All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் 'கண்சிமிட்டும் தென்றலே (நீ வேண்டும் நான் வாழ பகுதி 2) கதைக்கான கதைத்திரி

Status
Not open for further replies.

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24027

கண்சிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 4





வைஷ்ணவி பயத்துடன் வெளியே வேடிக்கைப் பார்க்க யாதவோ தாடைகள் இறுக வாகனத்தை செலுத்தினான். அவளது பக்கமாவது அவன் திரும்பவில்லை. வெகு நேரத்திற்குப் பிறகு யாதவ் பல்லைக் கடித்துக் கோபத்தைக் கட்டுபடித்தி, "உன்னால ஒழுங்கா நடக்க முடியாதா? இப்படி தான் எங்கயாவது போய் இடிச்சிப்பியா? விஷ்ணு வேகமா டிரைவ் பண்ணி வந்திருந்தால் என்ன பண்ணிருப்ப?" என்று சீற அவள் பாவமாக முகத்தை வைத்து தலைக் குனிந்தாள்.


யாதவ், "இந்த சீனெல்லாம் என் கிட்ட வேணாம். மரியாதையா பதிலை சொல்லுடி" என்று கடுகடுக்க, "அது நான்..." என்று வார்த்தைகள் வாயில் இருந்து வெளிவராமல் நேரம் பார்த்து அவளை வஞ்சித்தது. 'ஐய்யோ தொண்டைக்கு மேலே வார்த்தை ஏற மாட்டேங்குதே. என்னக் கருமாந்திரமோ இந்த அயர்ன் மேனைப் பார்த்தாலே பேச வரமாட்டேங்குது. இந்த வார்த்தை வந்தால் தான் என்ன? ' என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.


"நான் உன் கிட்ட பதிலை கேட்டு ரொம்ப நேரமாச்சு" என்று அழுத்தமாய் கூற, 'நான் என்னடா வார்த்தை வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன். உன்னைப் பார்த்தாலே வார்த்தை வரமாட்டேங்குதே அயர்ன் மேன்' என்று மைன்ட் வொயிசில் பேசி அப்பாவியாய் அவன் முகத்தை ஏறிட்டாள். "நீயெல்லாம் திருந்தவே மாட்ட இடியட்" என்று ஓயாமல் அவளை திட்டித் தீர்த்தான்.


அவளுடைய வீட்டிற்கு முன் வண்டியை நிறுத்தியவன் அவளுக்கு இறங்க உதவி செய்ததோடு, நடக்கவும் உதவி செய்து வாசல் வரை அழைத்து வந்தான். தங்களது வீட்டிற்கு முன் வாகனம் நிறுத்தும் சத்ததில் பானுமதி வெளியே வந்தவர் தங்கள் இரண்டாம் மகளுக்கு நடக்க உதவியவாறு காக்கிச் சட்டையில் கம்பீரமாக வரும் யாதவை கண்கொட்டாமல் பார்த்தார்.


"அம்மா" என்று பல்லைக் கடித்து வைஷூ அழைத்த போது சுய நினைவு அடைந்தவர் தன்மகளை அப்போதே பார்த்துப் பதறி அருகே வந்தவர், "என்னடி ஆச்சு கை, கால் எல்லாம் அடிபட்டு இருக்கு?" என்று பரிதவிக்க, "உங்க பொண்ணோட கண்ணை முதல்ல போய் செக் பண்ணுங்க. ஒழுங்கா நடக்காமல் எதுலயாவது போய் இடிச்சிக்கிறது" என்று கோபமாய் திட்டி விட்டு சிறு தலையசைப்புடன் பானுமதியிடம் விடைப் பெற்றவன் வைஷூவை ஒரு முறை அழுத்தமாய் பார்த்து நகர்ந்தான்.


அவன் சென்றபிறகே இவளால் நிம்மதியாக மூச்சு விட முடியுமாக இருந்தது. ஆசுவாசமாக பெருமூச்சை வெளியிட்டபடி, "அம்மா இந்த அயர்ன் மேனை பெத்தாங்களா? இல்லை செஞ்சாங்களா? சிரிக்கவே தெரியாத ரோபோ போல இருக்காரு" என்று கறுவியவள், "அக்கா எப்படி இஞ்சி திண்ண மங்கி கூட காலம் கழிக்க போறாங்களோ!!! கிருஷ்ணா நீ தான் பார்த்துக்கனும்" என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.


"இந்த கேள்வியை நீ அவன் இருக்கும் போதே கேட்க வேண்டியது தானே?" என நக்கலாய் பானுமதி வினவ, "உனக்கு ஏன் மம்மி இந்த கொலைவெறி? நான் உனக்கு என்ன துரோகம் பண்ணேன்? எதுக்கு என்னை மாட்டிவிட முயற்சி பண்ணுற?" என்று படபடத்தாள். "நான் உன் கிட்ட ஒரு கேள்வி கேட்டேன். நீ பதில் சொல்லாமல் மூனு கேள்வி திருப்பி கேட்குற? எல்லாம் உன் அப்பன் புத்தி" என்று சலித்துக் கொண்டு நாசூக்காக கணவனையும் திட்டினார்.


வைஷூ, "நீ தைரியம் இருந்தால் இதை என்னை பெத்தவர் முன்னாடி சொல்லு பார்ப்போம்" என்று சவால் விட அவள் நடக்க உதவி செய்தவாறே, "அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு. இனிமேல் இதைப் பத்தி பேசக் கூடாது" என்று சமாதானக் கொடியை பறக்க விட்டார் பானுமதி.


"பாரேன் அப்பா பேச்சை எடுத்தாலே நீ வாயை மூடிடுற" என்று நக்கலாய் கூறி அவரின் தோளில் சாவகாசமாய் கையை விட்டு நடந்தபடி சோஃபாவில் அமர்ந்தாள். "அப்பா எங்க அம்மா?" என்று வினவ, "லைப்ரரியிற்கு போய் இருக்காரு. இப்போ அவரு வர நேரம் தான். நீ இங்க இருக்காமல் ரூமுக்கு வா. இல்லை, வருமே போதே அர்ச்சணை கிடைக்கும்" என்று அவளை அறையில் விட்டார்.


வைஷூ, "அம்மா நீ என்ன நடந்ததுன்னு கேட்கவே இல்லையே" என்க, "மித்ரன் திட்றான்னா கண்டிப்பா உன் மேலே தப்பு இருக்கும். விளக்கமா நைட்டுக்கு கதை கேட்குறேன். இப்போ நீ ரெஸ்ட் எடு" என்று நெற்றியில் இதழ்பதித்து அவளுக்கு காபி, ஸ்நெக்சை தயாரிக்கச் சென்றார்.


'இவளோ அக்காவோட மித்து மாமாவை கணிச்சி சரியா சொல்றவங்க அக்காவோட மித்து மாமா சனா விஷயத்துல அப்படி பண்ணதுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்னு ஏன் யோசிக்க மாட்டேங்குறாங்க. எனக்கே தோணுதே. கண்டிப்பா அவங்க பழிவாங்கினதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கும்னு' என்று யோசித்தாள்.


வசுமதி தனது ஸ்கூர்டியை வெளியே நிறுத்தி வீட்டிற்குள்ளே வரும் போதே, "அம்மா வைஷூ வந்துட்டாளா?" என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தாள். "ஆமா வசு. ஆனால் வரும் போது கை, காலில் அடிவாங்கிட்டு வந்திருக்கா. ரூம்ல இருக்கா. போய் பாரு" என்று அனுப்பி வைத்து தன் வேலையைக் கவனித்தார்.


வசு அவசரமாக உள்ளே வந்தவள் வைஷூ இருந்த நிலையைப் பார்க்கவே மனம் கணத்துப் போனது. கலங்கிய முகத்துடன் அவள் அருகில் அமர்ந்து, "என்னடி ஆச்சு?" என்று காயங்களை வருடத் தொடங்கினாள். "ஒரு முயல் ஓடிச்சு அக்கா. அதை பிடிக்க போய் விழுந்துட்டேன். அதாவது முசகுட்டி பிடிக்க போய் விழுந்துட்டேன்" என்று வசுவின் கலங்கிய முகம் பிடிக்காமல் அவளை திசை திருப்ப சிரியாமல் கூறினாள்.


அவளை முறைத்து தலையில் ஓங்கிக் குட்டிய வசு, "உன்னை எல்லாம் வாய் இல்லைன்னா நாய் தூக்கிட்டு போய் இருக்கும். அப்பா வந்தால் என்னடி சொல்லப் போற?" என்று பீதியைக் கிளப்ப, வைஷூ, "யக்கா நேக்கு ரொம்ப பயமா இருக்கு. ஏதாவது ஐடியா பண்ணேன். என்னால திட்டு வாங்க தெம்பில்லை" என்றவளின் குரலே உணர்த்தியது அவளின் சோர்வின் அளவை.


அதன் பின் நடந்த அனைத்தையுமே கூற வசு எதுவுமே கூறாமல் அமைதியாக இருந்தாள். வைஷூம், தமக்கையின் முகத்தையே பார்த்தாள்.


உடனே வசு கதையை மாற்ற, "நான் இருக்கிறதால அப்பா கிட்ட இருந்து நல்லா தப்பிக்கிறடி" என்றவள், "பிரஷ்ஷாக உதவி பண்ணட்டுமா? இல்லை நான் முதல்ல போய் பிரஷ்ஷாகட்டுமா?" என்றாள். "நீ முதல்ல போ. நான் அது வரைக்கும் ஏதாவது காரணம் கிடைக்குதான்னு யோசிச்சு பார்க்குறேன்" என வைஷூ யோசிக்க ஆரம்பித்தாள்.


வசுவும் குளித்து சுடிதாருக்கு மாறியவள் வைஷூவிற்கு உதவி செய்ய அவளும் குளித்து வந்தாள். வைஷூவின் தலையை வசு துவட்டி விட, "அக்கா நான் வாழைப்பழத் தோல் மேலே காலை வச்சி விழுந்துட்டேன்னு சொல்லட்டுமா?" என்று அறிவாளியாய்க் கேட்க, "கண்ணை எங்க வச்சிட்டு நடந்தன்னு லெஃப்டுல வாங்குவாரு?" என்றாள்.


"அப்போ கார் மேலே தப்பு. நான் சரியா போனேன்னு சொல்லட்டுமா?" என்று தான் அறிவு ஜீவி என நிரூபிக்க முனைய, "பொலிஸ்ல போய் கம்பிளைன்ட் பண்ணலாம்னு கூட்டிட்டு போவாரு. உன் மேலே தப்புன்னு தெரிஞ்சதும் லெஃப்ட் என்ட் ரைட் சேர்த்து வாங்குவாரு. மேடம்க்கு எப்படி வசதி?" என்று நக்கலுடன் வினவ, "வாயை மூடிட்டு திட்றதை வாங்கிக்கிறது பெடர்" என்றாள் வைஷூ.


வசு, "அதை தான் நானும் சொல்றேன். அவரு திட்றதை வாயை மூடிட்டு கேளு" என்று அறிவரை கூற மண்டையை ஆட்டினாள். சந்திரசேகர் உள் நுழையும் போதே, "பானுமதி" என கோபமாய் இரைந்தவாறே வந்தார்.


'ஆத்தி வரும் போதே ஹை டெம்பரேச்சர்ல வராறே. இன்னைக்கு நான் சிக்கன் சிக்ஸ்டி ஃபை ஆகுறது உறுதி. கிருஷ்ணா கொஞ்சம் உதவி பண்ணலாமே' .என மானசீகமாய் கிருஷ்ணனுடன் பேச்சு வார்த்தை நடத்தினாள். கிருஷ்ணா, 'அடபோமா எனக்கு டயர்டா இருக்கு. நான் ரெஸ்ட் எடுக்க போறேன்' என்றார்.


பானுமதி பவ்யமாக வந்து நின்றவர், "என்னாச்சுங்க?" என்று வினவ, "உன் இரண்டாவது பொண்ணு எதுக்கு அந்த மித்ரன் வண்டியில வந்தா? வெளியில தலைக்காட்ட முடியல்லை. என்ன சந்திரசேகர் உன் மூத்த பொண்ணுக்கு பேசி இருக்கிறவன் இரண்டாவது பொண்ணு கைபிடிச்சி கூட்டி வரான்னு கிண்டல் பண்றாங்க. என் மானத்தை வாங்குறா. எங்கடி அவ?" என்று ஆத்திரமாக காட்டுக் கத்தல் கத்தினார்.


இவ்வாறு ஒரு பேச்சை இவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்பதை இவர்களின் அதிர்ந்த முகமே காட்டிக் கொடுத்தது. வைஷூவிற்கோ அமிலத்தை எடுத்து தன் மேல் ஊற்றியது போல் துடித்துடித்துப் போனாள். வசு, "அப்பா" என்று சத்தமாகவே கத்தினாள். அவளுக்கே தந்தையின் பேச்சை சகிக்க முடியவில்லை.


வசு, "அசிங்கமா சொல்லாதிங்க அப்பா. வைஷூ குழந்தை மாதிரி அப்பா. இன்னிக்கு மித்துமாமா வைஷூவுக்கு அடிபட்டதால கொண்டு வந்து விட்டாரு" என்று இன்று அவளிற்கு நடந்த விபத்தைக் உரைத்தாள். சந்திரசேகரும் அதன் பின்னே ஆத்திரத்தில் பேசிய வார்த்தைகள் அதிகப்படி என்று உணர்ந்தார்.


மித்ரனின் செயலை இன்று வரை அவரால் ஜீரணிக்க முடியாமல் இருப்பதும், தன் மகளின் வாழ்க்கையுமே அவருடைய இவ் ஆத்திரத்திற்குக் காரணம். பெண் பிள்ளையை ஈன்றெடுத்தவரின் மனக்குமுறல்கள் அல்லவா இது? அமைதியான குரலில், "எங்கே அவ?" என்றார். பானுமதி, "ரூம்ல இருக்காங்க" என்று உரைக்க அவளது அறைக்கு விரைந்தார்.


கண்ணீர் தளும்பிய விழிகளை தலைக் குனிந்து மறைத்துக் கொண்டாள் வைஷ்ணவி. "சொரி வைஷூ. நான் அவன் வந்தாங்குற ஆத்திரத்துல பேசிட்டேன். எப்படி அக்சிடன் ஆச்சு?" என்று வினவ, "பரவால்லை அப்பா" என்று வலியுடன் புன்னகைத்தவள், "என் மேலே தான் தப்பு. ஏதோ நினைவுல கார்ல மோதிட்டேன்" என்று நடுங்கிய குரலில் கூறி அடுத்த திட்டிற்காக தலைக் குனிந்தாள்.


"இனிமேல் பார்த்துப் போமா" என்று ஆதூரமாய் தலையை வருடிவிட்டு தனது அறைக்குச் செல்ல அதிசயமாய் வசுவும், வைஷூவும் தந்தை சென்ற திசையைப் பார்த்தனர். அடுத்து நிச்சயம் திட்டுவார் என்று எதிர்பார்த்தால் அவர் கவனமாக இரு என்று அல்லவா அறிவுறுத்திச் செல்கிறார். இது இவர்களுக்கு அதிசயம் அல்லவா?


பானுமதி புன்னகையுடன், "இதான்டி உங்க அப்பா. படபடன்னு பேசுவாரு. மன்னிப்பு கேட்கனும்னா அதுக்கு தயங்கவும் மாட்டாரு. என்ன முன் கோவம் கொஞ்சம் ஜாஸ்தி. அவரும் நல்ல மனிஷன் தான். இப்போ ரூமுக்குள்ள போய் இப்போ பேசினதை நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருப்பாரு" என்று பெரு மூச்சை இழுத்து விட்டவர் சமையலறைக்குள் நுழைந்து காபியையும், ஸ்நெக்ஸையும் எடுத்து கணவனை சமாதானம் செய்ய அறைக்குள் நுழைந்தார்.


வசுவும், வைஷூவும ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தவர்கள், "எப்படியோ திட்டுல இருந்து தப்பிச்சிட்டேன்" என்று சந்தோஷத்துடன் மொழிய, "நான் சுனாமி, சூறாவளி, பூகம்பம் வரும்னு இல்லையா எதிர்பார்த்தேன்" என்றாள் கிண்டலாக.


"ஹாஹா அப்படி நடந்து இருந்தது, சூறாவளியில சுழன்றடிச்சு; சுனாமியில அலையில போய் மூழ்கி; பூகம்பம் வந்து; என் பொடி கடல்ல மிதந்து இருக்கும்" என்று வைஷூ உரைக்க, வசு சத்தமாக சிரித்தாள். அவளோடு வைஷ்ணவியும் துணை சேர்ந்துக் கொண்டாள்.


இவர்களின் சிரிப்பை பக்கத்து அறையில் இருந்து கேட்ட பெற்றோர்கள் இருவரும் இறுதி வரை இதே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள விதியோ இவர்களின் ஒற்றுமையைக் குழைத்து இருவரையும் பிரிக்கும் நாளிற்காக காத்துக் கொண்டு இருந்தது.


அன்று இரவே தனக்கு விபத்தானதை அபி, சனா இருவரிடமும் உரைத்து தன்னால் கல்லூரியிற்கு இரு நாட்களுக்கு வர முடியாது எனவும் கூறிவிட அவர்களும் இவளை திட்டி விட்டே ஆறுதல் கூறி அழைப்பைத் துண்டித்தனர்.


இரண்டு நாட்களுமே கால் வலியோடும், தன் அன்னையின் அன்பிலும், தங்கத்தின் ஆறுதல் பேச்சிலும், விஷ்ணுவுடனான சீண்டலிலும் உருண்டோட வைஷூ, வசுவிடமும் தன் பெற்றோர்களிடமும் காலேயில், "சனா இன்னிக்கு ஈவீனிங் உங்க எல்லோரையும் கூப்பிட்டு அவ வீட்டுக்கு வர சொன்னா. முக்கியமா உங்க கிட்ட பேசனுமாம். சாத்விக் அண்ணாவும் சொல்லி இருக்காங்க. உங்களால வர முடியுமான்னு கேட்டாங்க" என்று பவ்யமாய் உரைத்தாள்.


சந்திரசேகர், "எங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசனுமா? என்ன?" என்று வினவ, "தெரியல்லை அப்பா. நேர்ல பேசனும்னு சொன்னாங்க" என்றாள் தயங்கியவாறு. சிறிது நேரம் யோசித்தவர் வசு, பானுமதி இருவருமே அதே சிந்தனையிலேயே இருக்கின்றனர் என்பதைப் பார்த்து, "சரி மா ஈவீனிங் போலாம். நாங்க வரோம்னு சொல்லிரு" என்று வெளியே சென்றார்.


வசு, "எதுக்குடி வர சொன்னாங்க?" என்று வினவ, "எனக்கு என்ன தெரியும்? நானும் அங்கே போய் தான் பார்க்கனும்" என்று உரைத்து நொண்டியவாறே சுவரின் உதவியுடன் அறைக்குள் நுழைந்தாள்.


எதையுமே உளறக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள் வைஷ்ணவி. ஏனெனில் இன்று தமக்கையின் முகத்தில் தெரியவிருக்கும் மகிழ்ச்சியை குடும்பத்தோடு சேர்ந்து இரசிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.


வசு, "அம்மா நான் கோலேஜூக்கு போயிட்டு வீட்டுக்கு வரேன். அப்புறமா போலாம்" என்று தனது பேர்க்கை எடுத்து மாட்டி தனது ஸ்கூடரில் கோலேஜூக்கு பயணித்தாள். வைஷூ அறையில் சோம்பலுடன் அமர்ந்திருக்க அவளுக்கு போலி டாக்டரின் ஞாபகம் வந்தது.


அவனுக்கு அழைப்பை ஏற்படுத்த, விஷ்ணு அவனது அறையில் இரு சத்திரசிகிச்சைகளை முடித்து ஓய்வாக அமர்ந்து இருந்தான். யாதவிற்கும் நேரம் கிடைக்காததால் அப்போதே விஷ்ணுவை சந்திக்கக வந்தான். யாதவும் விஷ்ணுவுடன் அமர்ந்து இருப்பது வைஷூவிற்கு தெரியாதது அதோ பரிதாபம்.


விஷ்ணுவும் தனது மொபைலின் திரையில் விழுந்த 'வாயாடி' என்ற பெயர் விழுவதைப் பார்த்து யாதவைப் பார்த்தான். மறுபடியும் திரையைப் பார்த்து யாதவைப் பார்த்தான்.


யாதவ், "உன்னை கூப்பிடுறாங்க. பேசுடா! எதுக்கு என் மூஞ்சை பார்க்குற?" என்று கடுப்பாகிவிட, "உன் அத்தை பெத்த இரண்டாவது இரத்தினம் என்னை கூப்பிடுது" என்க, கண்களை சுருக்கி புருவம் இடுங்கியவன், "ஸ்பீகர்ல போடு" என்றான் யாதவ் உறுதியான குரலில்.


விஷ்ணுவும் நமட்டுப் புன்னகையுடன் அழைப்பை ஏற்க, "போலி டோக்டர் குட் மோர்னிங். நைட் டியூடி முடிச்சிட்டியா? சாப்டியா? ஆன்டி கூட பேசினியா? வீட்டுக்கு போயிட்டியா?" என்று கேள்விகளை அடுக்க, "நான் கோலிங் சென்டர் நடத்திட்டு இருக்கேன்னு நீ தப்பா நினைச்சிட்டு இருக்க வாயாடி! நான் ஒரு கைனர்கொலொஜிஸ்ட். இப்படி கோலிங் சென்டருக்கு கோல் போட்டு கேள்வி கேட்கறது போல கேள்வி மேலே கேள்வி கேட்கக் கூடாது" என்றான் கடுப்பாகவே.


"ஹிஹி நீ போலி டாக்டர்னு எனக்கு தெரியுமே தயிர்சாதம்" என தயிர்சாதத்தை அழுத்திக் கூற, "வாயாடி" என்று பல்லைக் கடித்தான். "இங்க பாரு நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லை. நீ கேள்வியை மறந்து இருப்ப நான் மறுபடியும் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறேன்" என்று மறுபடியும் ஆரம்பித்தாள்


"அம்மா தாயே உன்னை கையெடுத்து கும்பிடுறேன். என்னை விட்ருமா. எனக்கு காது நல்லா கேட்கும். ஞாபக சக்தியும் அதிகம். கொஞ்சமாச்சு ஒரு டாக்டர்னு மதிப்பு கொடுடி" என்று சத்தமாக அலறியவன், "நல்ல பையனை போட்டு இப்படி படுத்துறாளே" என்று புலம்ப, "அதான் எனக்கு தெரியுமே போலி டாக்டர், நீ ஒரு தயிர்சாதம்னு" என்றாள் வைஷ்ணவி.


யாதவிற்கு இவர்களின் சம்பாஷணைகளைக் கேட்டு இதழ்பிரியா புன்னகை தோன்றியது. இருந்தும் அதை வெளிக்காட்டாது தொடர்ந்து கேட்க ஆரம்பித்தான்.


"உலகத்துல எந்த டாக்டரும் இந்த அளவுக்கு கஷ்டபடமாட்டான்" என்று வாயிற்குள் முணுமுணுத்து, "நைட் டியூடி முடிஞ்சிருச்சி. இன்னும் சாப்பிட இல்லை. இன்னும் நான் வீட்டுக்கு போகவும் இல்லை. அம்மா கூட பேசவும் இல்லை" என்றான் பாவமாக.


வைஷூ கோபத்துடன், "அறிவிருக்கா போலி டாக்டர் உனக்கு? டைமைப் பார்த்தியா? ஒன்பது மணி. நைட்டியூடி முடிஞ்சி வீட்டுக்கு போகவும் இல்லை. நீ இன்னும் சாப்பிடவும் இல்லை. உனக்கு என்ன அவளோ நெட்டி முறிக்கிற வேலை?" என்று கோபமாக மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி பொரிந்துத் தள்ளினாள்.


யாதவ், 'நீ இவளோ பேசுவியா?' என்று வியப்புடன் ஒற்றைப் புருவம் ஏத்தினான். விஷ்ணு, "அது என்னைப் பார்க்க யா..." என்று சொல்லை முடிக்காமல் யாதவ் கூறாதே என்றதில் நிறுத்தினான். "என்ன இப்போ தான் உயிர்மெய் எழுத்து எல்லாம் படிக்கிறியா? யா, யூ ன்னு பேசுற? நான் அப்போவே சொன்னேன் நீ போலி டாக்டர்னு. பாரு நீயே அதை உறுதிபடுத்திட்ட" என்று அவள் இடத்திலேயே நின்றாள்.


அவன் பரிதாபத்துடன் யாதவைப் பார்க்க, கண்களாலேயே பேசு என்றான் அவன். "வாயாடி நான் ஒரு முதுமொழி சொல்லட்டா?" என்றவன் அவள் பதில் அளிக்கும் முன்னே, "அரச மீனுக்கும் அயிற மீனுக்கும் குளத்துல சண்டை. விலக்க போன சுறா மீனுக்கு உடஞ்சிருச்சி மண்டை" என்று, "இவங்க இரண்டு பேருக்கும் நடுவுல நான் மாட்டிட்டு முழிக்கிறேன்" என்று முணுமுணுத்துக் கொண்டான்.


"என்ன போலி டாக்டர் ஒரு மார்க்மா பேசுற? நீ தயிரசாதம்னும் தெரியும், போலிடாக்டர்னும் தெரியும். இப்போ தனே தெரியிது, நீ ஒரு அரை லூசுன்னு" என்று அவள் வாயில் கைவைத்தவள், "உன் கிட்ட வர பேஷன்ஸ் கிட்ட நான் இமீடியட்டா பேசனும்" என்று அவசரப்படுத்த, "விட்டா என் ஹொஸ்பிடலையே இழுத்து மூட வச்சிடுவ. வைடி போனை" என்று அலறிடியத்து பரத்தில் மொபைலை வைத்தான்.


விஷ்ணு நெஞ்சில் கைவைத்து, "என்னக் கொடுமைடா இது?" என்று புலம்ப இத்தனை நேரமாக அடக்கி வைத்திருந்த மொத்தச் சிரிப்பை வெடிக்கச் செய்ய அவ்விடமே யாதவின் வெடிச் சிரிப்பினால் எதிரொலித்தது.


விஷ்ணுவோ அவனை கோபமாக முறைத்தான். அவனது உள்மனமோ, 'நான் சிவனேன்னு தானேடா இருந்தேன். யார் வம்புதும்புக்காவது போனேனா? அப்புறம் ஏன்?' என்று பரிதாபமாக வடிவேலுபாணியில் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.


விஷ்ணு, "வாயை மூடுடா. நானே செம்ம கடுப்புல இருக்கேன். என்னை பீப்ல திட்ட வச்சிறாத" என்று கோபமாய் இரைய, "ஹாஹாஹா" என்றட சிரித்தவன் சிறிதளவு சிரிப்பை நிறுத்த விஷ்ணு பரதிபமாக அவனைப் பார்க்க மறுபடியும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.


விஷ்ணு, "மச்சி நானும் இந்த கதையோட ஹீரோடா" என்று அப்பாவியாய் உரைக்க, யாதவோ சிரிப்பை நிறுத்தியபாடு இல்லை. "நிஜமா நம்புடா. நான் ஹீரோடா!!" என்று கெஞ்சியவன், 'ஒரு பயலுமே நம்ப மாட்டேங்குறாங்களே!! இந்த சில்வண்டும் என்னை வச்சி செய்யுது. நாம அந்த அளவுக்கு காமடி பீசாவா இருக்கோம்' என்று மனதுக்குள் புலம்பி தலையில் கை வைத்து அமர்ந்தான்.


யாதவ் சிரிப்பை நிறுத்தாமல் இருக்க விஷ்ணு, "செகன்ட் ஹீரோக்கு அரை பைத்தியம்னு பட்டம் கொடுத்தாச்சு. அடுத்து நீ சிரிக்கிரதை பார்த்து முழுப்பைத்தியம்னு பட்டம் கொடுக்காமல் இருந்தால் சரி" என்று வெளிப்படையாக தலையிலடித்து அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்துக் கொள்ள வெகுவருடங்களுக்குப் பிறகு மனது விட்டு சிரித்ததில் யாதவின் மனது இலேசானது.


"நம்ம கிட்ட அந்த பம்மு பம்முவா! இப்போ வாயைத் திறந்தா மூடுறா இல்லை" என்று நினைத்தவன், "மச்சான் நான் போறேன்டா. எனக்கு வேலை இருக்கு" என்று குளாயலறைக் கதவின் அருகில் சென்று உள் நோக்கி கத்த, "அதான் வச்சு செஞ்சாச்சே. இனிமேல் என்னை அசிங்கபடுத்த ஒன்னும் இல்லை. போ போ" என்று கடுப்புடன் விரட்டியடிக்க சிறு சிரிப்புடனே அங்கிருந்து வெளியேறினான் யாதவ்.


வைஷ்ணவியோ வயிற்றைப் பிடித்து சிரித்தவள் தங்கத்திற்கு அழைத்து நடந்ததைக் கூறி சிரிக்க அவரும், அமரநாத்தும் சேர்த்தே சிரித்தனர். பானுமதியிடம் வைஷூ எதையுமே மறைக்காமல் கூறி இருந்ததால் அவர்களுடன் பேச அனுமதித்து இருந்தார். பானுமதியும் தங்கத்துடன் பேச அவரின் குணமும் பிடித்து இருந்ததால் இருவருக்கும் இடையில் மெல்லிய நட்பு இழையோடியது.


மாலை நேரம் வைஷூவின் குடும்பத்தினர் சொந்த வாகனத்தில் சனாவின் வீட்டிற்குச் செல்ல அங்கே நகுலனின் குடும்பத்தினரைப் பார்த்து முதலில் திகைத்தவர்கள் சாத்விக், சனா இருவருமே வாயிலிற்கு அருகே வந்து வரவேற்றதால் அவர்களை அவமானப்படுத்த முடியாமல் உள்ளே நுழைந்தனர்.


அவர்களுக்கு இடையே பேச்சு வார்த்தை ஆரம்பிக்க இடையில் வைஷூ பேச வேண்டிய சூழ்நிலை உருவாக அவள் பேசும் போதே சனாவின் கோரிக்கைக்கு இணங்கி யாதவ் வருகை தந்து இருந்தான். அவள் கூறியதைக் கேட்ட யாதவ் அதிர்ந்து இருக்க புருவங்கள் இரண்டும் வியப்பில் ஏறி இறங்கியது....



தொடரும்...






மக்களே அடுத்த பதிவில் திருமண வைபவங்கள் ஆரம்பிக்கப்படும். மறக்காமல் வந்து திருமணத்துல கலந்துக்கொங்க... 🤵🏻👰🏻





கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்






 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24100



கண்சிமிட்டும் தென்றலே





அத்தியாயம் 5





வைஷ்ணவி மற்றும் வசுமதி அவர்களின் பெற்றோரும் உள் நுழைந்து வரவேற்பரையில் அமர அங்கே சங்கடமான ஒரு சூழ்நிலை ஆட்கண்டது. அனைவருமே தயங்கியபடி இருக்க சனா, "அப்பா வைஷூ முயல் பிடிக்க போய் விழுந்துட்டா" என்று அவள் காயங்களைக் காட்டி வாயைப் பொத்தி நமட்டுப் புன்னகையை சிந்த நகுலின் குடும்பத்தினர் அப்போதே அவளின் காயத்தினைப் பார்த்தனர்.



நகுலின் தாய், "வைஷூ என்னாச்சுமா? பார்த்து இருக்க மாட்டியா?" என்று பதபதைப்புடன் அவளின் அருகில் அமர்ந்து காயங்களை ஆராய, "சின்ன காயம் தான் அத்தை. சீக்கிரம் சரியாகிடும்" என்று புன்னகைத்தாள். "பார்த்து போக மாட்டியா?" என்று வாஞ்சையாய் தலை வருட, "கண்ணை பின்னாடி வச்சி நடந்தால் இதான் நடக்கும்" என்று நொடித்துக் கொண்டாள் அபி.


சூழ்நிலை ஓரளவு சகஜமாக சனா, "நான் உங்க எல்லோரையுமே கூப்பிட்டது ஒரு முக்கியமான விஷயம் பேச தான். எத்தனை நாளைக்கு தான் நாமளும் வசு அண்ணியைப் பத்தி பேசாமல் இருக்கிறது. அவங்களோட வாழ்க்கை மட்டுமில்லை மித்து அண்ணாவோட வாழ்க்கையுமே இதுக்குள்ள அடங்கி இருக்கு" என்க வசுமதியின் தந்தை பேச முனைந்தார்.


சனா, "அங்கிள் பிளீஸ் நான் பேசி முடிக்கிறேனே" என்றவள் கெஞ்சல் பார்வையை செலுத்த ஓரளவு மனமிறங்கினார். "வாழ்க்கையில தப்பு பண்ணாதவங்க யாருமே இல்லை. தப்பு பண்ணவங்களை நாம ஒதுக்கி வச்சோம்னா அவங்க இன்னும் தப்பை அதிகமா செய்வாங்க. ஆனால் மித்து அண்ணா அப்படி கிடையாது.அவரு நிச்சயமா இன்னொரு தப்பு பண்ண மாட்டாரு.


எப்போவுமே எனக்கு அநியாயம் நடந்திருச்சேன்னு கில்டியா ஃபீல் பண்ணிட்டு இருக்காரு. ஒரு வாய்ப்பு அவருக்கு கொடுக்கலாமே. அண்ணாவை நானே மன்னிச்சிட்டேன். உங்களால மன்னிக்க முடியாதா? கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமா வசு அண்ணி கண்டிப்பா மித்து அண்ணாவை வழி தவறி போக விடமாட்டாங்க" என்று தான் கூற வந்ததை பிசிர் தட்டாத தெளிவான குரலில் கூறி முடித்தாள்.


வசுமதியின் தந்தை, "நீ சொல்றது உண்மை தான் மா. ஆனால் என் பொண்ணு வாழ்க்கை இதுல அடங்கி இருக்கு. அவன் மறுபடியும் தப்பு பண்ண மாட்டான்னு என்ன உறுதி? தன்னோட கூட பிறந்த பொண்ணும் இருக்கான்னு தெரிஞ்சும் இன்னொரு பொண்ணை பழிவாங்க யூஸ் பண்ணி இருக்கானே. அதை என்னால மன்னிக்க முடியல்லை" என்று கரகரப்பான குரலில் உரைத்தார்.


அங்கே நிசப்பதம் நிலவ வைஷூ, "பெரியவங்க பேசும் போது சின்னவ நான் பேச கூடாது. இருந்தாலும் என் மனசுல பட்டதை சொல்றேன். அக்காவோட மித்து மாமாவை சின்ன வயசுல இருந்து உங்க எல்லோருக்குமே பிடிக்கும். அவரு மேலே நம்பிக்கை அதிகம். அப்படி பட்ட நீங்க அவரு இப்படி பண்ணதுக்கு ஒரு நியாயம் இருக்கும்னு ஏன் நீங்க நம்பமாட்டேங்குறிங்க?" என்றாள்.


வசுமதியின் தந்தை சந்திரசேகரின் பேச்சின் இறுதியில் வந்த யாதவின் தாடை இறுகி முகம் பாறையென காட்சியளிக்க அமைதி அங்கே நிலவியதும் இன்னும் தன்னை இறுக்கிக் கொண்டான். ஆனால் வைஷ்ணவி பேச ஆரம்பித்ததும் தனக்கு எதிராகவே அவள் பேசுவாள் என அவன் நினைக்க அவளோ யாதவிற்கு ஆதரவாக பேசியதை எதிர்பார்க்கவில்லை.


வைஷ்ணவியின் கூற்றில் முகம் விகசிக்க வியப்பில் அவனுடைய புருவங்களை ஏற்றி இறக்கினான். இளகிய முகத்துடன் உள்ளே யாதவ் உள்ளே நுழைய அதுவரை அவனுக்கு சாதகமாகப் பேசிய வைஷூவின் இதழ்கள் இறுக்கமாக மூடி அவன் இருந்த திசைப் பக்கமும் திரும்பாமல் சனாவின் புறம் திரும்பிக் கொண்டாள்.


யாதவும் மௌனமாக சாத்விக்கிற்கு அருகே இருந்த இருக்கையில் அமர சாத்விக், யாதவ் இருவருமே ஒருவரை ஒருவர் முறைத்து வேறு புறம் திரும்பிக் கொண்டனர். சனா, "அண்ணா நாங்க உங்க கல்யாணத்தைப் பத்தி பேசிட்டு இருந்தோம்" என்று சனா பேசியவற்றை மறுபடியும் உரைத்தாள்.


யாதவ் படு கூலாக, "உனக்கு இஷ்டம்னா பண்ணுடா. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு கன்டிஷன் என் வேலை விஷயத்துல யாரும் தலையிடக் கூடாது" என்று மொபைல் நோண்ட ஆரம்பித்தான். சாத்விக், 'திமிரு. உடம்பு பூரா கொழுப்பும், திமிரும் ஜாஸ்தியா இருக்கு' என கடுப்புடன் முணுமுணுக்க அவனைப் பார்த்த யாதவ், "உன்னை விட குறைவு தான் ப்ரவீன்" என்று தன் முகத்தை மொபைலில் புதைத்தான்.


'இவனை' என்று பல்லைக் கடிக்க மட்டுமே சாத்விக்கினால் முடியுமாக இருந்தது. யாதவிற்கு எதிராக ஒரு சிறு துரும்பையும் அவன் அசைக்காதிருப்பதற்கு ஒரே காரணம் அவனின் ஜானு. அவளை மீறி அவனால் நிச்சயமாக எதையுமே செய்ய முடியாது. அவள் வருந்தினால் காயப்படுவது இவன் அல்லவா?


சந்திரசேகரும், யாதவின் தந்தையும் இவனின் பதில் கடுப்பாகிவிட நகுலனே இவர்களை சமாதானம் செய்தான். அஞ்சலி யாருக்கு விருந்தோ என்ற வகையில் நின்று இருக்க மற்ற பெண்கள் யாதவின் சம்மதத்தில் திருமண வேலைகளைப் பற்றி சலசலக்க ஆரம்பித்தனர். வசுமதியின் முகத்தில் வெகுநாட்களாக தொலைந்திருந்த பிரகாசம் இன்று திரும்பி வந்திருந்தது.


சனா, அபியும் விசாலாட்சியும் அனைவருக்கும் காபியும், ஸ்நெக்சும் தயாரிக்க சமையிலறைக்குள் புகுந்துக் கொள்ள மற்ற பெண்களும் வளவளத்தவாறே அவர்களுக்கு உதவி செய்வதற்காகச் சென்றனர். வசுவை பரிதாபமாக வைவஷூ பார்க்க, சிறு சிரிப்புடன் அவளை உணவு மேசைக்கு அழைத்துச் சென்றாள்.


வைஷூவிற்கு காலில் இருந்த வீக்கம் இவள் அதிகளவு நடந்ததால் அதிகரித்து இருக்க, மெதுவாக காலை எடுத்து தன் மடியில் வைத்து அழுத்தினாள். நேற்றைய நாளை விட வலியும் அதிகரித்து இருந்தது. முகம் சுருக்கி வலியைப் பொறுத்தவள் விஷ்ணுவிற்கு அழைத்தாள்.


விஷ்ணு தன்னுடைய ரவுன்ஸை முடித்து தனது அறையை நோக்கி நடக்க வைஷூவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அவன் அழைப்பை ஏற்று "சொல்லு வாயாடி" என்று உரைக்க, "டிஸ்டர்ப் பண்ணிட்டேனா போலி டாக்டர்?" என்று சோர்வான குரலில் வினவ, "இல்லை வாயாடி. ஏன் என்னாச்சு? குரலெல்லாம் ஒரு மாதிரி இருக்கு" என்று கேட்டான்.


"போலி டாக்டர் கால் வீங்கிருச்சு. வலியும் இருக்கு. என்ன பண்ணட்டும். டெப்ளட்டும், கிரீமும் கொடுக்குறியா? ரொம்ப வலிக்குது" என்று உரைக்க, "அச்சோ என்னால இப்போ எங்கேயும் வர முடியாதே வைஷூ. இன்னும் ஹாஃப் எனவர்ல எனக்கு ஒபரேஷன் இருக்கு. சோ வரமுடியாதுடா. சோ சொரி. நீ இங்கே வரியா?" என்று கவலையாகக் கேட்டான்.


"நான் அம்மாவை கூட்டிட்டு வரேன். நேத்து அதிகமா நடந்துட்டேன் போலி டாக்டர்" என்று வலியைச் சுமந்த குரலில் உரைக்க, "சரி வா. நான் வெயிட் பண்றேன்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் விஷ்ணு. அதே இடத்தில் அமர்ந்து "அம்மா" என்று கத்தி அழைக்க அவரும் மகளின் குரல் கேட்டு அங்கே ஓடி வந்தார்.


பானுமதி, "என்னடா ஆச்சு வைஷூ?" என்று பதறிய குரலில் வினவ, "எனக்கு ரொம்ப கால் வலிக்குது அம்மா. தயிர்சாதம் கிட்ட பேசினேன் இப்போவே ஹொஸ்பிடலுக்கு வர சொன்னான். நானும் நீயும் போயிட்டு வரலாமா?" என்று பாவமாய் வினவினாள். மற்ற பெரியவர்களும் அங்கே வர, "நீ போயிட்டு வா பானுமதி. நாங்க கல்யாண வேலைகளைப் பத்தி பேசுறோம்" என்று சம்மதித்தார்கள்.


வைஷ்ணவி, "அக்கா கல்யாணத்தை பத்தி முடிவு எடுக்கும் போது நீ இருக்கனும். இல்லன்னா நல்லா இருக்காது. அக்கா கல்யாணத்தைப் பத்தி பேசிட்டு அப்புறமா ஹொஸ்பிடல் போலாம்" என்று முடிவாய் உரைக்க, சாத்விக் சனா, "நாங்க இவளை ஹொஸ்பிடல் கூட்டிட்டு போறோம்" என்றனர்.


அனைவருமே அதுவே சரியென்று சம்மதிக்க சனாவும், சாத்விக்கும் வைஷூவை விஷ்ணுவின் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். விஷ்ணுவை சாத்விக், சனா இருவருக்கு அறிமுகம் செய்ததோடு அவனுக்கு மற்ற இருவரையும் அறமுகம௲ செய்து வைத்தாள் நம்நாயகி.


வைஷூவின் காலைப் பரிசோதித்து பென்டேஜ் இட்டவன், "பயப்பட ஏதும் இல்லை. நீ நடக்காமல் ஒரே இடத்துல உட்காரு வாயாடி. இல்லைன்னா கால் வலிக்கும். உன்னோட வீக்கம் குறையுற சந்தர்பத்துல அதிகமா நடந்ததால மறுபடியும் கால் வீங்கிருச்சு. வாயை மூடிட்டு மூனு நாளைக்கு ஓரே இடத்துல உட்காரு" என்று அக்கறையுடன் கடிந்தான்.


வைஷூ, "உனக்கே இது ஞாயமா இருக்கா போலிடாக்டர்? அக்கா கல்யாணமும் நெருங்குது. அதுக்குள்ள என்னை ஒரே இடத்துல உட்கார சொல்ற? இது எப்படி முடியும்?" என்று பாவமாய் முகத்தை வைத்து வினவ, "அக்கா கல்யாண நேரம் ஓடியாடி வேலை செய்யனும்னா இப்போ ஒரே இடத்துல உட்காரு. தெட்ஸ் இட்" என்று முடித்தான்.


சாத்விக், "நீ இவளோ பேசுவியா?" என்று வியப்புடன் வினவ, விஷ்ணு, "எஸ்.பி சேர் இவ பேச ஆரம்பிச்சா காதுல இரத்தம் வராத குறை. இவ கிட்ட மாட்டிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. ஐயய்யோ!!! முடியல்லை" என்று வராத கண்ணீரை துடைத்தான்.


சாத்விக் புன்னகையுடன், "என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க" என்க, "ஒகே ப்ரவீன்" என்றான் விஷ்ணு. சனா, "ஆமா சவீன். அவ பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டா" என்று நமட்டுப் புன்னகையைச் சிந்த, "அப்போ வீட்ல நீ அதிகமா பேசினதை நான் பார்த்தது இல்லையே" என்றான் யோசணையாக.


"உஃப்" என்று பெருமூச்சை வெளியிட்ட வைஷூ, "அந்த சோகத்தை ஏன் கேட்குறிங்க?" என்று தாடையில் கைவைத்தவள், "அப்பா மேலே மரியாதை கலந்த பயம். அவரு இருக்கும் போது சேட்டை பண்ணாமல் நல்ல அமைதியான பொண்ணா இருப்பேன். அடுத்து உங்க ஃபிரன்டு ஓர் எதிரி மித்ரன். வட்டெவர்!!!


அவங்களைப் பார்த்தாலே எனக்கு பேச்சு வராது. என் தொண்டையே எனக்கு சதி செய்யும். இதுல நான் எங்க பேசுறது. அவரை பார்த்தால் ஒரு பயமும் ஓஃபரா வருது. அதான் அவங்க இருக்கிற பக்கமும் போகாமல் அமைதியா ஒதுங்கிருவேன். இப்போ சொல்லுங்க நான் எப்படி பேச?" என்று சலித்துக் கொண்டாள்.


"ஹாஹாஹா" என்று மூவரும் சத்தமாகவே சிரிக்க கடுப்பாகிய வைஷூ, "போதும். சிரிச்சது. வீட்டுக்கு போய் அங்கே என்ன வேலை நடக்குதுன்னு பார்க்கலாம். தயிர்சாதம் அக்கா கல்யாணத்துக்கு மறக்காமல் வந்துரு. புரிஞ்சிதா?" என்று கூறி எழுந்துக் கொள்ள சனா அவளுக்கு நடக்க உதவி செய்தாள். சாத்விக் விஷ்ணுவுடன் நட்புடன் பேசி விட்டே அங்கிருந்து வெளியாகினான்.


அவர்கள் வீட்டிற்குச் செல்லும் போது இன்னும் பதினைந்து நாட்களில் நல்ல முகூர்த்தம் இருப்பதால் அப்போதே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் முன்னைய தினத்தில் மருதாணி விழா, நலங்கு வைபவத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு எடுத்து இருந்தனர்.


மண்டபத்தில் திருமணத்திற்கு உறவினர்களை மாத்திரம் அழைப்பதோடு ரிசப்ஷனை சற்று பிரமாண்டமாக தொழில் வட்டாரங்கள், கல்லூரி நட்புகள், வசுமதியுடன் வேலைபுரிபவர்கள், யாதவுடன் வேலைப்புரிபவர்களை அழைக்கலாம் என்று ஒருமித்து முடிவெடுக்க அனைவருமவ திருப்தியாய் மனம் நிறைந்த பூரிப்புடன் நின்று இருந்தனர்.


வசுமதியின் பார்வை இடையிடையே யாதவை தொட்டு மீண்டாலும் யாதவ் அவள் புறம் திரும்பவே இல்லை. அவன் ஏதோ ஒரு யோசணையிலேயே இருந்தான். அவளும் அவனைத் தொல்லை செய்யவில்லை. வைஷூ வீட்டிற்கு வந்த பிறகு மூவரிடமும் திருமணத்தின் முடிவுகளைக் கூற முகம் கொள்ளாப் புன்னகையுடன் நின்று இருந்தனர் மூவரும்.


நாட்களும் உருண்டோட திருமண வேலைகள் பரபரப்பாக நடந்தேறியது. சாத்விக், கார்த்திக், அபி, சனா என அனைவருமே வசுமதியின் குடும்பத்திற்கு உதவி புரிய நகுலின் குடும்பத்தினர் ஊரில் மும்முரமாய் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தனர். வைஷூவிற்கும் கால் வீக்கம் குறைந்து சாதாரணமாக நடக்க ஆரம்பித்து இருந்தாள்.


வசுமதி திருமணக் கனவுகளில் மிதக்க யாதவோ தன்னுடைய வழக்கைப் பற்றி தேடித் திரிந்தான். அவனுக்கா திருமணம் என்ற வகையில் நடந்துக் கொண்டான். அன்று இரவு உறங்கும் போது, தன்னுடைய பர்சில் வைத்து இருந்த தங்கத்தாலியை வெளியே எடுத்து வெறித்துப் பார்த்தான்.


"இதை என் சம்பாத்தியத்துல வாங்கினேன். நான் கல்யாணம் பண்ணும் போது இந்த தாலியை என் மனைவிக்கு கட்டனும்னு நினைச்சேன். ஆனால் அதுக்கு எனக்கு வழியில்லாமல் போச்சு" என்று தனக்குள் நினைத்தவன் பெருமூச்சை வெளியிட்டு அதை மறுபடியும் தனது பர்சிற்குள் வைத்துக் கொண்டான் யாதவ்.


இதே தாலியையே தன் துணையாக வாழ்வின் இறுதிவரை கைக்கோர்க்கப் போகும் பேதைக்கு அணிவிக்கப்போகிறான் என்பதை அவன் கிஞ்சித்திற்கும் நினைத்து இருக்க மாட்டான். நாம் நினைக்காததை நடத்திக் காட்டுவதே விதியின் மதி அல்லவா?


சுபயோக தினத்தில் இருவீட்டாரும் ஆடைகள் நகைகள் போன்றவற்றை வாங்கி இருக்க யாதவோ எதிலும் பங்கு கொள்ளவில்லை. இவ் வழக்கைப் பற்றி அனைவருமே அறிந்து இருந்தமையால் அவனைத் தொல்லை செய்யாது தங்கள் வேலைகளைக் கவனித்தனர்.


மனதின் ஓரத்தில் சிறு சுணக்கம் வசுமதியிற்கு இருந்தாலும் வைஷூ, அபி, சனாவின் கேலிப்பேச்சுகள் அவற்றை மறக்கச் செய்து வெட்கமுறச் செய்தன. அவளும் யாதவின் வேலையை முன்னிறுத்தி கல்யாண வேலைகளில் தன் கவனத்தை திசைத் திருப்பிக் கொண்டாள்.


நிலவுக்கு ஓய்வு கொடுத்து பகலவனை ஆர்வமுடன் எதிர் நோக்கும் விறுவிறுப்பான விடியலில் வசுமதியின் வீட்டில் அனைவருமே மும்முரமாக வேலையில் ஈடுபட்டு இருந்தனர். இன்று மருதாணி விழா என்பதற்காக அனைத்து வேலைகளும் தடல்புடலாக நடந்து ஏறின.


வீடு முழுவதுமே பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. நலங்கு வைபம் மருதாணி விழா முடிந்தவுடன் நடைப் பெற இருந்தது. நாளைக் காலை சுபமுகூர்த்தத்தில் திருமணம் என்ற நிலையில் இருப்பதால் மலமல என்று அனைத்து வேலைகளையும் வேகமாக அனைவருமே செய்தனர்.


மருதாணி விழாவைக் கொண்டாட அனைவருமே மண்டபத்தை தெரிவு செய்து இருக்க அங்கேயே சொந்தபந்தங்கள் தொடக்கம் நெருங்கிய வீட்டினர் வரை அனைவருமே வருகை தந்து இருந்தனர்.


வசுமதியை ஒரு இருக்கையில் அமர வைத்து ஒரு கையில் சனா யாதவின் தங்கை முறை என்பதால் மருதாணி இட மறு கையில் பாலர் பெண் மருதாணி இட்டனர். அபி, வைஷூ இருவருமே


"இதுதானா? இதுதானா? எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?" என்ற பாடலுக்கு நடனமாட ஆரம்பித்தனர்.


சாத்விக் ஒரு தூணில் சாய்ந்து தன்னவளை இரசித்து இருக்க தன்னை விழுங்கும் பார்வையை உணர்ந்த சனா செல்ல முறைப்புடன் சாத்விக்கைப் பார்த்தாள். அவன் உதடு குவித்து முத்தமிட்டு கண்சிமிட்ட குப்பென்று சிவந்த தன் முகத்தை மறைக்க படாதபாடு பட்டாள் சாத்விக்கின் ஜானு.


அபி நடனமாடுவதை இரசித்து இருந்த கார்த்திக் இடையில் நுழைந்து அவளோடு ஆட வைஷூ மெதுவாக அங்கிருந்து விலகி இருவரின் நடனத்தையும் இரசிக்க ஆரம்பித்தாள். சனா, "வைஷூ அக்காவுக்கு ஜூஸ் கொண்டு வா" என்று அனுப்பி வைக்க, அங்கிருந்து வேகமாக ஓடியவள் யார் மேலோ மோத கனல் கக்கும் விழிகளுடன் அவளை முறைத்து இருந்தான் யாதவ்.


பயத்தில் எச்சிலை விழுங்கி வெளிறிய முகத்துடன் அவனைப் பார்த்தாள் யாதவின் வைஷ்ணவி....




கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்



 
Last edited:
Status
Not open for further replies.
Top