All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் 'கண்சிமிட்டும் தென்றலே (நீ வேண்டும் நான் வாழ பகுதி 2) கதைக்கான கதைத்திரி

Status
Not open for further replies.

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26420



கண்சிமிட்டும் தென்றலே


அத்தியாயம் 23



விஷ்ணு தன்னருகில் நின்று மணமக்களைப் பார்க்கும் தன் மனைவி மீது ஒரு கண்ணையும் மணமக்கள் மீது ஒரு கண்ணையும் வைத்திருந்தான். சில நொடிகள் கடக்க விஷ்ணு, "வா போலாம் வசு. அவங்களுக்கு விஷ் பண்ணலாம்" என்று உரைத்து அவளுடைய கரங்களைப் பற்றி யாதவ், வைஷூ இருக்குமிடத்திற்கு பரிசோடு அழைத்துச் சென்றான்.



வைஷூ தன்னை நோக்கி வருகை தரும் வசுமதியைப் பார்த்து தடுமாறி யாதவின் கரங்களை இறுகப் பற்ற அவளுடைய பற்றுதலின் அழுத்ததிலேயே அவர்களை நோக்கி வரும் ஜோடியைப் பார்த்தான்..


விஷ்ணு, "கங்கிராட்ஸ் மச்சான், கங்கிராட்ஸ் வாயாடி" என்று புன்னகையுடன் பரிசை நீட்ட, யாதவ் "தேங்கியூ மச்சான். உனக்கும் புதுசா கல்யாணம் ஆகி இருக்கு. அதனால சேம் டு யூ" என்று வசுமதியிற்கும் தனக்கும் உறவேதும் இல்லை என்பதையும் அழகாய் உணர்த்தினான்.


வைஷூவும் புன்னகை மாறா முகத்துடன் அவன் வழங்கிய பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டாள். வசுமதியும் அமைதியாய் இருக்காது, "கங்கிராஜூலேஷன்ஸ் போத் ஒஃப் யூ" என்று உரைத்து முடித்து விஷ்ணுவின் வதனத்தைப் பார்க்க, அவள் சங்கடமாக உணர்வைப் புரிந்துக் கொண்டவனும், "ஒகே மச்சான் நாங்க மத்தவங்களுக்கு வழிவிடுறோம்" என்று கூறி தன் மனைவியுடன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.


அடுத்தடுத்து ஒவ்வொருவராய் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து பரிசுப்பொருட்களையும், ஆசிர்வாதங்களையும் வழங்கிச் சென்றனர். யாதவின் குடும்பமும், வைஷூவின் குடும்பமும் கூட அவர்களுக்கு வாழ்த்தை தெரிவித்தனர் நன்நாளில் மணமக்களின் மனதை நோக வைக்காது.


அன்றைய நாளும் அழகாய் முடிய கார்த்திக், சாத்விக் இருவருமே முன்நின்று யாதவ், வைஷூவின் பார்ட்டியை அழகாய் முன்நின்று நடத்திக் கொடுத்து மணமக்களுக்கு வாழ்த்தை தெரிவித்து தங்கள் வீடுகளை நோக்கிச் சென்றனர்.


நகுலன் அங்கே வைத்து கார்த்திக்கிற்கு அஞ்சலியை புதிதாக அறிமுகப்படுத்தப்பட௲டு இருந்த கருதரிப்பு மையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைப் பெறுவதற்காக அனுமதியை வாங்கி கொடுத்ததிற்காக நேரிலும் நன்றியைச் செலுத்தா அஞ்சலியிற்கு கருதரிக்க வாய்ப்பு சிகிச்சையை வழங்கினால் கிடைக்கும் என்று கூறியதாகவும் மொழிந்தான்.


அதை அறிந்த கார்த்திக், சனா, அபி, சாத்விக்கும் பகைமை பாராட்டாது நகுலனின் நல்ல மனதிற்காக நல்லதே நடக்க வேண்டும் என்று மனதாற வேண்டிக் கொண்டனர்.


அபி, கார்த்திக், விசாலாட்சி மூவருமே வீட்டிற்கு மிகுந்த களைப்புடனேயே வருகைத் தந்தனர். விசாலாட்சி தன்னைச் சுத்தப்படுத்தி ஓய்வெடுக்கச் செல்ல அபியும், கார்த்திக்கும் தங்கள் அறையில் ஓய்வெடுத்தனர். அபி, "இன்னிக்கு மித்து அண்ணா, வைஷூ முகத்துல ஒரு நிறைவை பார்த்தேன் மாமா. எனக்கு அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருந்தது" என்று திருப்பதியான குரலில் முடித்தாள்.


அபி கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இன்றைய நாளை நினைததுப் பேச தலையை துவாயினால் துவட்டிய கார்த்திக் இதழ் விரிந்த புன்னகையுடன் துவாயை விரித்துப் போட்டவன் அவள் மடியில் தலை வைத்துப் படுத்து அவள் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டான்.


கார்த்திக், "நானும் அதைப் பார்த்தேன் நயா. எனக்கும் சந்தோஷமா இருந்தது. இத்தனை நாளா வைஷூ நொந்து போய் இருந்ததுக்கு இன்னிக்கு சந்தோஷமா அவளை பார்க்கும் போது மனசுக்கு நிறைவா இருந்தது. அதுவும் ஐ.ஜியையும், அவரோட மனைவியையும் அப்பா, அம்மான்னு அவ உரிமையா பேசும் போது அவங்களுமே சந்தோஷப்பட்டாங்க" என்றான் தான் கவனித்ததை.


"ஆமா மாமா" என்றவள் அவன் தலைக் கோத சில நொடிகளிலேயே அச்சுகத்தில் கண்ணயர்ந்தான் கார்த்திக். அவனை தலையணையில் ஒழுங்காக உறங்க வைத்து அவனை அணைத்தவாறே அபியும் உறங்கிப் போனாள்.


சனா, சாத்விக் இருவருமே தங்கள் வீட்டை அடைந்து இன்றைய நாளின் சந்தோஷமான விடயங்களைப் பகிர்ந்தவாறே ஒருவரை ஒருவர் அணைத்து பல்கனியில் அமர்ந்து இருந்தனர். சனா, "நகுல் மாமா குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னதும் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் சவீன். அவருக்கு குழந்தைகங்கன்னா ரொம்ப பிடிக்கும். ஆனால் ஏன் தான் இவளோ நாளா கடவுள் இப்படி பண்ணாருன்னு தெரியல்லை" என்றாள் வருத்தத்துடன்.


சாத்விக், "இப்போ சந்தோஷத்தை கொடுத்து இருக்காறே அதுக்கு சந்தோஷப்படு. எனக்கு அஞ்சலி மேலே கோபம் இருக்கு. அவ பண்ண தப்புக்கு தண்டனை கொடுக்கனும். ஆனால் அவளுக்கு தண்டனை கொடுக்கனும்னு நினைச்சாலே கண்ணு முன்னாடி நகுல் வராரு" என்று பெருமூச்சை வெளியிட்டு வானத்தை வெறித்தான்.


சனா, "இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல்லை காட்டுப்பையா" என்று அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொள்ள சாத்விக், "ஜானு இன்னிக்கு மித்ரன் முகத்துல தெரிஞ்ச சந்தோஷத்தைப் பார்த்தியா?" என்று அவள் தலை வருடியவாறே கேட்டான்.


சனா சிரிப்புடன், "ஏன் இதுக்கு முன்னாடி மித்து அண்ணா சந்தோஷமா இருந்தது இல்லையா?" என்று வினவ, "அவனுக்கு வசுமதி கூட நிச்சயம் நடந்தப்போ இந்த சந்தோஷத்தை நான் அவன் முகத்துல பார்க்கவே இல்லை. அவ கூட கல்யாணம்னு நான் சொன்னப்போ எல்லாம் அவன் முகமே இறுகிப் போயிரும்.


ஆனால் அவன் வைஷூவை கல்யாணம் பண்ணதுல ரொம்ப சந்தோஷமா இருக்கான். அவன் எதிர்ப்பார்த்த வாழ்க்கை அவனுக்கு வைஷூ மூலமா தான் கிடைச்சு இருக்கு. வசுமதியை அவன் கல்யாணம் பண்ணி இருந்தாலும் அவன் சந்தோஷமா வாழ்ந்து இருக்க மாட்டான். கடமைக்காக வாழ்ந்து இருப்பான்" என்று தன்னுடைய கண்ணோட்டத்தை மொழிந்தான்.


சனா அதிர்வுடன் சாத்விக்கை நோக்க, "உண்மை தான் ஜானு. மித்ரன் என்னோட எதிரி. ஒரு நண்பனை நான் அவதானிக்கிறதை விட எதிரியை அதிகமாவே கண்காணிப்பேன். அதைப் பார்க்கும் போது எனக்கு இது தெளிவா புரிஞ்சது" என்று அவள் கன்னம் வருட, "அப்போ மித்து அண்ணா வைஷூவை காதலிக்கிறாங்களா?" என்றாள் அதிர்வு மாறா குரலில்.


"அது எனக்கு தெரியல்லை. ஆனால் ஒன்னு மட்டும் ஷூயர். வசுமதியை விட வைஷூவை அவனுக்கு அதிகமாவே புடிக்கும்" என்று நுதல் முட்ட சனாவும் புன்னகையுடன், "எப்படியோ இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தாங்கன்னா சரி" என்று அவன் கன்னத்தில் இதழ்பதித்தாள்.


இருவருமே இரவென்றும் பாராது கதையளக்க நேரமும் பறந்து சென்றது. அவனது அணைப்பிலேயே சனா உறங்கி இருக்க சாத்விக் புன்னகைத்து நேரத்தைப் பார்த்தான். நேரம் பதினொன்று முப்பதைக் காட்ட அவளைக் சாய்வு நாற்காலியில் உறங்க வைத்தவன் அரவமில்லாது தனது அலுமாரியைத் திறந்தான்.


அதில் அலங்காரத் தாளினால் சுற்றுகையிடப்பட்ட ஒரு பரிசை எடுத்து வைத்தவன் சனாவை ஒரு முறைப் புன்சிரிப்புடன் பார்த்தான். சிறிது நேரம் வானத்தில் மின்னி மின்னி வேடிக்கைக் காட்டும் நட்சத்திரங்களைப் பார்த்தான். வானத்தில் அவனது தாயின் முகம் தோன்றி அவனைப் பார்த்து சிரிப்பது போன்று இருந்தது.


குரல் கமற, கண்கள் கலங்க, "அம்மா" என்று முணுமுணுக்க தாயின் முகத்தை வருட ஆவலாய் கரம் நீட்ட தாயோ தொட முடியா எட்டா தூரத்தில் தெரிந்தார். தாயின் முகத்தை இமைக்காமல் பார்த்தவன் கண் சிமிட்ட தாயின் முகம் மறைந்து இருந்தது.


ஆழ மூச்செடுத்து தன்னைச் சமன்படுத்தியவன் மீண்டும் நேரத்தைப் பார்க்க நேரம் பதினொன்று ஐம்பத்து எட்டு என்று காட்ட சனாவை நெருங்கி அவளை எழுப்ப ஆரம்பித்தான். "பேபி" , "ஜானு" என்று மூக்குரசி அவளை எழுப்ப, "இன்னும் கொஞ்ச நேரம் சவீன் பிளீஸ்" என்று முணுமுணுத்தாள்.


சரியாக பன்னிரெண்டு ஆவதற்குள் அவளை எழுப்புவதில் வெற்றியைக் கண்டவன் அவள் விழிகளை கரங்களின் விரல்களால் மூடி அறைக்குள் அழைத்துச் சென்றான். சனா, "என்னங்க?" என்று வினவ, சரியா பன்னிரெண்டு மணியிற்கு அவள் காதோரமாக, "நூற்று ஐம்பது நாட்கள் திருமணநாள் வாழ்த்துக்கள் ஜானு" என்று முத்தமிட்டு பரிசை வழங்கினான்.


சனா இன்ப அதிர்வுடன், "நம்மளுக்கு கல்யாணம் முடிஞ்சு நூத்தி ஐம்பது நாளாச்சா?" என்று வினவ, "யெஸ்" என்று கண்சிமிட்டி சனாவின் மூக்கை நிமிண்டினான். சனா ஆர்வத்துடன் பரிசைப் பிரிக்க அதில் இருந்த பரிசைப் பார்த்து அதிர்வுடன் சாத்விக்கைப் பார்த்தாள்.


சாத்விக் சிரிப்புடன், "என்ன மேடம் இந்த பிக்சரை உங்களுக்கே தெரியல்லியா?" என்று வினவ, "இது நான் என்னோட டிரொயிங் கம்படிஷன்ல ஃபைனலா வரைஞ்ச ஆர்ட். உங்களை வச்சு வரைஞ்ச ஆர்ட். இது எப்படி உங்க கையில?" என்று அதிர்வு மாறா குரலில் கேட்டாள்.


சாத்விக், "நீ அங்கே வச்சு என்னை பார்த்து ஒரு மார்க்கமா சிரிக்கும் போதே கண்டுபிடிச்சிட்டேன். என்னை வச்சு தான் ஏதோ பிளேன் பண்ணிட்டன்னு. உன் ஆர்ட்டை எனக்கு பார்க்க கிடைக்க இல்லை. பட் உனக்கு பிரைஸ் கிடைச்சதும், ஒர்கனைசிங் கமிட்டி கூட பேசி இந்த ஆர்ட்டை நான் எடுத்தேன்.


அதை நானும் பார்க்கவே இல்லை. கொஞ்ச நாள் முன்னாடி தான் அதை ஓஃபீஸ்ல வச்சு பார்த்தேன். ஐம் இம்ப்பிரஸ்ட். எனக்கு ரொம்ப பிடிச்சது. உனக்கு இது ஸ்பெஷலா இருக்கும்னு தோணுச்சு. அதான் இதை ஃபிரேம் பண்ணி உன் கிட்ட கிஃப்டா கொடுத்தேன்" என்று கூறிக் கொண்டே அவளை அணைத்தான்.


சனா, "எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. கம்படிஷன்ஸ்ல நான் இரசிச்சு வரைவேன். அதை எனக்கு யாருமே திருப்பி கொடுத்தது இல்லை. அந்த ஆர்ட்டை அவங்களே வச்சுப்பாங்க. முதல் முதலா எனக்கு நான் இரசிச்சு வரைஞ்ச ஆர்ட்டை திருப்பி கொடுத்தது நீங்க சவீன். தேங்கியூ சோ மச்" என்று மொழிந்து கன்னத்தில் இதழ்பதித்தாள்.


சாத்விக் அவள் கழுத்தில் ஒரு பிளெடினம் மாலையை அணிவித்து, "இது நான் கபிள் செயின் வாங்கினேன். இன்னிக்கு தான் கொடுக்க நேரம் கிடைச்சி இருக்கு" என்று உரைக்க அதை வருடிய சனா, "என் புருஷனுக்கு இரசணை அதிகம் தான். அழகா பார்த்து வாங்கிருக்காரே" என பாராட்டு பத்திரம் வாசித்தாள்.


சாத்விக், "உன் புருஷன் இரசணைகாரன் தான்டி. அதான் உன்னை என் வாழ்க்கை துணையா தேர்ந்து எடுத்து இருக்கேனே" என்று மொழிந்து அவளது கையின் தன்னுடைய செயினை வழங்க, அதை ஆசையாக எடுத்து எக்கி அவனது கழுத்தில் அணிவித்தாள்.


"மேடம் எனக்கு கிஃப்ட் கொடுக்கவே இல்லையே" என்று அவன் வினவ, "கொடுத்துட்டா போச்சு" என்று அவள் தன்னையே அவனுக்கு பரிசாக வழங்க ஆரம்பித்தாள். அன்றைய இரவு அவர்களுக்கு மறக்க முடியாத சந்தோஷங்கள் நிறைந்த இரவாகவே இருந்தது.


விஷ்ணு வசு இருவருமே வீட்டை அடைந்தாலும் எதுவுமே பேசாது அமைதியாய் நேரத்தைக் கடத்த விஷ்ணுவும் அவளைத் தொல்லை செய்யாது அவள் மேல் ஒரு கண்ணை வைத்தவாறே மடிக்கணனியில் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தான். வசுமதி என்ன நினைக்கிறாள் என்பதை அவளாலேயே புரிந்துக் கொள்ள முடியவில்லை.


வைஷூவின் நிலையை எண்ணி குற்ற உணர்ச்சி ஒருபுறம் என்றால், யாதவ் தன்னை பொருட்டாகவே மதிக்காதது வலியைக் கொடுத்தது. இதற்கு முன்பே அவன் தன்னை காதலிக்கவில்லையோ? காதலித்து இருந்தால் சிறிதளவேனும் அவன் வதனத்தில் தயக்கம் அல்லது சங்கடமாவது தென்பட்டு இருக்குமே என்று சிந்திக்கலானாள்.


'அப்போ மாமா என்னை காதலிக்கவே இல்லையா? நான் தான் அவரை உருகி உருகி காதலிச்சேனா? என்னை காதலிக்காத, அவர் மனசுல எனக்கு இடமே இல்லாத ஒருத்தரையா நான் கல்யாணம் பண்ண நினைச்சேன்?' என்று எண்ண தன்னை நினைத்தே அவளுக்கு அவமானமாக இருந்தது.


தன்மேலே கழிவிரக்கம் தோன்ற குளியலறைக்குள் புகுந்து, சிறிது நேரம் மௌனமாக கண்ணீர் வடித்து பழையதை மறக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். இனிமேல் தனக்கு கிடைத்து இருக்கும் வாழ்க்கை சிறப்பாக வாழ வேண்டும் என தெளிவாக முடிவெடுத்து அறைக்குள் வந்து உறங்கியும் போனாள்.


விஷ்ணுவும் அவளைப் பார்த்து இருக்க முதலில் முகம் குழப்பத்துடன் இருந்ததும் குளியறையில் இருந்து வெளி வரும் போது அழுத முகத்துடன் இருந்தாலும் அதில் தெரிந்த தெளிவைக் கண்டு கொண்டவன் இதன் பிறகு வசுமதி சரியாகி விடுவாள் என்பதில் நம்பிக்கைக் கொண்டான்.


யாதவ், வைஷ்ணவி இருவருமே விருந்தினர்களை அனுப்பி வைத்து வீட்டிற்கு வருகை தரும் போது இருள் சூழ்ந்து இருந்தது. அவர்களுக்கு தங்கள் குடும்பத்தினர் வசைமொழிகளை இன்றாவது வழங்கவில்லை என்பதில் பெருமகிழ்ச்சி கொண்டனர்.


காரில் கௌதம் முன்னே அமர்ந்து காரை செலுத்த அவன் அருகில் காவ்யா அமர்ந்து அவனோடு கதை அளந்தவாறே வருகை தந்தாள். வைஷூ அதீத களைப்பினால் யாதவின் அருகே அமரந்தவாறே அவனது தோளில் தலை வைத்து உறங்கி இருந்தாள். யாதவ் அவள் விழாதவாறு தோளோடு அவளை அணைத்து அவள் வதனத்தையே பார்த்து இருக்க கௌதம் அதைக் கவனித்து காவ்யாவிடம் கண்களால் செய்தியளித்தான்.


காவ்யாவிற்கும் யாதவ், வைஷூவின் நெருக்கத்தில் அதீத மகிழ்ச்சி தர இருவரும் இணை பிரியாது அதீத காதலுடன் வாழ வேண்டும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டாள். அவர்கள் வீடு வந்தவுடன் வைஷூவை யாதவ் எழுப்ப கண்களை கசக்கியவாறே எழுந்து சுற்றும் முற்றும் நோக்கினாள்.


அவனது அணைப்பில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தவள் அவனிடம் இருந்து வேகமாக விலகி அவன் முகம் பார்க்காது அறைக்குள் ஓடி ஒளிய யாதவ் சிரிப்புடன் அவளைப் பின் தொடர்ந்தான். காவ்யா, "வைஷூ நீ அண்ணா ரூமுக்கே போ. நான் மத்த ரூம்ல இருக்கேன். கௌதம் ஹால்ல தூங்குறானாம். எனக்கு கௌதம் கூட பேச இருக்கு. சோ நாங்க பேசிட்டு லேட்டா தூங்குவோம். அதனால நீ போ உன் ரூமுக்கே" என வாயில் வருகை தந்த காரணத்தைக் கூறி அனுப்பி வைத்தாள்.


வைஷூ ஒருவித பயம் தயக்கத்தோடு தங்களது அறைக்குள் நுழைய யாதவ் குளித்து தலையை துவட்டியவாறு குளியலறையில் இருந்து வெளியே வந்தான்.


மற்றைய நாட்களாக இருந்தால் வைஷூ சாதாரணமாகவே இருந்து இருப்பாள். ஆனால் இன்று யாதவ் முத்தம் இட்டது கனவா? நனவா? என்று தெரியாமல் குழம்பிய மனதோடு இருப்பதால் அவளால் தடுமாற்றமில்லாது இருக்க முடியவில்லை.


யாதவ், "என்னாச்சு?" எனக் கேட்க, "ஒன்னும் இல்லையே" என்று அவசரமாய்க் கூறி குளியலறைக்குள் மாற்றுடையுடன் நுழைந்துக் கொண்டாள். அவள் குளித்து வெளியே வரும் போது கட்டிலின் ஒரு ஓரத்தில் யாதவ் கரத்தை மடித்து முகத்தில் வைத்தவாறு படுத்து இருந்தான்.


வைஷூ கூந்தலை விரித்து விட்டவள் அதை சிறிய கிளிப்பினுள் அடக்கி, மற்றைய ஓரத்தில் சாய்ந்துக் கொண்டாள். யாதவ், "உனக்கு தூக்கம் வருதா நவி?" என்று நிலையில் மாற்றமில்லாது வினவ, "இல்லை அத்தான்" என அவன் புறம் தலையைத் திருப்பி மொழிந்தாள்.


யாதவ், "நீ ஏதோ கனவு கண்டன்னு சொன்னியே என்ன அது?" என்று அவளைச் சீண்டுவதற்காகவே அக் கேள்வியை அவள் புறமாகத் திரும்பி அவள் முகத்தைப் பார்த்தவாறே வினவ, 'என்ன கனவு?' என்று முதல் நெற்றி சுருங்க யோசிக்க, அதன் பின்னே எதைப் பற்றிக் கேட்கிறான் எனப் புரிந்தது வைஷ்ணவியிற்கு.


அதை நினைக்கும் போது 'குப்' என கன்னங்களும், காதுகளும் சிவந்து போக அவன் முகத்தையோ, கண்களின் பார்வையையோ சந்திக்க முடியாமல் மறு புறம் உடனடியாகத் திரும்பி, "எனக்கு தூக்கம் வருது அத்தான். நாளைக்கு பேசலாம்" என்று உரைத்து கண்களை இறுக மூடிக் கொள்ள யாதவ் அவளைப் பார்த்து சத்தமில்லாது சிரித்தான்.


சிறிது நேரத்திலேயே வைஷ்ணவி உறங்கிப்போக உறக்கம் வராது அங்குமிங்கும் உருண்டு இருந்த யாதவ் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டதை அறிந்து அவளைப் பின்னிருந்து அணைத்தவாறு உறங்க சில நொடிகளிலேயே நித்திரா தேவியின் பிடிக்குள் சிக்கிக் கொண்டான்.


இவ்வாறு அமைதியாய் ஓடும் நதியைப் போல் இஜ் ஜோடிகளில் இல் வாழ்க்கையும் செல்ல ஜனவரி மாதம் இன்னும் மூன்று நாட்களில் என்ற நிலை வந்தது. அதே நேரம் காவ்யாவும் வைஷூ அறியாமலேயே அவளுக்கு சிகிச்சை அளித்து அவளுடைய மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொணர்வதில் வெற்றிக் கனியையும் சுவைத்தாள்.


யாதவ், கார்த்திக், சாத்விகின் கல்லூரியில் புதுவருடத்தைக் கொண்டாட தங்களது குடும்பத்தினரோடு கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை வைஷூவைப் பார்க்க வருகைத் தந்த, அபியும், சனாவும் அவளிடம் உரைத்தனர்.


சனா, "நாமளுய் போய் நல்லா என்ஜோய் பண்ணிட்டு வரலாம்" என்க, வைஷூ, "அத்தான் வருவாங்கன்னு எனக்கு தோண இல்லை" என்று கவலையாய்க் கூறினாள். அபி, "நீ கேட்டால் முடியாதுன்னு சொல்ல மாட்டாரு மித்து அண்ணா. அண்ணாவை சமாதானம் பண்ணி நீ அவங்களை நாளைக்கு சாத்விக் அண்ணா வீட்டுக்கு கூட்டிட்டு வா" என்று முடிவுடன் கூறிவிட்டாள்.


காவ்யா, "ஆமா வைஷூ. உனக்கு ஆசையானதை நீ தான் வாயைத் திறந்து சொல்லனும். அண்ணா ஜோசியக்காரங்க இல்லையே! அவரு உன் கணவன். உனக்கு தேவையானதை உரிமையா அவர் கிட்ட கேட்க பழகு" என்று அறிவுரை கூற, அவளும் சரியென்று தலை ஆட்டி, "பட் இப்போ அவங்க முக்கியமான கேஸ்ல இருக்காங்களே. அவங்களால வர முடியாதே" என்று வருந்தினாள்.


காவ்யா, "கேள்வியைக் கேட்டு நீயே பதிலை சொல்லாத. அண்ணா பதிலை சொல்லட்டும்" என்று அழுத்தமாகக் கூற பாவமாய் தலை அசைத்தாள் யாதவின் நவி. அன்று யாதவ் வேலையை முடித்து வீட்டிற்கு வரும் போது யாதவிடம் இதைப் பற்றி பேச பல முறை முன் பரசோதனை காவ்யாவிடம் செய்து விட்டாள்.


காவ்யா கடுப்பாகி எனனிடம் மீண்டும் பேசாதே எனக் கூறும் அளவிற்கு நடந்துக் கொள்ள வைஷூவை நினைத்து தலையில் அடித்துக்கொண்டாள். "அண்ணா கூட தானே பேச சொன்னோம். எனம்மோ யுனிசெஃப்ல போய் ஸ்பீச் பண்ணுன்னு சொன்னது போல இந்த அளவுக்கு ரியசல் பார்க்குறா" என்பதே அவளது மனக்குரலாக இருந்தது.


கௌதம் தனது வீட்டிற்கே சென்று குளித்து மடிக்கணனியை எடுத்து வர, யாதவும் தன்னைச் சுத்தப்படுத்தி குளித்து வந்தான். நால்வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட காவ்யா, வைஷூவிடம் கண்ணைக் காட்ட, "பயமா இருக்கு அண்ணி" என்று உதடசைத்து பாவமாய் முணுமுணுக்க கண்களாலேயே மிரட்டினாள் காவ்யா.


இவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணைகளை யாதவும், கௌதமும் கவனித்தே இருந்தனர். வெகு நேரமாக இதே பல்லவியை அவர்கள் பாட, கடுப்பாகிய ஆடவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


யாதவ், "என்ன விஷயம் நவி?" என்று சொற்கள் அழுத்தமாய் வெளிவர, "அதானே? என்ன விஷயம்?" என்று திருப்பிக் கேட்டாள். காவ்யா, "வைஷூ" என்று அழுத்தமாய் அழைக்க, அவளது பேச்சை மீற முடியாது, "நான் கொஞ்சம் பேசனும்" என்று தடுமாறினாள் யாதவ் முகத்தைப் பாராது.


யாதவ் சாப்பிடுவதை நிறுத்தி, "என் முகத்தைப் பார்த்து பேசு நவி" என்று அவனும் அழுத்தமாய் கூற பாவமாய் அவனைப் பார்த்தவள் "அபி, சனா வந்தாங்க. உங்க கோலேஜ் ஃபிரனஸ் எல்லாருமே கெட் டூ கெதர் நிவ் இயருக்கு வக்கிறாங்களாம். ஃபேமிலியா போகலாம்னு சொன்னாங்க. அதான் நாமளும் போலாமான்னு கேட்க வந்தேன்" என்று மனனம் செய்தவற்றை ஒப்பித்து முடித்தாள்.


யாதவ் அமைதியாக, "அதுக்கு எதுக்கு உனக்கு இவளோ தயக்கம்?" என்று வினவ, அவள் திருத்திருக்க ஆரம்பித்தாள். "நவி நான் உன் கணவன். என் கிட்ட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. மூனாவது மனிஷன் கிட்ட பேசுறது போல என் கிட்ட நடந்துக்காத. எனக்கு அது பிடிக்க இல்லை" என்று உரைத்து கை கழுவி வெளியே சென்றான்.


வைஷூ கௌதமையும், காவ்யாவையும் அதிர்வுடன் பார்க்க, "அவனும் மனிஷன்மா. அவனைப் பார்த்து நீ பயப்படுறது அவனுக்கும் வலிக்கும். சோ நீயே போய் அவனை சமாதானப்படுத்து" என்று கௌதம் அமைதியாக அவள் தவறை எடுத்துரைத்தான். "நான் என்ன பண்றது அண்ணா? எனக்கு அவங்களை பார்த்தாலே பயமா இருக்கே" என்று கவலையுடன் உரைக்க, "அதை நீயே தான் போக்கனும் வைஷூ" என்றாள் காவ்யா.


அவள் பரிதாபத்துடன் கைகளைக் கழுவி வெளியே வேடிக்கை பார்க்கும் யாதவிடம் சென்றாள். வைஷூ, "சொரி அத்தான். நான்... நான்.. வேணூன்னு அப்படி பண்ண இல்லை. எனக்கு உங்களைப் பார்த்தாலே பயம்." என்று கூற பயம் என்பதில் யாதவ் அவளைத் திரும்பி அழுத்தமாகப் பார்த்தான்.


அதற்கே அவள் சற்று நடுங்கி, "நாம போலாமா? எனக்கு போக ஆசையா இருக்கு" என்று ஆரம்பத்தில் பேசியதை முடிக்காமல் அவனை பார்வை வீச்சை தாங்காது மற்றைய விடயத்திற்கு தாவினாள். யாதவும் எதுவும் பேசாது, "போலாம்" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்.


வைஷூ, "அப்போ உங்க கேஸ்?" எனக் கேட்க, "அதை கௌதம் பார்த்துப்பான்" என்று விட்டேறியாக பதில் கூற அதில் சிறிதளவேனும் வைஷூவிற்கு பாதிப்பு தெரியவில்லை. ஏனெனில் அவளோடு அதிகமாக இவ்வாறே யாதவ் பேசி இருப்பதால் அவனுடைய கோபத்தை இச் சிறு பெண்ணால் கண்டுபிடிக்க முடியவில்லை.


"நாளைக்கு சாத்விக் அண்ணா வீட்டுக்கு போகனும். நான் போய் டிரஸ் பெக் பண்ண ஆரம்பிக்கிறேன்" என்று குதூகலத்துடன் மொழிந்து அறைக்குள் வேகமாக ஓடினாள். கௌதம், காவ்யா இருவருமே வெளியே வந்தவர்கள் தளர்வாக வானத்தை வெறிக்கும் யாதவைப் பார்த்தனர்.


கௌதம், "அவ முழுசா மாற டைம் கொடுடா. சரியாகிருவா. உன் மேலே இருக்கிற பயம் இரண்டு மூனு மாசமா வந்தது இல்லை, பல வருஷங்களுக்கு முன்னாடி வந்தது. அதனால நாமளும் அவளுக்கு நேரத்தை கொடுக்கனும்" என்க, "ஆமா அண்ணா. அவளோட முடியுமான வரைக்கு நெருங்க பாருங்க. உங்களோட உறவுமே அவளை பாதுகாக்கும். என்னோட வேலை கம்பிளீட். இனிமேல் எல்லாம் உங்க கையில தான் இருக்கு" என்று புன்னகைத்தாள் காவ்யா.


யாதவ், "சரிமா. நீ போக போறியா?" என வினவ, "ஆமா அண்ணா. நாளைக்கு நான் கிளம்புறேன். வைஷூவை பத்துரமா பார்த்துக்கொங்க" என்று உரைக்க, "சரிமா" என்று பதில் கொடுத்தான் யாதவ்.


இவர்கள் இங்கே இருக்க வசுமதியோ விஷ்ணுவின் டயரியின் முதல் பக்கத்தை வாசித்து, விஷ்ணு ஒரு பெண்ணை காதலித்து இருக்கிறான் எனத் தெரிந்ததும் அதிர்ந்து நின்றாள் அவ் இடத்திலேயே.



Innoru epi irukkku 😍
 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26421


கண்சிமிட்டும் தென்றலே


அத்தியாயம் 24



யாதவ் வைஷூவின் நிலையைப் புரிந்து தான் கோபப்படுவதில் பயன் இல்லை என்பதையும் புரிந்துக் கொண்டான். அவளை தன் அன்பாலும் ஆதரவாலுமே மாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்து உள் அறைக்குள் ஆடைகளை அடுக்கி வைக்கும் தன் மனைவிக்கு உதவி செய்வதற்காகச் சென்றான்.



யாதவ், "நவி" என்று அழைக்க, "சொல்லுங்க அத்தான்" என்று இன்பம் வழியும் குரலிலேயே வினவினாள். "நாளைக்கு எத்தனை மணிக்கு போகனும்?" என்று கேட்க, "முதல்ல சாத்விக் அண்ணா வீட்டுக்கு போகனும். அங்கே லன்ச் முடிச்சிட்டு கோலேஜூக்கு போகலாம்னு பிளேன் பண்ணி இருக்காங்க. நீங்களும் வருவிங்க இல்லை?" என்றாள் ஒருவித ஆர்வம் கலந்த தயக்கத்துடன்.


அவள் முகத்தில் தெரியும் ஆர்வத்திலும், சந்தோஷத்திலும் அதை அவனால் மறுக்க முடியவில்லை. தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனையில் வைஷூவின் சந்தோஷத்தை அழிப்பது ஞாயம் இல்லை என்பதை உணர்ந்து, "போலாம் நவி. என் டிரசையும் பெக் பண்ணிக்கோ. நான் கௌதம் கூட பேசிட்டு வரேன்" என்று அவளுக்கு தன்னுடைய மனைவி என்பதை பதிய வைக்க தன் வேலையை செய்யுமாறு கூறிச் சென்றான்.


யாதவ் கௌதமிடம் வந்தவன், "அந்த பையனை தேடுறதை மட்டும் விடாத. அவன் கையில மாட்டினால் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம். என்னை தேவை இருந்தாலும் என்னை கூப்பிடு. அங்கே நான் போறது நவியோட சந்தோஷத்துக்காக மட்டும் தான். என் நினைப்பு எல்லாமே இந்த கேஸ் மேலே தான் இருக்கும்" என்றான்..


கௌதம், "புரியிதுடா. அதுக்காக அங்கே போய் என்ஜோய் பண்ணாமல் இருக்காத. நீ ஒதுங்கினால் வைஷூவும் என்ஜோய் பண்ண மாட்டா" என்று அறிவுறுத்த, "சரிடா நான் பார்த்துக்குறேன்" என்று மொழிந்து காவ்யாவுடனும் சிறிது நேரம் பேசி விட்டு தன்னறைக்குள் நுழைந்துக் கொண்டான்.


விஷ்ணுவிற்கு இரவில் வேலை என்பதனால் வசுமதி அவனுடைய வேலைகளை முடித்து அனுப்பி வைத்து இருந்தாள். வசுமதியிடம் சில நாட்களாகவே தென்படும் மாற்றத்தை விஷ்ணுவும் உணர்ந்தே இருந்தான். மற்றைய விடயங்களை ஒதுக்கி தனக்குரிய வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருப்பதும், அவனுடைய குடும்பத்தினருடன் முன்பை விட நெருங்கிப் பழகுவதையும் பார்த்தான்.


அவனோடும் உற்ற தோழமையுடனும், ஒருவித உரிமை உணர்வுடன் பழகுவதும் அவனுக்குமே பிடித்து இருந்தது. வசுமதி இயற்கையிலேயே தீயக் குணம் படைத்தவள் அல்லவே! சூழ்நிலை அவளை இவ்வாறு ஒரு நிலைக்குத் தள்ளிவிட்டு விட்டது. தவறான பாதையில் சென்றவள் தன் தவறை உணர்ந்து மீண்டும் சரியான பாதையை தேர்ந்தெடுத்து இருப்பதில் மகிழ்ச்சியே.


விஷ்ணுவை அனுப்பி வைத்த பின் அறையை ஒதுங்க வைக்க ஆரம்பித்தாள். அப்போது அவளது ஆடைகளை அலுமாரியில் இருந்து வெளியே எடுத்து அழகாக மடித்து அடுக்கி வைத்தாள். விஷ்ணுவின் ஆடைகளை அடுக்கி வைக்கலாம் என்று அவனுடைய அலுமாரியைத் திறந்து ஆடைகளை வெளியே எடுத்தாள்.


அப்போது ஆடைகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டு இருந்த அவனது டயரி கீழே விழ வசுமதி, "ஓஓ சாருக்கு டயரி எழுதுற பழக்கமும் இருக்கா?" என்று சிரிப்புடன் அதை மேசை மீது வைத்து விட்டு ஆடைகளை ஒழுங்காக அடுக்கி முடித்தாள்.


டயரிரையை கையில் எடுத்து, "வாசிக்கலாமா? வேண்டாமா?" என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்த, "அடுத்தவங்க பொருளை அனுமதி இல்லாமல் எடுக்கக் கூடாது" என்று முன்னே வந்து கூறியது மனசாட்சி. "ஆனால் அவரு என் பெஸ்ட் ஃபிரென்டாச்சே என் கிட்ட மறைக்க தேவையில்லையே" என்று மனம் வாதிட, "அவனுக்கும் பிரைவசி வேணூம் அதுல தலையிடாத" என்று மீண்டும் மனசாட்சி அறிவுறுத்தியது.


இறுதியாக முதல் பக்கத்தை மட்டுமாவது பார்க்கலாம் என்று ஆர்வத்துடன் திருப்ப "அன்புள்ள என் காதலி டோலிக்கு" என்று காதலாய் எழுதி இருக்க அதிர்ச்சி அடைந்தாள் வசுமதி. அவனுக்கு முன்பே ஒரு காதலி இருக்கிறாள் என்பது இன்று வரை அவள் அறியாத ஒரு விடயம். அதற்கு கீழே காதல் நிரம்பி வழியும் கவிதைகள் இருந்தன.


ஆனால் எதுவுமே அவளுடைய மனதில் பதியவில்லை. வாசித்ததும் நினைவில் இல்லை. விஷ்ணு ஏன் தன்னிடம் மறைத்தான் என்ற கேள்வியே அவள் முன் நின்றது? ஏனோ அவனுக்கு காதலி ஒருவள் இருக்கிறாள் என்பதை ஏற்க மறுத்தது அவளுடைய மனம். கூறமுடியா ஒரு அழுத்தம் அவள் மனதில் தோன்றியது.


அதற்கு மேல் அதை கரத்தில் வைக்க முடியாமல் அவன் வைத்திருந்த இடத்திலேயே அதை வைத்து விட்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கண்மூடி உறங்க முற்க வருவேனா என்று அடம்பிடித்தது உறக்கம். விஷ்ணு டயரியில் எழுதி இருந்த 'அன்புள்ள என் காதலி டோலிக்கு' என்ற வாசகமே அவள் விழிமுன் தோன்றி இம்சித்தது.


வசுமதி உறக்கத்தைத் தழுவ முடியாமல் அங்குமிங்கும் பிரண்டவள் எழுந்து வானத்தை வெறிக்க ஆரம்பித்தாள். பல்கனியில் அமர்ந்தவாறே உறங்க எப்போது உறங்கினாள் என்பது அவளே அறியாத ஒன்று. ஆனால் அவளது சிந்தை முழுவதையும் விஷ்ணுவே ஆக்கிரமித்து இருக்கிறான் என்பது மறுக்காத உண்மை.


கதிரவனும் கிழக்கில் தன் ஒளிக்கதிர்களை வெளியேற்றி வருகை தர நிலாமகளோ தன் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள். காவ்யாவும் அதிகாலையிலேயே எழும்பி ஊரிற்குச் செல்லத் தயாராக வைஷூ அவளுக்கு உதவி செய்தாள். காவ்யா கௌதமுடன் யாதவ், வைஷ்ணவி தம்பதியினரிடம் உரைத்து சென்றுவிட ஐ.ஜியின் அனுமதியோடு யாதவ் வருடப் பிறப்பைக் கொண்டாட தயாரானான்.


அவ்வகையில் அனைத்து வேலைகளையும் முடித்து வீட்டிற்கு வந்தவன் வைஷூவை அழைத்து சாத்விக்கின் வீட்டிற்குச் சென்றான். அவனது கார் சாத்விக்கின் வீட்டிற்குள் நுழைய அவர்களை வரவேற்க சாத்விக், சனா தம்பதியினர் வெளியே காத்திருந்தனர்.


சாத்விக்கின் கிண்டல் பார்வை யாதவ் மீது படர, "போடா நீயும் உன் பார்வையும்" என அலட்சியப்படுத்தி வைஷூவோடு அவர்களது வீட்டிற்குள் நுழைந்தான். அவர்கள் இருவரையும் அமர வைத்த சனா, "இருங்க நான் போய் ஜூஸ் எடுத்துட்டு வரேன்" என்று மொழிந்து சமையலறைக்குள் செல்ல அவளுக்கு உதவி செய்ய வைஷூவும் சென்றாள்.


சாத்விக், "என் வீட்டு பக்கம் எல்லாம் வந்திருக்க" என்று நக்கல் தொனியில் வினவ, "என்ன பண்றது என் விதி அப்படி இருக்கு. உன் வீட்டுக்கு வரனும்னு" என்று அலட்சிய பாவனையுடன் பதில் அளித்தான். சாத்விக், "நீ திருந்தவே மாட்டடா" என்று பல்லைக் கடிக்க, "நான் எப்போ சொன்னேன் திருந்துவேன்னு?"என எதிர் கேள்வி கேட்டான் யாதவ்.


சாத்விக் கடுப்புடன் பதில் அளிக்க வாயைத் திறக்க அதற்குள் பெண்கள் இருவரும் வருகைத் தர, ஆண்கள் இருவரும் நல்ல பிள்ளை போல் அமைதி காத்தனர். நால்வரும் அமர்ந்து கதை பேசியவாறே பானத்தைப் பருக அபி சனாவிற்கு மொபைல் மூலமாக அழைத்தாள்.


சனா அழைப்பை ஏற்று, "ஹலோ சொல்லு அபி" என்க, "நீ லஞ்ச் ரெடி பண்ணிட்டியா?" என்று மறு கேள்வி கேட்டாள். சனா, "நாம மூனு பேரும் சேர்ந்து சமைப்போம்னு பிளேன் போட்டவன நீ" என்று உரைக்க, "அப்போ எங்க வீட்டுக்கு எல்லாரும் வாங்க. அம்மா நானே சமைக்கிறேன்னு சொல்றாங்க. மித்து அண்ணா , வைஷூவும் வராங்கன்னு சொன்னதும் இப்படி சொல்றாங்க" என்று நவிழ்ந்தாள்.


சனா, "சரி நாங்க அங்கே வரோம்" என்று அழைப்பைத் துண்டித்து அபி கூறியவற்றை உரைத்தவள், "அத்தை ஆசையா கூப்பிடுறாங்க. போலாமா?" எனக் கேட்க, மற்றவர்கள் சரியென்று தலை அசைத்தனர். ஆண்களின் மனக்குரலோ, "தப்பிச்சோம்டா சாமி" என்று இருக்க பெண்கள் இருவரும் அதைக் கவனிக்கவில்லை.


இரு ஜோடிகளுமே தத்தமது கார்களில் கார்த்திக்கின் வீட்டை நோக்கி சில நிமிடங்களில் பயணத்தை மேற்கொண்டனர். அனைவருமே உள்ளே நுழைய முகம் முழுவதும் பூரிப்புடன் கார்த்திக், அபி ஜோடியும் விசாலாட்சியும் அவர்களை வரவேற்றனர்.


ஆண்கள் மூவரும் அமர்ந்து வரவேற்பரையில் கதையளக்க பெண்கள் மூவரும் விசாலாட்சியிற்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் தொல்லைக் கொடுத்தவாறே கதை அளக்க அவர்களை அடிக்காத குறையாக வெளியேற்றினார் அவர்.


அதன் பின் பெண்கள் வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு தோட்டத்தில் இருக்கும் கிருஷ்ணனிடம் சென்று பிரார்த்தித்து வீட்டிற்குள் நுழையவும் விசாலாட்சி சமைத்து முடித்து உணவு மேசையில் பொருட்களை எடுத்து வைக்கவும் சரியாக இருந்தது.


அபி, "இவளோ சீக்கிரமா எப்படி சமைச்ச அம்மா?" என்று வினவ, "எனக்கு அங்கே தொல்லை கொடுக்க தான் யாருமே இல்லையே" என்றார் சிரிப்பை மறைத்து. அபி அவரை முறைத்துப் பார்க்க ஆண்கள் அவர்களுடைய சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டனர்.


அதன் பின் சந்தோஷமாக கதை பேசியவாறு உணவை முடித்தவர்கள் கல்லூரியிற்குச் செல்லத் தயாராக அனைவருமே சாமி அறைக்குச் சென்று சாமியைக் கும்பிட நுழைந்தனர். ஜோடி ஜோடியாக நின்று சாமியைக் கும்பிட்டனர். அப்போது வைஷூவின் கையிலிருந்த டிஷீயூ கீழே விழ அது பகவத்கீதைத் தாங்கியின் அடியில் சென்றது.


வைஷூ அதை குனிந்து அமர்ந்து எடுக்கும் போதே அங்கே இருக்கும் ஒரு புகைப்படத்தைக் கவனித்தாள். அதையும் எடுத்தவள் மற்றவர்களிடம், "இந்த ஃபோடோ கீழே இருந்தது" என்று காட்ட அதைப் பார்த்த சாத்விக் அதிர்ந்தவன் அவசரமாக அதை எடுத்தான்.


அவனே உடனடியாக, "இந்த போடோ உங்களுக்கு எப்படி கிடைச்சது?" என்று வினவ அதை வாங்கிப் பார்த்த கார்த்திக் இரு இளம் ஜோடிகள் நின்று இருந்து புகைப்படம் எடுத்து இருப்பதைக் கவனித்தான். கார்திக், "கல்யாண ஜோடி இல்லை மத்த ஜோடி என்னோட அம்மா, அப்பா" என்று உரைக்க சாத்விக் அதிர்வு மாறா குரலுடன், "கல்யாண ஜோடி என்னோட அம்மா அப்பா" என்றான்.


இருஜோடிகளுமே அதில் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக நின்று இருந்தனர். ஆண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு நின்று இருக்க அதுவே பார்ப்போருக்கு அவர்களுடைய நட்பின் ஆழத்தை விளக்கியது.


சனா, "அப்போ உங்க அப்பாவும், எங்க அப்பாவும் ஃபிரன்ஸா?" என்று வினவ, "அதெப்படி உறுதியா நீ சொல்ற ஜானு?" என்று கேட்டான் சாத்விக். "ஒரு நிமிஷம்" என்றவள் அங்கே இருந்த மரப்பெட்டியைத் திறந்து அதில் இருந்த புகைப்படங்களை எடுத்துக் காட்ட அதில் சாத்விக்கின் தந்தை, சனாவின் தந்தை இருவருமே எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் இருந்தன.


இவர்கள் இதைப் பார்க்க யாதவின் விழிகளோ மரப்பெட்டியில் இருந்த ஒரு புகைப்படத்திலேயே நிலைக்குத்தி நின்றது. அதில் ஒரு பெண் சாத்விக்கின் தந்தைக்கு அருகில் நின்று இருக்க அவர்களோடு பல இளைஞர்களும், யுவதிகளும் நின்று எடுத்த கல்லூரி புகைப்படம் அது.


அவன் பார்வை சாத்விக்கின் தந்தைக்கு அருகில் நின்று இருந்த பெண்ணையே தழுவ, அவன் அதை கரங்களால் எடுத்துப் பார்த்தான். கார்த்திக் எதேர்ச்சியாக யாதவைப் பார்க்க அவனோ புருவம் சுருக்கி ஒரு புகைப்படத்தைப் பார்ப்பதைக் கண்டவன், "என்னாச்சு மித்ரன்" என வினவினான்.


அதன் பிறகே அனைவரின் கவனமும் யாதவின் புறம் திரும்பியது. அவர்களும் கேள்வியுடன் அவனை நோக்க தனது கையில் இருந்த புகைப்படத்தை அவர்களுக்குக் காட்டி, அதிலிருந்த பெண்ணை சுட்டியவன், "இந்த பொண்ணோட போடோவை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன். ஆனால் ஞாபகம் வர மாட்டேங்குது" என்று ஒற்றை விரலால் நெற்றியை நீவினான்.


ஒவ்வொருவராய் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தனர். யாதவ் கூறிய பெண்ணே அங்கே இருப்பவர்களில் பேரழகியாய் இருந்தாள். அவர்களுக்கோ அவரை எங்கு பார்த்தது போன்ற நினைவும் இல்லை. சாத்விக், "இது அப்பாவோட கோலேஜ் காலத்து போடோன்னு நினைக்கிறேன். நான் இவங்களை பார்த்தது இல்லையே" என்றான்.


யாதவ், "சரி விடுங்க. நான் எனக்கு ஞாபகம் வந்தால் சொல்றேன்" என்று முடித்து வைக்க அங்கே நீண்ட அமைதி நிலவியது. சாத்விக், சனாவின் தந்தைகள் நீண்ட கால நண்பர்கள் என்றால் எவ்வாறு குடும்பத்தினர்களுக்குத் தெரியாமல் சென்றது? என்ற கேள்வி தொக்கி நிற்க அமைதியும் நீண்டு சென்றது.


விசாலாட்சி, "உங்க கேள்விகளுக்கான பதில் கண்டிப்பா சீக்கிரமா கிடைக்கும். நல்ல நேரத்துக்கு போற வழியைப் பாருங்க" என்று பெரியவராய் அமைதியைக் கலைய, அவர்களும் தலையசைத்து மௌனமாய் விடைப் பெற்று கல்லூரியை நோக்கிச் சென்றனர்.


மூன்று கார்களும் ஆண்கள் படித்த கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தன. இவர்கள் வரும் முன்னே அவர்களோடு கற்றவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு வருகை தந்து இருந்தனர். மூவரும் ஒன்றாக தங்கள் மனைவிகளோடு வருவதைப் பார்த்தவர்கள் அதிசயித்து விழிவிரித்துப் பார்த்தனர்.


மூவரின் கம்பீரம் கலந்த நடையும், உடைப் பாவனையும், மிடுக்கும், ஆளுமை நிறைந்த முகங்களும், உடற்பயிற்சியால் உருவான கட்டுமஸ்தான உடல்களும் திரைப்பட கதாநாயகர்களைப் போன்று காட்டியது அனைவருக்கும். அதிலும் கார்திக் சாத்விக்கின் மனைவியோடு தலைவருடி பேசியதும், சாத்விக் அமைதியாய் அதைக் கவனித்ததும் இதயத்தினுள் அவர்களுக்கு பூகம்பத்தையே ஏற்படுத்தியது.


"மச்சான்" என்ற கூக்குரல் கேட்க, சாத்விக் ஆர்வத்துடனும் முகம் முழுவதும் பூரிப்புடனும் திரும்ப அங்கே ஆகாஷ் கண்கலங்க கையை விரித்து நின்று இருந்தான். வெகுவருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். இருவருமே ஒருவித உணர்ச்சிப் பிடியில் சிக்கித் தவிக்க சனா, "போய் பேசுங்க சவீன்" என்று தோள் தட்டி அனுப்பி வைத்தாள்.


சாத்விக் வேகமாக சென்று தனது உற்ற தோழனை இறுக அணைத்துக் கொள்ள அவனுமே இறுக அணைத்துக் கொண்டான். இதைப் பார்த்த ஆகாஷின் மனைவி , சனா, அபி, கார்திக், யாதவ் என அனைவருக்குமே கண்கள் நீரைச் சுரந்தன. அத் தருணமே நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.


யாதவிற்கு அதைப் பார்த்து துக்கம் துண்டையை அடைத்து நெஞ்சம் அழுத்த இமை மூடினான். இரத்தத்தில் மிதக்கும் ஓர் உடலும், முகம் முழுவதும் புன்னகை தவழும் அப்பாவியான ஒரு முகமும் அவன் கண்முன்னே மாறி மாறி தோன்ற அவசரமாக இமை திறந்தான்.


யாதவின் மாற்றத்தையே வைஷூ கவனித்து இருக்க அவன் கண்களைத் திறந்தவுடன், அவனது விரல்களோடு அவனது விரல்களை இறுகப் பற்றிக் கொண்டாள். அவளுடைய விரல்களை இறுகப் பிடித்து வலியுடன் கூடிய புன்னகையைச் சிந்த அவளுக்குமே அது நன்றாகவே புரிந்தது.


அவனுடைய மனதில் மிகப் பெரிய காயம் இருப்பதைப் பார்த்த வைஷூவிற்கு ஏனோ நேரடியாக அதை அவனிடம் கேட்பதற்கு தயக்கமாக இருந்தது.


சாத்விக், "எப்படி டா இருக்க? ரொம்ப வருஷமாச்சு உன்னைப் பார்த்து" என்று குரல் தழுதழுக்க மொழிய ஆகாஷிற்கு அதற்கு பதில் உரைக்கக் கூட நா எழவில்லை. இருவருடைய முகத்திலும் எல்லை இல்லா மகிழ்ச்சியே தெரிய பார்ப்போருக்கு கண்கள் கலங்க நெகிழ்ச்சியாக இருந்தது அந் நிகழ்வு.


அவர்களது இறுகிய தழுவல்களே ஒருவரை ஒருவர் எந்த அளவிற்கு அன்பு வைத்துள்ளனர் என்பதைப் புரிய வைத்தது காண்போருக்கு. ஆகாஷின் மனைவி தன் ஒரு வயது குழந்தையுடன் அவர்களை நெருங்க சனாவும் புன்னகையுடன் நெருங்கினாள்.


சாத்விக் அவனிடம் இருந்து பிரிந்து, "ஆகாஷ் இவ என் வைஃப் திசன்ஜனா. என்ட் ஆர்யனோட சிஸ்டர்" என்று அறிமுகப்படுத்த மற்றவர்களுக்கு இதைக்கேட்டு நெஞ்சு வெடிக்காத குறையே. ஆகாஷ் அதிர்வுடன், "என்னடா சொல்ற? எப்படி இது சாத்தியம்?" என்று விரிந்த கண்களுடனேயே வினவினான்.


சாத்விக், "அதுக்காக என்னால முப்பத்தாறு எபிசோடையும் சொல்ல முடியாதுடா. பழசை மறந்துட்டு வாழ ஆரம்பிச்சி இருக்கோம்" என்று சாத்விக் உரைக்க, "பட் இவன்..." என்றிட, சாத்விக் "பாஸ்ட் ஈஸ் பாஸ்ட். பாஸ்டுக்காக என்னால பிரசன்டையும், பியூசரையும் இழக்க தோணல்ல" என்று முடித்தான்.


ஆகாஷிற்கும் அதற்கு மேல் எதையும் கேட்பதில் விருப்பம் இல்லை. அவனும் தன்னுடைய மனைவி பிரியா மகன் விகாஸை அறிமுகப்படுத்தி வைக்க கார்த்திக்-அபி ஜோடியும், யாதவ்-வைஷூ ஜோடியும் அவர்களோடு சகஜமாகப் பேச அங்கே சந்தோஷ அலைகள் நிரம்பி வழிந்தன.


சிறிது நேரத்திற்கு கதை அளந்தவர்கள் ஓய்வெடுப்பதற்காக தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளுக்குள் நுழைந்துக் கொண்டனர். யாதவ் தன்னுடைய மடிக்கணனியில் வேலையை செய்ய அவனுடைய மொபைல் மெசேஜ் ஒலியை எழுப்பியது. அதை எடுத்து திரையைப் பார்த்தவனது இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தன...



தொடரும்...



கருத்துக்களைப் பகிர,




ஹாய்... நட்பூஸ்..

வெள்ளிக்கிழமை போட முடியல்லை. அதான் இன்னிக்கு இரண்டு யூ.டி. நிறைய பேர் கமென்ட் பண்ணி இருக்கிங்க. பட் ரிப்ளை பண்ண நேரம் இல்லை. ரியலி சொரி அதுக்கு. ஆன்லைன் கிளாசுலேயே டைம் போகுது.

டைம் கிடைக்கும் போது ரிப்ளை பண்றேன். அது வரைக்கும். பொதுவாக "தேங்கியூ சோ மச்" சொல்றேன். அடுத்த பதிவு வெள்ளிக் கிழமை... அப்போது சந்திக்கலாம்.
 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26495






அத்தியாயம் 25



யாதவ் வேலையைச் செய்யும் போது அவனுடைய மொபைலில் அனுப்பப்பட்ட செய்தியைப் பார்த்து இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தன. "நான் யாதவ் மித்ரன்டா. என் கிட்டயேவா?" என்று உதடுகளில் முணுமுணுத்தவன் அடுத்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.



விஷ்ணு அன்று வேலையை முடித்து வீட்டிற்கு வரும் போது நேர தாமதமாக இருந்தது. மற்றைய நாட்களை விட அதிகமாகவே சோர்வுடனும், தளர்வுடனும் வருகை தர அதைப் பார்த்த வசுவிற்கு பாவமாக இருந்தது. தன்னுடைய கோபத்தை மறந்து அவனுடைய வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.


அவன் குளித்து வரும் போது உணவை எடுத்து வைத்து, "இன்னிக்கு ரொம்ப வேலையா?" என்று வினவ, "ஆமா. ரொம்ப வேலை தான். இரண்டு நாளைக்கு லீவ் போட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சாலும் பேஷன்சோட ஒபரேஷன் ஷெடியூல் ஃபுல்லா இருக்கு" என்றான் சோர்வாக.


வசு, "இந்த மாசம் மட்டுமா? இல்லை நெக்ஸ்ட் மந்தும் ஃபுல்லா இருக்கா ஒபரேஷன்ஸ்" என்று கேட்க, "இந்த மந்த் தான். நெக்ஸ்ட் மந்த் நான் லீவ் எடுப்பேன்னு சொல்லி இருக்கேன்" என்றான் சாப்பிட்டவாறே. வசுமதி அவனோடு கதைபேசியே வழமையாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிட வைத்திருந்தாள்.


அவன் உணவை முடித்து, "நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன். அப்புறமா உன் கூடவும், அம்மா அப்பா கூடவும் பேசுறேன். பாய்" என்று படிகளில் தாவித் தாவி ஏறிச் செல்ல அவன் கீழிறிருந்து மேலே செல்வதைப் பார்த்தவள் பெருமூச்சை வெளியிட்டு மேசையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.


வேலையை முடித்து அறைக்குள் நுழைய ஆழந்த உறக்கத்திற்கு செல்ல முடியாயமல் கண்களை மூடி அங்குமிங்கும் விஷ்ணு கட்டிலில் உருள, அதைப் பார்த்தவளுக்கு மேலும் வருத்தமாகியது. எதையும் நினையாது, தைலத்தை எடுத்து கட்டிலில் அமர்ந்தவள் அவன் சிரத்தை எடுத்து தன் மடியில் வைத்தாள்.


தைலத்தை எடுத்து, நெற்றியில் பூசி நீவி விட அமைதியாக உறங்க ஆரம்பித்தான். சில நொடிகளிலேயே ஆழ்ந்ந உறக்கத்திற்குச் செல்ல, அவன் கேசத்தை கோதிவிட்டவாறே இமை மூடி அவளும் அமர்ந்தவாறே உறங்க ஆரம்பித்தாள்.


கல்லூரியில் அனைவரும் சற்று நேரம் ஓய்வெடுத்து மீண்டும் ஒரே இடத்தில் ஒன்று சேர அவர்களது குடும்பமும் ஒன்று சேர்ந்தது ஒரே இடத்தில். யாதவ் வைஷூவுடன் வருகை தர மற்ற நாயகர்களும் தங்கள் மனைவிகளுடன் வருகை தந்தனர்.


பெண்கள் மூவரும் ஆகாஷின் மனைவியுடன் அமர்ந்து கதை பேசி அவனுடைய மகனுடன் விளையாட ஆண்கள் ஒன்றாக அமர்ந்து தங்கள் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். அப்போது அஞ்சலியின் தமையன் கிஷோர் கல்லூரிக்குள் நுழைய நண்பர்கள் அவனையும் வரவேற்றனர் முகம் சுளிக்காது.


அவனும் தங்கள் நண்பர்களை நீண்ட நாட்கள் கழித்து சந்தித்ததால் அவர்களோடு உரையாடி ஓய்வெடுக்கச் சென்றான். நேரம் கடக்க கடக்க இரவு நேரம் எட்டைத் தொட்டது. இரவு உணவை ஆடர் செய்து இருந்தமையால் அனைவருமே நண்பர்களோடும், குடும்பத்தினரோடும் விளையாட்டுகள் விளையாட ஆரம்பித்தனர்.


இரு அணிகளாகப் பிரிந்து பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை நடத்த ஆண்கள் அனைவருமே ஒரு புறமும், பெண்கள் மற்ற அணியாகவும் செயல்பட்டனர். வைஷூ, சனா, அபி மூவருமே அதிகமான பதில்களைக் கூறி தங்கள் அணிக்கு வெற்றியைப் பறித்துக் கொடுத்து குதூகலித்தனர்.


யாதவ் வைஷூவையே நிம்மதியாக புன் சிரிப்பு தவழ வைத்த கண் வாங்காமல் பார்க்க, "வைஷூவை யாரும் தூக்கிட்டு போக மாட்டாங்க. அவளையே வச்ச கண்ணு வாங்கமமால் பார்க்காத. அவ உன் பொன்டாட்டின்னு எல்லோருக்குமே தெரியும். அதை நீ பார்த்து நிரூபிக்கனும்னு இல்லை" என்று சீண்டினான் சாத்விக்.


அவனோடு சண்டையிடாது, "உண்மை தான். ரொம்ப நாளைக்கு அப்புறமா அவளை இந்த மாதிரி பார்க்குறேன். நவின்னு நினைச்சாலே அந்த பயங்கரமான சம்பவம் கண் முன்னாடி வரும். அவ சந்தோஷமா இருக்கிற முகம் கண் முன்னாடி வரது இல்லை. அவளோட அந்த முகமே மறந்து போச்சு.


இப்போ சந்தோஷமாக அவ சிரிச்சு பேசுற முகத்தை மனசுல பதிய வைக்க முயற்சி பண்றேன். அந்த சம்பவத்துல இருந்து வெளியே வந்துட்டா. என்னால அவளோ சீக்கிரமா அதை பண்ண முடியல்லை. இன்னும் அதை நினைச்சாலே மனசு பதறுது.


என்னோட உணர்வுகளை உன்னால புரிஞ்சிக்க முடியுமானு தெரியல்லை" என்று அவன் பார்வையை மாற்றாது உரைக்க கார்த்திக்கும், சாத்விக்கும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் அவனருகில் சென்று அமர்ந்தனர்.


கார்த்திக், "உன்னோட உணர்வுகளை எங்களால புரிஞ்சிக்க முடியிது மித்ரன். எனக்கு அபிக்கு சின்னதா ஒரு கீறல் விழுந்தாலே தாங்க முடியாது. அந்த மாதிரி ஒரு நிலையில அபியை கனவுல கூட நினைக்க முடியல்லை. ஆனால் நீ வைஷுவை அந்த நிலமையில பார்த்ததும் அதுவே உன் மனசுல பதிஞ்சிருச்சு" என்றான் அவனைப் புரிந்துக் கொண்டு.


சாத்விக், "உன்னோட மனசு ரொம்ப உறுதியானது அதான் இன்னும் இதை மறக்க முடியாமல் தவிக்கிற. நீ இதையே நினைச்சிட்டு இருந்தால் அதுல பாதிக்கப்பட போறது வைஷூ. இப்போ தான் அவ ஒகேயாகி இருக்கா. மறுபடியும் அவளுக்கு இதை ஞாபகப்படுத்தி நீயும் கஷ்டபட்டு அவளையும் கஷ்டபடுத்தாத" என்று அறிவுரை கூற தலையை மாத்திரம் அசைத்தான்.


இவர்கள் நால்வர் மட்டுமே அருகருகே அமர்ந்து இருக்க தங்களுக்கிடையில் மற்றவர்களுக்கு கேட்காத வகையில் பேச, ஆகாஷிற்கு என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் இருந்தாலும் ஏதோ நடந்து முடிந்த பெரிய சம்பவத்தைப் பற்றியே பேசுகின்றனர் என்று புரிந்தது.


அதில் வைஷூ பிரதான இடத்தைப் பற்றி இருக்க அதனால் யாதவ் அதிகமாகவே பாதிக்கப்பட்டு இருக்கிறான் என்றும் தெரிந்தது இருந்தும் அதைப் பற்றி மேலும் கேட்டு யாதவை வருந்த வைப்பதில் ஆகாஷிற்கு விருப்பம் இருக்கவில்லை. அதனால் அமைதியையும், மௌனத்தையும் கடைப்பிடித்தான்.


நேரம் வேகமாக பறக்க உணவு வருகை தந்ததும் அனைவரும் பழைய பகைகளை மறந்து, சிரித்துப் பேசி ஒருவரை ஒருவர் கலாய்த்து சாப்பிட்டு முடித்தனர். நேரமும் பதினொன்றை நெருங்க வானவேடிக்கை நிகழ்ச்சியை நடத்த அனைத்து ஆண்களும் ஒன்று சேர்ந்து வேலைகளை ஆரம்பித்தனர்.


வைஷூ, "எனக்கு ஃபயர் வேர்க்ஸ் ரொம்ப பிடிக்கும். தீபாவளிக்கு நானும் அக்காவும் பட்டாசு, வானவெடி நிறைய போடுவோம்" என்று சிரிப்பிள்ளை சந்தோஷத்துடன் உரைக்க சனா, அபி இருவருமே, "நாங்க அந்த பக்கமே போக மாட்டோம். அண்ணாவை (மாமாவை) வச்சு போடுவோம்" என்றனர்.


ஆகாஷின் மனைவி ப்ரியாவும் தன்னுடைய திருமணத்துக்கு முன்னான, பின்னான அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள அதை வைத்து மற்ற பெண்கள் மூவருமே அவளைக் காலாய்த்துத் தள்ள அவர்களை நிறுத்த முடியாமல் திணறிப் போனாள் ப்ரியா.


நேரம் பன்னிரெண்டை நெருங்க அனைவருமே குடும்பத்துடன் அருகருகே மைதானத்தில் வான வேடிக்கை நிகழ்ச்சியைப் பார்க்க நின்றனர். சாத்விக், சனா இருவரும் ஒருவர் கரத்தோடு மற்றவர் கரத்தை பிடித்து நிற்க, அபி கார்த்திக்கின் தோளில் சாய்ந்து இருக்க அவளை அணைத்தவாறு நின்று இருந்தான் கார்த்திக்.


ஆகாஷ் ஒரு கையில் குழந்தையை ஏந்தி மற்றைய கையால் மனைவி ப்ரியாவை தோளோடு அணைத்தவாறு இருக்க, யாதவ் வைஷூ இருவருமே அருகருகே நின்று இருந்தனர். நேரம் பதினொன்று ஐம்பத்து ஒன்பதைத் தொட அனைவருமே அறுபதில் இருந்து ஒன்று வரை எண்ண ஆரம்பித்தனர் சத்தமாக.


ஒவ்வொரின் முகம் புன்னகையாலும், மனமவ சந்தோஷத்தாலும் நிரம்பி இருக்க அனைவருமே ஆவலுடன் புது வருடப் பிறப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர். மூன்று, இரண்டு, ஒன்று என எண்கள் எண்ணியவுடன், "விஷ் யுவர் ஹேபி நியூர்" என்று வானவேடிக்கைகள் வெடிக்க ஆரம்பித்தன.


பட்டாசு, வானவேடிகைகளில் வெடிக்க, முதல் ஐந்து பட்டாசுகள் வெடித்தில் வைஷூ தடுக்கி விழப் பார்க்க அவசரமாக அவளை இடை தாங்கி பிடித்த யாதவ் அவளை இழுத்து தன் முன்னே நிறுத்தி பின்னிருந்து அணைத்தவாறு நிற்க வைஷூ வெட்கத்துடன் அவன் நெஞ்சில் தலை சாய்த்தவாறு வேடிக்கைகளைப் பார்த்தாள்.


மற்ற ஜோடிகளும் இவர்களைப் பார்த்து புன்னகைத்து அத் தருணத்தை இரசிக்க ஆரம்பித்தனர். பன்னிரெண்டு முப்பது வரை வானவேடிக்கை நிகழ்ச்சி நடக்க சிறு குழந்தைகள் முதல் அனைவருமே அதை இரசித்துப் பார்த்தனர். அனைவருக்குமே இவ்வருடப் பிறப்பு சிறப்பனாதாக துவங்கியது.


அனைவருமே தங்கள் குடும்பத்திற்கும் நண்பர்களிற்கும் அங்கிருந்தோருக்கும் மாறி மாறி புதிய வருடப்பிறப்பிற்கான வாழ்த்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தனர்.


யாதவ், "நேரமாக குளிர ஆரம்பிக்கும். அதனால ரூமுக்கு போங்க எல்லாரும்" என்று வைஷூவிடமும் மற்ற பெண்களிடமும் உரைக்க, "ஆமா ரூமுக்கு போங்க. நாங்க கொஞ்ச நேரம் பேசிட்டு வரோம்" என்று சாத்விக்கும் கூறினான்.


பெண்களும் சரியென்று செல்ல அபி, "ரொம்ப லேட்டாக வேணாம். சளி பிடிச்சிக்கும். சீக்கிரமா ரூமுக்கு வர பாருங்க" என்று மொழிந்து மற்ற மூவருடனும் பேசியவாறு சென்றாள். ஆகாஷின் குழந்தையும் உறக்கத்தை தழுவ ப்ரியா முதலில் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் செல்ல மூன்று நாயகிகளும் சனாவின் அறையில் கூடி ஆண்கள் வரும் வரையில் கதைக்க ஆரம்பித்தனர்.


ஆண்கள் குடிப்பதற்காக மதுவும் அழைத்து வரப்பட்டு இருந்தது. கிஷோரும் இவர்கள் நால்வருடனும் அமர்ந்து, "நீங்க நாலு பேரும் ஒத்துமையா இருக்கிறது சந்தோஷமா இருக்கு. ஆனால் ஒரு அண்ணனா ப்ரவீன் மேலே இருக்கிற கோபம் குறையவே இல்லை" என்று கோபமாகக் கூறி மதுவை அப்படியே வாயில் ஊற்றினான்.


நால்வருக்குமே பழைய ஞாபககங்கள் கண் முன் தோன்ற அதற்கு மேலே ஒருவரால் மற்றவரின் முகத்தை பார்க்க முடியவில்லை. யாதவ், கார்த்திக் இருவருமே தனித்தனியாக அங்கிருந்து எழுந்து செல்ல ஆகாஷூம், சாதவிக்கும் அங்கே சிலையாய் அமர்ந்து இருந்தனர். கிஷோர் குடித்து குடித்து போதையில் மட்டையாகி இருந்தான்.


சாத்விக், "பழைசை நினைச்சாலே என்னால கோபத்தை கட்டுப்படுத்த முடியல்லைடா. அன்னிக்கு நான் தப்பு பண்ணாமல் அவமானப்பட்டதையோ, அம்மாவை இழந்ததையோ மறக்க முடியல்லைடா" என்று அங்கிருந்த மது போத்தலை எடுத்து, 'மடமட' என குடிக்க ஆரம்பித்தான்.


ஆகாஷ், "டேய் டேய்" என்று கத்தியது அவன் காதில் விழவே இல்லை. அவன் தடுக்க முன்பே குடிக்க ஆரம்பித்து இருக்க, "நீ குடிச்சதை நான் தடுக்க இல்லைன்னு அவனுங்களுக்கு தெரிஞ்சது நான் தான் செருப்பால வாங்குவேன். அதனால நானும் குடிக்கிறேன்" என்று அவசரமாக ஒரு போத்தலை உடைத்து குடிக்க ஆரம்பித்தான்.


அவனது மனசாட்சி, "சீ.. நீயெல்லாம் திருந்த மாட்டடா. குடிக்கிறதுக்கு உனக்கு கிடைச்சி இருக்கிற காரணத்தைப் பாரு" என்று காரி துப்ப அதைத் துடித்தவாறு இரு போத்தல்களை காலி செய்தான்.


யாதவிற்கு எப்போதுமே கண் முன்னே தோன்றும் அவ் அப்பாவியான முகமும், இரத்ததமும் நினைவிற்கு வர கண்களை இறுக மூடி கண்ணீரை கட்டுப்படுத்தினான். "எதுக்கு அப்படி பண்ண? செத்துட்டு இருக்கும் போது தான் என் ஞாபகம் வருமா?" என்று வலியோடு நினைத்தவன் உடனே ராமிற்கு அழைத்தான்.


ராம் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க மொபைல் ஒலிக்கும் சத்ததில் அடித்துப் பிடித்து எழுந்தவன் திரையைப் பார்க்க அதில் யாதவின் பெயரைப் பார்த்ததும், "இவரு எதுக்கு இப்போ ஃபோன் பண்றாரு?" என்று குழம்பி அழைப்பை ஏற்றான்.


யாதவ், "விஷ் யுவர் ஹாப்பி நியுர் ராம்" என்று உரைக்க, 'அதை நாளைக்கு சொன்னா என்னவாம்?' உள்ளுக்குள் புகைந்து, "தேங்கியூ என்ட் சேம் டு யூ சேர்" என்றான் அப்பாவியாய். "சாப்பிட்டியா? ஆமா எதுக்கு நீ போன் பண்ணவே இல்லை எனக்கு?" என்று உரிமையுடன் வினவ, 'நான் என்ன உங்க லவரா சேர் ஃபோன் பண்ண?' என்று மனதுக்குள் கவுன்டர் கொடுத்தான்.


யாதவ், "என்ன சத்தத்தை காணோம் அவளோ தைரியமா உனக்கு என் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்க?" என்று மிரட்ட, "அப்படி எல்லாம் ஏதும் இல்லை சேர் தப்பா எடுத்துகாதிங்க... நான் நல்லா சாப்பிட்டேன் சேர். நீங்க போன் பண்ணாமல் இருந்தால் நானே உங்களை கூப்பிட்டு பேசுறேன்" என பதறி பதில் அளித்தான்.


யாதவ், அவனுடைய முகப் பாவனை எவ்வாறு இருக்கும் என்று யோசிக்க 'பக்' என சிரிப்பு வர அதை விழுங்கிக் கொண்டான். ராம், "சேர்..." என்று பாவமாய் அழைக்க, "இருக்கேன். பத்துரமா இரு. ஹெல்த்தை பார்த்துக்கோ" என்று அழைப்பைத் துண்டித்து, அங்கிருந்து நகர்ந்தான்.


சாத்விக், "ஜானு பேபி" என்று நா குழற பேசியவாறே குடித்ததில் போதை ஏறியவாறே தடுமாற்றத்தில் விழ அவனைத் தாங்கிக் கொண்டான் யாதவ்.


"இடியட் உனக்கு தான் குடிச்சால உடம்புக்கு ஒத்துக்காதுன்னு தெரியும்ல என்ன ம***** குடிச்ச? எங்கடா உன் உயிர் நண்பன்னு ஒருத்தன் சுத்திட்டு இருப்பானே" என்று எகிற, "ஐயோ வயிறு எரியுதே" என்று போதையில் வயிற்றைப் பிடித்தவன், "பழசு ஞாபகம் வந்துருச்சு. அதான் குடிச்சேன். நீ யாருடா என்னை கேட்க?" என்று அவன் கழுத்தோடு கையிட்டு வினவினான் சாத்விக்.


"ஆங்...உன் பொன்டாட்டி. ஏதாவது பேசின பல்லை உடச்சிடுவேன்" என்று கோபமாய் இரைந்த யாதவ், அவனைப் பிடித்துக் கொண்டான் விழாமல். சாத்விக்கை தேடி அங்கே வந்த கார்த்திக் அவர்களைப் பார்த்தான்.


சாத்விக், "ஏன் ஜானு பேபி உன் முகம் சொரசொரன்னு இருக்கு?" என்று யாதவின் கன்னத்தை வருடினான் சாத்விக். "ப்ரவீன்" என்று பல்லைக் கடித்து திரும்ப அங்கே இவர்களை பார்த்தவாறு நின்று இருந்தான் கார்த்திக்.


யாதவ், "அங்க ஏன் டா மசமசன்னு நின்னுட்டு இருக்க? அங்கே ஆகாஷ் இருக்கான். அவனை போய் கூட்டிட்டு வா. நான் இவனை இவன் ரூமுக்கு கூட்டிட்டு போறேன்" என்று சாத்விக்கை தூக்கியவாறே ஆகாஷை கண்களால் தேட அவனோ தன் மனைவி என்று நினைத்து தூணைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்தான் ஆகாஷ்.


கார்த்திக், "குடிச்சால் தூணுக்கும், பொண்ணுக்கும் வித்தியாசத்தை மறந்திருவிங்களாடா?" என்று முணகியவாறே ஆகாஷை இழுத்து வந்தான்.


அவன் முணிகயதைக் கேட்ட யாதவ், "இவனை விட அவன் பெடர். இவன் பொண்ணுக்கும், பையனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கான்" என்று வெளிப்படையாகவே தலையிலிடித்து சிறிது தூரம் நடந்தனர்.


கார்த்திக் தனியாக சென்று தான் பார்த்தவற்றை மட்டுமே கொண்டு நடந்த விடயங்களை யோசிக்க சாத்விக்கின் இழப்பிற்கும் காரணம் தான் என்று சுத்தியலால் இதயத்தில் ஓங்கி அடித்தது போன்ற வலி ஏற்பட்டது.


கண்களை இறுக மூடி வானத்தைப் பார்த்து, "என்னை மன்னிச்சிருங்க அம்மா. உங்க பையனோட கஷ்டத்துக்கு நானும் காரணம். நான் எதையுமே வேணூன்னு பண்ண இல்லை. கண்மூடித்தனமான பாசம் இதை பண்ண வச்சிருச்சு" என்று வானில் நட்சத்திரமாக மின்னும் சாத்விக் தாயிடம் மானசீகமாக மன்னிப்பை வேண்டினான்.


அதன் பின் வெகு நேரம் தான் தனியாக இருப்பதை உணர்ந்து அவர்களைத் தேடி வரும் போது யாதவ் சாத்விக்கை தாங்கி இருக்க அவனின் கன்னத்தை சாத்விக் வருடியதையும் பார்த்தான்.


அவர்கள் முன்னேறி நடக்க நால்வரின் மனைவிகளும் வெட்டவா குத்தவா என்ற ரீதியில் அவர்களை முறைத்து நின்று இருந்தனர்.


சனா, "இதான் நீங்க பேசிட்டு இருக்கிற லட்சணமா?" என்று கோபமாக கேட்க, "முதல்ல இவனை ரூமுக்கு கூட்டிட்டு போ. இவனுக்கு குடிச்சால் உடம்புக்கு ஒத்துக்காது. நான் போய் லெமன் ஜூசும் சாப்பிட ஏதாவதும் எடுத்துட்டு வரேன்" என்று யாதவ் சென்றான்.


சனா அவனைத் தாங்கியவாறே அறைக்குள் நுழைந்துக் கொள்ள, "ஜானு பேபி" என்று அணைத்தவன், "என்னை விட்டு எங்கேயும் போயிராத" என்று புலம்பி அணைத்தவன், "ஐயோ வயிறு வலிக்குதே" என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டான்.


இவ்வாறு அவளைக் கொஞ்சியும் அவன் வலியில் துடித்தும் சனாவை படுத்தி எடுத்துவிட்டான். இங்கே ஆகாஷோ புலம்பியவாறே கட்டிலில் உறங்கினான். மீண்டும் கார்த்திக், யாதவ் இருவரும் வருகை தந்து முழுபோதையில் மயங்கிக் கிடந்த கிஷோரை அவனது அரைறையில் விட்டுச் சென்று சாத்விக்கிற்கு உணவையும் தண்ணீரையும் எடுத்துச் சென்றனர்.


அபி கார்த்திக்கை முறைக்க, "சத்தியமா நான் குடிக்கவே இல்லைடி" என்று பதறி அவசரமாக பதில் அளிக்க, "அப்போ அவங்க இரண்டு பேரும் மட்டும் எப்படி குடிச்சாங்க?" என்று அழுத்தத்துடன் வினவினாள். "தெரியாது நயா" என்று பரிதாபமாக மொழிந்து யாதவைப் பார்க்க, "எதுக்கு என்னை பார்க்குற? நானும் தனியா போயிட்டு வரும் போது அந்த கோலத்துல நின்னுட்டு இருந்தானுங்க" என்றான் அவசரமாக.


அபி, "என்னமோ பண்ணுங்க" என்று கோபமாய்க் கூறி அவளது அறைக்குச் செல்ல, வைஷுவும் மௌனமாய் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். கார்த்திக் அவளைக் கெஞ்சியும், கொஞ்சியும் சமாதானம் செய்து இருந்தான்.


யாதவ் அறைக்குள் நுழையும் போது வைஷூ படுத்திருக்க, "எனக்கு இன்னும் தூக்கம் வர இல்லை நவி. நான் போய் தனியா இருந்துட்டு வரேன்" என்று கதவை அடைத்து வெளியேறினான். யாதவ் இல்லாது அவளை தூக்கம் தழுவாமல் இருக்க அமைதியாய் எழுந்து அமர்ந்தாள்.


வெகு நேரத்திற்குப் பிறகு யாதவ் உள்ளே நுழைய அவள் அமர்ந்தவாறு தூங்கி இருப்பதைப் பார்த்தவன் ஒரு சிறு புன்னகையைச் செலுத்தி அவளை ஒழுங்காக படுக்க வைத்து அவளை அணைத்தவாறே தானும் உறங்கினான்.


சூரியனும் புதுவருடப்பினால் புத்துணர்வுடன் வெளியே வர அனைவருமே புது வருடத்தில் முதல் நாளை அழகாக வரவேற்றனர். அனைத்து ஜோடிகளும், குடும்பத்தினரும் எழுந்து தங்களை சுத்தம் செய்து குளித்து வெளியே வர காலை உணவும் தயாராக இருந்தது.


சனா முகத்தை தூக்கி அமர்ந்திருக்க அவளை காலையில் இருந்தே சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருந்தான் சாத்விக். ஆனால் அவளோ குடித்ததிற்காக மலை இறங்காது இருக்க, கெஞ்சிக் கொண்டு இருந்தான் முயற்சியை விடாது.


உணவை எடுத்து முடித்ததும் சனா, அபி, வைஷூ, ப்ரியா அனைவரும் பேச சாத்விக் கண்களாலேயே மன்னிப்பை யாசிப்பதைப் பார்த்தவர்கள், "பாவம் மன்னிச்சு விடு" என்று சிரிப்புடன் அறிவுரை கூற, "சும்மா மன்னிச்சுவிட கூடாது. ஏதாவது வாங்கி கேட்கலாம்" என்று அவனை நோக்கி இரண்டி நடந்தவளுக்கு உலகமே சுற்றுவது போல் இருக்க தலையைப் பிடித்துக் கொண்டாள்.


கண்களை இறுக மூடித் திறந்து மீண்டும் நடக்க உலகமே இருளாக மயங்கி கீழே விழ முனைய ஆரம்பத்திலிருந்தே இதைப் பார்த்த சாத்விக் அவளை நோக்கி நடந்து இருந்தான். அவள் கீழே விழுவதைப் பார்த்தவன் வேகமாக ஓடிச் சென்று அவளைத் தாங்கிக் கொண்டான்.


அன்றே வைஷூவிற்கு ஆபத்து ஆரம்பிக்கும் நாளாகவும் இருந்தது...



தொடரும்...


வெள்ளிகிழமை போட முடியாமல் போச்சு. சோ, இன்னொரு யூ.டி உண்டு

கருத்துக்களைப் பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26497



கண்சிமிட்டும் தென்றலே


அத்தியாயம் 26




சனா மயங்கி கீழே விழுவதைப் பார்த்த சாத்விக் அவளை ஓடிச் சென்று தன் கரங்களில் தாங்கிக் கொண்டான். மற்றவர்களும் பதட்டத்துடன் அவ்விடம் நோக்கி விரைய சாத்விக் அவளைக் கையிலேந்தி அவசரமாக தனது காரை நோக்கி ஓட யாதவும், கார்த்திக்கும் அவனுடைய பின்னே ஓடினர்.



யாதவ் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள கார்த்திக் அவனுக்கருகில் அமர்ந்தான். சாத்விக் சனாவுடன் பின்னிருந்த இருக்கையில் அமர்ந்து கன்னங்களைத் தட்டி எழுப்ப முயற்சிக்க அதற்கோ பயன் இருக்கவில்லை. கார்த்திக் தண்ணீர் போத்தலை வழங்க அவசரமாக தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தும் அவள் விழி திறக்காமல் இருக்க பயம் அவனை பீடித்துக் கொண்டது.


யாதவின் கரங்களில் கார் வேகமாக வைத்தியசாலையை நோக்கி பறந்து செல்ல, கார்த்திக் சாத்விக் இருவருமே பதட்டத்துடன் ஒவ்வொரு நொடியையும் கடத்தினர். அருகில் இருந்த வைத்தியசாலையில் அவளை அனுமதித்து மூவரும் அறைக்குள் வெளியே பதறித் தடுமாறினர்.


டாக்டர் அவளை பரிசோதித்து டிரிப்சை ஏற்றி வெளியே வர பயம் கலந்த பதட்டத்துடன் அவரை மூவரும் நெருங்கி அவர் முகம் பார்க்க, "நீங்க இந்த அளவுக்கு பயப்படுறது போல அவங்களுக்கு ஒன்னும் இல்லை. ஆமா அவங்களோட கணவர் யாரு?" என்று கேட்டார்.


மற்ற இருவரும் சாத்விக்கை காண்பிக்க, "கங்கிராஜூலேஷன்ஸ். நீங்க அப்பாவாக போறிங்க. அவங்க பிரக்னன்டா இருக்கிறதோட, பிரஷர் லோவாகி இருக்கு. அதான் மயங்கி விழுந்துட்டாங்க. பயப்பட தேவையில்லை. கைனகொலொஜிஸ்ட்டை போய் பாருங்க. என்ட் கவனமா பார்த்துகொங்க" என்று உரைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தார்.


சாத்விக்கிற்கு வானில் பறக்காத குறை; முழு உலகையே தன்வசப்படுத்திய உணர்வு அவனுக்கு. பேச்சற்று சந்தோஷத்தில் திக் பிரம்மை பிடித்தவன் போல் நின்று இருக்க கார்த்திக் அவனை அணைத்து, "வாழ்த்துக்களடா. என்னை மாமாவாக்கிட்ட. என் குட்டிமாவோட குழந்தையை என் கையால தூக்க போறேன்னு நினைக்கும் போதே ஜிவ்வுன்னு இருக்கு" என்று கண்கள் கலங்க குரல் கமற மொழிந்தான்.


யாதவும் புன்னகையுடன் தோள் தட்டி கார்த்திக்கை ஆறுதல்படுத்தி சாத்விக்கை அணைத்து, "வாழ்த்துக்கள். சனாவை ஒழுங்கா பார்த்துக்கோ" என்று முறைத்தவாறே கூறி தன் வாழ்த்தை தெரிவிக்க சாத்விக் அனைத்தையுமே புன்னகை தவழும் முகத்துடன் ஏற்று அவனுடைய ஜானுவைப் பார்க்கச் சென்றான்.


சனா மயக்கத்தில் இருக்க அவள் அருகில் நெருங்கியவன் அவளுடைய நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டு அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான். "தேங்கியூ பேபி. என் அம்மாவையோ, அப்பாவையோ பார்க்க போறேன்னு நினைக்கும் போது ஹேப்பியா இருக்கு. அந்த உணர்வை வார்த்தையால சொல்ல முடியல்லை.


என்னை அநாதைங்குற பட்டத்துல இருந்து வெளியே கொண்டு வந்துட்ட பேபி. எனக்குன்னு சொந்தமா, என் இரத்தத்துல ஒரு உறவை கொடுக்குறதுக்கு தேங்ஸ் ஜானு. லவ்.யூ சோ மச் ஜானு" என்று உரைத்தவாறே விழிநீரை வடிக்க, "நீங்க அழுதா பார்க்க முடியாது சவீன். அதனால எந்திரிங்க" என அவளுடைய காதோரம் முணுமுணுத்தாள் சனா.


சாத்விக் அவசரமாக அவளிடம் இருந்து விலகி சனாவின் வதனத்தைப் பார்த்து, "நீ எப்போ கண் முழிச்ச?" எனக் கேட்க, "நீங்க எனக்கு முத்தம் கொடுக்கும் போதே கண் முழிச்சிட்டேன். உங்களோட சந்தோஷம் எவளோன்னு நான் என் காதால கேட்கனும்னு தோணுச்சு, அதான் அமைதியா இருந்தேன்" என்று பதிலளித்தாள்.


சாத்விக், "ஜானு" என்று உரைத்து தன் சந்தோஷத்தை முகம் முழுவதும் முத்தமிட்டு தெரிவிக்க அவளும் அவனுக்கேற்றாற் போன்று வளைந்துக் கொடுத்தாள். சில நேரத்திற்குப் பின், "அண்ணா எங்களையும் உள்ள வர விடுங்க அண்ணா" என்ற அபியின் குரல் வெளியே கேட்க, அவசரமாக அவளை விட்டு பிரிந்த சாத்விக் அவசர முத்தமொன்றை வைத்து விலகி நின்றான்.


சனா, "உள்ள வா அபி" என்று அழைக்க அவளோடு ஆகாஷ், ப்ரியா தம்பதியினர், யாதவ், வைஷ்ணவி தம்பதாயினரோடு கார்த்திக் அபியுமே உள்ளே நுழைந்தனர். சாத்விக், "நீங்க எப்படி வந்திங்க?" என்று வினவ, "நான் தான் கூப்பிட்டு வந்தேன். நீ பாட்டுக்கு வந்துட்ட. இவங்க அங்கே டென்ஷனாகிட்டே இருந்தாங்க. அதான் என் கார்ல கூப்பிட்டு வந்தேன்" என்றான் ஆகாஷ்.


சாத்விக் புன்னகைக்க, அபி, "ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா. வாழ்த்துக்கள்" என்று அவளும் தனது வாழ்த்தை தெரிவித்து சனாவை அணைத்து தன் வாழ்த்தை தெரிவித்தாள். வைஷூ, ஆகாஷ், ப்ரியா மூவருமே தங்களது வாழ்த்துக்களை மனதார தெரிவித்தனர்.


சாத்விக், "இன்னிக்கு நம்ம கோலேஜ் மேட்ஸ் எல்லோருக்கும் லன்ச் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தான். மொத்த செலவு என்னோடது. நான் அப்பாவாக போறதுக்கான டிரீட்" என்று உரைக்க, "ஹூரே" என்று கத்தி ஆர்பரித்து தாதியிடம் இருந்து திட்டுக்களையும் அனைவரும் பரிசாக பெற்றுக் கொண்டனர்.


கார்த்திக்கும் அபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ப்ரியா, "அடுத்ததா அபி நல்ல விஷயத்தை சீக்கிரம் சொல்லுவாளா? இல்லை வைஷூவா?" என்று சிரிப்புடன் வினவ அபி வெட்கத்தில் தலைக் குனிந்தாள். வைஷூ தற்போதே சிறிது சிறிதாக யாதவை ஏற்றுக் கொண்டு வருவதால் அவள் இதை கனவிலும் நினைக்கவில்லை.


புரியாமல், "நான் என்ன சொல்லனும்?" என்று வினவ, 'இவளை கரெக்ட் பண்ணி ரொமேன்ஸ் பண்ணி குழந்தையை பெத்தெடுக்கும் போது அறுபதாவது கல்யாணத்தை தான் கொண்டாடுவேன் போல இருக்கே. யாதவ் இது என்னடா உனக்கு வந்த சோதனை?' என தனக்குள் புலம்பி மானசீகமாக தலையில் அடித்தவன் அவள் கரம் பற்றி வெளியே இழுத்துச் சென்றான்.


அவளுடைய பதிலில் மற்றவர்கள் சிரிக்க அபி, "அவங்களோட கல்யாணம் எதிர்பாராமல் நடந்தது. அதான் அவளால் நீங்க சொல்ல வரதை புரிஞ்சிக்க முடியல்லை. மித்து அண்ணாவை இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஏத்துகிட்டு வரா. சீக்கிரமா அவளும் குட் நியூஸ் சொல்லுவா பார்த்துகொங்க" என்றாள்.


ஆகாஷ், ப்ரியா இருவருக்கும் அவர்களுடைய நிலை புரிய தங்களுக்குள் அவர்களும் சீக்கிரமாக சேர்ந்து வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டனர். வைஷூவை வெளியே அழைத்து வந்த யாதவ் அவளை தனக்கு நெருக்கமாக நிற்க வைத்து, "நீ புரிஞ்சு பேசுறியா? புரியாமல் பேசுறியா?" என்றான் அவள் விழிகளை உற்று நோக்கி.


வைஷூ, "என்ன சொல்றிங்க?" என்று பாவமாக அவனையே பார்க்க உடனடியாக அவளை அங்கே உயரமாக நின்று இருந்த மரத்தின் அருகே இழுத்துச் சென்றவன் அவளை தன்னோடு அணைத்து அவளது இதழ்களைச் சிறைச் செய்ய முட்டகன்னியின் கண்கள் அகலமாய் விரிந்தன.


அவளை விட்டு பிரிந்தவன், "நீ நைட்டீஸ் கிட்டுல? ஒரு பையன் பொண்ணுக்கு முத்தம் கொடுத்தால் என்ன நடக்கும்னு சொல்லுவாங்க?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி வினவ, அதிர்வு மாறாக் குரலில், "குழந்தை பிறக்கும்னு சொல்லுவாங்க" என்றாள் அவனை விட்டு பார்வையை அகற்றாது.


யாதவ், "அதை தான் அவங்களும் சொன்னிங்க" என்றவன் அவள் செவியின் அருகில் நெருங்கி காதோரம் இதழ் உரசியவாறே, "எனக்கு ஒரு குழந்தை இல்லை. மினிமம் நாலு குழந்தை சரி வேணூம். அதனால..."என்றவன் அவள் அடுத்து என்ன என்று யூகிக்கும் முன்னே அவளுடைய இதழ்களைச் சிறைச் செய்து இருந்தான்.


வைஷூவிற்கு நடப்பது அனைத்துமே உண்மை என்பது புரிய யாதவையே விழியகற்றாது பார்த்தவாரே முத்தத்தை மறுக்காது அமைதி காத்தாள். யாதவிற்கும் அவள் சரியான மனநிலையில் இருக்கிறாள் என்பது தெரிந்து ஆறுதலாக அவளது இதழ்களை சுவைத்து உண்டான்.


வெகுநேரத்திற்குப் பிறகு அவளை விடுவித்தவன் அவளுடைய வதனம் நோக்க பெண்மைக்கே உரிய லட்சணத்துடன் கன்னங்களும், செவிகளும் சிவந்து இருக்க அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை தனியாக விட்டு விட்டு நகர்ந்தான் அவளிற்கு தனிமையை வழங்கி.


வைஷூவிற்கும் அத்தனிமை அவசியமாக இருந்தது. இமை மூடி நடந்த அனைத்தையுமே விழி முன் எடுத்து வர அவளால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 'அத்தானுக்கு நெஜமாவே என்னை பிடிச்சிருக்கா? இல்லை.. சும்மா' என்று தவறாக யோசிக்கும் போதே முதன் முறையாக மனதின் ஓரத்தில் சுருக்கென்ற வலி ஏற்பட்டது.


அவளுடைய மனசாட்சி, "தப்பு தப்பாதான் எல்லாத்தையும் யோசிப்பியா? உன் அத்தானுக்கு உன்னை பிடிக்காதுன்னு நீ தான் நினைச்சிட்டு இருக்க. ஒரு முறையாவது அவரு வாயால உன்னை பிடிக்க இல்லைன்னு சொல்லி இருக்காரா? இல்லை உன்னை எந்த இடத்துலேயாவது விட்டு தான் கொடுத்து இருப்பாரா?" என சாராமாரியாக கேள்விகளை அள்ளி வீசியது.


வைஷூவிடம் அதற்கான பதில்கள் இருக்கவில்லை. "அப்போ அவருக்கு என்னை பிடிக்குமா? அப்போ அக்கா? அவளோ சீக்கிரமா அக்காவை மறக்க முடியுமா? இல்லை காதலை மறந்து வாழ முடியுமா?" என்று மீண்டும் குழம்பி முகம் கசங்க தூரத்தில் அவளையே உன்னிப்பாக கவனித்த யாதவ் இதற்கு மேலே அவளை சிந்திக்க விடக் கூடாது என்று முடிவெடுத்தவன் அவளிடம் வந்தான்.


யாதவ், "நவி" என்று அழைக்க, ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவளுக்கு அவன் அழைத்தது தெரியவில்லை. அவளைத் தொட்டு யாதவ் உலுக்கிய பின்பே சமனிலையை அடைந்தாள். "ஹாங்" என்று வைஷூ விழிக்க, "அதிகமா யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காத. என்னோட மனைவி நீ தான். நீ மட்டும் தான். என்னோட நிகழ்காலமும் நீ தான்; எதிர் காலமும் நீ. இதை எப்போவுமே மனசுல பதிய வச்சிக்கோ" என்று உரைத்து அவள் விரல்களோடு தன் விரல்களை கோர்த்து அழைத்துச் சென்றான்.


சனாவோடு மற்றவர்கள் அனைவருமே மீண்டும் கல்லூரியை நோக்கிச் சென்றனர். அங்கேயும் தகவல் கிட்டியோர் சாத்விக் சனா தம்பதியினருக்கு வாழ்த்தை தெரிவிக்க, அவ்விடமே சந்தோஷத்தில் கலைக் கட்டியது. இங்கே இவர்கள் சந்தோஷமாக இருக்க விஷ்ணுவும், வசுமதியும் சந்தோஷமாக மனக்கசப்புகளை மறந்து புதுவருடப் பிறப்பை குடும்பத்தோடு கொண்டினார்கள்.


சாத்விக் கூறியது போலவே பகல் உணவை முடித்து கதிரவன் மறைய ஆரம்பிக்கும் நேரமும் வந்தது. அனைவரும் விடைப் பெறும் தருணமும் வருகை தர மிகுந்த மன வருத்தத்தோடும், மீண்டும் அனைவருமே சந்திக்கலாம் என்ற ஒப்பந்தத்தோடு விடைப்பெற மூன்று ஜோடிகளுமே தங்கள் வீட்டை நோக்கி பயணித்தனர்.


இடையில் செல்லும் வழியில் வைஷூ வயிற்றைப் பிடித்தவாறே, "பக்கத்துல ஹோட்டல் ஏதாவது இருந்தால் நிறுத்துறிங்களா அத்தான்?" என்று வினவ அவளுடைய மாதாந்த பிரச்சனை என்பதைப் புரிந்துக் கொண்ட யாதவ், "ஒரு ஷொபிங் மோல் இருக்கு. அங்கே போலாம்" என்று வாகனத்தை வேகமாக செலுத்தினான்.


வைஷூ தனது கைப்பையை எடுத்தவாறு அவசரமாக இறங்க யாதவும் அவளோடு இறங்கினான். அவள் அங்கே இருந்த பெண்களுக்கான கழியலறைக்குள் புகுந்துக் கொள்ள யாதவ் அருகே இருந்த ஒரு கடைக்குள் புகுந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அப்போது வேகமாக தன் சக்தியை மீறி ஓடி வந்த பெண் பெண்களுக்கான கழியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.


சிறிது நேரத்தில் அவளைத் துரத்தி வந்த சில ரௌடிகள் அவளை அங்குமிங்கும் தேட யாதவும் அவர்களைப் பார்த்தான். அவர்களின் தோற்றத்தைப் பார்க்கும் போது ரௌடியாக தெரியாவிட்டாலும் யாதவின் பொலிஸ் கண்களுக்கு அவர்கள் யாரையோ வலை வீசி தேடுவதை புரிந்துக் கொள்ள முடிந்தது.


சந்தேகமாக பார்த்தவன் அவர்களை உற்று நோக்கி கவனிக்க சிறிது நேரத்தில் கழியலறையில் இருந்து வெளியே வந்த அப்பெண் அவர்களில் கண்களில் படாது தன் முகத்தை துப்பட்டாவால் மறைத்து வெளியேற முனைய அவர்களில் ஒருவன், "அங்க போறாடா" என்று சத்தமாக கூறி அவளைத் துரத்த மற்றவர்களும் அப் பெண்ணைத் துரத்தினர்.


யாதவும் அவளைத் துரத்தும் அவ் ரௌடிகளைத் துரத்திச் செல்ல இறுதியாக ஓடிய ரௌடியை அணுகி எட்டிமித்திதத்து, மூக்கில் ஓங்கிக் குத்த இரத்தம் வழிந்தவாறே கீழே விழுந்தான். அப் பெண் மேல் தளத்தை நோக்கிச் செல்ல ரௌடிகளும் அவளைப் பின் தொடர யாதவும் பின் தொடர்ந்து ஓடினான்.


ஒவ்வொருவருமே தங்கள் முழு வேகத்தைப் பயன்படுத்தி ஓட யாதவ் மேலும் இருவரைத் தாக்கி நிலைக்குலையச் செய்து இருந்தான். ஆறு பேர் அப்பெண்ணை துரத்த கடைசித் தளமான மொட்டை மாடிக்குச் செல்ல அவளுக்குத் தப்பிக்கும் வழி இல்லாமல் போக அவளைப் பிடிக்க இருவர் நெருங்கினர்.


அதற்குள் யாதவும் அவ்விடத்தை அடைந்து இருந்தான். ஆறு பேரில் ஒருவரைத் தாக்கி அப் பெண்ணை நெருங்க முயற்சிக்க அவளோ பயத்தில் மொட்டைமாடி சுவற்றில் ஏறி நின்று அனைவரையும் திரும்பிப் பார்க்க, அதில் ஒருவன் எங்க அது? அதை மரியாதையா கொடு" என்று மிரட்டியாவாறு நெருங்கினான்.


யாதவ் மேலும் ஒருவரை அடித்து நொருக்கி, "அங்கேயே நில்லு டா. என்னை மீறி அந்த பொண்ணை நெருங்கிக்காட்டுங்கடா" என்ற யாதவின் கர்ஜனையில் மற்ற நால்வருக்கு அடிவயிறு பிசைந்தது. அதை மீறி அவர்களால் அப் பெண்ணை நெருங்க முடியவில்லை.


அப் பெண்ணோ தான் மூடியிருந்த துப்பட்டாவை விலக்க யாதவ் அதிர்ந்து அவளைப் பார்க்க அவனைப் பார்த்தவாறே சிரித்த முகத்துடன் கைகள் இரண்டையும் நீட்டியவாறே மேலிருந்து கீழே பின்னோக்கி சாய்ந்து விழ, அவனது இதழ்களோ 'ஜெனி' என்ற பெயரை முணுமுணுக்க விழிகளில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.


அவள் குதிப்பால் என்பதை எதிர்பாராத மற்ற நால்வருமே அதிர்ந்தவர்கள் யாதவ் தடுமிறி நிற்பதை உணர்ந்து அவனிடம் இருந்து தப்பிச் சென்றனர். 'இது கனவா இருக்கக்கூடாதா? அவ கண்ணு முன்னாடி சாகுறதை பார்க்கவா இத்தனை வருஷமா பார்க்காமல் இருந்தேன்?' என்று நினைக்க நினைக்க பாராங்கல்லால் அவனைத் தாக்கிய வலி ஏற்பட்டது.


வைஷூ கழியலறையில் இருந்து வெளியேறி யாதவைத் தேட, அவன் கண்கள் எட்டும் தூரம் வரையில் தென்படாது போக சாத்விக்கிற்கு அழைத்து விடயத்தைக் கூற மற்ற இரு ஜோடிகளுமே அவ்ஷொபிங் மோலை அடைந்தது. சாத்விக் வைஷூ இருக்குமிடம் நெருங்கி வர வெளியே பாரிய சலசலப்பு கேட்க சனாவையும் அபியையும் அவளிடம் அனுப்பி வைத்து கார்திக்கோடு சலசலப்பு வரும் இடத்திற்கு விரைந்தான்.


அதற்குள் மாடியில் இருந்த யாதவ் இறுகிய முகத்துடன் வந்தவன் ஜெனி குதித்து இறந்த இடத்திற்கே வருகைத் தர அதற்குள் கௌதமோடு அவனது குழுவும் வருகை தந்தது. யாதவ் இரத்த வெள்ளத்தில் மிதக்கும் ஜெனியின் உடலின் அருகில் வந்தவன் விரல்களால் அவள் முகத்தை மறைத்து இருந்த மயிர்களை அகற்றும் போதே விரல்கள் நடுங்கியது.


இதை மற்றவர்கள் கவனிக்கா விடினும் சாத்விக் நன்றாகவே கவனித்தான். யாதவ் அதிகமாக உணர்ச்சிவயப்பட்டு இருக்கிறான் என்பதைக் கண்டுகொண்டவன், 'யாரிந்த பெண்? இவனுக்கும் அப் பெண்ணிற்கும் என்ன தொடர்பு?' என சிந்திக்கலானான். வைஷூவின் வாழ்க்கையில் மீண்டும் பிரச்சனை வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.


கௌதம், "இந்த பொண்ணும் சூசைட் பண்ணி இறந்திருக்காடா" என்று கவலையுடன் உரைக்க, "இவ சுயநினைவோட சூசைட் பண்ணா. யாரும் அவளை கட்டுப்படுத்த இல்லை" என்று மொழிந்தான் இறுகிய குரலில். கௌதம் புருவம் சுருக்கி, "உனக்கு எப்படி தெரியும்?" என்று கேட்க, "என் கண்ணு முன்னாடி தான் மாடியில இருந்து குதிச்சா" என்றான் அவளை வெறித்தவாறே..


கௌதம் அதிர்வுடன், "யாதவ்" என்க, "அந்த பொண்ணை சில பேர் துரத்தி வந்தானுங்க. அவனுங்க யாருங்குற இன்ஃபோர்மேஷன் இன்னும் ஒரு நாளைக்குள்ள எனக்கு வேணூம். இப்போவே போய் ஷொபிங் மோலோட சிசிடிவி புடேஜை எடுத்துக்கோ" என்று உயர் அதிகாரியாய் மாறி ஆணையிட்டு வைஷூ இருக்குமிடம் சென்றான்.


அங்கே அபி,சனா இருவரும் இருப்பதைப் பார்த்து, "நீங்க எப்போ வந்திங்க?" என்று வினவ, "இப்போ கொஞ்சம் முன்னாடி தான் அண்ணா" என்று பதில் அளித்தனர். அதற்குள் சாத்விக், கார்த்திக் இருவருமே வருகைத் தர, "ரொம்ப நேரமா இவங்களை நிறுத்தாத. இப்போ இன்வெஸ்டிகேஷன் நடக்க ஆரம்பிச்சால் சீக்கிரம் வெளியே போக முடியாது. சனாவை வீட்டுக்கு கூட்டிட்டு போ" எனக் கட்டளையிட்டு வைஷூன் கரம் பிடித்து இழுத்துச் சென்றான்.


சாத்விக்கும் மறுத்துப் பேசாது சனாவை அழைத்துச் செல்ல அபியை கார்திக் அழைத்துச் சென்றான். யாதவ் வைஷூவை வீட்டில் விட்டு விட்டு அவளது பாதுகாப்பையும் உறுதிபடுத்திய பிறகு தனது ஸ்டேஷனிற்குச் செல்ல கௌதம் இறந்த உடலை பரிசோதனைக்காக அனுப்பி னைத்து ஜெனியின் பெற்றோரையும் தேடி தகவலை வழங்கி அங்கே வந்திருந்தான்.


யாதவ் இமைமூடி சுழல் நாற்காலியில் புருவம் சுருக்கியவாறே இருக்க உள்ளே அனுமதியோடு நுழைந்த கௌதம், "என்னாச்சுடா ஒரு மாதிரி இருக்க?" என்றான் நண்பனாய். "அந்த பொண்ணு குதிச்சது என் கண்ணுக்குள்ளேயே இருக்குடா" என்று அவசரமாக இமை திறந்து எழுந்து நின்றான்.


கௌதம், "அங்கே என்னதான் நடந்தது?" என்று கேட்க, நடந்த அனைத்தையுமே மறைக்காது கூறியவன் அவளை நன்கறிவான் என்பதை மட்டும் மறைத்துக் கூறினான். இருவரும் உள்ளே பேச அப்போது ஒரு கான்ஸ்டேபில் உள்ளே அனுமதியோடு வந்தவர், "சேர் இறந்த பொண்ணோட அப்பா, அம்மா வந்திருக்காங்க" என்றார்.


கௌதம், "வாடா போய் பார்க்கலாம்" என்று அழைக்க, "இல்லை இப்போ என்னால முடியாதுடா. நான் பார்க்க மாட்டேன். நீயே போய் பேசு" என்று உரைத்தான். எப்போதும் மிடுக்குடனும், ஆளுமையுடனும் பேசுபவன் இன்று தடுமாற்றத்துடன் பேசுவதைப் பார்த்த கௌதமின் மூளை அதைக் குறித்துக் கொண்டதோடு அவனை அழுத்தமாக ஒரு முறைப் பார்த்து அங்கிருந்து வெளியேறினான்.


அப்பெண்ணின் பெற்றோர் தலையில் அடித்து அழ, அப்போதே தெரிந்தது அவர்கள் சமூகத்தில் உள்ள மிகப்பெரிய பணக்கரார்களில் ஒருவர் என்று. எளிமையாகவும், வறுமையானவர்களைப் போன்ற தோற்றத்தில் இருந்த அவர்களைப் பார்த்த கௌதமிற்கும் அவர்களைப் பார்க்க பாவமாக இருந்தது.


அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தவன் யாதவ் இருந்த அறைக்குள் நுழைந்து, "பாவம்டா. பார்க்கவே பரிதாபமா இருக்காங்க. ஒரே பொண்ணு போல அவளும் இப்படி பண்ணவும் உடைஞ்சி போய் இருங்காங்க. ரொம்ப பெரிய பணக்காரங்கன்னா நம்புவியா?" எனறு அவன் பேசிக் கொண்டே செல்ல எப்போதும் தோன்றும் அப்பாவியான ஒரு முகமும், இரத்த வெள்ளத்தில் மிதக்கும் ஒரு முகமும் அவன் கண்முன் தோன்ற அவசரமாக எழுந்து வெளியே சென்றான்.


"டேய் டேய்" என்ற கௌதமின் அழைப்பிற்கு எவ்வித எதிர்வினையும் அவனிடம் இருந்து கிடைக்கவில்லை. இருள் சூழ ஆரம்பிக்கும் வேலையில் தனது காரை எடுத்து வேகமாக ஓட்டிச் சென்றான்.


சாத்விக் சனா, அபி கார்த்திக் நால்வருமே கார்த்திக்கின் வீட்டிற்கே சென்று விசாலாட்சியிடம் அவ் நல்ல விடயத்தைக் கூற அவருமே சந்தோஷத்துடன் சனாவை உச்சிமுகர்ந்தார். "சந்தோஷமா எப்போவுமே இரு" என ஆசிர்வதித்து, "மாப்பிள்ளை சனா இங்கே இருக்கட்டுமா?" என்று தயங்கிக் கேட்டார்.


சாத்விக், "அம்மா நான் ஜானுவை இனிமேல் தனியா விடமாட்டேன். என் வீட்டுல நான் தனிமையை மட்டும் உணர்ந்தேன். அப்புறமா இவ என் வாழ்க்கேயில வந்தா. சந்தோஷமா அந்த நாட்களை அனுபவிக்க எனக்கே எனக்கு சொந்தமான குழந்தை வந்திருக்கான். நான் ஒவ்வொரு நொடியையும் என் வீட்டுல இருந்த பழைய நினைவுகளை போக்கி சந்தோஷத்தை மட்டுமே தரக் கூடிய நாளா மாத்தனும்னு நினைக்கிறேன்" என்றான் சனாவைப் பார்த்தவாறே.


சனாவும் இமைமூடித்திறக்க சாத்விக்கின் உணர்வுகளை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியுமானதாக இருக்க கார்திக், "நீ அவளை உன் கூடவே வச்சிக்கோ. நாங்க அடிக்கடி அவளை வந்து பார்த்துக்குறோம்" என்றான் தன் ஏக்கத்தை மறைத்து. அவனுடைய உணர்வைப் புரிந்த அபி ஆறுதலாக அவன் கரம் பற்றி அழுத்தினாள்.


அதன் பிறகு அன்றைய தினத்தில் அங்கே தங்கிய சாத்விக் சனா ஜோடி அடுத்தநாளே தங்கள் வீட்டை நோக்கிச் சென்றது. அவனுடைய எண்ணத்தில் யாதவின் உணர்சிப் போராட்டமான முகமே நெருஞ்சி முள்ளாய்க்குத்த அதைப் பற்றி விசாரிக்க முடிவெடுத்தான்.


யாதவ் வேகமாகச் சென்று பல மணி நேரமாக கடலையே வெறித்து இருந்தான். பின்பு தன் மனதில் உள்ள போராட்டத்தை அடக்க முடியாது, ஒரு வைன் ஷாப்பிற்குச் சென்று மதுவை வாங்கியவன் மூக்கு விடைக்க குடித்து மேலும் இரு போத்தல்களை வாங்கி வீட்டிற்கு வந்தான். வைஷூ குளித்து முடித்து யாதவிற்காக இரவு உணவை சமைத்து காத்திருக்க அவன் வருகை தந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து விழித்தாள்.


அவனை கரம் பற்றி உள்ளே அழைக்க, "நான் ஸ்டடியா தான் இருக்கேன். என்னை விடு" என்று அவள் கரத்தை தட்டிவிட்டு மது போத்தல்களுடன் இவர்களது அறை அல்லாத மற்ற அறைக்குள் நுழைந்துக் கொண்டான். வைஷூ யாதவின் திடீர் மாற்றம் புரியாது குழம்பித்தவித்து, கௌதமிடம் கேட்க நினைத்தாள்.


'வேணாம் வைஷூ இதைப் பத்தி யார் கிட்டவும் பேசாத' என தனக்குத் தானே அறிவுரைக் கூறிக் கொண்டவள், "குடிச்ச நேரத்துல கேள்வி கேட்டால் உண்மையை பேசுவாங்களாமே! நாமளும் நம்ம டவுட்டை கேட்கலாம்" என்ற விபரீத எண்ணம் தோன்றியது அவளுக்கு.


அவனிடம் சென்றவள், "நீங்க எதுக்காக அத்தான் சனா வாழ்க்கையில விளையாடினிங்க? நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா?" என்று நெடு நாட்களாக மனதை அரித்த கேள்வியைக் கேட்க, யாதவிற்கு ஏதேதோ சம்பவங்கள் கண்முன் தோன்ற மறக்க நினைத்த அனைத்துமே கண்முன் தோன்றியது. கையிலிருந்த காலி மது போத்தலை தூக்கி சுவற்றில் வீசி எறிந்து அவளை கனல் கக்கப் பார்த்தான்.


யாதவ், "நான் நல்லவன் இல்லை. ரொம்ப ரொம்ப கெட்டவன். இதுக்கு மேலே என்னைப் பத்தி தேட நினைக்காத. என் வாயால நான் எதையும் சொல்ல மாட்டேன். என்னை மிருகமா மாத்ததாத" என்று கர்ஜித்தவன் போத்தலில் இருந்த முழு சரக்கையும் மடமட என குடித்து அறையில் இருந்து வெளியேற குடித்ததினாலா? இல்லை அவன் மனதில் இருக்கும் இரகசித்தியத்தினாலோ கண்கள் சிவந்து கண்ணீரைச் சுரந்து இருந்தன.


வைவஷூவோ பயத்தில் சுவரோடு ஒட்டி நின்று இருந்தாள். அவன் கோபத்தைப் பார்த்து இவளுடைய இயல்பாக வந்திருந்த தைரியக் குணம் அங்கிருந்து பறந்து இருந்து...



தொடரும்...


கருத்துக்களைப் பகிர,




 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்சிமிட்டும் தென்றலே


அத்தியாயம் 27




யாதவ் அங்கிருந்து வெளியேறியவுடன் வைஷூ சுவரோடு ஒட்டி நின்றவள், கண்கள் கலங்க அவன் சென்ற திசையை வெறித்தாள். எத்தனை நிமிடங்களாக அவ்வாறு நின்றாள் என்பதை அவள் மட்டுமே அறிவாள். பின் தன் விழிகளில் தழும்பும் நீரை துடைத்து உடனடியாக விஷ்ணுவிற்கு அழைத்தாள்.


சாப்பிட்டு சிறிது ஓய்வெடுக்கலாம் என்று நினைத்து வைத்தியசாலையில் தனது தனிப்பட்ட அறைக்குள் நுழைந்துக் கொள்ளவும் வைஷூ அவனுக்கு அழைக்கவும் சரியாக இருந்தது. விஷ்ணு 'இந்த நேரத்துக்கு எதுக்கு இவ போன் பண்றா?' என்று ஒருவித கலக்கத்துடன் அழைப்பை ஏற்க, "குடிச்சி மயங்கி விழுந்து இருக்கிறவங்களை என்ன பண்ணனும்?" என்றாள் எடுத்த எடுப்பிலேயே.



விஷ்ணுவிற்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. "என்ன பேசுற நீ?" என்று வினவ, "உனக்கு காதும் அவுட் ஆகிருச்சா?" என்று எகிறினாள். விஷ்ணு கோபமாக, "உனக்கு என்ன பிரச்சனை? இப்போ எதுக்கு எடுத்த எடுப்பிலேயே குடிக்குறதைப் பத்தி பேசுற?" என்றான்.


வைஷூ, "அங்..... சரக்கு எனக்கு கிடைச்சு இருக்கு. அதான் நான் போதையாகிட்டால் உன் ஃபிரன்டு கொஞ்சமா கஷ்டபடனுமா? இல்லை அதிகமா கஷ்டபடனுமான்னு செக் பண்ணி பார்க்க தான்" என்று எரிச்சலுடன் மொழிய கண்களை விரித்து அதே இடத்தில் விஷ்ணு நின்றுவிட்டான்.


விஷ்ணு, "என்ன வாயாடி சொல்ற? குடிக்க போறியா? இந்த காலத்துல குடிமகன்களை பனல குடிமகள்களும் இருக்காங்களே!! ஏய் இதெல்லாம் பண்ணாதடி" என்று பதற, 'கிருஷ்ணா முதல்ல இந்த தயிர்சாதத்துக்கு கொஞ்சமாச்சும் அறிவை கொடு. எதை சொன்னாலும் இந்த பயபுள்ள நம்புது' என்று தலையில் அடித்து வேண்டிக் கொண்டாள்.


வைஷூ, " நான் உன் கிட்ட கேட்டது என்ன? நீ என்ன மேன் பேசுற? நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு? போதையில மட்டையா இருந்தால் அடுத்து என்ன பண்ணனும்?" என்று சண்டையிட, "பக்கத்துல கல்லு ஏதாவது இருந்து தூக்கி போட்டு ஒரேடியா மேலே அனுப்பிரு" என்றான் கடுப்பாக.


வைஷூ, "யோவ் போலி டாக்டர், என்ன நக்கலா? உனக்கு இவளோ தான் மரியாதை, ஒழுங்கா கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு" என்று மரியாதை இன்றி இவளுமே கடுப்புடன் பேச, "என்ன வாயாடி பொசுக்குன்னு மரியாதை இல்லாமல் பேசிட்ட. மனிஷனுக்கு பக்குன்னு இருக்குல்ல. என்னை சாந்தப்படுத்த கொஞ்ச டைம் கொடு" என்றான் பரிதாபமாக.


"ஆமா இவரு 400 மீட்டர் மரதன் ஓடிட்டு வந்துட்டாரு தன்னை சாந்தப்படுத்த டைம் கேட்குறாரு" என்று சத்தமாக கடுப்பு மாறாமலேயே முணுமுணுக்க, 'இவளைப் போல ஒரு இராட்சசி கிட்ட என்னை மாட்டி விட்டு இருக்கியே கடவுளே! என்னை பார்த்தில் பாவமாவே இல்லையா?' எனக் கதறுவது பாவம் கடவுளின் செவியை அடையவில்லை என்பதை அவ் அப்பாவி ஜீவனுக்கு யார் கூறுவது?



"யோவ் போலி டாக்டர். லைன்ல இருக்கியா இல்லையா?" என்று கத்த, "ஆத்தா மாரியாத்தா இங்கே தான் நான் இருக்கேன். தயவு பண்ணி உன் திருவாயை திறந்துராத" என்று மொபைலோடு இரு கரங்களையும் கூப்பி, அவள் இங்கே இல்லை என்பதையும் மறந்து.


விஷ்ணு ஆழமூச்செடுத்து தன்னை சரிபடுத்திக் கொண்டவன், "முதல்ல குடிச்சவங்களுக்கு போதையை தெளிய வைக்கனும். உனக்கு அவங்க மேலே கோபம் இருந்தால் தண்ணீயை நிறைச்சு அதை அப்படியே அவங்க மேலே கொட்டிவிடு.


கோபம் இல்லைன்னா ஷவருக்கு கீழே கொண்டு போய் நிறுத்தனும்" என்க, "ஓஓஓ இப்படியெல்லாம் ஸ்டெப்ஸ் இருக்கா?" என எதிர் கேள்வி கேட்டாள். "ஆமா, அடுத்து கோபம் இல்லைன்னா, டிரஸ் சேன்ஜ் பண்ணி விடு; கோபம் இருந்தால் வேணாம்" என்க, "சரி அடுத்தது" என்றாள் அவசரமாக.


" அப்போவும் போதை ஃபுள்ளா தெளிஞ்சு இருக்காது. அடுத்து லெமன் ஜூஸை ரெடி பண்ணு. கோபம் இல்லைன்னால் ஒழுங்கா உட்கார வச்சு கொஞ்சம் கொஞ்சமா புகட்டி விடு. கோ..." என்று முடிக்கும் முன், " நிறுத்து. கோபம் இல்லைன்னா அடிச்சு துவைச்சு புகட்டி விடனும். இதானே!.. புரிஞ்சது. பாய்" என்று அவன் "ஏய் ஏய்" என்று அழைப்பதையும் பொருட்படுத்தாது அழைப்பைத் துண்டித்தாள்.


அவளோடு பேசி முடித்து நெஞ்சைப் பிடித்து அமர்ந்தவன், "இந்த குடும்பத்துக்கு போய் நான் மாட்டிகிட்டு நான் படுற பாடு இருக்கே. ஐயய்யோ!!! நான் மத்த பேஷன்சை பார்க்குறேனோ இல்லையோ இதுங்க கூட சேர்ந்து நான் பேஷன்ட் ஆகிருவேன்" என்று நீவிக் கொண்டான்.


அவனைப் பார்க்க வருகை தந்த ராம், "என்னாச்சு சேர் நெஞ்சு வலிக்குதா?" என்றவன், "ஐயோ யாராவது வாங்களேன் விஷ்ணு டாக்டருக்கு ஹார்ட் அடேக் வந்துருச்சு" என்று கத்தினான். "எனக்கு எப்போடா ஹார்ட் அடேக் வந்தது? முருகா எனக்குன்னு வந்து வாய்க்குறானுங்களே" என்று தன்னை நினைத்து நொந்துக் கொண்டவன் ராமின் தலையில் ஓங்கிக் கொட்டினான்.


"அம்மா" என்று தலையைப் பிடித்து பாவமாக விஷ்ணுவைப் பார்த்தவன், "எதுக்கு சேர் குட்டினிங்க? உங்களுக்கு உதவி தானே பண்ணேன்" என்றான் விட்டால் அழுதுவிடுவேன் என்ற குரலில்.


விஷ்ணு, "நான் உன் கிட்ட சொன்னேனா? எனக்கு நெஞ்சு வலிக்குதுன்னு. விட்டால் என்னை ஆபரேஷன் தியடருக்கு கூட்டிட்டு போய் ஆபரேஷனே பண்ணிருவ போல இருக்கே!! இன்னிக்கு எனக்கு நெஞ்சு வலி வருதோ இல்லையோ ஆனால் உங்க கூட சேர்ந்த பாவத்துக்கு கண்டிப்பா எனக்கு ஹார்ட் அடேக் வரும்டா" என்று எழுந்தான் விஷ்ணு.


"எனக்கு மட்டும் எப்படி தான் டிசைன் டிசைனா ஆளுங்க மாட்றாங்களோ.. என் இராசி தான் அப்பிடியா இருக்குமா? முதல்ல இதைப் பத்தி அம்மா கிட்ட பேசனும்" என்று தனக்குள் புலம்புவதாக நினைத்து சத்தமாகவே புலம்பிச் செல்ல, "சேர் லூசாகிட்டாரா?" என்ற ரீதியில் தலையில் சொறிந்தவாறு பார்த்தான் ராம்.


இவ்வாறு வைஷூவால் பெரிய குழப்பமே வைத்தியசாலையில் நிகழ்வது தெரியாமல் வெளியே சென்ற யாதவ் வரும் வரையில் அதே அறையில் இருக்க அவளை ஏமாற்றாது போதையில் நிற்கக் கூட முடியாமல் தள்ளாடி வந்தவன் அங்கே வைஷூ அமர்ந்து இருப்பதைப் பார்த்து அவள் அருகில் சென்று தரையில் அமர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான்.


வைஷூவின் கண்களில் அவன் மீதான பயம் தெரிய அவனது போதையையும் மீறி அவனது மனது அதை அறிந்து வலிக்க, அவளையே சில நொடிகள் உற்று நோக்கியவன் அவளது மடியில் தன் சிரத்தை வைத்து முகத்தைப் புதைத்துக் கொண்டான்.


அவளது ஆடையையும் மீறி அவனது விழிகளில் தளும்பி வழியும் நீர் அவளை நனைக்க, அவளது தாய்மை உணர்வு வெளி வந்து அவன் சிரத்தை மென்மையாக வருடிக் கொடுத்தது அவளுடைய தளிர் கரங்கள். அவளும் எதுவும் பேசவில்லை; அவனும் எதுவும் பேசவில்லை.


இவ்வாறே சில நொடிகள் கடக்க தன் கரத்தை அவன் கேசத்தில் இருந்து விடுவித்தவள், அவன் தலையை அவன் மடியில் இருந்து எடுத்து விட்டு எழுந்து நின்று அவனையும் எழுப்பி நிற்க வைத்து விஷ்ணு கூறியது போல அவனை குளியலறைக்குள் அழைத்துச் சென்றாள் அவனைத் தாங்கியவாறே.


அவனை அமர வைத்தவள், "தண்ணீயை நிறைச்சு கொட்டலமா? இல்லை ஷவரை திறந்து விடலமா?" என்று யோசிக்க, "பாவம் பையன் ஷவரை திறந்து விடு" என்க, "அவன் உன்னை எத்தனை முறை திட்டி இருக்கான்? இதான் ரிவன்ஜ் எடுக்க சரியான நேரம். தண்ணியை கொட்டு" என்றது மூளை.


மூளை, மனம் இரண்டுக்கும் இடையிலான வெகுநேர போராட்டத்திற்குப் பிறகு, மூளையே அவ்விவாதத்தில் வெற்றியைப் பற்றிக் கொள்ள, "சொரி மிஸ்டர் யாதவ் மித்ரன். தி இஸ் மை ரிவென்ஜ் டைம்" என்று பெரிய வாளி ஒன்றிற்கு தண்ணீரை நிரப்பி அவன் தலையில் கொட்டி விட, சிகையை சிலுப்பியவாறு தலையை கோத அதுவும் அவனை ஆணழகனாய் காட்டியது.


இமைக்காது அவனையே பார்க்க, இல்லை அவளை அறியாது யாதவை இரசிக்க மூளையோ, 'நீ என்ன அவனை இரசிச்சிட்டு இருக்க?' என்று அங்கே ஆஜராக, "நோ நோ வைஷூ உனக்கு என்னாச்சு? எதுக்காக இந்த அயர்ன் மேனை பார்க்குற?" என்று தன்னைத் தானே திட்டியும் இரு கன்னங்களில் தட்டியும் தன்னை சமன்படுத்த, யாதவ் போதையிலும் தன் முகத்தில் வழியும் தண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.


அவள் விழிகள் அவளையும் மீறி அவனது ஒவ்வொரு செய்கைகளையும் இரசிக்க மூளையோ அதைச் செய்யாதே கட்டளையிட தனது மனதிற்கும், மூளைக்கும் இடையில் மாட்டி திண்டாடினாள் அப்பேதை.


அவள் இதற்கு மேல் முடியாது என்று வெளியே செல்ல முனைய, இமைப் பிரித்து வைஷூவைப் பார்த்த யாதவ், "ஷவரை திறந்துட்டுப் போ நவி. நான் குளிச்சிட்டு வரேன்" என்று தெளிவாக உரைக்க அவனை அதிர்வுடன் பார்த்தவள் அவன் கூறியதை செய்து விட்டூ உடனடியாக அவ்விடத்தை விட்டு ஓடியேவிட்டாள்.


யாதவ் குளித்து ஆடையை மாற்றி அவர்களது அறைக்குச் சென்று தலையைப் பிடித்தவாறே அமர்ந்து இருக்க வைஷூ எழுமிச்சை பழத்தின் சாறைப் பிளிந்து ஜூஸ் தயாரித்து அவனுக்காக அறைக்கு எடுத்துச் சென்றாள். அவன் முன்னே டம்ளரை நீட்ட மறுக்காமல் அதை வாங்கிப் பருக வைஷூ அதற்குள் தைலத்தை எடுத்து வந்தாள்.


அவனுடைய அனுமதி இன்றியே நெற்றியில் நன்றாக பூசி நீவி விட்டு செல்ல முனைய அவளை விடாது இடையோடு அணைத்துக் கொண்டவன், "சொரி நவி நான்...." என்க, "இப்போ எதுவும் பேச வேணாம். காலையில பார்த்துக்கலாம்" என்று கூறி அவனை விலத்தி விட்டு நகரந்தாள்.


அவளைச் செல்லவிடாது கரம் பற்றியவன், "சாப்டியா?" என்றான் குற்ற உணர்வுடன். "பசிக்க இல்லை" என்று அவனிடம் இருந்து கரத்தை உருவ முனைய அவனது உடும்புப் பிடியில் இருந்து இஞ்ச் அளவாவது நகரவில்லை. யாதவ் சிறு சிரிப்புடன், "நான் விட்டால் தான் உன்னால் ஒரு அடியாவது இங்கிருந்து வைக்க முடியும்" என உரைக்க, "இப்போ உங்களுக்கு என்ன வேணூம்?" என்றாள் கோபமாக.


யாதவ், "எனக்கு பசிக்குது. இரண்டு பேருக்கும் சாப்பாடை ஒரு தட்டுல போட்டு எடுத்து வா" என்று உரைத்து கரத்தை விடுவிக்க அவனை ஒரு முறை அழுத்தமாக பார்த்து விட்டு சென்று உணவை எடுத்து வந்தாள். அவனுக்கு எடுத்து வைக்க முனைய, "நீயே ஊட்டிவிடு. எழுந்து போய் கை கழுவி வர்ர அளவுக்கு எனக்கு தெம்பு இல்லை" என்றான் சோர்வுடன்.


அவனது சோர்வு முகத்திலும் கண்களிலும் பிரதிபலிக்க மறுக்காது அவனுக்கு ஊட்டி விட்டவள் தானும் உணவை முடித்து அனைத்தையும் சுத்தம் செய்து வைத்து அறைக்குள் நுழைந்து கட்டிலில் மறுபுறத்தில் படுத்துக் கொள்ள எப்போதும் போல் யாதவ் அவளை அணைத்தவாறு உறங்கினான்.


கதிரவனுக்கு காலையில் உற்சாகத்துடன் வெளிவர அவனை வரவேற்கும் வகையில் பூக்களும் பூத்துக் குலுங்கியது. யாதவ் காலையில் சீக்கிரமாகவே எழுந்தவன் புது உற்சாகத்துடன் பழைய நினைவுகளை மனதில் வைத்தாலும் வேட்டையாடும் ஏ.ஐ.ஜி யாதவாக மாறி தயாராகினான்.


வைஷூ கண்விழிக்க அருகே யாதவ் இருக்கவில்லை. அவளும் அவசரமாக குளித்து வெளியே வர காலை உணவு முதல், அவள் கல்லூரிக்குச் செல்வதற்குத் தேவையான அனைத்தையுமே செய்து வைத்து இருந்தான்.


யாதவ், "இன்னிக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு நவி. உன்னை காலேஜ்ல விட்டுட்டு, முக்கியமான சில இடங்களுக்கு போக இருக்கு. அவசரமா உட்கார்ந்து சாப்பிடு" என்று அவளை அழைக்க அவளும் மறுக்காது அமர்ந்துக் கொள்ள இருவருமே ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.


வைஷூவை தன்னுடைய தனிப்பட்ட காரில் ஏற்றுக் கொண்டவன் உடனடியாக கௌதமிற்கு அழைத்து, "நவியை காலேஜ்ல விட்டுட்டு நான் நம்ம இடத்துக்கு வருவேன். நீயும் வந்துரு. என்ட் நேத்து அந்த பொண்ணு சாக முன்னாடி போன அத்தனை இடத்துக்கும் பொலிசை அனுப்பி ஏதாவது குளூ கிடைக்குதான்னு தேடு. நம்ம டீம் மெம்பர்ஸ்ல கொஞ்சம் பேரை அவங்க கூட அனுப்பி வை" என்று உயர் அதிகாரியாய் அடுக்கடுக்காக கட்டளைகளை பிறப்பித்தான்.


வைஷூ அவனை இமைக்காது பார்க்க, யாதவ், "என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு?" என்று வினவ, "ஒன்னும் இல்லையே" என்று வேறுபுறம் திரும்பிக் கொண்டாள். அவள் கைகளை பிசைவைதைக் கொண்டே அவளது பயத்தையும், தயக்கத்தையும் புரிந்துக் கொண்டவன் தனது ஒரு கரத்தால் அவள் பிசையும் இரு கைகளையும் இறுகப் பற்றி ஆறுதல் அளித்தான்.


கல்லூரியை நெருங்க நெருங்க அவளது பயமும் அதிகரிக்க கைகள் இரண்டும் சில்லிட்டுச் சென்றது; இருந்தும் யாதவ் அவள் கரங்களை விடவில்லை. கல்லூரியில் தனது வாகனத்தை நிறுத்தியவன், அவள் தோள் பற்றி தன் பக்கம் திருப்பி, "நான் உன் கூட இருக்கும் போது உனக்கு என்ன பயம்? உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. யாரும் சொல்லவும் விடமாட்டேன். இன்னியோட உன் பிரச்சனையை இங்கே முடிச்சிட்டு தான் போவேன்" என்றான் உறுதியான குரலில்.


காக்கி உடையில் இறங்கி வைஷூவின் கையைப் பற்றி, அதிபர் இருந்த அறைக்கு அவளை அழைத்துச் செல்லும் போது கல்லூரியில் இருந்த பலரும் அக் காட்சியைப் பார்த்து தங்களுக்குள் முணுமுணுக்க வைஷூவும் மெதுவாக நடுங்க ஆரம்பித்தாள்.


அவளை தன் தோளோடு அணைத்து நடக்க சாத்விக் அவர்கள் உள்ளே வரும் போதே கண்டு கொண்டவன் தன்னறையில் இருந்து வெளியே வந்து அவர்களை நோக்கி நடந்தான். வரண்டாவில் சாத்விக், யாதவ் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து வைஷூவையும் பார்த்தனர்.


சாத்விக், "வைஷூ இது என்னோட காலேஜ். உன்னை யாரும் எதுவும் சொல்லமாட்டாங்கமா. பயப்படாமல் வா. நீ தைரியமான பொண்ணாச்சே. வா" என்று பாசமாக அழைக்க பயம் கலந்த புன்னகையை மட்டுமே பதிலாக செலுத்தினாள்.


யாதவ், "உன்னோட ஸ்டாஃப்ஸ் என்ட் இவளோட பெச் ஸ்டூனஸ் அத்தனை பேரையுமே ஒன்னா அஸம்பலாக ஏற்பாடு பண்ண முடியுமா? இன்னிக்கு இவளோட பிரச்சனை பூரா இங்கேயே முடிச்சிட்டு போகனும்" என்று உரைக்க, சாத்விக், "இப்போ தான் ஸ்டூடன்ஸ் வந்துட்டு இருக்காங்க. இன்னும் ஹாஃப் அனவர்ல அரேன்ஞ் பண்றேன். அது வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியுமா?" என்றான் மறுக்காமல்.


யாதவ் தன் கைக்கடிகாரத்தையும், வைஷூவையும் மாறிப் பார்த்தவன், "சரி இருக்கேன்" என்க, "என் ரூமல் வந்து வெயிட் பண்ணுங்க. வைஷூ இன்னிக்கு சனா, அபி இரண்டு பேருமே வர இல்லைமா. அதனால மித்ரன் பேசி முடிக்கும் வரைக்கும் வெயிட் பண்ணு" என்றானவ சாத்விக்.


"சரி அண்ணா" என்றவள் அவர்களோடு சேர்ந்து நடக்க சாத்விக், யாதவ் கூறியது போல் அனைவரையும் ஒன்றாக சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்தான். நேரமும் கடக்க மாணவர்களும், பேரிசிரியர்களும் வந்து விட்டனர் என்ற தகவல் கிடைக்க மூவருமே அவ்விடம் நோக்கிச் சென்றனர். வைஷூ கலக்கத்துடனேயே அவர்களோடு நடந்து சென்றாள்.


மூவரும் ஒன்றாக நுழைவதைப் பார்த்து மற்ரவர்கள் ஆச்சரியமாக பார்க்க, வைஷூ தவிப்புடன் யாதவைப் பார்த்தாள். அவனுமே கண்களால் ஆறுதல் அளித்து அனைவருக்கும் முன்னே சென்று நின்றான். இவர்களுடைய விழி சம்பாஷனைகளை அங்கே ஒரு பேராசிரியராக அமர்ந்து இருந்த வசுவும் பார்த்து புன்னகைத்தாள்.


யாதவ், "எல்லாருக்குமே வணக்கம், எல்லாரும் எப்பிடி இருக்கிங்க? என்னை நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும். ஆனாலும் நானே சொல்றேன். என்னோட பெயர் யாதவ் மித்ரன். இந்த சிடியோட ஏ.ஐ.ஜி" என்று உரைக்க அங்கே குண்டூசி விழுமளவிற்கு அமைதி நிலவியது.


"நான் எதுக்காக இங்கே வந்திருக்கேன்னு நீங்களும் தெரிஞ்சிக்கனுமே. ஒரு பெத்தவங்க தன்னோட பிள்ளையை பொத்தி பொத்தி வளர்த்து ஸ்கூல், காலேஜூக்கு அனுப்புறாங்க" என்றவன் பேராசிரியர்களை நோக்கி, "அவங்களை நீங்க உங்க பிள்ளைங்களை போல பார்த்து பாதுகாக்கனும். அது உங்களோட பொறுப்பு. அதை மறக்காதிங்க" என்று ஆரம்பத்தில் மென்மையாக ஆரம்பித்து இறதியில் கடுமையில் முடித்தான்.


"ஆசான் இன்னொரு அப்பா, அம்மா. இது உங்க மனசுல பதிய வச்சிகொங்க. இந்த காலத்துல நிறைய பேர் இதை மறந்துட்டு தப்பு பண்றாங்க. இங்கே அந்த தப்பு நடக்கக்கூடாது. மீறி நடந்தது...." என அனைவரையுமே அழுத்தமாகப் பார்க்க, அனைவருமே அவனது பார்வையில் மிரண்டு எச்சிலை விழுங்கிக் கொடண்டனர்.


"இதை ஏன் சொல்றேன்னா எங்க கிட்ட இப்போ இதைப் போல கேஸ் அதிகமா வருது. சில பேர் பயந்து வெளியே சொல்றதும் இல்லை. பசங்க யாரும் பயப்படாதிங்கன்னு சொல்லவும், மத்தவங்களுக்கு ஒரு எச்சரிக்கைகொடுக்கவும் தான் இதை சொன்னேன். என் கிட்ட தப்பு பண்ணி மாட்டிகாதிங்க... ஜாக்கிரதை" என்று மீண்டும் எச்சரித்து வைஷூவைப் பார்த்தான்.


அவள் கண்கள் கலங்க தலைக் கவிழ, அவள் ஒரு கரத்தை தன்னுடைய ஒரு கரத்தால் பற்றிக் கொண்டவன், "நிறைய பேர் ஒரு பொண்ணை தப்பா பேசி, கிளாசுக்கு போக விடாமல் பண்ணி கிளாசுக்கு வந்தாலும் மென்டல் டார்ச்சர் கொடுத்தாலும் அக்ஷன் எடுக்கலாம் அந்த பொண்ணு கம்பிளைன் பண்ணால். தெரியுமா உங்களுக்கு?" என்றான் அழுத்தம் திருத்தமாக ஒவ்வொரு வார்த்தையாக கூறி.


"ஆமா இவளைப் பத்தி தப்பா பேசினிங்களே! அக்கா கட்டிக்க வேண்டியவனை இவ கட்டிகிட்டான்னு. இவ எல்லாம் ஒழுக்கமானவளான்னு? இல்லை தெரியாமல் தான் கேட்குறேன்? இவளைப் பத்தி பேச நீங்க யாரு? உங்களுக்கு என்ன உரிமை இருக்கு பேச?


அவளோட தனிப்பட்ட விஷயத்துல மூக்கு நுழைக்க யாரு அனுமதி கொடுத்தா? அதை வச்சு எப்படி நீங்க இவளை கிளாசை விட்டு வெளியே போக சொல்லலாம்? யாரு உங்களுக்கு அனுமதி கொடுத்தா?" என்று கர்ஜிக்க வைஷூவின் உடலே நடுங்கி அடங்கியது.


பேராசிரியர்களைப் பார்த்து, "உங்களுக்கும் உங்க குடும்பத்துல ஒரு ஆளுக்கும் சண்டை. அதை பப்ளிக்கா சொல்லி உங்களை கிண்டல் பண்ண முடியுமா? இல்லை அப்படி பண்ணால் பேசாமல் இருப்பிங்களா? உங்க தனிப்பட்ட விஷயத்தை பேசுனவன் தோலை உரிச்சு இருக்க மாட்டிங்க?" என்று வினாவை எழுப்ப அங்கே பாரிய அமைதி நிலவியது.


யாதவ், "பதிலை சொல்லுங்க" என்று சீற அங்கே பதில் இருக்கவில்லை. "அப்போ வைஷ்ணவி விஷயத்துல ஏன் யாரும் இதை யோசிக்க இல்லை? அவளோட தனிப்பட்ட விஷயத்தை எதுக்கு எடுத்துகிட்டிங்க உங்க வாய்க்கு அவலா? இப்போ சொல்றேன் கேட்டுகொங்க வைஷ்ணவி என்னோட பொன்டாட்டி.


எனக்கும் அவளுக்கும் எப்படி வேணூன்னாலும் கல்யாணம் நடந்து இருக்கலாம். அது எங்களோட தனிப்பட விஷயம். அதை யாரும் ஆயுதமா எடுத்து அவளை காயப்படுத்தக் கூடாது. அவளைப் பத்தி ஒரு வார்த்தை தப்பா இனிமேல் பேசினிங்க. நான் மனிஷனா இருக்க மாட்டேன்" என்றவன் மாணவர்களின் புறம் திரும்பினான்.


"இல்லை இவளை தப்பானவன்னு சொல்றிங்களே, இங்கே இத்தனை பசங்க இருக்காங்க ஒரு தடவை யாராவது ஒரு பையன் கூடி தேவையில்லாமல் பேசி பார்த்து இருக்கிங்களா? இல்லை மத்தவங்க பின்னாடி இவ அலையிறதை பார்த்து இருக்கிங்களா?


யாரோ சொன்னதுக்காக இத்தனை வருஷமா பார்த்துட்டு இருந்தவளை நீங்க எப்படி தப்பானவன்னு சொல்லலாம்? நெஜமாவே உங்களுக்கு மனசாட்சி இருக்கா? இல்லையா? எப்பிடி உங்களால எப்படி இப்படி சொல்ல முடியிது?" என வருத்தமாக வினவி அனைவரையுமே பார்த்தான்.


அனைவருமே தான் செய்த தவறால் தலைக் கவிழ அனைவருக்குமே அவனுடைய கேள்விகள் அனைத்துமே ஓங்கி தலையில் அடிப்பதைப் போன்று இருக்க, முகம் கறுக்க அமைதியானார்கள். வசுமதியிற்கு தான் இழைத்த தவறுகள் அனைத்துமே ஒன்றின் பின் ஒன்றாக கண்முன் தோன்ற இமை மூடினாள் இறுக.


"இத்தனை நாளா தப்பா தெரியாத பொண்ணு; எல்லோருக்குமே பிடிச்ச மாதிரி நடந்த பொண்ணு கல்யாண விஷயத்துல தப்பா தெரிஞ்சாளா? அது மட்டுமா? ரஞ்சித் கூட இவளை வச்சு தப்பா பேசுறிங்க. அவனுக்கும் இவளுக்கும் இடையில தூய்மையான நட்பு தான் இருக்கு.


அது உங்க கண்ணுக்கு தெரியல்லியா? எல்லாமே தப்பா தான் தெரியுமா? ஏன் ஏன்? முதல்ல உங்க பார்வையை திருத்துங்க. பார்வை சரியா இருந்தால் எல்லாமே சரியா இருக்கும். இதுக்கு மேலேயுமே தப்பா பேசாதிங்க. என்ட் தப்பா பேச கூடாது" என்று தீர்க்கமான குரலில் முடித்து மீண்டும் அழுத்தமாக அனைவரையும் பார்த்தான்.


"வைஷ்ணவி கூட நான் கல்யாணத்துக்கு முன்னாடி பேசினது இல்லை. உங்களால நம்ப முடியுமா? ஆனால் அதான் உண்மை. அவ கூட பேசி பழகாத எனக்கு அவ தங்கமான பொண்ணுன்னு தெரியும். இத்தனை வருஷமா பார்க்குற உங்களுக்கு தெரியாதா?" என்று மென்மையாகக் கூறி அவளைப் பார்த்தான்.


வைஷூ இத்தனை நேரமாக கேவி வந்த அழுகையை அடக்கி இறுதியாக அவன் கூறியதில் உணர்ச்சிவயப்பட்டு கீழே அமர்ந்து கேவிக் கேவி அழ பேராசிரியர்கள் உடன் அமர்ந்து இருந்த காஞ்சனா வேகமாக வந்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.


அதே நேரம் அவள் அழுகையை தாங்க முடியாது வசுமதியின் சகோதரி மீதான பாசம் அவள் தன் மானத்தை விட பெரிதாகத் தெரிய வைஷூவைப் பார்த்தவாறே எழ அதற்குள் காஞ்சனா அவளைச் சென்று அணைத்து இருந்தாள்.


அதைப் பார்த்த வசுமதியிற்கு மனதில் சுருக்கென்ற வலி ஏற்பட தன்னுடைய தவறான நடவடிக்கையால் தன்னுடன் பிறந்தவள் தன்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாள் என்பது புரிந்தது. அதற்கு மேல் தாங்காது கலங்கிய கண்களுடன் அதே இடத்தில் அமர்ந்தாள்.


இவை அனைத்துமே சாத்விக், யாதவ் இருவரின் கண்களில் இருந்தும் தப்பவில்லை. கண்டும் காணாதது போன்று இருந்தனர் இருவரும்.


யாதவ், "இதுக்கு மேலே நான் பேச எதுவுமே இல்லை. என் மனைவி பத்தி இனிமேல் யாரும் தப்பா பேசவோ, அவளை காயப்படுத்தவோ கூடாது. மீறி நடந்தால் நான் லீகலா ஆக்ஷன் எடுப்பேன்.


என் மனைவி்கு மட்டுமில்லை எந்த பொண்ணுக்கு இப்படி நடந்தாலும் நான் ஆக்ஷன் எடுப்பேன்" என்று உறுதியான குரில் உரைக்க மாணவர்கள் ஒன்றாக எழுந்து மன்னிப்பை வேண்ட, பேராசிரியர்களும் வயது வித்தியாசம் பார்க்காது மன்னிப்பை வேண்டினர்.


சாத்விக் எதுவும் பேசாது நடக்கும் அனைத்தையுமே வேடிக்கைப் பார்த்தான். அனைவரும் மன்னிப்பை வேண்டிய பிறகு சாத்விக், "நான் சொரி கேட்க வைக்கனும்னு நினைச்சேன். குட் நீங்களே தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டுட்டிங்க.


மித்ரன் நடவடிக்கை எடுக்குறது இரண்டாவது. முதலாவது நான் தான் பார்பேன். நோ எக்ஸ்கியூஸ். ஆன்லி ஆக்ஷன்" என்றவன், "ஒகே யூ மே கோ நவ்" என்று ஆணையிட அங்கிருந்த அனைவருமே வெளியேறினர்.


யாதவ் வைஷூவை அழைத்து வசுமதியிடம் சென்றவன், "இங்கே உங்களுக்கும் என் வைஃபுக்கும் இடையில லெக்சர் ஸ்டூடடன்டை தவிற வேற எந்த உறவுமே இல்லை. இப்போ மட்டும் இல்லை இதுக்கு முன்னாடியும் தான். செய்யுற தொழிலுக்கு நேர்மையா இருக்கனும். தொழில் முன்னாடி உறவுகள் வர கூடாது. இதுக்கு அப்புறமா இதை மறக்காதிங்க மிஸஸ் வசுமதி விஷ்ணு கிஷான்" என்று கூலரை அணிந்து வைஷ்ணவியோடு வெளியே சென்றான்.


யாதவ், "இனிமேல் உனக்கு எந்த பிரச்சனையுமே இல்லை.தைரியமா இருக்கலாம்" என்று கண்ணீரைத் துடைத்தவன், "எனக்கு முக்கியமான வேலை இருக்கு ஈவீனிங் பார்கலாம்" என்று கன்னம் தட்டி தன்னுடைய அக்மார்க் மிடுக்கான நடையுடன் வெளியேற நிறைந்த புன்னகையுடன் அவனையே பார்த்தாள் யாதவின் நவி.


யாதவ் அங்கிருந்து வெளியேறி தனது காரில் நேரடியாக அவனுடைய தனிப்பட்ட இடத்திற்குச் செல்ல கௌதம் அங்கே அவனது குழுவினருடன் மொபைலில் பேசிக் கொண்டு இருந்தான். யாதவைப் பார்த்தவன், "நான் அப்புறமா பேசுறேன்" என அழைப்பைத் துண்டிக்க, "உள்ள போலாமா?" என்று வினவினான் யாதவ்.


"வா போலாம் மச்சான்" என்று கௌதம் அவனை அழைத்துச் செல்ல இருள் சூழப்பட்ட ஒரு அறையின் கதவைத் திறந்தான் கௌதம். அங்கே, கதிரையில் கட்டப்பட்டு ஒருவன் அமர்ந்து இருக்க யாதவ் கௌதமைப் பார்க்க அவனது பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டவன் ஒற்றை விளக்கை ஒளிர்வித்தான்.


யாதவ் அங்கிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவன் முகத்தில் ஊற்ற கண்விழித்தான் அவன். அட்டகாசமாய் வில்லன் சிரிப்பை சிரித்த யாதவ், "வெல்கம் டு த ஹெல் சரவணன்" என்றான்....


தொடரும்....



கருத்துக்களைப் பகிர,




 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



கண்சிமிட்டும் தென்றலே



அத்தியாயம் 28





ஒரு உயரமான கட்டத்தில் நின்று சென்னை நகரை வேடிக்கைப் பார்த்து இருந்தவனது மொபைல் அலற தனது பாக்கட்டினுள் கையிட்டு எடுத்தவன், "பாட்னர்" என்று தொடு திரையில் இருந்த பெயரைப் பார்த்து ஒருவித இளக்காரப் புன்னகையுடன் அழைப்பை ஏற்றான் அவன்.


"சரவணன் சேஃபா இருக்கான்ல?" என்று எதிர்ப்புறம் இருந்து ஒரு குரல் வினவ, "அவன் சேஃபா இருக்கான். சவிதாவை தூக்கினதுக்கு அப்புறமா அவனை கொஞ்ச நாளைக்கு தலைமறைவா இருக்க சொன்னேன். அவனும் டவுட் வராமல் எங்கேயோ போய் இருக்கான். என்னால கூட அவனை கன்டக்ட் பண்ண முடியல்லை" என்றான் இவன்.


"ஏதோ இந்த ஏ.ஐ.ஜி போற வேகத்தை பார்த்தால் நமளை நெருங்கிடுவானோன்னு ஒரு எண்ணம். அவனுக்கு கிடைக்குறது போல எந்த குளூவுமே விட இல்லை. ஆனாலும் ஏதோ ஒன்னு நெருடிட்டே இருக்கு" என்று எதிர்ப்புறம் இருந்தவன் உரைக்க, "சான்சே இல்லை. அவனால ஒன்னுமே புடுங்க முடியாது" என்றான் இவன்.


எதிர்புறம் இருந்தவன், "சரி அவனை பொறுமையா ஹேன்டில் பண்ணலாம். அந்த பொருள் கிடைச்சுதா?" என வினவ, "நம்ம ஆளுங்க தேடிட்டு தான் இருக்காங்க. அவ சாகும் போது கொடுத்துட்டு செத்து இருக்கலாம். இப்போ யாதவும் அந்த பொண்ணோட கேசை தான் இன்வெஸ்டிகேட் பண்றான்.


அவன் அதை கண்டுபிடிச்சி எடுக்க முன்னாடி நாம எடுக்கனும். நம்ம ஆளுங்களுமே தேடிட்டு தான் இருக்கானுங்க. அது மட்டும் யாதவ் கைக்கு கிடைச்சது நம்மளோட அஸ்திவாரமே ஆட்டம் காணும். நம்மளை உயிரோடவே விட மாட்டான். அவனுக்கு முன்னாடி எப்படியாவது கண்டு பிடிச்சிடனும்" என்று ஒரு வெறியோடு முடித்தான் இவன்.


"நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. எவளோ செலவானாலும் பராவியல்லை, எத்தனை உயிரு போனாலும் பராவியில்லை. எனக்கு அந்த பொருள் வேணூம்" என்று கூறி அழைப்பை துண்டித்தான் எதிர்புறம் இருந்தவன். "ஏ.ஐ.ஜி உனக்கு முன்னாடி என் பொருளை எடுக்குறேன்" என்று தனக்குள் சாவால் விட்டுக் கொண்டான் இவன்.


யாதவ் கையில் இவர்கள் கூறும் சரவணன் அகப்பட்டு இருப்பதோ, இவ் வழக்கிற்கும் அவனது மனதில் உள்ள இரகசியத்துக்கும் தொடர்பு இருக்கும் என்பதை இக்கயவன் நினைத்தும் பார்த்து இருக்க மாட்டான். இதை யாதவ் அறிந்தால் சாவை விட கொடிய தண்டனையை அவர்களுக்கு வழங்காமல் விட மாட்டான் என்பதை இவ் மூடர்களுக்கு யார் கூறுவது???


யாதவ் அருகில் உள்ள தண்ணீர் போத்தலை எடுத்து அதன் மூடியைத் திறந்து கதிரையில் கைகள் கட்டப்பட்டு அமர வைக்கப்பட்டு இருந்தவனது முகத்தில் அதனை முழுவதையுமே ஊற்றினான். அவன் இமைகளை சிரமத்திற்கு மத்தியில் திறக்க எதிரே இருந்த நாற்காலியில், கால் மேல் கால் இட்டு இகழ்ச்சியாய் வளைந்ந உதடுகளுடன், "வெல்கம் டு த ஹெல் சரவணன்" என்றான்.


சரவணன் அதிர்ந்து அவனையே இமைக்காதுப் பார்க்க, "பார்ரா ஹிப்னோடிசம் பண்ண கூடிய இன்ஜியனரே, நான் அவரை ஹிப்னோடிசம் பண்ணது போல அதிர்ச்சியா பார்க்குறாரு" என்றால் கிண்டலாக ஒற்றைப் புருவம் உயர்த்தி. சரவணன் மேலும் யாதவ் கூறியவற்றில் அதிர்ந்து விழிகளை மேலும் விரித்தான்.


"ஏன் சேர்? மௌனவிரதமோ?" என்று அவனை நெருங்கி தாடையை இறுகப்பற்றியவாறே வினவ, அவனது பிடியில் சத்தமாக அலறினான் சரவணன். யாதவ், "உன்னை நான் வர முன்னாடியே நல்லா கவனிச்சு இருக்காங்களே. உனக்கு இது தேவை தான். நீ என்ன பொலிசை முட்டாளுங்கன்னு நினைச்சியா? நீ போடுற நாடகத்தை கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு" என்று எள்ளலாய் வினவினான்.


சரவணன் அதே பாவனையுடனே யாதவைப் பார்க்க, கௌதம், "நீ போட்ட நாடகம் எல்லாம் நல்லா தான் இருந்தது. நாங்க உன்னை தேடி வரும் போது, நீ வீட்ல இல்லாததும் உன்னை மூனு நாளா காணோங்குறதும் நல்லா இருந்தது. யாதவ் உன்னை தேட சொல்லும் போது உன்னோட பைக் ஒரு காட்டு பக்கம் பிரண்டு இருந்தது.


அதைப் பார்த்துட்டு உன்னையும் அவனுங்க கடத்திட்டாங்கன்னும், உனக்கும் சவிதா காணாமல் போனதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு எங்களை நம்ப வைக்க ரொம்ப நல்லா பிளேன் போட்டு இருந்த. உண்மையை சொன்னால் நாங்களுமே உன்னை கடத்திட்டாங்கன்னு தான் நம்பினோம். யாதவ் கிட்ட இதை சொல்லும் வரைக்கும்" என்று அலட்சியமாக ஏற்ற இறக்கத்துடன் மொழிந்து, யாதவைப் வெற்றிப் புன்னகையுடன் பார்த்தான்.


யாதவ், "நான் காலேஜ் பார்டிக்கு போக கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கௌதம் என் கிட்ட சொன்னான். உன்னோட பைக் கிடைச்ச இடத்துல ஆள் நடமாட்டம் இருக்க மாட்டாங்க. அதனால நான் தான் ஆறு மாசத்துக்கு முன்னாடி பாதுகாப்புக்காக அங்கே ஒவ்வொரு பத்து மீட்டருக்கு இடையில கமேரா செட் பண்ணுவோம்னு ஐ.ஜி கிட்ட சொன்னேன்.


அவரும் மேல் இடத்துக்கு பேசி பர்மிஷன் வாங்கினாரு. தப்பு அதிகமா இந்த மாதிரி ஒதுக்குப் புற இடங்களில் நடக்கும்னு கமெராவை மறைவா பூட்டினோம் தப்பு பண்றவங்களை பிடிக்க. யார் கிட்டவும் இதைப் பத்தி சொல்லவே இல்லை. அதனால உனக்கும் அங்கே கமெரா இருக்கிறது தெரியாமல் போச்சு.


நீயும் உன் பைக்கை பிரட்டி விட்டு, உன் ஆளுங்க கூட வேன்ல சாவகாசமா ஏறி போதனது அச்சு பிசகாமல் கமெராவுல ரெகோர்ட் ஆகி இருக்கு. கமெராவைப் பத்தி கௌதம் கிட்ட சொன்னதும், அவனும் உடனே செக் பண்ணான்.


ஐம் இம்பிரஸ்ட். எவளோ அழகா பிளேன் போட்டு இருக்க எங்களை நம்ப வைக்க. ம்ம்... அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆர்வம் உனக்கு இல்லையா சரவணன்?" என்றி இகழ்ச்சியாக தன் நெற்றியை நீண்ட விரலினால் நீவி வினவினான். சரவணன் மௌனம் காக்க, "நீ என் கிட்ட கேளு" என்றான் அமர்த்தலாக நாற்காலியில் அமர்ந்து.


சரவணன் அதற்கும் பதிலளிக்காது அவனைப் பார்க்க, "நீ கேட்கனும். கேட்டே ஆகனும்" என்று உறுதியுடன் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வெளிவர அவன் கூறிய தொனியிலேயே மிரண்டுவிட்டான் சரவணன். சரவணன், "என்னாச்சு சேர்" எனத் தயக்கமாக வினவ, "உடனே நீ போன வேன் நம்பரை எடுத்து டிரேஸ் பண்ணோம். நீ அதுல மிஸ்டேக் பண்ணிட்ட" என்றான் யாதவ்.


மேலும் யாதவ், "உன்னை யாராலேயும் கண்டே பிடிக்க முடியாதுங்குற இறுமாப்புல வேன் நம்பரை கூட மாத்தாமல் போயிருக்க. எனக்கு இன்ஃபொர்மேஷன் கிடைச்சு மூனு ஹவர்ல உன்னை யாருக்குமே தெரியாமல் தூக்கிட்டாங்க. மத்தவங்களை பொறுத்த வரைக்கும் நீ ஒளிஞ்சிட்டு இருக்க" என்று சிரித்தான்.


சரவணன் விழியகற்றாது மிரண்ட பார்வையுடன் பார்க்க, "சரி கதையை முடிச்சிட்டேன். இப்போ மெயின் மேட்டருக்கு வரலாம். சரி சொல்லு எதுக்காக பொண்ணுங்களை கடத்துன? எப்படி பொண்ணுங்களை பப்ளிக்ல வச்சு ஹிப்னோடிசம் பண்ற? ஒழுங்கா பதில் சொன்னால் உடம்புல பாதியாவது மிஞ்சும். இல்லைன்னா பொருக்கி எடுக்க வேண்டி இருக்கும்" என்றான் தன் கைமுஷ்டியை இறுக்கியபடி.


அவனது அதிகாரித் தோரணையில் சரவணனிற்கு அடிவயிறு கலங்கியது. பீதியுடன் அமைதிகாக்க, "என் ஒரு அடியை நீ தாங்க மாட்ட. ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லு" என்று உறும பயத்தில் வியர்வைப் பூக்கள் அவன் நெற்றி முதல் பாதம் வரையில் பூத்துக் குலுங்கின.


சரவணன் அதில் எச்சிலை விழுங்கி, "நான் உண்மையை சொல்லிடுறேன் சேர்" என்றவன் யாதவின் முகத்தையே பார்த்தவாறு நவிழ ஆரம்பித்தான். "நான் ஒரு சொஃப்ட்வெயார் இன்ஜினியர் சேர். எனக்கு ஹிப்னோடசத்தைப் பத்தி ஒரு கதையில வாசிச்சேன். ஏனோ எனக்கு ஹிப்னடிசம் மேலே எனக்கு ஒரு ஈர்ப்பு வந்தது.


நான் ஹிப்னோடிசம் பத்தி தேட ஆரம்பிச்சேன். அப்படி தேடும் போது தான் எனக்கு ஒருத்தர் கத்து கொடுத்தாரு. அப்படி இருக்கும் போது தான் என்னை ஒரு வித்தியாசமான ஒரு ஆள் சந்திக்க வந்தான். அவன் எனக்கு நிறைய பணம் கொடுக்குறதாவும் அவன் சொல்ற வேலையை பண்ணவும் சொன்னான்.


நானும் பணத்துக்காக ஆசைப்பட்டு அவன் சொல்ற வேலையை பண்ண ஆரம்பிச்சேன். அவன் என் கிட்ட சில பொண்ணுங்களோட போடோவை கொடுத்து ஒரு மாசத்துக்கு மேலே அவங்களை ஃபோலோ பண்ணி அவங்களோட அக்டிவிடீசை ஸ்டடி பண்ணிக்க சொன்னான்.


அவன் சொல்ற நாளைக்கு அந்த பொண்ணை ஹிப்னடிசம் பண்ணி விட்றனும். பப்ளிக் பிளேசுல தான் இதை பண்ணனும். மத்தவங்களுக்கு நான் ஹிப்னடிசிம் பண்றது தெரியவும் கூடாது; என் மேலே சந்தேகம் வரவும் கூடாது. சோ, ஹிப்னடிசம் பண்ண சரியான சந்தரப்பம் என்னன்னா தனக்கு புடிச்ச ஒருவிஷயத்தை பண்ணும் போது அந்த விஷயத்துல மட்டும் தான் நம்ம கவனம் இருக்கும்.


நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்க மாட்டோம். சோ, பப்ளிக்ல இருக்கும் போது பொண்ணுங்க எந்த விஷயத்தை தன்னை மறந்து பண்றாங்க, இரசிக்கிறாங்கன்னு நான் நோட் பண்ணிப்பேன். அவங்க அதை பண்ணும் போது அவங்க கூட பேச்சு கொடுத்து மியூசிக்கை என் ஹெட் செட் மூலமா கேட்க வைப்பேன் என் பேச்சுத் திறமையால.


முதல் 80 செக்கன் பாட்டு தான் போகும். அவங்க அதுல ஆழ்ந்து போயிருவாங்க. கவனம் சிதறாது. அப்போ, அடுத்த 81 ஆவது செக்கன்ல இருந்து என்னோட ஹிப்டோசித்தை ஆரம்பிச்சிருவேன். அவங்க காதுக்குள்ள கேட்குறது, ஹிப்னடிசம் பண்றதுக்கு நான் முன்னாடியே ரெகோட் பண்ணி வச்ச என் பேச்சு தான்.


அவங்க பாட்டுலேயே ஆழந்து, தனக்கு பிடிச்ச வேலையை பண்ணிட்டு இருக்கும் போது திடீர்னு இப்படி மாறினாலும் அவங்களால அதை கண்டுபிடிக்க முடியாது; அதிலிருந்து வெளிவரவும் முடியாது. சுருக்கமா சொல்ல போனால் ஒரிரூ நொடிகள் அவங்க பிரேயின் ஸ்டரக் ஆகி நின்னுடும்.


அதை நான் எனக்கு சாதமாக பயன்படுத்தி என் ஹிப்னடிசத்தை முடிச்சிருவேன். அதுக்கு அப்புறமா அந்த பொண்ணோட கன்ட்ரோலை வெளியில அந்த பொண்ணை கடத்துறதுக்காக நிற்கிறவங்க எடுத்துப்பாங்க. நான் எதுவுமே தெரியாதது போல அமைதியா இருந்து அந்த இடத்துல நிதானத்தோட வேலையை முடிசிட்டு போயிருவேன்.


இதான் சேர் எனக்கு தெரிஞ்ச உண்மை. அதுக்கு மேலே என்ன நடக்குது? அந்த பொண்ணுங்க எங்க போறாங்கன்னு தெரியாது சேர்" என்று நடுங்கும் குரலில் நவிழ்ந்து முடிக்க அருகில் நின்று இருந்த கௌதம் கன்னத்தில் ஓங்கி அறைய அவன் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தது.


சரவணின் கதறல் அங்கே இருவரின் செவிகளையும் அடைந்தாலும் அதைப் பொருட்படுத்தாது, கனல் கக்கும் விழிகளுடன் இருவருமே அவனை அழுத்தமாகப் பார்த்தனர். அதில் சரவணணனுக்கு முதுகுத் தண்டில் இருந்து கழுத்து என்புவரை ஏதோ ஒரு நடுக்கம் பரவ, எச்சிலை விழுங்கி இருவரையும் அச்ச வதனத்தோடு பார்த்தான்.


"நீ எல்லாம் என்ன மனிஷன்டா பணத்துக்காக என்ன வேலை எல்லாம் பார்த்து இருக்க? ச்சீ.... நீ எல்லாம் உயிரோடவே வாழ கூடாது. வாழ்ல தகுதியுமே உனக்கு இல்லை" என்று கௌதம் கோபம் குறையாது, தன்னுடைய பிஸ்டலை எடுத்து லோட் செய்து அவனுடைய நெற்றிப் பொட்டில் வைக்க யாதவ் அனைத்தையும் அமர்த்தலாக பார்த்துக் கொண்டு இருந்தான்.


சரவணன், "சேர் என்னை மன்னிச்சு விட்ருங்க சேர். இதுக்கு அப்புறமா இந்த மாதிரி வேலையை பார்க்க மாட்டேன். என்னை விட்ருங்க சேர்" என்று அலறினாலும்,, மற்ற இருவரின் நிலையிலும் எவ்வித மாற்றமும் இருக்கவில்லை. யாதவ் சற்று நேரம் மௌனம் காத்தவன் தன் நெற்றியை சுட்டு விரலாலும், நடுவிரலாலும் நீவியவாறே எழுந்தான்.


இமை மூடி ஓரிரு நொடிகள் நின்றவன், "சவிதா எந்த இடத்துல இருக்கா? என்னோட கெஸ் சரின்னா அந்த பொண்ணு இருக்கிற இடம் உனக்கு தெரிஞ்சு இருக்கனும். சொல்லு" என்று வினவ, சரவணனிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது அவன் மறைத்து வைத்த உண்மையை அச்சுப் பிசகாமல் தன்னுடைய யூகமாக மொழிகிறானே என.


யாதவ் சரவணன் அதிர்வு மாறா முகத்துடன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து, அவனைப் பார்த்தவாறே, "இவன் வாயில இருந்து பதில் இன்னும் 5 செக்கனுக்குள்ள வராமல் இருந்தால், இவனை போட்ரு கௌதம்" என்று சொற்கள் அழுத்தமாக வெளிவந்தன.


சரவணனின் பீதீயுமே அதிகரிக்க, இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். 'உன் வாழ்க்கை என் கையிலடா' என்று கௌதம் அவனுடைய உயிரைப் பறிக்கும் எமனாக தயாராக நிற்க, யாதவ் அலட்சியத்துடன் அவனை ஏறிட்டான்.


பதில் அளிக்காவிடின் நிச்சயமாய் உயிரைப் பறிததுவிடுவார்கள். அந்த வேகத்தில் இருப்பதையும் புரிந்துக் கொண்ட சரவணன், "அந்த பொண்ணை ஒரு பழைய பங்களாவுல கடத்தி வச்சிருககாங்க சேர். அது எனக்கு தெரிஞ்ச இடமா, அந்த பொண்ணை அடைச்சி வைக்க சொன்னாங்க. நானும் அவங்க சொன்னதை பண்ணேன் சேர்.


இது தான் முதல் முறையா ஒரு பொண்ணை என் கிட்ட சொல்லி கடத்தி வைக்க சொன்னது. அந்த பொண்ணை பங்களாவுல விட்டதும் சில பேர் வந்து அந்த இடத்தோட மொத்த கன்ட்ரோலையும் அவங்களுக்கு கீழே எடுத்து இருக்காங்க. இதுவும் எனக்கு ஆடர் கொடுக்குறவனோட வேலை தான் சேர். இப்போ நான் நினைச்சால் கூட என்னால அந்த பங்களாவுக்குள்ள போக முடியாது" என்று உரைத்து முடித்தான்.


யாதவ், "அந்த பங்களா எங்க இருக்கு?" என்று உடனேயே எதிர் கேள்வி கேட்க, சரவணன் மீண்டும் அடி வாங்கவதற்காகப் பயந்து சரியான விலாசத்தையும் வழங்கினான். யாதவ் கௌதமைப் பார்த்து விழியால் செய்தி கூறி அவசரமாக வெளியேற, கௌதம், "மவனே, உன்னை அப்புறமா வந்து வச்சிக்கிறேன். இன்னியில இருந்து மூனு நாளைக்கு உனக்கு சாப்பாடு இல்லை. தண்ணீயும் சாதாரண அளவை விட குறைவா தான் கிடைக்கும்" என்று கோபத்துடன் மொழிந்து வெளியேறினான்.


அதே கட்டளைகளை அங்கே காவலிற்கு இருக்கும் ஆட்களிடமும் உரைத்து, தனியாக நின்று ஆழ்ந்த யோசணையில் நிற்கும் யாதவிடம் வருகை தந்தான் கௌதம். கௌதம், "என்னடா?" என்று வினவ, "நாம இப்போவே காப்பாத்த போறது அந்த பொண்ணோட உயிருக்கே ஆபத்து. எதையும் பார்த்து பக்குவமா பண்ண வேண்டி இருக்கு. அதான் என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்" என்றான் யோசணை மாறாத குரலில்.


கௌதம், "அது ஒகேடா. சவிதா இருக்கிற இடம் சரவணனுக்கு தெரியும்னு எப்படி கண்டுபிடிச்ச? நாம லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் அந்த பொண்ணோட உயிருக்கு ஆபத்து இருக்கலாமே" என்று தன் கேள்விக் கணைகளை எழுப்பினான்.


யாதவ் தன் பெருமூச்சை வெளியிட்டு, "மத்த பொண்ணுங்களை கடத்தினாலும் அவங்களோட எந்த டிரேசசுமே நமளுக்கு கிடைக்கவே இல்லை. கடத்தினதுக்கான ஒரு சின்ன அடையாளம் கூட நமக்கு தெரியல்லை. கடத்தி ரொம்ப நாளைக்கு அப்புறமாவோ, ரொம்ப நேரத்துக்கு அப்புறமாவோ தான் அந்த பொண்ணு வீட்டுக்கு போக இல்லைன்னு தெரிஞ்சு, அவங்க கடத்தப்பட்டு இருக்காங்கன்னு நாமளே கண்டுக்குறோம்.


ஆனால் சவிதா விஷயத்துல அப்படி கிடையாது. கடத்தினவன் சவிதா கையாலேயே, அவ வீட்டுக்கு முன்னாடி அவளோட காலேஜ் பேர்கை வீச வச்சிருக்கான். அப்படி பார்த்தால் எல்லா பொண்ணுங்களையும் கடத்துற அதே நோக்கத்தோட இவளை கடத்த இல்லை. அவளை கொல்லவும் மாட்டாங்க.


இதான் நான் யோசிச்சது. சோ, அவன் நிச்சயமாக அவனுக்கு நம்பிக்கையான ஒருத்தர் கிட்ட உதவி கேட்டு இருப்பான். சரவணனோட பேச்சுல இருந்த அந்த கடத்துறவனுக்கு சரவணன் மேலே நம்பிக்கை அதிகம்னு புரிஞ்சிது. ஏன் சரவணன் கிட்ட அந்த உதவியை கேட்டு இருக்கக் கூடாதுன்னு யோசிச்சேன்?


என்னோட யூகத்தை உறுதி போல கேட்டால், பயபுள்ள ஷாக் ஆகிருச்சு. அதுல இருந்தே புரிஞ்சிகிட்டேன் சவிதா இருக்கிற இடமும், அங்க நடக்குற விஷயமும் இவனுக்கு தெரியும்னு. சரவணன் கூட பேச்சு தொடர்புல இருக்கிறவன் மெயினான ஆள் கிடையாது. அவனோட பினாமி ஒருத்தனா தான் இருப்பான்.


இதுவும் என் யூகம் தான். கடத்தல்காரன், சவிதாவை உலகத்துக்கு வெளிப்படுத்த விரும்ப இல்லை. கொல்லனும்னு நினைச்சு இருந்தால் அவளை கடத்தும் போதே கொன்னு இருக்கலாம். சோ, நாம அங்க போகும் வரைக்கும் அவளோட உயிருக்கு ஆபத்து இல்லை.


நாம ஏதாவது ஸ்டெப் எடுத்தால், அவளை கொல்லவும் கடத்தல்காரன் தயங்க மாட்டான். சோ, எடுத்தோம் கவுத்தோம்னு எதையுமே பண்ண முடியாது. யோசிச்சு ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பண்ணனும். அவளோட உயிருக்கு இப்போ ஆபத்து இல்லைங்குறதால பொறுமையா பண்ணலாம்" என்று முடித்தான்.


கௌதம், "மச்சான் ஐம் இம்பிரஸ்ட்" என்று கையை விரித்து உரைத்தவன் அடுத்த நொடி யாதவைக் கட்டிக்கொள்ள, "ச்சீ, ச்சீ தள்ளுடா எருமை" என்று அவனைத் தள்ளி விட்டான் யாதவ். கௌதம், "ஏன்டா?" என்று பாவமாய் வினவ, யாதவ், "ஏதோ லவரை கட்டிப் பிடிக்குறது போற என்னை கட்டிப் பிடிச்சால் வேறு என்ன பண்றது?" என்று முகம் சுளித்தான்.


கௌதம், "டேய் ! டேய் ! டேய் ! ஒரு ஆர்வத்துல கட்டிப்பிடிச்சிட்டேன். அதுக்காக இப்படியா?" என்றவன் வானத்தைப் பார்த்து, "முருகா!!!! போயும், போயும் இவனையா எனக்கு ஃபிரன்டா கொடுக்க தோனுச்சு" என சத்தமாகப் புலம்பி, அவனை முறைத்து விட்டு முன்னே நகர யாதவின் இதழ்கள் குறுநகையைச் சிந்தின.


கௌதமின் புலம்பல் யாதவிற்கு வைஷூவை ஞாபகப்படுத்த இதழின் விரிவின் நீளம் அதிகரித்து, அவனுடைய அக்மார்க் வசீகரப் புன்னகை இதழ்களில் அழகாய் தவழ்ந்தது. கௌதம் ஏதோ கேட்கத் திரும்பியவன், யாதவின் முகத்தில் தெரியும் வசீகரப் புன்னகையைப் பார்த்து, நமட்டுப் புன்னகையுடனும், மனதில் நிறைவுடனும் முன்னே திரும்பி மௌனியானான்.


இருவருமே இவ்வழக்கில் ஏதோ ஒரு முக்கிய புள்ளியை அடைந்ததாக திருப்தி உற்றவர்கள், தங்கள் வீட்டை நோக்கி பயணமானார்கள். அவர்கள் செல்லும் வழியில் காவ்யாவிடம் இன்று யாதவின் முகத்தில் தெரியும் புன்னகையைப் பற்றிக் கூறி, அவனை புகைப்படம் எடுத்து அனுப்பவும் மறக்கவில்லை கௌதம்.


ஊரில் தன்னுடைய வேலைகளை அரிசி ஆலையில் முடித்து நகுலன் கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்க நேரம், மாலை மூன்று ஐம்பத்து மூன்று எனக் காட்டியது. அத்தோடு நாட்காட்டியில் இன்னும் இரு கிழமையில் இதே தினத்தில் அவனுக்கும் அஞ்சலிக்கும் அவனுக்குமான திருமண நாள் என்பது அங்கே அடையாளமிடப்பட்டு இருந்தது.


அதைப் பார்த்து புன்னகைத்தவன் அவர்களுடைய திருமண நாளிற்காக ஆடர் செய்திருந்த புடவை நேற்று கடைக்கு வந்திருப்பதாக தகவலை இவனுக்கு தெரிவித்தது நியாபகத்திற்கு வர,அதை எடுப்பதற்காக தன்னுடைய வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றான்.


நகுலன் அஞ்சலியிற்காக பார்த்துப், பார்த்து ஆடர் செய்த புடவை அது. அதில் உள்ள நிறங்கள் முதல் சிறிய அலங்காரம் வரை அவனே இரசித்து ஆடர் வழங்கி இருந்தான். கடைக்குச் சென்றவன், பணத்தைச் செலுத்தி அதை வாங்கி வந்தான்.


வீட்டிற்குள்ளே வந்தவன் அஞ்சலியையைத் தேட அவள் அங்கே இருக்கவில்லை. நகுலன், "அவ இங்கே இல்லாததும் நல்லது தான். முதல்ல நாம இதை ஒளிச்சு வைக்கலாம். அனிவசரி டே சப்ரைசா இதை கொடுக்கலாம்" என்று தனக்குள்ளேயே பேசியவன், அதை ஒளித்து வைப்பதற்காக இடம் தேடினான்.


அலுமாரியைத் திறந்து அவளுடைய புடவைகளின் அடியில் இதை வைக்கலாம் என முடிவெடுத்து, புடவைகள் இருக்கும் தளத்தை இழுக்க ஆரம்பித்தான். அதிக அலங்காரங்கள் நிறைந்த புடவைகள், விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை அஞ்சலி விழாக்களின் போதே அதிகமா அணிவதாலும், திருமண நாளைத் தவிர அதற்குள்ள வேறு விசேட நாட்கள் இல்லை என்பதாலும், அத் தளத்தில் புடவையை ஒளித்து வைக்க முடிவு செய்து இருந்தான்.


புடவைகளை இழுக்கும் போது, அங்கிருந்து ஒரு பிளாஸ்திக்கு போத்தல் கீழே விழுந்தது. 'சே! என்னடா இது?' என்று முணுமுணுத்து விட்டு அதை நகர்த்தி வைத்து அவன் வாங்கி வந்த புடவையை ஒளித்து வைத்தான். பின் பிளாஸ்திக்கு போத்தலை எடுத்து உள்ளே வைக்கப் முனைய, அதில் இருந்த ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது.


அதன் பெயரைப் பார்த்தவன், "ஏதோ டேப்ளட் போல இருக்கே! இதை எதுக்கு இங்கே வச்சிருக்கா? எதுக்காக இந்த மருந்து? ஒரு வேலை என் கிட்ட சொல்ல முடியாயாத நோயால கஷ்டபடுறாளோ" என்று தன் கற்பனைக் குதிரையை ஓடவிட்டவன் பதறி அவசரமாக தனது மொபைலை எடுத்தான்.


அதில் மருந்தின் பெயரை தட்டச்சு (type) செய்ய, அதில் இருந்த விளக்கத்தைப் பார்த்து அதிர்வில் அவன் கையில் இருந்து மொபைல் நழுவியது. ஏனெனில் அது ஒரு கருத்தடை மாத்திரையாகும். எண்ணங்கள் பலவாறு ஓடினாலும், "என் அஞ்சலி அப்படி பண்ண மாட்டா. இதுல ஏதோ சதி இருக்கு. முதல்ல இதைப் பத்தி அவ கிட்டேயே கேட்கலாம்" என்று தன்னுள்ளேயே முடிவெடுத்து அஞ்சலியைத் தேடிச் சென்றான் நகுல்.


மாலை நேரம் விஷ்ணு வீட்டிற்குச் செல்ல வீடே அமைதிப் பூங்காவாய் மாறி இருந்தது. வேலைக்காரர்களிடம் வசுவையும், பெற்றோரையும் பற்றி விசாரிக்க, வசுமதி அறையில் இருப்பதாகவும், பெற்றோர்கள் கோயிலுக்குச் சென்று இருப்பதாகவும் கூறினர்.


தாவி மாடிப்படிகளில் ஏறியவன் அறைக்கதவைத் திறக்க வசுமதி பதறி எழுந்தவள், அவன் பார்க்காதவாறு கண்ணீரைத் துடைத்தாள். ஆனால் விஷ்ணுவின் கண்களில் இருந்து அவை தப்பவில்லை.


வசுமதி, "சொரிங்க. தலை வலின்னு தூங்கிட்டேன். அதான் நீங்க வந்தது தெரியல்லை" என்று மன்னிப்பு வேண்டி, அங்கிருந்து அவசரமாக நகர முனைய, அவளுடைய கரம் பிடித்து நிறுத்தினான் விஷ்ணு. "இன்னிக்கு என்னாச்சு வசு?" என்று வினவ, அடக்கி இருந்த அழுகையை வெடிக்க விட்டாள்.


அவள் அழுவதைப் பார்க்க முடியாது தன்னோடு சேர்த்து அவளை அணைத்துக் கொள்ள அவன் மார்பில் முகம் புதைத்து இன்று கல்லூரியில் நடந்த அனைத்தையுமே மறைக்காது உரைத்தாள்.


"மித்து மாமா சொல்லும் போது தான் நான் எவளோ பெரிய தப்பு பண்ணி இருக்கேன்னு புரிஞ்சிது. அப்படியே என் தலையில் ஓங்கி அடிச்சது போல வலிச்சதுங்க. அதை விட வைஷூ அழும் போது காஞ்சனா மிஸ் ஹக் பண்ணாங்க அவளை. அவளுமே அவங்க கூட ஓட்டிக்கிட்டா.


அப்போ தான், நான் பண்ண தப்பு என் மகளா பார்த்த என் தங்கச்சை என்னை விட்டு ரொம்ப தூரம் கொண்டு போய் நிறுத்தி இருக்குன்னு புரிஞ்சது. ரொம்ப ரொம்ப வலிச்சதுங்க. வைஷூ என்னை விட்டு தூர போயிட்டா" என்று ஏங்கி ஏங்கி அழுதாள். விஷ்ணுவும் அவள் மனதில் உள்ளவற்றை கூறட்டும் என்று அமைதியாய் இருந்தான்....



தொடரும்.....


ரொம்ப நாளாச்சுல அப்டேட் வந்து. இந்த சின்ன பொண்ணை மன்னிச்சிருங்க. ஸ்டடீஸ்ல கொஞ்சம் பிசியாயிட்டேன். இனிமேல் நேரத்துக்கு அப்டேட் வரும். அதாவது புதன், ஞாயிறு கிழமைகளில் நாள் தவறாமல் வரும் நம்பலாம்.


அடுத்த யூ.டி ஞாயிறு வரும் பா. சோ சொரி ரொம்ப நாள் காக்கக வச்சதுக்கு.



கருத்துக்களைப் பகிர,


/



 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



கண்சிமிட்டும் தென்றலே


அத்தியாயம் 29



வசு அழுது முடியும் வரை அமைதி காத்த விஷ்ணு, " உன் நிலமை எனக்கு புரியிது வசு. ஆனால் இப்போ நீ அழுது எந்த பயனும் இல்லை. ரொம்ப தூரம் நீ வந்துட்ட. வைஷூவை தூரமாக்க உனக்கு சில செக்கன் போதுமா இருந்தது. ஆனால் அதே வேகத்துக்கு அவளை உன்னால நெருங்க முடியல்லை. முடியாது. வார்த்தைகள் வாயிலிருந்து வெளியே வரும் போது ரொம்ப கவனமா இருக்கனும்.


உன்னை காயப்படுத்தவோ, இல்லை, உன்னை குத்தி காட்டவோ இதை சொல்ல இல்லை. இப்போ இருக்கிற நிலமையை சரியா புரிஞ்சிக்கோ. அவ உன் கிட்ட உன் வைஷூவா திரும்பி வர மாசங்களும் எடுக்கலாம்; வருஷங்களும் எடுக்கலாம். பொறுமையா காத்திரு.


இனிமேலாவது ஆத்திரத்துல எதுவுமே பண்ணாமல் அந்த சூழநிலை எப்படி புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. ஆத்திரத்துல எடுக்குற எந்த முடிவும் சரியா இருக்காது. உனக்கு கோபம் வந்தால் ஐந்து நிமிஷம் உன்னை நீயே கட்டுபடித்திட்டு, அமைதியா இரு. அதுக்கு அப்புறமா என்ன பேசனுமோ பேசு.


அப்போ, வார்த்தைகளை விட மாட்ட. நீ உன் கன்ட்ரோலுக்குள்ள இருக்கிறதால, உன்னால சிடுவேஷன் என்னான்னு புரிஞ்சிக்கவும் முடியும், எந்த சரியான முடிவையும் எடுக்கலாம். உணர்வுகள் எங்களை கட்டுப்படுத்தினால் கண்டிப்பா தப்பான முடிவை தான் எடுப்போம்" என்று அவள் கூந்தலை ஆதூரமாக வருடிவிட்டான்.


வசு, "எல்லாமே எனக்கு நேரம் கழிச்சு தான் புரியிது. முன்னாடியே புரிஞ்சிருக்க கூடாதான்னு மனசு ஏங்குதுங்க" என்று ஏங்கியவாறே கூற, அவள் முகத்தைக் கையில் ஏந்தியவன், "இந்த உலகத்துல தப்பு பண்ணாதவன் யாருமே இல்லை. அந்த தப்பை தப்புன்னு நிறைய பேர் உணரவே மாட்டாங்க. ஆனால் நீ பண்ண தப்பை உணர்ந்துட்ட.


அதை சரி பண்ணனும்னு நினைக்குற. இப்போவுமே நீ புரிஞ்சிகிட்டது லேட் இல்லை. கண்டிப்பா கடவுள் உனக்கு உதவி பண்ணுவாரு. உனக்கான நேரம் வரும் வரைக்கும் கண்டிப்பா நீ பொறுமையா இருந்தே ஆகனும்" என சிறு பிள்ளைக்கு உரைப்பது போல் தெளிவாக புரிய வைத்தவன், "எனக்கு ஸ்ட்ரோங்கா,ஒரு காபி போட்டு கொடுக்குறியா?" என்றான் சோர்வுடன்.


வசு தன் தலையிலேயே அடித்துக் கொண்டவள், "ஐயோ சொரிங்க, என் விஷயத்தை பார்த்து, உங்களை மறந்தே போயிட்டேன்" என்று பதற, "நீ டென்ஷன் ஆகாத. இது சின்ன விஷயம் தான். காபியை ரூமுக்கு எடுத்துட்டு வா. நான் பிரஷ்ஷாகி வரேன்" என்று சிறு புன்னகையைச் சிந்தி அங்கிருந்து துவாயை எடுத்தவாறு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.


வசுவும் மனதில் இருந்த அனைத்தையுமே வெளிக் கொட்டிய நிம்மதியுடனும், மனத் தெளிவு உடனும் புது உற்சாகத்துடன் விஷ்ணுவிற்காக காபியைத் தயாரிக்க சமையலறையை நோக்கிச் சென்றாள்.


விஷ்ணுவும் தன்னுடைய வேலைகளை முடித்து விட்டு அமர்ந்து இருக்க, வசு காபியை கொண்டு வரவும் சரியாக இருந்தது. இருவருமே அமர்ந்து சிறிது நேரம் பேசும் போதே தன்னுடய தோழியின் திருமணம் அவளுடைய நியபகத்திற்கு வந்தது.


உடனே, "என் ஃப்ரெண்டு கல்யாணம் இருக்கு. போகனும், உங்களையும் அழைச்சிட்டு வரேன்னு சொல்லி இருக்கேன். வரமுடியுமா?" என்றாள். விஷ்ணு, "எப்போ கல்யாணம் இருக்கு வசு?" என்ரு வினவ, "நெக்ஸ்ட் வீக்" என் உடனே நவிழ்ந்தாள்.


"என்னொட ஷெடெயூலை பார்த்து, உனக்கு சொல்றேன்" என்க, சம்மதமாக, தலை அசைத்தாள். இவ்வாறு இருவருடைய நேரமும் அழகாய் சென்ற்ரது இரவு வரையில்.


நகுல் அஞ்சலியைத் தேடிச் ஒவ்வொரு இடமாகச் செல்ல, அஞ்சலியின் குரல் வீட்டின் பின் புறம் கேட்க, பின் புறத்திற்குச் சென்றான். அவனது வருகையை கூட அறியாது அவளது பேச்சில் மும்முரமாக இருந்தது, அவளுடைய தவறான நேரமென்பதா? இல்லை, அவளது அழிவின் ஆரம்பம் என்பதா?


அஞ்சலி,” ஐயோ, நீ வேற, இந்த மனிஷன், காதலுங்குற பேருல, உயிர வாங்குது. இவிங்க அம்மா என்னடன்னா, எப்போ குழ்ந்தைன்னு தலையை எடுக்குது. நான், இவங்க பையனை கல்யாணம் பண்ணதே, நம்ம வேலையை முடிக்க தான்னு அவங்களுக்கு தெரியதே. எப்போடா, இந்த நரகத்துல இருந்து வெளில வருவென்னு இருக்கு. சாமி முடியல்லை.


முக்கியமான விஷயம், கருத்தடை மாத்திரை நான் யூஸ் பண்றது தான் கடைசி போத்தல். இன்னொரு போத்தலை மறக்காமல் அனுப்பி வச்சிரு. நம்ம பிஸ்னஸ் எல்லாம் நல்லா போகுதா? ஏதும் ப்ரசனை இல்லயே?” என்று மொபைலில் உரையாட, எதிர் புறத்தில் இருந்த நபரும் சளைக்காமல் பதில் கூறுவது இவற்றைக் கேட்ட நகுலிற்கு தெளிவாய் புரிந்த்து.


அஞ்சலியின் பேச்சைக் கேட்டவனுக்கு, நெஞ்சத்தை அரிவாளால் வெட்டிய, உணர்வு. தன் மனைவி பொய்த்துப் போனதை அவனால் எற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தனை நாளாக நடித்து, தன்னை மட்டும் அல்லாது தன் குடும்பத்தையும் ஏமாற்றி இருக்கிறாளே என் ஆத்திரமக வந்தது. ஆனாலும் அவன் அஞ்சலி மீது கொண்ட காதல் பொய் இல்லயே.


ஏன் தன்னை அவள் ஏமாற்றினாள்? தன்னுடைய காதல் சிறிதேனும் அவளை இத்தனை வருடங்களில் பாதிக்கவில்லையா? அவளுடைய விருப்பத்திற்கு மாறாக திருமணம் முடிந்ததில் இருந்து ஒரு போதும் நடந்துக் கொண்டதும் இல்லை. அனைத்திலுமே அவளுடைடய ஆட்சி. அவ்வாறு இருந்தும் இன்று அனைத்துமே கானல் நீராகி விட்டதே.இவை அனைத்தையும் நினைக்க நினைக்க மனம் வெதும்பியது.


அவர்கள் காதலால் கசிந்து உருகிய தருணங்கள் கண் முன் தோன்ற அவ் வலிய ஆடவனது கண்களும் விழி நீரால் தளும்பி வழியும் மாயம் தான் அவன் அவள் மீது கொண்ட காதலோ!


உண்மையான அடி மனதில் இருந்து நாம் சிலர் மீது வைக்கும் அதீத அன்பும், காதலும் நேசமும் இக்காலத்தில் பொய்த்துப் போவது நாளாந்த விடையமாகி விட்டது. ஆனால் அதே காதலிற்காக உயிரயே கொடுக்கும் காதலர்கள் இருப்பதாலேயே மழை பொழிகின்றது; காதலின் மீது நம்பிக்கையும் ஏற்படுகின்றது. இன்னும் காதல் என்ற ஒன்று மண்ணில் வாழ்வதும் அதனாலேயே.


இவன் இவ்வாறு தன்னுளேயே புழுங்க, அவனது கவனத்தை திசை திருப்பியது அஞ்சலியின் “சாத்விக்” என்ற வார்த்தை அவள் குரலில் இருந்து வெளி வந்ததே ஆகும். ஏனோ அதை கவனமாகக் கேள் என்று மனம் உந்த, அவளது பேச்சை அங்கேயே ஓர் இடத்தில் மறைந்து, அவள் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தான்.


அஞ்சலி, “ அந்த சாத்விக்கை இன்னுமே எதுவுமே பண்ண முடிய இல்லையா?” என்று கோபமாய் எகிற, எதிர் புறம் என்ன கூறப்பட்டதோ, அஞ்ச்லி சற்று அமைதியானாள். நகுல் அவளுடைய பேச்சில், அதிர்ந்து அங்கேயே சிலை ஆனான். சாத்விக்கின் மீது, அஞ்சலியிற்கு எதற்காக இவ்வளவு வன்மம் என இவனுக்குப் புரியவே இல்லை.


உடனே வந்த தடையமே இல்லாது அவசரமாக அங்கிருந்து தனது அறைக்குச் சென்றவன், கட்டிலில் தலை சாய்த்து கண்மூடினான். விழி மூடினாலும் அவளுடைய முகமே கண் முன் தோன்ற அவசரமாக இமை திறந்தவன் தனது திருமணத்திலிருந்து இன்றைய நாள் வரை நடந்த அனைத்தையுமே சிந்திக்க ஆரம்பித்தான்.


அதில் அஞ்சலி விரும்பாதது போன்று எந்தவொரு விடயமும் அவனுக்கு நினைவில் இல்லை. எவ்வளவு தத்ரூபமான நடிப்பு? என வியக்க மட்டுமே அவனால் முடிந்தது. கண்மூடித்தனமான காதல் கண்ணை மறைத்தது மட்டுமின்றி, தன்னுடைய அதீத முட்டாள் தனத்தையும் எண்ணி வெட்கினான்.


இவை அனைத்துமே கனவாக இருக்கக் கூடாதா? என்று அவனுடைய காதல் கொண்ட மனது ஏங்குவதை அவனால் தடுக்க முடியவில்லை. இன்றைய அவளது பேச்சை நினைக்க நினைக்க மனம் கொதித்தது குமுறி எரிய, மற்றைய புறம் ஏதாவது செய்ய வேண்டும் எனவும் மூளை அவனுக்கு அறிவுறித்தியது.


சிறிது நேரம் அறையை அளக்கும் அளவிற்கு அங்கேயே நடந்தவன் அஞ்சலி வருகிறாளா? என அறைக் கதவின் அருகில் வந்து வெளியே எட்டிப் பார்க்க, அவள் வருவதற்கான எவ்வித அறிகுறியுமே தெரியவில்லை. உடனே தேக்கு மரக் கதவை அடைத்தவன், சாத்விக்கிற்கு அழைத்தான்.


சாத்விக்கிற்கும் அஞ்சலியைப் பற்றி சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் சில ஆதாரங்களோடு டிடெக்டிவினால் வழங்கப்பட்டு இருந்தன. அவனுமே நகுலை தொடர்பு கொள்ள வேண்டும் என நினைத்து இருக்க, அதற்குள் நகுலே அவனிற்கு அழைத்து இருந்தான்.


நகுல், "சாத்விக்" என்ற கலங்கிய குரலிலேயே சாத்விக்கிற்கு ஏதோ ஒன்று புரிய ஆரம்பித்தது. "சொல்லுங்க புரோ" என்று அவனுடைய பேச்சை ஆரம்பிக்க, "நீங்க எப்போ ஃபீரியா இருப்பிங்க? நான் உங்களை பார்க்கனும்" என்றான் நகுல். "அடுத்த இரண்டு நாள் நான் ஃபீரி தான் புரோ பார்க்கலாம்" என்க, "அப்போ நான் நாளைக்கு கிளம்பி சென்னைக்கு வரேன். உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்" என்று மொழிந்து அழைப்பைத் துண்டித்தான்.


சாத்விக் அடுத்த தகவலை எதிர்பார்த்து, தொடுதிரையைப் பார்க்கும் போதே அவன் அருகில் அஞ்சலி பற்றிய சில உண்மைத் தகவல்கள், சில ஆதாரங்களின் திசையில் அவனையும் மீறி கண்கள் சென்றன.


அப்போதே இன்று அவன் மீடிங் ஒன்றிற்காக வெளியே சென்ற போது, அவ் டிடெக்டிவை சந்தித்தது நினைவிற்கு வந்தது.


சாத்விக் மீடிங்கை முடித்து வெளியே வர அவனுடைய இலக்கத்திற்கு ஓர் அழைப்பு வந்தது. தொடு திரையில் டிடெக்டிவின் அழைப்பு தெரிய, அதை அவசரமாக ஏற்றான். "ஹலோ சார்" என்று எதிர்ப்புறம் பேசப்பட, "சொல்லுங்க" என்றான் சாத்விக் அமர்த்தலாக.


"சார், நீங்க இருக்கிற அதே ரெஸ்டூரன்ட்டுல தான் நானும் இருக்கேன். இப்போ உங்களை சந்திக்க முடியுமா?" என்றிட, "யா,ஷூயர்" என்று ஓரிடத்தில் அமர்ந்து இடத்தை டிடெக்டிவிற்குகக் கூற, அவனும் சாத்விக் இருந்த இடத்தை நோக்கி வந்தான்.


இருவருமே கைக்குலுக்கி விட்டு பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு முக்கிய வேலையைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தார்கள். டிடெக்டிவ், " சார், நீங்க சொன்னது போல இத்தனை மாசமா அஞ்சலியைப் ஃபோலோ பண்றதுல இருந்து, ஃபோன் கால்ஸ், யாரை மீட் பண்றாங்கன்னு எல்லாத்தையும் செக் பண்ணேன் சார்.


அதுல ஒன்னு, அவங்க குழந்தை பாக்கியம் இல்லாததுக்கு காரணம் அவங்களுக்கோ, நகுல் சாருக்கோ எந்த பிரச்சனையுமே இல்லை. காரணம், அவங்க தான் பிரக்னன்ட் ஆக கூடாதுன்னு கருத்தடை மாத்திரை யூஸ் பண்றாங்க. அது அவங்களுக்கு அவங்க அண்ணா பேர்ல இருந்து, ஒவ்வொரு மாசமும் ஒரு பார்சல் வீட்டுக்கு வரும்.


அதுல தான் அந்த மாத்திரை அவங்களுக்கு கிடைக்குது. இந்த மாத்திரையால சைட் இஃபெக்ட் குறைவு. அதனால தான் ஐந்து வருஷத்துக்கும் மேலாக இதை யூஸ் பண்ண முடிஞ்சது அவங்களால். இந்த விஷயம் நகுல் சாருக்கு தெரியாது.


அது மட்டும் இல்லாமல் இவங்களோட ஃபேமிலி பக்ரவுண்டை விசாரிக்க ஆரம்பிச்சேன். ஆனால் ஒன்னுமே கண்டு பிடிக்க முடியல்லை. ஒரே மர்மமா இருக்கு. இவங்களோட சொந்த ஊர் இது இல்லை. ரொம்ப முயற்சி பண்ணியும் ஒரு துரும்பாவது கிடைக்கும்னு நினைச்சால் ஒன்னுமே கிடைக்க இல்லை.


அடுத்த விஷயம் என்னன்னா, அவங்களுக்கு இரண்டு மொபைல் இரண்டு சிம் கார்ட் இருக்கனும்னு நினைக்கிறேன். ஏன்னா சில நேரங்களில் அவங்க வீட்டுல ஒரு ஸ்மார்ட் ஃபோன் யூஸ் பண்றாங்க. கோயிலுக்கு, ஷாபிங்குக்கு தனியா போகும் போது அவங்க கையில ஐ போன் இருந்தது. தனியா போய் பேசுவாங்க.


ஒரு முறை அந்த நம்பரை தேடும் போது தான், அந்த நம்பர் லோகல் இல்லை, ஃபொரின் நம்பர்னு தெரிஞ்சிது. ஆனால் நம்பரை கண்டு பிடிக்க முடியல்லை. ஏதோ தப்பா இருக்குன்னு என்னால உறுதியா சொல்ல முடியும்" என்று தன்னுடைய விரிவுரையை முழுமையாக முடிக்க, சாத்விக்கிற்கு அதிர்வாக இருந்தாலும், அவனது சிந்தனை முழுவதையும் டிடெக்டிவ் கூறிய விடயங்களே ஆட் கொண்டு இருந்தன.


சிறு நேரம் அவ்விடத்தை மௌனம் தத்தெடுக்க கண்களை இறுக மூடித் திறந்தவன், "தேங்கியூ சோ மச். எனக்கு இன்னொரு காரியம் ஆகனும். அதுவும் இன்னிக்கே" என்று, அன்றொரு நாள் ஷாபிங் மோலின் தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணிப் பற்றிக் கூறி அவளைப் பற்றிய முழு தகவலும் வேண்டும் என்றான்.


"அந்த பொண்ணு சென்னையை சேர்ந்த பொண்ணா இருக்கனும். ஏன்னா அவளோட டிரசிங்சன்ஸ், அபியரன்சும் அப்படி தான் இருந்தது. யாருன்னு பார்த்து இன்னிக்கே சொல்ல முடியுமா?" என்று வினவ, அவரும் சரியென்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.


யாதவ் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டுமாயின், இப்பெண்ணைப் பற்றி அறிந்துக் கொள்வது முக்கியம் என, யாதவ் அன்று நடந்துக் கொண்டதை வைத்துப் புரிந்துக் கொண்டான் சாத்விக்.


நடந்தவற்றை யோசித்து அமர்ந்தவன், அங்கிருந்து எழுந்து சனாவைச் சென்று பார்க்க அவள் வாந்தி எடுத்ததன் விளைவாக அதிக சோர்வுற்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளருகே சென்று அமர்ந்து மெதுவாக தலை வருட அதிலும் சாத்விக்கை உணர்ந்தவளின் இதழ்கள் புன்னகையைப் பூசின. அவனுடைய இதழ்களும் அழகாய் விரிந்தன.


யாதவ் அங்கிருந்து நேரடியாக தன் வீட்டை நோக்கிச் செல்ல, வைஷூ கல்லூரியை முடித்து வந்தவள் வெகு நாட்களுக்குப் பிறகு சந்தோஷமாக குளித்து மாலையில் யாதவ் வருகைத் தந்தால் காபியோடு பரிமாற ஈவீனிங் சினேக்ஸை தயாரித்துக் கொண்டு இருந்தாள்.


எப்போதும் போல் எளிமையான துப்பட்டா குருத்தி, படர்பிலை ஜீன்ஸ் அணிந்து குளித்ததால் கூந்தலை விரித்து விட்டு அதை ஒரு சிறிய கிளிப்பில் அடக்கி, நெற்றியில் பொட்டு, நெற்றி வகுட்டில் குங்குமம், கழுத்தில் அவன் அணிவித்த தங்கத் தாலியோடு, சிறிய மாலை, கைகளில் வளையல் என்று மங்கலகரமாக சமையலறையில் இருந்தாள்..


யாதவ் சத்தமில்லாது அவளைத் தேடி வர, அவள் வானொலியை ஆன் செய்திருக்க அங்கே "பூங்காற்றிலே உன் சுவாசத்தை தேடிப் பார்த்தேன்" என்ற ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் சமையலறையே உருகி இருந்தது.


வைஷூவின் இதழ்களும் அப்பாடலின் வரிகளை முணுமுணுக்க, கரங்களோ செவ்வென வேலைகளைச் செய்தன. பாடலில் ஆழந்து உருகி வழிந்ததால் வைஷூவிற்கு யாதவின் வருகை தெரியவில்லை.


யாதவ் தன் மார்பிற்கு குறுக்காக கரங்களைக் கட்டி அவனுடைய நவியை இரசிக்க ஆரம்பித்தான். அங்குமிங்கும் அசைந்தாடும் ஜிமிக்கிகள்; கூந்தல் அவள் பஞ்சுக் கன்னங்களை இடையிடையே முத்தமிட்டு வர ஏனோ அக்கூந்தலின் மீது பொறாமைக் கொண்டான் இக் காதலன்.


அங்குமிங்கும் அசைந்து ஓடும் கயல் விழிகள், பாடலை முணுமுணுக்கும் ரோஜா இதழ்கள், அவனுடையவள் என்பதற்கான தங்கத்தாலி, கரங்கள் வேலைகளை செய்யும் போது ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொள்ளும் கண்ணாடி வளையல்களின் ஓசைகள் மேலும் அவ்வறைக்கு இசையை வழங்கியது.


அவளை அள்ளி அணைக்கத் துடிக்கும் மனதிற்கு கடிவாளமிட்ட யாதவ், தன் தலையை ஒரு முறை உலுக்கியவன், கேசத்தை அழுந்த கோதினான் இதழில் தன் வசீகரப் புன்னகையைச் சிந்தியவாறே.


பின், யாதவ், "மேடம் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிங்க போல இருக்கே" என்று உரைக்க திடீரென்று கேட்ட யாதவின் குரலில் தன் மோன நிலையில் இருந்து கலைந்தவள் திடுக்கிட்டு, அவசரமாக குரல் வந்த திசை நோக்கித் திரும்பினாள்.


யாதவ், "எதுக்கு இப்போ பயந்த? என்னை தவிர யாரு இங்க வர போறா?" என்று அக்கறையுடன் கடிந்துக் கொள்ள, "நீங்க இப்படி சத்தம் வராமல் பேய் போல வந்து நிப்பிங்கன்னு நான் என்ன கனவா கண்டேன்?" என்று எப்போதும் போல் துடுக்குடன் பேசிய பிறகே தான் என்ன பேசினோம் என்று உணர்ந்த வைஷ்ணவி நாக்கின் நுனியைக் கடித்து விழிகளை இறுக மூடினாள்.


அவளுடைய செய்கையில் சிரிப்பு வர, அவளுடைய சொற்கள் தன்னையும் எல்லோரையும் போன்றே நடத்த ஆரம்பித்தாள் என்பதில் சில்லென்ற உணர்வும் அவனது மனதை ஆக்கிரமித்தது. அவளையே சிரிப்புடன் பார்க்க வைஷூ, 'என்ன இந்த நேரத்து பத்து பக்கத்துக்கு திட்டு விழுந்து இருக்குமே' என்று சிந்தித்தவாறே ஒற்றைக் கண்ணைத் திறந்தாள்.


தன் முன்னே, சிரிப்புடன் நின்று இருந்த யாதவைப் பார்க்க இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. வெகு நாட்களிற்குப் பிறகு, அவனுடைய புன்னகை தவழும் முகத்தைப் பார்க்கிறாள். அவளும் விழி அசைக்காது அவனைப் பார்க்க, "என்ன அப்படி பார்க்குற?" என்று வினவினான் யாதவ்.


"இந்த நேரத்துக்கு நீங்க திட்டி இருக்கனும் அத்தான். ஆனால் சிரிச்சிட்டு இருக்கிங்க. அதான்" என்று ஒரு சிறு தயக்கத்துடன் கூற, "என் கிட்ட வாயடிக்காமல் யார் கிட்ட வாயடிப்ப?" என்றான் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கியவாறே.


"ஹாங்..." என்று வைஷூ விழிப்பதைப் பார்க்க அவனுக்கு சிரிப்பு அதிகரித்தாலும், ஒற்றைக் கண் சிமிட்டி, "அத்தானுக்கு ஒரு நல்ல காபி போட்டு வை குளிச்சிட்டு வரேன்" என்று மொழிந்து தனது அறைக்குள் புகுந்துக் கொண்டான்.


அதில் மேலும் அவள் முட்டைக் கண்கள் விரிய, நடப்பது அனைத்தும் கனவா? நனவா எனத் தெரியாமல் குழம்பிப் போனாள் அப்பேதை. 'ஆத்தி! இந்த அத்தானுக்கு காத்து கருப்பு ஏதாவது அடிச்சிருச்சா?' என்று தனக்குள்ளேயே கேட்டவள், 'ஒருநிமிஷம் இது முதல்ல கனவா? நனவா? செக் பண்ணி பார்த்துருவோம்' என்று தன்னையே கிள்ளினாள்.


கிள்ளிய இடம் வலிக்க, "ஆமா, நனவு. இந்த அத்தானுக்கு என்னாச்சு? இதை நான் எங்க போய் சொல்லுவேன்? யார் கிட்ட சொல்லுவேன்" என்று சத்தமாகவே புலம்ப, 'ஸ்ட்ராங் காபி வேணூம்' என்று கூற வந்த யாதவ் இதைக் கேட்ட வெடிக்க இருந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு தனது அறைக்குள் புகுந்து சத்தமாகவே சிரித்தான்.


அவனுடைய சிரிப்பு சத்தம் இவள் காதை எட்ட, "கன்ஃபோர்ம் அத்தானுக்கு பேய் பிடிச்சிருக்கு. நாளைக்கு சாமியார் கிட்ட கூட்டிட்டு போய் மந்திரிச்சி விடனும்" என தனக்குள்ளேயே பேசியவள் அவனுக்காக காபியைத் தயாரிக்கச் சென்றாள்.


இருவருக்கும் காபி தயாரித்து, ஸ்நெக்சையும் எடுத்து மேசையில் வைக்க, யாதவும் குளித்து வந்து சேர்ந்தான். அவளுடைய இன்றைய நாளைப் பற்றி கேட்டவாறு காபியை மிடறு மிடறாக அருந்த, அவளோ சந்தோஷமாக இன்றைய நாளைப் பற்றி பகிர்ந்துக் கொண்டாள். வெகு நாட்களிற்குப் பிறகு இருவருவருடைய மனமும் நிறைந்து இருக்க இருவருமே இரவு உணவை கதையளந்தவாறே சமைத்தனர்.


சாத்விக் டிடெக்டிவின் அழைப்பிற்காக காத்திருக்க அவனை ஏமாற்றாது அவரும் அழைப்பை ஏற்படுத்தினார். " உங்க ஈமெயிலுக்கு டீடெய்ல்ஸ் பூரா அனுப்பி வச்சிட்டேன் சார்" என்க, "தேங்கியூ சார். உங்க அகவுன்டுக்கும், உங்க ஆபிசுக்கு வேறு வேறயா பேசின பணத்தை அனுப்பி வச்சிட்டேன். செக் பண்ணுங்க" என்று மீண்டும் நன்றி கூறி அழைப்பதைத் துண்டித்தான்.


உடனே மெயிலைத் திறந்து பார்க்க, பெயர் போன வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்று இருந்தது. பெயர்: ஜெனிஃபர் என்று இருந்தது. வயது 21 எனவும், உடன் பிறந்தவன் ஒரு தமையன் பெயர் : ஜெகன் என்று இருந்நதது.


அத்தோடு அவன் இறந்து ஆறு வருடங்களுக்கு மேல் என்று இருக்க சாத்விக் அங்கே இருந்த புகைப்படத்தைப் பார்த்தான்.


பெற்றோருடன் அழகாய் நின்று தாயின் புறம் ஜெகன் நின்று இருக்க, தந்தையின் புறம் சாயந்து ஜெனி நின்று இருந்தாள். அத்தனை அழகாக இருந்தது அவர்களைக் குடும்பமாகப் பார்க்க. உடனே, சனாவை பார்த்துக்கொள்ளுமாறு வேலை செய்யும் பெண்ணிடம் கூறி விட்டு ஜெனியின் வீட்டை நோக்கிச் சென்றான்.


ஏனெனில் அவன் செய்யும் தொழிலில் பங்குதாரராக ஜெனியின் தந்தை இருந்ததே காரணம். சாத்விக் அங்கே அடைந்ததும், சாத்விக்கை வருகையை அறிந்து அவரே வரவேற்க வெளியே வந்தார்.


இருவரும் ஒருவரோடு ஒருவர் கைக் குலுக்கி விட்டு உள்ளே நுழைய வீட்டில் மிகப் பெரிய அளவிலேயே வரவேற்பரையில் ஜெனியின் புகைப்படத்திற்கு மாலை இட்டு இருக்க, அதற்கு அருகில் ஜெகனின் புகைப்படத்திற்கு மாலை இட்டு இருந்தது.


ஜெனியின் தாயும் அழுது வீங்கிய முகத்துடன் சாத்விக்கை வரவேற்றார். இருவரையும் பார்க்கும் போதே உடைந்து கண்ணீர் கரைந்து இருப்பது தெளிவாகப் புரிந்தது. அவர்களைப் பார்த்த சாத்விக்கிற்கே கண்கள் கலங்க பரிதாபத்துடன் அவர்களைப் பார்த்தான்.


சாத்விக், "சொரி சார்.. உங்க பொண்ணு..." என்று அதற்கு மேல் பேச முடியாது அவர்களைப் பார்க்க, "அவ தற்கொலை பண்ணி போய் சேர்ந்துட்டா சார்" என்று குரல் கமற மொழிந்தார். ஜெனியின் தாய், "ஒன்னுக்கு இரண்டு பிள்ளையா பெத்தேன். மூத்தவனும் தற்கொலை பண்ணி செத்துப் போனான் எங்களை விட்டு. இரண்டாவது பொண்ணும் போயிட்டா. எங்களுக்குன்னு இப்போ யாருமே இல்லை சார்" என்ற அத்தாயின் கதறல் அவனுடைய தாயை அவனுக்கு ஞாபகப்படுத்தியது.


"அழாதிங்க அம்மா. நாம நினைக்கிறது ஒன்னு கடவுள்நாடுறது ஒன்னு. உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு எனக்கு தெரியல்லை. உங்களை பார்க்கும் போது என் அம்மாவை தான் எனக்கு நியாபகம் வருது. அவங்க அழறது போலவே இருக்கு. எனக்கு கஷ்டமா இருக்கு" என மனமுருகி உரைக்க என்ன நினைத்தாரோ அழுகையை நிறுத்தி விட்டார் கண்களைத் துடைத்தவாறே.


ஜெகனின் தற்கொலை, ஜெனியின் தற்கொலை இரண்டுமே ஏனோ அவனது மனதைப் பாதிக்க கலங்கிய கண்களைத் துடைக்க யதார்த்தமாக வலது புறமாக திரும்ப அங்கே சுவரில் மாட்டப்பட்டு இருந்த புகைப்படங்களைப் பார்த்து அதிர்ந்து விழித்தான்.


ஏனெனில், அங்கே யாதவும், ஜெகனும் ஒருவரோடு ஒருவர் தோள் மேல் கையிட்டு குதூகலமாக சிரிக்கும் புகைப்படமே அது. அவ் அணைப்பிலும், அவர்களுடைய நட்பு ஆழமாகவே தெரிந்தது. அடுத்ந புகைப்படுத்தில் யாதவ், ஜெகன் இருவருக்கும் நடுவில் இருவரையும் அணைத்தாவாறே சந்தோஷமாக நின்று இருந்தாள் பதின்ம வயது ஜெனி...


தொடரும்...


அடுத்த பகுதி புதன் கிழமை வரும்..



கருத்துக்களைப் பகிர,



 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்




கண்சிமிட்டும் தென்றலே



அத்தியாயம் 30


யாதவை புகைப்படத்தில் ஜெகனோடும், ஜெனியோடும் பார்த்ததில் அதிர்ந்து இருந்த சாத்விக் உடனடியாக திரும்பி ஜெனியின் தந்தையிடம், "மித்ரன்" என்று கூறி முடியும் முன்னே, "அவன் ஜெகனோட பெஸ்டு ஃபிரன்டு. ஒருத்தர் மேலே ஒருத்தர் அவளோ பாசமா இருப்பாங்க. மித்ரனுக்கு ஜெகன்னா ரொம்ப பிடிக்கும்.


அதே போல தான் ஜெனி. ஜெனிக்கு மூத்த அண்ணா தான் மித்ரன்னு சொல்லுவா. எங்களுக்கும் அவன் இன்னொரு பையன் போல தான். ஜெகன் ரொம்ப அப்பாவி, பயந்த சுபாவம் இருக்கிறவன். அவனுக்கு எதிர் குணம் மித்ரன். கிட்டத்தட்ட மித்ரன் ஜெகனோட பாதுகாப்பு கவசம் மாதிரி.


இரண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா தான் படிச்சாங்க. ஜெகனை பத்துரமா அவன் குணம் அறிஞ்சு பார்த்துக்குறதே மித்ரன் தான். என் பையனை நினைச்சு கவலையா இருந்தப்போ, அவனை நல்லா பாதுகாப்பா பார்த்துகிட்டான். மித்ரனுக்கு ஜெகன் குழந்தை மாதிரி.


ஜெகன் மூலமா எங்களுக்கு அறிமுகமானான். எங்களுக்குமே அவனை ரொம்ப பிடிச்சது. பிளஸ் டூ வரைக்கும் இங்கே படிச்சான். அப்புறமா அவங்க ஊருல இருக்கிற காலேஜூல சேர்ந்தான். ஜெகன் சென்னையில படிச்சான். ஆனாலும் இரண்டு பேருக்கும் இடையில இருக்கிற பாசம் குறையவே இல்லை.


ஜெனி மேலே மித்ரனும் ரொம்ப பாசமா இருந்தான். அவளும் அப்படி தான். ஒரு வருஷம் போக, திடீர்னு ஒரு நாள் கை நரம்பை கட் பண்ணாட்டு அவன் பாத்ரூம்ல ஜெகன் இறந்து இருந்தான். எங்களுக்கு உயிரே போயிருச்சு. மித்ரனும் வந்தான். அவன் எங்களை விட உடைஞ்சி போயிருந்தான். ஜெகன் எதுக்காக செத்தான்னு எங்களுக்கு இன்னுமே தெரியாது.


ஜெகன் சாகும் போது, ஜெனியும் இருந்தா. அவளால ஜெகன் செத்ததை ஏத்துக்கவே முடியல்லை. ஒவ்வொரு நாள் நைட்டுக்கும் "அண்ணா", "அண்ணா" ன்னு கத்திட்டு எந்திரிச்சி அழ ஆரம்பிப்பா. அதனால அவளுக்கு ஒரு மாற்றம் வேணூங்குறதுக்காக அவளை லண்டனுக்கு என் மனைவி தங்கச்சி வீட்டுல தங்கி படிக்க அனுப்பினோம்.


அங்கே போயும் ஆரம்பத்துல கஷ்டபட்டவ போகப் போக யதார்த்ததை புரிஞ்சி கிட்டு வாழ்ந்தா. ஐந்து வருஷமா இந்தியா வரவே இல்லை. எத்தனை முறை கூப்பிட்டும் வர முடியாது. வந்தால் அண்ணா ஞாபகமாவே இருக்கும்னு சொல்லுவா. நாங்களும் அவளை வற்புறுத்தவே இல்லை.


எங்களுக்கு அவளை பார்க்க தோணுச்சுன்னா, நாங்களே அங்கே போய் பார்ப்போம். மித்ரன் ஜெகன் இறந்த பிறகு வீட்டை விட்டு போனவன், இன்னுமே நான் அவனை பார்க்கவே இல்லை. எல்லா உதவியையும் மொபைல் மூலமாவே எங்களுக்கு பண்ணானே தவிர, எங்க கண்ணு முன்னாடி வர இல்லை.


மித்ரனுக்கு கல்யாணம்னு எங்களுக்கு சொன்னான். நிச்சயத்துக்காவது போகலாம்னு பிளேன் பண்ணோம்.அவன் கல்யாணம் அப்போ போக முடியாது. ஏன்னா எனக்கு பீஜிங்ல முக்கிய மீடிங் இருக்கு. அதை தவிர்க்க முடியாது. இதை நான் ஜெனி கிட்ட சொல்லவும் அவளும் உடனே இந்தியா வந்தா.


அவனோடு நிச்சயத்துக்கு போகனும்னு கிஃப்ட் வாங்க அன்னிக்கு வெளியில போனா. அதுக்கு அப்புறமா அவளுக்கு ஃபோன் பண்ணேன். அவ எடுக்கவே இல்லை. எங்களுக்கு ரொம்ப பயமாகிருச்சு. ஈவீனிங் போல திரும்பி வந்தா. ஆனால் வீட்டுக்கு வரும் போது அவளோட டிரஸ் பூரா இரத்த கரையா இருந்தது.


கேட்டதுக்கு, அக்சிடன்ட் ஒன்னு. அவங்களை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணும் போது லேட் ஆச்சுன்னு சொன்னா. மித்ரன் நிச்சயத்துக்கும் வர முடியாதுன்னு சொன்னா. அதுக்கு அப்புறமா கொஞ்ச நாள் வித்தியாசமா நடந்துகிட்டா. அமைதியா எதையோ யோசிச்சிட்டு இருப்பா. இப்போ இப்படி ஆகிருச்சு" என்று அவன் கேட்ட கேள்விக்கும் மேலதிக தகவலை தன் மனக் குமுறல்களாக வெளிக் கொட்டினார்.


சாத்விக்கிற்கு அனைத்திற்கும் பின்னே ஏதோ மறைந்து இருப்பது போல் தோன்ற, "இதெல்லாம் மித்ரனுக்கு தெரியுமா?" என்று வினவ, "அவன் இந்த சிடியோட ஏ.ஐ.ஜின்னு எங்களுக்கு தெரியும். எங்க முன்னாடி அவன் வராமல் இருக்கான்னா, அதுக்கு நிச்சயமா ஒரு காரணம் இருக்கும்.


அவன் எங்க முன்னாடி வராமல் இருந்தாலும், ஏ.சி.பி கௌதமை வச்சி தேவையான டீடெய்லைசை எடுத்துட்டான். இந்த விஷயம் எல்லாமே மித்ரனுக்கும் தெரியும்" என்றவரின் குரலில் தன் மகன் என்ற கர்வம் நன்றாகவே தெரிந்தது. இதைப் பார்த்து சாத்விக்கால் பூரிக்காமல் இருக்க முடியவில்லை.


"சரி சார். எந்த ஹெல்ப் வேணூன்னாலும் கேளுங்க நான் பண்றேன். என்னையும் உங்க பையனா நினைச்சிகொங்க. எதுக்கும் தயங்காதிங்க" என்ற சாத்விக் அவர்களிடம் இருந்து விடைப் பெற்று தன் வீட்டை நோக்கிச் சென்றான்.


யாதவ் இரவு உறங்கும் போது அவனது மொபைல் அடிக்க, தன்னை சிறு பிள்ளையென அணைத்து உறங்கும் மனைவியை அவள் உறக்கம் கலையாதவாறு தன்னிடம் இருந்து விலத்தி படுக்க வைத்தவன் மொபைலை எடுத்து வெளியே வந்தான்.


கௌதம், "மச்சான் சொரிடா இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்றதுக்கு" என்று வருந்த, "அடச்சீ நீ நடிச்சது போதும்டா கேடி. நான் என் லவரை பிரிஞ்சி இருக்க, இவன் மட்டும் எப்படி பொன்டாட்டி கூட சந்தோஷமா இருக்கலாம்ங்குற காண்டுல போன் பண்ண. அதானே? மரியாதையா நேரா மேட்டருக்கு வா" என்றான் கடுப்புடன் யாதவ்.


கௌதம், 'பயபுள்ள கரெக்டா எல்லாத்தையும் கச் பண்றானே' என மனதினுள் நினைக்க, "டேய் என்ன மைன்ட் வொயிசா? பிச்சுபுடுவேன். பிச்சு. மேட்டரை சொல்லுடா" என்று எகிறினான் யாதவ். 'இவன் கிட்ட இருந்து ஒன்னுமே மறைக்க முடியாது' என கௌதம் பெருமூச்சு விட்டவாறே, "ஜெனி பொண்ணு இறந்த இடத்தை சுத்தி இருக்கிற அத்தனை இடங்களையும் செக் பண்ண சொன்ன இல்லையா?" என்று வினவ, "ஆமாடா. ஏதாவது குளூ கிடைச்சுதா?" என்று அவசரமாகக் கேட்டான்.


கௌதம், "ஆமாடா. ஒரு ரோட்டு பக்கத்துல ஒரு மொபைல் வீசி கிடந்தது. அதை செக் பண்ணோம். அதுல சிம்மை வச்சு அது ஜெனியோடதுன்னு உறுதி பண்ணோம். ஆனால் மெமரி கார்டை மட்டும் காணோம். பக்கத்துல எல்லா இடங்களில் தேடியும் கிடைக்கவே இல்லை" என்றான் யோசணை படிந்த குரலில்.


யாதவிற்கும் அவன் கூறியது யோசணையை வழங்க எப்போதும் போல் தன் சுட்டு விரலால் நெற்றியை நீவ ஆரம்பித்தான்.


இதே நேரம், அங்கே ஒருவன் இருளில் கால் மேல் கால் இட்டு அமர்ந்திருக்க அவனைச் சுற்றி சில அடியாட்கள் நின்று இருந்தனர். அப்போது அதில் ஒருவன், "சார் நாங்க பொலிஸ் அந்த பொண்ணோட போனை செக் பண்ணும் போது பக்கத்துல தான் இருந்தோம்.


அவங்க மெமரி காட் இல்லைங்குறதை ஏ.சி.பிக்கு சொல்றதை எங்க காதால கேட்டோம். அப்போ அன்னிக்கு நாம அந்த பொண்ணை துரத்தும் போது மெமரிகார்டை தனியா எடுத்துட்டு தான் மொபைலை மட்டும் வெளியே வீசி இருக்கா.


ஆனால் சாகும் போது அந்த பொண்ணோட கையில எதுவுமே இருக்க இல்லை. இதை நாங்க எங்க கண்ணால பார்த்தோம்" என்று உரைக்க மற்றவர்களும் அடியாளின் கருத்தை ஆமோதித்தனர்.


"அப்போ, அந்த மெமரிகார்ட் அந்த ஷாபிங் மோல்ல தான் இருக்கனும். ஷொபிங் மோல் சி.சி.டி.வி புடேஜை செக் பண்ணிங்களா?" என்று இருளில் அமர்ந்து இருந்தவன் வினவ, "ஆமா சேர். காசை கொடுத்து கரெக்ட் பண்ணி பார்த்தோம்.


அந்த பொண்ணு ஷாபிங் மாலுக்குள்ள ஓடும் போது கையை இறுக்கமா பிடிச்சிருந்திச்சு. சாகும் போது கையை விரிச்சு வச்சிருந்தா. அப்போ இருக்க இல்லை" என்று பார்த்ததை கூற, "அந்த பொண்ணு எங்கேயோ மறைஞ்சீ இருந்தான்னு சொன்னிங்களே. எங்கே அது?" என்று வினவினான்.


"லேடிஸ் பாத்ரூம் சேர்" என்றான் மற்றொரு அடியாள். இருளில் அமர்ந்தவன், "அவ அங்க இருந்து வெளியாகும் போது அவ கையில இருக்க இல்லையா?" என்று எதிர் கேள்வி கேட்க, "அதை புடேஜிலேயும் பார்க்க முடியல்லை. அந்த பொண்ணை துரத்தி ஓடும் போதும் பார்க்க முடியல்லை" என்றான் ஒரு அடியாள்.


"அப்போ கண்டிப்பா மெமரிகார்டை, அங்கே தான் வச்சிருப்பா. இல்லை வச்சால் ஈசியா எடுத்துருவோம்னு அவளுக்கு தெரியும். சோ, நாம எடுக்க முடியாத இடமா இருக்கனும் அந்த சிப் இருக்கிற இடம். இல்லை, யார் பர்குலயாவது போட்டு இருக்கனும்" என்று சத்தமாகவே தன்னுடனேயே அவன் பேசி எழுந்து அங்குமிங்கும் நடந்தான்.


அடியாட்களோ, தங்களுக்குள்ளே, "அப்போ பெரிய அளவு யாருமே அங்கே போக இல்லையே" என்று பேச, அதில் ஒருவன், "புடேஜ்ல அந்த பொண்ணு லேடிஸ் டாய்லடுக்கு போன அதே நேரம், ஏ.ஐ.ஜி ஓட பொன்டாட்டியும் அங்க இருக்கிறதை பார்த்தேன்" என்று சாதாரணமாகக் கூற பொறித்தட்டியது தலைவனுக்கு.


அவன் அவசரமாக அதைக் கூறியவனிடம் வந்து இரு தோள்களையும் பிடித்து "வைஷ்ணவி அப்போ அதே இடத்துல தான் இருந்தாளா?" என்று வினவ, "ஆமா சேர். அந்த பொண்ணு போக முன்னாடியே ஏ.ஐ.ஜி பொன்டாட்டி லேடிஸ் டாய்லட்டுக்குள்ள போய் இருந்தாங்க" என்றான் உறுதியாக.


தலைவன் ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு, "வைஷ்ணவியை சந்தர்ப்பம் கிடைக்கும் போது தூக்கிருங்க" என்று உரைத்து அங்கிருந்து வெளீயேற, ஏ.ஐ.ஜி யாதவ் மித்ரனின் மனைவியைக் கடத்துவாதா? என்று அச்சம் கொண்டாலும், தலைவனின் பேச்சை மீற முடியாமல் வைஷ்ணவியைக் கடத்த சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தனர்.


முதலில் வைஷ்ணவியை பின் தொடர்ந்து அவளுடைய அன்றாட நடவடிக்கைகளை கவனித்து சரியாந நேரத்தில் கடத்த வேண்டும் என்று முடிவெடுத்தனர்.


யாதவிற்கும் அவ் மெமரி கார்டை யாராவது எடுத்து வைத்திருப்பார்களோ என்ல சந்தேகம் வர,"அந்த இடத்துல சி.சி.டி.வி புடேஜை செக் பண்ண சொல்லுடா. அந்த மெமரி கார்ட் நமக்கு வேணூம். யார் கிட்ட இருந்தாலும் பரவால்ல. அதை தேட ஆரம்பிங்க" என்று மொழிந்து மேலும் சில விடயங்களைப் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.


பொலிஸாராலும், அடியாட்களாலும் தேடப்படும் வைஷ்ணவியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.


அடுத்தநாள் காலையில் நகுல் கண்விழித்து குளித்து வந்தவன் கடினப்பட்டு வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் அஞ்சலியிடம், "எனக்கு அவசரமா சென்னைக்கு போகனும். அங்கே ஒரு வேலை இருக்கு முடிச்சிட்டு சீக்கிரமாவே வந்துடுறேன்" என்று நவிழ்ந்து வீட்டில் உள்ளவர்களிடமும் கூறி விட்டு அங்கிருந்து சென்னையை நோக்கி கிளம்பினான்.


யாதவும் காலை உணவை எடுத்து வைஷூவை அழைத்து, அவளை கல்லூரியில் விட்டு விட்டு தனது அலுவலகத்திற்குச் சென்றான். காலை பத்து மணியளவில் அவனுடைய மொபைலிற்கு நகுலன் அழைத்து, "நீ சாத்விக்கை கூட்டிட்டு உன் வீட்டுக்கு இப்போவே வா" என்று கட்டளையிட்டு அழைப்பைத் துண்டித்தான்.


யாதவ் எதுமே புரியாது, உடனே சாதவிக்கிற்கு அழைக்க, "ப்ரவீன் எங்கே இருக்க? அண்ணா உன்னை அழைச்சிட்டு வரசொன்னான். அவன் குரலே சொல்லுது ஏதோ பெரிய விஷயம்னு. கார்த்திக்கையும் என் வீட்டுக்கு பத்து நிமிஷத்துல வர சொல்லு" என்று உரைக்க, அவன் சரியாக புரிந்துக் கொண்டதில் உள்ளுக்குள் மெச்சியவன், "ஒகே" என்று அழைப்பை துண்டித்தான்.


கார்த்திக்கையும் அழைத்து, யாதவின் வீட்டிற்கு வருமாறு கூறி சாத்விக், யாதவ் இருவருமே யாதவின் வீட்டை நோக்கிச் சென்றனர். அங்கே நகுல் இறுகிப் போய் அமர்ந்து இருக்க யோசணை படிந்த முகத்துடன் கார்திக் மற்றும் யாதவ் அவனை நெருங்க சாத்விக் அமைதியாக அவர்களை நோக்கி நடந்தான்.


கார்த்திக், "நகுல் அண்ணா" என்று பேச, "வீட்டுக்குள்ள போய் பேசலாம் கார்திக்" என்று பேச்சை முடிக்க அதற்கு மேல் யாரும் பேசாது யாதவின் வீட்டிற்குள் சென்றனர். நால்வருமே சோபாவில் அமர, நகுலனின் முகத்தையே மற்றைய மூவரும் பார்க்க, நகுல் சில நொடிகள் மௌனம் காத்து, "அஞ்சலி பத்திய உண்மை உனக்கு எப்போ தெரியும் சாத்விக்?" என்று நேரடியாய் வினவினான்.


"அவ குணம் சரியில்லைன்னு எனக்கு ஐந்து வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். ஆனால் அவ ரொம்ப பயங்காரமானவன்னு நேத்து தான் எவிடன்ஸ் கிடைச்சது" என்று டிடெக்டிவ் வழங்கிய அனைத்தையுமே நகுலிடம் வழங்கியவன், மெதுவாக ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தவற்றை மொழிய நகுலன் விக்கித்திற்கு நிற்க யாதவோ சற்று அதிர்ந்தான்.


கார்த்திக் மௌனமாகவே இருக்க நகுல், "இது உனக்கு முன்னாடியே தெரியுமா?" என்று வினவ, "தெரியும்" என்றான் கார்த்திக. நகுல், "அப்போ ஏன் என் கிட்ட மறைச்ச?" என்று கோபமாய் கேட்க, "எப்படி அண்ணா நீங்க உயிரா காதலிக்கிற பொண்ணு இப்படி பண்ணான்னு வந்து சொல்ல முடியும்? நீங்க நம்பி இருப்பிங்களா?


அதை விட நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருந்திங்க. அவ இனிமேல் தப்பு பண்ண மாட்டான்னு நினைச்சேன். ஆனால் நீங்க இப்படி பேசுறதைப் பார்த்தால் அவ ஏதோ பெரிசா தப்பு பண்றான்னு புரியிது" என்று கூற, "அப்போ கிஷோர் சொன்னது போல நீ அவளை காதலிக்கிற மாதிரி ஏமாத்த பார்க்க இல்லையா?" என்றான் யாதவ் சாத்விக்கை பார்த்தவாறு.


"என்ன உளறல் இது?" என்று சாத்விக் கோபமாக கேட்க, "நான் ஏற்கனவே உன் மேலே கோபத்துல இருந்தேன். அந்த நேரம் அஞ்சலியை என் அண்ணனுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணாங்க. கிஷோர் ஃபொரின்ல இருந்து போன் பண்ணி நீ அஞ்சலியை காதலிக்கிறது போல அவளை அடைய முயற்சி பண்றதா அஞ்சலி அழறான்னு சொன்னான்.


நானும் அதை நம்பி தான், உன் மேலே இருந்த கோபத்தோடவும், என் அண்ணிய இப்படி பண்ண பார்க்கிறியேங்குற கோபத்துல உன்னை பழிவாங்க சரியான நேரம் பார்க்க அதுவும் சரியா அமைஞ்சது. அது மட்டுமில்லை உனக்கெதிரா செஞ்ச ஒவ்வொரு விஷயத்துலேயும் எனக்கு உதவின நண்பன் கிஷோர் தான்.


ஏன் உன் போடோ, சனா போடவை பப்ளிக்ல ரிலீஸ் பண்ணதும் கிஷோர் தான்" என்று யாதவும் நடந்த அனைத்தையுமே கூற அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. நண்பன் போன்று இருந்தவன் துரோகியாக முதுகில் குத்தி இருக்கிறானே என. மற்ற மூவரும் அதிர்வில் இருக்க யாதவிற்கு ஏதோ ஞாபகம் வர, "ஒரு நிமிஷம்" என்றான் நெற்றி சுருக்கியபடி.


அனைவருமே அவனை கேள்வியாகப் பார்க்க, "ஆர்யன் உன் வீட்டு உங்க அப்பாங்களோட சேர்த்து ஒரு பொண்ணை பார்த்து, நான் இந்த பொண்ணை எங்கேயோ பார்த்து இருக்கேன்னு சொன்னேனே? ஞாபகம் இருக்கா?" என்று வினவ, இருவருமே "ஆம்" என்றனர்.


"அந்த போடோவை நான் கிஷோரோட பர்சுல தான் பார்த்து இருக்கேன்" என்று யாதவ் அடுத்த முடிச்சையும் அவிழ்க்க ஆரம்பித்தான்...


தொடரும்...


அடுத்த பதிவில் ஞாயிறு மீண்டும் சந்திக்கலாம்.

Unga comment kku time kedaikkum podhu rep panre


கருத்துக்களைப் பகிர,




 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



கண்சிமிட்டும் தென்றலே


அத்தியாயம் 31



யாதவ் கூறியதில் அதிர்ந்து பார்த்த நண்பர்கள் கார்திக், "என்னடா சொல்ற? கிஷோராட (அஞ்சலியின் அண்ணன்) பர்சுல அவங்க போடோ பார்த்தியா?" என்று வினவினான். "ஆமா. எனக்கு இப்போ தான் அது ஞாபகம் வருது. அவங்களுக்கும், அஞ்சலி குடும்பத்துக்கும் என்ன தொடர்பு?" என்று புரியாமல் குழம்பினர மூவரும்.



அப்போது நகுல் நேற்று நடந்த அனைத்தையுமே கூற சாத்விக், "அப்போ அவ பணத்துக்காக உங்களை கல்யாணம் பண்ண இல்லை. வேற ஏதோ ஒரு விஷயம் இருக்கு. அந்த விஷயம் என்ன்னு நாம முதல்ல கண்டு பிடிக்கனும்" என்று உரைக்க சிறிது நேரம் அமைதியாக இருந்த கார்திக், "நம்ம அப்பா காலத்து போடோல அந்த பொண்ணு இருக்காங்க.


நம்ம யாருக்கும் அவங்களை தெரியாது. பட் கிஷோரோட பர்சுல அந்த போடோ இருந்து இருக்கு. அஞ்சலி இப்படி சொல்லி இருக்கா. அஞ்சலிக்கு ஏன் இது எல்லா விஷயத்தோடும் தொடர்பு இருக்கக் கூடாது?" என்று வினவ, "அப்படின்னா போடோல இருந்த பொண்ணுக்கும் அஞ்சலி இப்படி நடந்துகிட்டதுக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்றியா ஆர்யன்?" என்றான் யாதவ்.


கார்திக், "யெஸ், சுருக்கமா சொல்லனும்னா இவங்க தான் எல்லா பிரச்சனைகளோட மையப் புள்ளின்னு நினைக்கிறேன்" என்று உரைக்க, சாத்விக், யாதவ், நகுல் மூவருக்கும் அவனுடைய கூற்றையும் ஏற்றுக் கொள்ள முடியுமாக இருந்தது.


சாத்விக், "நாலு பேருமே முதல்ல அஞ்சலியோட குடும்பத்தை தனித் தனியாக விசாரிக்க ஆரம்பிக்கலாம். ஒவ்வொருத்தருக்கும் எப்படிபட்ட டீடெயில்ஸ் கிடைக்குதுன்னு பார்க்கலாம். அதுக்கு முதல்ல அஞ்சலிலிக்கான முடிவை ஆரம்பிக்கனும்" என்ற சாத்விக் தன்னுடைய திட்டம் முழுவதையும் கூறி முடித்தான்.


யாதவ், "ஆனால்......." என்று நிறுத்தி சாத்விக்கைப் பார்க்க, "என் அம்மாவோட சாவுக்கு காரணம் அவ. எனக்கு அவமானத்தை தேடிக் கொடுத்தது அவ. நிச்சயமாக இதைப் பண்ண என் பணத்தையும், பவரையும் எந்த அளவுக்கு வேணூன்னாலும் யூஸ் பண்ணுவேன். அவ முகத்திரையை கிழிச்சி காட்டுறேன்" என்று நரம்புகள் புடைக்க, கண்சிவக்க வன்மத்துடன் மொழிந்தான்.


இதில் அதிகமாக இழந்து, பாதிக்கப்பட்டது சாத்விக் என்ற ஒருவனே என்பதால் மற்ற மூவருமே எதுவும் பேசவில்லை. நகுல், "இன்னிக்கே இதை ஏற்பாடு பண்ண முடியுமா சாத்வீக்?" என்று வினவ, "நீங்க இன்னிக்கு ஈவீனிங் போக முன்னாடி உங்க கையில ஒப்படைக்கிறேன்" என்று தன் மொபைலை எடுத்து ராகவிற்கு அழைத்துப் பேச ஆரம்பித்தான்.


யாதவ், நகுலிற்கு உணவை ஆடர் செய்து வழங்கி, எதையும் சிந்திக்காது ஓய்வெடுக்குமாறு கூறி தனது அலுவலகத் நோக்கி தன் தமையனின் வாழ்வை எண்ணிச் செல்ல அவனோடு கார்த்திக் மற்றும் சாத்விக் இருவருமே நகுலிடம் இருந்து விடைப் பெற்றுச் சென்றனர்.


சிறிது தூர பயணத்திற்குப் பிறகு யாதவின் கார் செல்லும் வழியில் வேகமாக வந்த சாத்விக்கின் கார் முன்னே வந்து நிறுத்த யாதவும் புரியாமல் காரை நிறுத்தினான். அவர்களுக்குப் பின்னால் வந்த கார்த்திக்கும் காரை நிறுத்தி இறங்க, மற்ற இருவருமே இறங்கினர்.


யாதவ், "என்னாச்சு ப்ரவீன்?" என்று உயிர்ப்பே இல்லாத குரலில் வினவ, "உன் அண்ணா வாழ்க்கையைப் பத்தி நீ கவலைபடுறன்னு புரியிது. அதுக்காக ஒரு ஐடியா என் கிட்ட இருக்கு. பட் நீ அதுக்கு ஒத்துக்கனும்" என்று உரைக்க யாதவ் புரியாது பார்க்க கார்திக் மௌனமாகவே நின்றான்.


இந்த நிமிடம் வரையில் தனக்கு உற்ற நண்பனாக நினைத்த கிஷஷோர் துரோகம் இழைத்து இருக்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே யோசிக்க முடியாமல் அமைதியை வெகு நேரமாக தத்தெடுத்து இருந்தான்.


"அது உன் அண்ணாவுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கலாம்" என்று சாத்விக் சாவகாசமாக ஒரு குண்டை இட, கார்த்திக், யாதவ௲ இருவருமே அவனை 'லூசா நீ?' என்ற ரீதியில் பார்த்தனர்.


சாத்விக், "நான் தமாஸ் பண்ண இல்லை. உண்மையை சொல்றேன். பொண்ணும் ரெடி. உனக்கும், உன் அண்ணாவுக்கும், வைஷூவுக்கும் இன்னொரு அம்மாவா இருப்பா. உங்க குடும்பத்துக்கு நல்ல மருமகளா இருப்பா. அந்த பொண்ணுக்கு நான் கரென்டி" என்று மொழிந்தான்.


"என்னடா, லலிதா ஜூவல்லரிலி அட்வர்டீஸ்மன்டுல சொல்றது போல, இந்த பொண்ணுக்கு நான் கரென்டின்னு சொல்லுற?" என்று கார்திக் வினவ, "ஸ்கிரிப் ரைடர் என் கிட்ட கடன் கேட்டாரு. நான் தான் சொல்லிக் கொடுத்தேன். போவியா" என்று கடுப்பாக விடையளித்தான் சாத்விக்.


யாதவ் முகத்தில் சிறிய புன்னகை படர, "நீ இவளோ சொல்றதுன்னா, கண்டிப்பா நல்ல பொண்ணா இருப்பா. ஆனால் அண்ணாவை ஒத்துக்க வைக்கிறது கஷ்டம்" என்க, "முதல்ல அந்த பொண்ணு கல்யாணத்துக்கு ஒத்துக்கனும். அப்புறமா தான் உன் அண்ணன் கிட்ட பேசனும்" என்றான் அமர்த்தலாக.


கார்திக், "அப்போ அந்த பொண்ணுக்கே கல்யாணத்தைப் பத்தி தெரியாதா?" என்று மீண்டும் அதிர, "இது நம்ம மூனு பேருக்கும் மட்டும் தான் தெரியும்" என்று பேசியவாறே சாவகாசமாக காரின் முன் பகுதியில் ஏறி அமர்ந்து வீதியை பார்க்கலானான்..


கார்திக், "என்னடா இவன் இப்படி பேசுறான்?" எனக் கூறி யாதவைப் பார்க்க அவனோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். 'இவனுங்க இரண்டு பேர் கூட சேர்ந்திலே அரை பைத்தியம் பிடிச்சது போல தான்' என தனக்குள் முணுமுணுத்து சாத்விக் அமர்ந்த காரின் ஒரு முனையில் சாய்ந்தவாறு கைகளைக் கட்டி பார்த்தான்.


யாதவ் சிறிது நேரத்திற்குப் பிறகு, "புரொஃப் காஞ்சனாவா பொண்ணு?" என்றிட, "பரவால்லையே உனக்கும் கொஞ்சம் புத்தி இருக்கே" என்று நக்கல் வழியும் குரலில் உரைத்தான். யாதவ் அவனை முறைக்க, சாத்விக்கும் அதற்கு சளைக்காது அவனை பார்த்தான்.


கார்திக், 'இப்போ தான் ஒத்துமையா இருந்தானுங்க. அதுக்குள்ள முறை மாமன் போல முறைச்சிகிட்டு இருக்கானுங்க. இனிமேல் இவனுங்களுக்கு நடுவுல நான் தான் மாட்டிகிட்டு முழிக்கனும் போல இருக்கே. ஷப்பா!!!! இப்போவே கண்ணை கட்டுதே. இந்த கதை முடியும் போது நான் நொந்து நூடில்ஸ் ஆக போறது உறுதி. ரைட்டர் மேடம் பார்த்து பண்ணுங்க' என தனக்குள்ளேயே பேசிக் கொண்டான்.


கார்திக், "விடுங்கடா இரண்டு பேரும். அடுத்தது என்ன பண்ணலாம்னு யோசிங்க? காஞ்சனா யாரு?" என்றிட, சாத்விக் காஞ்சனாவின் மொத்த தகவலையும் கூற, யாதவ் தன் மொபைலை எடுத்து அருடைய புகைப்படத்தை காட்டினான்.


கார்த்திக், "நீ ஏன்டா அவங்க போடோவை உன் மொபைல்ல வச்சிருக்க? என் தங்கச்சிக்கு துரோகம் பண்றியா?" என்று வைஷூவின் மீது கொண்ட உண்மையான அன்பில் சண்டைக்குச் செல்ல, சாத்விக், "அவன் பொன்டாட்டியை அவன் காதலிக்கிறாதா இல்லையான்னே அவனுக்கு தெரியல்லை. இந்த லட்சணத்துல இன்னொரு பொண்ணா? வாய்ப்பே இல்லை. அந்த திறமை எல்லாம் அவனுக்கு இல்லை" என்று கிண்டலுடன் மொழிந்தான்.


யாதவ் சாத்விக்கை உக்கிரமாக முறைத்து விட்டு கார்திக்கைப் பார்க்க, "உன் தங்கச்சி கூட பழகுற அத்தனை பேரோட டீடெய்ல்சும் எனக்கு வந்துரும். எந்த நேரத்துல எந்த பிரச்சனையில போய் மாட்டிப்பான்னு தெரியாது. அந்த நேரம் யாரால பிரச்சனைன்னு கண்டுபிடிக்கிறதை விட முன்னாடியே எல்லோரை பத்தி தெரிஞ்சிக்கிறது பெடர்" என்றான் பெருமூச்சை வெளியிட்டு.


மற்ற இருவருமே அதை ஆமோதிக்க, "நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு" என்று சாத்விக் வினவ, "எனக்கு ஒகே. முதல்ல அஞ்சலி விஷயத்தை முடிக்கலாம். அடுத்து அண்ணா கிட்ட பேசி சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு" என்றான் யாதவ்.


"சரி அப்போ காஞ்சனா மிஸ் கிட்ட சம்மதத்தை வாங்க, சனா, அபி, வைஷூ காலை தான் பிடிக்கனும்" என்று கார்திக் சிரிப்புடன் உரைக்க, மற்ற இருவருமே புன்னகைத்தனர். சாத்விக், "அவங்க காஞ்சனா மேம் கிட்ட பேசட்டும் நாம, அவங்க அத்தை, மாமா கிட்ட பேசலாம்" என்றான்.


பின்னர் மூவருமே விடைப்பெற்று தங்களது அலுவலகங்களை நோக்கிச் சென்றனர். நகுலும் சிறிது நேரம் ஓய்வெடுத்தவன் உணவு வந்தவுடன் அதைச் சாப்பிட்டு முடித்து யாதவ்விடம் கூறி தனது ஊரை நோக்கி பயணமானான். வைஷூவிற்குக் கூட நகுலின் வருகையைப் பற்றி தெரிவிக்கப்பட இல்லை.


தன்னுடைய மொத்த காதலையும் மண்ணோடு புதைத்து விட்டு அடிப்பட்ட புலியாக, தன்னை காயப்படுத்திய வேடனை தாக்க பதுங்கிக் காத்திருக்க தயாரானான். அவன் செல்லும் முன் சாத்விக் கூறியது போல நகுல் வினவிய சிலவற்றை வழங்கியே அனுப்பி வைத்தான்.


வைஷூ கல்லூரியை முடித்து வெளியேற, அவளை அழைத்து வர யாதவ் வந்திருக்கவில்லை. அவனுடைய ஓட்டுனரையே அனுப்பி வைத்து இருந்தான். அவரோடு செல்ல அவள் தன் முகத்தை ஓட்டுனரின் அருகில் இருக்கும் கண்ணாடியில் பார்க்கும் போது அவர்களுக்குப் பின்னே கறுப்பு நிற ஜீப்பை பார்த்து விட்டு சாதாரணமாக விட்டு விட்டாள்.


வீட்டிற்கு வந்ததும், அங்கே தன்னை சுத்தப்படுத்தியவள் யாதவிற்காக இரவு உணவை தயாரிக்க, யாதவும் இரவு வந்து சேர்ந்தான். யாதவின் முகத்தில் மற்றைய நாட்களுக்கு மேலதிகமாக தெரியும் சோர்வில், "என்னாச்சு அத்தான்? இன்னிக்கு ரொம்ப வேலையா?" என்று வருந்தி வினவ, "ஆமா நவி. இன்னிக்கு கொஞ்சம் அதிகமாவே வேலை இருந்தது" என்றான்.


குரலிலும் எப்போதும் தென்படும் ஒருவித கம்பீரமும் குறைந்து இருக்க அதற்கு மேல் அதைப் பற்றி குடைந்து கேட்பதற்கும் வைஷூ விரும்பவில்லை. அமைதியாகச் சென்று அவனுக்காக காபியைத் தயாரித்து அவனிடம் அதை வழங்கி அறைக்குள் சென்றாள்.


சில நொடிகளில் திரும்பிய வைஷூவின் கரங்களில் சிறிய பாம் ஒன்று இருக்க, அதை எடுத்து அவனிடம் அனுமதி கேளாமலேயே நெற்றியில் பூசி தன் பிஞ்சுக் கரங்களால் நீவிவிட்டாள். தலை முழுவதும் அவள் கரங்களால் மசாஜ் செய்ய தூக்கம் கண்களைச் சொக்கியது அவனுக்கு.


அவன் இமைகள் மூடித் திறப்பதைப் பார்த்து, "அத்தான் தூங்கிறாதிங்க. சமைச்சிருக்கேன் சாப்பிட்டு தூங்குங்க" என்றவள், அவனுடைய அடர் சிகைக்குள் இருந்து தன் விரல்களை எடுத்து கைகளைக் கழுவச் சென்றாள். யாதவிற்கு தன்னிடம் பயம் கொள்ளாது உரிமையாக அவள் நடந்துக் கொள்வது பிடித்திருந்தது. சிறிது சிறிதாக அவளுள் ஏற்படும் மாற்றங்கள் அவனுள் சில்லென்ற உணர்வை ஏற்படுத்தின.


அவள் கைகளைக் கழுவிக் கொண்டிருக்க மெதுவாக அவளிடம் வந்தவன் என்ன நினைத்தானோ அவள் கன்னத்தில் முத்தமிட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டான். வைஷூவின் நிலையே பரிதாபமாக இருந்தது. முத்தமிட்ட போது மின்சாரம் தாக்கிய உணர்வில் சிலை போல் நிற்க யன்னல் வழியாக வீசிய தென்றல் அச்சிலைக்கு உயிர் கொடுத்தது.


திருதிரு என சிறு குழந்தை என விழிக்க, சில நொடிகளில் அவன் முத்தமிட்ட கன்னங்களை விரல்களில் வருடினாள். அப்போது கன்னங்கள் சிவந்து அவள் அறியாது வெட்கப் புன்னகை பூக்க, தலைக்குனிந்துக் கொண்டாள்.


அறைக்குள் சென்ற யாதவோ, தான் செய்த காரியத்தைப் பற்றி குளிக்கும் போது யோசித்தான். 'பொன்டாட்டி தானே? எனக்கு இல்லாத உரிமையா?' என்று மனதுள் பேச, 'அப்போ பொன்டாட்டிங்குற உரிமை மட்டும் தானா அவளை இரசிக்க வைக்கிறது? அவளுக்கு முத்தம் கொடுக்க வைக்கிறது?' என்று மனம் எதிர்கேள்வி கேட்டது.


அப்போது, பகல் நேரத்தில் சாத்விக், "அவன் பொன்டாட்டியை அவன் காதலிக்கிறாதா இல்லையான்னே அவனுக்கு தெரியல்லை" கூறியது அவன் காதில் எதிரொலித்தன. 'நான் அவளை காதலிக்கிறேனா?' என்ற கேள்விக்கான பதில் தான் தெளிவாக அவனிடம் இருக்கவில்லை.


சொட்டுச் சொட்டாய் வழியும் நீர்துளிகளோடு வெளியே வந்தவன் துவாயினால் தலையைத் துடைத்து சாப்பிடச் செல்ல வைஷூ, உணவை மேசையில் எடுத்து வைத்திருந்தாள். அவள் மும்முரமாக வேலை செய்வதைப் பார்த்தவன், "என்னாச்சு நவி? ஏன் அவசரம்?" என வினவ, "இன்னும் மூனு நாளில் எங்களுக்கு ஸ்டடி லீவ் கொடுக்குறாங்க. அடுத்த டூ வீக்ஸ்ல ஃபைனல் எக்சேம். அது முடிஞ்சிட்டால் என் படிப்பும் முடிஞ்சிரும். நான் படிக்கனுமே" என்றாள்.


யாதவின் நெற்றி சுருங்கி, "மூனு நாளில் லீவா?" என்று வினவ, "ஆமா அத்தான்" என்றாள் அவனுடைய தட்டில் உணவை வைத்தவாறே. யாதவும் அவளோடு சேர்ந்து சாப்பிட்டு மேசையை சுத்தம் செய்து வைத்தவன், அவளை படிப்பதற்காக அனுப்பி வைத்தான் தான் மிகுதி வேலையைச் செய்வதாகக் கூறி.


வைஷூ படிக்க யாதவ் தன்னுடைய அறையில் கௌதமுடன் சிறிது நேரம் பேசி வைஷூ வரும் வரையில் காத்திருக்க அவனறியாது சோர்வினால் கண்ணயர்ந்து இருந்தான். வைஷூ வரும் பொழுது நேரம் ஒன்றைக் கடந்து இருக்க அவனுக்கு போர்வை இட்டு அவனருகில் உறங்கினாள்.


அடுத்த நாள் காலையில் வசுமதி கல்லூரியிற்குச் செல்லத் தயாராக விஷ்ணு ஜொகிங்கை முடித்து அறைக்கு வந்தான். வசு தயாராகுவதைப் பார்த்து, "உன் ஃபிரன்டோட கல்யாணத்துக்கு போலாம் வசு. அன்னிக்கு எனக்கு எந்தவித ஆபரேஷனும் இல்லை, சோ நான் ஃபுள் டே லீவ் எடுத்து இருக்கேன்" என்றான் இயர்பட்டை கழற்றியவாறு.


முகம் கொள்ளாப் புன்னகையுடன் சந்தோஷமாக, "சரிங்க" என்று உரைத்து சந௲தோஷம் தாளாது வேகமாக செல்ல முனைய கீழே இருந்த சிறிய ஸ்டூலை கவனிக்காது கால் இடறி கீழே விழ,அவளை இடையோடு கரமிட்டு தாங்கிக் கொண்டான் விஷ்ணு.


இருவருடைய விழிகளும் ஒன்றோடு ஒன்று கலக்க அழகான மாய வலையில் சிக்கிக் கொண்டனர் இருவரும். எத்தனை நேரமாக இவ்வாறே இருந்தனர் என்பதை இவர்களே அறியமாட்டார்கள். விஷ்ணுவின் தாய் தங்கம் வசுமதியை அழைக்கும் குரலிலேயே தன்னிலை அடைந்தனர்.


இருவருக்குமே மற்றவரை பார்க்க முடியாது போக, வசுமதி "நான் காலேஜூக்கு போறேன்" என்று விட்டு அங்கிருந்து வேகமாக நகர, விஷ்ணு கண்களை மூடி ஆழ மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான். வசுமதி படியில் நின்று வேகமாக துடிக்கும் தன் இதயத்தின் மீது சில நொடிகள் கை வைத்தவள் தன்னை சமன்படுத்தி கீழே சென்றாள்.


விஷ்ணு வைத்தியசாலைக்குச் செல்ல தயாராகி கீழே வந்து, வசுவைத் தேட அதற்கு முன்னே அவனின் தந்தையோடு காரில் கிளம்பிச் சென்று இருந்தாள். அவளின் செல்கை ஏதோ சிறு ஏமாற்றத்தை அவனுக்கு வழங்க, நடந்தது பிடிக்காததால் தன்னை பார்க்க விரும்பாது சென்றதாகவே சரியாக, தவறாக நினைத்தான்.


வைஷூவை கல்லூரியில் விட்டவன் அவனுடைய வழக்குகள் சம்பந்தமா அடுத்தகட்ட நடிவடிக்கைகளையும், சவிதாவைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற் கொண்டான்.


நகுலன் வீட்டிற்குச் சென்றதும் எப்போதும் போலவே நடந்துக் கொண்டான். அவனிடம் சிறிய வித்தியாசத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அஞ்சலி அலுமாரியில் ஆடைகளை மடித்து அடுக்கி வைக்க, அங்கே வந்த நகுலன், "அஞ்சலி சீக்கிரமா ரெடியாகு உன்னை ஒரு இடத்துக்கு அழைச்சிட்டு போக இருக்கு" என்று சிரிப்புடன் கூறி குளியலள் அறைக்குள் புகுந்துக் கொண்டான்.


அவள் மனதுள் வேண்டா வெறுப்பாகவும் வெளியே சந்தோஷமாகவும் நடித்தவாறு வெளியே செல்லத் தயாராகி வர நகுலும் தயாராகி வந்தான். அவளை காரில் அமர வைத்தவன் அவளுடைய கண்களை கறுப்புத் துணியினால் கட்டி, "உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு" என்று உரைத்து அவளை அழைத்துச் சென்றான்.


குறிப்பிட்ட இடம் வந்த பிறகு, காரில் இருந்து இறங்கியவன், அவளை காரில் இருந்து இறக்கி கண் கட்டை அவிழ்த்து விட்டான். அது பல வகையான மரங்களைக் கொண்டதும், அழகாக அமைக்கப்பட்ட பூந்தோட்டத்தை உடைய இடமாக இருந்தது. நடுவில் மிகப் பெரிய மாளிகை ஒன்றை கட்டியமைக் கூடிய வகையில் தரைமட்டமான இடம் இருந்தது.


அவள் ஆச்சரியமாக அதைப் பார்க்க, "என்னங்க இது?" என்று உண்மையான ஆர்வத்துடன் வினவ, "இன்னிக்கு என்ன நாள்னு மறந்துட்டியா?" என்று சிவனே என்று பொய்க்கோபத்துடன் தத்தரூபமாக நடித்து வினவினான் நகுல். அஞ்சலி, "என்ன நாள்?" என்க, "நம்மளுக்கு நிச்சயம் நடந்த நாள். அதுக்காக ஒரு கிஃப்ட் கொடுக்கனும்னு நினைச்சேன்.


உனக்கு ஒரு கற்பனை வீடு இருக்கிறதா, சொன்னியே அதை கட்ட இடம் வாங்க நினைச்சேன். இந்த இடம் நல்லா இருந்தது. இதை உனக்கு கிஃப்டா கொடுக்கனும்னு இதை வாங்கி, இன்னிக்கு அதன உன் பெயர்ல ரெஜிஸ்டர் பண்றோம்" என்றான்.


அவனே லட்சக்கணக்குப் பெறுமதியான சொத்தை வழங்கும் போது வேண்டாம் என்று கூற அவள் ஒன்றும் தியாகியோ, நல்லவளோ இல்லையே. சந்தோஷமாக, "நான் எதிர்பார்க்காத கிஃப்டை கொடுத்ததுக்கு தேங்சுங்க" என்று அணைத்து அவனை முத்தமிட, நகுலிற்கு உடலே பற்றி எரிந்தது. இருந்தும் அழகாய் தன் உணர்னுகளை மறைத்துக் கொண்டான்.


நகுல் அவள் அறியாது அவளை விலத்தி, "வா போய் ரெஜிஸ்டர் பண்ணலாம் நல்ல நேரம் முடிய முன்னாடி" என்று அழைக்க, அவளும் சொத்து கிடைக்கும் ஆர்வத்தில் மற்ற எதையும் யோசிக்காது அவனோடு சென்றாள். இருவருமே பதிவு செய்யும் இடம் வந்தவுடன் அங்கே அனைத்துமே தயார் செய்து வைக்கப்பட்டு இருக்க பத்திரங்கள் வழங்கப்பட்டன.


அதில் அஞ்சலி கையெழுத்து இட, நகுலும் கையெழுத்து இட்டு அதை பதிவு செய்ய வழங்கி, "இங்கே புரொசீஜியர் முடியும் வரைக்கும் வா வெளியே போய் இருக்கலாம்" என்று அவளை அழைத்து வெளியே வந்தான். அங்கே, சில பத்திரங்கள் இரண்டு ஃபல்களா பிரிக்கப்பட்டு இரண்டுமே அங்கே வந்திருந்த சாத்விக்கின் ஆள் ஒருவனிடம் வழங்கப்பட்டன.


அவன் மெதுவாக அங்கிருந்து யாரும் அறியாது வெளியேறி நகுலின் மொபைல் மற்றும் சாத்விக்கின் மொபைலுக்கு "ஒகே சார்" என்று செய்தியை அனுப்பி சென்னையை நோக்கி பயணத்தை மேற்கொண்டான். நகுல் நிம்மதியுடன் இனி சாத்விக் மிகுதியை பார்த்துக் கொள்வான் என நினைத்து, "வா போய் பார்க்கலாம்" என்று உள்ளே அழைத்துச் சென்றான்.


அஞ்சலியின் பெயரில் மாற்றி பதிவு பத்திரம் ஒரு ஃபைலில் வழங்கப்பட, அதன் முதல் பக்கத்தை மட்டுமே பார்த்தவள் பூரண சந்தோஷத்தோடு நகுலோடு கிளம்பினாள் அவளுக்கு எதிராக பெரிய சதியே நடைப் பெற்று உள்ளது என்பதை அறியாது. நகுலும் எதுவும் பேசாது மௌனம் காத்தான்.


அதன் பின் அன்றைய தினம் முழுவதையும் நகுல் தன்னுடைய மில்லிலேயே நேரத்தை செலவளிக்க, மாலை நேரம் 'தான் மில்லிற்கு தேவையான சில இயந்திரங்களை வாங்க டெல்லியிற்கும் செல்வதாகவும் திருமணத் தினத்தன்று மிகப் பெரிய சப்ரைசுடன் வருவதாக' அஞ்சலியிடமும், குடும்பத்தினரிடமும் கூறி உண்மையாகவே டெல்லிக்குச் சென்றான்.


இவ்வாறு இரு நாட்கள் நகர, யாதவ் வைஷூவை கல்லூரியில் விட்டு விட்டு, சிறிது நேரம் அங்கேயே இருக்க சாத்விக் வருகை தந்தான். அவனோடு பேசியவாறே கல்லூரிக்குள் செல்ல சில நிமிடங்ளில் அனைத்து மாணவர்களும் அடிடோரியமிற்கு வரவழைக்கப்படனர். முதலில் கௌதம் வருகை தர அவனுக்கு பின்னே சாத்விக்கோடு பேசியவாறு யாதவ் வருகை தந்தான்.


மூன்று தோழிகளும் தங்களுக்குள் பார்த்துக் கொள்ள சாத்விக் அனைவரின் முன்னிலையிலும் பேச ஆரம்பித்தான். "எல்லோருக்கும் வணக்கம். இன்னிக்கு நம்ம பொலிஸ் ஆபிசர் உங்க எல்லார் கூடவும் சின்ன தகவலை பரிமாற வந்திருக்காரு. இந்த காலேஜூல மட்டும் இல்லை, எல்லா காலேஜுக்கும் இப்போ பொலிஸ் போய் இந்த நிகழ்வு நடந்துட்டு தான் இருக்கு. இப்போ ஏ.ஐ.ஜி யாதவ் மித்ரன் பேசுவாரு" என்றான்.


"வணக்கம். என்னை இங்கே நிறைய பேருக்கு தெரியும்னு நினைக்கிறேன். சொ சின்ன இன்ட்ரோ. நான் இந்த சிடியோட ஏ.ஐ.ஜி. என்ட் அ மரீட் பர்சன்" என்று பல பெண்களின் ஆர்வமான பார்வை அவனைத் தீண்டு்தைப் பார்த்து கூற கௌதம் சிரிப்பை பெரும்பாடுபட்டு அடக்கினான்.


சாத்விக்கிற்கும் சிரிப்பு வர அருகில் இருந்த கௌதமிடம், "உங்க சார் உஷாரான ஆளு தான். பொன்டாட்டிக்கு ரொம்ப பயந்தவன் போல இருக்கே" என்று கூறி பேச்சைக் கவனிக்க கௌதம் கீழே குனிந்து இதழைக் கடித்து சிரிப்பை அடக்கினான்.


அங்கே ஒரு சிரிப்பலை உருவாக, "ஒகே இப்போ விஷயத்துக்கு வரேன். உங்களுக்கே தெரியும் பல பெண்கள் இப்போ காணாமல் போறாங்க. நாங்க செஞ்ச ஆய்வுகள் மட்டுமில்லாமல் கிடைச்ச சிறு தகவல்படி அவங்க ஹிப்னடிசம் பண்ணப்பட்டு கடத்தபடுறாங்க.


அவங்க ஹிப்னடிசம் பண்ண படுறதுக்கு முதல் காரணம் அவங்க தன்னோட இரசணை உணர்வுகளை வெளிப்படையாக வெளிக்காட்டுறது தான். சில பொண்ணுங்களுக்கு சாக்லேட் பிடிக்கும், சிலருக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும், சிலருக்கு பானிபூரி இப்படி சொல்லிட்டே போலாம்.


நீங்க அதை பப்ளிக்குல அதை இரசிச்சு சாப்பிடும் போதோ, இல்லை உங்களுக்கு பிடிச்ச ஒன்னை இரசிச்சு பண்ணும் போதோ, அது உங்களுக்கு ஆபத்தா முடியிது. நம்ப முடியாமல் இருக்கா? பட் இதான் உண்மை.


நீங்க உங்களை மறந்து செய்யுற விஷயங்களை பல நாளா உங்களை நோட் பண்ற கடத்தல் காரங்க, நீங்க இரசிச்சு பண்ற விஷயத்தின் போது உங்களை ஹிப்னடிசம் பண்ணி அவங்க கன்ட்ரோலுக்கு கொண்டு வராங்க.


எக்சாம்பலுக்கு ஒரு சாக்லேட்டை நீங்க பப்ளிக்ல சாப்பிடும் போது, அதை இரசிச்சு உங்களை மறந்தே நீங்க சாப்பிடுவிங்க. உங்க கவனம், உங்க எண்ணம், உங்க அங்கங்களோட தொழிற்பாடுகளுமே அதுக்குள்ள இருக்கும். சுத்தி இருக்கிற சூழ்நிலைய கவனிக்காமல் நீங்க ஆழந்து செயல்படும் போது ஒருத்தரை கன்ட்ரோல் பண்றது ரொம்ப ஈசி.


அந்த டெக்னிக்கை தான் கடத்தல் காரங்க யூஸ் பண்றான். தயவூ பண்ணி பப்ளிக்குல, 'எனக்கு இது பிடிக்கும். எனக்கு இது பிடிக்காதுன்னு' சொல்லாதிங்க. பிடிச்சது நான் என்னை மறந்து செய்றேன்னு மத்தவங்களுக்கு காட்டாதிங்க. இதுவே உங்களுக்கு மைனசாவும், உங்களை அழிக்க நினைக்கிறவங்களுக்கு பிளஸ்ஸாவும் மாறும்.


என் உணர்வுகளை வெளிக்காட்டக் கூட எனக்கு உரிமை இல்லையான்னு கேட்காதிங்க. இந்த உலகத்துல இருக்கிறவங்க எல்லாருமே நல்லவங்களும் இல்லை கெட்டவங்களும் இல்லை. நமளுக்கு யாருன்னு கண்டு பிடிக்கவே நேரம் எடுக்கும். அது வரைக்கும் நாம எங்களை பாதுகாக்குறது தான் பெடர்.


உங்களோட சின்ன சின்ன பலவீனங்கள் எதிராளிக்கு பலமா இருக்கும். இந்த கலி காலத்துல பெண்கள் ரொம்ப கவனமா இருக்கனும். இது சின்ன விழிப்பு உணர்வு. சோ, இதோட முடிச்சிக்கிறேன். ஏதாவது அவசரமாக இருந்தால் எங்களை கன்டெக்ட் பண்ணுங்க. நாங்க ஹெல்ப் பண்றோம்" என்று முடிக்க கௌதமும் சில அறிவுரைகளைக் கூறி நிகழ்ச்சியையும் முடித்து வைத்தான்.


மாலை வரை சாத்விக்கோடு பாதுகாப்பைப் பற்றி விவாதித்த யாதவ், வைஷூ செல்லும் முன் அவளிடம், "எனக்கு இன்னிக்கு வேலை ஜாஸ்தி நவி. பத்துரமா போ" என்று அவளை தன்னுடைய ஓட்டுனரோடு அனுப்பி வைத்தான். சிறிது நேரத்தில் என்ன நினைத்தானோ அவனுடைய பொலிஸ் ஜீப்பை எடுத்துச் செல்ல அப்போதே தன்னுடைய வண்டியின் பின்னே கறுப்பு நிற ஜீப் வெகு நேரமாக செல்வதைக் கவனித்தான்.


காலையில் அவளை விடும் போதுமே கார், இதே கறுப்பு ஜீப்பையும் கண்ட ஞாபகம் வர, சிறிது நேரம் யோசித்தவாறே வந்தவன் வீட்டில் காவலுக்கு ஆள் இருப்பதை உறுதி செய்து விட்டு மீண்டும் தனது அலுவலகத்திற்குச் சென்றான்.


அன்று காலதாமதாக வீட்டிற்கு வர வைஷூ உணவு மேசையிலேயே உறங்கி இருந்தாள். அவள் உறக்கம் கலையாதவாறு கட்டிலில் கிடத்தி போர்வையை போர்த்தி விட்டு சாப்பிட்டு உறங்கினான். அடுத்த நாள் காலையில், "இன்னிக்கு நைட்டு நான் வர மாட்டேன் நவி. நைட்டு டியூட்டி இருக்கு. பார்த்து பத்துரமா இரு. பாதுகாப்புக்கு ஆளுங்க இருக்காங்க" என்று உரைத்து நெற்றியில் முத்தமிட்டு வெளளியேறினான்.


வைஷூவிற்கும் இது விடுமுறை ஆரம்ப நாள் என்பதால் வீட்டு வேலைகளை முடித்து விட்டு அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள். இடையிடையே கமிஷனரின் மனைவி, விஷ்ணு, விஷ்ணுவின் தாய், அபி, சனா, காவ்யா என்போருடனும் அரட்டை அடிக்கத் தவறவில்லை அவள்.


நேரம் ஆறைத் தொட மாலையில் பூஜை விளக்கை ஏற்றி இரவு உணவை சமைக்க அனைத்தையும் தயார் செய்து வைத்தவள், சிறிது நேரம் அமர்ந்து கதைப் புத்தகங்களை வாசித்தாள். மணி ஏழைத் தொட்டதும் இரவு உணவை உணவை தயார் செய்து முடித்தவள், படிக்க ஆரம்பித்தாள். அப்போது காவலுக்கு இருந்தவனின் மனவிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டதால் அதை வைஷூவிடம் கூற, தான் யாதவிடம் இதை மொழிவதாகக் கூறி அனுப்பி வைத்தாள்.


வைஷூ மாத்திரம் தனியாக இருக்க சில நிமிடங்களில் வெளியில் சிலரின் காலடி ஓசைகள் கேட்டன. ஏனோ மனம் படபடபடக்க வாயிற்கதவோடு சாய்ந்து நின்று யாதவிற்கு அழைத்தாள். அவன் மொபைலிற்கு ரிங் சென்றதே தவிர அவன் அழைப்பை ஏற்கவில்லை. காலடியோசை கதவை நெருங்கி வருவதைக் கேட்டவுடன் பயத்தில் அவளுக்கு அழுகையே வந்துவிட்டது..


தன் வீட்டை எவரோ சுற்றி வளைத்து விட்டனர் என்பதை அறிந்தவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அங்கிருந்து உடனே எழுந்து சமையலறையை நோக்கி ஓடவும் இவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.


வைஷூ பயத்துடன் மிரண்டு அவர்களைப் பார்க்க அவளை நோக்கி இருவர் முன்னேற கைகால்கள் நடுங்க, மனமோ யாதவின் வருகைக்காகவும் அவனுடைய பாதுகாப்பான அணைப்பிற்காகவும் ஏங்கியது...



தொடரும்...



அடுத்த பதிவு புதன் கிழமை வரும். சீக்கிரமாவே உங்க கமென்சுக்கு ரிப்ளை பண்றேன்...



கருத்துக்களைப் பகிர,







 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



கண்சிமிட்டும் தென்றலே


அத்தியாயம் 32


இன்றோடு தன் கதை முடிந்தது என்று நினைக்கவே மனம் பலமிலந்தது போல் உணர உடலுமே அதையே உணர அதே இடத்தில் அவள் அமரவும், "என் பொன்டாட்டி மேலே கை வைக்க ரொம்ப தைரியம் தான்டா உங்களுக்கு" என்றவாறு வீட்டின் பின்புறமாக யாதவ் அழுத்தமான வார்த்தைகளுடன் வருகை தரவும் சரியாக இருந்தது.


வைஷூ யாதவின் குரலில் உயிர் பெற ஏங்கிய விழிகளுடன் விழி நீர் தளும்ப அவனைப் பார்த்தாள். அதற்குள் அங்கே இருந்தவன் எதிர்பாராது வைஷூவை நோக்கி கத்தியை வீச, யாதவ் அதைக் கவனித்து அவளை தன் புறம் இழுக்கும் போது அவளது வலது வலது தோளை ஆழமாகக் கிழித்துச் சென்றது அக்கத்தி.


"அம்மா" என்று கத்தியவாறு யாதவின் புறம் விழ, யாதவிற்கு ஒரு நிமிடம் உலகமே நின்ற உணர்வு. அங்கே சுற்றி வளைத்திருந்த பொலிசாருமே இத்தாக்குதலை எதிர்பாராது தடுமாற அதைப் பயன்படுத்தி வைஷூவை கடத்த வந்தவர்கள் பொலிசாருடன் சண்டையிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.


ஆனால் அதோ பரிதாபம் வைஷூவை நோக்கி கத்தியை வீசியவனின் முகம் யாதவின் மனதில் பதிந்து போனது. பொலிஸார் தப்பபித்து ஓடுபவர்களை துரத்தி ஓட, கௌதம் யாதவை சுயநினைவடையச் செய்து வலியில் துடிக்கும் வைஷூவைக் காணபித்தான். அவளை நெருங்கி கையில் ஏந்தியவன் தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.


கௌதம் உடனடியாக வைத்தியரை வீட்டிற்கே அழைத்து துரத்தி ஓடிய பொலிஸாரைத் தேடி இவர்களுக்குத் தனிமையை வழங்கிச் சென்றான். வைஷூ இன்னுமே ஏங்கி ஏங்கி, பயம் கலந்த வலியுடன் அழ, அவள் உடலுமே நிற்காது நடுங்கியது. இதுவே அவள் சண்டைக் காட்சிகள், கடத்தல் போன்றவற்றைப் நேரடியாகப் பார்க்கும் முதல் முறையாகும்.


அதுவும் தன்னைக் கடத்த வந்ததும், யாதவ் அருகில் இல்லாததும் இன்னும் அவள் அச்சத்தை அதிகரித்து இருந்தது. தன் தோளின் இருக்கும் காயத்தின் வலியை விட, யாதவ் இத்தனை நேரமாக இல்லாதது அவளுக்கு அதிகமாக வலிக்க அவனை இறுக அணைத்துக் கொண்டாள் தன் காயத்தையும் பொருட்படுத்தாது.


எங்கே அவன் தன்னை விட்டு மீண்டும் சென்று விடுவானோ என்று பயந்து அவனை விட்டு துளியேனும் அகலவில்லை. "அத்தான் என்னை விட்டு போகாதிங்க" என்று அனத்தியவாறு அவன் தோளில் சாய்ந்திருக்க, இதைப் பார்த்தவனுக்கு ரணமாய் வலித்தது அவனுடைய நெஞ்சம்.


யாதவ் வைஷூவை தன்னோடு சேர்த்து அணைத்தவாறு அமர்ந்து, அவளுடைய முதுகையும், தலையையும் வருடி தன்னிருப்பை உணர்த்திக் கொண்டு இருந்தான். அவனால் ஒரு வார்த்தையேனும் பேச முடியாது வாயடைத்துப் போயிருந்தான்.


அவளுடைய விழிகளில் அவன் வருகையின் போது தெரிந்த ஏக்கமும், விழிகளில் தளும்பி வழிந்த விழிநீரும் அவனை ஏதோ செய்தன என்றால் கடத்த வந்தவன் வைஷூவை நோக்கி வீசிய கத்தியைப் பார்த்து அவன் அதிர்ந்துவிட்டான்.


ஒரு நிமிடம் தன்னிதயமே நின்ற உணர்வு. அவள் இல்லாத வாழ்வும் அதற்குள் கற்பனையில் வந்து போக சூனியமாகவே தெரிந்தது. அவள் தோளில் இருந்து இரத்தம் வழியும் போதும் சரி, அவள் அழும் போதும் சரி அவன் மனதைக் குத்திக் கீறிய வலியை உணர்ந்தான்.


இதுவரையில் எதிலுமே தடுமாறாது தைரியாகச் செய்யும் துணிவுடையவன் இன்று ஓரிரு நிமடங்கள் வைஷூவினால் தடுமாறி, அவள் இல்லாமல் தான் வெறும் உயிரற்ற உடலே என்று உணர்ந்த அந்நொடி அவளை எந்த அளவிற்கு ஆழமாக காதலிக்கிறான் என்பதைப் புரிந்துக் கொண்டான்.


அவளுடைய வலியும், கண்ணீரும் தன்னை அதிகமாக பாதிப்பதும், எப்போதும் எதற்கும் வைஷூவை இவன் எதிர்பார்ப்பதும்; எப்போதும் அவன் திட்டியதும் அவள் கண்களில் விழும் கண்ணீரைப் பார்த்ததும் வலிக்கும் தன் மனதும்; தன்னை விட்டு மற்றவர்களோடு அதுவும் விஷ்ணுவோடு சிரித்துப் பேசும் போது உருவாகிய கோபமும்; திருமணமான பின் இதுவரை இல்லாத ஒரு சாந்தத்தையும், நிம்மதியையும் அது வழங்கியது என அனைத்துமே அவனுடைய காதலுக்குச் சான்றாக மாறின.


சிறு வயது முதல் வைஷூ மீது கொண்ட அதீத பாசத்தின் ஏக்கம் நாள் கடக்க அவனறியாமல் அது காதலாய் மாறி இருப்பதையும் தெரிந்துக் கொண்டான். அது காதலாக மாறிய தருணம் எது? என அவன் அறியாவிடினும், தன் காதலை தானே உணர்ந்த தருணமாக இது மாறியது. இத்தனை நாட்களுக்குப் பிறகு வைஷூ மீதான உரிமை, பாசத்தின் பெயரை இன்று தெரிந்துக் கொண்டான் யாதவ் மித்ரன்.


அவன் மௌனமாய் இருக்க இது ஒரு காரணம் என்றால், மற்றைய காரணம் அவனுடைய முட்டாள் தனமான திட்டம் என்பதுமே இன்னொரு காரணம். ஆம் நடந்த அனைத்துமே யாதவின் திட்டப்படியே நடக்க, எதிர்பாரா விதமாக வைஷூவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.


யாதவிற்கு வைஷூவை எவரோ பின் தொடர்கிறார்களோ என்று அன்று பார்த்த ஜீப்பிற்குப் பிறகு சந்தேகம் வர டிரேஃபிக் சி.சி.டி.வி புடேஜை எடுக்குமாறு கூறி அலுவலகத்திற்குச் சென்றான். கௌதமிடம் தன் சந்தேகத்தைக் கூறியவன் புடேஜ் வந்ததும் அதை இவர்கள் பார்க்க, சில நாட்களாகவே காரும், ஜீப்பும் மாறி மாறி சந்தேகம் வராதது போன்று பின் தொடர்வது நன்றாகவே தெரிந்தது.


அதனாலேயே அவர்களைப் பிடிப்பதற்காக, வைஷூவிடம், 'இன்று இரவு டியூடி இருப்பதாக' கூறிச் சென்றவன் வாயிலில் நின்று இருந்த காவலரிடமும் சத்தமாக இதையே கூறி தன் ஜீப்பிலேறிச் சென்றான். பகல் நேரங்களில் அவர்கள் வைஷூவை கடத்தமாட்டார்கள் என்பது திண்ணம்.


ஏனெனில் வீதியில் இருள் படரும் வரை ஆட்களின் நடமாட்டம் இருக்கும். அதனால் நிச்சயமாக இதைச் செய்ய மாட்டார்கள். யாதவின் திட்டப்படி வாயிற் காவலன் தன் மனைவிக்கு பிரசவ வலி வந்துவிட்டதாகக் கூறி அங்கிருந்து சென்று அதே வீதியில் ஒளிந்திருந்த யாதவின் குழுவோடு இணைந்துக் கொண்டார்.


யாதவின் ஒரு ஆள் மஃப்டியில் யாதவின் அருகே இருந்த வீட்டின் கம்பவுன்டுக்கள் யாருமறியாது இருளில் குதித்து அங்கே நடப்பவற்றை யாதவிற்கு தெரிவித்தார். அவன் நினைத்தது போலவே இரவு எட்டு மணியளவில் வைஷூவைக் கடத்த வந்தவர்கள் நுழைவாயிலைத் திறந்து, அனைவருமே உள்ளே செல்ல யாதவின் குழுவினரோ அவர்கள் அறியாது கம்பௌன்டிற்கு வெளியே அவர்களை சுற்றி வளைத்தனர்.


யாதவ், கௌதம், சில பொலிஸாரும் பின் வாசல் வழியாக சத்தம் வராதது போன்று குதிக்க, இவர்கள் கதவை உடைக்கவும் சரியாக இருந்தது. அதனால் அவர்கள் குதித்த சத்தம் கடத்தல்காரர்களின் செவியை அடையவில்லை. இவர்கள் அனைவரும் வீட்டினுள் நுழைந்தவுடன், கம்பவுன்டைச் சுற்றி வளைத்த பொலிஸார் மெதுவாக கம்பவுன்டிற்குள் நுழைந்துக் கொண்டனர்.


யாதவிடம் எப்போதும் ஒரு வீட்டுச் சாவி இருப்பதால் பின் பிற கதவைத் திறந்து உள்ளே அவன் நுழையவும், வைஷூவை இருவர் நெருங்கவும் சரியாக இருந்தது. ஆனால் அவனே எதிர்பாராதது வைஷூவை நோக்கி வீசிய கத்தி. அங்கிருந்த எவருமே அதை எதிர்பார்க்கவில்லை. அந்நொடி பொலிஸார் தடுமாற கடத்தல்காரர்கள் தப்பித்துச் சென்றனர்.


தன்னுடைய முட்டாள் தனமான திட்டத்தை எண்ணி தானே நொந்துக் கொண்டான். வைஷூ இந்த அளவிற்கு பயம் கொள்வாள் என்பதும் அவன் எதிர்பார்க்காத ஒன்று. தன்னை எண்ணி தானே வெட்கியதால், அவனால் வைஷூவின் முகம் பார்த்து பேச முடியவில்லை.


வைத்தியரும் வருகைத்தர வைஷூவை தன்னிடம் இருந்து பிரித்து அமர வைக்க, வைஷூ அவன் தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவானோ என்ற அச்சத்துடன் அவனைப் பார்த்தாள். யாதவ், "நான் எங்கேயும் போக மாட்டேன் நவி. இங்கே தான் இருக்கேன். நீ பயப்படாத" என்று அடிபாடதா புறம் இருந்த கரத்தை தன் இருகரங்களுக்குள் வைத்து புதைத்துக் கொண்டான்.


வைத்தியர் காயத்தை பரிசோதித்து மருந்திடும் போது "ஸ்", "ஆ" என்ற முணகல்கள் அவளிடம் இருந்து வெளியாக, யாதவின் கரத்தை வலியைப் போக்க நசுக்க, அவனுக்கு அது சிரிப்பை வரவழைத்தது. அவள் நசுக்குகிறேன் என்ற பெயரில் அவன் வலிமை பொருந்திய கையிற்கு மசாஜ் அல்லவா செய்தாள்?


வைத்தியர், "பயப்பட தேவையில்லை சார். காயத்துக்கு மருந்து போட்டு இருக்கேன். காயத்துக்கு மேலே தண்ணீர் படாமல் பார்த்துகொங்க. வலிக்கு டாப்ளட் எழுதி கொடுத்து இருக்கேன். மறக்காமல் அதை வாங்கி நேரத்துக்கு சாப்பிட சொல்லுங்க. டூ டேசுக்கு அப்புறமா காயத்துக்கு புதுசா டிரெசிங் பண்ணுங்க" என்று கூறி நகர யாதவ் நன்றி கூறி ஃபீசையும் வழங்கி அனுப்பி வைத்தான்.


சாத்விக் யாதவிற்கு, அனைத்துமே நன்றாகவே முடிந்து விட்டது எனத் தெரிவிப்பதற்காக அழைக்க, அவனோ அழைப்பை ஏற்கவில்லை. உடனே கௌதமிற்கு அழைக்க அவன் இங்கே நடந்தவற்றைக் கார்த்திக்கையும் அழைத்து, பெண்களிடம் இதைக் கூறாது யாதவின் வீட்டை நோக்கிச் சென்றனர்.


வைஷூ யாதவின் மடியிலேயே சிரம் வைத்துப் படுத்திருக்க, யாதவ் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து இருந்தான். அவள் இமை மூடி இருப்பினும், கண்மணிகளின் அசைவு அவள் உறங்கவில்லை என்பதைப் பறைச்சாற்றியது.


வைஷூ, "ஏன் அத்தான் நான் ஃபோன் பண்ணும் போது நீங்க ஆன்சர் பண்ண இல்லை?" என கலங்கிய குரலுடன் வினவ, "மொபைலை சைலன்டுல போட்டு நான் வீட்டுக்கு பின்னாடி தான் இருந்தேன்" என்றவனுக்கு மேலே பேச முடியாமல் தொண்டை அடைத்தது வருத்தத்தினால்.


அவள் தலை தூக்கி இமை திறந்து அவனைப் பார்க்க, அவனுடைய விழிகளில் ஏதோ ஒன்று தெரிய, "விடுங்க அத்தான். சின்ன காயம் தான் சீக்கிரமா சரியாகிரும்" என்று அவனுக்கு கூறுவது போல் தனக்கும் கூறிக் கொண்டாள்.


யாதவ் மௌனம் காக்க வைஷூ, "நான் இனிமேல் தைரியமா இருக்கேன் அத்தான். ஃபர்ஸ்ட் முறை இப்படி பார்க்குறதால பயந்துட்டேன். போகப் போக சரியாகிருவேன்" என்று வலியுடன் புன்னகைக்க அவள் நெற்றியில் அழுந்த இதழ்பதித்தான்.


சாத்விக்கும், கார்த்திக்கும் அங்கு வருகைத் தர வைஷூவை அறையில் ஓய்வெடுக்குமாறு தைரியம் கூறி வரவேற்பரைக்கு வந்தான் யாதவ். அவனுடைய காக்கியிச் சட்டையில் ஆங்காங்கே இரத்த படிந்திருக்க, மற்ற இருவருக்குமே கவலையாக இருந்தது.


சாத்விக், "என்ன தான் நடக்குது மித்ரன்?" என்று வினவ, "வைஷூவை அவங்க டார்கட் பண்ணிட்டாங்க. இது எப்போவும் போல சாதாரணா கடத்தல் இல்லை. அவளை டார்கட்டா கடத்தனும்னா ஹிப்னடிசம் பண்ணி இருப்பாங்க. இது, ஏதோ ஒரு விஷயத்துக்காக நவி அவங்களுக்கு தேவைபடுறா. அதுக்காக தான் இப்படி ஒரு கடத்தல் முயற்சி" என்று தான் அலசி ஆராய்ந்த முயற்சியில் உரைத்தான்.


அதற்குள் மற்ற பொலிஸாரும், கௌதமும் வருகை தர, கௌதம், "மச்சான் அந்த ஜீப்போட நம்பரை நோட் பண்ணி விசாரிக்க சொன்னதுல அந்த நம்பர் பிளேட்டே பொய்யானதுன்னு தெரிய வந்திருக்கு. கார் நம்பரும் ஃபேக் தான்" என்று மொழிய, யாதவ் அமர்தலாக, "நான் இதை எதிர்பார்த்தேன்" என்றான்.


கார்திக், "கேஸ் ரொம்ப ரிஸ்கியானதுன்னு தெரியிதே. உன்னை மிரட்டவும் அவங்க வைஷூவை கடத்த முயற்சி பண்ணி இருக்கலாமே" என்று கூற, "அவங்க என்னை மிரட்டனும்னு நினைச்சு இருந்தால் இத்தனை நாள் காத்துட்டு இருந்து இருக்க மாட்டாங்க. ஃபர்ஸ்ட் டேயே கடத்தி இருப்பாங்க. என்ட் நாள் இல்லாத நேரம் அவங்க வீட்டுக்கு வர வேண்டிய அவசியமும் அவங்களுக்கு இல்லை" என்று சிந்தனை பொருந்திய குரலில் உரைத்தான்.


சாத்விக், "வைஷூவை பத்துரமா பார்த்துக்கோ. நாங்க கிளம்புறோம். இல்லை உன் தங்கச்சி போனுக்கு மேலே போன் போட்டு கேள்வி கேட்பா" என்று எழுந்தவன் யாதவை ஒரு முறை அழுத்தமாகப் பார்த்து நகர, "அபி, சனா கிட்ட இதைப் பத்தி சொல்ல வேணாம் பயந்துருவாங்க" என்றான் யாதவ்.


மற்ற இருவருமே சரியென்று கூறி வெளியேற மற்ற பொலிசாரும் யாதவிடம் கூறி விடைப் பெற்றனர். யாதவ், "இன்னும் ஐந்து நாளில் சவிதாவை காப்பாத்த போகனும் தயாரா இரு" என்று உரைக்க, "ஒகே மச்சான் பாத்துக்குறேன். வைஷூவை பார்த்துக்கோ" என்று கூறி அவனுமே யாதவிடம் இருந்து விடைப் பெற்றுச் சென்றான்.


யாதவ் வைஷூவை சென்று பார்க்க அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அப்போதும் தோள் வலியினால் முணக, கத்தியை வீசியவன் மீது ஆத்திரமாக வந்தது யாதவிற்கு. கைகளில் கிடைத்தால் அவன் சட்னியாகப் போவது உறுதி.


யாதவ் குளித்து ஆடையை ஊற வைத்தவன் வாயில் காப்பாளரிடம், மருந்திற்கான பத்திரத்தையும், பணத்தையும் வழங்கி அவரை அனுப்பி வைத்தான் வாங்கி வருவதற்காக. வைஷூ சமைத்து வைத்த உணவை எடுத்து தட்டில் வைத்தவன் வைஷூவைப் பார்க்கச் சென்றான்.


அவளை எழுப்பி அமர வைத்து அவனே ஊட்டி விட, வைஷூ அதிசயமாக அவனைப் பார்க்௧, "ஆமா, எதுக்கு இந்த குறு குறு பார்வை?" என்று அவளுக்கு ஊட்டியவாறே வினவினான் யாதவ். "நீங்க இந்த வேலை எல்லாம் பண்ணுவிங்களா?" என வினவ, "என் பொன்டாட்டிக்கு நான் செய்யாமல் வேற யாரு செய்வாங்க?" என்றான்.


அவளும் புன்னகைத்து சாப்பிட்டு முடிய வாயிற்காவலரும் மருந்தை வாங்கி வந்தார். மருந்தை அவளுக்கு குடிக்க வைத்து அவன் சாப்பிட வெளியேற, வைஷூ மெதுவாக ஆடைக் கலைந்து இரவாடைக்கு கடினப்பட்டு மாற, உதவிக்கு யாதவை அழைக்கவும் ஏதோ போல் இருந்தது.


வெகுநேரத்திற்குப் பிறகு எப்படியே வலியை பல்லைக் கடித்து பொறுத்து ஆடையை மாற்றி கதவைத் திறக்க, அவள் ஆடை மாற்றியதைப் பார்த்தவன், "தனியா எப்படி சேன்ஜ் பண்ண? என்னை ஹெல்புக்கு கூப்பிட இருந்ததே" என்று சாதாரணமாக உரைக்க, அதிர்ந்து விழித்த வைஷூ, "குட் நைட் அத்தான்" என்று அவன் முகம் பாராது கூறி கட்டிலில் படுத்தாள்.


அதன் பிறகே தான் சாதாரணமாகக் கூறியது என்ன என்று அவனுக்கே புரிந்தது. எப்போதும் போன்ற தன் அக்மார்க் வசீகரப் புன்னகையைச் சிந்தி அவளை காயத்திற்கு படாதவாறு அணைத்து உறங்கினான்.


பொலிசிடம் இருந்து தப்பித்தவர்கள் தன் தலைவனிடம் சென்று நடந்ததைக் கூற, "முட்டாள் நீங்களா சிங்கத்தோட குகைக்குள்ள போய் தூங்கிட்டு இருந்த சிங்கத்தை சொறிஞ்சி விட்டுட்டு வந்திட்டிங்க. நான் நேரம் பார்த்து கடத்த சொன்னால், அவன் வீட்டுக்கே போய், அவன் பொன்டாட்டி மேலே கத்தியையும் வீசிட்டு வந்திருக்கிங்க.


அவனுக்கு வைஷ்ணவின்னா ரொம்ப பிடிக்கும். அவளை காயப்படுத்தினதுக்கு அவன் சும்மா விடமாட்டான் யாரையுமே. அவன் கண்ணுல நீங்க யாருமே கொஞ்ச நாளைக்கு படாமல் இருங்க சரவணனை போல. அவன் கிட்ட மாட்டினிங்க, உயிரோட தோலை உரிச்சி எடுத்துடுவான் ஜாக்கிரதை" என்று எச்சரித்து அனுப்பி வைத்தான்.


யாதவ் மித்ரனைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தவனுக்கு தேவையில்லாது அவனை சீண்டிவிட்டோமோ என்று தோன்றியது. இவனுக்குமே சற்று பயமாக இருக்க, அசட்டுத் தனத்துடன், "பார்த்துக்கலாம்" என்று விட்டுவிட்டான்.


மூன்று நாட்களும் வேகமாய் கடக்க, அன்றைய நாளிற்குப் பிறகு விஷ்ணு, வசுமதியிடம் சற்று ஒதுங்கியே இருந்தான் இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடைப் பெறக் கூடாதூ என்பதற்காக. வசுமதியின் நண்பியின் திருமண நாளும் அழகிய் புலர வசுமதி விஷ்ணுவை அழைத்துக் கொண்டு அவளது நண்பியின் திருமணத்திற்காக சென்றாள். அங்கே அவளுக்காக காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாது.


அத்தோடு அதே தினமே நகுல் அஞ்சலியின் திருமண நாளாக இருந்தது. நகுலனும் முன்னைய இரவே வீடு வந்து சேர்ந்தான். அடுத்த நாள் காலையில் நகுல், அஞ்சலி இருவருமே குளித்து புத்தாடை அணிந்து இருந்தனர். அஞ்சலி எப்போதும் போல் நகைகள் அணிந்து, நெற்றியில் குங்குமிட்டு மங்கலகரமாக பூஜை அறைக்கு வந்தாள்.


அங்கே மொத்த குடும்பமும் நின்று இருக்க, யாதவின் தாய் இருவரையும் பார்த்து, "இரண்டு பேரும் ரொம்ப அழகாக இருக்கிங்க" என்று நெட்டி முறிக்க நகுலின் முகம் இறுகியது. அஞ்சலியை விளக்கு ஏற்றுமாறு கூற நகுல், "அம்மா இன்னிக்கு நீங்களே விளக்கு ஏத்துங்க" என்று சிரித்தவாறு மொழிந்து அவளை விளக்கு ஏற்ற விடாமல் செய்தான்.


நகுலின் தந்தைக்கும், தாயிற்கும் இவனது நடவடிக்கைகள் வித்தியாசமாகத் தெரிந்தாலும், ஏதும் பேசாது அவன் கூறியதையே செய்தனர். அனைவருமே சாமி கும்பிட்டு முடித்தவுடன், நகுலின் சித்தி, "அஞ்சலி நெத்தியிலயும், தாலியிலயும் குங்குமத்தை வச்சி விடுபா" என்றவர் அஞ்சலியைப் பார்த்து, "உன் தாலியை வெளியே எடுத்து போடுமா. கண்ணை மூடி சாமியை வேண்டிக்கோ" என்றார்.


அவளுமே அதே போல் செய்ய நகுலின் முகமும் உடலும் இறுக, உச்சகட்ட வெறுப்புடன் அவள் கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றினான். அனைவருமே அதிர்ந்து பார்க்க, நாவினால் பேச்சு எழவில்லை ஒரடவருக்கும். அஞ்சலி சுதாகரிக்கும் முன்னே தாலியை நெருப்பில் வீசி, அவள் நெற்றியில் இருந்த குங்குமத்தையும் அழித்தான்.


அஞ்சலியும் எதிர்பாராது "நகுல்" என்க, மற்றவர்கள் "நகுலா" என்று கத்தினர். நகுல், "இன்னிக்கு யாரும் என்னை மீறி பேச கூடாது. நான் பேசுவேன். நீங்க நடக்குறதை மட்டும் பாருங்க" எனக் கர்ஜித்ததில் அஞ்சலி உட்பட அனைவருமே ஒரூ நிமிடம் நடுங்கி விட்டனர். இவன் இதுவரை எவருமே பார்த்திராத நகுல். அவனை மீறிப் பேச யாரிற்கும் துணிவு இருக்கவில்லை.


"நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன் அஞ்சலி? எதுக்காக என் கிட்ட நடிச்ச? எதுக்காக இவளோ கேவலமான விஷயத்தை பண்ண?" என்று தன் கோபத்தை அடக்கி கண்கள் சிவக்க வினவ, "நீங்க என்ன பேசுறிங்கன்னு புரியல்லைங்க" என்றாள் நா குழற.


நகுலன், "நான் எதைப் பத்தி பேசுறேன்னு உனக்கு தெரியாது அப்படி தானே? சரி நேரா விஷயத்துக்கு வரேன். சாத்விக்கை காதலிச்சிட்டு, அவனை ஏமாத்திட்டு ஏன் என்னை கல்யாணம் பண்ண?" என்று வினவ, அதிர்ச்சியில் மொத்த குடும்பமே இருக்க அஞ்சலிக்கு தலையில் இடி விழாத குறை.


"பதில் சொல்லு" என்று கரிஜிக்க அவளது உடல் நடுங்கி அடங்கியது. "நான் காதலிக்க இல்லை" என்றிட, "பொய் சொன்ன அரைஞ்சிடுவேன். எனக்கு எல்லா உண்மையுமே தெரியும். அதை விடு. அது பாஸ்ட்.. இதுக்கு பதில் சொல்லு" என்று தன் பாக்கட்டில் இருந்த கருத்தடை மாத்திரையைக் காட்ட அவளுக்கோ அதிர்ச்சிக்கு மேலே அதிர்ச்சியாக இருந்தது.


அனைவரும் அது என்ன என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள நகுல் இறுகிய தோற்றத்துடன், வலி நிறைந்த குரலில், "என் குழந்தையை அவ வயித்தில சுமக்கக் கூடாதுன்னு ஐந்து வருஷமா யூஸ் பண்ணுற கருத்தடை மாத்திரை" என்றான். அவன் கண்களுமே கூறும் போது கலங்கிவிட்டது. குழந்தைக்காக எத்தனை நாள் ஏங்கியிருப்பான்.


யாதவின் தந்தை நெஞ்சைப் பிடிக்க மற்றவர்கள் அவரைப் பிடித்து தண்ணீரை வழங்கினர். யாதவின் தாய் அழுகையுடன், "உன்னை போய் நல்லவள்னு நினைச்சேனே? என் குடும்ப வாரிசையே அழிக்க பார்த்திருக்கிற ராட்சசி நீ. நல்லா இருப்பியா நீ? நாசமா போயிருவ" என்று கதற அனைத்தையும் கேட்ட அஞ்சலி தன் குட்டு வெளிப்பட்டதை உணர்ந்து தன் உண்மையான முகத்தை வெளிக்காட்ட தயாரானாள்.


அஞ்சலி திமிராக, "ஆமா நான் இப்படிதான். உங்களால் என்ன புடுங்க முடியும்? என்னை மீறி ஒன்னும் பண்ண முடியாது. ஒழுங்கு மரியாதையா அந்த தாலியை கட்டுங்க இல்லை, நடக்குறது வேற" என்று மிரட்ட, நரம்புகள் புடைக்க வந்த நகுலன் ஓங்கி அறைய சுருண்டு விழுந்தாள்.


"உன்னை பத்தின உண்மை தெரிஞ்ச நாள்ல இருந்து என் நிழல் கூட உன் மேலே படுறது எனக்கு அறுவெருப்பா இருக்குன்னு தான் நான் டெல்லிக்கே போனேன். ச்சீய்" என்று கையை துடைத்தவன், "என்ன சொன்ன? உன்னை மீறி எதுவும் பண்ண முடியாதா? கிழிச்ச" என்றவன் வெளியே சென்று ஒரு ஃபைலை எடுத்து வந்தான்.


"உனக்கும் எனக்கு மிரிசுவல் டிவோர்ஸ் ஆகி நாழு நாளைக்கு மேலே ஆச்சு. நீயே தான் டிவோர்சுக்கு ஒத்துகிட்டு சைன் போட்ட. மறந்துட்டியா உன் கிட்ட ரெஜிஸ்டர் ஆபிஸ்ல வச்சு சைன் எடுத்ததை" என்று எள்ளலாய் உரைக்க, அஞ்சலி, "எனக்கு விருப்பம் இல்லாமல் எனக்கு தெரியாமல் எடுத்ததுன்னு நான் கேஸ் போடுவேன்" என்று அழுத்தமாகப் பார்த்தாள்.


நகுல், "பணம் பாதளம் வரைக்கும் பாயும். உன் விஷயத்துல உண்மை அஞ்சலி. நீ இல்லை யாரு நினைச்சாலும் இந்த டிவோர்ஸ் நடந்து முடிஞ்சதை மாத்த முடியாது" என்று சிரிக்க, "நான் மாத்தி காட்டுறேன்" என்றாள் அஞ்சலி அகங்காரமாய்..


"நீ இன்னும் ஒழுங்கா சாத்விக்கை பத்தி புரிஞ்சிக்க இல்லை அஞ்சலி. அவன் அம்மா சாக காரணமா இருந்த உன்னை; அவன் அவமானத்துக்கு காரணமா இருந்த உன்னை அழிக்க அவன் எந்த எல்லைக்கும் போக தயாரா இருக்கான். இதுக்கு அப்புறமா தான் சாத்விக்னா யாருன்னு நீ பார்க்க போற.


இப்போ எனக்கும் உனக்கும் சட்ட ரீதியாவும் சரி, கலாச்சார ரீதியாவும் சரி எந்த தொடர்பும் இல்லை. இதான் என்னோட பெரிய சப்ரைஸ் எப்படி இருக்கு அஞ்சலி? நீ எதிர்பார்த்து இருக்க மாட்டியே? இத்தனை வருஷமா நீ த்தரூபமா நடிச்ச? இப்போ என் நடிப்பு எப்படி இருந்தது? உன் அளவுக்கு இருந்து இருக்காதுன்னு எனக்கு தெரியும்.


இன்னொரு விஷயம் சொல்லனும். நாம கையெழுத்து போட்டு கொடுத்து அடுத்த நாளே மிரசுவல் டிவோர்ஸ் நாம கோர்டுக்கு போகாமலேயே அப்ரூவ்டா மாறி இருக்கும் போதே சாத்விக்கோட பவர் என்னன்னு எனக்கு புரிஞ்சது. அவனை எதிர்க்க மத்தவங்க ஏன் பயபடுறாங்கன்னு புரிஞ்சது.


நீ அவனுக்கு எறும்பு மாதிரி. ஆனால், அவன் கொம்பன் யானை. அவனை கடிச்சி நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட. காலால நசுக்கிட்டு போயிட்டே இருப்பான். ஆனால் உனக்கு சரியான தண்டனையை கொடுக்கனுமே. அதான் கொஞ்சம் கொஞசமா கொடுக்க போறான். இதான் அவனோட ஆரம்பம். இப்போ நீ தாராளமா இந்த நரகத்தை விட்டு போலாம்" என்று சாவகாசமாக அமர்ந்தான்.


அஞ்சலி இதை எதிர்ப்பார்க்க இல்லை என்பதை அவளின் முகமே காட்டிக் கொடுக்க, "நீயா வீட்டை விட்டு வெளியே போனால் உனக்கு நல்லது. நானா கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளினேன். அசிங்கமா போயிடும்" என்று உரைக்க அனைவரையும் முறைத்தவள், "நான் யாரையும் சும்மா விட மாட்டேன். பார்க்குறேன் நகுல் நீ எப்படி சந்தோஷமா வாழுற? அந்த சாத்விக் எப்படி வாழுறான்னு" என்று கொக்கரித்து விட்டே வீட்டை விட்டு வெளியே சென்றாள்.


நகுலன் வீட்டில் நடந்தவற்றைக் கூறி அஞ்சலியின் கண்களில் தெரிந்த வன்மத்தை வைத்து சாத்விக்கை எச்சரிக்க, அவனுக்கு மொபைலிற்கு அழைத்தான். அவன் அழைப்பை ஏற்றதும் நடந்ததைக் கூறி, "பார்த்து பத்துரமா இருங்க" என்று உரைத்தான்.


சாத்விக், "நான் பார்த்துக௱குறேன் புரோ. ஆ... கார்த்திக் வைஃப் அபி பிரக்னன்டா இருக்கா. இப்போ தான் நியூஸ் கிடைச்சது" என்றண கூறி சிரித்து விட்டு 'உங்களை காஞ்சானா மேமுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது ரொம்ப ஈசியா இருக்குமே' என தனக்குள் சிரித்து சிறிது நேரம் பேசி அழைப்பை துண்டித்தான்.


மாலையில் வசுவின் அறையில் உச்சகட்ட கோபத்திலும், அவமானத்திலும் விஷ்ணு இருக்க அவள் அருகே வசு அழுதவாறு இருந்தாள். "விஷ்ணு" என்று அவள் பேச, "ஸ்டொப் இட் வசு" என்று கத்தி நகர, "நீங்களும் இன்னொரு பொண்ணை காதலிச்சிட்டு தனே என்னை ௧ல்யாணம் பண்ணிங்க?" என்று ஆத்திரத்தில் கத்தினாள்.


விஷ்ணு கோபத்துடன், "நான் யாரை காதலிச்சேனோ, அவளை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன். அப்படியே வேறு ஒருத்தியை கல்யாணம் பண்ணி இருந்தாலும், எந்த இடத்திலேயுமே அவளை விட்டு கொடுத்து அவமானப்படுத்தி இருக்க மாட்டேன் உன்னைப் போல" என்று சொற்களை கடித்துத் துப்பி விட்டு வெளியே சென்றான்.


வசுவோ அவன் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்து நின்றாள்...



தொடரும்....


33 உம் இருக்கு கீழே



கருத்துக்களைப் பகிர,









 
Status
Not open for further replies.
Top