிவிட்டான்.



***



தன் முன்னால் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்த்தும் கூட மனது இலேசாக மறுத்தது அஷிவினுக்கு.....



தான் ஏன் இவ்வளவு பலவீனமாகிப் போனோம் என நினைத்தவளுக்கு அது மட்டும் விடை தெரியா புரியாத புதிராகித்தான் போனது.



வீட்டுக்குள் இருப்பது மூச்சு முட்டுவது போல் இருக்க அருகிலிருந்த சிறுவர் பூங்காவிற்கு வந்திருந்தாள்.



தன் மடியில் வந்து விழுந்த பந்தில் தன் சிந்தை கலைந்தவள் அதை நோக்கி வந்து கொண்டிருந்த சிறுவனை அப்போதுதான் கண்டாள்.



மொழு மொழுவென்ற கண்ணங்களுடன் கண்களில் சிரிப்புடன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தவனின் அழிகில் அவளுடைய கலக்கமெல்லாம் பனிக்கட்டியாய் வடிந்து போயிற்று!!!



அவளருகே வந்தவன் தன் மழலை மாறா மொழியில்



"க்கா...பால்(ball) தா" கை நீட்டவும் தனக்கருகில் அந்த பந்தை வைத்தவள் அவனை அள்ளியெடுத்து தன் மடி மீது அமர்த்திக் கொண்டு அவன் கண்ணங்களுக்கு அழுத்த முத்தமிட்டவாறே



"நா உனக்கு பால் தரனும்னா அதுக்கு ஒரு கன்டிஷன்?" வம்பிலுத்தாள்.



"என்ன கன்டிதன் (கன்டிஷன்)?"



"ஹௌ சுவீட் பேபி.... எவ்வளவு அழகா பேசற?"



"என் பால்"



"ஓ... காரியத்துல கண்ணா இருக்கிறயாக்கும்....."

அவள் பந்தை தராமல் பேசிக் கொண்டே இருக்கவும் அதற்கும் எரிச்சல் வந்து விட்டது போலும்.



"என்கு பால் வேணாம்....என்ன விது(விடு).... நீ நாட்டி கேர்ள்..." உதட்டை பிதுக்கி அழ தயாராக பதறிப் போனவள்



"அட எதுக்குடா அழ பாக்குற.... உனக்கு பால் தானே வேனும் இந்தா பிடி" அவசரமாக அதன் கையில் தினிக்க திமிரி இறங்கியது குழந்தை....



"டேய் கன்டிஷன மறந்துட்ட பாத்தியா?"எனவும் என்னவென்று கேட்காமல் அவளை திரும்பி பார்க்க



"ஏன் சாரு என்னன்னு கேக்க மாட்டீங்களோ? சரி சரி முத்தம் குடுத்தேன்ல... என் முத்தத்த எனக்கு திருப்பி குடு"



"முதியாது"



"ஏன்டா முடியாது... நானும் ஒழுங்கா கேக்கலாம்னுதான் நெனச்சேன்..... பட் நீ என்ன பேட் கேள்னு சொன்னல்ல.... அதனால நா குடுத்த முத்தத்த வாபஸ் வாங்கிகிறேன்.... நா குடுத்தத நீ திருப்பி குடுடா" அவனை வேண்டுமென்றே மிரட்ட அவனோ உனக்கெல்லாம் நா பயப்படனுமா என்ற ரீதியில் பார்த்து வைக்க தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவள் இடுப்பில் கை குற்றி அவனை செல்லமாக முறைக்க அவனோ



"நா குதுக்க மாத்தேன்... நீ பேத் கேர்ள்..." என்று சொல்லி விட்டு ஓட



"டேய் நில்லுடா...." என்று கூறிக் கொண்டே ஓட முற்பட்டவளை தடுத்து வலிமையான ஆண் கரமொன்று......



"எவன்டா அது?" வாய்விட்டே புலம்பியவள் அவன் பக்கம் திரும்ப அங்கே நின்றிருந்தது சாட்சாத் நம்ம ரிஷியே தான்....



இவன் எங்கடா இங்கன்னு நீங்க யோசிக்க முன்னுக்கு நானே சொல்லிட்றேன்



கதிரை அந்தப் பார்வை பார்த்து விட்டு கிளம்பி கடற்கரையை நோக்கித்தான் சென்றான்..... ஆனாலும் அங்கேயும் அவன் மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கவே தன் மனையாளைத் தேடியே வந்து விட்டான்....



அவன் நிம்மதியை எதிர்ப்பார்க்கும் ஓரிடம்!!!!



அவள் அமைதியாய் அமர்ந்திருந்த போதே வந்து விட்டான்தான்....

அவனை அவளிடம் நெருங்க விடாமல் தடை செய்தது அந்த குழந்தை தான்....



அவளுக்கு வந்த அதே உணர்வு தான் அவனுக்குள்ளும்.....



அந்த மழலையின் வரவில் தன் மனக்கலக்கம் நீங்கப்பெற்றவனாய் அவர்கள் இருவரையுமே கவனிக்க துவங்கி விட்டான்.....



கடைசியில் அவனுக்கு தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.....

"இவ குழந்தயா.....?இல்லன்னா அவன் குழந்தையா?"



((எனக்கும் அதே டவுட் தான்பா.... நண்பா உங்களுக்கு?))



அவனை கண்டவுடன் துள்ளிய மனதை அடக்கியவள் அவன் கையை பட்டென தட்டி விடவும்



"ஐ அம் சாரி அஷு"மன்னிப்பு வேண்டினான் அவன்.



"....."



"ஆரம்பிச்சிட்டியா உன் மௌன விரதத்த?" குறும்பாக கேட்கவும் அவனை உறுத்து விழித்தவள் அவனை கண்டு கொள்ளாது செல்ல அவளை சமாதானப்படுத்தும் விதமறியாது அவள் பின்னே நடந்தான் கணவன்.



.........



இன்றுடன் அவர்கள் தங்கள் ஊருக்கு வந்து சேர்ந்து ஒரு வாரம் முடிந்திருந்தது.



அந்த கண்ணுக்கு தெரியாத எதிரியை ஆன மட்டும் தேடிப்பார்த்து விட்டாலும்.... பலன் என்னவோ பூச்சியமாகத் தான் இருந்தது.



இவர்கள் நாள்வரும் ஒரு பக்கம் தேட ரிஷி மற்றைய பக்கம் தேடிக்கொண்டிருந்தான்.



எவ்வளவு சல்லடை போட்டு தேடியும் ஒரு துரும்பும் கூட கிடைக்காமல் போனது தான் துரதிர்ஷ்டவசமாக இருந்தது.



இதில் அவன் மனையாள் வேறு அவனை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.



பேசாமல் ஒரு பக்கம் வதைத்தாள் என்றால்..... முகத்தை கூட பார்க்காமல் அவள் அம்மா வீட்டிலேயே இருந்து விட இவனுக்கு என்னடா என்றாகிவிட்ட நிலைதான்.....



அவளை சமாதானம் செய்ய அவனும் எல்லா பக்கத்தினாலும் முயற்சி செய்து பார்த்து விட்டான்.....



ஊஹூம்..... அவள் அசைந்து கொடுக்கவே இல்லை!!!



வீடே வெறுச்சோடிப் போனது போல் தான் தோன்றிற்று அவனுக்கு...



இதற்குள் ஆரவ் கேங்கின் சஸ்பென்ஸ் காலமும் முடிந்து அவனும் காலேஜ் சென்று கொண்டிருந்தான்.....



அதிகம் பேசாவிட்டாலும் இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தான்....



அவன் கோபமும் நியாயமானதாகவே பட அதற்கு மேல் அவனிடம் சென்று பேச விழையவில்லை அவன் அண்ணன்.



ஆனால் காலேஜில் வேண்டுமென்றே அவனையே எல்லா விடயங்களுக்கும் அழைத்து அவனை வாட்டி எடுத்தான் ரிஷி...



இன்று அவள் என்ன மறுப்பு தெரிவித்தாலும் அவளை அழைத்துக் கொண்டு தான் போவேன் என கங்கனம் கட்டிக் கொண்டவன் போல் கோர்ட் வாசலில் தன் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான் ரிஷி.



விஷ்வாவின் கேபினில்.....



தன் அருமை தங்கையை முறைத்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் வருண்.



அது வேறு ஒன்னில்லங்க.... நம்ம அஷு இருக்கால்ல அவ வேனும்னே அவனோட கார் டயர பஞ்சர் பண்ணி வெச்சிட்டா.....யேன்னு கேக்குறது பரியுது....இருங்க சொல்றேன்....



இவ அம்மா மாப்பிள்ளை வீட்டுக்கு போக சொல்லியிருக்காங்க...இவ அடம் பிடிக்கவும் அவ கொஞ்சமா ஏசிட்டா.... அம்மா ஏசும் போது ஒரு பொறுப்புள்ள அண்ணனா இவனும் கொஞ்சம் கூடவே ஏசினானா.... அதுக்கு தான் இந்த தண்டன....

அவ பஞ்சர் பண்ணுறத இவன் கண்ணால கண்டுட்டான்.... ஆபிஸ்ல வெச்சி என்ன இதுன்னு ஒரே டோஸா குடுத்திட்ருக்கான்.



இதுல அஷ்வின்னு வேற பேரு சொல்லி கூப்புடவும் அவன் கோபம் புரிந்து அம்மணி அமைதியே உருவாக உக்காந்துட்டு இருக்காங்க...



"அஷ்வி....என்னதான் நெனச்சிட்ருக்க உன் மனசுல?"



'சத்தியமா ஒன்ன இல்ல'



"இன்னும் சின்ன புள்ளன்னு நெனப்பா?"



'எனக்கும் அதே டவுட் தான்டா அண்ணா'



"எப்போதான் பொறுப்பா நடந்துக்க போற?"



'அது நடக்கும் போது பாத்துக்கலாம்'



"என் கார் பஞ்சர் பண்ணியிருக்க சரி... இதே ஆர்.கே ஏசி இருந்தான்னா புருஷன்னும் பாக்காம அவனுக்கும் இதையேதான் செய்வியா?"



'இதுவர ஐடியா இல்ல...நீ குடுத்துட்டல்ல... டெஸ்ட் பண்ணிரலாம்'



"வாய திறந்து பேசு"



'அட மக்கு...நா என் மனசுல கவுண்டர் குடுத்துட்டு இருக்கேன்டா...எப்பிடி பேசுறது?'



"அஷ்வினி..." தன் பெயர் அழுத்தாக அழைக்கப்படவும் நிமிர்ந்து பார்த்து



"ஐ அம் சாரி அண்ணா" என்றாள் அப்பாவியாய்



((நீ பொலச்சிக்குவமா))



அவளின் அண்ணா எனும் முதல் அழைப்பில் புல்லரித்தது அவனுக்கு....



((டேய் சொன்னா கேளு அவள நம்பாத...அவ சரியான கேடிடா))



முகம் கனிய

"ரிக்ஷி... எதுக்குடா இப்பிடி பிடிவாதம் புடிச்சிட்டு இருக்க?அவன் கோபப்படுவான் தான் ஆனா ரொம்ப நல்லவன்மா...." எனவும் அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டவள்



"பட் வருண் சார்.... அப்படி நடந்துகிட்டது தப்பில்லன்னு ஆயிடாதுல்ல?"



"என்னது... மறுபடியும் சாரா....?இப்போதானேடி அண்ணன்னு கூப்ட?"



((அட நான்தான் சொன்னேனில்லடா...?))



"நா இல்லன்னு சொல்லலியே வருண் சார்"



"ப்ளீஸ் ரிக்ஷி... இந்த சாரு போட்றத முதல்ல நிறுத்து எனக்கு பிடிக்கல"



"பாக்கலாம்... பாக்கலாம்"



"சரி விடு.... மேட்டருக்கு வா....இப்போ என்ன செய்றதா உத்தேசம்?"



"என்னால போக முடியாது..."



"ரிக்ஷி.... நீ பண்றது சரி கெடயாதுமா....கயல் கிட்ட இருக்க பொறுப்பு கூட உன் கிட்ட இருக்குறதா எனக்கு தெரியல" என்றவனின் கூற்றில் அவளுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வர சடாரென இருக்கையிலிருந்து எழுந்தவள்



"அண்ணனும் தம்பியும் நா ஒருத்தி இருக்குறதே மறந்துட்டு கயல் மட்டும் தான் தங்கச்சி மாதிரி எப்போ பாரு அவளுக்கே சப்போர்ட் பண்றதே வேலயா போச்சு...." படபடவென பொறிந்தவள் கோபமாய் வெளியேற



"ரிக்ஷி நில்லுடி நா சொல்றத கேளு" எனும் அவனின் குரல் காற்றோடு கலந்து போக தலையில் கை வைத்தவாறு அமர்ந்து விட்டான்.



தன் டூவீலரை கிளப்பியவளின் முன்னால் நிழலாடவும் யாரென தலையுயர்த்தி பார்த்தாள்.



கைகள் இரண்டையும் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நின்றிருந்தவனை சற்றும் அவள் அங்கே எதிர்பார்க்கவில்லை என்பதை அவள் விரிந்த விழிகளே பறை சாற்ற அவனோ குறும்பு கூத்தாடும் குரலில்



"வொய் பேபி.... என்ன இவ்வளவு நாள் பாக்காம இருந்த ஏக்கம் தாங்காம தான் இப்பிடி பாக்குறியா?" எனவும் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டவள் காரியமே கண்ணாக தன் டூவீலரை மறுபடி கிளப்ப எத்தனிக்க அவள் எதிர்பாராத சமயத்தில் அவளுடைய சாவியை தன் கைகளில் எடுத்திருந்தான் ரிஷி.



"ப்ச்...."என அவனை முறைக்க அவன்



"அஷு ப்ளீஸ்.... ஐ அம் சாரிடி.... வீட்டுக்கு வா... நா பண்ணது தப்புதான்டி...." எனவும் அவனைப்பாராது வேறு புரம் திரும்பவும் அவனுடைய பொறுமையும் காற்றில் பறக்கத் தொடங்கியது.



"அஷ்வினி.... இப்போ உனக்கு வீட்டுக்கு வர முடியாது... அப்படித்தானே?" வெகு அழுத்தமாய் வந்து விழுந்த வார்த்தைகளுக்கு அவளும் தீர்ககமாகவே பதிலடி கொடுத்தாள்.



"ஆமா....மிஸ்டர். ரிஷிகுமார் தேவமாருதன்.... என்னால உங்க வீட்டுக்கு வர முடியாது" சாவியை அவளிடமே ஒப்படைத்தவன்



"ஓகே தென்.... நீ வீட்டுக்கு வரும் வர நா இங்கேயே தான் இருப்பேன்" என்றவன் நடந்து சென்று தன் காரின் முன்னால் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவளையே பார்த்தவாறு நின்றுவிட்டான்.



அவனையே கொஞ்ச நேரம் வெறித்தவள் பின் தோலை குழுக்கிக் கொண்டு கிளம்பி விட்டாள் அவன் பிடிவாதத்தின் வீரியம் அறியாது!!!!



இரவு.....



மழை அடித்து ஊற்றிக் கொண்டிருக்க போர்வையை தலைவரை போர்த்தி படுத்திருந்தவள் திடீரென வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள் அவனின் நினைவில்.....



சற்று முன்னர் வரை முக்கியமான ஒரு கேஸ் விஷயமாக அபியிடம் ஆலோசித்துக் கொண்டிருந்தவள் அப்படியே வந்து உறங்கியிருக்க திடீரென விழிப்பு தட்டவும் தான் தன்னவன் நினைவே வந்தது அவளுக்கு....



அவசரமாக தன் மொபைலை எடுத்து அவனுக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே அடெண்ட் செய்தவன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க இவளோ படபடப்புடன்



"தே...தே...தேவ் எங்க இருக்கீங்க?" எனவும் தன்வளின் பிரத்தியேக அழைப்பில் உதட்டில் புன்முறுவல் பூக்க அவளுடைய ஆபீஸ் இருக்கும் தெரு அட்ரஸை சொன்னவன் போனை கட் பண்ணி விட்டான்.



உடல் தூக்கி வாரிப் போட "கடவுளே..." தலையில் கை வைத்தவள் தன் டூவீலர் சாவியையும் போனையும் எடுத்துக் கொண்டு படிகளிகளில் தடதடவென இறங்கி வர விஜயலக்ஷ்மி



"அஷ்வா... என்னடா ஆச்சு?ஏன் இந்த அவசரம்"



"அம்மா நா தேவ் வீட்டுக்கு போறேன்..பய்" வாசலைத் தாண்டியவாறே சொல்லி விட்டுப் போக அவள் திரும்பவும் பேச அவள் அங்கு இருந்தால் தானே!!!



......



அவள் போகும்போது எப்படி இருந்தானோ அதே நிலையிலேயே முழுதும் தொப்பலாக நனைந்து தன் முன் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த மீடியாக்காரர்களுக்கு பதிலளிக்காமல் அவர்களையே தீர்க்கமாக பார்த்தபடி நின்றிருந்தான் ரிஷி.



தன் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கியவளும் அவனை விட தொப்பலாக நனைந்து போய் பெரும் சீற்றத்துடன் அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள்.



கூட்டத்தை தள்ளிக் கொண்டு வந்தவள் அவன் முன் வந்து நிற்கவும் அவன் உதடுகளில் வெற்றிப் புன்னகை பூத்ததுவோ!!!



இருந்த சீற்றத்தில் அவன் சிரிப்பு வேறு அவள் கோபத்தை ஏற்ற தன் ஒட்டு மொத்த வலுவையும் சேர்த்து விட்டாள் பளாரென்றொன்று.....



அனைத்து கேமிராக்களின் ப்ளேஷ் லைட்டுகளும் அவன் புறமே க்ளுக்கிக் கொண்டிருந்தாலும் அதை அவன் சட்டை செய்ததாகவே தெரியவில்லை....



"வீட்டுக்கு வர முடியுமா முடியாதா அஷ்வினி?" அவனை ஆன மட்டும் முறைத்தவள் காரில் ஏறி கதவை தடாரென அடைக்க ஒற்றை கண்ணை சிமிட்டி தன் வசீகரிக்கும் புன்னகையை சிந்தியவாறே தானும் ஏறி காரை எடுத்தான்.



இரவு உடைக்கு மாறியவள் முடியை உலர்த்தியவாறு பால்கனியில் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றிருக்க தானும் ப்ரஷப்பாகிவிட்டு வந்தவன் அவளை பின்னோடு சேர்த்து அணைத்தான்.



ஏற்கனவே அவன் மேல் கொலைவெறியில் இருந்தவள் எதுவும் பேசாமல் உம்மென நின்றிருக்க தோல்களை பிடித்து அவளை தன் புறம் திருப்பி



"இன்னும் எம்மேலுள்ள கோபம் போகல்லியா பேபி?" எனவும் நிமிர்ந்து அவனை முறைத்தவள் முகத்தை திருப்ப அவளை தன்னை பார்க்குமாறு செய்தவன்



"தப்புக்கு தண்டனயாதான்.... எல்லோருக்கும் முன்னாடி அறஞ்சியேடி... இன்னும் என்ன?" கண் சிமிட்டி சிரிக்கவும்



"யூ இடியட்....." என்றவள் அவன் நெஞ்சுக்கு குத்திவிட்டு அதன் மீதே சாய அவளை தன்னோடு இறுக்கி அணைத்தவன்



"ப்பாஹ்... என்னா ஒரு அடி.... நாளைக்கு ப்ரேகிங் நியூஸ் தான் போ...." மீண்டும் மீண்டும் வம்பிழுக்க



"தேவ்...."என சினுங்கியவளுக்கு அவன் உடலில் ஏதோ தப்பாக தோன்றியது.



சட்டென விழியுயர்த்தி அவன் முகத்தை ஆராய்ந்தவள் திடுக்கிட்டுத் தான் போனாள்!!!



ஆம் முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிரிக் கொண்டிருக்க அவன் கண்களும் அதற்கேற்றாற் போல் மூடுவதும் திறப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தது.



"தே...தேவ்"



"என்...ன...டி?" குழரலாக வந்து விழுந்த குரலில் பயந்து போனாள் பெண்ணவள்......



"தேவ் என்கூட வாங்க..."அவனை கட்டிலுக்கருகில் கூட்டிச் சென்று



"இப்பிடி படுங்க..."எனும் முன்னே அவன் தொப்பென விழ அவசரமாக அவன் காலை தன் மடி மீது வைத்து பரபரவென தேய்க்க துவங்கினாள்.



இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து அதற்கு பயனில்லாமல் போக எழுந்து அவன் பக்கத்தில் அமர்ந்தவள் அவன் கைகளை எடுத்து தேய்க்க துவங்கினாள்.



கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தவனுக்கு எங்கு இருந்துதான் அத்தனை பலம் வந்ததோ!!!



அவளை இழுத்து அணைக்க அதிர்ந்து போனாள் அவன் மனையாள்....



உணர்வில்லாமல் அவளிடம் சூடு தேடி அவன் அவளுள் மூழ்க எத்தனை முயன்றும் அவனை விலக்க முடியாமலே போயிற்று பெண்ணவளுக்கு!!!



காலை....



தன் தோலில் முகம் புதைத்து படுத்திருப்பவனை வெறித்துப்பார்த்த படி அவனுக்கு வாக்காக படுத்திருந்தாள் அஷ்வினி....



அவன் தான் உணர்வில்லாமல் நடந்து கொண்டு விட்டான் என்றால் தனக்கு எங்கே போனது புத்தி!!!



மணம் குற்ற உணர்ச்சியில் பரிதவிக்க அவன் முகத்தை பார்ப்பதே சங்கடமாகிப் போனது அவளுக்கு....



அவன் தலையை மெதுவாக நகர்த்தி படுக்கவைத்தவள் எந்திரிக்க முற்பட அவளை எழ விடாமல் வளைத்து பிடித்திருந்தது அவனுடைய இரும்பு கரங்கள்....



அதை விலக்கிவிட்டு எழலாம் என்று பார்த்தால் தூக்கத்தில் கூட அத்தனை வலிமையாக இருந்தது அவன் பிடி!!!



எழுந்து தன்னை இந்த நிலைமையில் பார்த்தாள் என்ன சொல்வானோ என மனம் கிடந்து அடித்துக் கொள்ள மருண்ட விழிகளுடன் அவனையே பார்த்திருந்தாள்.....



மணி ஏழை தாண்டியும் அவனும் எழாமல் தன்மையும் எழ விடாமல் பிடித்திருப்பது கண்டு என்ன செய்வதென புரியாமல் அப்படியே இருக்க அப்போதுதான் அவனில் அசைவு தெரிந்தது.



கண்களை பிறந்தவனுக்கு மிக அருகாமையில் தன்னவளின் முக தரிசனம் கிடைக்க அவளைப் பார்த்து வசீகரமாய் சிரித்தான் ரிஷி......



அவளோ என்ன சொல்வானோ என்று குற்ற உணர்ச்சியுடன் அவன் முகத்தையே ஏறிட்டு பார்க்க அவள் விழிகளையே பார்த்திருந்தவனுக்கு அதில் தெரிந்த குற்ற உணர்ச்சி ஏன் என்று புரியாமல் போனாலும் உடல் அசதியை உணர்ந்தவன் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க உள்ளுக்குள் அதிர்ந்து போனது மனம்!!!



அதிர்ந்த முகத்துடன் அவளையே பார்க்க அவளோ தனக்குள் இன்னும் கூனி குறுகிப் போனாள்.....



அவள் விழியோரத்தில் கண்ணீர் எட்டிப்பார்க்க அதை பதறி துடைத்தான் அவள் மனநிலையை படித்தவன் போல அவளை இழுத்து தன்மேல் போட்டுக்கொண்டவன் அவள் முதுகை தடவிக்கொடுத்தான்.



அதுவே அவள் அழுகை இன்னும் கூட என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று அவனுக்கு சத்தியமாய் புரியாமல் போக அமைதியாய் இருப்பதை தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.......



அவன் அமைதி வேறு அவனுடைய குற்ற உணர்ச்சியை இன்னும் அதிகமாக கேவிவாறே



"தே...தே...தேவ் சாரி... நா வேணும்னு இப்படி பண்ணல.... இப்படியாகும்னு நானும் எதிர்ப்பாக்கல தேவ்.... என்ன தப்பா நினைச்சுராதீங்க தேவ்....ஐ அம் ரியலி சாரி" எனவும்



"ஏய்...நா உன் புருஷன்டி... உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு... நா ஒன்ன தப்பா நெனக்கல்ல அஷு.... நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்"



"இல்ல தேவ்...நா..."



"ஷ்...எந்த விளக்கமும் எனக்கு தேவயில்லடா....நீ குற்ற உணர்ச்சியில தவிக்கிறத முதல்ல நிப்பாட்டு...." அவன் ஆறுதல் வார்த்தைகள் தந்த இதத்தில் அவளும் அமைதியாகி விட்டாள்.



***



ட்ராஃபிக் நெரிசலில் காண்டாகிப் போய் காரினுல் அமர்ந்திருந்தான் வருண்.



இன்னு முக்கியமான கேஸ் வேறு வாதாட வேண்டியிருந்ததால் கொஞ்சம் நேரத்துடனேயே வந்திருந்தான்.



எனினும் மற்றைய நாளை விட சற்று ட்ராஃபிக்ஜாமாக இருந்ததில் கடுப்புடன் அமர்ந்திருந்தான் அவன்......



அதுவரை நேரே பார்த்துக் கொண்டிருந்தவனின்பார்வை சிறுவனின் குரலில் வலப்பக்கம் திரும்ப அச்சிறுவனோ தன் தாயின் படத்தை காட்டி ஒவ்வொருவரிடமும் ஆப்ரேஷனுக்காக உதவி கேட்டுக் கொண்டிருந்தான் போலும்....



வருணின் கண்ணாடியை தட்ட அதை கீழே இறக்கியவன் சற்று அதிகமாகவே அவனுக்கு கொடுக்க அதையே விழிவிரித்து பார்த்திருந்தாள் ஒரு மாது!!!



கண்கள் தவிர முகம் முழுவதையும் துப்பட்டாவால் மறைத்தவாறு தன் ஸ்கூட்டியில் அவனை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.



பணக்காரர்கள் மீதான அவளுடைய எண்ணம் முதன் முறை பொய்த்துப் போனதுவோ????



சிக்னல் விழவும் அப்பாடா என மூச்சுவிட்டவனை பார்த்து சிரிப்புத்தான் வந்தது அவளுக்கு....



இதை யாதுமே அறியாதவன் தன் காரியமே கண்ணாக வண்டியை கிளப்பிக் கொண்டு போய்விட்டான்....



தொடரும்......



13-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 23 ❤



அன்று ஆபீஸ் முழுவதுமே அந்த செய்தி தான் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது.



ஆனால் சம்பந்தப்பட்டவனோ இதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமுமே இல்லை என்பது தன் லேப்டாப்பில் மூழ்கியிருந்தான்.



அதைதான் அவன் ஏற்கனவே எதிர்ப்பார்த்து இருந்தானே!!!



ஆம் நேற்று நடந்த சம்பவம் அச்சரம் பிசகாமல் தலைப்பு செய்தியாய் வந்து விட்டிருந்தது.



வளர்ந்து வரும் இளம் தொழிலதிபரின் காதல் லீலை.... என கொட்டை எழுத்தில் முதல் தலைப்புச் செய்தியாய் வந்திருந்தது.



திடீரென கதவு திறக்கப்படவும் லேப்பிலிருந்து கண்களை அகற்றாமலே அது யாரென அறிந்து கொண்டவனுக்கு தன் அனுமதி இன்றியே உள்ளே நுழைந்ததில் சிறுது கூட முகத்தில் கோபம் இருந்ததாக தெரியவே இல்லை....



உள்ளே புயல் வேகத்தில் நுழைந்தாள் ஒரு பெண்!!!



அவன் ஆபிஸுற்குள் அவன் அனுமதி வேண்டாமலேயே நுழைய அவன் மனையாளை தவிற வேறு யாருக்குத்தான் தைரியம் வரும்????



அவன் கேரக்டருக்கு அவமானம் தேடித் தரும் விதமாய் அமைந்திருந்த அந்த செய்தித் தாளை அபி காட்டியவுடன் உடைந்து போனாள் அவள்.....



என்ன மனநிலையில் அவன் இருக்க கூடும் என யூகிக்க கூட முடியாமல் பதைபதைப்புடன் அவள் வந்திருக்க அவனோ கூலாக தன் வேலையில் மூழ்கியிருந்ததை பார்த்து வந்த வேகத்திலேயே சடன் ப்ரேக் போட்டு நின்று விட்டாள்.



இன்டர்காமில் கதிரை அழைத்தவன்

"கதிர் நா சொல்லும் வர யாரையும் உள்ள விடாத" என்றுவிட்டு கட் பண்ணியவன் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு நிதானமாக அவளருகில் வரவும் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.



அவள் முன்னே வந்து நின்றவன் இரு கைகளையும் விரித்து "வா.."என்பது போல் தலையசைக்க அடுத்த நிமிடம் தாய்ப்பறவைக்குள் குஞ்சு அடங்குவது போல் அவனை இறுக்க தழுவி இருந்தாள் அவனின் அஷு....



"இப்போ என்ன நடந்திடுச்சுன்னு காலைல இருந்து உன் டேம திறந்து விட்டுட்டே இருக்க அஷு?"



"எ..என்னால தான் எல்லாம்...நா அப்பிடி பண்ணி இருக்கலன்னா உங்களுக்கு உங்க கேரக்டர அவமான படுத்துறா மாறி நியூஸ் வந்திருக்காதுல்ல?"



"ப்ச்....விடுடி... பொண்டாட்டி கூட தானே சேத்து வெச்சி எழுதியிருக்கான்..."



"இருந்தாலும்?"



"விடுன்னு சொல்றேனில்லடி"



"நோ தேவ்.... என்னால தான் இப்பிடி நடந்துதுன்னு நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு"



"உன் மேல எந்த தப்புமே இல்லடா....என் மேல தான் தப்பு"



"இல்ல நீங்க பொய் சொல்றீங்க"



"நா அன்னக்கி கோபமா பேசினதுனாலதானே இந்த அளவு நடந்திருக்கு"



"....."



"என்னப்பாருடி"



"....."



"ஏய் பாருன்னு சொல்றேனில்ல..."

என்றவாறே அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன்



"யாரு என்ன சொன்னாலும் எப்பவும் என் பொண்டாட்டிங்குற உரிம உனக்கு மட்டும் தான்...."



"....."



"என் பொண்டாட்டிய நா அடிப்பேன்... கட்டி பிடிச்சிப்பேன்... அத கேக்க அவனுங்க யாரு?" குறும்பாக வினவியவனின் வார்த்தைகளில் அவளுக்கும் இலேசாக சிரிப்பு எட்டிப் பார்த்ததுவோ!!!



அவள் உதடுகளும் இலேசாக மலர அவனை அன்னார்ந்து பார்த்தவள் சற்று எம்பி அவன் கண்ணத்தில் அழுத்த முத்தமிட தன்னவளின் முதல் முத்தம் தந்த அதிர்ச்சியில் அவன் கண்கள் சாஸர் போல் விரிந்தது.



காதல் அழகானது!!!



***



வெற்றிவேல் யுனிவர்சிட்டி......



அந்த பெரிய மைதானத்தின் அருகில் ரசிகர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த வட்ட வடிவமான படிக்கட்டில் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அதிலேயே மூழ்கிப் போனவனாக அமர்ந்திருந்தான் சித்தார்த்....



அவனுக்கு முன்னே சற்று தூரத்தில் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த தன் ஆருயிர் நண்பன் ஆரவ் மற்றும் இதர நண்பர்களின் காட்டுக் கத்தல்கள் அவனின் செவிப்பறையை தீண்டாத வண்ணம் ஓரமாகி அமர்ந்திருந்தான் அவன்.....



கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்தின் முன் தன் பக்கத்தில் யாரோ வந்து அமர்ந்ததை மட்டும்தான் அவன் கவனித்தான்.



அதற்குப்பின் வந்த நபர் சென்றாரா இல்லையா என்று கூட அவனுக்கு தெரியாமல் போயிற்று.....



ஆனால் வந்து அமர்ந்தது ரித்திகாவாக இருக்க அவள் எங்கே எழுந்து சென்றிருப்பாள்???



அவளும் தான் ஒரு மணி நேரமாக அவனையே சைட் அடித்துக் கொண்டிருக்கிறாள்....

அவன் நிமிர்ந்து பார்த்தால் தானே!!!



அவனை இந்த நேரத்தில் தொந்தரவு பண்ண வேண்டாம் என நினைத்து அமைதியாய் இருந்தவளுக்கு அதற்கு மேல் முடியாமல் போனதுவோ....



தன் பையில் எப்போதும் வைத்திருக்கும் நொறுக்குத்தீனியை எடுத்து கொறித்தவள் அங்கே விளையாடுபவர்களை வேடிக்கை பார்க்க திரும்பவும் அந்த சத்தத்தில் எரிச்சலில் அவள் பக்கம் இவன் திரும்பவும் நேரம் சரியாக இருக்க அவளை பார்த்து உண்மையில் இனிமையாகத் தான் அதிர்ந்தது மனது....



அன்று அவள் அப்படி பேசிவிட்டு போனதன் பின் இன்று தான் காண்கிறான்.....

இருந்தாலும் அப்படி கோபித்துக் கொண்டு போனவள் இன்றும் அவளாகவே அவனை தேடி வந்திருப்பதை பார்த்து அவள்பால் சாயத் துவங்கியது மனது....



இடைவிடாது அவள் கொறித்துக் கொண்டிருப்பதை பார்க்க சிரிப்பு வந்தாலும் அதனையும் ரசிக்கத் தான் செய்தது அவனுள்ளம்....



அவளை புன்சிரிப்புடனே சற்று நேரம் பார்த்திருந்தவன் அவளை சீண்டிப் பார்க்க எண்ணி



"ரித்திகா" எனவும் சலேரென அவனை திரும்பிப் பார்த்தவள் அவன் தன்னை பார்த்து விட்டதில் முகம் விகசிக்க அவனை பார்த்து சிரிக்கவும் அந்த சிரிப்பிற்காக என்னவும் செய்ய வேண்டும் போலிருந்தது அவனுக்கு....



"ஹாய் சித்..." என்றாள் உற்சாகக் குரலில்...



அவளை பார்த்து மெலிதாக சிரித்தவன் "ம்.." என்று மட்டும் தலையாட்ட இருந்த உற்சாகமெல்லாம் வடிந்து போனது அவள் முகத்தில்....



அவள் புன்னகை வாடி விடவும் இவனுக்கும் என்னவோ போலானாதில் தன் மனம் போகும் போக்கை நினைத்து திடுக்கிட்டுத் தான் போனான் அந்த ஆறடி ஆண்மகன்!!!



இதையறிதாவளோ அவனை பார்த்து

"ஏன் சித் என்ன பாக்க கூட புடிக்காம போயிடிச்சா?" விட்டால் அழுது விடுபவள் போல் கேட்ட தினுசில் அவள் மேல் இரக்கம் பிறந்தது அவனுக்குள்!!!



"அப்பிடி இல்ல ரித்திமா..." என அவனே அதிசயிக்கும் விதமாய் கனிவாய் வந்து விழுந்தன அவன் வார்த்தைகள்.....



அதில் மீண்டும் முகம் விகசிக்க



"அப்பிடி இல்லன்னா என்ன பாக்க பிடிச்சிருக்கு அப்படித்தானே?" சிறு குழந்தை போல் குதூகலித்தவளை ரசித்துப் பார்த்தான் அவன்.....



"சரி அத விடு... க்ளாஸுக்கு போகாம இங்க என்ன பண்ற?" எனவும்



"இதெல்லாம் ஒரு கேள்வியா...?க்ளாஸ் கட் பண்ணினாத்தானே நான் வெளியில இருக்க முடியும்?"



"எதுக்கு கட் பண்ண?"என்றான் கறார் குரலில்.....



"உங்களப்பாக்கத்தான்" அவள் சாதாரணமாக தோலை குலுக்கவும் அவனுக்குள் சுர்ரென்று ஏற



"தோ பார் ரித்திகா... லவ் கிவ்னு சுத்திட்டு க்ளாஸ் கட் பண்ற வேல இனிமே வெச்சிக்காத... படிக்குற நேரத்துல எதுக்கு இதெல்லாம்?"



"சாரி சித்"



"போ க்ளாஸுக்கு" அவன் சொன்ன அடுத்த நிமிடம் அவன் பேச்சை தட்டாது எழுந்து செல்பவளை பெருமூச்சுடன் பார்த்திருந்தான் அவன்...



"என்ன மச்சி ஒரே லவ்ஸா?" வியர்த்து விறுவிறுக்க தன்னருகில் வந்தமர்ந்த ஆரவ்வை திரும்பி முறைக்க



"நானும் கொஞ்ச நேரம் இது நம்ம நண்பன் தானாங்குற சந்தேகத்துல இருந்தேன்.... இப்போ தீந்துடிச்சு" எனவும் அவன் தான் முறைத்ததை சுட்டிக்காட்டுகிறான் என விளங்க பக்கென சிரித்து விட்டான்.



அவன் சிரிப்பதையே புன்முறுவலுடன் பார்த்திருந்தவன்



"டேய் நம்ம ரவி இருக்கான்ல..." ((ரேகிங் சீனியருங்க))



"ம்...இருக்கான்... அவனுக்கென்ன?"



"குறுக்க பேசாதடா"



"சரி சரி காண்டாகாத மச்சான்"



"அவன் ஹாஸ்பிடல்லடா"



"என்னதூ.... பரவாயில்ல நல்ல தண்டனதான்"



"ம்..."



"யாருடா அவன் மேல கை வெச்சது?மினிஸ்டர் பையன்னு பம்புவானுங்க..."



"வேற யாருன்னு நெனக்கிற... சாட்சாத் நம்ம அண்ணனேதான்"



"தேவா அண்ணனாடா?"



"ஆமா"



"அவர் எங்கடா இங்கே வந்தாரு?"



"ஸ்டூடன்ட் சார்மேனுங்குற வகைல அவன் அடிபடறதுக்கு முந்தைய நாள் என்கிட்ட அவன பத்தி விசாரிச்சாருடா.... ஏற்கனவே யார் மூலமோ அவன பத்தி கம்ப்ளைன்ட் போயிருக்கு... என்கிட்டயும் கேட்டாரு.... அடுத்த நாள் அவன் ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணத பாத்துட்டாரு.... அவரு தான் காலேஜ் சேர்மேன்னு தெரியாம அவனும் வாய விட்டுட்டான்.... வெளுத்து வாங்கிட்டாரு..... இப்போ பையன் ஹாஸ்பிடல்ல" ஆரவ் சொன்ன விளக்கத்தை கேட்ட சித்தார்த் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.



"டேய் அவன் ஹாஸ்பிடல்லன்னு சொல்லிட்டு இருக்கேன்.... நீ என்னடான்னா ஜோக் அடிச்சா மாறி சிரிக்கிற?"



"பின்ன....வேறு எவன்கிட்டயாவது மாட்டி இருந்தா கூட பரவால்ல நம்ம தேவாண்ணா கிட்டல்ல சிக்கியிருக்கான்.... இனிமே காணும் போது எல்லாமே அடி பின்னிடுவாரு... அத நெனச்சி தான் சிரிக்கிறேன்டா" என்று விட்டு மறுபடி கத்தி சிரிக்கவும் அவனும் தன் அண்ணனின் நினைவில் வாய் விட்டு சிரித்தான்.



சிரித்துக் கொண்டிருந்தவர்களின் நண்பன் சஞ்சய் கையில் நியூஸ் பேப்பருடன் ஓடி வரவும் இருவரின் சிரிப்பும் சட்டென மறைந்து இரண்டு ஜோடி கண்களும் சற்றே இடுங்கியது.



அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை... ரிஷி ஆரவ்வின் அண்ணன் என்ற உண்மை தெரிந்த ஒரே ஒரு நபர் அவன் மட்டுமே!!!



அதனால்தான் அவன் கொண்டு வருவது ரிஷியை பற்றிய செய்தி என புரிந்து கொண்டனர்.



மூச்சிறைக்க நின்றவன் அவர்களிடம் பேப்பரை நீட்ட அதை வாங்கி ஒருசேரப் படித்த இருவரின் கண்களும் ரத்தமென சிவந்து போயிற்று....



அவர்களை கண்டு முன்னாலிருந்த சஞ்சய்கே ஒரு நிமிடம் திக்கென்றிருந்தது.



கை முஷ்டியை இறுக்கிய ஆரவ்

"மச்சி... மதனுக்கு கால் போட்றா... அந்த மீடியாக்காரனுக்கு இருக்கு.... என் அண்ணனையும் என் அஷ்வியையுமே கேவலப்படுத்தி எழுதியிருக்கான்னா அவனுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கனும்" என்று சீற



"அவன நம்ம கஸ்டடியில வெச்சி செஞ்சிறலாம் மச்சான்... நீ டென்ஷன் ஆகாத" அவனை அமைதிப்படுத்தியவன் எழுந்து சென்று மதனுக்கு அழைக்க...



மதன் யாரென சஞ்சய்க்கு தெரியாவிடினும் இருவரும் அவனை கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என நினைத்தவன் அவர்களை தடுக்க நாடி



"மச்சீஸ் வேணாம்டா...எதுக்கு சும்மா வம்ப விலைக்கு வாங்கனும்... வேணாம்டா....." எனவும் ஆரவ் முறைத்த முறைப்பில் கப்பென வாயை மூடிக் கொண்டான் சஞ்சய்....



***



தன் கேஸை வெற்றிகரமாக முடித்த கையோடு நடந்து வந்து கொண்டிருந்த வருண் யார் மீதோ மோத சட்டென சுதாரித்து கொண்டு மறுபக்கம் விழப்போனவளை இடையோடு வளைத்து பிடிக்க அவளோ பயத்தில் கண்கள் மூடி அவன் ஷர்ட் காலரை இறுக்கிப் பிடித்திருந்தாள்.



அவளை நேராக நிறுத்தி வைத்தவன் அவள் முறைப்பது கண்டு



"சாரி.... அபிநயா... நா உங்கள கவனிக்கல..சாரி சாரி..." எனவும் கொஞ்சமும் தனியாதவள்



"கண்ணாடி தானேடா போட்டிருக்க... இருந்தும்?"



"என்னதூ... டேய்யா?"



"ஆமா"



"நானும் டி போட வேண்டியிருக்கும்"



"தப்பு பண்ணது நீதான்... நானில்ல"



"அதுக்கு?"



"அப்படித்தான் கூப்புடுவேன்"



"என்ன உரிமயிருக்கு?"



"ம்....புருஷன்" ஏதோ அவசரத்தில் சொன்னவள் பட்டென நாக்கை கடிக்க அவனோ அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான்.



அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டவள் நைஸாக நழுவி விட்டாள்....



கொஞ்ச நேரம் கழித்து சுவர்ணை வரப்பெற்றவன் சுற்றுமுற்றும் அவளை தேட அவளில்லாது போகவும் தோலை குலுக்கிக் கொண்டு போய்விட்டான்.... தன் வாழ்க்கையில் விதி வேறு ரூபத்தில் விளையாடப்போவது அறியாமல்!!!!



உச்சி வெயிலில் சூரியனின் கதிர்கள் அனலாய் பூமிக்குள் இறங்க அந்த வெயிலை தன்னால் தாங்க முடியாது என எண்ணினாளோ அந்த மாதுவும்.....



கண்கள் மட்டும் தெரிய முகத்தை தன் துப்பட்டாவால் மறைத்தபடி தன் ஸ்கூட்டியில் சிக்னலுக்காக காத்திருந்தாள் அவள்.....



அதே துப்பட்டா பெண்!!!



கண்கள் ஒரு இடம் விடாமல் தான் காலையில் பார்த்தவனையே தேட அவளுக்கு இனிய அதிர்ச்சி தர எண்ணியதோ விதி....



அவள் இடப்பக்கத்திலேயே தன் எரிச்சலை முகத்தில் அப்பட்டமாக காட்டியபடி நின்றிருந்தான் வருண்....



எதேச்சையாக இடது புறம் திரும்பியவளுக்கு இனிய அதிர்ச்சிதான் போலும்.....



கண்கள் சிரிக்க அவனை நோட்டம் விட ஆரம்பித்தாள்....



இம்முறை அதே சிறுவனின் குரல் தன் இடப்பக்கம் கேட்கவும் சட்டென திரும்பியவனின் விழி வட்டத்திற்குள் விழுந்தது அவளின் சிரிக்கும் கயல்விழிகளே தான்...



அந்த கண்களையே பார்த்திருந்தவனுக்கு உள்ளுக்குள் மின்சாரம் தாக்கிய உணர்வு....



இது வரை எந்த பெண்ணிடமுமே தோன்றாத ஒன்று அவள் கண்களை பார்த்ததும் எப்படி வந்தது????



அவளையே தான் இப்போது இவன் பார்க்கத் துவங்கினான்.



அச்சிறுவனிடம் அன்பாக பேசிக் கொண்டிருந்த அவள் அதரங்களை வெளியே காணாவிடினும் அவள் அசைவுக்கு ஏற்ற படி துப்பட்டா திறந்து மடிய அதையே ரசித்தன அவன் கண்கள்....



அவனிடம் பேசிவிட்டு இடப்பக்கம் திரும்பியவள் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்கும் அவன் பார்வையில் தடுமாறித்தான் போனாள்....



அவன் காலையில் அச்சிறுவனுக்கு செய்த உதவிக்கு நன்றி கூற எண்ணி அவன் கார் கண்ணாடியை இலேசாக தட்ட அதில் தன்னிலை அடைந்தவன் தலையை அழுத்தக் கோதிக் கொண்டு அவசரமாக கண்ணாடியை கீழே இறக்க



"தேங்க்ஸ் சார்" என மொட்டையாக ஆரம்பிக்கவும் அவள் குரலில் அவனுள் சின்ன சலனம்....



அவளை புரியாது பார்த்து

"எதுக்கு?"எனவும்



"நீங்க காலைல அந்த பையனுக்கு பணம் குடுத்தீங்கல்ல.. அதுக்காகத்தான்....."

அவள் தன்னை கவனித்திருக்கிறாள் என்பதில் மனதில் தென்றல் அடிக்க



"அப்போ அவனுக்கு பணம் கொடுத்த எல்லார்கிட்டவும் போய் தேங்க்ஸ் சொல்வியா?"குறும்பாக வினவவும் அவனுக்கு தெளிவு படுத்த நாடியவளாய்



"இல்ல சார்... நானும் அந்த பையன கவனிச்சிட்டு தான் இருந்தேன்.... யாருமே அவனுக்கு உதவ முன் வரல... நீங்க மட்டும் தான் அவனுக்கு பணம் கொடுத்தீங்க..... அதுக்காகத்தான் இந்த தேங்க்ஸ்..." அவளின் கூற்றை எந்த பந்தாவும் காட்டாமல் ஏற்றுக் கொண்டவன் மெலிதாக புன்னகைக்க அவனின் உதவிக்குணத்தில் ஏற்கனவே ஈர்க்கப்பட்டிருந்தவள் அதை சொல்லிக் காட்டியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்த அவன் குணத்தில் இன்னும் இன்னும் அவனை பிடித்தது.



தானும் மெதுவாக புன்னகைக்க அவள் கண்களையே பார்த்திருந்தவன் அது சிரிக்கவும் அதை பார்க்க முடியாமல் மறு பக்கம் திரும்ப சிக்னல் விழுந்ததில் அவளும் சென்று விட்டாள்.



***



தன் கேபினில் இருந்த சோபாவிலேயே குழந்தை போல் உறங்குபவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.....



காலையில் வந்தவள் ஓய்ந்து போய்த்தான் படுத்திருந்தாள்....



அவளையே பார்த்திருந்தவன் தன் வேலைக்குள் மூழ்க அது ஆக்டோபஸ் போல் அவனை உள்ளிழுத்துக் கொண்டது....



அவள் எழுந்ததையோ அவனையே ரசித்துப் பார்த்திருந்து விட்டு உள்ளுக்குள் சென்று முகத்தை கழுவி விட்டு வந்ததையோ சிஞ்சித்தும் அறியாதவன் தன் டேபல் மேல் டக்கென க்ளாஸ் வைக்கப்படவும் தான் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.



அங்கே அவள் மனையாளோ விட்டாள் எரித்து விடுபவள் போல் அவனை முறைத்துக் கொண்டிருக்க நெற்றியை சுருக்கியவன்



"என்னாச்சு அஷு?"எனவும்



"ம்...நொன்னாச்சு"



"எதுக்குடி டென்ஷனா இருக்க?"



"நா எவ்வளவு நேரமா உங்களையே கூப்டுடு இருக்கேன்... நீங்க என்னடான்னா அதையே உத்து உத்து பாத்துட்ருக்கீங்க?"



"ஹே... நிஜமா நீ பேசினது விளங்கல்லடா..... முக்கியமான ப்ராஜக்ட்... அத தான் பாத்துட்டு இருந்தேன்"



"....."



"சரி எதுக்குடி கூப்ட?"



"சொல்ல முடியாது போடா"அவள் சிறு பிள்ளையாய் முறுக்கிக் கொள்ள மலர்ந்த முகத்துடன்



"இனிமே இப்பிடி நடக்காது.... சொல்லுடி?"எனவும்



"நா வீட்டுக்கு போகனும் தேவ்.... எவ்வளவு நேரம்தான் உங்க முகத்தையே பாத்துட்டு இருக்குறது?" அவள் போலியாய் சலித்துக் கொள்ளவும்



"என் முகத்த பாக்க ஆயிரம் பேர் க்யூல நிக்கிறாங்கடி.... வேணும்னா சொல்லு ஏற்பாடு பண்ணிட்றேன்" என்றான் கண்களை சிமிட்டிய படி....



அதில் அவளுக்கு புசுபுசுவென கோபம் ஏற அவனை மீண்டும் முறைக்கவும் கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது.



"கம் இன்..." என்றவனின் கம்பீரக்குரலை அந்த கோபத்திலும் ரசிக்க தவறவில்லை அவள்...



உள்ளே பதற்றத்துடன் நுழைந்த கதிரை கூர்மையாய் பார்த்தவன்



"என்னாச்சு கதிர்?எனி ப்ராப்ளம்?"எனவும் தானும் திரும்பிய அஷ்வினி



"ஹாய் அண்ணா"என உற்சாகமாக கூற



"பேசாம இரு அஷ்வினி"என அவளை அதட்டியவன் கதிரை பார்த்தான்.



அவளோ "கமாண்டர்" என முணுமுணுத்து விட்டு அவனுக்கு வாயை வளைத்து அழகு காட்ட அதை கண்டும் காணாதவன் போல



"சொல்லு கதிர்?" எனவும் அவன் அடுத்து சொன்ன பதிலில் "வாட்"என கேட்டுக் கொண்டே மேசையை தட்டியவாறு ஆக்ரோஷமாய் எழுந்து நின்றான் ரிஷி.



வெற்றிவேல் யுனிவர்சிட்டி.....



காலேஜ் முடிந்து வீடு செல்ல பைக்கை ஸ்டார்ட் பண்ணியவனின் முன்னால் மறைத்தவாறு வந்து நின்றாள் ரித்திகா....



கீயை அப்படியே வைத்து விட்டு கால்கள் இரண்டையும் ஊன்றி நின்றவாறு அவளை பார்த்து



"என்ன?"எனவும்



"படிக்கிற டய்ம்ல தானே லவ் பண்ண கூடாது... இப்போதான் காலேஜ் முடிஞ்சிடுச்சே....அதான் லவ் பண்ணலாம்னு இருக்கேன்"

என்னவளின் பதிலில் சிரிப்பு வந்தது அவனுக்கு....



"பண்ணு பண்ணு... பட் இப்போ எனக்கு வழிய விடு ப்ளீஸ்"



"அப்போ நா உங்கள லவ் பண்ணுறதுல உங்களுக்கு எந்த ஆட்செபனையும் இல்ல.. அப்படித்தானே?"

கண்கள் மிண்ண அவள் கேட்கவும்



"லுக் ரித்திகா.... உனக்கும் எனக்கும் செட் ஆகாது... என் லய்ஃப் ஸ்டைல் வேற... உன் லய்ஃப் ஸ்டைல் வேற...."



"ப்ச்... லய்ஃப் ஸ்டைல விடுங்க சித்... உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாதுன்னா வேற யாருக்கும் எனக்கும் செட் ஆகும்?"



"அது உன் இஷ்டம்"



"அப்பிடிங்களா.... அப்போ நா யார வேணா... லவ் பண்ணுவேன்... அதுவும் என் இஷ்டம் தான்" பிடிவாதமாய் சொன்னவளை பார்த்திருந்தவன்



"ஒகே உன் இஷ்டம்.... பட் அது என் சம்பந்தப்பட்டதா இருக்க கூடாது" என்றான் கண்டிப்புடன்...



"ஏன் ஏன் கூடாது?"



"...."



"என்ன பிடிக்கலயா?"



"....."



"சொல்லுங்க சித்... என்ன பிடிக்கலயா?"



"...."



"லவ் வராதுன்னு சொல்லிட்டீங்க.... அதையும் தாண்டி என் காதல் மேலுள்ள நம்பிக்கைல தான் உங்க கிட்ட வந்து பேசினேன்.... பட்... என்ன பிடிக்கலன்னா இப்போவே சொல்லிடுங்க.... சத்தியமா இனிமே டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்"



"...."



"பதில் சொல்லுங்க சித்தார்த் அண்ணா"



"என்னதூ.... அண்ணாவா?"



"ம்..ஆமா அண்ணா..."



"ப்ச்...."



"எதுக்கு அண்ணா சலிச்சிக்குறீங்க....? சரி சரி பதில் சொல்லுங்கண்ணா?"



"ரித்தி... மொதல்ல அண்ணா போடுறத நிறுத்து"



"முடியாது அண்ணா.... எனக்கு பதில் சொல்லுங்க... நா பண்றேன்"



"வழி விடு"



"ஓகே அண்ணா... பட் நாளைகுள்ள எனக்கு பதில் சொல்லலன்னா.... உண்மையாகவே உங்கள அண்ணனா நினைச்சிக்குவேன்"

அவனை கடுப்பேற்றி விட்டு அவள் சென்று விட இவனுக்குள் அடக்க முடியாத கோபம்....



..........



"ஆரு....அஸைன்மண்ட் சப்மிட் பண்ணலன்னு மிஸ் ரொம்ப திட்டிட்டாங்கடா"தன் கணவனிடம் குற்ற பத்திரிகை வாசித்தாள் அவள்....



காரை லாவகமாக ஓட்டிக் கொண்டே சாலையிலிருந்து கண்களை அகற்றி அவளை பார்த்தவன்



"சப்மிட் பன்னலன்னா பின்ன கொஞ்சுவாங்களா....?"



"அவங்களுக்கு சப்போர்ட் பண்றியா?"



"அட இல்லடா அம்முகுட்டி... நிதர்சனத்த சொன்னேன்"



"போதும் கொஞ்சுறா மாறி நடிக்காத"



"ஹேய் ஜஸ்ட் கிட்டிங் செல்லம்... சரண்டர்" கைகளை மேலே தூக்கவும் பதறிப்போனாள் அவள்.....



"டேய் டேய் பாத்துடா... என் உசுரு என்ன உனக்கு விளையாட்டா போச்சா?"



"அடிப்பாவி... நானும் தானேடி உன் கூட இருக்கேன்" எனவும் கலகலவேன சிரித்தவளை ஆசையாய் பார்த்தான் அவன்....



"என்னடா அப்பிடி பாக்குற?"



"லவ் யூ டி"



"ஏன்டா திடீர்னு?"



"சொல்லக்கூடாதா?"



"அப்பிடி இல்லடா..."



"பின்ன?"



"ஆள விடுடா சாமி... சரியான கேள்விக்கு பொறந்தவனா இருக்கியேடா" எனவும் வாய்விட்டு சிரித்தவன்



"ஏன் அம்மு... ரித்திகா நம்ம சித்துவ லவ் பண்றாளா என்ன?"



"மறுபடியும் கேள்வியா?"



"கேட்டதுக்கு பதில் சொல்லுடி?"



"அது..."



"என்ன?"



"ஆமாடா.... ஆனா இந்த சித்து அண்ணாவதான் என்ன பண்றதுன்னே புரியல"



"பையன் பிடி குடுக்க மாட்டேங்குறானேடி"



"ஆமா ஆரு... ரித்து ரொம்ப பாவம் டா..." என்றவள் நடந்ததனைத்தையும் கூற



"இவ்வளவு நடந்திருக்கு... பாவி வாய தொறந்து சொன்னானா பாரு... இருக்கு அவனுக்கு"



"...."



"அது சரி... உன் அக்கா எதுக்காக வீட்டுக்கு வராம வீம்பு புடிச்சிட்டு இருக்கா?"



"ம்.... அத அவகிட்டயே கேக்க வேண்டியது"



"ஏன் நீ கேட்க மாட்டியா?"



"சும்மா மழுப்பாத ஆரு... அஷ்வி கூட இன்னுமே நீ பேசாதது எனக்கும் தெரியும்"



"....."



"நீ அவ மேல கொவமா இருக்கன்னு நீ பேசுறப்பவே புரியுது" என்றவளை திரும்பி புரியாமல் பார்க்க



"எப்பவுமே என் அஷ்வின்னுதானே சொல்லுவ... இப்போ மட்டும் உன் அக்காவா... இதுல இருந்தே புரியல?" எனவும் அவளை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்தவன்



"ஏன் உன் அக்காக்கு பேச சொல்ல வேண்டியது தானே?"



"நீயா பேசினா ஒன்னும் குறைஞ்சி போயிட மாட்ட"



"ஓகே ஓகே ஜஸ்ட் லீவ் இட் அம்மு...." என்றவனை முறைத்து பார்க்க அவனோ வேண்டுமென்றே அவள் பார்வையை தவிர்த்து சாலையில் கண்களை பதித்திருந்தான்.



அவளை வீட்டில் இறக்கி விட்டவன் முக்கியமான வேலை இருப்பதாக கூறிச் சென்று விட்டான்.



***



ஹரிஷ் தப்பிச் சென்று விட்டதாக கதிர் வந்து கூறவும்"வாட்..."என கத்திக் கொண்டே மேசையை தட்டியபடி ஆக்ரோஷமாய் எழுந்து நின்றான் ரிஷி.



அவன் கோபத்தில் கதிர் நடுநடுங்கிப் போக அஷ்வினிக்கு உடல் தூக்கிவாரிப்போட்டது.



கண்கள் இரத்தமென சிவக்க மேசைமேல் இரு கைகளையும் ஊன்றி



"எப்பிடி நடந்துது?" எனவும்



"தெ...தெரியல சா...சார்...பட்.. கண்ணாடி உடஞ்சிருக்கு"



கண்களை இறுக்க மூடித் திறந்தவன்

"ஓகே... நீ போ நா வந்துட்றேன்" என்க அவன் செல்லவும்



"அஷ்வினி நீ ட்ரைவர் கூட வீட்டுக்கு போயிடு..." என்றான் வெகு நிதானமாய்....



அவன் நிதானத்தில்தான் அவளுடைய நின்ற மூச்சே திரும்பி வந்தது போல் இருக்க



"பட் தேவ்...நா உ..." என்றவளை கை நீட்டி தடுத்து



"எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்... முதல்ல நீ வீட்டுக்கு போ" எவ்வளவு முயன்றும் கோபம் குரலில் வெளிப்படத்தான் செய்தது.....



அவனையே கொஞ்ச நேரம் பார்த்திருந்தவள் ஒரு பெரு மூச்சுடன் வெளியேற அடுத்த நிமிடம் புயலென தானும் மேல் நோக்கி ஓடினான்.



அடிபட்ட வேங்கையென உள்ளே நுழைந்தவனை பார்த்து நக்கலுடன் உதட்டை வளைத்த அனன்யா



"வெல்கம் வெல்கம்.... மிஸ்டர் ரிஷிகுமார் தேவமாறுதன்.... எவ்வளவு நேரம் தானுங்க சார் உங்கள எதிர்பார்க்குறது....ஹரிஷ் தப்பிச்சு போய் கிட்டத்தட்ட ஒன் அவர் ஆகுது.... நீங்க என்னடான்னா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இப்போ வர்றீங்களே சார்" என்றவளுக்கு ஆக்ரோஷமாய் அவன் விட்ட அறையில் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தது.



அதை திருப்தியுடன் பார்த்தவனுக்கு எங்கிருந்து தான் அத்தனை நிதானம் வந்ததோ.....



நிதானமென்றால் அப்படி ஒரு நிதானம்!!!



கட்டி வைக்கப்பட்டிருந்த இருவருக்கும் முன்னால் வந்து கால்கள் இரண்டையும் சற்று அகற்றி கைகளை பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டபடி தீர்க்கமாய் அவர்களை அவன் பார்த்து பார்வையில் கதிருக்கே வியர்த்து வழியத் துவங்கியது.



உதட்டை வளைத்து எள்ளல் சிரிப்பு சிரித்தவன்



"என்ன சொன்ன என்ன சொன்ன ஹரிஷ் தப்பிச்சு போய் ஒன் அவர் ஆகுதா?" புருவங்களை உயர்த்தி தலையை அவன் ஆட்டிக்கேட்ட தினுசில் உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது இருவருக்கும்....



தலையை இரு புறமும் ஆட்டியவாறு நிமிர்ந்து



"அது கொஞ்சம் சேஞ்ச் பண்ணிக்கலாமா?அதாவது... ஹரிஷ் தப்பிச்சு போய் ஒன் அவர் இல்ல டார்லிங்.... அவன் திரும்ப என்கிட்ட மாட்டி ஒன் அவர் ஆகுது..."



"....."



"புரீலல்ல.... இரு இரு நானே எக்ப்ளைன் பண்றேன்.... ஹரிஷோட கயிற லூசா கட்ட சொன்னதும் நான்தான்.... பக்கத்துல கத்திய அவன் கண்ணுக்கு தெரியுற மாதிரி வெக்க சொன்னதும் நான்தான்..... நல்லாருக்குல்ல?"

நக்கலாய் கேட்டவன் வாய்விட்டு சிரிக்க அங்கிருந்த அனைவருமே வாயடைத்தே போயினர் கதிர் உட்பட....



ஆம் அங்கு காவலுக்காக நின்றிருந்த அனைவருக்கும் கூட வாயடைத்து போனது என்றால் அது மிகையாகாது....

ஒருவனை தவிர..... அவன் தான் ரிஷியின் கட்டளைப்படி கயிற்றை தளர்த்திவிட்டவன்!!!



"இப்போ சொல்லுங்க பாக்கலாம்..... உங்க ஹரிஷ் தப்பிச்சு போய்ட்டானா மாட்டிகிட்டானா?"

நக்கலாய் பேசியவளிடம் அதைவிட நக்கலாய் கேள்வி கேட்டான் அவன்.....



"நீ...நீ.. பொய் தானே சொல்ற ரிஷி?"



"ஏய் என் பேரு சொல்ற தகுதிய கூட நீ இழந்து ரொம்ப நாளாச்சு... திரும்ப அப்படி கூப்ட நாளைக்கு நீதான் தலைப்பு செய்தியா வருவ.... அதோட என்ன கேட்ட... பொய் சொல்றேனா... என்ன தேவைக்கு உன் கிட்ட நா பொய் சொல்லனும்?"



"...."



"என் அஷு மேல கை வெச்ச உன்ன ஏன் நா உயிரோட விட்டு வெச்சிருக்கேன்னு நெனக்கிற?"



"ஏன்னா என் மேல உனக்கு இன்னும் லவ் இருக்கு" எகத்தாளமாய் வந்து விழுந்த வார்த்தைகளில் மீண்டும் வாய்விட்டு சிரித்தவன்



"குட் ஜோக்... மிஸஸ் அனன்யா ராகெஷ் கண்ணா.... என்ன பாத்தா... போயும் போயும் உன்ன லவ் பண்றவன் மாறியா தெரீது?"



"ஏய்..."



"ஹே... அடங்குடி...."



"...."



"உன்ன என்கிட்ட மாட்ட வெச்சிட்டு அவன் கைகட்டி வேடிக்க பாத்துட்டு இருப்பான்னு நம்புறதுக்கு நான் என்ன உன் புருஷன மாறி கேனயா?அதுக்கு காரணமே வேறம்மா.... உன்ன காப்பாத்த தான் ஹரிஷ் வந்தான்னு எனக்கு தெரியும்... இப்போ தப்பிச்சு போயிருக்குற ஹரிஷ்... ஐ மீன் உன் பாஷைல...

அவன்கிட்ட உங்க கேங்குல ஒருத்தன் வந்து பேசுவான்னும் எனக்கு தெரியும்‌... அண்ட் எனக்கு எதிரியா இருக்குறவன் கூட உங்க ஆளுங்க கனக்ஷன் ஆகியிருக்குறதுனாலதான் உங்களுக்கெல்லாம் இல்லாத தைரியம் வந்திருக்குன்னு எனக்கு தெரியாதா என்ன?" அவர்களை பற்றி அவன் புட்டு புட்டு வைத்ததில் அனன்யாவுக்கு அருகிலிருந்தவருக்கு கடைசி காலம் இவன் ரூபத்தில் வந்துவிட்டது என்று நிச்சயமே ஆகிவிட்டது!!!



***



அந்த இருட்டு அறையில் அந்த மீடியாக்காரனை சுற்றி கைகளை கட்டிய படி நின்றிருந்தனர் நண்பர்கள் மூவரும்.....



((நல்லா வருவீங்கடா டேய்..... போலீஸ் படிப்பு படிச்சிட்டு உங்க இஷ்டத்துக்கு ஒவ்வொருத்தனையும் பந்தாட்றீங்களேடா.... இது உங்களுக்கே நியாயமா..... அடுக்குமா....???))



மிரண்டு அவர்களை அண்ணார்ந்து பார்த்தபடி



"வே... வேணாம்....விட்டுடுங்க டா...." என கெஞ்சவும் அவன் முகத்திலேயே ஒரு குத்து விட்டான் சித்தார்த்....



"டேய் டேய்...சித்து இருடா...." அவனை அடக்கிய மதன்



"ம்...சொல்லு யாரு சொல்லி செஞ்ச?"



"இ...இ.. இல்ல இல்ல யாருமே சொல்லவே இல்ல...ந்...நா...நா.... நானாத்தான் போட்டேன்..." எனவும் இம்முறை ஆரவ் விட்ட அறையில் அவனின் பல்லொன்று கலன்று கீழே விழுந்தது.



"ஆரு....இருடா....விசாரிக்கலாம் இவன பாத்தா தானா போட்றவன் போலவா தெரியுது?" கேள்வி கேட்ட மதனை கொலை வேறியுடன் இருவரும் முறைக்க



"மச்சீஸ்...முறக்காதீங்கடா... எனக்கென்னவோ இவனா பண்ணியிருக்க மாட்டான்னுதான் தோனுதுடா" எனவும் தாடையை தடவிய ஆரவ்



"அப்பிடீங்குற...?"எனவும்



"ஆமாடா...." என்றான் மதன்.... சித்தார்த்தை எட்டிப் பார்த்த ஆரவ்



"சித்து அப்போ நாங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குறோம்.... நீ இவன் கிட்ட கேட்டுடு மச்சி...." என கண்ணடிக்க அவன் எப்படி கேட்பான் என அறிந்த மதன்



"டேய் சித்து..... நீங்க போங்கடா நா கேக்குற விதத்துல கேக்குறேன்" எனவும் சித்தார்த் ஆரவ்விற்கு கண் காட்ட அடுத்த நிமிடம் மதன் திமிரத்திமிர வெளியே இழுத்து சென்று விட்டான் ஆரவ்....



கொஞ்ச நேரம் கழித்து அவனாகவே உள்ளே அழைத்து வர இரத்தம் வடிய மயங்கி இருந்தவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட மதன்



"ஏன்டா இப்பிடி இருக்க?" எனவும் வாய்விட்டு சிரித்தனர் இருவரும்...



"சரி...என்ன சொன்னான்?"மீண்டும் மதன் கேள்வி கேட்க அடுத்து சித்தார்த் சொன்ன பதிலில் குழம்பிப் போயினர் இருவரும்.....



***



இரவு.....



இன்று காலையில் நடந்தவற்றையே மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்தபடி தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் அபிநயா....



தான் ஏன் இன்று அவனிடம் அந்த வார்த்தையை கூறினோம் என்பது அவளுக்கே புரியாமல் ஆச்சரியமாய் இருந்தது.



அவன் மேல் ஏற்கனவே ஈர்ப்பு இருந்தது உண்மை தான்....



அவன் குணத்தில் நிறைய தடவைகள் அவளுக்கே தெரியாமல் அவனை ரசித்திருக்கிறாள்....



ஆனால் ஈர்ப்பு எப்படி காதலாய் மாறிப்போனது என்பது தான் புரியாமல் போனதுவோ!!!



அவனை முதன் முதலாய் சத்தித்தது ஒரு மழை நாளன்று....



நனைந்து கொண்டிருந்த ஒரு வயோதிபருக்கு அவன் குடையை கொடுத்து விட்டு அவன் தொப்பலாய் நனைந்தபடி போய்விட்டான்.....



இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதனா...? ஆச்சரியம் தாளவில்லை அவளுக்கு....



அடுத்த நாள் அவனை கோர்ட்டில் கண்டதும் ஏனோ ஒருவகை பரவசம்...



அன்று கோபத்தில் அஷ்வினிக்கும் சேர்த்து ஏசியது கூட அவன் மேல் அவள் எடுத்திருந்த உரிமையே...



அவன் எப்படி என்னை வேற்று ஆளாக நினைக்கலாம் என்பதில் வந்த கோபமே அது என்று அவனுக்கு எப்படி சொல்வது???



அவள் அறிந்த வரையில் அவன் யாரையும் நிமிர்ந்து பார்த்து கூட இல்லை....



அந்த கண்ணியம் கூட ஒரு வகையில் பிடித்துப் போனது....



அந்த வகையில் தன் காதலுக்கு தடையில்லை என நினைத்தவளுக்கு எங்கே தெரியப் போகிறது இன்றுதான் அவன் நெஞ்சில் அவளுக்கானவள் தடம் பதித்திருப்பதையும்...

அவளுக்கு தடைக்கல் அவளாகத் தான் இருக்கப் போகிறாள் என்பதுவும்.....



***



தன்னவனுக்கா காத்திருந்து காத்திருந்து சோஃபாவிலேயே உறங்கிவிட்டிருந்தாள் அஷ்வினி....



இரவு ஒரு மணி போல் தன்னிடமிருந்த சாவியை கொண்டு திறந்து உள்ளே நுழைந்தவனுக்கு முதலில் கண்களுக்கு பட்டது தூங்கிக் கொண்டிருக்கும் தன் மனையாள்தான்....



அவள் தூக்கம் கலையாதவாறு அவளை குழந்தை போல் தன் கைகளின் ஏந்திக் கொள்ள ஒரு கை அவன் கழுத்தில் மாலையாகவும் மறு கை அவனின் ஷர்ட் காலரை இறுக்கிப் பற்றிய படியும் இருக்க... தலை அவன் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து சுகமாக சாய்ந்திருந்தாள் அவள்...



அவளை தூக்கிக்கொண்டு வந்து மஞ்சத்தில் மெதுவாக போட்டு விட்டு எழுந்தவனை தடை செய்தது தன் மனையாள் தன் ஷர்ட்டை இறுக்கப் பற்றியிருந்த கை....



அதைப் பார்த்து சிரித்தவன் அவள் விரலுக்கு நோகுமோ என்றபடி அதை மெதுவாக எடுத்துவிட்டு அவள் நெற்றியில் உதட்டை ஒற்றி எடுத்தவன் எழுந்து ப்ரஷப் ஆக சென்றான்.



***



அமெரிக்கா.....



மெக்சிகோ நகரம்....



காலுக்கு மேல் கால் போட்டு தோரணையாய் அமர்ந்து தன் முன் நடுங்கிக் கொண்டிருந்த ஒருவனை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.....

அவன் ராகேஷ்.....

ராகேஷ் கண்ணா...!!!



தொடரும்....



14-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 24 ❤



காலை.....



மெதுவாக இமைகளை திறந்தவளின் கண்கள் முதலில் தேடியது தன்னவனைத்தான்....



ஹால் சோஃபாவில் இருந்த நான் எப்படி இங்கே என்றவளுக்கு விடையாய் அவன் பாத்ரூமிலிருந்து வெளியே வந்து



"குட் மார்னிங் அஷு....ரொம்ப யோசிக்காத....நான் தான் உன்ன தூக்கிட்டு வந்தேன்" என்றவன் தன் வசீகர சிரிப்பை உதிர்க்க அதில் தொலைந்து போனவள்



"தேவ் நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க தெரியுமா?எப்பவுமே இப்பிடி இருக்குறதுக்கு என்ன?எப்போ பாரு டெர்ரர் ஆபீஸர் மாறி மூஞ்ச வெச்சி கிட்டு சுத்த வேண்டியது?"எனவும் மீண்டும் சிரித்து விட்டு பால்கனியை ஒட்டி அமைந்துள்ள உடற் பயிற்சி அறைக்கு சென்று விட்டான்.



நேற்று நடந்தது சுத்தமாய் மறந்து போனவளாய் எழுந்து தானும் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.



சற்று நேரம் கழித்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு கீழே சென்றவள் காபியை கலக்கி எடுத்து வந்து கயலிடம் இரண்டை நீட்டியவள் தங்களறைக்குள் சென்றாள்.



நேரே பால்கனிக்கு சென்றவள் அவன் வரும் வரை தன்னுடையதை அருந்திக் கொண்டிருக்க வியர்த்து விறுவிறுக்க வெள்ளை டவள் ஒன்றினால் வியர்வையை துடைத்துக் கொண்டே அவனும் ஜிம் அறையிலிருந்து வெளியே வந்தான்.



அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது.



ப்லக் கலரில் ஆம்கட் பெனியன் அனிந்து இறுகிய புஜங்கள் வெளியே தெரிய வியர்வையை துடைத்துக் கொண்டு நின்றிருந்தான்.



கண்கள் படபடவென அடித்துக் கொள்ள தலையை குனிந்தவள் மறுபக்கம் திரும்பி நிற்க அவன் உதட்டில் மர்மப் புன்னகை உதயமானது.



அவள் கழுத்தில் மூச்சுக்காற்று படுமளவுக்கு நெருங்கி வேண்டுமென்றே நெருங்கி நிற்கவும் அவளோ கண்களை மூடி கையிலிருந்த கப்பை இறுக்கப் பற்றிக் கொண்டாள்.



அவளையே கொஞ்ச நேரம் ரசித்திருந்தவனின் ரசனையை குலைக்கும் வகையில் ஒழித்தது அங்கே ஓரத்தில் போடப்பட்டிருந்த மேசை மேல் இருந்து அலறிய அவளது சேல்போஃன்....



படக்கென கண்களை திறந்தவள் அவனை விட்டு நகர்ந்து சென்று அதை எடுத்து



"சொல்லு அர்வி?என்னடா இந்த நேரத்துல?" எனவும் அவளுடைய அர்வி எனும் அழைப்பில் எடுத்திருப்பது அர்விந்த் என புரிந்து போக அவளை முறைத்து விட்டு விறுவிறுவென குளிப்பதற்காக சென்றவன் கதவை அறைந்து சாத்தினான்.



கதவு அறைந்து சாத்தப்பட்டதில் திடுக்கிட்டு திரும்பியவள் அவனிடம் பேசிவிட்டு உள்ளே நுழைந்தாள்.



பாத்ரூமிலிந்து சத்தம் கேட்கவும் ட்ரஸ்ஸிங் ரூமிற்குள் சென்றவள் சேலையை உடுத்தி விட்டு கையில் கோர்ட்டுடன் வெளியே வரவும் அவனும் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான்.



அர்விந்தும் ஒரு லாயர்... அவனும் இன்று வருணின் ஆபீஸிலேயே ஜாயின் பண்ணுவதாக கூறியிருக்க இன்று தான் வர லேட் ஆகும் என்பதையே அப்போது அழைத்து கூறியிருந்தான்.



அந்த சந்தோஷமான விடயத்தை அவனிடம் கூற வாய்த்திறக்க இவனோ இருந்த கடுப்பில் அவளை முறைத்து விட்டு ரெடி ஆகச் சென்றான்.



ஒரு பெருமூச்சுடன் அவன் வரும் வரை காத்திருக்க அவன் கோபம் புரியாது அவன் வந்ததும் வராததுமாக



"தேவ்...அர்வி இன்னக்கி வேலைல ஜாயின் பண்றான் தெரியுமா?" என்றாள் கண்கள் மிண்ண...



ஏற்கனவே வெந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போலிருந்த அவளது பேச்சில் வெடித்து விட்டான்.



"சோ வாட்??உன் வீட்டு ஆளுங்க என்ன பண்ணித் தொலச்சா எனக்கென்ன... அத ஏன் என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்க" எனவும் அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது....



இப்போது எதற்கிந்த கோபம் என எண்ணியவள்



"தேவ் ஜஸ்ட் ஒரு இன்பர்மேஷன்... அதுக்கு எதுக்காக இவ்வளவு கோபப்படுறீங்க?"



"....."



"ஐ அம் சாரி..." என்றவளை உறுத்து விழித்தவன் விருட்டென வெளியேறிவிட அவனையே வெறித்துப் பார்த்திருந்தாள் அவள்....



"கயல் நா இன்னக்கி காலேஜ் வர்ல... நீ அஷ்வினி கூட போய்டு" சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் அவன் அழைப்பிலேயே ஏதோ பிரச்சினை என யூகித்து



"ஆரு எனி ப்ராப்ளம்?" எனவும்



"நத்திங்" என்று மட்டும் சொன்னவன் அவசரமாக எழ ஏதோ யோசனையிலையே வந்து கொண்டிருந்த அஷ்வினி அவன் மேல் இடிக்க அவளை பிடித்து நிறுத்தியவன் அவளை முறைக்கவும்



"சாரி மிஸ்டர்.ஆரவ்... நா உங்கள கவனிக்கல சாரி..." எனவும்



"இட்ஸ் ஓகே மிஸஸ்.ரிஷி...யூ கேரி ஆன்" என்று விட்டு நகர அவனை முறைத்தவள் முகத்தை திருப்பிக் கொண்டு சாப்பாட்டு மேசையில் போய் அமர இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்திருந்த கயல் கத்தி கத்தி சிரிக்கவும் அவள் தலையிலேயே கொட்டினாள்.



தலையை தேய்த்து விட்டுக்கொண்டே



"ராட்சஸி எதுக்குடி இப்போ கொட்டின?" எனவும் இவள் பதிலளிக்கும் முன் ஆரவ் முந்திக் கொண்டு



"பெட்டர் நேம் அம்மு... இனி அப்பிடியே கூப்புடு" எனவும் அவனை முறைத்து விட்டு கயலிடம் திரும்பி



"கயல் உன் புருஷன வாய மூடிக்கிட்டு இருக்க சொல்லு... இல்ல நடக்குறதே வேற"



"என்ன நடக்கும்னு கொஞ்சம் கேட்டு சொல்லு அம்மு"



"என் தேவ் கிட்ட மாட்டி விட்டுடுவேன்னு சொல்லு கயல்" எனவும் அவள் வார்த்தைகளில் காலையில் ஏற்பட்ட கோபம் கூட மெழுகாய் கரைந்து போனது அவனுக்கு....



((தேவ் எங்க இங்கன்னு நீங்க கேக்குறது புரியுது...வெயிட் வெயிட் ....



அது வேறு ஒன்னில்லப்பா..... இருந்த டென்ஷன்ல

முக்கியமான ஃபைல வீட்டுலயே வெச்சிட்டு பொய்ட்டாப்ல... அதான் திரும்பி வந்திருக்காரு சாரு....))



கதவு நிலையில் சாய்ந்து ஒரு காலை குற்றியும் மறு காலை ஊன்றியும் வைத்தவாறு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி அவர்களையே அமைதியாய் பார்க்கத் தொடங்கினான்.



"ஏன் அவ புருஷன் என்ன அவ்வளவு பெரிய அப்பாட்டாக்கரான்னு கேளு அம்மு"என்றான் இவனும் விடாது....



"ஆமா அப்பாட்டாக்கர்தான்.. அதனால தானே உன் புருஷன் பம்மிகிட்டு இன்னும் என் தேவ் கூட பேசாம இருக்கான்... இல்ல கயல்?"



"ஹே...யாரு நானு... அவ புருஷன பாத்து பம்புறேனாமா... அப்போ உன் அக்கா என்கிட்ட பேசாம இருக்குறதுக்கும் எனக்கு பயம்னு எடுத்துக்கவான்னு கொஞ்சம் கேளு அம்மு?"



"தோ பாரு கயல்... நான் ஒன்னும் உன் புருஷனுக்கு பயப்படல... உன் புருஷனுக்கு தான் என்ன கண்டா பயம்.... மாத்தி பேசுறான்... சொல்லி வை அவன்கிட்ட...."



"அம்மு... இது நல்லா இல்ல சொல்லிட்டேன்.... உன் அக்காவும் அவ புருஷனையும் பாத்து நா பயப்பட்றேன்னு அவ சொல்லிட்ருக்கா... நீ என்னடான்னா எனக்கு சப்போர்ட் பண்ணாம இருக்க?" கயல் பதில் சொல்ல வாயெடுக்க ரிஷியை கண்டு கொண்டவள் பேசாமல் அமைதியாகி விட அதற்கும் அஷ்வினி தான் பதில் அளித்தாள்.



"ஏன் கயல்....உன் புருஷனுக்கு உண்மைய சொன்னா கசக்குதாமோ?"



"அம்மு...நீ அந்த ராட்சஸி கூட இருந்தா உன்னையும் அவள போலவே கெடுத்துடுவா... நீ வா நா ட்ராப் பண்றேன்..." எனவும்



"கயல்... உன் புருஷன் உண்மையை ஒத்துக்கிட்டான் போல... அப்பிடியே என்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுன்னும் ஒத்துகிட்டு கெளம்ப சொல்லு...."



"குட் ஜோக் அம்மு... பேசி ஜெயிக்க முடியாது இல்ல... பேசுறது வேஸ்டுன்னு அவக்கு புரிய வைடி" என்று விட்டு அவளை வெறுப்பேற்ற வேண்டுமென்றே கத்தி கத்தி சிரிக்கவும் கொபமாய் உட்கார்ந்திருந்த கதிரையை தள்ளி விட்டு எழுந்தவள்



"என்னடா சொன்ன..... என் கூட பேசுறது வேஸ்டா" என்றபடி கையில் தண்ணீர் கோப்பையுடன் அவனை துரத்த சிரித்துக் கொண்டே அவள் கைகளுக்கு அகப்படாமல் ஓடிக் கொண்டிருந்தான் ஆரவ் தேவமாருதன்....



அவளுக்கு போக்கு காட்டியபடியே ஓடிக் கொண்டிருந்தவன் ரிஷியை கண்டும் காணாதவன் போல வேண்டுமென்றே அவன் முன் போய் நின்று போலியாக மூச்சு வாங்க



"டேய் மரியாதயா நில்லு..." என்றபடியே வந்தவள் தண்ணீரை வீச ஆரவ் குனிந்து கொள்ளவும் அது அப்படியே ரிஷியை தொப்பலாக நனைத்து விட்டது.



அங்கே நின்றிருந்த ரிஷியும் இதை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை....



அவள் ஷாக்கடித்தவள் போல் நிற்க ஆரவ் வாய் போத்தி சிரித்தான்.....



கயல் சாப்பிடுவதை விட்டு விட்டு சடாரென எழுந்தவள் மூவரையும் சுவாரஷ்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.



ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் விரித்து நெற்றியிலிருந்து தண்ணீரை துடைத்தவன் ஆரவ்வை ஒரு பார்வை பார்க்க அவனோ இதுவரை வீட்டையே பார்த்திராதவன் போல் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான்.



அதில் உள்ளுக்குள் சிரித்தாலும் விரைப்பாகவே அஷ்வினியிடம் திரும்பி



"ரொம்ப தேங்க்ஸ்..."என்று விட்டு மேலே ஏறிச் சென்று விட மூவரின் சிரிப்பு சத்தமும் வீட்டை நிறைத்தது.



ஆரவ்விற்கு அடியும் கூடவே....



***



வெற்றிவேல் யுனிவர்சிட்டி.....



சற்று தாமதமாகவே வந்து ரித்திகாவை சோதித்து வைத்தான் சித்தார்த்....



அவன் வருவதை தூரத்திலிருந்தே கண்டவள் உட்கார்ந்திருந்த மரத்தடியிலிருந்து துள்ளியெழுந்து அவனுக்காக காத்துக் கொண்டு நின்றாள்.



அவள் செய்வதையெல்லாம் கண்காணித்துக் கொண்டே வந்தவன் வேண்டுமென்றே அவளை பார்த்தும் பார்க்காதது போல் தாண்டிச் செல்ல முனைய ஓடி வந்து இரு கைகளையும் விரித்து அவனே அவனை மறைப்பது போல நின்று கொண்டாள்.



"வழி விடு ரித்திகா... டய்ம் ஆச்சு.."



"எனக்கு பதில் சொல்லிட்டு எங்க வேணா போங்க அண்ணா"



"ப்ச்...அண்ணான்னு சொல்லாதன்னு சொல்றேனில்ல?"



"இப்போவே அண்ணான்னு சொல்லி பழகிகிட்டாதானே நீங்க புடிக்கலன்னு சொன்னதும் வேற ஒருத்தன லவ் பண்ண முடியும்" அவனை வேண்டுமென்றே கடுப்பேற்ற அவள் வார்த்தைகளில் கண்கள் சிவக்க அவள் தாடையை பற்றியவன்



"என்னடி சொன்ன.... என்ன விட்டுட்டு இன்னோருத்தன் கிட்ட போவியா.... டாமிட்....சொல்லுடி?" என கர்ச்சிக்க



"சித்...விடுங்க வலிக்குது" எனவும் அவள் கண்களில் தெரிந்த வலியில் சட்டென அவளை உதறி தள்ளிவிட்டு போய்விட்டான்.



அவள் கண்களிலிருந்து நிற்காமல் நீர் வழிந்து கொண்டே இருந்தது அவன் கொடுத்த ஆனந்த அதிர்ச்சியில்.....



...........



அன்றைய நாள் பாடம் எதுவுமே அவன் மண்டையில் ஏறவே இல்லை...



ஆரவ் வேறு லீவ் எடுத்திருக்க தான் உதிர்த்து விட்டு வந்த வார்த்தைகளின் வீரியத்தில் அவனே ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டான் என்பதே நிஜம்!!!



"ச்சே....ஏன் இப்பிடி நடந்துகிட்டேன்... ரொம்ப வலிச்சிருக்குமோ" நினைக்க நினைக்க மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டே இருந்தது.



இடைவெளி கிடைத்த மறுநிமிடம் அவளை தேடிச் சென்றுவிட்டான் இதற்கு மேல் பொறுக்க முடியாதவனாய்......



அன்று அவன் அமர்ந்திருந்த அதே ஸ்டேடியத்தின் மேல் மூலையில் யாருமற்ற தனிமையில் அமர்ந்திருந்தாள் அவள்....



அவன் அருகில் வந்து நிற்கவும் படக்கென எழுந்து நின்றவள் போவதற்கு ஆயத்தமாக அவளை பிடித்து தடுத்தவன்



"ஐ அம் சாரி ரித்திமா...." எனவும் மறுபக்கம் திரும்பியவளை தோல் தொட்டு தன் புறம் திருப்பி



"ஓய்...என்னடி... என்மேல கோபமா?"



"இல்லயே"



"பொய் சொல்லாதடி"



"இங்க பாருங்க மிஸ்டர்.சித்தார்த் ப்ரோ... இந்த டி போட்ற வேல என்கிட்ட வெச்சிக்காதிங்க"



"வேற யாருகிட்ட வெச்சிக்கனும்னு நீயே சொல்லிருங்க சிஸ்டர்?"



"உங்க பொண்டாட்டி கிட்ட வெச்சிக்கோங்க"



"அவக்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்.... உனக்கு தெரியல?"



"....."



"ஐ லவ் யூ டி..." என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொள்ள அவன் நெஞ்சில் வாகாய் சாய்ந்து கொண்டவள் தானும் இறுக்க அணைத்து



"ஐ லவ் யூ டூ சித்...."எனவும் அவன் அணைப்பு இன்னும் இறுகியது.



***



ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்....



"கதிர்....ஹரிஷ்ஷுக்கு கால் பண்ண நம்பர்ல பேசினவன் யாருன்னு தெரிஞ்சுதா?"



"நோ சார்... அவன் பப்ளிக் பூத்ல இருந்து பேசி இருக்கான்" எனவும் அவன் கண்கள் மெல்ல இடுங்க தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியவன் நெற்றிசுருக்கி கதிரைப் பார்த்து



"ஆர் யூ ஷுர்?" எனவும்



"எஸ் சார்...ரெண்டு தடவ கால் வந்துது.... ரெண்டு தடவயும் வேற வேற பூத்... நம்மாளுங்க அங்க போறதுக்குள்ள ஆள் தப்பிச்சிட்டான் சார்" என்றவனை பார்த்து வசீகரமாய் சிரித்தவன்



"கேம் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்குல்ல கதிர்?"



"சார்..."



"விட்டு பிடிக்கலாம்...பாக்கலாம் எவ்வளவு தூரம் போறான்னு..."



"பட் சார்....நாம தாமதிக்குறதால உயிருக்கு ஆபத்து வரலாமில்லயா?"



"எஸ் ஷுர்...வரலாம் இல்ல வரும்..."



"...."



"பட் நம்ம கைல அவன் ஆளுங்க மூனு பேரு இருக்குறதுனால கொஞ்சம் பின்தங்குவான்"



"ஆனா சார்...நம்ம கிட்ட இரண்டு பேருமே சிக்கி இருக்கும் போதுதானே மேடத்துக்கு அட்டாக்... அதோட கிட்னாப் நடந்துது?"



"நீ சொல்றதும் சரிதான்....பட் அவங்களோட முக்கிய துருப்புச்சீட்டு இப்போ ஹரிஷ் தான்... ஸோ... இப்போதைக்கு ஒன்னும் பண்ண மாட்டானுங்கன்னு நெனக்கிறேன்... ம்... பாக்கலாம்"



"...."



"இட்ஸ் ஓகே... ஜஸ்ட் லீவ் இட்... இன்னக்கி முக்கியமான மீட்டிங் ஏதாவது இருக்கா?"



"நோ சார்...இன்னக்கி நீங்க ஃப்ரீ தான்...."



"சரி நீ போ..."என்றவன் அடுத்தநாள் நடக்கவிருக்கும் முக்கியமான மீட்டிங்குக்கான ப்ராஜக்ட் ஃபைலை பார்க்க தொடங்கினான்.



***



"வருண் சார்...."



"...."



"வருண் சார்...."



"...."



"டேய் வருண்... என்னன்னு கேட்டுத் தொலடா"எனவும் தான்

தலையை உயர்த்தி அவளை பார்த்து சிரித்தான் வருண்...



"என்னடி...எதுக்கு இப்போ கத்திட்ருக்க?"



"இன்னக்கி.... கேஸ் விஷியமா ரெண்டு பேரு வருவானுங்க... அவங்கள கொஞ்சம் இன்னக்கி மட்டும் மேனேஜ் பண்ணிருடா அண்ணா.... ப்ளீஸ்... அர்வி லூசும் இன்னக்கி வர்ல"



"டெய்...அண்ணா... ஆஹா... என்னே ஒரு மரியாத.."



"ஹி...ஹி...அது சும்மா..."



"அது இருக்கட்டும்..... மேடம் எங்க போறதா உத்தேசம்?"



"அதுவா... அது ஒன்னில்லடா அண்ணா... என் ப்ரண்ட்ஸ பாத்து ரொம்ப நா....ள் ஆச்சு... அதனால்தான்... கொஞ்சம் தல காட்டிட்டு வந்துரலாமேன்னு..."



"என்னதூ...ஊர் சுத்த போறேன்னு சொல்லாம சொல்றியா?"



"ப்ளீஸ்...ப்ளீஸ்..ப்ளீஸ்..இன்னக்கி ஒரே ஒரு நாள் மட்டும்"



"நோ வே ரிக்ஷி... மரியாதயா.....கேஸ கவனி.."



"ப்ளீஸ் வருண் சார்....இன்னக்கி மட்டுமே மட்டும்"



"முடியாது அஷ்வி" கறாராக அவன் கூறி விட முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு



"நா உன்கூட பேசுறதா இல்ல... நீயும் அந்த கமாண்டர் கூடவே இருந்து இருந்து அவன போலவே டெர்ரர் ஆபீஸர் ஆகிட்ட"



"கமாண்டர்?"



"வேற யாரு...உன் ஆருயிர் நண்பன் தான்..."



"அடிப்பாவி...ஆர்.கேயையா சொல்ற?"



"பின்ன?"



"இரு போட்டு குடுக்குறேன்"



"பரவாயில்ல... அப்பிடியாவது அவன் எப்பிடி இருக்கான்னு தெரிஞ்சிகட்டும்"



"அவன் இவனா?"



"அப்பிடியா சொன்னேன்... ஒரு ஃப்லோவுல வந்திருக்கும்"

என்றவளை முறைத்தவன்



"ஒரு ஃப்லோவுல... அதுவும் உனக்கு.... வரும் வரும்"



"அத விடுங்க சார்... என் கன்டிஷன் ஓகே தானே?"

"முடியாது ரிக்ஷி...ஒழுங்கு மரியாதயா வேலய கவனி"



"ப்ளீஸ் அண்ணா...ப்ளீஸ்...ப்ளீஸ்.. இனிமே இப்பிடி நடந்துக்க மாட்டேன்.. ப்ளீஸ்..." அவள் மறுபடி கெஞ்ச துவங்கி விடவும் வேறு வழியின்றி தலையாட்டி விட்டான்.



அபியையும் அழைத்துக் கொண்டு தன் டூவீலரில் ஏறியவள் நின்றவாறே தன்னவனுக்கு அழைப்பு ஏற்படுத்தினாள்.



"எஸ் அஷ்வினி?"



"தேவ் நா ப்ரண்ட்ஸ பாக்க போறேன்"



"வாட்...இந்த நேரத்துலயா?"



"ஆமா...ப்ளீஸ் தேவ்"



"அஷு வெளில நீ தனியா போறது சேஃப் இல்ல...போகாத"



"தேவ் ப்ளீஸ்...அபியும் கூட இருக்கா..."



"நோ அஷ்வினி சொல்றத கேளு"



"ப்ளீஸ் தேவ் இன்னக்கி மட்டும்"



"...."



"தேவ்"



"அப்போ நானும் வர்றேன்"



"நெஜமாவா?"கண்கள் மின்ன குதூகலித்தவள்



"ஓகே...நா உங்க ஆபீஸ் முன்னாடி வந்துட்றேன் நீங்க... பிக் அப் பண்ணிக்கோங்க....ஓகே?"



"ம்..ஓகே..பய்..."

என்றவன் கதிரை அழைத்து ஆபீஸை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு கீழே தன்னுடைய காருக்கு சென்று தன்னவளுக்காக காத்திருக்க துவங்கினான்.



சந்தோஷத்துடன் அதை அபியிடமும் பகிர்ந்து கொண்டவள் நேரே அவர் ஆபிஸுக்கு சென்றாள்.



...........



சம்யுக்தா ஹோட்டல்....



அஷ்வினியின் பக்கத்தில் கூலிங் க்ளாஸுடன் படு ஸ்டைலாக அமர்ந்திருந்தவனை அனைவரும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்....



இருக்காதா பின்னே???



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்..ஆர்.கே கண்ஸ்ட்ரக்ஷன்ஸ்...ஆர்.கே கார்மன்ஸ்...ஆர்.கே ஹை ஸ்கூல்... ஆர்.கே ஹாஸ்பிடல்... இப்படி எல்லா துறையிலுமே சர்வதேச ரீதியில் காலூன்றி இருக்கும் இன்றைய தலைமுறையின் ஹீரோ.. ரோல் மாடல்... வளர்ந்து வரும் இளம் தொழிலதிபன்....



அவனை பார்க்கவே அனைவரும் நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு இருக்க அவன் அவர்கள் முன்னால் சாதாரணமாக உற்கார்ந்திருந்தால் ஆச்சரியம் வராமல் என்ன செய்யும்???



இதில் உண்மையில் எதுவுமே தெரியாமல் அமர்ந்திருந்தது சாட்சாத் நம்ம அஷ்வினி அம்மையாரே தானுங்க!!!



அவளுக்கு அவன் பெயரை தவிர உறுப்படியாய் எதுவுமே தெரியாது... இதில் எங்கிருந்து இவ்வளவு பெரிய கோடிஸ்வரன் என்று அவளுக்கு தெரியும்???



அன்று கூட இப்படித்தான் அந்த ஹோட்டலிலும் வரவேற்பு கிடைத்தது... அதே போல் தான் இதுவும் என நினைத்துக் கொண்டாளோ!!!



அவளைத் தவிர அனைவரும் அவனையே பார்த்திருக்க இவள் மட்டும் காரியமே கண்ணாக தன் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக்கொண்டு இருந்தாள்....



அவனுக்கே அங்கிருப்பது சலிப்பை தரும் போல் இருக்க திரும்பி தன்னவளை பார்த்தவனின் இதழ்கள் அவளின் செய்கையில் தானாக மலர்ந்தது.



அவள் மீது அவனுக்கு பிடித்த செய்கை!!!!

தன்னலமில்லா அன்பு!!!!

அவனுக்கு மட்டுமே உரிய அன்பு!!!



அவளையே பார்த்திருந்தவனின் கண்களுக்கு ஃப்ளாஷ் லைட் படவும் உஷாரானான் ரிஷிகுமார் தேவமாருதன்!!!!



தொடரும்.......



15-04-2021.
 
Status
Not open for further replies.
Top