All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் 'கண்சிமிட்டும் தென்றலே (நீ வேண்டும் நான் வாழ பகுதி 2) கதைக்கான கதைத்திரி

Status
Not open for further replies.

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24127


கண்சிமிட்டும் தென்றலே






அத்தியாயம் 6



யாதவைப் பார்த்த வைஷ்ணவியின் முகமோ பயத்தில் வெளிறி இருக்க, அவனோ கனல் கக்கும் விழிகளுடன் முறைத்து நின்றான். 'ஐயோ போயும் போயும் அயர்ன் மேன் மேலேயா மோதனும்? கிருஷ்ணா சீக்கிரமா வந்து அடென்டன்ஸ் போடு' என்று மானசீகமாய் அழைக்க, "நீ திருந்தவே மாட்ட. ஒரு முறை இடிச்சி காலை உடைச்சிக்கிட்ட. மறுபடியும் எதை உடைக்க ஐடியா மேடமுக்கு?" என்றான் நக்கல் தொனியில்.



அதில் தெரிந்த சீற்றத்தை வைஷூ நன்றாகவே புரிந்துக் கொண்டாள். "சொரி தெரியாம.." என்று தடுமாற, "கெட் லொஸ்ட்" என்று உறுமிவிட்டு நகர கண்ணீர் தளும்பும் விழிகளுடன் யாதவ் செல்லும் திசையை வெறித்தாள் வைஷ்ணவி.


எத்தனை முறை திட்டினாலும் பழக்கப்படாமல் முதல் முறை திட்டு்து போல் மனம் வலித்து கண்ணீர் வெளி வரும் தன் நிலையை அறவே வெறுத்தாள்.


'எனக்கும் மானம் ரோஷம் இல்லை. என் கண்ணீருக்கும் இல்லை. சே என்ன வாழ்க்கைடா இது' என்று சலிப்புடன் தமக்கையிற்கு தண்ணீர் எடுத்து வரச் சென்றாள். தண்ணீரை தானும் குடித்து அவளுக்கும் எடுத்துச் சென்றாள். வசுமதியை தண்ணீர் குடிக்க வைத்து வாயைத் துடைத்து விட்டு அவள் அழகைப் பார்த்து நெட்டி முறித்தாள் வைஷூ.


"போதும் மேடம். உன் அக்கா மட்டும் இல்லை. நீயும் அழகா இருக்க. உனக்கும் நெட்டி முறிக்கனும்" என்று சனா வைஷூவிற்கு நெற்றி முறிக்க நாணப் புன்னகையைச் சிந்தி தலைக் குனிந்துக் கொண்டாள்.


சிறியவர்களின் ஆட்டம்பாட்டத்துடனும், கலாட்டாக்களுடனும் பெரியவர்களின் மனநிறைவுடனும் மருதாணி விழா இனிதே நிறைவடைந்தது.


வசுமதி கைகளைக் கழுவி வந்தவுடன் பகல் உணவை முடித்து மாலை நேரம் நடக்க இருக்கும் நலங்கு வைபவத்திற்குத் தயாராகச் சென்றாள். மஞ்சள், தங்க நிறம் கலந்த மென்பட்டு, ஆபரணங்கள் அணிந்து தேவதையென அங்கே நிற்க பெற்றவர்களின் மனம் பூரித்தது.


வைஷூவும் மற்ற இரு தோழிகளும் வெள்ளை, மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடுகள் குறைந்த லெகெங்கா அணிந்து இருந்தனர். அதற்கேற்றாற் போன்று ஆபரணங்களுடன் தேவதையென மண்டபத்தில் நடமாடினர் மூவரும். சனா, அபி இருவரிற்கு நெற்றி வகுட்டில் வைத்து இருந்த குங்குமம் அவர்களை மகாலட்சுமியாகக் காட்டியது.


சாத்விக்கும், கார்த்திக்கும் அனைத்து வேலைகளையுமே செய்ததோடு தன்னவள்களை இரசிக்கும் பணியையும் சிறப்பாகச் செய்தனர். முதலில் வசுமதியை அமர வைத்து மஞ்சள் பூசி விட்டனர். அவளது பெற்றோர்களில் ஆரம்பித்து அடுத்தடுத்து மூத்த பெண்கள் என்று இறுதியா வைஷூ அவளுக்கு மஞ்சளை கன்னங்களில் பூசியதோடு மூக்கின் நுனியிலும் பூசி விட்டாள்.


அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றவுடன் யாதவை அழைத்து அங்கே அமர வைத்தனர். அவனுக்கும் மஞ்சள் கலந்த சந்தனத்தைப் பூசி விட அவன் அங்கிருந்து நகர மஞ்சள் வாசணை வைஷ்ணவியிற்கு அதிகம் பிடிக்கும் என்பதால் அதை நுகர்ந்தவாறே வந்தவள் எதிரில் வருகை தந்த யாதவோடு மோதி கீழே விழுந்தாள்.


யாதவும் நகுலன் தனது மூக்கில் பூசிய மஞ்சளைத் துடைத்தவாறே வந்ததால் முன்னால் வருகைத் தந்த வைஷூவை அவன் பார்க்கவில்லை. இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதி சமனிலை இல்லாமல் கீழே விழுந்தனர். அவன் கீழே விழும் வைஷூவிற்கு அடிபடாது இருக்க ஒரு கையை அவள் இடையிலும் மறுகையை அவளுடைய தலையிற்கு கீழும் வைத்து இருந்தான்.


அப்போதே யாதவின் கன்னம் வைஷூவின் கன்னத்தோடு உரச அவனுடைய கன்னத்தில் இருந்த மஞ்சள் இவளுடைய கன்னத்திற்கும் இடம் பெயர்ந்து இருந்தது. யாதவ் யார் இந்தப் பெண் என்று கோபத்துடன் எழ சிறுகுழந்தை என விழிக்கும் வைஷ்ணவியை நிச்சயமாக அங்கே அவன் எதிர்பார்க்கவில்லை.


வைஷூவும் யாதவை எதிர்பார்க்காமல் அதிர்ந்து இருக்க அவளிடம் இருந்து விலகி அவசரமாக எழுந்தான் யாதவ். வைஷூவும் அவசரமாக எழுந்து தன் உடையைச் சரி செய்து அவமான மிகுதியில் முகம் கறுக்க தலைக் குனிந்தாள். வழக்கத்திற்கு மாறாக வைஷூவிடம் இருந்த மாற்றம் அவனுக்கு ஏதோ செய்ய அவளை ஊன்றி பார்த்தவன், "பார்த்துப் போ" என்று உரைத்து தனது அறைக்குள் நுழைந்தான்.


அடுத்து சடங்குகள் மணமக்களுக்கு நடைபெற இருந்ததால் உறவினர்கள் அனைவருமே அதை ஏற்பாடு செய்யச் சென்று இருக்க இதைப் பார்க்கவில்லை. அவமானத்துடன் மண்டபத்திற்கு வெளியே இருந்த ஒரு இடத்தில் தனியாக அமர்ந்து மௌனமாக கண்ணீர் விட்டாள்.


"போயும் போயும் அவனையா இடிக்கனும்? அவன் முன்னாடியா இப்படி நிற்கனும்?" என்று தன்னிலை எண்ணி கழிவிரக்கம் தோன்ற, வழியும் கண்ணீரைத் துடைத்தாள். கைகளில் மஞ்சள் அகப்பட கன்னத்தில் இருக்கும் மஞ்சளை அந் நேரமே பார்த்தாள். அவசரமாகச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டாள்.


இவர்கள் மோதிய அதே நேரம் தங்கத்தின் கையில் இருந்த மஞ்சள் தண்ணீரில் கரைத்த கிண்ணம் கீழே விழுந்து விஷ்ணுவின் உடையிலும், முகத்திலும் துளிகள் தெறித்தன. "அம்மா" என்று தனது வெள்ளை நிற சட்டையில் மஞ்சள் தெறித்ததால் பல்லைக் கடித்து கோபம் கொண்டவன் தன் அறைக்கு சட்டையை மாற்றச் சென்றான்.


எப்போதும் போல் தங்கம் மஞ்சள் கரைத்து கிருஷ்ண சிலையின் முன் வைக்க தண்ணீரைக் கலந்து எடுத்தவாறு சாமியறையை நோக்கிச் சென்றார். விஷ்ணு அதே நேரம் வேலையை முடித்து வீட்டிற்கு உள்ளே வர தாய் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்து அவர் பின் சென்று "அம்மா" என்று கத்தினான்.


அதிலேயே தங்கம் பயந்து தன் கையில் இருந்த மஞ்சள் கரைத்தக் கிண்ணத்தை தவறவிட அவன் முகம் மற்றும் சேர்டில் தெறித்தது. மகன் முறைத்துச் செல்வதைப் பார்த்து, 'நான் வேணூன்னு பண்ணதைப் போல முறைக்குறதைப் பாரு. அவன் தான் பின்னாடி வந்து கத்தினான்' என்று புலம்பியவாறே வேலைக்காரர் ஒருவரை அழைத்து சுத்தம் செய்ய வைத்தார்.


குளித்து வெளியே வந்தவன், "எதுக்குமா அதை தவற விட்ட? எனக்கு பிடிச்ச ஒயிட் சேர்ட். மஞ்சள் கறை படிஞ்சிருச்சு" என்று கவலையாய்க் கூறினான். "அடேய் அதே தட்டால மண்டையை பொலந்துருவேன். நான் என் வேலையை தானே பண்ணேன்? நீ தானே பின்னாடி வந்து கத்துன?" என்று எகிற, "சரி விடு அம்மா. எனக்கு அந்த சட்டையை ஒழுங்காது வச்சி கொடு" என்று சமாதானக் கொடியை பறக்க விட்டான்.


தங்கம், "முதல்ல சாப்பிடு" என்று அவனை அழைத்து உணவு மேசைக்குச் சென்றான். இருவரும் பல கதைகள் பேசி உணவு உட்கொள்ள தங்கத்தின் மொபைல் ஒலித்தது. அவர் அழைப்பை ஏற்று, "ஹலோ" என்க, "ஆன்டி. என்ன பண்றிங்க? போலி டாக்டர் வீட்டுக்கு வந்துட்டானா? சாப்பிட்டாச்சா? இன்னும் ஹொஸ்பிடல்ல இருக்கானா?" என்று பட்டாசாய் வெடித்தாள் வைஷ்ணவி.


"வீட்டுக்கு வந்துட்டான் வைஷூமா" என்று சிறு சிரிப்புடன் உரைக்க, "அப்போ மொபைலை ஸ்பீகர்ல போடுங்க ஆன்டி" என்று அவசரப்படுத்தினாள்.


அவரும் வைஷூ கூறியதைப் போலவே செய்ய, "ஆன்டி, போலிடாக்டர் நீங்க அங்கிளை கூட்டிட்டு சீக்கிரமா நாளைக்கு மண்டபத்துக்கு வாரிங்க. உங்களை என் அப்பா மீட் பண்ணனும்னு சொன்னாங்க. எனக்கு மறுபடியும் போன் பண்ண கிடைக்காது. சோ தப்பா எடுக்காதிங்க. நாளைக்கு சீக்கிரமா வந்து சேருங்க" என்க பின்னிருந்து வைஷூவை அழைக்கும் சத்தம் கேட்டது.


"ஆ வரேன்" என்றவள், " கடமை என்னை அழைக்கிறது. பாய் போலி டாக்டர். பாய் ஆன்டி" என்று அழைப்பை துண்டிக்க தங்கம், "நாளைக்கு விடியும் போதே அங்கே போகலாம். இல்லை கல்லு இல்லாமலேயே வாயால நமளை துவைச்சி எடுப்பா" என்று சிரிக்க விஷ்ணுவும் சாப்பிட்டவாறே சிரித்து ஆமோதித்து தலை ஆட்டினான்.


வைஷ்ணவியும் திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தாள். திருமண வேலைகளும் மலமல என்று நடந்தேறியது. அனைவருமே அன்றிரவு மண்டபத்தில் தங்கி கண்ணயர நேரம் நள்ளிரவைத் தாண்டியது.


யாரிற்காகவும் நிற்காமல் மதியவள் தன் பகலவனைக் காண வெட்கம் கொண்டு ஓடி ஒளிய பகலவனும் தன் செந்நிறக் கரங்களால் மதியவளை கைச்சிறையில் வைக்க ஆவலோடு வந்தான். வசுமதி அதிகாலையிலேயே எழுந்து குளித்து திருமணப் புடவையை அணிந்து தயாராக அங்கே அவளுடைய அலங்காரம் நடைப் பெற்றது.


யாதவ் தன்னை தொல்லை செய்ய வேண்டாம். அவனே தயாராகுவதாக நேற்று இரவே கூறியதால் அனைவருமே தத்தமது வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தனர். விஷ்ணுவின் குடும்பத்தினர் வருகைத் தர பானுமதி அவர்களை ஆவலோடு வரவேற்று தன் கண்வனிடம் அழைத்துச் சென்றார்.


விஷ்ணு நடந்தபடி, "ஆன்டி வைஷூ எங்கே?" என்று வினவ, "அவ அக்கா ரூம்ல இருப்பா தம்பி. வசுவுக்கு அலங்காரம் பண்றாங்க" என்று உரைக்க, "ஓஓஓ" என்று அமைதி ஆனான். சந்திரசேகரின் அருகில் சென்ற பானுமதி தன் கணவனின் தொட அவர் மனைவியின் பக்கமாக திரும்பினார்.


பானுமதி, "இவங்க தான் நம்ம வைஷூ சொன்ன டாக்டர் விஷ்ணு கிஷான். இவங்க அவரோட அப்பா அம்மா" என்று அறிமுகப்படுத்த அமரநாதும், சந்திரசேகரும் ஒருவரை ஒருவர் ஊன்றி கவனித்து இருவரும் ஒரு சேர, "நீ அமர் தானே?" , "நீ சேகர் தானே?" என்று ஆர்வமாய் வினவினர். இருவரும் சந்தோஷத்துடன் 'ஆம்' என்று தலையாட்டினர்.


அமரநாத், "நாங்க இரண்டு பேரும் சின்ன வயசுல ஒன்னா படிச்சோம். அப்புறமா நாங்க இங்கே வந்துட்டோம். அவன் ஊர்லயே இருந்துட்டான். அப்படியே தொடர்பு அந்துப் போச்சு. இப்போ தான் ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா சந்திக்கிறோம்" என்று அறிமுகப்படுத்தினார்.


சந்திரசேகரும் ஆமோதித்து பால்யக் கதைகளைப் பேச மற்றவர்கள் சிரிப்புடன் பார்த்தனர். விஷ்ணுவும் அவரிடம் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டான். சந்திரசேகரிற்கு தன் மகளின் திருமணம் அன்றே தன் பால்ய சிநேகிதனை கண்டுக் கொண்டதில் அத்தனை பூரிப்பு. அவர்களிடம் இருந்து விடைப்பெற்று வரும் மற்ற உறவினர்களை கவனிக்கச் சென்றனர் வசுமதியின் பெற்றோர்.


சுபமுகூர்த்த நேரமும் நெருங்க யாதவின் கதவோ திறக்கப்பட இல்லை. ஏனோ பெரியவர்களுக்கு தவிப்பாய் இருக்க சாத்விக்கிடம் இதைக் கூற அவன் யாதவின் அறைக் கதவைத் தட்டினான். உள்ளே இருந்து எவ்வித அரவமும் கேட்காததால் கதவைத் திறக்க முனைய சாவி இல்லாமலேயே திறந்துக் கொண்டது.


கார்த்திக்கும் சாத்விக்கோடு உள்ளே நுழைய வெற்று அறையே அவர்களை வரவேற்றது. நேற்று அவன் முகம் துடைத்த துவாயும் அங்கேயே சுருண்டு விழுந்து இருந்தது. பெரியவர்கள் அனைவருமே உள்ளே நுழைந்துப் பார்க்க நெஞ்சாக் கூடு எகிறி துடித்து வெளியே வரும் போல் இருந்தது அனைவருக்கும்.


தவிப்புடனும், ஒருவித பயத்துடனும் அனைவருமே யாதவைத் தேட ஆரம்பிக்க, "பயப்படாதிங்க. அவன் அவசரமா கேஸ் விஷயமா வெளியே போய் இருப்பானோன்னு தெரியல்ல" என்று சமாதானப்படுத்தி அவனுடைய மொபைலிற்கு அழைக்க அதுவோ ஸ்விச் ஓஃப் என்று வந்தது.


ஒருவர் மாற்றி ஒருவர் அவனைத் தேட முனைய ஏதோ ஒரு பிரச்சனை என்று புரிந்து அங்கே வந்தான் கௌதமன். கௌதமனைப் பார்த்தவர்கள் வேகமாக அவனிடம் வருகைத் தந்தார்கள். கார்த்திக், "மித்ரன் எங்கே? ஏதாவது கேஸ் விஷயமா வெளியே போய் இருக்கானா?" என்று அவசரமாய் வினவினான்.


கௌதம், "இல்லை சேர். எங்கேயும் போக இல்லை" என்றான் உறுதியாக. "அப்போ அவனைப் கடைசியா எப்போ பார்த்த? எப்போ பேசின?" என்று சாத்விக் பதட்டத்துடன் வினவ, "நேத்து காலையில தான் கடைசியா அவனை ஸ்டேஷன்ல பார்த்தேன். நேத்து இராத்திரி ஒரு மணி போல என் கிட்ட கேஸ் விஷயமா பேசினான். மண்டபத்துல இருக்கிறதா சொல்லவும் நாளைக்கு கல்யாணம்னு சொல்லி நான் திட்டி போனை வச்சிட்டேன்" என்றான் தெளிவாக.


மறைக்கப்பட வேண்டிய விடயம் சிறிது சிறிதாகக் கசிய மண்டபத்தில் அனைவருமே மாப்பிள்ளையைக் காணவில்லை என்று கேள்வியுற்று சலசலக்க ஆரம்பித்தனர். விஷ்ணுவும் அங்கே வருகைத் தர அபி, சனா, வசு மூவருமே அங்கே வந்தனர். வசுவிற்கோ இச்செய்தி பேரிடியைப் போல் இருக்க சுவரோடு சாய்ந்து நின்றாள்.


விஷ்ணு அவர்களைப் பார்த்து யோசணையாக சாத்விக்கிடம், "வைஷூ எங்கே? இவங்க மூனு பேரும் இங்கே இருக்காங்க. அப்போ வைஷூ எங்க?" என்று ஒருவித பதட்டத்துடன் வினவினான். "நேத்து இராத்ரி வசு அக்கா கூட தூங்க போன போது தான் அவளைப் பார்த்தேன். காலையில பார்க்கவே இல்லை" என்றாள் அபி.


'இது என்ன புது குழப்பம்?' என்று அனைவருமே கிலியோடு இருக்க பெண்களோ அழ ஆரம்பித்தனர். கௌதமிற்கு அழைப்பு ஒன்று வர அதை ஏற்றவனின் முகம் எதிர்ப்புறம் கூறியதில் அதிர்ச்சி அடைய அங்கிருந்து வேகமாக வெளியே வந்தான். என்னவோ ஏதோ என்று மற்றவர்களும் பின் தொடர்ந்து ஓடி வந்தனர்.


காவ்யா கௌதமை அழைத்து மண்டபத்தின் வாயிலிற்கு அழைத்து இருந்தாள். அவளும் யாதவின் திருமணத்திற்காக வந்து இருந்தாள் ஊரில் இருந்து.


இத்தனை நேரமாக மங்களவாத்தியங்கள் ஒலித்துக் கொண்டு இருக்க அனைவருமே ஒரு வித கலக்கத்துடன் ஓடிவருவதைப் பார்த்து அவர்களும் வாசிப்பதை நிறுத்தினர். அங்கே கண்ட காட்சியில் கண்கள் வெளித் தெரியும் அளவிற்கு அதிர்ச்சியுடன் விழித்தன.


யாதவ் மித்ரன் வெட்ஸ் வசுமதி என்று பூக்களால் திருமண மண்டபத்தின் வாயிலில் பொறிக்கப்பட்டு இருந்தது. மங்கல வாத்தயங்கள் வாசிப்பவர்கள் அதிர்ச்சியாக பார்க்க, அதே போல் ஊர்மக்கள், யாதவின் குடும்பத்தினர் அனைவருமே அதிர்ச்சியாக பார்த்தனர்.


வைஷ்ணவி வசுமதியின் திருமணத்திற்காக வாங்கி வைத்த சேலையும், ஆபரணங்களையும் அணிந்து இருக்க அவள் ஆபரணங்களோடு மேலதிகமாக மஞ்சள் தங்கத் தாலியும் தொங்கியபடி ஏதோ போல் வாயிலில் நின்று இருந்தாள். முகமோ உணர்ச்சிகளைத் துடைத்து இருந்தது.


அனைவருமே அதிர்ச்சியுடன் இருக்க வசுமதி தங்கையை நெருங்கும் போதே அவள் அருகில் வந்து நின்றான் யாதவ். அதைப் பார்த்து அதிர்ந்து சிலையானார்கள் அனைவருமே.


கம்பீரமாக வேஷ்டி சட்டையில் நெஞ்சை நிமிர்த்தி யாதவ் அவள் அருகே வந்து நின்றவுடன் அவன் கட்டிய மஞ்சள் தாலி தழையத் தொங்க தலைக் குனிந்தவாறு நின்றாள் வைஷ்ணவி.


யாதவின் தந்தை, "என்னை அவமானப்படுத்த வசுமதி கூட நான் ஏற்பாடு செஞ்ச கல்யாணத்தை நிறுத்திட்டு அவ தங்கச்சி கழுத்துல தாலி கட்டி வந்திருக்க?" என்று கோபமாய் வினவ, "ஐயோ இல்லை மாமா" என்று வைஷூ அவசரமாக மறுக்க, "வாயை மூடுடி" என்று யாதவ் கர்ஜித்ததில் அவள் மேனி வெளிப்படையாகவே நடுங்கியது.


"ஆமா அன்னைக்கு நீங்க மண்டபத்துல இருந்து அடிச்சி வெளியே துரத்தினிங்களே அதுக்காக உங்க அத்தனை பேரையும் பழிவாங்கவும், அவமானப்படுத்தவும் தான் இவளை இழுத்துட்டு போய் தாலி கட்டினேன்" என்று உறும, வைஷூவோ அவனை அதிர்ந்துப் பார்த்தாள்.


வசுமதி மௌனியாக இருக்க வைஷூ, "அக்கா. நான் சொல்றதை கொஞ்சம் கேளு" என்று அவளை நெருங்கி கைப்பிடிக்கச் செல்ல அவள் கன்னத்தில் இடியென இறங்கியது சந்திரசேகரின் கைகள்.


"அப்பா" என்று கண்கள் சிவந்து நீர்த் தளும்ப அதிர்வுடன் தந்தையை நோக்க, "யாருக்கு யாருடி அப்பா? அவன் கூட சேர்ந்து உன் அக்கா வாழ்க்கையையே நாசமாக்கிட்டியேடி. என் முகத்துலேயே முழிக்காத. போ. இங்கிருந்து போயிடு" என்று உறும வைஷூ வெவெடக்க நின்றாள்.


அவள் அருகில் யாதவ் நெருங்க அவனைப் பார்த்து, "ப்ளீஸ்" என்று கண்களால் கெஞ்ச அதே இடத்தில் மறு அடி வைக்காமல் நின்றான்.
"அம்மா நீயாவது நான் சொல்றதை கேளுமா" என்க, பானுமதி, "அக்கா வாழ்க்கையை அநியாயமா பறிச்சிகிட்டியேடி" என்று பழியிட உயிரோடு நொருங்கிவிட்டாள் வைஷூ.


இருந்தும் நம்பிக்கை தளராமல் தன் தமக்கை தன்னை புரிந்துக் கொள்ளுவாள் என்று நம்பி, "அக்கா ப்ளீஸ் நான் சொல்றதை கேளேன்" என்று கெஞ்ச, "மாமாவை எதைக் காட்டி மயக்கின நீ?" என்ற வசுமதியின் விஷ வார்த்தைகள் அவள் பிஞ்சு இதயத்தை குறி தவறாமல் தாக்கின.


அவள் அதிர்ந்து அறுவெறுத்து கூனிக் குறுகி நிற்க, "ஊமை மாதிரி மாமா கூட பேசாமல் இருந்து அவரை மயக்கி எப்படியோ தாலியை வாங்கி கிட்டியே. உன்னைப் போய் என் குழந்தைன்னு நினைச்சேன் பாரு. அறுவெறுப்பா இருக்கு. என் காதலை கொன்ன நீ நல்லாவே இருக்க மாட்ட. நாசமா போயிருவ" என்று சாபமிட்டு கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள் வசுமதி.


நகுலனின் தந்தையும் தாயும் அவர்களின் குடும்பத்தினரும் வைஷ்ணவியை அறுவெறுப்புடன் பார்க்க, "இல்லை இல்லை நான் தப்பு பண்ண இல்லை. என்னை நடந்ததுன்னா...." என்று காதைப் பொத்திக் கத்திய வைஷூ அவள் ஏதோ கூற முனைய, "வாயை மூடு வைஷ்ணவி. இன்னும் ஒரு வார்த்தை பேசி என்னை மிருகமா மாத்தாத" என்று கர்ஜிக்க நடுங்க ஆரம்பித்தாள் வைஷ்ணவி.


அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன், "ஆமா அவ என்னை மயக்கினா. உன்னை விட இவ எனக்கு பெடர் சொயிஸ். நீ என்ன பண்ண போற? அடுத்தவ புருஷனை நினைச்சிட்டே இருக்க போறியா?" என்று எள்ளலாய் மொழிந்தான் யாதவ்.


"அந்த கேடுகெட்டவளும் அடுத்தவன் வாழ்க்கையை நாசமாக்க பார்த்த நீங்களே கல்யாணம் பண்ணும் போது நான் இன்னொரு கல்யாணம் பண்ணாமிருக்க நான் என்ன முட்டாளா? குறிச்ச நேரத்துல என் கல்யாணம் இங்க நடக்கும்" என்று சீறும் சிங்கமென மாறினாள் வசுமதி.


நகுலனனின் தந்தை, "அந்த ஓடுகாலியை" என்று அடுத்து பேசும் முன்னே யாதவ், "இன்னும் ஒரு வார்த்தை என் பொன்டாட்டியைப் பத்தி தப்பா பேசினிங்க. நான் மனிஷனா இருக்க மாட்டேன். ஜாக்கிரதை" என்று உறுமி எச்சரித்தான்.


"அடுத்தவன் வாழ்க்கையை கெடுக்குற இரண்டும் ஒன்னு சேர்ந்து இருக்கு. எங்க உறுப்பட? உனக்கும் எங்களுக்கும் எந்த சம்மதமும் இல்லை. உனக்கு எங்களுக்கும் இருக்கிற உறவு அத்து போச்சு. இங்கிருந்து போயிடு" என்று தன் வயதையும் மீறி கத்த இறுகி நின்று இருந்தார்கள் யாதவ், வைஷ்ணவி தம்பதியினர்.


நகுலனின் தாய், "கல்யாணம் முடிஞ்சி ஒரு நாள் முடியல்லை புருஷனை கைக்குள்ள போட்டு கிட்டா. குடும்பத்தையும் பிரிச்சிட்டா" என்று நாக்கில் நரம்பில்லாமல் மகன் மேல் உள்ள கோபத்தைப் போக்க வைஷ்ணவியை அனைவருமே வடிகாலாப் பயன்படுத்தினார்கள்.


"எப்போ ஒத்துமையா இருந்திச்சி இப்போ பிரிய? அதை விடுங்க. என் பொன்டாட்டியை எப்படி காப்பாத்தனும்னு எனக்கு தெரியும். நீங்க கவலைபடாதிங்க. உங்க ஆசை மருமகளுக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சி வைங்க" என்று நகர அனைவரின் பேச்சைக் கேட்ட அதிர்வில் யாதவின் கைகளில் மயங்கிச் சரிந்தாள் வைஷ்ணவி.


"வைஷ்ணவி" என்று யாதவ் அவள் கன்னம் தட்ட அதிர்வுடன் வேடிக்கைப் பார்த்த விஷ்ணு அவள் அருகில் ஓடி வந்து அவளைப் பரிசோதித்து, "பயப்பட ஒன்னும் இல்லை. அதிர்ச்சியில வந்த மயக்கம் தான். அவளைப் பார்த்துக்க" என்று ஆதூரமாய் அவள் தலையை வருட கண்கள் கலங்கியது விஷ்ணுவிற்கு.


"என்ன நடந்தது மித்து?" என்று இத்தனை நேரம் அமைதியாக இருந்த நகுலன் கூர்ந்து கேட்க, "அவ பேச வந்ததை யாருமே கேட்கவே இல்லையே. இப்போ என்ன இந்த கேள்விக்கு அவசியம்? உங்க அப்பாவை பழிவாங்க நான் இவ கழுத்துல தாலி கட்டினேன். அதான் உண்மை. அதை அவ விளக்கமா சொல்ல வந்தா. நீ உன் குடும்பத்தை பார்த்துக்க. நான் என் மனைவியை பார்க்குறேன்" என்று வைஷூவைக் கையிலேந்தி அங்கிருந்து வெளியேறினான்.


சாத்விக்-சனா, கார்த்திக்-அபி தம்பதியினர் அவர்கள் இருவரும் செல்வதைப் கையாலாகாத தனத்துடன் பார்க்க விஷ்ணு கண்கள் கலங்க அவர்களை வெறித்தான்.


பானுமதி, "ஐயோ என் பொண்ணோட வாழ்க்கையை என் மத்த பொண்ணே கெடுத்துட்டாளே. என் பொண்ணு வாழ்க்கை போச்சே" என்று தலையில் அடித்து அழுவதில் அனைவரும் சுயநினைவடைய கனத்த மனதுடன் அங்கே நின்று இருக்க வசுமதியோ யாதவ், வைஷூ சென்ற பாதையையே வெறித்துப் பார்த்து இருந்தாள்.


சந்திரசேகர் அமரநாத்தின் முன் சென்று நின்று கைக் கூப்பி, "எனக்கு இப்போ நம்பிக்கையான ஒரே ஆள் நீ. என் பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்துறியா?" என்று கண்ணீர் வழியக் கேட்க, "நான் கேட்க வர முன்னாடி நீ முந்திகிட்ட. என் பையன் விஷ்ணுவுக்கு உன் பொண்ணு வசுமதியை கல்யாணம் பண்ணி தரியா?" என்றார் அமரநாத்.


சந்தோஷமாக தலை ஆட்ட விஷ்ணுவிடம் வினவ, "உங்க இஷ்டம்" என்று முடித்துக் கொண்டான். வசுமதியும் "சரி" என்க முகூர்த்த நேரம் முடிய இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்ததால் விஷ்ணுவை தயாராக அழைத்து வர வசுமதியை மீண்டும் ஓரு முறை அலங்கரித்து அழைத்து வந்தனர்.


விஷ்ணு இறுகிய முகத்துடன் அக்னி ஓமத்தின் முன் அமர்ந்து இருக்க வசுமதியும் ஒருவித இயலாமை, தவிப்புடன் அமர்ந்து இருந்தாள். யாதவிடம் வீம்பிற்கு திருமணம் செய்வேன் என்று ஒத்துக் கொண்டாலும் தற்போது மனமோ அடித்துக் கிடந்தது.


அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கப்பட்ட மங்கல நாண் மேடைக்கு கொண்டு வரப்பட அதை கைகள் நடுங்க வாங்கியவன் வசுமதியை ஒரு முறைப் பார்த்து கண்களை இறுக மூடித் திறந்து ஆழந்த மூச்சை வெளியிட்டு கழுத்தில் அணிவித்து மூன்று முடிச்சை இட்டான்.



அதன் பின் தன் நெஞ்சில் அவளை சாய்த்து நெற்றி வகுட்டில் குங்குமம் இட, இருவரின் இதயமும் ஜெட் வேகத்தில் துடித்ததை மற்றவர் அறிந்துக் கொண்டனர். சுண்டு விரல்களைக் கோர்த்து அக்னியை வலம் வர இருவருக்கும் மனதுள் இருந்த பயம் சென்று ஏதோ ஒரு அமைதி உணர்வு ஆட்கொண்டதை இருவருமே உணர்ந்துக் கொண்டனர்.


மஞ்சள் கயிற்றின் மாயத்தின் வேலை இப்போதே ஆரம்பித்து விட்டதோ????


அம்மி மிதித்து அருந்ததிப் பார்த்து அவளுடைய மலர் பாதங்களைப் பிடித்து மெட்டியை அணிவித்து விட்டான் விஷ்ணு. இருவருக்கும் திருமணத்தில் விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் முகத்தில் தெரிந்த இறுக்கம் மாத்திரம் இறுதி வரை குறையவே இல்லை.


சாஸ்திரச் சம்பிரதாயப்படி வசுமதி சந்திரசேகரை திருமணம் செய்து திருமதி வசுமதி விஷ்ணு கிஷானாக மாறினாள். இதே நேரம் கோவிலில் ஜலம், காற்று, கடவுள் சாட்சியாக வைஷ்ணவியின் நெற்றி வகுட்டில் யாதவ் குங்குமத்தை வைத்து மெட்டி அணிவித்து அவளை திருமதி வைஷ்ணவி யாதவ் மித்ரனாக மாற்றிக் கொண்டான்.




யாருக்கு யார் என்பது கடவுள் தீர்மானிப்பதேயாகும். நாம் நினைத்தது அனைத்துமே நடந்துவிட்டால் கடவுள் எதற்கு? நம் வாழ்வில் நடக்கும் எதிர்ப்பாரா ஒவ்வொரு சம்பவங்களிலும் தீமைகளை விட நன்மைகளே அதிகமாக இருக்கும். அதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.






கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்








 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24150




கண்சிமிட்டும் தென்றலே





அத்தியாயம் 7




விஷ்ணு வசுமதி திருமணம் முடிந்ததும் பெரியவர்களிடம் மணமக்கள் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கு இத் திருமணம் அதிர்ச்சியை வழங்கி இருக்கின்றது என்பதனால் அவர்களுக்குத் தனிமையை வழங்கி பெரியவர்கள் நகர வசுமதியிற்கு தன் வாழ்க்கையை நினைத்தே கழிவிரக்கம் தோன்றியது.



யாதவை அவள் மனப் பூர்வமாக நேசித்து அவனைக் கைப் பிடிக்கக் காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் தன் தங்கையே தன்னுடைய காதலுக்கு எதிரியாகி தான் நேசித்தவனின் கைகளால் கழுத்தில் தாலியை வாங்கி அனைவரின் முன் வந்து நின்றாள். தன்னை ஏமாற்றிய தங்கையை மன்னிக்க அவளுக்கு துளியும் இஷ்டமில்லை.


யாதவிற்கு இதில் சிறிதும் வருத்தம் இல்லை என்பதை அவன் பேச்சிலும் நடவடிக்கைகளிலுமே தெரிந்துக் கொண்டாள். தான் மட்டுமே அவனை காதலித்து இருப்பதாக உணர்ந்த நொடி இதயத்தை கத்தியால் குத்திக் கிழித்த வலி அவளுக்கு. அவன் தன்னிடம் சவாலிடும் போது அவளும் பதிலுக்கு திருமணத்தை செய்வேன் என்று சவாலிட்டாள்.


அதன் படி அதே முகூர்த்தத்தில் தந்தையின் விருப்பப்படி திருமணம் செய்துக் கொண்டாலும் அவளால் அவனை (விஷ்ணுவை) நிச்சயமாக மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாரென்று தெரியாத தந்தையின் ஒற்றைச் சொல்லிற்காகவும் தன் குடும்பத்தின் சந்தோஷத்திற்காகவும் அவனை திருமணம் செய்துக் கொண்டாள்.


தான் ஏமாற்றப்பட்டதை கிஞ்சித்திற்கும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் தங்கையும், யாதவும் தனக்குச் செய்த துரோகத்தை நினைக்க இருவரின் மேலும் வெறுப்பும், கோபமும் ஒரு சேர வந்தன. வைஷ்ணவியின் மீதான பாசம் துடைத்து எறியப்பட்டு அவ்விடத்தில் கோபமும், குரோதமும் குடியேறியது.


அவள் மீதான ஆத்திரத்தில் வசுமதி செய்யவிருக்கும் செய்கைகள் தனது வாழ்க்கையிலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று உணர அவள் மனதில் இருந்த காதலின் ஏமாற்றம், தங்கையின் துரோகமும் இடம் கொடுக்கவில்லை. அதை உணர்ந்து இருந்தால் மற்றவர்கள் தன் மேல் கொண்ட மதிப்பை இழந்து இருக்க மாட்டாளோ!!


தன் நிலையை எண்ணி துக்கம் தொண்டையை அடைக்க வாயை மூடி அங்கிருந்து ஓடிச் சென்று மணமகள் அறைக்குள் சென்று கதவடைத்து கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள். "ஏன் வைஷூ என்னை ஏமாத்தின? எப்படி உன் அக்காவுக்கு துரோகம் பண்ண முடிஞ்சது?" என்று வைஷ்ணவியிடமே ஞாயத்தைக் கேட்க, பதில் கூற வைஷ்ணவி அங்கு இல்லையே.


மறுபடியும் இருவரும் தன்னை ஏமாற்றியதும், துரோகம் செய்ததும் கண் முன் தோன்ற, "உங்களை பத்தி யோசிக்க என்ன இருக்கு? சீ உங்க இரண்டு பேரை நினைச்சாலே அறுவெறுப்பா இருக்கு. கடவுள் என்னை ஏமாத்தினதுக்காக உங்களுக்கு நல்ல தண்டனையை கொடுப்பான்" என்று தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.


இரவு ஒன்று இருந்தால் பகல் இருப்பதை அநேகர் மறப்பதினால் பல பிரச்சனைகள் எழுகின்றன. ஒரு பிரச்சனை உருவாகும் போது தங்கள் புறத்தில் இருந்து மாத்திரம் சிந்திக்காமல் எதிர்புறம் இருப்பவர்களின் இடத்தில் தன்னை நிறுத்தி சிந்தித்தாலே பல பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வரலாம்.


இதை பல மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் ஒரு பேராசியரனா வசுமதியும் வசதியாக மறந்து போனது விந்தையிலும் விந்தை!!


விஷ்ணுவோ வசுமதி அழுதுக் கொண்டே அங்கிருந்து ஓடுவதைப் பார்க்க அவனுக்குமே பாவமாக இருந்தது. அவள் கண்களில் தெரிந்த காதல் வலியை அவனும் பார்த்தானே. அவனும் காதலின் வலியை உணர்ந்தவனாயிற்றே!!


அவளைத் திருமணம் செய்யும் போது கணவனாக நடக்காவிடினும் ஒரு தோழனாகவே நடக்க வேண்டும் என்று நினைத்தே மூன்று முடிச்சு இட்டான். அவளை தற்போது சமாதானம் செய்ய வேண்டும் என்று அவனுக்கு தோணவில்லை. ஏனெனில் விஷ்ணுவும் அதே நிலமையில் இருப்பதால் தனிமையே இருவருக்கும் மருந்து என்று எண்ணிக் கொண்டான்.


வசுமதியைப் போல் விஷ்ணு சிந்திக்காமல் யாதவ் வைஷ்ணவியை திருமணம் செய்ததிற்கான ஒரு காரணி இருக்கும் என்பதை நண்பனையும், தன் செல்ல வாயாடியின் குணத்தையும் கொண்டு யூகித்துக் கொண்டான். அதை தற்போது கேட்கும் சூழ்நிலையில் அவன் இல்லை என்பதை அறிந்து அமைதியாக இருந்தான்.


திருமணத்திற்கு முன் நடந்தவைகளும், திருமணமும் கண் முன் தோன்றி அலைமோத மீண்டும் அவன் முகம் இறுக தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டான். அவன் அருகே அமர்ந்த தங்கம் தன் தனயனின் நிலை எண்ணி மனம் கனம் கொள்ள மெதுவாக தலைப் பிடித்தார்.


அவருடைய மடியில் தலை வைத்தவன், "தலை வலிக்குது அம்மா. ஒரே நாளில் என் வாழ்க்கையே மாறும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த பொண்ணும் ரொம்ப பாவம் அம்மா. அதே போல வைஷூவும் ரொம்ப ரொம்ப பாவம். அவளும், யாதவும் நிச்சயமா தப்பு பண்ணி இருக்க மாட்டாங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு" என்று தன் மனதில் உள்ளவற்றைக் கொட்டினான்.


தங்கம், "எனக்கும் தெரியும்டா. கொஞ்ச நாள் பழகின எனக்கே வைஷூவைப் பத்தி தெரியிது. அவளை பெத்தவங்களுக்கு தெரியல்லியா? அதான் கஷ்டமா இருக்கு" என்று வருந்தும் குரலில் உரைக்க, "அவங்களும் இரண்டு பொண்ணோட வாழ்க்கையை நினைச்சு கவலை வந்திருக்கலாம் அம்மா. இளய பொண்ணு மூத்தவ கல்யாணம் பண்ண இருந்தவனை கல்யாணம் பண்ணி வந்திருக்கா.


மூத்த பொண்ணோட வாழ்க்கை என்னாகுறதுங்குற கவலை; வைஷூ கல்யாணம் பண்ண கோபம்; மூத்தவ கல்யாணம் மணமேடை வரைக்கும் போய் நின்னது; எல்லா அதிர்ச்சிகளுமே அவங்களை தாக்கினதால அவங்களால எதுவுமே யோசிக்க முடியல்லை. அதான் வாய்க்கு வந்ததை பேசிட்டாங்க.


அவங்களையும் குறை சொல்ல முடியாது. வைஷூ கழுத்துல தாலியை பார்த்ததும் நான் ஷொக் ஆயிட்டேன். அதுவும் யாதவ் அவ பக்கத்து வந்து நின்னதுமே எனக்கே ஃபுள்ளா பிளேன்க் ஆயிருச்சு. அப்போ மத்தவங்க நிலமையை யோசிங்க அம்மா" என்றான்.


தங்கம், "கடவுள் மேலே பாரத்தை போட்டுட்டு வேலையை பார்க்கலாம். கடவுள் என்ன பண்ணாலும் அது நன்மைக்கு தான்" என்று வாஞ்சையாய் தலை வருடி விட்டார்.


நகுலனின் குடும்பமோ உடைந்து இருந்தது யாதவனின் நடவடிக்கைகளால். அவன் இவ்வாறு ஒரு காரியத்தை செய்வான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. நகுலின் குடும்பமும் வசுமதியின் குடும்பமும் வசுமதி, யாதவ் இருவரின் நிச்சயத்தில் மனக் கசப்புடன் இருக்க அதன் பின் அதே இருவரின் திருமணத்தில் மனக் கசப்பை மறந்து ஓடியாடி திருமண வேலைகளைக் கவனித்தனர்.


ஆனால் இன்று அவன் வைஷ்ணவியை திருமணம் செய்ததால் சந்திரசேகரின் முகத்தில் எவ்வாறு விழிப்பது என அனைவருமே ஒருவித அழுத்ததில் இருந்தனர். யாதவும் வைஷ்ணவியும் ஒருவரோடு ஒருவர் பேசி இதுவரை பார்த்ததே இல்லை. வைஷ்ணவியிற்கு யாதவின் மீது இருந்த பயத்தைப் பற்றி அனைவருமே அறிவர்.


அவ்வாறு இருக்கும் போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து வந்தது அனைவருக்கும் பலத்த அதிர்ச்சி. தமக்கையின் வாழ்வினை தட்டிப் பறித்த வைஷூவை மன்னிக்க எவருமே தயாராக இல்லை. அதே போல் ஊர்மக்கள், உறவினர்கள், சொந்தபந்தங்கள் முன்னிலையில் தங்களை தலைக்குனிய வைத்த யாதவையும் மன்னிக்கவோ, அவனை ஏற்கவோ தயாராக இல்லை.


அவர்கள் இருவரின் மேல் அதீத வெறுப்பையும் தேவையற்ற வன்மத்தையுமே அவர்களின் குடும்பத்தார் வளர்த்துக் கொண்டனர். இவ்வாறு வெவ்வேறு சிந்தனைகளின் கீழ் இவர்கள் இருக்க அங்கே வருகைத் தந்தார் சந்திரசேகர்.


"உங்க பையனால நானும் என் பொண்ணும் நிச்சசய நேரம் பட்ட மனவேதனையும் போதும்; நான் பெத்த இரண்டாவதாலேயும், உங்க பையனாலேயும் நானும் என் குடும்பமும் என் ஒரே பொண்ணும் அனுபவிச்ச அவமானமும் போதும். இப்போ என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சி இருக்கு. தயவு செஞ்சு அதை கெடுத்துராதிங்க" என்று கூறி அங்கிருந்து நகர்ந்தார்.


நகுலனனின் குடும்பத்தினரின் முகமோ இறுகி அவமானத்தில் கன்றி இருந்தது. அங்கிருந்து வேகமாக நகுலனின் தந்தை வெளியேற முற்பட்டவர் சந்திரசேகரும், அமர்நாதும் இருந்த இடத்திற்கு வருகை தந்தார்.


"நான் பெத்தவன் இப்படி ஒரு அவமானத்தை தேடி கொடுப்பான்னு நான் கனவுலேயும் நினைக்க இல்லை மச்சான். உங்களுக்கு மட்டுமில்லை எங்க குடும்பத்துக்கும் சேர்ந்து தான் அவமானம். ஆனால் இதுல அல்லாடினது வசுமதி. அவ தங்க மனசுக்கு அவ சந்தோஷமா இருப்பா" என்றவர் அமரநாதின் புறம் திரும்பினார்.


"அவளை சந்தோஷமா பார்த்துக்கொங்க. நாங்க வரோம்" என்று கைக்கூப்பிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார் நகுலனின் தந்தை. கவரைத் தொடர்ந்து அவரின் குடும்பமும் சந்திரசேகரிடம் கண்கள் கலங்க மன்னிப்பு வினவி அங்கிருந்து ஊரிற்குச் சென்றனர்.


பானுமதி வசுமதி இருந்த அறைக்குச் சென்று அவளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். தன் மூத்த மகளைப் பார்க்கும் போது, இளைய மகளை எண்ணி கோபமும், ஆத்திரமும் பெருகியது. அவளை நினைப்பதை விட மூத்தவளை தற்போது கவனிக்கும் பொறுப்பே அதிகம் என்று அவளை சமன் செய்ய ஆரம்பித்தார்.


வைஷ்ணவி மயங்கி விழுந்ததும் யாதவ் அவளைக் கையிலேந்தி மண்டபத்தை விட்டு வெளியேற அவன் தனது காரில் அவளைக் கிடத்தி தண்ணீர் போத்தலில் உள்ள தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான். மெது மெதுவாக தன் சிப்பி இமையைத் திறக்க எதிரிலே யாதவ் உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்று இருக்க நடந்தவை அனைத்துமே கண்முன் படமாக ஓடியது.


அதில் விழுக்கென கண்ணீர் கோர்க்க, வைஷூவை யாதவ் முறைப்பதை உணர்ந்து அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் கௌதமிற்கு அழைத்து, "நீ வசுமதி கல்யாணத்தை முடிச்சிட்டு குவார்டசுக்கு போ. நான் வைஷூவை கூட்டிட்டு வரேன்" என்று அவன் பதில் பேசும் முன்னே அழைப்பைத் துண்டித்தான்.


காரை வேகமாக ஓட்டியவன் ஓர் இடத்தில் நிறுத்தி, "நீ காருக்குள்ள இரு. சீக்கிரமா வரேன்" என்று கூறி அங்கிருந்து சென்றான். வைஷூ தலையாட்டி கண்களை மூட இன்று நடந்தவை அவள் கண்முன் தோன்ற பதட்டத்துடனும் பயத்துடனும் உடல் நடுங்க பதறி கண்திறந்தாள். பத்து நிமிடத்தில் யாதவ் திரும்ப அவளுடைய வெளிறிய முகத்தைப் பார்த்தவன்,"நடந்ததை நினைக்காத. அதை மறக்க முயற்சி பண்ணு" என்று பார்வையை சாலையில் பதித்தான்.


"இன்னைக்கு மட்டும் நீங்க வர இல்லைன்னா நான்....." என்று கூற முன், "இனாஃப் வைஷ்ணவி. அதைப் பத்தி பேசாதன்னு நான் பல முறை சொல்லிட்டேன்" என்று சீற பயத்தில் வாயை மூடிக் கொண்டாள். அதன் பிறகு மௌனமே அவ்விடத்தை தத்தெடுக்க, அமைதியாய் கழிந்தது நேரம்.


காரை ஒரு கிருஷ்ணன் கோயிலிற்கு முன் நிறுத்தியவன் அவளை அழைத்துக் கொண்டு கீழிறங்கி பூக்கடையில் மல்லிகைப் பூவை வாங்கி அவளிடம் அனுமதி கேட்காமலேயே தலையில் வைத்து விட்டான். அவளுக்கு பிடித்த கடவுளான கிருஷ்ணனின் முன் நின்று கண்மூடி, கைக்கூப்பி யாதவ், வைஷ்ணவி இருவருமே கண்மூடி வேண்டினர்.


அங்கே தெரிந்த குளத்தில் இருந்த நீர், கிருஷ்ணன், காற்று என்பவற்றை சாட்சியாகக் கொண்டு அவள் கழுத்தில் இருந்த தாலியை வெளியே எடுத்து விட்டு நெற்றி வகுட்டில் குங்குமத்தை வைத்தவன் தாலியிற்கும் வைத்து விட்டான். வைஷூ யாதவையே கண்சிமிட்டாமல் பார்க்க, அதை அவன் உணர்ந்தாலும் அமைதியாய் இருந்தான்.


நிலத்தில் அமர்ந்தவன் அவள் தாமரைப் பாதங்களை தன் முரட்டுக் கரங்களால் ஏந்தி தன் தொடையில் வைத்தவன் தளிர் விரல்களில் சிறிது நேரத்திற்கு முன் வாங்கிய மெட்டியை இரு கால் விர்களிலும் அணிவித்து எழுந்தான். வைஷூ அவன் முகத்தைப் பார்த்து "வசு அக்காவை நான் ஏமாத்திட்டேனே. அதான் நான் அப்போவே சொன்னேன். போறேன்னு" என்று கண்கள் கலங்க, 'இவளை' என்று பல்லைக் கடித்தான்.


யாதவ், "இங்க பாரு வைஷ்ணவி. நீ என் மனைவி. அதாவது மிஸஸ் வைஷ்ணவி யாதவ் மித்ரன். புரிஞ்சுதா? இதை உன் மண்டையிலையும் உன் மனசுலையும் பதிய வச்சிக்கோ. வசுமதிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இனி இல்லை. அவளையும், என்னையும் நீ மறுபடியும் சேர்த்து வச்சு பேசுன, எனக்கு கெட்ட கோபம் வரும்" என்று பொறுமையை இழுத்துப் பிடித்தக் குரலில் மொழிந்தான்.


"ஆனாலும் என்னால இதெல்லாம் ஏத்துக்க முடியல்லை. இன்னிக்கு மொத்த குடும்பமுமே என்னால உங்களை தப்பா நினைச்சிட்டாங்களே" என்று கலங்கிய முகத்துடனும், குரலோடும் உரைக்க, யாதவ், "உன்னால தான் இதெல்லாம் நடந்ததா?" என்று அழுத்தமாய் கேட்டான்.


அதற்கு பதில் 'இல்லை' என்று அவள் அறிவாளே. அதனால் அமைதியாய் தலைக் குனிய, "இங்கே பாரு நவி, காலையில இருந்து நீ ரொம்ப கஷ்டபட்டுட்ட. ரொம்ப அழுதுட்ட; பயந்துட்ட; அதிர்ச்சியாகிட்ட. கேட்கக் கூடாத பேச்செல்லாம் கேட்டுட்ட. சோ அமைதியா உன் கிருஷ்ணன் கூட பேசு" என்று அவளை அழைத்து ஒரு இடத்தில் அமர வைத்து யாதவும் அமைதியாக இருந்தான்.


"அது நவி...." என்று தடுமாறி வைஷூ வினவ, "நீ பிறந்தப்போ உனக்கு வைஷ்ணவின்னு பேர் வச்சாங்க. எல்லோருமே உன்னை வைஷூன்னு கூப்பிடுவாங்க. எனக்கு அந்த பேர் பிடிக்க இல்லை. அதான் நவின்னு உன்னை கூப்பிடுவேன். இல்லைன்னா முழு பேர் சொல்லி கூப்பிடுவேன். இப்போ வை...ஷ்...ண...வி ன்னு இழுத்து பேச கஷ்டமா இருக்கு. சோ நவி!! இதுல உனக்கு ஏதாவது புரொப்ளம் இருந்தாலும் என்னால மாத்திக்க முடியாது" என்று அலட்சியமாய் மொழிந்தான்.


"ஓஓஓ" என்றவள் குளத்தினை வெறிக்க கண்களில் நீர் தளும்பி கண்ணீர் வழிய, அதைப் பார்த்த யாதவ், "இவளோ நாளா என்னை மித்து அக்காவோட மாமான்னு என்னை கூப்பிடுவ. இப்போ என்னன்னு கூப்பிட ஐடியா?" என்று அவள் மனதை மாற்றச் சீண்டினான்.


அவனது கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திருதிருக்க, "யோசிச்சிட்டு பேசு. ஆனால் அதே மாதிரி கூப்பிடாத" என்று அழுத்தமாய் கூறியவன், "வா குவாடசுக்கு போலாம். கௌதம், காவ்யா வந்திருப்பாங்௧" என்று எழ வைஷ்ணவியும் எழுந்துக் கொண்டாள்.


இருவருமே காரில் ஏறி அவனது குவாடசிற்குச் சென்றனர். காரை நிறுத்தியதும் இருவரும் இறங்கி வர காவ்யா யாதவின் தங்கை முறையாக நின்று ஆரத்தி எடுத்து வலது காலை உள்ளே வரும் படி அழைக்க இருவருமே அதே போல் செய்து உள்ளே நுழைந்தனர்.


கௌதமனை சங்கோஜமாக வைஷூ பார்க்க காவ்யா அதைப் பார்த்து, "அவன் ஒரு லூசு வைஷூ. அவனுக்கெல்லாம் பயப்படாத. அவனுக்கு பயப்பட்டால் பயத்துக்கே மரியாதை இல்லாமல் போயிரும்" என்று தன்னவனின் காலை வார, 'அடிப்பாதகத்தி அந்த பொண்ணு வந்த முதல் நாளே மானத்தை வாங்கிட்டாளே' என்று உக்கிரமாய் அவளை முறைத்தான் கௌதம்.


வைஷூவின் உதடுகள் புன்னகையைச் சிந்த யாதவோ இதழ்விராய புன்னகையை வீசினான்.


கௌதம், "மலக்கொரங்கே, உன்னை அப்புறமா பார்த்துக்குறேன்" காவ்யாவைத் திட்டியவன், வைஷூவிடம் திரும்பி, "நான் கௌதம் மா. உனக்கு அண்ணன். இந்த அரைடிகட்டு வாயைத் திறந்தாலே பொய் பொய்யா சொல்லும். எதையுமே நம்பாத. நானும் டெரர் பீசு தான்" என்று கெத்தாய் உரைக்க வைஷூ சத்தமாக சிரித்துவிட்டாள்.


கௌதம் பரிதாபமாக யாதவைப் பார்க்க அவனோ தோள் உழுக்கி சோஃபாவில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான். காவ்யா, "நான் சொன்னேனே. பார்த்தியா வைஷூ இவன் ஒரு லூசுன்னு" என்று அவளும் அவனை டேமேஜ் செய்ய, "அட நம்புங்கடா, நான் டெரர் பொலிஸ். என்னை பார்த்தாலே ரௌடிங்க நடுங்குவாங்க" என்று பாவமாய் மொழிந்தான்.


வைஷூ, "அண்ணா நீங்க நல்லா ஜோக் சொல்றிங்க. நீங்க இப்போ இப்படியா? இல்லை எப்போவுமே இப்படியா?" என்று சிரிப்புடன் வினவ, "அவன் எப்போவுமே இப்படி தான் வைஷூ. இவன் கூட கடைசி வரைக்கும் வாழனும்னு என் தலை விதி என்ன பண்ண முடியும்?" என்று பெருமூச்சை வெளியிட்டாள் காவ்யா.


வைஷூ,"அந்த நல்ல ஜீவன் நீங்களா அண்ணி? அப்போ என்டர்டெய்ன்மன்டுக்கு கவலையே இல்லைன்னுங்க" என்க, "என்னது என்டர்டெயின்மன்டா???" என்று வாயைப் பிளக்க, "கண்டிப்பா" என்று யாதவும் கூறி கண்மூடித் திறந்து ஆமோதித்தான்.


காவ்யாவிற்கு யாதவ் கண்களைக் காட்ட சரியென தலையசைத்த காவ்யா வைஷூவுடன் வளவளத்தவாறே உள்ளே அழைத்துச் சென்றாள். வைஷூவும் கதை ஆர்வத்தில் தன்சூழலை மறந்துவிட்டாள். காவ்யா ஒரு மனோதத்துவ மருத்துவர் என்பதனால் அவள் கவனத்தை கவலையில் இருந்து அழகாகத் திசைத் திருப்பினாள்.


கௌதம் தன் சேட்டையை விடுத்து மண்டபத்தில் நடந்த அனைத்தையுமே கூறியவன், சீரியசான குரலில், "உங்களுக்குள்ள என்னடா ஆச்சு?" என்று வினவ நடந்த அனைத்தையுமே யாதவ் கூறக் கூற அவன் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான் கௌதம்.


கௌதம், "இப்போ எந்த பிரச்சனையும் இல்லையே? இந்த விஷயம் வெளியில கசியாதே" என்று ஒருவித பதட்டத்துடன் வினவ, "நோ டா. பட் ஒரு சின்ன நெருடல் இருக்கு. விஷ்ணு கூடவும் இதைப் பத்தி பேசனும். ஆனாலும் நாமளும் ஜாக்கிரதையா இருக்கனும்" என்றவனின் குரல் தீர்க்கமாய் ஒலித்தது.


கௌதம், "சரி டா. வைஷூ ரொம்ப கஷ்டபட்டுட்டா. பாவம் டா அவ. அவ குடும்பத்துல யாருமே புரிஞ்சிக்கவே இல்லை" என்று வருந்தியவன், "பத்துரமா பார்த்துக்கோ. காவ்யா ஃபுட் ஆடர் பண்ணி இருக்கா. சாப்பிடுங்க. நீயும் ரெஸ்ட் எடு. ஒழுங்கா தூங்கி இருக்க மாட்ட" என்று அவனை அறைக்கு அனுப்பி வைத்து காவ்யாவை அழைத்தான்.


"நாங்க வெளியில போயிட்டு வரோம்" என்ற கௌதம் காவ்யாவை அழைத்துக் கொண்டு தன் காதல் செடியை வளர்க்க வெளியேறினான்.


அவர்கள் சென்றதும் வரவேற்பரையில் நின்று வைஷூ கையைப் பிசைந்தவாறு நிற்க, "அங்கே என்ன பண்ணிட்டு இருக்க? ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடு" என்று கட்டளையாய் கூறி அவன் அறைக்குள் செல்ல, "அப்போ நீங்க?" என்றாள் அவசரமாக.


"இதென்ன கேள்வி? நானும் நீயும் புருஷன், பொன்டாட்டி. சோ ஒரே ரூம்ல தான் இருக்கனும் நவி. இதை நீ அடிக்கடி மறக்குற" என்றவன் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டி, "என்னைப் பார்த்தால் என்ன பொறுக்கு போல இருக்க?" என்று சீறலாய் கேட்க, "ஐயய்யோ இல்லைங்க" என்று அவசரமாய் மறுத்தாள்.


"அப்போ உள்ள வந்து தூங்கு. உன் மேலே நான் ஒன்னும் பாஞ்சிற மாட்டேன்" என்க, அப்போதுமே அவள் தயங்கினாள். "உனெக்கெல்லாம் மௌத் மோட்ல சொன்னா சரி வராது. ஆக்ஷ்ன் மோட் தான் சரி" என்று அவள் 'என்ன? ஏது?' என கிரகிக்க முன்னே தன் கைகளில் அவளை ஏந்தி கட்டிலில் கிடத்தி போர்வையை போர்த்தியவன் அடுத்தப் பக்கம் சென்று ஒருக்களித்துப் படுத்தான்.


நேற்றில் இருந்து இப்போது வரை ஒழுங்காக துளித் தூக்கம் இல்லாததும், வெகுநாட்களாக அவன் கையிலெடுத்த வழக்கின் பின் சுற்றியதாலும் இன்று நிம்மதியாய் உறங்கினான். வைஷூ அவனுடைய அதிரடியில் தடுமாறியவள் யாதவின் புறம் திரும்பி அவனையே பார்த்தவள் எப்போது கண்ணயர்ந்தாள் என்று அவளே அறியாள்!!!


யாதவ் தூக்கத்தில் திரும்பி தன்னருகே உறங்கி இருந்த தன் மனைவியை அணைத்தவாறே உறக்கத்தைத் தொடர இதை அறியா வைஷூவும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். (உங்க இரண்டு பேரையுமே நான் எப்போ லவ் பண்ண வச்சு? எப்போ சேர்த்து வக்கிறது? இப்போவே கண்ணை கட்டுதே.... சப்பா!!!)


மண்டபத்தில் உணவு உட் கொள்ளும் போது அவர்களை வற்புறுத்தாமல் தாய்மார்களே இருவருக்கும் உணவு ஊட்டிவிட்டனர். சுப நேரம் முடிவதற்குள் கிளம்ப வேண்டி இருப்பதால் மணமக்களை அழைத்துக் கொண்டு திடீர் மணமகனான விஷ்ணுவின் வீட்டிற்குச் சென்றனர்.


அவர்கள் செல்லும் முன் தங்கம் மண்டபத்தில் வைத்தே வேலைக்காரர்களைக் கொண்டு மணமக்களை வரவேற்க அனைத்து வேலைகளையுமே ஏற்பாடு செய்து இருந்தார். மணமக்களை ஒரு காரில் அனுப்ப விஷ்ணு, வசுமதி இருவரையுமே வெவ்வேறு சிந்தனைகள் ஆட்கொண்டு இருந்தன.


விஷ்ணு தன்னால் அவளை காயப்படுத்தாமலோ இல்லை நல்ல கணவனாக இருக்க முடியுமா? என்ற சிந்தனையில் இருக்க வசுமதியோ இத்திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா? நல்ல மனைவியாகவும், மருமகளாகவும் இருக்க முடியுமா? என்று யோசித்தனர்.


மாளிகை போன்றதொரு வீட்டிற்கு முன் வாகனத்தை நிறுத்திய பின்னரே தங்கள் சிந்தனைகளில் இருந்து மணமக்கள் இருவருமே கலைந்தனர். விஷ்ணு நிர்மூலமான முகத்துடன் இறங்க, வசுமதி அவர்களின் செல்வ வளத்தைப் பார்த்து அதிர்ந்தவளுக்கு முதன் முறையாக பய உணர்வு எழுந்தது.


அவள் முகத்தைக் கொண்டே அவள் உணர்வுகளைக் கண்டுகொண்ட தங்கம் கையைப்பிடித்து அழுத்தி; இமைமூடி ஆறுதல் தெரிவிக்க, ஓரளவு தெளிந்து வசுமதியின் முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது. விஷ்ணு, வசுமதி இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வலது காலை வைத்து உள்ளே அனுப்பினார் தங்கம்.


மணமக்களின் மனநிலையை உணர்ந்து அடுத்து எவ்வித சடங்குகளையும் செய்யவே இல்லை. வசுமதியை அழைத்துச் சென்று சாமியறையில் விளக்கேற்றி வைத்து ஓய்வெடுக்க ஒரு அறைக்குள் அனுப்பி வைத்தார் தங்கம். விஷ்ணுவும் தனது அறைக்குள் புகுந்து வைஷூவிற்கு அழைப்பை ஏற்படுத்த அவளுடைய மொபைலோ இன்னும் ஸ்விச் ஓஃப் என்றே வந்தது.


எரிச்சலில் மொபைலைக் கட்டிலில் வீசியவன் தனது கபோர்டைத் திறந்து அதில் உள்ள டயரியை எடுத்தான். முதல் பக்கத்தில் எழுதி தன்னவளின் பெயரை முணுமுணுத்து மிக மென்மையாக வருடினான். அவற்றைத் திருப்பி ஒவ்வொரு புறமாக வாசித்தான்.


கண்கள் கலங்க வாசித்தவனுக்கு இத்தனை நேரமாக இருந்த எரிச்சல் சென்று ஒரு அமைதி மனதில் குடிகொண்டது. 'என்ன பண்றதுன்னே தெரியல்லை. எனக்கு சரியான வழி காட்டு டோலி' என்று மானசீகமாய் ஒரு கோரிக்கையை விடுவித்து கண்கள் மூட அவ்வாறே கண்ணயர வசுமதியும் அழுதவாறே அதன் களைப்பில் வேறு அறையில் கண்ணயர்ந்தாள்.


இருள் சூழ ஆரம்பித்த அவ் இரவு வேளையில் சந்திரசேகரும், பானுமதியும் தங்கள் வீட்டில் எங்கோ வெறித்தவாறு வரவேற்பரையில் அமர்ந்து இருக்க அங்கே தனது காரில் வருகைத் தந்தான் யாதவ்.



#####################


இவங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு இப்போ கேட்கக் கூடாது. முக்கியமான ஒரு கட்டத்துல தான் அந்த உண்மையை சொல்லுவேன் ஒகேயா? அது வரைக்கும் பொறுமை காக்கனும்...


பொறுத்தார் பூமியாள்வார்!!! தெரியும்ல?? 😉🤫



##############


கருத்துக்களைப் பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24270


கண்சிமிட்டும் தென்றலே





அத்தியாயம் 8





யாதவிற்கு எவரோ வீட்டின் மணியை அழுத்துவதில் விழிப்புத் தட்ட வேகமாக எழ முற்பட்டவனின் வலது புறம் பாரமாக இருப்பதை உணர்ந்தான். அவன் திரும்பிப் பார்க்க அவனது கைச் சிலையில் சிறு பிள்ளையென ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் வைஷ்ணவியைப் பார்த்தவனுக்கு அவனது உதடுகளில் சிறுகீற்றுப் புன்னகை தோன்றியது.



அவளை தன்னிடம் இருந்து விலக்கி படுக்க வைத்தவன் தன்னை சரி செய்து கதவைத் திறக்க வாச்மேன் கையில் உணவுப் பொதியை வைத்து இருந்தார். காவ்யா இருவருக்கும் உணவு ஆடர் செய்ததைப் பற்றிக் கூறியது தற்போது நினைவு வர, "தேங்ஸ் அண்ணா" என்று புன்னகைத்து அதை வாங்க, "வரேன் சேர்" என்று புன்னகையுடன் அங்கிருந்து சென்றார் வாச்மேன்.


அவற்றை எடுத்து மைக்ரோஅவனில் வைத்து மூடி நேரத்தைப் பார்க்க மணி பன்னிரெண்டு முப்பது எனக் காட்ட, "இன்னும் ஒன் ஹவர் தூங்கலாம்" என்று மொபைலில் அலார்ம் வைத்து மீண்டும் கட்டிலில் விழுந்து உறக்கத்தைத் தொடர்ந்தான். வைஷூவிற்கு அவன் கட்டிலில் விழுந்ததில் விழிப்புத் தட்டி பதறி எழுந்து தன் சேலையை சரி செய்துக் கொண்டாள்.


அவள் எழுந்ததில் யாதவும் அவள் புறம் திரும்பி படுத்தவாறே, "என்னாச்சு?" என்று வினவ, "திடீர்னு ஏதோ டொம்னு விழுகுற சத்தம் கேட்டது. அதான் பயந்துட்டேன்" என்று என்ன சத்தமாக இருக்கும் என்று யோசிக்க, அவளை முறைத்துப் பார்த்தான் யாதவ்.


'இந்த அயர்ன் மேன் எதுக்கு பாசமா பார்க்குறாரு? நாம எதுவுமே தப்பா பேச இல்லையே' என்று பரிதாபமாய் அவனைப் பார்க்க, "நான் பெட்ல விழுந்ததுல நீ பதறி எழும்பிட்டியா?" என்று அவளுடைய கண்களைப் பார்த்துக் கேட்டான்.


'இது என்ன ஸ்விமிங் பூலா வந்து பாய?' என்று மனதுக்குள் திட்ட, 'இதை தைரியமா வெளியே சொல்லேன்' என்று கிண்டலாய் மொழிந்தது மனசாட்சி. யாதவ் அவளை உக்கிரமாக முறைக்க விழிபிதுங்கி அவனைப் பார்த்தாள் வைஷூ.


யாதவ், "உன்னை முறைச்சி முறைச்சியே என் கண்ணு டேமேஜ் ஆகிரும். உன் கூட மனிஷனுக்கு பேச முடியுமா? வாயைத் திறந்தால் மேடமுக்கு முத்து கொட்டிரும்" என்று அவளைத் திட்டி விட்டு மறுபுறம் திரும்பி உறக்கத்தைத் தொடர முயற்சி செய்தான்.


வைஷூ தலையில் கைவைத்து அமர்ந்தவளுக்கு தொடர்ந்து உறங்குவதில் விருப்பம் இல்லை. அதனால் அவள் எழுந்து அறைக்கு வெளியே வந்தவள் குவாடசினை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தாள். இரண்டு பெரிய அறைகளையும், ஒரு பெரிய சமலறை, வரவேற்பரை என்பவற்றைக் கொண்ட மூவர் தங்குமளவிற்கு போதிய வீடு அது.


அவ்வீட்டைப் போன்றே அடுத்தடுத்து பல வீடுகளும் இருந்தன. அவற்றிற்கு இடையே பூஞ்செடிகள், மூலிகைச் செடிகள் போன்றவை நடப்பட அகலமான இடங்களில் வீட்டின் நான்கு புறமும் தோட்டங்களாக அமைக்கப்பட்டு இருக்க வீடுகளுக்கு இடையில தூரமும், இரு தோட்டங்களுக்கு இடையிலான வேலியும் சற்று தூரமாகவே இருந்தன.


வாயிலில் யாதவின் கார் நிறுத்த இடமும் கற்களால் அமைக்கப்பட்ட நாற்காலிகளும் இருந்தன. அத்தோடு வாயிலில் வொச்மேனோடு அரசாங்கத்தினால் யாதவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப் பட்டோரும் வாயிலின் அருகிலும் வீட்டைச் சுற்றி ஆங்காங்கே நின்று இருந்தனர்.


அனைத்தையும் இரசித்தவள் புன் சிரிப்புடன் மற்றொரு அறைக்குச் சென்று முகம் கழுவி வந்த பிறகே, தனக்கு மாற்றுடை இல்லை என்பதே அவளுக்கு நினைவிற்கு வந்தது. அத்தோடு வேண்டாத மனதைக் குத்திக் கிழிக்கும் சம்பவங்களாக யாதவ், வைஷூவின் திருமணம் நடந்த முறை, மண்டபத்தில் குடும்பம் தன்னிடம் நடந்துக் கொண்டவை அலைமோத கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது நிற்காமல்.


'என் மேலே உங்க யாருக்கும் ஏன் நம்பிக்கை இல்லாமல் போச்சு? நான் உனக்கு துரோகம் பண்றவ இல்லை அக்கா' என்று காலில் முகம் புதைத்து அழுதுப் புலம்ப மாத்திரமே அவளால் முடியுமாக இருந்தது. இதை யாதவிடம் கூறினால் பழையதைப் பற்றி நினைக்காமல் தற்போது நிலமை; எதிர்காலத்தைப் பற்றி மாத்திரம் யோசி என்று அறிவுறுத்துவான்.


அதனாலேயே அவனிடம் இதைப் பற்றிக் கூறி திட்டு வாங்க முடியவில்லை. அந்த அளவிற்கு அவளிடம் தெம்பும் இல்லை. யாதவின் உறங்கும் முயற்சியில் அவனுக்குத் தோல்வி கிடைக்க சலிப்புடன் எழுந்தவன் குளித்து டிரெக் சூட், டீசர்ட் அணிந்து அறையில் இருந்து வெளியேறி வைஷூவைத் தேடி அடுத்த அறைக்கு வந்தான்.


அவளில் காலில் முகம் புதைத்து கண்ணீர் வடிப்பதைப் பார்த்தவன், "இந்த டேமை திறக்கிறதை தவிர இவளுக்கு ஒன்னும் தெரியாது" என்று எரிச்சலுடன் முணுமுணுத்தவன், "வைஷ்ணவி" என்று அழுத்தமாய் அழைக்க திடுக்கிட்டு எழுந்து நின்றாள் வைஷு.


"மறுபடியும் மறுபடியும் ஒரே விஷயத்தை என்னை சொல்ல வைக்காத நவி. உன் அக்காவுக்கு துரோகம் பண்ணிட்டேன்னு நினைச்சு கண்ணீர் வடிக்காத. நீயோ, நானோ துரோகம் பண்ண இல்லை. விதியால நாம கல்யாணம் பண்ண வேண்டிய சிடுவேஷன் அமைஞ்சது. பண்ணோம். தெட்ஸ் இட்.


என் வாழ்க்கையில கல்யாணம் ஒரு முறை தான் நடக்கனும்னு முடிவு பண்ணி இருந்தேன். அந்த கல்யாணம் உன் கூட நடந்திருச்சு. நீ என் மனைவி. அதுல மாற்றம் இல்லை. உன் அக்காவையும், என்னையும் சேர்த்து வச்சு தேவையில்லாமல் யோசிக்காத.


ஏன்னா உங்க அக்கா இப்போ இன்னொருத்தரோட வைஃப். உன் அக்காவுக்கும், விஷ்ணுவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. உன் அக்காவை அவன் நல்லா பார்த்துப்பான். நான் இதுவரைக்கும் என் செயல்களுக்கு யாருக்குமே விளக்கம் கொடுத்தது கிடையாது.


உனக்கு தான் முதன் முறையா சொல்றேன். ஏன்னா அடிக்கடி இந்த வோடர் ஃபோல்சை ஓபன் பண்ணாதன்னு சொல்றதுக்கு. எனக்கு எரிச்சல் வருது" என்று கோபம் கலந்த எரிச்சலுடனும் ஆரம்பித்து இறுதியில் அலடசியத்துடன் முடித்தவன் ஓரடி வெளி நகரந்தான்..


பின் என்ன நினைத்தானோ மீண்டும் அதே இடத்திற்கு வந்தவன், "பெண்களோட கண்ணீர் ரொம்ப புனிதமானது. அதை இந்த மாதிரி சில்லி ரீசன்சுக்கு வீணாக்காத. ஒரு நாள் உன்னை எல்லாருமே புரிஞ்சிப்பாங்க" என்று உடலில் அலட்சியம் வழிய அமர்த்தலாக உரைத்து, "நான் சாப்பிடப் போறேன் வா" என்று வெளியே சென்றான்.


முதலில் அவன் பேசியவற்றை ஒரு வித சங்கடத்துடன் கேட்டவள் அடுத்து விஷ்ணு, வசு இருவருக்குமே திருமணம் நடந்து முடிந்தது என்பதில் உவகைக் கொண்டாள். ஏனெனில் விஷ்ணுவின் மீது அபார நம்பிக்கை அவளுக்கு இருந்தது. இறுதியில் அவன் அலட்சியமாய் கூறியதில் மனம் சுணங்கினாள்.


ஆனால் அச்சுணக்கமும் அவன் வெளியேற முன் கூறிய வார்த்தைகளில் மறைந்தாலும், 'ரொம்பத் தான் பண்றான். இதை பாசமா சொன்னால் என்னவாம்?' என்று உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாள்.


"நீ இன்னும் அங்கே என்ன பண்ணிட்டு இருக்க?" என்று வெளியே இருந்து சத்தம் கொடுத்ததில் வேகமாக வெளியே வந்தவள், கையைப் பிசைந்தவாறே தயங்கி நின்றாள். யாதவ் இருவருக்கும் உணவை தட்டில் எடுத்து வைத்து இருந்தான். அவள் தயங்கி இருப்பதைப் பார்த்தவன் தலைத்தூக்கி, 'என்ன?' என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றினான்.


"அது... எனக்கு..." என்று எச்சிலை விழுங்க, "வேகமா சொல்லி முடி" என்றான் கோபம் கலந்த அலட்சியத்துடன். தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் கண் இமைகளை இறுக மூடி, "எனக்கு பிரஷ்ஷாகனும். வேற டிரெஸ் இப்போ இல்லை. காலையில போட்ட நகையும் இருக்கு. அன்கம்ஃபொர்டபளா இருக்கு. இப்போ என்ன பண்ணட்டும்?" என்று கடகட என பேசி முடித்தாள்.


அவளைப் பார்த்தவனின் உதடுகள் இதழ்விரியா புன்னகையைச் சிந்த, அவளைக் ஊன்றி அழுத்தமாகப் பார்த்தவாறே இருக்க, வைஷூவோ, "என்ன சத்தத்தையே காணோம். எழும்பி போயிட்டாங்களோ" என்று முணுமுணுத்துக் கண்களைத் திறந்தாள். அவளை அழுத்தமாக யாதவ் பார்ப்பதைக் கண்டவள் திருதிருக்க ஆரம்பித்தாள்.


அவள் பாவனைகளில் சிரிப்பு வந்தாலும் இதழுக்குள் அடக்கியவன், "முதல்ல சாப்பிடு. அப்புறமா இதைப் பத்தி பேசலாம்" என்று சாப்பிட அமருமாறு சைகை செய்ய சுருங்கிய முகத்துடன் கைகளைக் கழுவி அவஸ்தையில் நெளிந்தவாறே சாப்பிட்டாள். யாதவ் அதை உணர்ந்தாலும் மௌனமாகவே சாப்பிட்டு முடித்து எழுந்தான்.


அவன் சென்ற பிறகு நிம்மதியாக மூச்சு விட்டாலும் அதிகாலை மூன்று முபத்தில் இருந்து இதே ஆடையில் இருப்பது வைஷூவிற்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தியது. ஒருவாறு சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை ஒழுங்கு செய்து வாஷ்பேசனில் இட்டாள்.


யாதவ் மறுபடியும் அங்கே வந்தவன் சாப்பிட்ட மேசையை துண்டால் துடைத்து சுத்தம் செய்ய இடையில் புடவையின் தலைப்பை சொருகி கையில் அணிந்திருந்த தங்க வளையல்கள், மற்ற வளையல்கள், மோதிரங்களை கழற்றி வைத்து வாஷ்பேசனில் இட்டவற்றைக் கழுவ ஆரம்பித்து இருந்தாள்.


"நவி இதை விட்டு நீ போ. நான் கழுவுறேன். இது புது புடவை நாசமாகிரும். போய் வேற வேலை இருந்தா பாரு. இந்த நகை உங்க அப்பா உனக்கு கொடுத்ததுன்னு நினைக்குறேன். என் பொன்டாட்டி நான் சம்பாதிச்ச காசுல தான் டிரெஸ், ஏன் கால்ல போடுற சப்பல் கூட போடனும்னு நினைக்கிறவன் நான். சோ இதைப் போய் எடுத்து வை" என்று அழுத்தமாகக் கூறி தன் வேலைகளைக் கவனித்தான்.


வைஷூவும் பெருமூச்சை வெளியிட்டு தான் அணிந்து இருந்த நகைகளைக் கழற்றி எடுத்து வைத்து அதே அறையில் முடங்கிக் கொள்ள வெளியே சென்று இருந்த காவ்யா, கௌதம் இருவருமே உள்ளே நுழைந்தனர். "யாதவ்" என்று கத்திக் கொண்டே உள்ளே வர, "எதுக்கு இப்போ அண்ணா பேரை ஏலம் போடுற?" என்று கோபத்துடன் கேட்டாள் காவ்யா.


"ஒருவேளை உன் அண்ணாவும், என் தங்கச்சியும் ரொமேன்ஸ் பண்ணிட்டு இருந்தாங்கன்னா?... அதான் நாங்க வந்துட்டோம்னு சிக்னல் கொடுக்க..." என்று பெருமையாய் உரைத்து, "எப்படி உன் மாமாவோட ஐடியா?. தெரியும் நீ என்னை புகழுவன்னு. ஆனால் உன் மாமாவுக்கு புகழ்ச்சி பிடிக்காது. சோ அதை ஒரு முத்தமா கொடுக்கலாம்" என்று கன்னத்தைக் காட்டினான்.


'சப்' என்று கன்னத்தில் அடித்த காவ்யா அவனை எரித்து விடுவது போல் பார்க்க யாதவ் அவனை எதிரில் உறுத்து விழித்தான். அவனுக்கு பின்னே அறையின் வாயிலில் நமட்டுப் புன்னகையுடன் நின்று இருந்தாள் வைஷூ. கௌதம் கத்தியவுடன் யாதவ், வைஷூ இருவருமே அவ்விடத்திற்கு வந்திருக்க அதைக் கவனியாத கௌதம் பேசிக் கொண்டே சென்றான்.


'அசிங்கப்பட்டுப் போச்சே கோபால். அசிங்கப்பட்டுட்டியே! புது தங்கச்சி முன்னாடி அசிங்கப்பட்டுட்டியே கோபால்' என்று கௌதமின் மனசாட்சி அவனைப் பார்த்துக் கைக் கொட்டிச் சிரிக்க மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டான்.


காவ்யா, "இரண்டு பேருக்கும் இது திடீர் கல்யாணம் எருமை" என்று அவன் காதில் கடித்துத் துப்பி வைஷூவிடம் சென்று ஒரு பையை நீட்டினாள். "இதுல ஒரு சுடிதாரும், நைட் வியர் பண்ண ஒரு டிரெஸ்சும், உனக்கு தேவையான திங்சும் இருக்கு. நீ போய் குளிச்சிட்டு வா" என்று புன்னகையுடன் கூற, "தேங்கியூ அண்ணி" என்றாள் பூரிப்புடன்.


கௌதம், "இந்த தேங்சை நீ என் பொன்டாட்டிக்கு இல்லைமா, உன் புருஷனுக்கு சொல்லனும். அவன் தான் நான் வெளியில போகும் போது வாங்கிட்டு வர சொன்னான்" என்று உரைக்க வைஷூ யாதவைப் பார்த்தாள்.


அவனோ அவளைப் பார்க்காது, "உன் புருஷனுக்கு டீரிட்மன்ட் கொடுக்க வேண்டி இருக்கு காவ்யா. அதை முடிச்சிட்டு வரேன்" என்று தனது கையில் இருந்த காப்பை மேலே இறுக்கிக் கொள்ள கௌதம் அங்கிருந்து வெளியே ஓட யாதவ் அவனை துரத்திச் சென்றான்.


வைஷூ, 'இவனுக்கெல்லாம் உணர்ச்சியே கிடையாதா?' என்று உள்ளுக்குள் புலம்பியவாறே காவ்யா வழங்கிய பையை எடுத்து குளியலறைக்குச் சென்று குளித்து வந்தாள். அதற்குள் யாதவ் கௌதமின் முதுகில் பலமுறை தோசை சுட்டு இருந்தான்.


மாலை வேளை நெருங்கும் வரையில் காவ்யா, வைஷூ இருவரும் வளவளக்க கௌதமும், யாதவும் தற்போது எடுத்து இருக்கும் வழக்கைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தனர். மாலை வேளை நெருங்கியதும் நால்வருக்கும் சேர்த்து காவ்யாவும், வைஷூவும் காபியையும், ஸ்நெக்சையும் தயார் செய்து வந்தனர்.


அனைவரும் பேசும் போதே யாதவ், "உன் நகையெல்லாம் எடுத்து வை. நான் உன் வீட்டுக்கு போய் உன்னோட புக்ஸ், சர்டிஃபிகேட்சை எடுத்துட்டு இதையும் கொடுத்துட்டு வரேன்" என்று எழுந்து அறைக்குள் நுழைய அவன் செல்வதையேப் பார்த்தாள் வைஷூ.


கௌதம், "அவனுக்கு ஒன்னு கையில கிடைச்சால் தனக்கே அது பூராவே கிடைக்கனும்னு எதிர்பார்ப்பான். உன் விஷயத்துலேயும் அப்படிதான். நீ குத்திக்கிற சின்ன கிளிப்பா இருந்தாலும் அவன் செல்வுல வாங்கனும்னு நினைப்பான். சுயமரியாதை, கௌரவம் அவனுக்கு ரொம்ப முக்கியம் வைஷூ" என்று உரைக்க சரியென தலையாட்டி அவளும் அறைக்குள் சென்றாள்.


சிறிது நேரத்தில் யாதவ் தயாராகி வெளியே வர மற்றைய அறையில் இருந்து வைஷ்ணவி தான் அணிந்து இருந்த நகைகளை எடுத்து அவன் கையில் வழங்க, "நீ இன்னிக்கு கட்டின புடவையையும் உன் வீட்டு ஆளுங்க கிட்ட கொடுத்து இருப்பேன். பட் அது நம்ம வெடிங் சேரி. அதான் அதுக்கும் சேர்த்து பணத்தை கொடுக்கலாம்னு இருப்கேன்" என்று அங்கிருந்த சென்றான்.


'நீ என்ன பீசுடா?' என்று வைஷு மைன்ட் வொயிசில் பேசி யாதவ் செல்வதைப் பார்க்க மற்ற இருவருமே அதே எண்ணத்தில் அவன் வெளியேறுவதைப் பார்த்தனர்.


இருள் சூழ ஆரம்பித்த அவ் இரவு வேளையில் சந்திரசேகரும், பானுமதியும் தங்கள் வீட்டில் எங்கோ வெறித்தவாறு வரவேற்பரையில் அமர்ந்து இருக்க அங்கே தனது காரில் வருகைத் தந்தான் யாதவ்.


அவனே கேர்டையும் திறந்து உள்ளே நுழைய அங்கே யாதவைப் பார்த்தவர்களுக்கு அத்தனை ஆத்திரம் வந்தது. சந்திரசேகர் ஆத்திரமாக வந்து அவனது சட்டையைப் பிடித்து, "அதான் என் பொண்ணை மணமேடமைக்கு கொண்டு வந்து நிறுத்தினியே. இப்போ எதுக்குடா வந்த?" என்று கடினமாக வினவ, "பொறுமையா பேசலாம். இப்போ என் சேர்ட்ல இருந்து கையை எடுத்தால் நல்லா இருக்கும்" என்று தன் வலிமை பொறுந்திய கைகளால் அவர் கையைப் பிரித்தான்.


பானுமதி, "இன்னும் என்ன பேச இருக்கு? அந்த துரோகிக்கு பணிஞ்சு பேச வந்தியா?" என்று அகங்காரத்துடன் வினவ, "என் பொன்டாட்டியைப் பத்தி நான் எதுக்கு உங்க கிட்ட பேசனும்? அவளுக்கும் உங்களுக்கும் என்ன உறவு?" என்று உள்ளே நுழைந்து தோரணையுடன் அமர்ந்து அமர்த்தலாக வினவினான்.


அவனது கேள்வியில் அதிர்ந்து நின்றனர் பானுமதி, சந்திரசேகர் தம்பதி. யாதவ் அதைப் பொருட்படுத்தாது, தன் கையில் இருந்த பையை அங்கே இருந்த மேசையில் வைத்தான்.


யாதவ், "இது நீங்க என் பொன்டாட்டிக்கு வாங்கி கொடுத்த நகை. மத்தவங்க வாங்கி கொடுக்குறதை என் பொன்டாட்டி போட மாட்டா. அதான் இதை கொடுக்கலாம்னு வந்தேன். என்ட் என் பொன்டாட்டி சாரிக்கு பணமும் வச்சிருக்கேன். அது எங்க வெடிங் சேரி சோ அதை திருப்பி கொடுக்க முடியாது" என்று ஒருவித அலட்சியத்துடன் மொழிந்தான்.


இதை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை என்பதை அவர்களின் உடல் மொழியே கூற யாதவ் மேலும் தொடர்ந்து, "என் பொன்டாட்டியோட புக்ஸ், என்ட் சர்டிஃபிகேட்சை மட்டும் வேணூம். அதை நீங்க தொட வேணாம். நானே எடுக்குறேன். நீங்க சொன்னது போல உங்களுக்கும் அவளுக்கும் எந்த தொடர்புமே இல்லாமல் இருக்கிறது பெடர்" என்றவன் வைஷூவின் அறையைத் தேடி நுழைந்தான்.


அவளுடைய புத்தகங்கள் மற்றும் அவளுடைய முக்கியமான கல்வி சம்பந்தமான பொருட்கள், மெடல்ஸ், கப்ஸ், சர்டிஃபிகேட்ஸ் என்பவற்றை வெளியே எடுத்து வந்தான். வெளியே நின்று இருந்த தனது டிரைவரை அழைத்தவன் அவற்றை எடுத்து காரில் அடுக்கி வைக்க உத்தரவிட அவரும் அதையே செய்தார். அவருக்கும் யாதவும் உதவி செய்தான்.


அனைத்தையுமே முடித்து விட்டு அவர்களின் முன் வந்தவன், "உங்களுக்கு இனி ஒரு பொண்ணு மட்டும் தான். என் பொன்டாட்டி எனக்கு மட்டுமே சொந்தம். அவளை இன்னொரு முறை அசிங்கப்படுத்த கூடாது. அப்படி ஏதாவது நடந்தது ஏ.ஐ.ஜி யாதவ் மித்ரனை பார்க்க வேண்டி இருக்கும்" என்று எச்சரித்து விட்டு நகர பானுமதி, சந்திரசேகர் இருவருமே விக்கித்து நின்றனர் நடந்த சம்பவங்களினால்.


அதே சமயம் காவ்யாவிற்கு தனது மொபைல் இலக்கத்தை வழங்க மொபைலைத் தேடிய போதே அது இல்லை என்று தெரிய வந்தவுடன் வெளிறியமுகத்துடன் அதை கௌதமிடம் கூற அவனோ அதிர்ந்து சிலையாய் நின்றான்.


டி.வியில் பிரேகிங் நியூசாக, "இன்று காலை ***** திரீ ஸ்டார் ஹோட்டலில் பொலிஸாரால் திடீரென்று சோதனை நடத்தப்பட்டது. அதற்கு காரணம் என்ன? அதை அறிந்துக்கள் தொடர்ந்து எங்களுடன் இணைந்து இருங்கள்" என்று செய்தி வாசிகப்பட வைஷூ மயங்கிச் சரிந்தாள்.





#################


எதுக்காக அப்டேட் போட இல்லைன்னா பொன்னியின் செல்வன் கதை கிடைச்சது. அதை வாசிக்கலாம்னு பார்த்தால் இரண்டு நாள் தேவைப்பட்டிச்சி. நான் அந்த கதைக்குள்ளேயே மூழ்கி போயிட்டேன்.


வர்ணனைகள், கதாபாத்திரங்கள், மொழிநடை எல்லாமே சூப்பர். என்னால முடிக்கும் வரைக்கும் வெளியே வர முடியல்லை.


அதனால் ஃபேஸ் புக் பக்கமே வர இல்லை. அப்போ என் ஃபிரண்டு சொல்லி தான் பொம்மு அக்கா (ஆத்விகா பொம்மு) அவங்க பிரம்மன் ஸ்டோரி கம்பிளீட் பண்ணிட்டு அடுத்த நாளே ரிமூவ் பண்ண போறாங்கன்னு சொல்லவும் நான் அதை ரீட் பண்ணேன். சோ என்னால எழுத டைம் கிடைக்க இல்லை.


சோ சொரி ஃபிரென்ஸ்....


நாளைக்கு சந்திக்கலாம்..



######



கருத்துக்களைப் பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24299



கண்சிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 9





வைஷ்ணவி, காவ்யா இருவருமே வளவளக்க காவ்யா, "உன் நம்பரைக் கொடேன் வைஷூ. உன் கூட அடிக்கடி பேச முடியுமா இருக்கும்" என்று தன் மொபைலை எடுத்து அவள் இலக்கத்தைக் கூறும் வரையில் தொடுதிரையில் விரல்களை வைத்திருக்க வைஷூவும் தனக்கு தற்போது ஒரே ஆறுதல் காவ்யா என்பதை உணர்ந்து இலக்கத்தை வழங்கினாள்.



காவ்யா, "நான் மிஸ்டு கோல் கொடுக்குறேன். என் நம்பரை சேவ் பண்ணிக்கோ" என்று உரைத்து அவ் இலக்கத்திற்கு அழைக்க வைஷூ அந்நேரமே தனது மொபைலைத் தேடினாள்.


அவள் இருந்த இடங்களில் எல்லாம் தேட அவளுக்கு அகப்படவே இல்லை. காலையில் மண்டபத்தில் இருந்தே அவள் கையில் மொபைல் இருக்கவில்லை என்று அவளுக்கு ஞாபகப்படுத்தியது மூளை.


அதில் அன்னிச்சையாக இதயம் வேகமாகத் துடித்து பயத்தில் முகம் வெளிற, அவளது மாற்றங்களைப் பார்த்த காவ்யா, "என்னாச்சு வைஷூ?" என்று ஆதரவாய் தோள் தொட்டாள். நடுங்கும் குரலில், "அண்ணி" என்றவளுக்கு பயத்தில் நா வரண்டு தொண்டையில் முள் சிக்கிய உணர்வு.


வேகமாக எழுந்தவள் வரவேற்பரையில் தொலைக் காட்சியைப் பார்க்கும் கௌதமிடம் வந்தவள், "அண்ணா என் மொபைல் என் கிட்ட இல்லை. அதை நான்..." என்று வார்த்தைகளைக் கோர்த்து அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாறி நடுங்கும் உடலுடன் கண்கள் கலங்க கீழே அமர்ந்தாள்.


வைஷூ கூறியதை புரிந்துக் கொண்ட கௌதமோ அதிர்ச்சியில் சிலையானான். காவ்யா நடப்பது புரியாமல் அவனை உலுக்க, "ஹான்" என்று விழித்தவன், "ஒரு நிமிஷம் கவி" என்று அவசரமாக தன் நண்பன் யாதவிற்கு அழைப்பை ஏற்படுத்த அவனது அவசரம் புரிந்தோ இல்லையோ யாதவ் அழைப்பை ஏற்றான்.


கௌதம் பதட்டத்துடன், "எங்க இருக்க?" என்று வினவ, "வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன். என்னாச்சு?" என்று கூர்ந்து கேட்க, "வீட்டுக்கு சீக்கிரம்.." என்று சொற்களை முடிக்கும் முன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிய செய்தியில் பேச்சு தடைப்பட்டது.


யாதவ், "ஹலோ" என்று அழைக்க கௌதமிடம் இருந்து எவ்வித பிரதிபலிப்பும் இன்மையால் அமைதி காக்க அவனுக்கும் தொலைக் காட்சியில் வாசிக்கப்படும் செய்தி வீட்டில் நிலவும் அமைதி காரணமாக நன்றாகவே ஒலிவடிவில் அவனை அடைந்தது.


தொலைக் காட்சியில் பிரேகிங் நியூசாக, "இன்று காலை ***** திரீ ஸ்டார் ஹோட்டலில் பொலிஸாரால் திடீரென்று சோதனை நடத்தப்பட்டது. அதற்கு காரணம் என்ன? அதை அறிந்துக் கொள்ள தொடர்ந்து எங்களுடன் இணைந்து இருங்கள்" என்று செய்தி வாசிகப்பட வைஷூ அதைக் கேட்டு மயங்கிச் சரிந்தாள்.


காவ்யா, "வைஷூ" என்று கத்தியவாறே அவளை நெருங்க அதுவும் தெளிவாக யாதவைச் சென்றடைந்தது. தனது ஓட்டுனரிடம், "அண்ணா வேகமா போங்க" என்க அவரும் வேகமாக வண்டியைச் செலுத்த ஆரம்பித்தார்.


மயங்கிய நிலையில் இருந்த வைஷூவை அவசரமாக பரிசோதிக்க அதிர்ச்சியில் வந்த மயக்கம் என்பது காவ்யாவிற்கு தெளிவானது. அவளுக்கு மருந்துகளை வழங்க தனது பையிலிருந்து ஒரு பிரிஸ்கிரிப்ஷன் ஒன்றை எழுதி அதை கௌதமிடம் வாங்கி வருமாறு அனுப்பி வைக்க யாதவ் அதே நேரம் வருகை தரவும் சரியாக இருந்தது.


யாதவ் வேகமாக உள்ளே வந்தவன், "என்னாச்சு?" என்று வினவ காவ்யா அவனைப் பார்த்தாள். அவனின் குரலிலும் மாற்றம் இல்லை, முகத்திலும் உணர்ச்சிகள் துடைத்தெறியப்பட்டு என்ன உணருகிறான் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.


"காவ்யா" என யாதவ் அழுத்தமாக அழைக்க, "ஹான்" என்று விழித்தவள் தன்னை சமன் செய்து, "அவ மொபைலைக் காணோம்னு சொன்னதுமே ஒரு மாதிரி பயந்துட்டா. அடுத்து நியூசைப் பார்த்துட்டு மயங்கி விழுந்துட்டா. பயப்பட ஏதும் இல்லை. அதிர்ச்சியில வந்த மயக்கம்" என்க அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான்.


வெளியே வந்த யாதவ் தன் நீண்ட நெடிய சுட்டு விரலால் தன் அடர் புருவத்தை நீவியவாறே தரையை வெறிக்க மருந்துகளை வாங்கி வந்த கௌதம் அவனது புருவ நீவலைப் பார்த்து, 'ஆழ்ந்த சிந்தனையில இருக்கான். இவன் இப்படி இருந்தாலே யாருக்கோ ஆப்பு வைக்க போறான்னு அர்த்தம். இன்னிக்கு அந்த அப்பாவி ஜீவன் யாரோ' என்று மனதுக்குள் புலம்பி உள்ளே சென்றான்.


காவ்யா வைஷூவைப் பார்த்துக் கொள்ள கௌதம் யாதவிடம் வந்தான். கௌதம் நேரடியாகவே, "யாரை தூக்கனும்" என்று வினவ ஒரு மெச்சுதல் புன்னகையுடன் யாதவ், "இந்த நியூசைக் கொடுத்தவனை தூக்கனும். நாளைக்கு காலையில அவன் வெளியே வரும் போது தூக்க சொல்லு. ஒன்பது மணிக்கு நான் வரும் போது அவன் என் கஸ்டடியில இருக்கனும். இப்போவே தேட ஆரம்பிக்க சொல்லு" என்று கட்டளை பிறப்பித்து உள்ளே நுழைய கௌதம் அவன் கூறிய வேலையை செய்ய ஆட்களை ஏவினான்.


ஐ.ஜி, யாதவிற்கு அழைப்பை ஏற்படுத்தி, "நியூஸ் எப்படி வெளியில கசிஞ்சது யாதவ்?" என்று வினவ, "எனக்கு அதான் புரியல்லை சேர். என்னை மீறி அவங்க செஞ்சி இருக்காங்க. நாளைக்கு லன்சுல உங்களை ஃபுள் டீடெய்ல்ஸோட சந்திக்கிறேன்" என்றவன், "சேர் ஒரு ஃபேவர்" என்று சிலவற்றை மொழிந்தான்.


ஐ.ஜி, "அது புரொப்ளம் இல்லை. நான் பார்த்துக்குறேன். வைஷூ என்ன பண்றா? சகுந்தலா வைஷூவைப் பார்க்கனும்னு அடம் பிடிச்சிட்டு இருக்கா யாதவ். அவளை ஒரு நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வா" என்று உரைக்க, "அவ நியூசைப் பார்த்துட்டு பயந்துட்டா சேர். சீக்கிரமா கூட்டிட்டு வரேன்" என்றான்.


ஐ.ஜி, "அவளை நல்லா பார்த்துக்கோ. அவளுக்கு துணையா நீ மட்டும் தான் இருக்கனும்" என்று அழைப்பைத் துண்டித்தார்.


ஐ.ஜி அசோகன் குமாரிற்கு யாதவ் என்றாலே தனிப் பிரியம். அதே போல் அவரின் மனைவி சகுந்தலாவிற்கும் யாதவ் மீது அதீத அன்பு இருந்தது. இருவரிற்கும் கடவுள் அனைத்து செல்வங்களை வழங்கி இருந்தாலும் பிள்ளைச் செல்வங்களை மாத்திரம் வழங்காமல் குறையாக வைத்து இருந்தான்.


அதனால் யாதவ் அவர்களுக்கு ஒரு மகனாக இருந்தான். கௌதமும், யாதவும் சகுந்தலாவை எப்போதுமே 'அம்மா' என்று அழைத்தாலும் அசோகனை 'சேர்' என்றே அழைப்பர். அது அவரிற்கு வருத்தத்தை தந்தாலும் அவர் மீது கொண்ட மரியாதையே அது என்பதை உணர்ந்து இருந்தார்.


யாதவும் வைஷூவைச் சென்று பார்க்க, அவள் காவ்யாவின் மடியில் தலை வைத்து கண்மூடி சாய்ந்து இருக்க, "நீ இன்னிக்கு நவியிற்கு துணையா இங்கேயே இரு காவ்யா. கௌதமும் இருப்பான்" என்று கூறி ஒரு முறை வைஷூவை அழுத்தமாக பார்த்து விட்டு அறையில் இருந்து வெளியேறினான்.


கௌதம் வந்ததும் யாதவ் இதனைக் கூற, அவனும் மறுக்காமல் ஒத்துக் கொண்டு கௌதம், காவ்யா இருவருக்குமான ஆடையையும், தேவையான பொருட்களையும்தஸ தனது குவாடசிற்குச் சென்று எடுத்து வந்தான்.


இவர்களுக்கு நேரம் இவ்வாறு கழிய சாத்விக்-சனா, அபி-கார்த்திக், விசாலாட்சி அனைவருமே சாத்விக்கின் வீட்டிலேயே இருந்தனர். வசுமதியின் திருமணத்தில் நடந்த சம்பவங்கள் அவர்களை மிகவும் பாதித்து இருந்தது.


சாத்விக் யாதவின் திருமணம் முடிந்த பிறகு அஞ்சலிக்கான தண்டனையை வழங்க நினைத்து இருக்க திருமணத்தில் நடந்த குழப்பத்தினால் அதனை சற்று நிறுத்தி வைக்க முடிவு செய்தான். தற்போதைய நிலையில் மேலும் அவர்களை காயப்படுத்துவதில் அவனுக்கு துளியேனும் விருப்பம் இல்லை.


சனா, "வைஷூவுக்கும், மித்து அண்ணாவுக்கும் கல்யாணம் நடந்து முடிஞ்சதை என்னால இன்னுமே நம்ப முடியல்லை. மித்து அண்ணா சொன்ன காரணத்தை எனக்கு ஏத்துக்கவும் முடியல்லை" என்று கவலையாய்க் கூற, அபியும் அதை ஆமோதித்தாள்.


கார்த்திக், "வைஷூ முதல்ல சொல்ல வரும் போது மித்ரன் அதுக்கு விட இல்லை. அப்புறம் அவனை மீறி மறுபடியும் அவ எதையோ சொல்ல வரும் போது அவ குடும்பம் கேட்க தயாரா இல்லை. கடைசியில மித்ரன் அவன் தான் குடும்பத்தை பழிவாங்க வைஷூவை கல்யாணம் பண்ணதா சொன்னான். எனக்கு என்னமோ இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு தோணுது" என்று யோசணையுடனே உரைத்தான்.


சாத்விக், "ஆமா ஆர்யன். மித்ரன் வேணூன்னே அவன் மேலே பழி போட்டுகிட்டான்னு நினைக்குறேன். கண்டிப்பா இரண்டு பேரும் தப்பு பண்ணி இருக்க மாட்டாங்க. மித்ரன் கண்ணுல பொய் இல்லை. அவன் வசுவை ஏமாத்த இல்லைன்னு அவனோட நேர்மையான கண்ணே காட்டிக் கொடுத்தது" என்றான் உறுதியாக.


அபி, "இப்போ என்ன பண்றது?" என்று என்றவளின் குரல் வருத்ததில் ஒலித்தது. "அவங்க குடும்ப விஷயத்துல நாம மூக்கை நுழைக்க முடியாது. காலம் கனியும் வரைக்கும் காத்து இருக்கலாம். உங்க ஃபிரன்டு மேலே நம்பிக்கை இருந்தால் அவளுக்கு துணையா இருங்க" என்று சாத்விக் கூறி தனது அறைக்குள் நுழைந்தான்.


கார்த்திக்கும் திருமண வேலைகளில் ஈடுபட்ட களைப்பினால் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் செல்ல விசாலாட்சி மௌனமாக அனைத்தையுமே கவனித்தவர், "வசுமதி, வைஷ்ணவி" இருவருக்கும் சேர்த்தே இறைவனிடம் பிரார்த்தித்து தனது அறைக்குள் முடங்கிக் கொண்டார்.


அபியும், சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சனா, "ஆனாலும் வைஷூவோட ஃபெமிலி, மித்து அண்ணா ஃபேமிலி வைஷூவை தப்பா பேசி இருக்கக் கூடாது" என்று தோய்ந்த குரலில் கூறினாள்.


அபி, "ஆமாடி. வைஷூ மித்து அண்ணாவைப் பார்த்தாலே பயந்து நடுங்குற ஆளு. அவ அண்ணாவை மயக்கிட்டான்னு சொல்றதுல ஒரு லொஜிக் வேணாமா?" என்று நொடிக்க சனாவின் இதழ்கள் சிறு புன்னகையை சிந்தின.


சனா, "வைஷூவை நாளைக்கு ஈவீனிங் போய் பார்த்துட்டு வரலாம். அங்கே போறதுக்கு முன்னாடி வசு அண்ணி, விஷ்ணு அண்ணாவை பார்த்துட்டு போலாம்" என்று உரைக்க அபியும் சம்மதமாகத் தலை அசைத்தாள். இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு தத்தமது அறைகளுக்குள் நுழைந்துக் கொண்டனர்.


விஷ்ணு வெகுநேர ஆழ்ந்த உறக்கத்திற்குப் பிறகு கண்விழிக்க நேரம் மூன்று மணியைக் காட்டியது. அவனுக்கு பட்டு வேஷ்டி, சட்டை அசௌகரியமாக இருக்க குளித்து டிரெக்பேன்ட், டீசர்ட்டுக்கு மாறி வெளியே வந்தான். அது வரையில் வசுமதி எழுந்து இருக்கவில்லை.


விஷ்ணு, "அம்மா பசிக்குது" என்று உணவு மேசையில் அமர, "கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா தனியா சாப்பிட கூடாதுடா. இரு நான் போய் வசுவை எழுப்பி விட்டுட்டு வரேன்" என்று தங்கம் வசுவைப் பார்க்கச் சென்றார்.


அமரநாத், "நீங்க இரண்டு பேருமே களைப்புல அசந்து தூங்கிட்டிங்க. கொஞ்ச நேரம் நிம்மதியா கவலைகளை மறந்து தூங்கட்டும்னு நான் தான் சொன்னேன். அந்த பொண்ணும் பாவம் பா" என்று வருத்தமாய் மொழிய, "ஆமா அப்பா" என்றவன் அதற்கு மேல் பேசாது மௌனமானான்.


வசுமதியை தங்கம் எழுப்பிவிட எழுந்தவளுக்கு தங்கத்தைப் பார்த்து 'இவர் யார் புதிதாக?'என்று அதிர்ந்தாள். அதன் பிறகே நடந்தவை நினைவிற்கு வர அவளது முகம் சோகத்தை தத்தெடுத்தது.
அவள் பாவனைகளைப் பார்த்த தங்கம் அவளை நெருங்கி ஆதூரமாய் தலையை வருடிவிட்டார்.


தங்கம், "கடவுளோட திருவிளையாடல் எல்லாமே நன்மைக்கு தான்மா. இல்லைன்னா இவளோ அழகான, பொறுமையான மருமகளை நான் இழந்து இருப்பேன். எனக்கு இன்னொரு மகள் நீ. எதையும் யோசிக்காமல் நீ குளிச்சிட்டு வா" என்று நெற்றியில் இதழ்பதித்து அவளுக்கு தேவையான உடையையும், பொருட்களையும் வைத்து விட்டுச் சென்றார்.


தங்கத்தைப் பார்க்கும் போது அவளது தாய் பானுமதி வசுவிற்கு நினைவு வந்தது. அவரது அரவணைப்பு அவளுக்கு சிறிது ஆறுதல் அளிக்க தன்னுடைய அலங்காரங்களைக் கலைந்து குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து சாதாரண பச்சை, மஞ்சள் வர்ண ஷிபான் சேலை அணிந்தாள்.


கூந்தலை விரித்து சிறிய கிளிப் ஒன்றில் அடக்கியவள் தங்கம் வைத்து இருந்த மல்லிகைப் பூவை தலையில் வைத்துக் கொண்டாள். நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்கும் போது விஷ்ணுவின் முகம் அவளுக்கு கண்முன் தோன்றியது. அதே போல் யாதவ், வைஷ்ணவியின் திருமணக் கோலமும் தரிசனம் கொடுத்தது.


இறுகிய முகத்துடன் நெற்றியில் வட்ட சிகப்பு நிறப் பொட்டை வைத்து வளையல்கள், கொழுசு அணிந்து அறையில் இருந்து வெளியே வந்தாள். விஷ்ணு கொழுசின் சத்தத்தில் தலைத்தூக்காமல் கண்களை உயர்த்திப் பார்க்க நிஜமாகவே அசந்துவிட்டான் வசுமதியின் அழகில்.


அவனது உதடுகளோ 'மஞ்சக் காட்டு மைனா' என்று அவளது சேலையைப் பார்த்து முணுமுணுக்க, தோள் குழுக்கி அசட்டை செய்தவன் தங்கத்தை பாவமாய் பார்த்தான். ஏனெனில் பசியோ அவன் வயிற்றைக் கிள்ளியது.


தங்கம் அவனைப் பார்க்காமல் வசுமதியின் அழகைப் பார்த்தவர் அவளை நெருங்கி, "ரொம்ப அழகா இருக்கமா" என்று நெட்டி முறித்து, "உங்க இரண்டு பேருக்கும் இன்னிக்கு சுத்தி போடனும். ஊர் கண்ணே உங்க இரண்டு பேர் மேலே தான் இருந்து இருக்கும்" என்றார்.


அமரநாத் தன் மகன் அருகில் அமர்ந்து, "என்ன மகனே!! உங்க அம்மா மருமக கட்சிக்கு மாறிட்டா போல இருக்கே. நீ பசியில இருக்கன்னு அவளுக்கு ஞாபகமே இல்லை" என்று சீண்ட, தந்தையை முறைத்தவன், "அம்மா. பசிக்குது" என்று பல்லைக் கடித்தான்.


"ஒரு நிமிஷம் இருடா. பொறுமையே இல்லை" என்று கூறியவர் மருமகளை அவனுக்கு அருகில் அமர வைக்க தந்தையோ நமட்டுப் புன்னகையுடன் மகனை ஏறிட்டார். 'எல்லாம் என் நேரம்' என்று வாய்க்குள் முணுமுணுக்க மட்டுமே அவனால் முடிந்தது.


இருவரையும் அமர வைத்து காலையில் ஆட்களை வர வைத்து அவசரமாக தயாரித்த விருந்தை பரிமாற ஆரம்பித்தார் தங்கம். நால்வருமே அமைதியாகவே உட் கொண்டனர். ஏதோ ஒரு சங்கடம் நால்வரையும் பேசத் தடுத்தது. உணவை முடித்தவுடன் வசுமதி தங்கத்திற்கு உதவி செய்ய முனைய, "நீ புதுப் பொண்ணுடா. இதெல்லாம் செய்யாத. ஆளுங்க இருக்காங்க" என்று அமர வைத்தார்.


அவளும் வரவேற்பரையில் அமர்ந்தாலும் மௌனமே அவளுக்கு அங்கே துணையாய் இருந்தது. சிறிய வீட்டில் அவள் வாழ்ந்தாலும் தாய், தங்கையுடன் கலகலப்பாக இருந்தவளுக்கு பெரிய வீட்டில் உள்ள அமைதி தனிமையை உணர்த்தியது. அவள் முகம் சோகமாக வாட அமரநாத் அவளுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.


விஷ்ணு முக்கியமான ஒரு அழைப்பு வந்ததால் வெளியே சென்று பேசி முடித்து உள்ளே நுழைய வசுமதி தனது தந்தையுடன் பேசுவதைப் பார்த்தான். அவனும் அவள் அமர்ந்த சோஃபாவின் எதிர் ஓரத்தில் அமர்ந்து அவள் பேசுவதைக் கேட்டான்.


தங்கமும் வேலையை முடித்து அவர்களோடு கலந்துக் கொள்ள அவ்விடமே பேச்சிற்கு பஞ்சமில்லாத இடமாக மாறியது. விஷ்ணு அவளோடு பேசாவிடினும் அவள் பேச்சைக் கவனித்தவாறே மொபைல் நோண்ட ஆரம்பித்தான். இவ்வாறே நேரம் மாலையை நெருங்க அனைவருக்கும் வசுவே தேநீர் தயாரித்து வந்தாள்.


அவளது கைப்பக்குவம் மூவருக்கும் பிடித்து இருக்க விஷ்ணு, "காபி ரொம்ப நல்லா இருக்கு" என்று கூறி ஒரு சிறு புன்னகையை சிந்தி அங்கிருந்து எழுந்துச் சென்றான் தனது அறைக்கு. வசுமதி தன்னுடன் விஷ்ணு பேசியதை விழிவிரித்துப் பார்க்க இறுதியில் அவன் புன்னகைத்ததை அதிசயமாகப் பார்த்தாள்.


பெற்றோர் இருவருக்குமே பிள்ளைகளைப் பார்த்து இவர்களது வாழ்க்கை சரியாகிவிடும் என்று மனதில் சிறு நம்பிக்கை துளிர்ந்தது. தங்கம், "நீ வீட்டை இன்னும் சுத்தி பார்க்க இல்லையே வசு. வா போலாம்" என்று அவளை அழைத்து வீட்டின் வெளிப்புறத் தொடக்கம் வீட்டின் உள்ளே அனைத்து இடங்களையும் சுற்றிக் காட்டினார்.


இருவருக்கும் இடையில் மெல்லிய நட்பு உணர்வு இழையோட இருவருமே ஓரளவு நெருங்கி இருந்தனர். வசுவிற்கு தங்கத்தை அதிகளவு பிடித்தே இருந்தது. தங்கம், "எனக்கு காலையில கண்டிப்பா பூஜை பண்ணனும் வசு. அதே போல ஈவீனிங் விளக்கேத்தனும். அதை நீ பொறுப்பு எடுத்துக்கோ" என்று மருமகளைகப் பார்க்க அவளும் சந்தோஷமாக, "சரிங்க அத்தை" என்று புன்னகைத்தாள்.


இருள் சூழ ஆரம்பிக்க தங்கம் விளக்கேற்றி விட்டு மருமகளுக்கு அன்றாடம் தங்கள் வீட்டில் நடப்பவற்றை பேச்சோடு பேச்சாகக் கூற வசுமதியும் அதைப் புறக்கணிக்காமல் கேட்டுக் கொண்டாள். அவள் மனதில் யாதவ், வைஷூ இருவரும் தன்னை ஏமாற்றிய உணர்வு எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை.


அவள் தன்னை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டாள். அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு தங்கள் அறைகளுக்குச் செல்ள தங்கம் சூடு செய்த பாலை ஒரு கிளாசில் ஊற்றி வசுமதியிடம் கொடுத்தவர் வசுவின் கைகயை இறுகப் பற்றிக் கொண்டார்.


தங்கம், "உங்களுக்கு சாந்தி முகூர்த்த நாள் இன்னிக்கு குறிச்சு இருக்குமா. எனக்கு உங்க இரண்டு பேரை பத்தியும் தெரியும்டா. இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க நேரம் வேணூம். அதுக்கு நீங்க இரண்டு பேரும் ஒன்னா இருக்கனும்.


அதனால விஷ்ணு ரூமுக்குப் போ. என் பையன் நல்லவன் மா. சுருக்கமா சொல்லனும்னா அவன் ஒரு தயிர் சாதம். நீ தைரியமா போலாம்" என்று உரைக்க இறுதியாக தங்கம் கூறியதைக் கேட்டு வசுவின் இதழ்கள் புன்னகையைச் சிந்தின.


கலக்கத்துடன் இருந்தவளின் முகம் தெளிவுற்றதைப் பார்த்து தங்கத்திற்கும் நிம்மதியாக இருந்தது. அவளை விஷ்ணுவின் அறை வாசலில் விட்டு, அங்கிருந்து சென்றார். வசுமதி தயக்கத்துடன் விஷ்ணுவின் அறைக்குள் நுழைந்தாள்.


கதவைத் திறக்கும் சத்ததில் பல்கனியில் நின்று வானை வெறித்து நின்ற விஷ்ணு அறைக்குள் நுழைந்தான். வசுமதியைப் பார்த்தவன், "உள்ள வாங்க வசுமதி. பயப்படாமல் வாங்க" என்று மென்மையாய் அழைக்க அவளும் தலைக் குனிந்தவாறே வந்தாள்.


அவள் இதழ்களில் சிரிப்பை பார்த்தவன், "என்னாச்சு?" என்று வினவ, "ஒன்றுமில்லை" என்றூ தலை ஆட்டினாள். அதன் பிறகு அதைப் பற்றி அவனும் கேட்கவில்லை.


விஷ்ணு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தவன் எதிரே இருந்த கட்டிலில் அவளை அமருமாறு சைகை செய்ய வசுமதியும் அமர்ந்தாள். வசுமதி பால் கிளாசை அவனிடம் நீட்ட அதை எடுத்து மேசையில் வைத்தவன் விஷ்ணு, "நான் உங்க கிட்ட பேசனும். அதுக்கு முன்னாடி நீங்க ஏதாவது பேசனும்னா பேசலாம்" என்று அவள் பேச இடமளித்தான்.


அவன் தனக்காக இடமளித்தது வசுவின் மனதுக்கு சிறு நிம்மதியை வழங்க பெருமூச்சை எடுத்து, "சின்ன வயசுல இருந்தே எனக்கு அவரை பிடிக்கும். எப்போ காதலா மாறிச்சுன்னே தெரியாது. நான் மித்து மாமாவை உண்மையா காதலிச்சேன். அவரை கைப்பிடிக்கிற நாளுக்காக காத்து இருந்தேன்.


இரண்டு வீட்டுல ஒத்துகிட்டு நிச்சயம் நடந்தப்போ சாத்விக் அண்ணா வாழ்க்கையில மாமா விளையாடினதை என்னால ஏத்துக்க முடியல்லை. எங்க நிச்சயத்தை அப்புறமா பேசவே இல்லை. மாமாவை இடையில சந்திச்சாலும் என்னை வெளிப்படையாவே தவிர்த்தாரு.


மாமாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். முன்னாடி நல்லாவே பேசிவாரு. ஆனால் நிச்சயத்துக்கு அப்புறம் நடந்து கிட்டதை என்னால நம்ப முடியல்லை. என்னை பொருட்டாவே பார்க்க இல்லை. அப்புறமா கல்யாணம் பேச்சை ஆரம்பிச்சாங்க. அவர் கிட்ட எந்த மாற்றமும் இல்லை.


கேஸ் விஷயமா அலைஞ்சி திரியிராருன்னு அமைதியா இருந்தால் கல்யாண நேரம் என் கூடப் பிறந்தவளையே கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்ததைப் பார்த்ததும் நெஞ்சே வெடிச்சிருச்சு. இரண்டு பேரும் எனக்கு துரோகம் பண்ணுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று கூறும் போதே குரல் கமற கண்ணீர் வழிந்தோடியது.


"என் நிலமையை உங்களால புரிஞ்சிக்க முடியும்னு நினைக்கிறேன். உங்களை ஏத்துக்க எனக்கு டைம் தேவை" என்று நிறுத்த விஷ்ணு புன்னகையுடன், "அதே தான் நானும் சொல்லனும்னு நினைச்சேன். நான் உங்களை வைஃபா ஏத்துக்கிற நிலமையில இல்லை. எனக்கும் டைம் வேணூம். வேறெதுவும் கேட்காதிங்க" என்றான்.


அவளும் 'சரி' எனத் தலை அசைக்க விஷ்ணு, "நான் சோஃபாவுல தூங்குறேன். நீங்க பெட்ல தூங்குங்க" என்று தலையணை போர்வையை எடுத்து சோஃபாவில் வைக்க வசுமதி, "நான் சோஃபாவுல தூங்கட்டுமா?" என்று வினவினாள்.


"இல்லைங்க. நீங்க பெட்ல தூங்குங்க. நான் சோஃபாவுல தூங்குறேன்" என்று படுத்து தன் மேல் போர்வையைப் போர்த்திக் கொண்டு கண்கள் மூடி இடக்கையை மடித்து நெற்றியில் வைத்தான். வசு விளக்கை அணைக்கும் போது மேசையில் இருந்த பால் தென்பட அவனிடம் வந்தவள், "மேசையில பால் இருக்கு" என்றாள் மெல்லிய குரலில்.


"எனக்கு வேணாங்க. வேஸ்ட் பண்ணாமல் நீங்களே குடிங்க" என்று கண்களை மூடிக் கொள்ள வசுமதி ஒழுங்காக இரவு உணவை உண்ணாததால் பாலைக் குடித்து முடித்தவள் விளக்கை அணைத்துக் கட்டிலில் படுத்தாள். இருவரும் தனித்தனியாக இருந்தாலும் தூக்கத்தை பறிக் கொடுத்து சிந்தனை ஒருமித்து தங்கள் வாழ்வை எண்ணியவாறே இருந்தனர்.


ஒரு ஃபிளெட்டில் மாடி அறையில் மடிக் கணனியின் முன்னே அமர்ந்து இருந்தவன் ஒரு பெண்ணின் பல இடங்களில் இருந்த புகைப் படங்கள் ஒவ்வொன்றையுமே மேசையில் ஒவ்வொரு இடத்தில் வைத்து ஆராய்ந்தான்.


அவள் சகஜமாக பேசுவது, சிரிப்பது, உண்ணுவது என்ற புகைப்படங்கள் இருக்க, அது அவளுக்கு தெரியாத வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை நம்மால் தெரிந்துக் கொள்ள முடியும்.


அவன் ஒவ்வொரு புகைப்படத்தையும் உன்னிப்பாக கவனிக்க அவனின் மொபைல் ஒலியை எழுப்ப, தொடுதிரையில் "பாஸ் (Boss)" என்று விழ அவன் அழைப்பை ஏற்றான். பாஸ், "டார்கட்" என்று ஒரு வார்த்தைக் கூற, "ஆல் செட். சரியான டைமுக்கு வெயிட் பண்றோம்" என்க எதிர்புறம் "டன்" என்று கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டது.





####################


குடும்ப விஷயத்தோட இனி கேசையும் பார்க்கலாம். இந்த கேசை பார்த்த உடனே பொண்ணுங்களை கடத்தி விக்கிறதுன்னு நினைக்காதிங்க. இது வேற விஷயம். இது வரைக்கும் நான் பார்க்காத தேடித் தேடி கிடைச்ச ஒரு சப்ஜெக்ட்.


இன்னிக்கு நான் எடுத்த மையைக்கரு சம்பந்தமா நெட்ல தேடினப்போ எனக்கே தெரியாத நிறைய விஷயங்கள் தெரிஞ்சது. ஒன்னே ஒன்னு சொல்றேன். கெமிகல் கிரீம் பொண்ணுங்க, பசங்க யூஸ் பண்றதை குறைக்குறது ரொம்ப நல்லது. (நானும் தான்)


அதுக்கான காரணம் கதை ஓட்டத்துல புரியும். என்ட், கேஸ்ல உங்களுக்கு தெரியாத, விழிப்புணர்வு குறைஞ்ச நிறைய விஷயங்கள் உங்களை தேடி வருது. அது வரைக்கும் வெயிட் பண்ணுங்க.


என்னோட இந்த கதையில கொடுக்குற தகவல்கள் உண்மை. என்ட், கற்பனை சம்பவங்கள் இருக்கும்.



################



கருத்துக்களைப் பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24353



கண்சிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 10





யாதவ், கௌதம் இருவருமே ஒரு அறையில் அமர்ந்து தற்போது பெண்கள் காணாமல் சென்ற வழக்குகளை தீவிரமாக ஆராய்ந்துக் கொண்டு இருந்தனர். கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதைப் பற்றி மும்முரமாக பேசினர்.



யாதவ், "அந்த பொண்ணு இறந்த பிறகு நம்ம பொலிஸ் எடுத்த போடோஸ் இருக்காடா?" என்று வினவ, கௌதம், "ஆமா இரு என் லெப்டொப்ல இருக்கு" என்று எடுத்து அவற்றை யாதவிற்கு காண்பித்தான்.


அதில் இருந்த புகைப்படங்களில் அவளுடைய முகத்திலும், தலைக்கு அருகிலும் இரத்தம் அதிகமாக வழிந்து சென்று இருந்தது. எந்தவித வித்தியாசமும் துரும்பையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. "நாளைக்கு நாம போய் பி.எம் ரிபோர்ட்டை பார்த்துட்டு அந்த டாக்டரையும் மீட் பண்ணலாம்டா" என்றான் யாதவ் தீவிரமாக.


கௌதம், "அது மட்டுமில்லை மச்சி அந்த பொண்ணுக்கு டயரி எழுதுற பழக்கம் இருக்காம்டா. அந்த டயரியை நாங்க எங்கே தேடியும் காணோம். அது கிடைச்சால் நமக்கு ஏதாவது ஒரு குளூ கிடைக்க வாய்ப்பு இருக்கு" என்று யோசணையுடன் உரைக்க, "பொதுவா டீனேன்ஜ் கேர்ள்ஸ் டயரியை எழுதி மத்தவங்க கண்ணுல படக் கூடாதுன்னு மறைச்சி வைப்பாங்க. அதைப் போல தான் அவளும் பண்ணி இருப்பான்னு நினைக்கிறேன்" என்று தனக்குத் தோன்றியதைக் கூறினான்.


"இருக்கலாம்டா. அவ வீட்டுக்கு போய் மறுபடியும் பார்க்கலாம்" என்ற கௌதம் உடலை முறுக்கி கையை உயர்த்தி நெளிந்தவன், "இப்போ தூக்கம் வருது மச்சான். நான் தூங்குறேன். நீ எழுப்பி விடு" என்று கட்டிலில் தன் முழு உடலையும் நீட்டி படுத்துக் கொள்ள யாதவ் தீவிர சிந்தனையில் இருந்தான்.


அவனையோ நித்ராதேவி கோபம் கொண்டு தள்ளி வைத்ததில் உறக்கம் வராமல் இருளில் விட்டத்தை வெறித்தவாறே இருக்க சமையலறையின் விளக்கு ஒளிர்ந்து சத்தம் கேட்பதைப் பார்த்தவன் அறையில் இருந்து வெளியே வந்தான்.


வைஷ்ணவி இரவு உணவை ஒழுங்காக சாப்பிடாததால் பசி வயிற்றைக் கிள்ள உறக்கம் அவளை விட்டுத் தூரச் சென்றது. அதனால் சமையலறையில் சாப்பிட ஏதாவது கிடைக்கின்றதா என்று ஒவ்வொன்றாகத் துளாவும் சத்தத்தில் யாதவ் எழுந்து வந்தான்.


யாதவ், "இன்னும் தூங்காமல் என்ன பண்ற?" என்று பின்னிருந்து குரல் கொடுக்க திடுக்கிட்டு பயத்துடன் திரும்பினாள் வைஷூ. அவன் புருவம் இடுங்கி வைஷூவைப் பார்க்க, "அது....பசிக்குது. சாப்பிட ஏதாவது இருக்கான்னு பார்க்க வந்தேன்" என்றாள் மெல்லிய குரலில்.


சமையலறைக்குள் புகுந்து "தள்ளு" என்று அவளை தள்ளி நிற்க வைத்தவன் அவளுக்காக ஓம்லட் ஒன்றை செய்து கொடுத்து குளிர் சாதனப் பெட்டியில் இருந்து பாலை எடுத்து சூடு செய்து வழங்க அவனை வைஷூவோ விழிகள் விரியப் பார்த்தாள்.


"என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்க? பசிக்குதுன்னு சொன்னியே இப்போ சாப்பிடு" என்று கூறி தண்ணீரை எடுத்து குடிக்க ஆரம்பித்தான். அவள் சாப்பிட்டாலும் அவளுடைய பார்வை அடிக்கடி யாதவைத் தழுவிச் சென்றது. அதை அவனுமே கவனித்தான்.


அவள் சாப்பிட்டு முடித்து தட்டைக் கழுவ முயல, "நானே கழுவுறேன். நீ போய் தூங்கு" என்று அனுப்பி வைக்க அப்போதும் அதிசயத்தில் அவள் கண்கள் விரிந்தன்.


யாதவ், "என்ன பார்த்தால் அரக்கன் போல இருக்கா? நான் மனிஷன் தான். பசிக்கும் போது சாப்பாடு கொடுக்காமல் இருக்கிற அளவுக்கு கொடுமைகாரன் இல்லை. போய் தூங்குற வழிய பாரு. தேவையில்லாத ஆராய்ச்சிகளை பண்ணாமல்" என்றவனின் குரலில் இருந்த அதட்டலில் தனது அறைக்குள் சென்று முடங்கினாள்.


யாதவும் அவற்றைக் கழுவி வைத்து சமையலறையை ஒரு முறை சுத்தம் செய்து தனது அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்து உறக்கத்தை தழுவ முயற்சிக்க நித்திரா தேவியும் நட்புக்கரத்தைக் கோர்த்து தன்னுள் அவனை அடக்கிக் கொண்டாள்.


சூரியனும் பொற்கதிர்களை வெளி வீசி உலகத்திற்கு தன்னை அறிமுகம் செய்ய தான் அவன் முன்னே மறைந்து போய் நிற்கும் நிலையை எண்ணி கடுப்புடன் தன்னை முகில் கூட்டங்களுக்கு இடையில் மறைத்துக் கொண்டாள் நிலா அவள்.


விஷ்ணுவின் அறைக்குள் ஆதவனின் பொற்கரங்கள் அவனைத் தட்டி எழுப்ப கண்களைச் சுருக்கி போர்வையில் இருந்து தலையை வெளிநீட்டினான் விஷ்ணு. எழுந்து உடலை முறுக்கி வலப் புறம் திரும்ப கட்டிலில் அழகான ஓவியமாய் துயில் கொண்டு இருந்தாள் அவன் மனைவி வசுமதி.


தனக்கு நடந்த திருமணம் ஞாபகத்திற்கு வர தலையில் லேசாய் தட்டிக் கொண்டு சத்தம் எழுப்பாமல் துவாயையும், உடேயையும் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான். அவன் ஜொகிங் உடைக்கு மாறி வந்தவன் வசுமதியை எவ்வாறு எழுப்புவது என்று யோசணையுடன் அவள் முன்னே நின்றான்.


'தொட்டு எழுப்பவும் முடியாது. இப்போவே டைமாச்சு. என்ன பண்றது?' என்று யோசணையில் இருந்தவனுக்கு ஒரு ஐடியா தோன்ற தனது தனிப்பட்ட அறைக்குள் நுழைந்து சர்ஜிகல் சிசரை எடுத்து வந்தான்.


மெதுவாக அவள் தோளில் வைத்து சுரண்ட அதைத் தட்டிவிட்டு மறுபுறம் திரும்பி உறக்கத்தைத் தொடர, "வசுமதி" என்று பெயரை அழைத்தவாறே மறுபடியும் சுரண்டினான். அவனது நான்கு முறை முயற்சிக்குப் பின்னரே வசுமதி கண்களைத் திறக்க எதிரே சர்ஜிகல் சிசரை நீட்டியவாறு நின்ற விஷ்ணுவைப் பார்த்தவள் வாயில் கைவைத்து, "ஆஆஆ" என்று கத்தினாள்.


விஷ்ணு பதறி சோஃபாவின் மேல் ஏறிக் கொள்ள, கண்களை இறுக்க மூடியாவறு வசுமதி, "ஒரு பொண்ணை விருப்பமில்லாமல் கல்யாணம் பண்ணதுன்னு கொல்ல வருவிங்களா? ஐயோ ஐயோ கொலை" என்று கத்த ஆரம்பிக்க இவள் என்ன கூறுகிறாள் என்பதைப் புரியாமல் நின்றவன் அவளை நெருங்கி வாயைப் பொத்தினான் தன் கைகளால்.


"கொலை கொலை" என்று கத்தியவாறே வசுமதி திமிற அவனோ மீண்டும் கத்தி மானத்தை வாங்கிவிடுவாளோ என்றே கையால் வாயை இறுக மூட, அவளோ பற்களால் விரலைக் கடித்து வைத்தாள். கையை எடுத்து உதறி நொந்துப் போனான் விஷ்ணு.


வசுமதி மறுபடியும் கத்த எத்தணிக்க, "இப்போ எதுக்குங்க கத்துறிங்க?" என்று பரிதாபமாய் வினவ, "நீங்க என்னை கொல்ல முயற்சி பண்ணும் போது என்னை காப்பாத்த சொல்லி கத்தாமல் என்ன பண்ணுவாங்க?" என்று எகிறானாள். விஷ்ணு, "நான் எப்போ உங்களை கொல்ல முயற்சி பண்ணேன்?" என்று பாவமாய் வினவ, "இதோ இப்போ தான்" என்றாள்.


"இல்லைங்க. நீங்க கத்துறதுக்கு பயந்து வாயை மூடினேன். இது தப்பா?" என்று கேட்க, "கையில சிசரை வச்சு என்னை குத்த வர இல்லை?" என்று இடுப்பில் கைவைத்து கோபத்துடன் வினவ, "முருகா.. என்னை காப்பாத்து" என்று தலையில் கைவைத்து அமர்ந்துக் கொண்டான்.


"பார்த்திங்களா நீங்களே ஒத்துகிட்டு அமைதியாகிட்டிங்க இருங்க நான் பொலிசுக்கு போன் பண்றேன்" என்று மொபைலை எடுக்க முனைய, விஷ்ணு,"நான் சொல்றதை முதல்ல கேளுங்க" என்று அவளை பதில் பேச விடாமல் நடந்ததைக் கூறினான்.


"நான் நம்ப மாட்டேன்" என்று வசுமதி முறுக்கிக் கொள்ள, "அட போங்கங்க" என்று சலிப்பாய்க் கூறி பல்கனியில் இருந்த நாற்கலியில் அமர்ந்துக் கொண்டான்.


"அக்காளும் தங்கச்சியும் ஒரே மாதிரி இருக்காளுங்க. அவ என்னடான்னா நான் போலி டாக்டர்; ஹொஸ்பிடலை இழுத்து மூடனும்னு சொல்றா. இவ என்னடான்னா நான் கொலைகாரன்; பொலிசுக்கு பிடிச்சி கொடுக்கனும்னு சொல்றா. என்னால முடியல்லை. வாழ்க்கை பூரா இதுங்க கிட்ட மாட்டி என்ன ஆக போறேனோ" என்று விழிபிதுங்கி தனியாக அமர்ந்து புலம்பினான் அவ் ஆறடி ஆண்மகன்.


வசுமதி குளித்து வந்தவள் அவன் கூறுவதில் உண்மையை குளிக்கும் போதே யோசித்து உணர்ந்தவள் அவன் அமர்ந்த இடம் வந்தாள். அவனோ தீவிரமாக எதையோ சிந்ததித்தபடி இருக்க, "ஏங்க" என்று அழைக்க அவன் நிலையில் மாற்றம் இல்லை. வளையலை அசைத்து சத்தம் கொடுத்ததில் நினைவில் இருந்து கலைய, "சொல்லு வைஷூ" என்றான்.


அதில் இத்தனை நேரமாக இருந்த அவளுடைய மலர்ந்த முகம் அடுத்த நொடி வாடி இறுகிக் கொண்டது. தன் தவறை உணர்ந்த விஷ்ணு, "சொரி வசுமதி. நான்..." என்று அவன் கூற வருவதைக் கேட்காமல் அங்கிருந்து நகர்ந்து அறையில் இருந்து வெளியேறி விட்டாள்.


'உனக்கு சனி நாக்குல தான்டா' என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு கீழிறங்கினான். வைஷ்ணவி, யாதவ் இருவரையும் பற்றி வெகுநேரம் சிந்திக்க வைஷூவின் குறும்பும், சேட்டையும் ஞாபகத்திற்கு வர அதே நினைவில் வசுமதி பேசும் போது, 'வைஷூ' என்று கூறிவிட்டான்.


வசுமதி கீழே வந்தவள் சாமியறைக்கு சென்று விளக்கேற்றி சாமி கும்பிட அதற்கு முன்னேயே தங்கம் பூஜை செய்து முடித்திருந்தார். அனைவருக்கும் தங்கமே பிரசாதத்தை வழங்கினார். அனைவருக்கும் சேர்த்தே வசுமதி தேநீர் தயாரிக்க விஷ்ணு ஜொகிங் செல்ல தயாரானான்.


"இன்னிக்கு லேட்டா ஜொகிங் போற? டைமுக்கு வீட்டுக்கு வந்திருவியா விஷ்ணு? வசுவோட அப்பா, அம்மா இரண்டு பேரும் உங்களை மறு வீட்டுக்கு அழைச்சிட்டு போக வருவாங்க" என்று பிரசாதத்தை வழங்கியவாறே கேட்க, "டைமுக்கு வருவேன் அம்மா" என்று வெளியேறினான் விஷ்ணு.


விஷ்ணு ஜொகிங் சென்றதால் அவனை விடுத்து மற்றவர்களுக்கு தேநீரைத் தயாரித்தாள். மூவரும் அமர்ந்து கதை பேசியபடியே தேநீரைக் குடித்து முடிக்க விஷ்ணு வீட்டிற்குள் நுழைந்தான். மூவரும் அமர்ந்து தேநீர் பருகுவதைப் பார்த்தவன் சிறு புன்னகையை அவர்களிடம் வீசிவிட்டு தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.


குளித்து வந்தவன் வைஷ்ணவியிடம் இருந்து அழைப்பு வந்திருக்கின்றதா என்று மொபைலின் தொடுதிரையைப் பார்க்க எவ்வித அழைப்புமே வந்திருக்கவில்லை. 'மடையா! உனக்கு யாதவ் கூடவும் பேசலாமே. அவள் அவன் கூட தானே இருப்பா?' என்று மூளை தலையில் ஓங்கிக் கொட்டிக் கூற அசடு வழிந்து யாதவிற்கு அழைத்தான்.


யாதவு சில நொடிகளுக்குப் பிறகே அழைப்பை ஏற்று, "நானே உனக்கு போன் பண்ணனும்னு நினைச்சேன். நீயே பண்ணிட்ட. உன்னை இமிடியட்டா மீட் பண்ணனும்" என்று உரைக்க, "ஏதாவது புரொப்ளமாடா?" என்று வினவினான் விஷ்ணு.


யாதவ், "புரொப்ளம் தான். எப்போ மீட் பண்ணலாம்?" என்று வினவ, "இப்போவே நான் உன் வீட்டுக்கு வரேன்" என அவசரமாய் பதில் அளித்தான். "இன்னிக்கு மறுவீட்டு போக இல்லையா?" என்று கேள்வித் தொடுக்க, "ஆமால்ல? அவங்க கூட போக முன்னாடி நான் வரேன். இப்போ வந்தால் சீக்கிரமா பேசி முடிக்கலாம். வேற எதுவும் சொல்லாத" என்று அழைப்பைத் துண்டித்தான்.


சேர்ட், ஜீன்ஸ் அணிந்து சேர்ட்டை இன் செய்து இருந்தான். முழங்கை வரையில் சேர்ட்டை மடித்தவன் தலையைக் கோதிவிட்டு இடது கையில் பிரேன்டட் கைக்கடிகாரத்தை அணிந்தவாறு கீழிறங்கி வர, அமரநாத் யோசணையாக, "எங்க விஷ்ணு போற?" என்றார்.


விஷ்ணு, "அப்பா எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு சீக்கிரம் வரேன். நான் வந்த அப்புறமாவே மறுவீட்டுக்கு போலாம். பிளீஸ் புரிஞ்சிக்கோங்க" என்று சாவியை எடுக்க, தங்கம், "சரிடா பார்த்து பத்துரமா போயிட்டு வா" என்று அனுப்பி வைத்தார்.


அமரநாத், "என்னமா சம்பந்தி வீட்டுல இருந்து வரும் போது அவன் வீட்டுல இருக்காட்டி சங்கடமா போயிருமே" என்று கவலையாகக் கூற, "அவன் முக்கியமா ஏதோ வேலைக்கு போறாங்க. இல்லைன்னா அவன் இதை காலையிலேயே சொல்லி இருப்பான்" என்றார் தங்கம்.


அமரநாத் சங்கடத்துடன் மருமகளைப் பார்க்க, "அவரு போயிட்டு வரட்டும் மாமா. நான் அப்பா, அம்மாவை சமாளிச்சிக்குறேன். சீக்கிரம் வரேன்னு சொன்னாரு. அதனால பயப்பட தேவையில்லை" என்று புன்னகைத்தாள். அப் புன்னகை அவர்களையும் தொற்றிக் கொண்டது.


தனது அறைக்குச் சென்று மொபைலை எடுக்கச் செல்லும் போது விஷ்ணுவும் அவனது மொபைலை கட்டிலில் வைத்துச் சென்று விட்டதைப் பார்த்து அவனது மொபைலை எடுக்க யாதவிடம் இருந்து அழைப்பு வந்தது.


'எடுக்கலாமா? வேண்டாமா?' என்ற யோசணையின் முடிவில் எடுக்கலாம் என்று அழைப்பை ஏற்க, எதிர்புறம், "டேய் நான் குவாடசுக்கு வர பத்து நிமஷமாகும். நவி மட்டும் தனியா இருப்பா. பார்த்துக்கோ" என்று அழைப்பைத் துண்டித்தான்.


விஷ்ணு அவசரமாகச் சென்றது வைஷ்ணவி, யாதவை சந்திக்க என்பதில் அவளுக்கு கோபம் வந்தாலும் யாதவின் வைஷூவிற்கான செல்லப் பெயர் 'நவி' என்று அழைத்து எரிகின்ற நெருப்பில் எண்ணெயை அவன் அறியாமல் ஊற்றிவிட்டான் யாத்வ்.


'என் பெற்றோரைக் காக்க வைத்து விட்டு தனக்கு துரோகம் செய்தவர்களைக் காணச் சென்றுவிட்டானே!' என்று அவள் மனம் குமுறியது.


'இது வரையில் யாதவ் செல்லப் பெயர் வைத்தோ அல்லது பிரத்யோகப் பெயர் வைத்தோ அழைக்காமல் அனைவரையும் போலவே வசு என்றே அழைத்தான். ஆனால் வைஷூவை அவன் நவி என்று அழைத்ததில் இன்னும் கோபம் எரிமலையாய் கொதித்தது வைஷூவின் மேல். அந்த அளவிற்கு அவனை மயக்கி விட்டாளே!' என.


இருந்தும் உள்ளுக்குள் தன் கோபக் கனலை மறைத்தவள் காலை உணவை சமைக்க தங்கத்திற்கு உதவி செய்தாள். அவள் முகத்தில் தெரிந்த மாற்றத்தில் ஏதோ ஒன்று நடந்துவிட்டது என்பதைப் புரிந்துக் கொண்டார் அத்தாய்.


யாதவ் அதிகாலையில் எழுந்தவன் குளித்து கௌதமையும் எழுப்பி விட்டான். கௌதம் குளித்து வரும் வரையில் நால்வருக்கும் காபி தயாரித்து பெண்களுக்கு காபியை பிளாஸ்கில் ஊற்றி வைத்து காலை உணவை தயாரிக்க ஆரம்பிக்க, கௌதமும் குளித்து வந்தான்.


கௌதம், "பார்ரா நம்ம ஏ.ஐ.ஜி சேர் குடும்பஸ்தன் ஆகிட்டாரு" என்று கிண்டலடிக்க, யாதவ் அவனைப் பார்த்த பார்வையில் கப்சிப் என வாயை மூடிக் கொண்டான். சட்னியை யாதவ் அரைக்க, கௌதமிடம் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, கடுகு, காய்ந்த மிளகாய் என்பவற்றை இட்டு தாளிக்கக் கூறினான்.


அவற்றை எடுத்து வைத்து அவசரமாக தோசையை சுட கௌதம், "நீ உன் பொன்டாட்டிக்கு செய்றதுல நியாயம் இருக்கு. நான் எதுக்குடா செய்யனும்?" என்று தோசையை ஊற்றியாவாறு கடுப்பாகக் கேட்க, யாதவ் அவனைப் பார்த்து, "அப்போ காவ்யாக்காக எதையும் பண்ண மாட்டியா?" என்று வினவினான்.


"பொன்டாட்டின்னு வந்தால் அவ தான் எனக்கு வேலை செய்யனுமே தவிர நான் அவளுக்கு செய்ய மாட்டேன். உன்னை மாதிரி இருக்காமல் அத்தனை வேலையையும் அவளையே செய்ய வைப்பேன்" என்று வில்லன் போல் பேசி சிரிக்க, "அப்போ அவளை நீ கல்யாணம் பண்றது வேலை செய்ய வைக்கவா?" என்று வினவினான்.


யாதவின் உள் குத்து அறியாமல் அவனும், "அதுல உனக்கு என்ன டவுட்டு?" என்று கர்வத்துடன் வினவ, "காவ்யா அவன் வாயால உண்மையை கேட்டுட்ட. இதுக்கு மேலவும் இவனை கல்யாணம் பண்ண ஆசைப்படுறியா?" என்று ஒரு சிரிப்புடன் கூறி அவனை போட்டுக் கொடுத்து விட்டு மெதுவாக அங்கிருந்நு கழன்றுக் கொண்டான் யாதவ்.


கௌதம் கடுப்புடன் பேசும் போதே காவ்யா அங்கே வந்து விட்டாள் காலை உணவை தயாரிக்க. வைஷ்ணவி ஆழந்த உறக்கத்தில் இருப்பதைப் பார்த்தவள் அவளைத் தொல்லை செய்யாது வர கௌதமின் பேச்சில் காளியின் அவதாரம் எடுத்து இருந்தாள்.


கௌதம் திடுக்கிட்டுத் திரும்ம சூலம் இல்லாத காளியாய் காவ்யா அவதாரம் எடுத்து இருக்க, "பத்த வச்சிட்டியே பரட்ட" என்ற மைன்ட் வொயிஸ் கேட்டது. "கவிமா" என்று பாசமாய் அழைக்க, "எடு துடைப்பக் கட்டைய!. *************************" என்று நல்ல வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய கேட்கவும் முடியாமல் பேசவும் முடியாமல் தத்தளித்தான் கௌதம்.


வெகுநேரத்திற்குப் பின் காவ்யா வேகமாக மூச்செடுக்க கௌதமோ காதில் இரத்தம் வழியாத குறையாக கண்ணீர் வழிய நின்று இருந்தான். "கவிமா" என்று அழைக்க காவ்யா தனது அர்ச்சணையை மீண்டும் ஆரம்பிக்க, "விடு ஜூட்" என்று அங்கிருந்து யாதவின் அறைக்குச் சென்று தாழ்ப்பாள் இட்டான்.


காவ்யா, "மவனே என் கிட்ட திரும்பி வருவல்ல? அப்போ இருக்குடி உனக்கு. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ. உனக்கெல்லாம் பர்ஸ்ட் நைட்டே கிடையாதுடா. கல்யாணம் பண்ணி என் மனசு மாருற வரைக்கும் பிரம்மச்சாரியாவே வாழு" என்று கடுப்புடன் மொழிந்து விட்டு அங்கிருந்தூ நகர கௌதமோ விழிவிரிய நின்றான்.


யாதவ் அவன் நிலையைப் பார்த்து கேவலமான ஒரு சிரிப்பை சிந்தி விட்டு காக்கி உடை அணிந்து வெளியே வந்தவன் காவ்யாவிடம், "காபி ரெடிமா. சமைச்சிட்டேன். இரண்டு பேரும் சாப்பிடுங்க. எங்களுக்கு முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வருவோம்" என்று உணவு மேசையில் அமர்ந்தான்.


காவ்யா, "அண்ணா நான் இன்னிக்கு கோயமுத்தூர் போகனும். வேலை இருக்கு. சாப்பிட்டு நான் போயிருவேன். வைஷூ மட்டும் தனியா இருப்பாளே" என்று நிறுத்தி அவனைப் பார்க்க, "நீ போக முன்னாடி நான் வர பார்க்குறேன்மா. வர முடியல்லைன்னா அவளை கதவை அடைச்சிட்டு பத்துரமா இருக்க சொல்லு. பயப்பட தேவையில்லை. இங்கே பாதுகாப்புக்கு ஆள் இருப்பாங்க" என்றான் சாப்பிட்டுக் கொண்டே.


காவ்யா, "சரி அண்ணா. நேத்து நைட் லேட்டா தூங்கி இருப்பா போல. அதான் இன்னும் எந்திரிக்க இல்லை" என்று வைஷூவிற்கு ஆதரவாகப் பேச, யாதவ், இதழ்விரியா புன்னகையை ஒன்றை வீசி விட்டு எழ கௌதமும் தயாராகி வந்தான். அவன் வெளியே செல்லும் போது எதுவும் பேசக் கூடாது என்பதற்காக அமைதியாய் இருந்தவள் கனல் கக்கும் விழிகளால் அவனை முறைத்தாள்.


அவனோ நான் சாப்பிட்டே பல வருடங்களாகிவிட்டன என்ற ரீதியில் தட்டில் இருந்து பார்வையை விலக்காமல் சாப்பிட்டு முடித்து யாதவின் பின்னால் காவ்யாவிற்கு பயந்து ஓடிவிட்டான். இருவருமே நேற்று இரவு ஒருவனை தூக்குமாறு கூறியிருக்க அவனை தனியாக அடைத்து வைத்திருப்பதாக தகவல் வரவும் அவனைப் பார்க்கவே தற்போது சென்றனர்...






கருத்துக்களைப் பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24526


கணசிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 11




கௌதம், யாதவ் இருவருமே நேற்று மாலை செய்தியைக் கசியவிட்டவனைப் பார்க்கச் சென்றனர். யாதவின் மனதில் கோபக் கணல் மூண்டது. அத்தனை தூரம் கூறியும் அதைப் பொருட்படுத்தாது செய்தியை வெளியாக்கி இருக்கிறானே என்று. கௌதமிற்கோ செய்தியை வெளியாக்கியவன் மீது பரிதாபம் தோன்றியது.


யாதவின் கோபத்தைப் பற்றி நன்கு அறிந்தவன் கௌதம். அவனது கட்டளைகளை மீறி செயற்படுபவனை நிச்சயமாக தண்டனை கொடுக்காமல் விடமாட்டான். அதுவும் இது அவனுக்கு முக்கியமான ஒரு விடயம். அதன் செய்தியை வெளியிட்டு இருப்பான் என்றால் விடவே மாட்டான் என்பது உறுதி.


அதனால் பிடிப்பட்டவனது நிலையை எண்ணி பரிதாபத்துடன் யாதவுடன் சென்றான். இருவருமே அவர்களது அன்டர் கிரவுன்ட் ஓபரேஷனின் போது இரகசிய சந்திப்புகளையும், ஆட்களைக் கடத்தி செய்பவற்றைக் தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பெறவும் ஒதுக்கப்பட்ட இடமாகும்.


அவ்விடத்தைப் பற்றி ஐ.ஜி, யாதவ், கௌதமன், அவவர்களுடைய குழு உறுப்பினர்கள் மட்டுமே அறிந்து இருந்தனர். தனது வாகனத்தை புதர்களுக்கு இடையில் சென்று மறைத்தவன் அவர்களுடைய பாழடைந்த இடத்திற்கு வந்தான்.


நாற்காலியில் அவன் அமர வைக்கப்பட்டு, கயிறுகளால் கட்டப்பட்டு, மயங்கிய நிலையில் இருந்தான் அச்செய்தியாளன். யாதவ் அவன் முன்னே வந்தவன் அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து தண்ணீரை முகத்தில் ஊற்ற, மெதுவாகக் கண்களைத் திறந்தான்.


தன் முன்னே யாதவ் நிற்பதைப் பார்த்வனுக்கு அடிவயிற்றில் இருந்து தொண்டைக் குழிவரை பயபந்து உருள, முதுகுத் தண்டு சில்லிட்டு, வெளிறிய முகத்துடன் யாதவை ஏறிட்டான். "நான் அவளோ சொல்லியும் நீ எந்த தைரியத்துல நியூசை வெளியிட்ட?" என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் வினவ, "அது வந்து சேர்....." என்று நா குழற தடுமாறினான்.


யாதவ் பதில் அளிக்காது அழுத்தமாய் பார்க்க பயத்தில் வெடவெடத்தவாறே, "செனலோட டி.ஆர்.பியிற்காக இதை பண்ண சொன்னாங்க" என்று எச்சிலை விழுங்கானான். "யாரு?" என்ற யாதவின் ஒற்றைக் கேள்வியிலேயே அவனது ஆக்ரோஷம் தென்பட, "மினிஸ்டர் பையன்" என்று மெதுவான குரலில் கூறினான்.


கௌதம், "அவன் அடங்க மாட்டான் டா. நம்ம ஸ்டைல்ல கவனிச்சால் தான் நல்லா இருக்கும். இல்லை வசு, வைஷூ இரண்டு பேருமே கஷ்டபடுவாங்க" என்று கைமுஷ்டியை இறுக்கி கோபத்தை அடக்கினான். யாதவ், "அவனை போற வழியில பார்த்துட்டு போலாம். இவனுக்கு பொலிசோட உள்குத்தை சொல்லி கொடுங்க" என்று ஒரு முறை அவனை அழுத்தமாய் பார்த்து வெளியேறினான்.


உள்குத்து என்பது வெளியில் எவ்வித காயமும் இல்லாமல் உடலின் அகப்புறம் முழுவதும் காயத்தை ஏற்படுத்தும் ஒரு வகை அடி. அதில் யாதவும் அவனது அணி உறுப்பினர்களும் சிறப்பு வாய்ந்தவர்கள்.


யாதவ் அப்போதே விஷ்ணுவிற்கு அழைத்து தான் வரத் தாமதமாகும் என்று கூற அதை வசுமதி கேட்டு இருந்தாள். யாதவும், கௌதமும் தடாலடியாக மினிஸ்டரின் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்களைத் தடுக்கும் தைரியம் அங்கே யாரிற்கும் இருக்கவில்லை.


யாதவ் தோரணையாக வரவேற்பரையில் வீற்றிருந்த சோஃபாவில் அமர்ந்து மினிஸ்டர் மற்றும் அவரது மகனின் வருகைக்காக காத்து இருக்க இவர்களின் வருகையை அறிந்து அவர்களும் அவசரமாக அங்கே வந்தனர்.


யாதவின் இறுகிய முகத்தில் தெரிந்த உணர்ச்சியற்ற தன்மையும், அவனது மௌனமும் அவர்களுக்கு கிலியை ஏற்படுத்த கௌதமின் ரௌத்திரமான பார்வை மினிஸ்டரின் மகனை நடுநடுங்க வைத்தது.


யாதவ், "நான் பொலிஸ் டிரெஸ் போட்டு இருக்கேன் நல்லவன்னு நினைச்சால் அது உங்க தப்பு. தேவைப்பட்டால் நானே கொலை பண்ணிட்டு நானே என் டீமை வச்சு கொலை கேசை கொண்டு போவேன். அந்த அளவுக்கு ஈவு இரக்கம் என் கிட்ட இல்லை. உங்க மகன் என் வழியில குறுக்க வரான். அவன் உயிரோட இருக்கனும்னா ஒழுங்கா நடந்துக்க சொல்லுங்க" என்று கூறி எழுந்துக் கொண்டான்.


மினிஸ்டர், "ஆஃப்ட்ரோல் ஒரு பொலிஸ் என்னை மிரட்டுற?" என்று தைரியத்தை வரவழைத்து எகிற, "அதே பொலிஸ் தான் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குறோம். உங்க வண்டியில போம் வச்சு உங்களை கொன்னு எதிர்கட்சி மேலே பழியை தூக்கி போட எனக்கு எவளோ நேரமாகும்?" என்றான் எகத்தாளமாய்.


அவன் கூற்றில் தந்தை மகன் இருவருக்கும் வியர்வைப் பூக்கள் பூக்க, கௌதம், "வாய் உள்ள பழிக்கு பேச கூடாது. பேச முன்னாடி யோசிக்கனும். அதுவும் தனக்கு முன்னாடி யார் இருக்கான்னு பார்த்துட்டு வார்த்தையை விடனும். தேவைப்பட்டால் உங்க மகன் கஞ்சா கேசுல உள்ள போயிடுவான்;வித் ஸ்ட்ரோங் எவிடன்ஸ். உங்க மகன் வாழ்க்கை உங்க கையில" என்று நக்கல் தொனிக்கும் குரலில் நவிழ்ந்தான்.


யாதவ் மினிஸ்டரின் மகனை நெருங்கி அவன் கன்னத்தில் தட்டியவன், "சின்ன பையனா இருக்க. என் டீரீட்மன்ட்டை உன் உடம்பு தாங்காது. பார்த்து நடக்கனும் சின்ன பையா புரிஞ்சிதா? நோ நோ புரியனும்" என்று அழுத்தம் திருத்தமாய் ஏற்றி இறக்கிய தொனியில் மொழிந்து அவர்களிடம் இருந்து விடைப் பெற்றான்.


தந்தையும் மகனும் ஒருவரை பார்க்க இருவரின் கண்களில் மிரட்சி அப்பாட்டமாய் தெரிந்தது. தந்தை, "என்னை மீறி நீ எதையும் பண்ணாத. இல்லை இவனுங்க சொன்னது போல ஏதாவது பண்ணிடுவானுங்க. ஜாக்கிரதை" என்று எச்சரித்து விட்டு மேலும் சில அர்ச்சணைகளை வழங்கியே அவ்விடம் விட்டு நகர அவமானமாய் உணர்ந்தான் அக் கயவன் நவீன்.


விஷ்ணு அவசரமாய் மொபைலையும் வைத்து விட்டு யாதவின் வீட்டை நோக்கிச் சென்றான். அவன் செல்லும் முன் காவ்யா கோயமுத்தூர் செல்லத் தயாராகி வைஷூவை எழுப்பி இருக்க அவளும் அவசரமாக குளித்து வந்தாள். காவ்யா அவளுக்கு ஆயிரம் பத்திரங்களையும் அறிவுரைகளையும் வழங்கி விட்டு டெக்சியில் பேரூந்து நிலையத்தை நோக்கிச் சென்றாள்.


வைஷூவும் காலை உணவை சாப்பிட அமர விஷ்ணு மணியடிக்க வைஷூ சென்று கதவைத் திறந்தாள். அங்கே விஷ்ணு நிற்பதைப் பார்த்தவள், தயக்கத்துடன் உள்ளே அழைத்தாள். இருவரும் வரவேற்பரையில் அமர்ந்தாலும் அவ்விடத்தை ஒருவித சங்கடம் சூழ்ந்து இருந்தது.


வைஷூ, 'அவனை தமக்கையின் கணவனாகப் பார்ப்பதா? இல்லை தன் தோழன் போலி டாக்டராகப் பார்ப்பதா? அவன் தன் திருமணத்தைப் பற்றி என்ன கூறுவான்? தன்னை நம்புவானா?' என பல கேள்விகள் அவள் சிந்தையில் ஓடின.


அவற்றைப் படித்ததைப் போன்று விஷ்ணு, "எனக்கு உன் மேலவும் யாதவ் மேலவும் நம்பிக்கை இருக்கு. நான் உனக்கு எப்போவுமே போலி டாக்டர் தான். நான் மாறவும் மாட்டேன். நீ மாறவும் கூடாது" என்று அவள் எண்ணத்திற்கு பதில்களைப் புட்டு புட்டு வைத்தான்.


அவள் கண்கள் கலங்கி, "கொஞ்ச நாள் பழகின உனக்கே நம்பிக்கை இருக்கு. என் கூட பிறந்த அக்காவுக்கும் , பெத்தவங்களுக்கும், வளர்த்தவங்களுக்கும் ஏன் நம்பிக்கை இல்லாமல் போச்சு?" என்று குரல் கமற வினவ, "விதியை மாத்த முடியாது. உன் அக்கா கல்யாணம் மணமேடை வர வந்து நின்னு போச்சிங்குற வருத்தம் அவங்க கண்ணை மறைக்குது வைஷூ. இதை மறந்துரு" என்றான் பொறுமையாக.


அவள் கண்களைத் துடைத்து, "சாப்பிட்டியா போலி டாக்டர்?" என்று வினவ, "இல்லை. வா சாப்பிடலாம். எனக்கு கம்பனி கொடு" என்று விஷ்ணு அவளை அழைத்துச் சென்று தனக்கருகில் உணவு மேசையில் அமர வைத்தவன், இருவருக்கும் சேர்த்தே தட்டை எடுத்து உணவைப் பரிமாறினான்.


இருவரும் கதை அளந்தவாறே சாப்பிட அங்கே யாதவும் வந்து சேர்ந்தான். விஷ்ணு, "வாடா சாப்பிடுறியா? சும்மா சொல்ல கூடாது ரொம்ப நல்லாவே சமைச்சி இருக்க. கைவசம் ஒரு தொழிழும் இருக்கு. பிற்காலத்துலயும் உதவும்" என்று சீண்ட அவன் முதுகில் 'சுளீர்' என்று அடித்தவன், "மூடிட்டு சாப்பிடு" என்றான் யாதவ்.


வைஷூ யாதவின் முகத்தைத் தயங்கித் தயங்கிப் பார்க்க யாதவ் அதைக் கவனித்து, "என்ன விஷயம் நவி?" என்று வினவ, "கௌதம் அண்ணா வர இல்லையா?" என்றாள். "அவன் காவ்யாவைப் பார்க்க பஸ் ஸ்டேன்டுக்கு போயிட்டான். அவளை அனுப்பி வச்சிட்டு நேரடியா ஸ்டேஷனுக்கு போயிருவான்" என்று நவிழ்ந்தான் யாதவ்.


விஷ்ணு, வைஷூ சாப்பிட்டு முடிக்க யாதவ் ஆப்பிளை வெட்டி சாப்பிட்டான். வைஷூவே சுத்தம் செய்வதாகக் கூறி இருவரையும் அனுப்பி வைத்தாள். யாதவ், விஷ்ணு இருவருமே வரவேற்பரையில் அமர்ந்து இருக்க விஷ்ணு, "உங்க கல்யாணத்துக்குப் பின்னாடி ஒரு ரீசன் இருக்குன்னு எனக்கு தெரியும். என்னாச்சுடா?" என்றான் அமர்த்தலாக.


யாதவும் தங்கள் திருமணத்தன்று நடந்த அனைத்தையுமே கூற விஷ்ணு விக்கித்து நின்றான். "வைஷூ உண்மையை சொன்னாலும் அந்த நேரம் அந்த உண்மைக்கு மதிப்பு இருந்து இருக்காது. நாங்க கல்யாணம் பண்ணது மட்டும் தான் அப்போவும் தெரிஞ்சு இருக்கும். அதான் அவளை நான் பேச விடாமல் நான் பண்ணதா சொன்னேன்" என்று சற்று கரகரத்த குரலில் முடித்தான்.


விஷ்ணு, "இவளோ விஷயங்கள் நடந்து இருக்கும்னு நான் எதிர்ப்பார்க்க இல்லைடா. நீ சொல்றதும் வாஸ்தவம் தான். பின்னாடி தேவைப்படும் போது உண்மையை சொல்லலாம். வைஷூவுக்கு ஒரே ஆறுதல் இப்போ நீ மட்டும் தான். உன் முரட்டு குணத்தை அவ கிட்ட காட்டாத" என்று அறிவுரை செய்தான்.


யாதவ், "அதை நான் பார்த்துக்குறேன். நீ வசுமதியையும் பத்துரமா பார்த்துக்கோ. நாம எப்போவும் எச்சரிக்கையா இருக்கிறது நமக்கு சேஃப்" என்று உரைக்க, "சரிடா. நீ கவலைப் படாத" என்று வேறு சில விடயங்களைப் பேசி முடிக்க வைஷூவும் வேலையை முடித்து வந்தாள்.


அவளிடம் விஷ்ணு, "கடவுளோட ஒவ்வொரு தீர்ப்புமே நம்ம வாழ்க்கைக்கு நல்லது தான். சோ, சந்தோஷமா இரு. ஒரு நாள் உன்னை எல்லோருமே புரிஞ்சிப்பாங்க. அந்த நாளுக்காக காத்துட்டு இரு. சீக்கிரமா வரும். இன்னிக்கு உங்க அப்பா, அம்மா வீட்டுக்கு வருவாங்க.


நான் அவங்களை காக்க வைக்குறது நல்லா இருக்காது. நான் போயிட்டு இன்னொரு நாள் வரேன். மனசை போட்டு குழப்பிக்காமல் இரு. நான் எப்போவும் போலி டாக்டர்ங்குறதை மறக்காத" என்று அன்பாய் வார்த்தைகளை மொழிந்து யாதவ், வைஷூ இருவரிடமும் இருந்து விடைப் பெற்றான்.


யாதவ், "கேஸ் விஷயமா நான் வெளியே போகனும் நவி. தனியா இருக்க முடியுமா?" என்று வினவ, "ஒகே என்னால முடியும். நான் பார்த்துக்குறேன். நீங்க நேத்து கொண்டு வந்த கொடுத்த புக்சை அடுக்கனும். படிக்க சிலது இருக்கு" என்று விடை அளித்தாள்.


"பயமா இருப்பியா? சமாளிச்சுக்க முடியுமா?" என்று மீண்டும் வினவ, "முடியும்" என்று உறுதியாக ஒற்றைச் சொல்லில் பதில் அளித்தாள். யாதவ், "வெளியில ஆளுங்க இருப்பாங்க. அதனால பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. இருந்தாலும் பார்த்துக்கோ" என அறைக்குள் நுழைந்தான்.


சிறிது நேரத்தில் வெளியே வந்தவன், "என் பழைய மொபைலை கொடுக்குறேன். இப்போதைக்கு அதை யூஸ் பண்ணு. இன்னிக்கு ஈவீனிங் உன் மொபைலை எடுத்துட்டு வரேன். என்ன தேவையா இருந்தாலும் கூப்பிடு" என்று மொபைலை வழங்கிக் கூற, "சரி" என்றாள் வைஷூ.


அவன் குவாடசில் இருந்து வெளியேற வைஷூ தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள். அங்கே இருந்த இன்னொரு அறையில் தனது புத்தகளை அடிக்கி தான் படிக்க ஏதுவாக வசதியாக அவ்வறையை மாற்றிக் கொண்டாள்.


விஷ்ணு இங்கிருந்து கிளம்பிய உடன் தன் வீட்டை அடைய அங்கே வசுமதியின் பெற்றோர்கள் வந்திருந்தனர். அவர்களோடு இவனது பெற்றோர் கதையளக்க வசுமதி தன் பெற்றோரை உபசரித்துக் கொண்டு இருந்தாள். உள்ளே நுழைந்தவன் ஒரு புன்னகையைச் சிந்தி சோஃபாவின் ஓர் இடத்தில் அமர்ந்தான்.


விஷ்ணு, "சொரி அத்தை. சொரி மாமா. ஒரு முக்கியமான வேலையா வெளியே போய் இருந்தேன். அதான் வர லேட் ஆயிருச்சு" என்று உரைக்க, "மித்து மாமாவையும், வைஷூவையும் பார்க்க போனேன்னு சொல்லுங்க" என்றாள் வசுமதி இடக்காக.


அவன் புருவம் சுருக்கி வசுமதியைப் பார்க்க, "உங்க மொபைலை வீட்டுலேயே வச்சிட்டு போயிட்டிங்க. அப்போ மித்து மாமா போன் பண்ணி வைஷூ தனியா இருப்பான்னு உங்க கிட்ட சொல்றதா நினைச்சு என் கிட்ட சொன்னாரு" என்று உணர்சிகளற்ற குரலில் கூற, "ஆமா அவங்களை தான் பார்க்க போனேன். இதுல எந்த தப்பும் இல்லேயே" என்று அசட்டையாக தோள் உலுக்கினான்.


சந்திரசேகர்,"சொல்றேன்னு தப்பா நினைச்சுகாதிங்க மாப்பிள்ளை. அவளையும், அவனையும் தலை முழுகிட்டோம். நீங்க உறவை புதுப்பிக்க போறது நல்லதா பட இல்லை" என்று வெறுப்பு மிகுந்த குரலில் மொழிந்தார். "மாமா உங்களுக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லைங்குறது எவளோ உண்மையோ, அதே போல யாதவ் என் ஃபிரன்டுங்குறதும் உண்மை" என்று பொறுமையாககக் கூறினான்.


தன் நெடிய மூச்சை இழுத்து விட்டவன், "என் ஃபிரன்டையும் அவனோட வைஃப் கூட பேச வேண்டாம்னு யாருக்கும் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. இந்த வீட்டு மருமகளா என் ஃபிரன்சையும் அவங்க மனைவிகளையும் மதிக்க வேண்டியது உங்க பொண்ணோட கடமை. வைஷ்ணவி யாதவோட வைஃப்.


என்ட் அவளும் என் ஃபர்ஸ்ட் கேர்ள் பெஸ்டி. யாதவும், வைவஷூவும் என் ஃபிரென்டுங்குற முறையில அவங்க இங்க வருவாங்க. நான் அங்கே போவேன். வசுமதியும் அதே போல பார்த்தால் பிரச்சனை இல்லையே. நீங்களே சொல்லிட்டிங்களே அவங்க யாரோ நீங்க யாரோன்னு. இதுக்கு மேலே இதைப் பத்தி யாரும் என் கூட ஆர்கியூ பண்ண வர கூடாது.


தெட்ஸ் இட். என்ட் வசுமதி என் மனைவிங்கிறதை நான் மறக்கவும் மாட்டேன்; எந்த இடத்துலேயும் விட்டுக் கொடுக்கவும் மாட்டேன். நல்ல நேரம் அதுவுமா இந்த பிரச்சனையை இங்கே முடிச்சிடலாம். பிளீஸ்" என்ற அழுத்தம் திருத்தமாகக் கூறி விஷ்ணு எழுந்து அறைக்குள் சென்று ஆடை மாற்றி வந்தான்.


அவனது அழுத்தமான பேச்சை மீற எவருக்கும் தைரியமில்லை. அது மட்டும் இல்லாது அவன் கூறியதிலும் ஞாயம் இருந்ததால் அதை அத்தோடு விட்டு விட்டனர். வசுமதி மறுத்துப் பேசாது அமைதியாய் இருந்தாள். வசுமதி முன்பே தயாராக இருந்ததால் விஷ்ணு வந்தவுடன் தன் பெற்றோர்களோடு புகுந்த வீட்டினரிடம் விடைப் பெற்றுச் சென்றாள்.


வசுமதியின் வீட்டிற்குச் சென்றவுடன் சில உறவினர்கள் மணமக்களை வரவேற்றனர். அதன் பின் சடங்குகள் சிலவும் நடந்தேறின. ஆண்களோடு விஷ்ணுவும் வளவளக்க ஆரம்பிக்க, எளிமையாகப் பழகும் விஷ்ணுவை அனைவருக்குமே பிடித்துப் போனது.


விருந்தும் மணக்க மணக்க பரிமாற்றப்பட கூச்சமின்றி நன்றாக சாப்பிட்டு முடித்தான் விஷ்ணு. மாலையை நெருங்க உறவினர்களும் விடைப் பெற்றுச் செல்ல ஆரம்பித்தனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அங்கே சாத்விக் -சனா, கார்த்திக் -அபி ஜோடிகள் வருகைத் தர வசுமதியின் பெற்றோர்கள் அவர்களை வரவேற்றனர்.


அவர்களோடு நடந்து முடிந்ததைப் பற்றி பேசாமல் வேறு விடயங்களைப் பற்றிப் பேசி திசைத் திருப்ப நன்றாகவே அவர்களுக்கு நேரம் கழிந்தது. பானுமதி அனைவருக்குமே காபி, ஸ்நெக்சை தயாரிக்கச் செல்ல பெண்கள் அவருக்கு உதவ சென்றனர். ஆண்களோ கதையில் தங்கள் உலகில் மூழ்கி இருந்தனர்.


யாதவ் வீட்டிலிருந்து வெளியறி தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணை போஸ் மோட்டம் செய்த டாக்டரை சந்திப்பதற்காகச் சென்றான். அவரிடம் பேச அவர் கூறியதவாது, "அந்த பொண்ணு தற்கொலை பண்ணது போல தான் எல்லாமே இருக்கு. ஆனால் ஒரே ஒரு விஷயம் இன்னிக்கு வரைக்கும் இடிக்கிது.


எல்லா ரிபோர்ட்சும் நோர்மலா இருந்தாலும் அந்த பொண்ணோட ஹோர்மோன்ஸ் இம்பெலன்சா அவ இறக்கும் போது இருந்து இருக்கு. உதாரணமாக அதிரனில் (adrinal hormone), அதிகளவு சுரந்து இருக்கு. அது பொதுவா ஆபத்துக்களின் போது நரம்புகளை அதீத வேகத்துல செயல்பட வைக்குற ஓர்மோன்.


அந்த பொண்ணு தனக்குள்ள எதுக்கோ போராடி இருக்கு. மூளையோட ஒரு பகுதி கட்டுபடுத்த இன்னொரு மூளையோட பகுதி தப்பிச்சிருன்னு அதிரனிலை சுரக்க வைச்சிருக்குன்னு நினைக்கிறேன். பிரஷர் இறக்க முன்னாடி அதிகமாவும் இறக்கும் போது சாதாரணமாவும் இருந்து இருக்கு. ஒரே மர்மமா இருக்கு.


ஒன்னும் புரியல்லை சேர். சாக முன்னாடி அதிகளவு டிப்ரஸ்டாகி இருக்கான்னு தெரியிது. எதுக்காகன்னு தெரியல்லை" என்று அவரும் தனக்குத் தெரிந்தவற்றைக் கூற அவரிடம் நன்றி கூறி விடைப் பெற்றவன் நேரடியாக தனது அலுவலகத்திற்குச் சென்றான்.


தனது அறைக்கு கௌதமை மடிக் கணனியோடு உடனே வருமாறு அழைத்தான். அவன் வந்ததும், "எனக்கு அந்த பொண்ணு இறந்த போன போது இருந்த போடோசை அனுப்பு. என்ட் அவ சூசைட் பண்ண கொஞ்ச நேரம் முன்னாடி கோலேஜ்ல இருக்கிற சி.சி.டி.வியில மாட்டி இருக்காளா? அந்த புடேஜசை அவசரமா காட்டு" என்றான்.


கௌதமும் அவசரம் புரிந்து சி.சி.டிவி புடேஜைக் காண்பிக்க, அதில் அப் பெண் நிதானமாக நடப்பதும் சில இடங்களில் தலை உலுக்குவதும் அதன் பிறகு நிதானமாக நடப்பது போன்றும் இருந்தது. அவளுடைய வித்தியாசமான நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால் மாத்திரமே கண்டுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.


மேலோட்டமாக பார்க்கும் போது அது தெரியவில்லை. நிதானமாக இருக்கும் போது முகம் நிர்மூலமாக இருக்க, தலையை உலுக்கும் போது அவள் முகத்தில் இயலாமை போன்றதொரு பாவனை வந்து செல்வதையும் நுணுக்கமாக அவதானித்ததில் கண்டு கொண்டான் யாதவ்.


அதன் பிறகு கௌதமிடமும் டாக்டர் கூறியதைக் கூறி அவன் புடேஜில் பார்த்தவற்றை காண்பிக்க, கௌதம், "ஆமாடா. வித்தியாசமா இந்த பொண்ணு பிகேவ் பண்றா" என்று அதிர்ந்தான். ஒரு முறைக்கு மூன்று முறை யாதவைப் போலவே அவதானித்தான்.


யாதவ், "நாம பொதுவா இதைப் போல ரியெக்ஷன்சை நமளை யாராது கட்டுப்படுத்தும் போது கொடுப்போம். இல்லை எங்களால எதுவும் பண்ண முடியல்லைங்குற ஒரு சந்தர்ப்பம் வரும் போது கொடுப்போம். அந்த ரியெக்ஷனுக்குள்ள ஒரு இயலாமை இருக்கும்" என்று கண்களை இறுக மூட ஒரு சிரித்த வெகுளியான முகம் அவன் கண்ணுக்குள் தோன்ற கண்களைப் பட்டென்று திறந்தான்.


கௌதம், "அப்போ அவளை யாரோ கட்டுப்படுத்துறாங்க? இல்லை தன்னால ஒரு விஷயத்தை பண்ண முடியல்லைங்குற விரக்தி தான் இதுன்னு சொல்றியா?" என எதிர் கேள்வி எழுப்பினான்.


யாதவ் தலையை ஒரு முறை உலுக்கி கேசத்தைக் கோதியவாறு, "இதுல விரக்தி இருந்தால் அவ முகத்துல ஒரே ரியெக்ஷன் தான் இருந்து இருக்கும். ஆனால் அவளோட ரியெகஷன் மாறுது. சோ அவ தனக்குள்ள போராடி இருக்கா. அப்படின்னா அவளை யாரோ கட்டுப்படுத்த முயற்சி பண்ணி இருக்காங்க" என்றான் உறுதியான குரலில்.


"ஒருத்தரை எப்படிடா இன்னொருத்தரால கட்டுப்படுத்த முடியும்? என்ட் அவ பக்கத்துல யாருமே இல்லை" என்று கௌதம் புரியாமல் குழம்ப, "டெக்னொலஜி வளர்ந்திருச்சி கௌதம். எனக்கும் உறுதியா சொல்ல முடியல்லை. ஆனால் நான் சொன்னது தான் நடந்து இருக்கு" என்றான்.


கௌதம், "ஏதோ ஒரு பெரிய விஷயம் இதுக்கு பின்னாடி இருக்கிறது போல தோணுதுடா. எதைப் பண்ணாலும் பார்த்து பண்ணனும். அவசரப்படாமல் நிதானத்தோடவும், விவேகமாவும் செயல்படனும்" என்று உரைக்க யாதவ், "ஆமாடா. பெரிசா நாம எதிர்பார்க்காதது ஒன்னு நமளுக்காக காத்துட்டு இருக்குன்னு என் உள்ளுணர்வு சொல்லுது" என்றான் தீவிரமான குரலில்.


"விடுடா எவளவோ பார்த்துட்டோம். இதை பார்க்க மாட்டோமா?" என்று கௌதம் கண்சிமிட்ட யாதவ் இதழ் விரியா புன்னகையைச் சிந்தினான். அவர்கள் எதிர்பாராத அதிர்ச்கள் நிறைந்த தகவல்களையும், பல சமூக சீர்கேட்டாளர்களையும் வெட்ட வெளிச்சமாக்கும் வழக்கே இது என்பதை அறியாது இருந்தனர்.


இவ்வழக்கில் முக்கியமானது ஒரு இடத்தில் பொலிஸார் மற்றும் தீயவர்களால் தேடப்படும் ஒரு நபராக வைஷ்ணவி இருப்பாள் என்று யாதவ் கனவிலும் நினைத்து இருக்கமாட்டான்.


விதி அதன் விளையாட்டை ஆரம்பித்து வெகுநாட்களாகி விட்டன என்பதையும் யாரும் அறியவில்லை. விதியின் கைகளில் நாம் அனைவருமே பகடைக் காய்களே!!


அபி,சனா, சாத்விக், கார்த்திக் நால்வருமே வசுமதியின் குடும்பத்தினரிடம் விடைப் பெற்று யாதவின் குவாடசை நோக்கிச் சென்றனர்.


நகுலனின் வீட்டில் உள்ளவர்கள் மனமுடைந்து இரவு உணவை முடித்துக் கொண்டு தத்தமது அறைகளில் முடங்கி இருக்க நகுலனின் அறையில் அஞ்சலி கட்டிலில் சாய்ந்தும் நகுலன் தீவிரமாக ஏதோ மொபைலை நோண்டியவாறும் இருந்தான்.


அஞ்சலி, "என்ன பண்றிங்க?" என்று வினவ, "உன் டிரீட்மன்டுக்கு சென்னையில ஒரு புது ஹொஸ்பிடல் திறந்து இருக்காங்க. லகஷ்மி கருதரிப்பு மையம்னு. ஃபொரினில் இருந்து ஸ்பெஷல் டாக்டர்ஸ் மூலமா தான் டிரீட்மன்ட் கொடுக்குறாங்களாம்.


அதான் அதை பத்தி டீடெய்ல்ஸ் தேடுறேன். நமக்குன்னு ஒரு குழந்தை. அதுல நீ நான் நம்ம குழந்தைன்னு மூனு பேரும் சந்தோஷமா வாழனும். அழகான குட்டி குருவிக் கூடு போல" என்று கண்களில் கனவுகள் மின்னக் கூற அவனையே வெறித்தாள் அஞ்சலி.


அவனுடைய கனவுகள் துகள்களாக மாறும் நாள் நெருங்குவதை அவனுக்கு யார் சொல்வது? அவனுடைய குழந்தையை ஈன்றெடுக்க மனைவி என்கிற ஸ்தானத்திற்கு வருவதற்காக அவளும்(???) அவர்கள் வாழ்வில் நுழைய இருக்கும் நாளும் நெருங்கி வருவதை வெள்ளை உள்ளம் கொண்டவன் தாங்குவானா?




############


சொரி ஃபோர் த லேட் யூ.டி. நிறைய பேர் இன்பொக்சுல வந்து விசாரிச்சிங்க தேங்கியூ. நாளைக்கு அடுத்த யூ.டி வரும்.



###########



கருத்துக்களைப் பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24573


கண்சிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 12




இருள் சூழ்ந்த அவ் வேளையில் வைஷ்ணவி புத்தகத்தை விரித்து படிக்க மணி அடிக்கும் அரவம் அவளுடைய காதை எட்டியது. புத்தகத்தை மூடியவாறு, "இப்போ யாரு வந்திருப்பா? அயர்ன் மேன் வர லேட்டாகும்னு சொன்னானே" என்று உதடுகள் முணுமுணுக்க கால்களோ தானாய் கதவை நோக்கி நடந்தன.


"யாரு?" என கதவை ஒட்டியவாறு கேட்க, "ஆங்... உங்க ஆயா. கதவை திறடி முதல்ல" என அபியின் குரல் கடுப்புடன் வெளியே கேட்க அவசரமாக கதவைத் திறந்தாள். அங்கே கார்த்திக், சாத்விக், அபி, சனா நால்வரையும் பார்த்து அதிர்ந்து நிற்க, சனா, "எங்களை உள்ள கூப்பிடுற ஐடியா இருக்கா?" என்றாள் நக்கலாக.


நன்றாக விழித்துக் கொண்டவள், "வாங்க வாங்க" என்று உள்ளே அழைத்துச் செல்ல அவள் தோற்றத்தில் இருந்த மாற்றமே மகாலட்சுமியாய் அவளைக் காட்டியது நால்வருக்கும். எப்போதும் போல் சுடிதார் அணிந்து கழுத்தில் தங்கத்தாலி தொங்க நெற்றி வகுட்டில் யாதவின் மனைவி என்பதற்காக குங்குமம் வைத்து இருந்தாள்.


நெற்றியில் சிறிது குங்குமம், சிறிய வட்ட பொட்டு, கூந்தலில் சூடி இருந்த மல்லிகை என்று இயற்கை அலங்காரத்தோடு சுமங்கலியாய் அவர்கள் முன் நின்றாள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மறந்து போனவளாக நால்வரையுமே வெறித்தாள்.


'தன்னைப் பற்றி இவர்களும் தவறாக நினைத்து இருப்பார்களோ?' என்ற எண்ணம் மேலோங்கி இருக்க நால்வரும் இவளையே பார்ப்பது அவளுக்கு தெரியவில்லை. யாதவிற்கு இவர்கள் குவாடசிற்குள் நுழைந்த உடனேயே வாச்மேனினால் தகவல் சென்று இருக்க அவனும் இவர்களுக்காக சிற்றுண்டியை வாங்கி வந்தான்.


யாதவ் நேரடியாய் உள்ளே நுழைய வைஷூ ஏதோ தீவிர சிந்தையில் இருப்பதும், மற்ற நால்வருமே அவளைப் பார்ப்பதைக் கண்டவனின் இதழ்கள் புன்னகையை சிந்த, "நவி" என்று அழைத்தான். அதில் நால்வரும் யாதவைப் பார்க்க அப்போதும் வைஷூ தன்னிலையில் இருந்து மாறவில்லை.


மீண்டும், "நவி" என்று அழுத்தமாய் அழைக்க சட்டென்று சுயநினைவு அடைந்தாள் வைஷ்ணவி. அங்கே யாதவ் நிற்பதைப் பார்த்தவள் மானசீகமாக தனக்கே கொட்டு வைத்து அசடு வழியும் முகத்துடன் வரவேற்பரையில் அமர்ந்திருக்கும் நால்வரையும் பார்த்தாள்.


அவளது கையில் தான் வாங்கி வந்த சிற்றுண்டிப் பொதியை வழங்கியவன், "காபி போட்டு எடுத்து வா" என்று கூறி அனுப்பி வைக்க தலையை ஆட்டி சமையலறைக்குள் நுழைந்தாள். சனா ஆச்சரியமாக நடந்தவற்றைப் பார்த்து, "அவ நோர்மலா உங்க கூட பேசுவாளா? உங்க பேர் சொன்னாலே பத்தடி தூரம் போயிருவாளே" என்றாள்.


யாதவ் சிறு சிரிப்புடன், "இதே கேள்வி உனக்கும் உன் புருஷனுக்கும் ஆரம்பத்துல பொருந்திச்சான்னு கேட்டு பாரேன்" என்று சாத்விக்கைச் சீண்ட அவனோ யாதவை கனல் கக்கும் விழிகளுடன் முறைத்தான். அதை அசட்டை செய்தவன் சனாவைப் பார்க்க, "பயம் இருந்தது அண்ணா. ஆனால்...." என முடிக்கத் தெரியாமல் தடுமாற சாத்விக் அவளுக்கு உதவிக்கு வந்தான்.


சாத்விக், "அவக்கு என் மேலே இனம் தெரியாத ஒரு நம்பிக்கை இருந்தது" என்று கர்வமாய் மொழிய யாதவ் சிரிப்பு மாறாமல், "அதே பதில் எங்களுக்கும் பொருந்தும்" என்றான் அழுத்தமாக. மற்றவர்கள் புருவம் சுருக்கி அவனைப் பார்க்க, "அவளுக்கு என் மேலே இருக்கிற பயத்தோட அளவுக்கே நம்பிக்கையும் இருக்கு" என்றவனின் குரலிலும் பெருமை பொங்கியதோ??


மற்றவர்களின் முகத்திலும் இவனது பதிலில் புன்னகை ஓடி வந்து ஓட்டிக் கொள்ள காபியோட வந்த வைஷூவோ அதைக் கேட்டு கண் சிமிட்டாமல் அவனையே பார்த்தாள். தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து காபியை வழங்கி ஒரு ஓரமாகச் சென்று சங்கடத்துடன் நின்றுக் கொண்டாள்.


கார்த்திக், "நீ அங்கே தனியா போய் நிற்க தேவையில்லைமா. எங்க கூட உட்காரு" என்று அவள் சங்கடத்தைப் போக்குவதற்காக் கூற மௌனமாக யாதவிற்கு அருகில் இடம் விட்டே அமர யாதவின் விரிந்த இதழ்கள் மேலும் விரிந்தன.


"அண்ணா நாங்க வைஷூ வீட்டுக்கு போயிட்டு தான் வந்தோம். உங்க இரண்டு பேர் மேலே இருக்கிற கோபம் குறையவே இல்லை. ஆனால் நீங்க கண்டிப்பா துரோகம் பண்ணி இருக்க மாட்டிங்க. வைஷூவும் அந்த மாதிரி பொண்ணு இல்லை" என்று நிறுத்தினாள் சனா.


மீண்டும் தொடர்ந்தவள், "அன்னிக்கு பேசாமல் எதுக்கு இப்போ பேசுறன்னு நீங்க நினைக்கலாம். அன்னிக்கு நான் ஷொக்ல இருந்து வெளிவரவே முடியல்லை. உங்களை பார்த்தது முதல் அதிர்ச்சின்னா, வீட்டு ஆளுங்க பேசின பேச்சு இரண்டாவது அதிர்ச்சி, கடைசில வைஷூவை பேச விடாமல் நீங்க சொன்னது இன்னும் அதிர்ச்சி அண்ணா. பேச நா வரவே இல்லை" என்று வருத்தத்துடன் முடித்தாள்.


சாத்விக், "நீ எனக்கு எதிரி தான் மித்ரன். உன் மேலே கோபம், ஆத்திரம் இரண்டுமே இருக்கு. ஆனால் சொந்த அப்பாவை பழி வாங்குறதுக்காக ஒரு பொண்ணை மணமேடையில் விட்டு போற அளவுக்கு நீ கெட்டவன் இல்லை. சோ, கல்யாண விஷயத்துல ஏதோ நடந்து இருக்குன்னு எங்களுக்கு புரியிது" என்றான்.


யாதவ், "உண்மை தான். எங்க கல்யாணத்தை நாங்களே எதிர்ப்பார்க்க இல்லை" எனக் கூறி பெருமூச்சுவிட வைஷ்ணவி பொங்கி வழியத் தயாராகி இருக்கும் கண்ணீரை அடக்கி தொண்டையை சரி செய்தவள், "நான் சொல்றேன் என்ன நடந்ததுன்னு" என நடந்தவற்றைக் கூறினாள். இதைக் கேட்டவர்கள் அதிர்ச்சியுற்றனர்.


அபி, "இந்த பிரச்சனை இவளோ பெரிசாகும்னு எதிர்பார்க்க இல்லை. கடவுளே மித்து அண்ணா அங்கே வரமால் இருந்தால் உன் நிலமை?" என்று நடுங்க அனைவருக்குமே அதே எண்ணமாக இருந்தது. கார்த்திக், "இவளோ நடந்து இருக்கு, அதைப் பத்தி கேட்காமல் என்ன பேச்செல்லாம் உன் அக்கா பேசினா? இப்போ அவ மேலே கொலை வெறி வருது" என்றான் கோபத்துடன்.


சனா, "வசு அண்ணி மட்டுமில்லை. அத்தனை பேருமே வைஷூவை தப்பா நினைச்சிட்டாங்க. எல்லாத்துக்குமே காரணம்....." என்று அவள் முடிக்கும் முன், "நடந்து முடிஞ்சதைப் பத்தி பேச வேணாம் சனா. என் விதி இப்படி இருக்கு. ஒரு நாள் எல்லாம் சரியாகும் அப்போ பார்த்துக்கலாம்" என்று கூறி அதை முடிக்க அவளை பரிதாபத்துடன் பார்த்தனர் நால்வரும்.


அதன் பின் கதையளக்க வைஷூவும், யாதவும் இன்று இரவு உணவை எடுத்த பிறகே வீட்டிற்குச் செல்ல வேண்டும் என அன்புக் கட்டளையை விதிக்க அவர்களும் மறுக்க முடியாமல் ஏற்றுக் கொண்டனர். பெண்கள் மூவரும் அடுக்களையை இராஜ்யமாக்கி வளவளக்க ஆண்கள் மூவரும் வரவேற்பரையில் அமர்ந்து மௌனமாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பாகும் டி.டுவென்டி மெச்சை பார்த்தனர்.


கல்லூரி நாட்களின் நினைவுகள் மூவருக்கும் அலைமோத யாதவின் கண்களுக்குள் "மித்து வாடா" என்ற குரலும், மென்மையான சிரித்த முகமும், ஏதோ சில நினைவுகளும் கண்களுக்குள் தோன்ற கைமுஷ்டியை இறுக்கியவாறே பட்டென்று எழுந்து வெளியே சென்றான்.


"உனக்கு பொறுமையே இல்லாமல் போச்சே. எல்லாத்துலேயும் அவசரம், காதலிக்கிறதுல அவசரம், சாகுறதுல அவசரம், என்னை விட்டு போறதுல அவசரம். கடைசியா நீ பேசினது என் காதுக்குள்ள கேட்டுட்டே இருக்கு" என்று மனதுக்குள் குமுறிக் கொண்டு இருந்தான் யாதவ்.


'எனக்கு கை வலிக்குதுடா. உன்னை விட்டு போறேன்டா. தாங்க முடியல்லை மித்து என்னால. கை, மனசு இரண்டுமே வலிக்குதுடா' என்ற குரல் காதில் எதிரொலிக்க, "நோ நோ நோ" என்று கர்ஜித்து கைமுஷ்டியை மடிக்கி சுவற்றில் குத்தினான்.


அவனுடைய கத்தலில் உள்ளே இருந்த அனைவரும் வெளியே ஓடி வர கையில் இருந்து இரத்தம் வழிய கண்கள் கோவைப் பழமென சிவந்து, முகம் இறுகி உடல் விறைக்க நின்று இருந்தான். மற்றவர்கள் மருண்ட பார்வையுடன் அவனைப் பார்க்க சாத்விக்கிடம் வந்தவன் அவனது சர்ட் கோலரைப் பற்றிப் பிடித்தான்.


"உன்னால தான்டா. உன்னால மட்டும் தான் நான் இந்த நிலமையில இருக்கேன். அன்னிக்கு மட்டும் நீ தடுக்க இல்லைன்னா அவளை கொன்னு போட்டு இருப்பேன். அவ இப்போ சந்தோஷமா வெளியில நாடமாடிட்டு இருப்பா. மறுபடியும் அவ என் கண்ணுல மாட்டுற அன்னிக்கு என் கையில தான் அவளுக்கு சாவு" என்று உறுமி அவனைத் தள்ளி விட்டு அறைக்குள் நுழைந்தான்.


மற்றவர்கள் ஸ்தம்பித்து நின்று இருக்க சாத்விக்கின் புருவங்களோ இடுங்கின. ஆரம்பத்தில் அவனுக்கும் கோபம் எகிறினாலும் யாதவின் கண்களில் தெரிந்த வலியும், கோபமும், ஏமாற்றமும், ஆக்ரோஷம் கலந்த ஆத்திரமும் அவனை யோசிக்க வைத்தது.


யாதவ் எப்போதுமே தன்னிலை இழக்க மாட்டான் என்பதை கார்த்திக், சாத்விக் இருவரும் அறிந்தே இருந்தாலும், இன்று நடந்துக் கொண்ட முறையில் அவன் முற்றிலுமாக தன்னை மறந்தே இருந்தான் என்பதையும௲ கண்டு கொண்டனர்.


வைஷ்ணவி, "அண்ணா சொரி. அவங்க இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்க இல்லை" என கலங்கிய குரலில் மொழிய, "விடுடா. அவன் ஏதோ டென்ஷன்ல பண்ணிட்டான்" என்று சாத்விக் தனது சேர்ட்டை இழுத்து விட்டு யோசணையுடன் உள்ளே சென்று அமர்ந்தான்.


சாத்விக்கின் கோபத்தைப் பற்றி மற்றவர்கள் அறிந்து இருந்ததால் தற்போது அவன் அமைதியாய் இருப்பதைப் பார்த்து வியந்து அவன் பின்னால் செல்ல வைஷூ யாதவைப் பற்றி சிந்தித்தே உள்ளே சென்றாள்.


யாதவ் சிறிது நேரத்தில் தன்னை சமன்படுத்தி வெளியே வந்தவன் சாத்விக்கை உக்கிரமாக முறைத்துக் கொண்டே அமர்ந்தான். பெண்கள் மூவரும் சமைத்து முடித்து இருக்க அனைவரும் சாப்பிட ஒன்றாக அமர்ந்தனர். சூழ்நிலையை சகஜமாக்க அபி பேச ஆரம்பிக்க அதன் பின் அனைவருமே வளவளத்தனர்.


சாத்விக், யாதவ் இருவரும் கலந்துக் கொள்ளாவிடினும் அவர்களின் இறுக்கம் சற்று தளர்ந்தே இருந்தது. அதன் பின் நேரம் கடக்க நால்வரும் யாதவ், வைஷ்ணவி ஜோடியிடம் இருந்து விடைப் பெற்று தங்கள் வீட்டிற்குச் சென்றனர். யாதவ் வரவேற்பரையில் தலையைப் பிடித்தவாறு அமர வைஷூ சென்று தைலத்தை எடுத்து வந்தாள்.


அவனிடம் அதை நீட்ட, "அங்க வச்சிட்டுப் போ நவி. அப்புறமா பூசிக்கிறேன்" என்று சாய்ந்துக் கொள்ள வைஷூ என்ன நினைத்தாளோ அவனை நெருங்கி தைலத்தை அவன் நெற்றியில் பூசி விட்டு நீவினாள். யாதவோ அவளது செய்கையை நமட்டுப் புன்னகையுடன் வியப்பாகப் பார்த்தான்.


தன் பெயரைக் கூறினாளே அவ்விடத்தை விட்டு ஓடும் பயந்த பிள்ளைப் பூச்சி இவள். இன்று தைரியமாக நெற்றியை நீவி விடுகிறாளே என்று ஆச்சர்யத்துடன் பார்த்தான். இவர்கள் இங்கே இவ்வாறு இருக்க விஷ்ணுவின் மேல் அதீத கோபத்தில் இருந்தாள் வசுமதி.


விஷ்ணு, வசுமதியின் வீட்டில் மற்ற நால்வரும் சென்ற பின் வசுமதியின் அறைக்குச் சென்றான். அங்கே இருந்த கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவனுக்கு இன்று காலையில் யாதவ் கூறிய அனைத்துமே ஞாபகத்திற்கு வந்தது. யோசணையுமே அவற்றைச் சுற்றியே பறந்து திரிந்தது.


விஷ்ணுவை சாப்பிட அழைப்பதற்காக வசுமதில் அறைக்குள் நுழைய கையில் மொபைலை சுழற்றியபடி சுவரை வெறிப்பதைப் பார்த்தவள், "சாப்பிட வாங்க" என்க அவனோ அதைக் கவனிக்கும் நிலையில் இல்லை. மேலும் இரு முறை அழைத்தப் பிறகும் அவன் நிலையில் மாற்றம் இல்லை.


விஷ்ணுவின் அருகில் நெருங்கிய வசுமதி அவனுடைய தோளை உலுக்கி இரண்டி அவசரமாக பின்னகரந்துக் கொண்டாள். (அவனுக்கு தொட்டு பேசினது தெரிய கூடாதாம்) அவளுடைய உலுக்களில் தன்னிலையடைந்தவன், "என்ன வேணும் வசுமதி?" என்றான்.


"டினர் ரெடி சாப்பிட வாங்க" என்று முன் செல்ல அவனும் அவளைத் தொடர்ந்து சென்றான். இரவு உணவை பானுமதி பரிமாற சந்திரசேகர், வசுமதி, விஷ்ணு மூவருமே சாப்பிட்டனர். அதிக பேச்சும் இல்லாமல், மௌனமும் இல்லாத இடைப்பட்ட நிலையிலேயே சாப்பிட்டு முடித்தனர்.


வசுமதி தாயிற்கு உதவி செய்ய முனைய அவரோ வசுமதியை அறைக்கு அனுப்பி வைத்தார். வசுமதியும் தாயின் வற்புறுத்தலில் எரிச்சலுடன் அறைக்குள் நுழைய விஷ்ணு, "நான் உங்க கிட்ட பேசனும் வசுமதி. பேசலாமா?" என்று வினவ அவளும் மறுப்பேதும் தெரிவிக்காமல் சரி என்றாள்.


"நான் காலையில வைஷூ, யாதவ் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன். அதே ஞாபகத்துல உங்களை வைஷூன்னு கூப்பிட்டுட்டேன். ஐம் சொரி. உங்களை ஹேர்ட் பண்ணனுங்குறது என் நோக்கம் இல்லை" என்று அவளுடைய முகம் பார்க்க வசுமதி அவர்களின் பெயரை எடுத்தவுடன் எரிச்சலின் உச்சகட்டத்தில் இருந்து அவன் முடித்தவுடன் கத்தவிட்டாள்.


"அவங்க உங்க ஃபிரென்டு மட்டும் தான்.எனக்கு இல்லை. சும்மா சும்மா அவங்களை பத்தி என் கிட்ட பேசிட்டு இருக்காதிங்க. இரிடேடிங்கா இருக்கு. உங்களால முடியல்லைன்னா என்னை விட்ருங்க. நான் நிம்மதியாவாவது இருப்பேன்" என்று என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வார்த்தைகளைக் கொட்டி விட்டாள்.


அவனுடைய மன்னிப்பு இவளின் செவியை அடைந்தாலும் மூளையை அடையாதது அதோ பரிதாபம். விஷ்ணுவிற்கு அவளது பேச்சி முகம் கறுத்துப் போனது. ஆனாலும் ஒரு வைத்தியராக அவளுடைய நிலையை உணர்ந்ததால் இறுகிய முகத்துடன் பதில் பேசாமல் மௌனம் காத்தான்.


வசுமதி கோபத்தில் குளியலறைக்குள் புகுந்தவள் முகத்தைக் கழுவி இரவு உடையை அங்கேயே மாற்றி விட்டு கட்டிலின் ஒரு ஓரத்தில் சென்று உறங்க விஷ்ணு குளியலறைக்குச் சென்று அவனும் ஆடைமாற்றி, அவ் அறையில் கட்டிலின் மறு புறத்தில் மட்டுமே உறங்க இடம் இருந்ததால் நடுவில் தன்னுடைய தலையணையை வைத்தான்.


கரங்களை மடித்து தலைக்குக் கீழ் தலையணையைப் போல் வைத்து உறங்க முற்பட நித்திராதேவி கோபம் கொண்டு அவனை விலக அவ்விரவு அவனுக்கு தூங்கா இரவானது. விடியற்காலை நெருங்கும் போதே கண்ணயர்ந்தான்.


யாதவின் நெற்றியில் தைலத்தைப் பூசி நீவி விட்டவள் சில மருந்து வில்லைகளை எடுத்து அவனிடம் தண்ணீரோடு சேர்த்து வழங்கி வாஷ் பேசனில் இட்டு இருந்த பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள். யாதவும் சிறு புன்னகையுடன் அவ் வில்லைகளை தண்ணீரின் உதவியுடன் விழுங்கினான்.


சமயலறை முழுவதையும் சுத்தம் செய்து முடித்தவள் குளியலறைக்குச் சென்று குளித்து காலையில் துவைத்து காய வைத்து இருந்த இரவாடையை அணிந்துக் கொண்டாள். யாதவ் அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழ, வைஷூ தான் எங்கே உறங்க வேண்டும் என்று அறையை ஆராய்ந்தாள்.


"தூங்காமல் இன்னும் என்ன பண்ற நீ? லைட்டை ஒஃப் பண்ணிட்டு தூங்கு நவி" என்று அசதியுடன் மொழிய, "நான் எங்கே தூங்குறதாம்?" என்று முணுமுணுக்க, "இது பெரிய பெட். இந்த இடம் உனக்கு போதாதா?" என்று எழுந்துக் கொண்டான்.


"அது.... எனக்கு ஒரு மாதிரி இருக்கு" என்று தலையைக் கவிழ்த்துக் கொள்ள, யாதவ், "நேத்து காலையில இங்கே வந்த போது ஒரே பெட்ல தூங்கினோம்" என்று அவளை அழுத்தமாகப் பார்த்தான். வைஷூ, "அப்போ டயர்ட்ல புரியல்லை. இப்போ கஷ்டமா இருக்கு" என்ற பதிலுக்கு அவளைக் கூர்ந்து பார்த்தான்.


"ஒரு கன்டிஷன்" என்று அவன் பார்வையில் அவளே இறங்கி வர வேண்டியதாக இருந்தது. 'என்ன?' என்று புருவம் உயர்த்தி வினவ, "நடுவில பிலோ வோல் வைக்கலாம்" என்று நலிந்த குரலில் மொழிய, "யுவர் விஷ்" என்று தோள் உலுக்கலுடன் படுத்துக் கொண்டான்.


வைஷூவும் ஐந்து தலையணைகளை எடுத்து இருவருக்கும் நடுவில் வைத்தவள் தனக்கு ஒதுக்கப்பட்ட பக்கத்தில் படுத்துக் கொள்ள இன்று அதிக வேலைகள் செய்து களைத்ததால் சிறிது நேரத்திலேயே உறக்கத்தில் ஆழ்ந்தாள். யாதவும் தற்போதைய வழக்கில அலைந்து திரிவதால் அவனும் உறங்கி விட்டான்.


கார்த்திக்கின் வீட்டிற்கே சாத்விக்கும், சனாவும் இங்கே தங்கிச் செல்வதற்காக வந்திருந்தனர். விசாலாட்சி மருந்தை உட்கொண்டு நல்ல உறக்கத்தில் இருந்தார். இன்று யாதவ் நடந்துக் கொண்ட முறையே வித்தியாசமாக இருந்தது அனைவருக்கும்.


அதைப் பற்றி பேசாமல் தங்கள் சிந்தையை திசைத் திருப்ப வேண்டி கார்த்திக், "உங்க கல்யாண ரிசப்ஷனை பத்தி என்ன முடிவு எடுத்து இருக்கிங்க இரண்டு பேரும்?" என்று வினவ, "சனாவோட லீவ்ல வைக்கலாம்னு நினைச்சு இருக்கோம் ஆர்யன்" என்றான் சாத்விக்.


"நீங்க இரண்டு பேரும் ரிசப்ஷனை லேட் பண்றது நல்லது இல்லை. சனாவை உன் வைஃபா சீக்கிரமா பிஸ்னஸ் வேல்டு ஆளுங்களுக்கு அறிமுகப்படுத்துறது பெடர். இன்னும் எட்டு நாளில நல்ல நாள் இருக்கு. அன்னிக்கே உங்க ரிசப்ஷனை வச்சுக்கலாமா?" என்று வினவ, மூவருமே அவனது பேச்சில் அதிர்ந்தனர்.


"எதுக்கு அண்ணா அவளோ சீக்கிரமா?" என்று சனா வினவ, "உன் கல்யாணத்தை என்னால பார்க்க முடியல்லைமா. அதான் ரிசப்ஷனையாவது சீக்கிரமா என் ஆசைப்படி கிரேன்டா செலிப்ரேட் பண்ணனும்னு நினைக்கிறேன்" என்று உருக்கமாகப் பேச சாத்விக் மௌனம் காத்தான்.


மற்ற இருவரும் சாத்விக்கையே பார்க்க சனா, அபி இருவருடைய முகத்தில் தெரிந்த ஏக்கத்திலும், ஆசையிலும் தனது கண்களை மூடித் திறந்து பெருமூச்சை இழுத்து விட்டவன், "நீ சொன்ன அன்னிக்கே ரிசப்ஷனை வைக்கலாம் ஆர்யன். நோ புரொப்ளம். உன்னால அவளோ சீக்கிரமா அரேன்ஜ் பண்ண முடியுமா?" என்றான்.


கார்த்திக், "அதை நான் பார்த்துக்குறேன் ப்ரவீன். நீ குறிச்ச தேதிக்கு மண்டபத்துக்கு வந்தால் போதும்" என்று குதூகலத்துடன் நாளை செய்ய வேண்டிய வேலைகளை கணக்கிட்டபடி தனது அறைக்குள் நுழைய அபியும் கண்களால் சாத்விக்கிற்கு நன்றி கூறி தங்கள் அறைக்குச் சென்றாள்.


அவர்கள் சென்ற உடனேயே சனா சாத்விக்கிடம் நெருங்கி அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவனும் அவளை இறுக்கி அணைக்க அவனது மார்பைத் தழுவியது அவளுடைய விழிநீர். "எதுக்கு ஜானு அழற?" என்று ஆதூரமாய் தலை வருடி விட்டான்.


சனா, "நீங்க ஒத்துப்பிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை காட்டுப் பையா. அண்ணா முகத்துல இன்னிக்கு பழைய சந்தோஷ திருப்பிப் பார்த்ததும் உணர்ச்சி வசப் பட்டுட்டேன். அவன் எவளோ சிரிச்சு பேசினாலும் என் கல்யாணத்தை பார்க்க முடியல்லையேங்குற கவலை அவன் மனசை அரிச்சிட்டே இருந்தது எனக்கு தெரியும். அதான் இன்னிக்கு சந்தோஷமா இருக்கோம்" என்றாள் அணைப்பை இறுக்கியபடி.


சாத்விக், "இந்த தேங்சை நீ வேற மாதிரி சொல்லலாமே பேபி" என்று அவள் முகத்தை நிமிர்த்தி இதழ்களைப் பார்த்தவாறேக் கூற எவ்வித தயக்கமும் இன்றி முழுக் காதலுடன் அவனுடைய இதழ்களை கவ்விக் கொண்டாள் இவ் அழகான இராட்சசி.


இன்ப அதிர்வுடன் சாத்விக் அவளை பார்த்தவன், மோகமும், தாபமும் போட்டியிட அவளுடைய இதழ்களை தனக்குள் அடக்கி கள்ளுண்ட வண்டானான். அவளைக் கையிலேந்தியவன் அவர்களுடைய அறைக்குச் சென்று கதவை கால்களால் அடைத்தவன் அவளோடு சேர்ந்து மஞ்சத்தில் சரிந்தான்.


அபி அறைக்குள் நுழைய கார்த்திக்கின் விழிகளில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய அபி அவனை தன்னோடு அணைத்துக் கொண்டாள். "மாமா" என்று அவனுடைய முதுகை ஆதரவாக வருடிக் கொடுக்க, "நான் அவளோ சந்தோஷமா இருக்கேன் செல்லம்மா. வார்த்தையால சொல்ல முடியாது" என்று குரல் கரகரக்க மொழிந்தான்.


"எல்லாம் சரியாகிடும் மாமா. கவலை படாதிங்க. சாத்விக் அண்ணா மனப் பூர்வமா உங்களை ஏத்துக்குற நாள் வரும்" என்று தாயாய் அவனை மடிதாங்க கார்த்திக்கும் சேயாய் அவளுக்குள் அடங்கினான். இவர்களின் வேண்டுதலும் நிச்சயமாய் ஒரு நாள் நிறைவேறும் என்று நாமும் நம்பிக்கை வைப்போம்.


காலைக் கதிரவனும் தன் வேலையை செவ்வென செய்ய உதிக்க ஆரம்பிக்க நிலாமகள் வெட்கம் கொண்டு தன்னை மேகங்களுக்குள் மறைத்தவாறே தன்னை முழுதாக அங்கிருந்து மறைத்துச் சென்றாள்.


யாதவ் காலையில் கண்விழிக்க அவனது வலது கரத்தைப் பிடித்து, வைஷூவிற்கு இடையில் இருந்த தலையணையை அணைத்தவாறு சிறிதளவு வாயைப் பிளந்தவாறே உறங்கினாள் வைஷூ. அவளை ஒரு முறைப் பார்த்தவன் அவள் உறக்கம் கலையாமல் அவள் கரங்களில் இருந்து தன் கரத்தை விடுவித்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.


அவன் முகம் கழுவி, காலைக் கடன்களை முடித்து காபி ஊற்றச் செல்ல வைஷூவிற்கும் விழிப்புத் தட்டியது. அவள் எழுந்து பார்க்க யாதவ் அருகில் இல்லை. அவளும் அவசரமாக தன் வேலைகளை குளியலறைக்குச் சென்று முடித்தவள் வெளியே வர யாதவ் இருவருக்கும் சேர்த்து காபி தயாரித்து இருந்தான்.


அவளிடம் கப்பை வழங்கி விட்டு காபியை மிடறு மிடறாக அருந்தியவன், ஜொகிங்கிற்காக வெளியே சென்றான். 'இவன் மனிஷனா ரோபோவா? ஒரு குட் மோர்னிங் சொன்னா குறைஞ்சிருவானா?' என்று கடுப்புடன் புலம்பி அவன் வழங்கிய காபியை பருகினாள்.


'அந்த குட்மோர்னிங்கை நீ சொல்ல இருந்ததே?' என்று மனசாட்சி வரிந்துக் கொண்டு வர, 'அது... நான் சும்மா சொல்ல இல்லை' என்றாள் முறுக்கிக் கொண்டு. 'அவனும் சும்மா சொல்லி இருக்கமாட்டான்' என்று ஆதரவு கரத்தை யாதவுக்கு அவள் மனசாட்சி நீட்ட, 'மரியாதையா ஓடிப் போயிரு' என்று காண்டாகி திட்ட அவள் திட்டிற்கு பயந்தே ஓடியது மனசாட்சி.


அவன் வருவதற்குள் காலை உணவை தயார் செய்ய ஆரம்பித்தாள். "அம்மா அன்னிக்கே சொன்னாங்க. காலையில எந்திரிச்சி கோலம் போட்டு, சாமிக்கு விளக்கேத்தி சமைச்சு பழகுன்னு. நான் கேட்காததை இப்போ அனுபவிக்கிறேன். நீ ஜீனியஸ் அம்மா.


அம்மா பேச்சை தட்டாதேன்னா கேட்காமல் ஆடி திரிஞ்சிட்டு இப்போ டைம் காலையிலேயே எந்திரிக்காமல் நேரத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறுறேன். எல்லாம் என் நேரம்" என்று புலம்பியபடி வேலையைத் தொடர அவள் புலம்பலின் ஆரம்பித்திலேயே வந்த யாதவ் இறுதியில் கூறியதில் சத்தமாகச் சிரித்து விட்டான்.


அவள் அதிசயமாக அவனது சிரிப்பையே பார்த்தாள். "என்னை பார்த்தது போதும். சமையலை பாரு. நான் பாத்திரத்தை விலக்குறேன்" என்று உதவிக்கு வர சட்டென்று திரும்பி சமயலைக் கவனிக்க ஆரம்பித்தாள்.




கருத்துக்களைப் பகிர,




 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24574


கண்சிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 13



வைஷூ யாதவ் இருவருமே ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து வேலைகளை அவசரமாக முடித்தனர்


இருவரும் சேர்ந்து சமைத்து முடிக்க, "இன்னிக்கு நான் கோலேஜ் போகனும்" என்று மெல்லிய குரலில் கூற அவளைப் பார்த்த யாதவ், "சீக்கிரம் ரெடியாகு" என்று முன்னே சென்றவன் மீண்டும் திரும்பி, "கோலேஜ் போக டிரெஸ் இருக்கா?" என்று கேட்டான். அவள் 'இல்லை' என்று தலையாட்ட, "இன்னிக்கு ஈவீனிங் போய் வாங்கிட்டு வரலாம். ஒரு நாள் லீவ் போடு" என்று அறைக்குள் புகுந்துக் கொண்டான்.


'நான் கோலேஜ் போகனும்னு சொன்னால் லீவ் போடுன்னு சொல்றாரு. பாரேன் சும்மாவாவது போடுறியான்னு கேட்குறானா?' என்று தனக்குள் யாதவைத் திட்டியவளின் மனதில் ஓரத்தில் கல்லூரியிற்குச் செல்லாததிற்கு சந்தோஷமும் கரைப் புரண்டோடியது.


யாதவ் குளித்து காக்கியுடன் சாப்பிட அமர்ந்தவன் அவளையும் தன்னோடு வற்புறுத்தி சாப்பிட்டு வைத்த பிறகே தனவனுடைய அலுவலகத்திற்குச் சென்றான். அவன் கொடுத்த மொபைலை நோண்டும் போதே தன்னுடைய மொபைல் ஞாபகத்திற்கு வர யாதவிற்கே அழைத்தாள்.


அவன் அழைப்பை ஏற்று, "ஏதாவது பிரச்சனையா?" என்று அவசரமாக வினவ, "இல்லை. என் மொபைல்" என்று அவனுக்கு ஞாபகப்படுத்த, "சொரி இன்னிக்கு எடுத்துட்டு வரேன்" என்க, வைஷூ, "ஒகே. பாய்" என்று அழைப்பைத் துண்டித்து வீட்டை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டாள்.


விஷ்ணு காலையில் கண்விழிக்க அறையில் வசுமதி இருக்கவில்லை. ஒரு பெருமூச்சை வெளியிட்டு குளியலறைக்குச் சென்று குளித்து வந்தவன் சேர்ட், ஜீன்சை அணிந்து வெளியே வந்தான். பானுமதி, "ஒரு நிமிஷம் மாப்பிள்ளை. வசு கிட்ட காபி கொடுத்து அனுப்புறேன்" என்று என்று சமையலறைக்குள் புகுந்துக் கொள்ள ஜொகிங்கை முடித்து சந்திரசேகர் உள்ளே வந்தார்.


"குட்மோர்னிங் மாமா" என்று உற்சாகமாய் விஷ்ணு கூற அவரும் அதே உற்சாகத்துடன், "குட் மோர்னிங் மாப்பிள்ளை" என்றார். இருவரும் அரசியலைப் பற்றி விவாதிக்க ஆரம்பிக்க வசுமதி காபியோடு வரவேற்பரைக்கு வந்து காபியைக் கொடுத்தாள்.


அதை வாங்கியவன் முகம் மாறாமல் சிரித்தபடி, "குட் மோர்னிங்" என்று அதை வாங்கி மாமனாருடன் கதையில் சுவாரசியமாக வசுமதி அதிகரித்த குற்ற உணர்ச்சியுடன் சமையலறைக்குச் சென்று தாயிற்கு உதவி செய்ய ஆரம்பித்தாள். கைகள் வேலையை செவ்வென செய்தாலும் சிந்தையோ காலையில் நடந்ததில் இருந்தது.


வசுமதி கண்விழிக்கும் போது விஷ்ணு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவள் ஒரு முறை அவனது முகத்தைப் பார்த்து விட்டு குளியலறைக்குச் சென்று முகம் கழுவும் போது நேற்று இரவு நடந்தது அனைத்தும் நினைவு வர அவள் செய்த தவறும் நெற்றிப் பொட்டில் அடித்தது போன்று தெரிந்தது.


அவள் தவறு செய்த பிறகும் தன்னோடு சண்டையிடாமல் மௌனம் காத்ததது அவளுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. அவனைப் பார்க்கவே வெட்கமாகவும், அவமானமாவும் இருக்க அவன் முன் வரவே இல்லை. தாய் தன் கையில் காபியை திணித்து அனுப்பி வைக்க சங்கோஜத்துடனேயே அவ்விடம் வந்தாள்.


அவனோ முகம் முழுக்க சிரிப்புடன் நேற்று இரவு நடந்ததை மறந்து தனக்கு காலை வணக்கத்தைக் கூற அவள் குற்ற உணர்ச்சியும் அதிகரித்ததோடு அவள் குணத்தை எண்ணி சிறிது அவமானமாகவும் இருந்தது. அவன் காபியைப் பருகி முடித்து தங்கள் அறைக்குள் மொபைலை எடுக்க நுழைய வசுமதியும் பின்னோடு வந்தாள்.


வசுமதி, "ஐம் சொரிங்க. நேத்து நான் கோபத்துல அப்படி பேசி இருக்கக் கூடாது. இதுக்கு அப்புறமா கோபத்தை குறைச்சிக்கிறேன்" என்று தலைக் கவிழ்ந்தவாறு மொழிய, "இட்ஸ் ஒகே அதை விடுங்க. நீங்க கோலேஜ் போகல்ல?" என்று கதையை மாற்றினான்.


அவளும் அதை உணர்ந்து அவனுக்கு ஏற்றாற் போன்று, "இல்லை. டிவென்டி டேஸ் கல்யாணத்துக்காக லீவ் எடுத்தேன். லீவ் முடிஞ்ச பிறகு போகனும்" என்று உரைக்க, "சரிங்க. நான் இன்னிக்கு ஹொஸ்பிடல் போகனும். லெவனுக்கு ஒரு ஒபரேஷன் இருக்கு" என்று தயங்கினான்.


"நீங்க போங்க. நான் அப்பா, அம்மாவை சமாளிச்சிக்கிறேன்" என்று புன்னகையுடன் நவிழ, "தேங்ஸ்ங்க" என்று தனக்கு தேவையானவற்றை எடுத்து வைக்க வசுமதி தன் பெற்றோரிடம் பேசுவதற்காக வெளியே சென்றாள். அவர்களிடம் விஷ்ணுவின் நிலையைக் கூற அவர்களும் மறுக்கவில்லை.


விஷ்ணு ஹொஸ்பிடலிற்குச் செல்ல தயாராகி வர வசுமதி உணவை எடுத்து வைத்தாள். அவனும் சாப்பிட்டு மூவரிடமும் இருந்து விடைப் பெற்றான். வசுமதியும் அறைக்குச் சென்று விஷ்ணுவின் நற்குணங்களைப் பற்றியும் திருமணம் நடந்து முடிந்த இரு நாட்களைப் பற்றியுமே சிந்தித்தாள்.


கார்த்திக் காலையில் எழுந்தவுடன் முக்கியமானவர்களுக்கு நேரில் சென்று அழைப்பு வைப்பதோடு, நண்பர்களுக்கு மொபைல் மூலமே அழைப்பு விடுக்க ஆரம்பித்தான். நகுலனிற்கு அழைப்பை ஏற்படுத்த, அவன் அழைப்பை ஏற்ற உடன் கார்த்திக், "குட் மோர்னிங் மாமா" என்றான் உற்சாகக் குமிழியிட.


அவனும் அதே போன்று, "குட் மோர்னிங். என்ன திடீர்னு கூப்பிட்டு இருக்க கார்த்திக்" என்று வினவ, குசலம் விசாரித்த பிறகு, "இன்னும் வன் வீக்ல சனா, சாத்விக் ரிசப்ஷன் இருக்கு அண்ணா. ஃபேமிலி எல்லோரையும் கூப்பிட்டு வந்துருங்க. நேரில் வந்து கூப்பிட டைம் இல்லை அண்ணா. வேலை அதிகமா இருக்கு. தப்பா எடுத்துகாதிங்க" என்று கூற, "சரிடா நான் பார்த்துக்குறேன்" என்றான்.


சிறிது நேரம் பேசும் போது அஞ்சலியிற்கும், தனக்கும் சிகிச்சையைப் பெற புதிதாக சென்னையில் உருவாக்கப்பட்ட லக்ஷ்மி கருத்தரிப்பு மையத்தைப் பற்றிக் கூற, கார்த்திக்கும் அதைப் பற்றி விசாரிப்பதாகவும், அபோயன்மன்ட் ஒன்றை வாங்கித் தருவதாகவும் கூறி அழைப்பைத் துண்டித்தான்.


வைஷூ குளித்து முடித்தவள் தனக்கு வேறு ஆடை இல்லாததால் யாதவின் டீசர்ட் மற்றும் நைட் பேன்ட் ஒன்றை எடுத்து அணிந்து இருந்தாள். மதிய உணவை சமைத்து முடித்து தானும் உட்கொண்டு கண்ணயர்ந்தாள். வீட்டின் மணி அடிக்க அப்போதே அவளுக்கு விழிப்புத் தட்டியது அவசரமாக எழுந்தவள் முகம் கழுவி விட்டு கதவை நோக்கி ஓடினாள்.


கதவை நெருங்கி, "யாரு?" என்று வினவ, "நான் தான். கதவை திற நவி. வெளில போகனும்" என்ற யாதவின் குரல் கேட்க தான் இருக்கும் நிலையையும் மறந்து கதவைத் திறக்க வைஷூவைப் பார்த்தவனின் இதழ்கள் நமட்டுப் புன்னகையைச் சிந்த மார்பிற்கு குறுக்காக் கையைக் கட்டி அவளைப் பார்த்தான்.


'எதுக்கு அயர்மேன் நமளை இப்படி பார்க்குறான்?' என்று மனதுக்குள் நினைத்து தன்னைக் குனிந்துப் பார்க்க, யாதவின் ஆடையை அணிந்து இருப்பதைப் பார்த்து மானசீகமாக தலையிலடித்து, 'இப்படியா வைஷூ சொதப்புவ? கிண்டல் பண்ணாலும் ஏதாவது பதில் கொடுக்கலாம். இவன் பார்வையாலேயே கிண்டல் பண்ணுவானே. கிருஷ்ணா!!!' என்று புலம்பி விளக்கெண்ணெய் குடித்தது போல் முகத்தை வைத்துக் கொண்டாள்.


வைஷூ நினைத்தது சரியே என்பது போல் கிண்டலடிக்கவோ, நக்கலோ செய்யவில்லை. கிண்டலும் நக்கலும் சேர்ந்து தெறிக்கும் பார்வையைப் பார்க்க பூமிக்குள் இப்படியே புதைய மாட்டோமா என்ற நிலையில் தலைக் கவிழந்து நின்று இருந்தாள் வைஷு. அவளைப் பார்க்க சுவரசியமாக இருந்தாலும் நேரமாகுவதை உணர்ந்தான் யாதவ்.


யாதவ் அவள் கரத்தை இழுத்து அதில் ஒரு பையை திணித்தவன், "இதுல டிரெஸ் இருக்கு. போயிட்டு சீக்கிரம் ரெடியாகிட்டு வா போலாம்" என்று உரைக்க கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அவசரமாக வேறு அறைக்குள் ஓடி ஒளிய சிறிய புன்னகையுடன் தனது அறைக்குள் நுழைந்தான்.


வைஷூவும் அவன் வாங்கி இருந்த சுடிதாரை அணிந்தவள் தன் கூந்தலை பொனிடேல் இட்டாள். விழிகளுக்கு மைத்தீட்டவோ, உதட்டுக்கு சாயம் பூசவோ என எந்தவித அழகு சாதனப் பொருட்களும் இல்லாததால் குங்குமத்தை மாத்திரம் நெற்றி வகுட்டில் வைத்து, யாதவின் அறையைத் தட்டினாள்.


யாதவ் கதவைத் திறந்து வொச்சை சரி செய்தவாறே வெளியே வந்தவன், "என்ன?" என்று வினவ, "நீங்க பௌடர் யூஸ் பண்ணுவிங்களா?" என்றுக் கேட்டாள். புருவம் சுருக்கி பார்த்தவன், "எனக்கு யூஸ் பண்ற அளவுக்கு நேரம் இல்லை. பட் கபோர்ட்ல இருக்கு. போய் எடுத்துக்க" என்று அனுப்பி வைத்தான்.


கபோர்டை திறந்து பௌடரை கொட்ட அது வரவில்லை. அதன் பிறகே அவள் ஆராய்ந்து பார்க்க இன்னும் பயன்படுத்தவே இல்லை என்பதைப் பார்த்து, 'இப்படி கூட ஒரு மனிஷன் இருப்பானா?' என்று அதை முதன் முதலாகப் பயன்படுத்தினாள். பழையதை வைத்து விட்டு புதியதை வழங்கினான் என்று அவளுக்கு யார் கூறுவது?


இருவரும் யாதவின் காரில் ஏறிக் கொள்ள காரும் பிரபலமான ஷொபிங் மோலை நோக்கிப் பறந்தது. இருவருமே இறங்கி முதலில் வைஷூவிற்குத் தேவையான ஆடைகளை வாங்கச் சென்றனர். வைஷூ அவனுக்கு அதிக செலவு வைக்கக் கூடாது என்பதற்காக விலை குறைவானதைத் தேடித் தேடிப் பார்க்க அதில் யாதவ் கடுப்பாகிவிட்டான்.


அவளை ஓரம் கட்டிவிட்டு அவளுக்குத் தேவையான ஆடைகளை அவனே வாங்கினான். அங்கே இருந்த மற்றவர்கள் இதைப் பார்த்து, "இந்த பொண்ணை ரொம்பவே காதலிக்கிறாரு. பாரு ஆசையா அவரே சிலெக்ட் பண்றாரு" என்று தங்களுக்குள் கிசுகிசுக்க அது யாதவ், வைஷூ இருவருக்குமே கேட்டது.


யாதவின் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. வைஷூ, 'உங்க வாயில தீயை வைக்க!!!' என்று திட்டியவள் தொடர்ந்து, 'இந்த லூசுங்களுக்கு யார் சொல்றது இவனுக்கு ஃபீலிங்ஸ் இல்லாத அயர்ன் மேன்னு. என் மேலே இருக்கிற கடுப்புல தான் அவனே சிலெக்ட் பண்றான்னு சொன்னாலும் நம்பவா போறாளுங்க. அடப்போங்கடி' என்று தனக்குள் பேசி சலித்துக் கொண்டாள்.


அவ் ஷொபிங் மோலில் இருந்த ஐஸ்கிரீம் பாலரில் ஒரு பெண் அமர்ந்து மொபைலை நோண்டிக் கொண்டு இருக்க அதே மேசையில் இன்னொரு வாலிபன் வந்து அமர்ந்தான். அவள் அவனைப் பார்த்து சினேகமாப் புன்னகைக்க அவனும் புன்னகைத்தான்.


அவள், "இன்னிக்கு இந்த டேபளா சேர்?" என்று சிரிப்புடன் வினவ அவன் அசடு வழிந்து, "ஆமாங்க. எனக்கு ஒரே இடத்துக்கு போகும் போது அங்கே இருக்கிற எல்லா இடமுமே பொழக்கமா இருக்கனும்னு நினைப்பேன். இந்த ஐஸ்கிரீம் பாலர் வந்தாலும் இங்கிருக்கிற அத்தனை டேபளிலும் உட்காரனும். ரொடேஷன்ல வரும் போது இன்னிக்கு உங்க டேபள்" என்றான்.


தொடர்ந்து ஒரு வாரமாக அவன் இங்கே வருவதைப் பார்த்து இருக்கிறாள். அதுவும் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மேசையில் அமர்வதையும் கவனித்து இருந்தாள்.


"புரிஞ்சது" என்று புன்னகைத்தவள் தொடர்ந்து மொபைலைப் பார்க்க, "தனியா வந்திருக்கிங்க? ஃபிரென்ஸ் யாரும் வர இல்லையா?" என்று வினவினான். "என்னை நோட் பண்றிங்களா?" என்று அவள் கேட்க, "இல்லைங்க பொதுவா இந்த மாதிரி இடங்களுக்கு ஃபிரென்ஸ் கூட வருவாங்க. அதான் கேட்டேன். தப்பா இருந்தால் சொரி" என்றான்.


அவளும் புன்னகைத்து மொபைலை கீழே வைத்தவள், "நான் எப்போவுமே வருவேன். இன்னிக்கு மன்டே. சோ கோயிலுக்கு போயிட்டு வந்ததால ஃபிரென்ஸ் வர இல்லை. பை தெ பை ஐம் சவிதா. செகன்ட் இயர் பி.கொம்" என்று கை நீ்ட்டினாள்.


அவன், "சரவணன் சொஃப்ட்வெயார் இன்ஜினியர். வேலை தேடி சென்னை வந்திருக்கேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இன்டர்வியூ அடென்ட் பண்ணி ரிஜெக்டாகி இங்கே வரேன்" என்று கை நீட்டினான்.


"பயபடாதிங்க நல்ல ஒரு வேளை கிடைக்கும்" என்று கூறி முடிய அவள் ஓடர் செய்து இருந்த சொக்லேட் ஐஸ்க்கிரீம் வந்தது. அதை தலைக் கவிழ்ந்து இரசித்துச் சாப்பிட அதைப் பார்த்தவள், "சொக்லேட் ஐஸ்கிரீம்னா அவளோ பிடிக்குமா?" என்று கேட்க தலையை உயர்த்தாமல் "ஆமா ரொம்ப" என்றாள் இரசித்து.


"பிடிச்சதை சாப்பிடும் போது பாட்டு கேட்டால் இன்னும் சூப்பரா இருக்கும். இருங்க" என்று ஹெட் போனை எடுத்து தன் மொபைலுடன் இணைத்தவன் அவளிடம் ஒரு பகுதியை வழங்கி மற்றயதை தன் காதோடு இணைத்துக் கொண்டான்.


அவளும் கண்களை மூடி ஐஸ்கிரீமையும், பாடலையும் இரசித்து அதிலேயே மூழ்கி விட சில நிமிடங்களின் பின் அதை உணர்ந்த சரவணன், "நான் பேசுறது உங்களுக்கு கேட்குதா சவிதா?" என்று வினவ அவள் ஆம் என்று தலையாட்டினாள். "அப்போ என் முகத்தை பார்த்து ஐஸ்கிரீமை சாப்பிடுங்க" என்று கூற அவளும் அவனைப் பார்த்தவாறே சாப்பிட்டாள்.


அவன் தனது காதில் இருந்த இயர் போனை எடுத்து அவள் காதிலேயே மாட்டி விட்டான். சிறிது நேரத்தில் ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடிக்க சரவணன் அவளைக் கூர்ந்து கவனித்தான். மற்றவர்களுக்கு சந்தேகம் வராதது போன்று முன்னே அமர்ந்து பேசுவதைப் போன்று பாசாங்கு செய்தாள்.


அவன் எதிர்பார்தத்தது நடந்து விட்டது என்பதை சவிதாவின் அசைவுகளைக் கொண்டு கண்டு கொண்டவன், தன் பொக்கடில் வைத்திருந்த இன்னொரு மொபைலை எடுத்து, 'ஃபெல் இன் டு தெ டிரெப்' என்று அனுப்பினான்.


பதினைந்து நிமிடங்களிற்குப் பிறகு அவள் தன் பொருட்களை பேர்கினுள் வைத்தவள் ஒரு ரோபோ போன்றே செயல்பட்டாள். தன்னிடம் இருந்த அவனது மொபைலையும், இயர் போனையும் வழங்கி விட்டு, "தேங்கியூ" என்று கூறி நடந்தாள். அவள் பில் பே பண்ணியவுடன் நடந்து செல்லும் போது ஒரு ஆடவனை இடிக்க மன்னிப்பையும் வேண்டாது அவள் பாட்டிற்குச் சென்று வீதியின் இறுதியில் இருந்த கருப்பு நிற காரில் ஏறினாள்.


அக்கார் அங்கிருந்து வேகமாக நகர அவளது வீட்டை நெருங்கியவுடன் அவளுடைய பொருட்கள் அனைத்துமே அவளுடைய வீட்டிற்கு முன் அவள் கைகளால் வீசப்பட மீண்டும் கார் அங்கிருந்து வேகமாகப் பறந்து சென்று மறைய சவிதாவும் கடத்தப்பட்டாள்.


அடுத்த டார்கட்டாக இருந்த புகைப்படங்களுக்கு சொந்தக்காரியான சவிதா திட்டமிடப்பட்டு அழகான முறையில் கடத்தப்பட்டாள் எந்தவித தடயமும் இன்றி. சரவணன் எந்தவித பதட்டமோ தடுமாற்றமோ இன்றி அவன் ஆடர் செய்து இருந்த ஐஸ்கிரீமை சாவகாசமாகச் சாப்பிட்டவன் யாரிற்கும் சந்தேகம் வராதவாறு அங்கிருந்து வெளியேறினான்.


யாதவும், வைஷ்ணவியும் அதே ஷொபிங் மோலில் வைஷூவிற்குத் தேவையான அனைத்தையும் வாங்கியதோடு இருவருக்கும் விலை உயர்ந்த கோர்ட் சூட், சாரி என்பவற்றை சாத்விக் சனா ரிசப்ஷனிற்காக வாங்கினான். பின் அதே ஐஸ்கிரீம் பாலரிற்கு இருவரும் சென்று ஐஸ்கிரீமை சாப்பிட்டு, வீட்டிற்குச் செல்லும் வீட்டிற்குத் தேவையான பொருட்களையும் வாங்கிச் செல்ள நேரம் இரவு எட்டை நெருங்கியது.


காரில் சென்றவாறே யாதவ், "இதுக்கு மேலே அங்கே போய் சமைச்சு சாப்பிடுறது பொய்யான விஷயம் நவி. ஹோட்டல்ல சாப்பிட்டு போலாமா? பசிக்குது" என்று கூற அவளும் மறுக்காமல் அவனோடு சென்று ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்குச் சென்று அனைத்து பொருட்களையும் வேறு அறையில் வைத்தவர்கள் குளித்து கட்டிலில் விழுந்தவர்கள் தடுப்புச் சுவர் ஏதுமின்றியே உறங்கிப் போயினர் களைப்பினால்.


அடுத்த நாளும் யாரிற்காவும் நிற்காமல் விடிந்தது. வைஷூ முதலில் எழுந்தவள் தன்னை அணைத்து உறங்கும் யாதவைப் பார்த்தவள் முதலில் அதிர்ந்து பின் அவனுடைய உறக்கம் கலையாது எழுந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.


அவசரமாக வெளியே வந்து இருவருக்கும் காபியைத் தயாரித்து தானும் பருகி அவனுக்குரியதை பிளாஸ்கில் ஊற்றி வைத்து வேலையைத் தொடர்ந்தாள். இன்று கல்லூரிக்குச் செல்ல தேவையான பொருட்களை அவசரமாக எடுத்து வைத்தவள் யாதவின் காக்கி உடையையும் அயர்ன் செய்தாள்.


யாதவ் இரவு உறங்கும் முன்னே நாளை பணிக்குச் செல்ல தேவையானதை தயார் செய்து வைத்த பின்பே உறங்குவான். நேற்று அதீத களைப்பின் காரணமாக உறங்கியதால் எதையும் செய்து வைத்திருக்கவில்லை. அவனுடைய வேலைகளையும் அவசரமாய் முடித்தவள் வாசலில் கோலம் இட்டாள்.


அதன் பின் தோசை மாவை எடுத்து ஊற்ற மறு புறம் தேங்காய் காரச் சட்னியை தயார் செய்ய ஆரம்பித்தாள். நேரம் ஆறு முப்பதைத் தொட யாதவைச் சென்று உலுக்கி எழுப்பி விட்டாள். அவனும் அவசரமாக எழுந்து இவளுக்கு உதவிக்கு வர அதிகமான வேலைகளை அவளே முடித்து இருந்தாள்.


"எனக்கு எந்த வேலையும் இல்லையா நவி?" என்று வினவ, "வீட்டை மட்டும் சுத்தம் பண்ணிருங்க அத்தான். நான் மத்த வேலைகளை முடிச்சிட்டேன். நீங்க அந்த வேலையை முடிச்சால் குளிச்சிட்டு சாப்பிட வாங்க" என்று சட்னியை கிளறியவாறே கூற அவனும் அதையே செய்தான்.


அவனை அத்தான் என்று அழைத்ததை வைஷூவும் உணரவில்லை; யாதவும் கேட்கவில்லை.


அவள் குளித்து சுடிதார் அணிந்து அவசரமாக கல்லூரியிற்குச் செல்ல தயாராகி வர யாதவும் அவசரமாய் வந்தான். அவள் தனக்கு உதவி இருப்பதைப் பார்த்து மெச்சுதலாய் தனக்குள் பாராட்டியவன் வெளியே எதையும் பேசவில்லை. நன்றியாக ஒரு சிறு புன்னகையை மட்டுமே வழங்கினான்.


இருவருமே அவசரமாக சாப்பிட்டு முடிக்க வைஷூ பாத்திரங்களைக் கழுவ யாதவ் உணவு மேசையை சுத்தம் செய்ய ஆரம்பித்தான். அவளைக் தனது பொலிஸ் வாகனத்தில் ஏற்றியவன், "ஈவீனிங் நானே உன்னை பிகப் பண்ணிக்கிறேன்" என்று உரைத்து வேகமாகச் சென்றான்.


அவள் கல்லூரிக்கு வந்தவுடன் அநேகமானோர் தன்னைப் பார்க்கும் கண்ணோட்டம் வித்தியாசப்பட்டு உள்ளதைக் கண்டு கொண்டாள். தனது திருமணத்தைப் பற்றி அறிந்த பிறகே இவ்வாறு நடக்கின்றது என்பதை அறிந்தவள் மௌனத்தையும், அமைதியையும் கடைப்பிடித்தாள்.


அவள் இருக்கும் சூழல் சங்கடமாக இருக்க அதைப் போக்குவதற்காகவே அபி, சனா இருவரும் வருகைத் தந்தனர். இருவருமே சந்தோஷமாக அவளுடன் உரையாட அவளும் சுற்றுப் புறச் சூழலை மறந்து அவர்களோடு ஒன்றிவிட்டாள்.


இவ்வாறு அன்றைய நாள் கழிய வேகமாக ஏழு நாட்களும் பறந்தோட சனா- சாத்விக் இருவரின் வரவேற்பு நாளும் புலர்ந்தது. மாலை நேர வேளையில் அவ் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வண்ண நிறங்களினால் வானுலோக மாளிகைகளைப் போல மின்னிக் கொண்டு இருந்தன.


பொலிஸாரும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையினரும் அங்கிருந்தோரின் பாதுகாப்பை அதிகரித்து இருந்தனர். இன்று இவ் வைபவத்திற்கு முதலமைச்சர் வருகை தர இருப்பதாலும் பாதுகாப்பும் கெடுபிடியாக இருந்தது.


உற்றார் உறவினர்கள், தொழின் முறை நண்பர்கள், அவர்களின் குடும்பங்கள், சனாயின் பள்ளி, கல்லூரித் தோழி தோழர்கள், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர், அலுவலக உறுப்பினர்களும், குடும்பத்தினர், சாத்விக்கின் தோழர்கள், இன்னும் பல முக்கிய அரசியல்வாதிகள், முக்கிய புள்ளிகளும் அவ் ரிசப்ஷனில் கலந்துக் கொண்டு இருந்தனர்.


மணமக்களும் ஆண்களுக்கே உரித்தான இலக்கணத்துடன் சாத்விக்கும் பேரழகிக்கு அழகியாக சனாவும் காதல் முகத்தில் பொங்கி வழிய ஒருவரோடு ஒருவர் கைக் கோர்த்து நின்று தங்களை வாழத்துபவர்களின் வாழ்த்துக்களை ஏற்றனர்..


யாதவ் கடும் நீல நிற கோர்ட் சூட்டில் ஆணழகனாய் வர அவளுக்கு ஜோடியாக வைஷ்ணவியும் கடும்நீலம், வெள்ளை நிறம் கலந்த டிசைனர் சேலையிலும் அலங்காரத்திலும் தேவதையாக வந்தாள். அவளின் அழகுக்கு யாதவ் கட்டிய தாலி, நெற்றி வகுட்டில் இருந்த குங்குமம் அழகைக் கூட்டியது.


நகுலன் அஞ்சலி தம்பதிகள் நேற்றைய தினமே வருகை தந்து இருந்தனர். மேடையில சாத்விக் - சனா ஜோடி, அபி - கார்த்திக் ஜோடி சிரித்து பூரண மகிழ்ச்சியுடன் இருக்க கீழே இருந்த அஞ்சலி அவர்களை குரோதம் கலந்த வன்மத்துடன் வெறித்தாள்.


சாத்விக் அவள் கண்களில் தெரிந்த உணர்வுகளைப் பார்க்க யோசணையில் புருவங்கள் இடுங்க அஞ்சலியைக் கண்காணிக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.


அது மட்டுமில்லாது சிறிது நேரத்தில் நகுலனின் முழுக் குடும்பமும், விஷ்ணு, வசுமதி இருவரின் குடும்பமும் வருகைத் தர யாதவ் அதைப் பார்த்து வைஷூவின் கைகளோடு தன் கைகளைக் கோர்த்து இறுகப் பற்றிக் கொண்டான்.


அனைவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.




கருத்துக்களைப் பகிர,







 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24649


கண்சிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 14




பிரமாண்டமாக அரங்கேரிக் கொண்டு இருந்தது சாத்விக், சனா இருவரினது வரவேற்பு. அஞ்சலியின் பார்வையில் சாத்விக்கின் மனது எச்சரிக்கை மணியை எழுப்பியதைக் கொண்டு அவளைக் கண்காணிக்கும் முடிவில் இருந்தான் சாத்விக்.


யாதவும், வைஷூவும் மேடையேறி சாத்விக் - சனா இருவருக்குமான பரிசினை வழங்கி இறங்கிக் கொள்ளவும் யாதவின் குடும்பத்தினரும் விஷ்ணுவின் குடும்பத்தினரும் உள்ளே நுழைந்துக் கொள்ளவும் சரியாக இருந்தது.


விஷ்ணு, யாதவ்-வைஷ்ணவி ஜோடியைப் பார்த்து அவர்களை புன்னகையுடன் ஏறிட்டு தன் குடும்பத்தினருடன் அவர்களை நெருங்கி வந்தான். விஷ்ணு, "வைஷூ இன்னிக்கு தான் பார்க்க பொண்ணு மாதிரி இருக்க" என்று அவளின் பதட்டத்தைக் குறைப்பதற்காக வம்பிழுக்க மூக்கு விடைக்க முறைத்தாள் அவள்.


அவர்களோடு சேர்த்து அங்கே விஷ்ணுவோடு வசுமதியும் வந்திருக்க இவனது பேச்சில் அவளுமே கோபம் கொண்டாள் தன்னைப் பற்றி சிறிதும் சிந்திக்காது தனக்கு துரோகம் இழைத்தவர்களோடு உரையாடுகிறானே என்று.


"போலி டாக்கடர்" என்று தன்னை மறந்து வைஷூ பல்லைக் கடிக்க, யாதவும் புன்னகை இழையோடும் முகத்துடன் இருவரையும் சுவாரசியமாகப் பார்க்க, "நான் பொய் சொல்லுவேனா வாயாடி? நீ சுடிதார் வியர் பண்ணாலும் உனக்கு அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு, வெட்கம், அடக்கம் எதுவுமே இருக்காது. ஆனால் புடவை கட்டினதும் நான் சொன்ன அத்தனையும் உன் முகத்துல போட்டி போட்டு வெளி வருது" என்றான் விஷ்ணு கிண்டலாக.


"தயிர் சாதத்துக்கு இவளோ விஷயம் தெரிஞ்சி இருக்கே?" என்று அப்பாவியாய் வைஷூ வியக்க இப்போது பல்லைக் கடிப்பது விஷ்ணுவின் முறையானது. இவர்களின் உரிமைப் பேச்சில் ஒன்ற முடியாத வசுமதி, "பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்குறதை கூட உன் காதல் கண்ணை மறைச்சிருச்சி போல இருக்கே.


அது சரி உன் கிட்ட நல்ல குணங்களை எதிர்ப்பார்க்க முடியுமா என்ன? நடிக்க நல்லா வரும். நல்ல குணங்கள் வராது. நல்ல குணம் இருந்தால் இதைப் போல கேவலமான விஷயத்தை பண்ணி இருப்பியா என்ன?" என்று விஷச் சொற்களை சொல் எனும் அம்பை வைத்து தாக்க அது சரியாக அவளது சிறு இதயத்தைத் தாக்கியது.


வசுமதி இந்த அளவிற்கு பேசுவாள் என்பதை மற்ற எவருமே எதிர்ப் பார்க்கவில்லை என்பதை அவர்களின் அதிர்ந்த முகங்களே காட்டிக் கொடுக்க முதலில் தன்னிலை அடைந்த யாதவ் அருகில் விழி நீர் தளும்ப நின்று இருந்த மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டான்.


வசுமதியிடம் திரும்பியவன், "அது எங்க இரண்டு பேரோட பேர்சனல். அதை மூனாவது மனிஷி நீ தலையிடுவதை விரும்பவும் இல்லை. தலையிடவும் கூடாது. மீறி பண்ணால்...." என்று நிறுத்தி அவளை அழுத்தமாகப் பார்த்தவன், "உன் பொன்டாட்டிக்கு எங்க விஷயத்துல தலையிடக் கூடாதுன்னு சொல்லி வை" என்று விஷ்ணுவை எச்சரித்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.


யாதவின் வெளிப்படையான மிரட்டலில் வசுமதி விக்கித்து இருக்க, விஷ்ணு,"வசுமதி" என்று அழுத்தமாக அழைக்க அதே பாவனையுடன் அவனை ஏறிட்டாள். "நான் அவங்க எனக்கு எவளோ முக்கியமானவங்கன்னு சொல்லியும் நீ இப்படி பேசினதை என்னால ஏத்துக்க முடியல்லை" என்று அசூசையாக முகத்தை வைத்தான்.


'இது போன்ற ஒரு செயலை நாங்களும் எதிர்பார்க்கவில்லை' என்பதை விஷ்ணுவின் பெற்றோரின் அதிருப்தியான முகங்களும் காட்டிக் கொடுத்தது. இவற்றை தூரத்தில் இருந்தே வசுமதியின் பெற்றோர்களுமே கவனித்தனர். தன் சம்பந்திகளின் முகத்தில் தெரிந்த அதிருப்தியில் மனம் துணுக்குற்று அங்கே விரைந்தனர்.


விஷ்ணுவையும், அவன் குடும்பத்தினரையும் சமாதானம் செய்ய பேச ஆரம்பிக்க விஷ்ணு, "மாமா இதைப் பத்தி பேச வேணாமே. நாளைக்கு வசுமதியோட ஃபிரென்ஸ் வந்தாலும் நானும் இதே போல நான் பண்ணா நல்லா இருக்குமா? உங்க பொண்ணுக்கு இதை சொல்லி புரிய வைங்க" என்றவன் யாதவ் இருக்குமிடம் சென்றான்.


வைஷூ மௌனமாய் அமர்ந்து வேடிக்கைப் பார்க்க யாதவின் மனதில் கோபம் கனன்றது. இருந்தும் முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்ட இல்லை. யாதவின் பெற்றோர்களும் வைஷூவையும், யாதவையும் முறைத்துக் கொண்டே திரிய யாதவ் கடுப்பாகி விட்டான்.


விஷ்ணு இவர்களிடம் வர யாதவின் தந்தை விஷ்ணுவை நெருங்கி வந்தார். யாதவையும் அவன் மனைவியையும் ஒரு முறை முறைத்தவர் விஷ்ணுவைப் பார்த்து, "நீங்க ரொம்ப நல்ல குணம் உள்ளவரு தம்பி. எங்க வசுமதியை நல்லா பார்த்துபிங்கன்னு தெரியும். ஆனால் அவளோட சந்தோஷத்துக்கு குறுக்கா இருக்கிறதை ஒதுக்குறது நல்லது இல்லையா?" என்று வினவினார்.


அவர் கூறியதில் வைஷூவிற்கு சுருக்கென்று மனதில் ஒரு வலி உருவாக யாதவ் வருந்தும் அதே நேரம் எரிச்சலும் உருவாகியது. விஷ்ணு, "அங்கள் ஒரு கேள்வி கேட்கட்டுமா?" என்று வினவ, "கேளுங்க தம்பி" என்றார் யாதவின் தந்தை.


"கணவன் மனைவி உறவு புனிதமானது. ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து துணையோட சந்தோஷத்துலயும், துன்பத்துலேயும் நாமளும் பங்கு கொள்ளனும். துணையோட உறவு தனக்கும் உறவுன்னு மனப்பூர்வமா ஏத்துக்கனும் இல்லையா?" என்று கொக்கிப் போட, அவரும் ஆம் என்றார்.


"அப்போ எனக்கு ஒரு உதவி பண்றிங்களா?" என்று வினவ, வசுமதியிற்கு தனது மகன் இழைத்த துரோகத்திற்கு எதையும் செய்யத் தயாராக இருந்த யாதவின் தந்தை, "சொல்லுங்க தம்பி" என்றார். "அப்போ வசுமதி கிட்ட போய் எனக்கு சொன்னதையே திரும்ப சொல்லுங்க" என்றான்.


அவர் குழப்பத்துடன் அவனைப் பார்க்க, "உங்க குடும்பத்துக்கோ வசுமதி குடும்பத்துக்கோ யாதவ், வைஷ்ணவி எந்த உறவும் இல்லை. ஆனால் வசுமதியோட கணவனான எனக்கு, யாதவ் ஃபெஸ்ட் ஃபிரென்டு. அவன் என்னோட சந்தோஷம். நான் வசுமதியோட சந்தோஷத்துக்கு குறுக்கா இருக்கிறவங்களை ஒதுக்க சொல்றிங்க.


கணவன் மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் வி்ட்டுக் கொடுக்கனும்னா வசுமதியும் என் சந்தோஷத்துக்காக விட்டுக் கொடுக்கலாமே. நான் யாருக்காவும் என் நண்பனையும் அவன் மனைவியான என் தோழியையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அதே போல என் மனைவியையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.


நான் அவளோட ஃபிரென்சுக்கு எப்படி மரியாதை கொடுக்கனும்னு எதிர்பார்ப்பாளோ அதே போல நானும் என் ஃபிரென்சுக்கு அவ மரியாதை கொடுக்கனும்னு எதிர்பார்ப்பேன். என்ட் இந்த விஷயத்தை பத்தி என் கிட்ட இதற்கு அப்புறமா பேசாதிங்க அங்கிள் பிளீஸ். இது என் பேர்சனல் சம்பந்தப்பட்டது.


நான் யார் கூட பேசனும். பேச கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியது நான். வேறு யாரும் இல்லை. உங்களுக்கும் இவங்களுக்கும் பிரச்சனைன்னா நீங்களும் இவங்களும் பாருங்க. அதுல என்னை இழுக்காதிங்க. மறுபடியும் மறுபடியும் எனக்கு எல்லாருக்கும் விளக்கம் சொல்ல முடியாது.


நீங்களே உங்க ஃபெமிலியில யாராவது இதை பத்தி என் கிட்ட மறுபடியும் பேச முன்னாடி சொல்லிருங்க. இதுக்கு மேலே என்னால முடியாது. ஒரே விஷயத்தைப் பேசிப் பேசி சலிச்சுப் போச்சு. உங்களை அவமானப் படுத்ததவோ இல்லை அவமரியாதை பண்ணவோ நான் இதைப் பேச இல்லை.


என் மனசுல இருக்கிறதை சொல்லனும்னு நினைச்சேன். நான் தெளிவா இருக்கேன். அதே போல வசுமதியும் தெளிவா இருந்தால் நல்லா இருக்கும். உங்க மனசை கஷ்டபடுத்தி இருந்தால் சொரி" என்று பிசிர் தட்டாத குரலில் தெளிவாக முடித்து மனப் பூர்வமாக மன்னிப்பையும் வேண்டினான்.


விஷ்ணுவின் தெளிவில் யாதவின் தந்தை அசந்துபோய் விட்டார். அவனிடம், "உங்க பேச்சுல உண்மையும் தெளிவும் நல்லாவே இருக்கு. அதனால வசுமதியோட வாழ்க்கையைப் பத்தி நான் இனி கவலைப்பட போறது இல்லை. அவளை நல்லா பார்த்துக்கொங்க. இதைப் பத்தி என் குடும்பத்து கிட்ட நானே பேசுறேன்" என்று தோள் தட்டி விட்டு மற்ற இருவரையும் அழுத்தமாகப் பார்த்து விடைப் பெற்றார்.


யாதவ் வைஷ்ணவியின் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டவன், விஷ்ணுவிடம், "மச்சான் நீ போய் உன் ஃபெமிலியைப் பாரு. நாங்க இங்கே இருக்கோம். எங்களால உனக்கு பிரச்சனை வர கூடாது போ" என்று கூற, விஷ்ணு, "டேய்..." என்க, "போ" என்றான் யாதவ் அழுத்தமாக.


அவனுடைய சொல்லை மீற முடியாமல் அங்கிருந்து நகர வைஷூ, "நாம வீட்டுக்கு போலாமா அத்தான்?" என்றாள் கலங்கிய குரலில். அவளுடைய 'அத்தான்' என்ற சொல்லில் சிறு கீற்றுப் புன்னகையுடன் வைஷூவை ஏறிட்டவன், "கௌதம் காவ்யா கூட வருவான். அவனோட பேசிட்டு போலாம்" என்றான்.


யாதவை தான் அத்தான் என்று அழைத்தோம் என்பது அவளுடைய நினைவிலேயே இல்லை. அவளுடைய மனம் முழுவதும் இங்கு வந்ததில் இருந்து அவள் கேட்ட பேச்சுக்களையே சுற்றிச் சுற்றி வந்தது. யாதவ் அன்று தன்னிடம் வழங்கிய தன்னுடைய மொபைலை எடுத்து எண்ணங்களை திசைத் திருப்ப கேம் விளையாட ஆரம்பித்தாள்.


கௌதமுடன் காவ்யா ஜோடியிட்டு புன்னகையுடன் நுழைந்தவள் சாத்விக் - சனா ஜோடிக்கு வாழ்த்தை தெரிவித்து யாதவிடம் வந்தார்கள். அவர்கள் வந்த பிறகு வைஷூவும் கதை வளவளப்பில் நடந்ததை மறந்து அவர்களோடு ஒன்றினாள்.


நால்வரும் சிரித்துப் பேசியவர்கள் சனா -சாத்விக், அபி - கார்த்திக்கிடம் விடைப் பெற்று தங்கள் வீடுகளை அடைந்தனர். அதன் பிறகு ஒவ்வொருவராக விடைப் பெற்று தங்கள் இல்லைத்தை நோக்கிச் செல்ல சாத்விக் -சனா இருவருக்கும் அவ் ஹோட்டலின் அறையிலேயே தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


கார்த்திக், அபி இருவரும் அனைத்தையும் பார்த்து வெளியேற சாத்விக் சனா இருவருமே உள் நுழையவும் சரியாக இருந்தது. சாத்விக், "ஆர்யன்" என்று அழைக்க கார்த்திக்கும் அவனை என்ன என்று பார்த்தான். "இன்னைக்கு பங்கஷன் சூப்பரா இருந்தது. குறைன்னு ஒரு சின்ன துரும்பும் இல்லை" என்றவன் தனது பொகெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து அவனிடம் நீட்டினான்.


கார்த்திக் சிறு புன்னகையுடன், "இது என்ன?" என்று கேட்க, "பிரிச்சுப் பாரு. உனக்கே புரியும்" என்றான் சாத்விக். கார்த்திக் அதைப் பிரிக்க அதில் நாளை காலை கார்த்திக் அபி இருவரும் பெரிஸில் இருபது நாட்கள் ஹனிமூனைக் கொண்டாடுவதற்காக டிகெட்டுகள் இருந்தது.


கார்த்திக்கின் புன்னகை மேலும் விரிந்து அபியைப் பார்க்க அவளும் புரிந்துக் கொண்டு அங்கிருந்த அவளுடைய பேர்கை எடுத்து அதில் ஒரு கவரை எடுத்து சாத்விக்கிடம் நீட்டினாள். சாத்விக் சனாவைப் பார்க்க அவளே அதை வாங்கிக் கொண்டாள்.


அதை சனா பிரித்துப் பார்த்து சாத்விக்கிடம், "நாளைக்கு ஈவீனிங் நாம இரண்டு பேரும் ஸ்விட்சலாந்து போறதுக்கான டிகெட். இருபது நாள்ல ரிடன் வரனும்" என்று வெட்கத்தின் சாயலுடன் கூற, "நீ பண்ண உருப்படியான ஒரு வேலை" என்று கார்த்திக்கை சீண்டினான் சாத்விக்.


"போடா டேய்" என்று சிரிப்புடன் விடைப் பெற்று வெளியேறியவர்கள் தங்கள் இல்லத்திற்குச் செல்ல சாத்விக், "ஹனிமூன் போலாமா பேபி?" என்று காதுமடலில் இதழ்கள் உரச வினவ வெட்கமும் கிறக்கமும் மேலிட சாத்விக்கின் மார்பினுள் புதைந்தாள் அவனின் ஜானு.


சாத்விக் சனா இருவருமே தங்கள் உலகத்தில் இருந்தனர். அபி கார்த்திக் இருவரும் வீட்டிற்கு வந்தவுடன் அபியிடம், "நீ போய் சனா ரூம்ல குளிச்சிட்டு அத்தையைப் பார்த்துட்டு ரூமுக்கு வா" என்று அனுப்பி வைத்தான்.


இது போன்று அடிக்கடி நிகழ்வதால் அபியும் குளித்து வந்தவள் தன் தாயைப் பார்த்தவள் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்து நெற்றியில் இதழ்பதித்து அங்கிருந்து வெளியேறி அறைக்குள் செல்ல முதலிரவைக் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.


"மாமா" என்று வெட்கம் மேலிட அழைக்க அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டவன், அவள் தோளில் தன் தாடையைப் பதித்து, "நாளைக்கு ஹனீமூன் கொண்டாட இன்னிக்கு ரியசல் பார்க்கலாம்" என்று அவளை பேசவிடாமல் இதழ்களைச் சிறைச் செய்து அவளைக் கையிலேந்தி மஞ்சத்தில் வீழ்ந்தான்.


அடுத்த நாள் இரு ஜோடிகளும் தேனிலவைக் கொண்டாடச் செல்ல அவர்கள் திரும்பி வரும் போது பல அதிர்ச்சியான தகவல்கள் அவர்களுக்காக காத்திருக்கும் என்பதோ, அடுத்தடுத்து மற்ற இரு ஜோடிகளின் வாழ்க்கையிலும் எதிர்பாரா பல சம்பவங்கள் நடக்க இருக்கின்றனை என்பதை விதி அறிந்து வைத்து இருந்தது.


சாத்விக் தேனிலவைக் கொண்டாடச் செல்ல முன் கார்த்திக்கின் குடும்பத்தைப் பற்றி அறிய தொடர்பு கொண்ட டிடெக்டிவ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அஞ்சலியைப் பற்றிய முழுமையான தகவல்களை தான் திரும்பி வந்தவுடன் சமர்ப்பிக்குமாறு கூறியே விடைப் பெற்றான்.


விஷ்ணு அவர்களின் வரவேற்பில் கலந்துக் கொண்ட பின் தனது வீட்டிற்கு தன் குடும்பத்தோடு வருகைத் தந்தவன் காரை நிறுத்தி விட்டு தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான். அவனுடைய கோபத்தைப் பார்த்த வசுமதி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து நின்றாள்.


அவள் அருகில் வருகை தந்த தங்கம், "வசு" என்று தோள் தொட அடக்கி வைத்த அழுகையை அவரை அணைத்து சிதறவிட்டாள். வசுமதி, "நான் வேணூன்னு பேச இல்லை அத்தை. என்னை மீறி வருது. அவங்களை பார்த்தாலே எனக்கு பண்ண துரோகம் நினைவு வர என்னால எப்படி அமைதியா இருக்க முடியும்? நானும் சாதாரண மனிஷி தான் அத்தை.


என்னை யாருமே புரிஞ்சிக்க இல்லை. மித்து மாமா என்னை வெறுத்து பார்க்குறாரு. இவரு என் மேலே கோபமா இருக்காரு. உங்க யாருக்கும் என்னை பிடிக்கவும் இல்லை. நான் என்ன பண்றது? என் காயம் ஏன் யாருக்கும் புரியல்லை?" என்று மொழிந்து ஏங்கி ஏங்கி அழுதாள்.


தாயிடம் இரவில் குடிக்க எதுவும் வேண்டாம் என்று கூற அறையில் இருந்து வெளி வந்த விஷ்ணு இவள் கூறியவற்றைக் கேட்டு அவள் மேல் இருந்த கோபம் பறந்தோடியது. ஆனாலும் அவளுக்கு வைஷூவிடம் காரணத்தைக் கேட்காமல் விட்ட தவறை அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று முடிவெடுத்தான்.


"ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருக்காம். நீ ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்குற. மறு பக்கத்தை பார்க்கலாமே வசுமா" என்று ஆதூரமாய் தலையை வருட, "வேண்டாம் அத்தை. இதுக்கு அப்புறமா அவங்களைப் பத்தி எதுவுமே பேச வேண்டாம். நான் ஒதுங்கியே இருந்தால் பிரச்சனை இல்லை" என்று தீர்க்கமான முடிவைக் கூறி மாடியேறினாள்.


தங்கம், "வைஷ்ணவி பக்கத்து ஞாயாயத்தைக் கேட்க நீ கொஞ்சமாவது முயற்சி பண்ணலாம் வசு" என்று செல்பவளின் முதுகைப் பார்த்து புலம்பினார். வசுமதி மாடியேறுவதைப் பார்த்த விஷ்ணு அவசரமாக அறைக்குள் புகுந்து பல்கனியிற்குச் சென்று நின்றான்.


அவன் பல்கனியில் இருப்பதைப் பார்த்தவள் குளியலறைக்குள் புகுந்து தன்னைச் சுத்தப்படுத்தி அவன் பின்னே சென்று நின்றாள். "உங்களை அவமானப்படுத்த நான் அப்படி பேச இல்லை. என்னை மீறி ஒரு ஆத்திரத்துல பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்க" என்று உரைத்து கட்டிலில் ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.


விஷ்ணுவின் முகத்தில் அவள் பேச்சில் புன்னகை இழையோட வெளிக்காற்றை சிறிது நேரம் சுவாசித்து அவனும் மற்றைய புறத்தில் படுத்துக் கொண்டான்.


யாதவ் வைஷ்ணவி இருவரும் தங்கள் இல்லத்தை அடைய காவ்யாவும் இன்று இருப்பதால் யாதவின் வீட்டிற்கே கௌதமும் வருகைத் தந்தான். நால்வரும் தங்களைச் சுத்தபடுத்தி வரவேற்பரைக்குச் சென்று அமர வைஷூ அனைவருக்கும் குடிக்க பாலை எடுக்கச் சென்றாள்.


யாதவ் சிந்தையில் இருப்பதைப் பார்த்த காவ்யா, "என்னாச்சு அண்ணா?" என்று வினவ, "நதிங்டா" என்று உரைத்து வெளியே சென்றான். கௌதமும் அவனைத் தொடர வைஷூ காவ்யாவிற்கு ஒரு கிளாசை வழங்கி, யாதவ் கௌதமிற்கும் சென்று கொடுத்து தானும் பருகி தனக்கும், காவ்யாவிற்கும் ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று உறங்கினாள்.


காவ்யாவிற்கும் களைப்பு அதிகமாய் தெரிந்ததால் அவளோடு சென்று உறங்க ஆண்கள் இருவருமே வெளியே பேசினர். யாதவ், "இந்த கேசுல எந்த முன்னேற்றமும் இல்லையேடா. அந்த பொண்ணுங்க காணாமல் போது எப்படி? தற்கொலை பண்ணிய பொண்ணுக்கு என்ன நடந்தது? இந்த இரண்டு கேசுமே ஒன்னா?


இல்லை தனித் தனி கேசான்னு யோசிக்கும் போது தலை வலிகக்குது மச்சான். இப்போ தனித் தனியா தேடுறோம். ஒரு வேளை இரண்டு கேசுமே ஒன்னா இருந்தால்?" என்று கௌதமைப் பார்த்து வினவ, "நான் எதுவும் உன் கிட்ட கேட்க கூடாதுன்னு கேசைப் பத்தி பேசுறியா?" என்றான் கிண்டலுடன்.


யாதவ், "நோடா. அதைப் பத்தி பேசும் போது நான் அதிகமா யோசிக்கிறேன். என்னால வேறு எதிலேயும் கன்சன்ட்ரேட் பண்ண முடியல்லை. வைஷ்ணவி ஒவ்வொருத்தர் கிட்டவும் பேச்சு வாங்கும் போது நாமளும் ஒரு காரணமோன்னு மனசு துடிக்குது. நவி சொன்னபடியே விட்டு இருக்கலாமோன்னு தோணுது.


ஆனால் அந்த நிலைமியில அவ கழுத்துல நான் கட்டின தாலி மட்டும் தான் அவளைக் காப்பாத்திச்சு. அவளுக்கு தாலி கட்டும் போதே எந்த பிரச்சனை வந்தாலும் அவ கூட சேர்ந்து போராடனும்; சமாளிக்கனும்; பாதுகாக்கனும்னு முடிவு எடுத்தேன். ஆனால் எமோஷனலா எல்லாருமே அவளை குறை சொல்லும் போது எனக்கே ஒரு மாதிரி இருக்குடா.


உண்மையை நானே சொல்லலாம்னு யோசிச்சாலும் அவங்க யாருமே வைஷ்ணவி மேலே நம்பிக்கை வைக்காதது என் கோபத்தை கிளறி சொல்ல முடியாமல் தடுக்குது. என்னை நம்பாமல் இருக்கிறதுல ஞாயம் இருக்கு. ஆனால் வைஷ்ணவியை நம்பலாமே. அவ தப்பு பண்ண மாட்டாளே.


எல்லோரையும் விட அவளைப் பத்தி வசுமதியிற்கு தெரியும். அவ நம்பி இருக்கலாமேடா. அவ இப்படி பண்ணுவான்னு நான் எதிர்ப்பார்க்க இல்லை. சின்ன வயசுல இருந்து வசுமதிக்கு என்னைப் பத்தியும் நல்லா தெரியும். ஆனாலும் அவ என்னையும் நம்ப இல்லை.


இந்த பிரச்சனைக்கு காரணமே அவ தான்னு தெரிஞ்சா என்ன பண்ணுவா? நான் தாலி கட்டினதுக்கு முழுக் காரணம் வசுமதின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். வசுமதியிற்கு அது தெரியாமல் அவ வாய்க்கு வந்ததை தப்பா பேசும் போது அவ மேலே இருக்கிற மரியாதை, பாசம் குறைஞ்சிருமோன்னு பயமா இருக்கு.


ஏன்னா வசுமதி நான் வளர்த்த பொண்ணுடா. அவ தப்பு பண்ண மாட்டா. ஞாயமா நடந்துப்பான்னு எதிர்பார்த்தேன். இல்லைடா அவ சுயநலமா இருக்கான்னு இப்போ புரியிது.


நவியை நான் கையில தூக்கும் போது எனக்கு எட்டு வயசு. சின்ன பிங்க் டவள்ள சுத்தி என் கையில கொடுத்தாங்க. ரோஜாப்பூ போல இருந்தா. ரொம் சொஃப்டா அழகா சின்னதா இருந்தா. அவளுக்கு வைஷ்ணவின்னு பேர் வைக்கும் போது நான் அவளை வித்தியாசமா கூப்பிடனும்னு நவின்னு கூப்பிடுவேன்.


ஒரு குழந்தை இருக்கிற வீட்டுக்கு இன்னொரு குழந்தை வரும் போது மூத்த குழந்தை மனசளவுல அதிகம் பாதிக்கப்படுவாங்கன்னு அப்பா என் கிட்ட சொல்லி வசுமதியை பார்த்துக்க சொன்னாரு. அவ நான் எதை சொன்னாலுமே கேட்டுப்பா. அதான் அந்த பொறுப்பை எனக்கு கொடுத்தாரு.


வசுமதி அந்த மாதிரி பாதிக்கப்படக் கூடாதுன்னு தான் நான் நவி பக்கத்துல போகவும் இல்லை நவின்னு கூப்பிட்டு செல்லம் கொஞ்சவும் இல்லை. சின்ன வயசுல இருந்தே வைஷ்ணவியை அவ என் பக்கத்துல கூட விட்டது இல்லை. நான் நவியை தூக்கினாலே அழுவா.


அவ அழக் கூடாதுங்குற ஒரே காரணத்துக்காக நவியை பக்கத்துல விடமாட்டேன். போகப் போக நவியும் என்னை விட்டு தூரமாவே இருக்க ஆரம்பிச்சா. கொஞ்ச நாள் கழிச்சு வீட்டுக்கு போன போது என்னை கண்டாலே பயந்து ஓட ஆரம்பிச்சா. நான ஒரு முறை அவ கிட்ட பேச போய் அவ பேச இல்லை. குரலை கொஞ்சம் உயர்த்தவுமே நவி நடுங்கி மூனு நாள் காய்ச்சல்ல விழுந்துட்டா.


அதுல இருந்து நானும் அவ பக்கத்துல போக மாட்டேன். தூரத்துல இருந்தே அவளை பார்த்து ஒதுங்க ஆரம்பிச்சேன். அண்ணா கூட நவி நல்லா விளையாடுவா. எந்த நேரமுமே அண்ணா கையிலேயே இருப்பா. அண்ணாவுக்கு முத்தம் கொடுக்கும் போது எனக்கும் அவ கொடுக்க மாட்டாளான்னு ஏக்கமா இருக்கும்.


நானும் அந்த வீட்டு பையன் தான்டா. அவ தான் கடைசி இளவரசி எங்க வீட்டுக்கு. எனக்கும் அவ கூட பேசனும்; விளையாடனும்; கொஞ்சனும்னு ஆசை இருக்குமேடா. என்னைப் பார்த்தாலே அவ பயந்து நடுங்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்டா.


இதெல்லாம் இப்போ யோசிக்கும் போது நவி என்னை நெருங்கக் கூடாதுன்னு ஏன் வசுமதி என்னை வச்சு அவ மனசுல பயப்படுறது போல ஏதாவது சொல்லி இருக்கக் கூடாதுன்னு யோசிக்கிறேன்? வசுமதிக்கு இதைப் போல கிருமினல் புத்தி இல்லைன்னு ஒரு மனசு வாதிடுது.


இருந்தும் ஏதோ ஒன்னு இப்போ நடக்குறதை வச்சு பார்க்கும் போது யோசிக்க சொல்லுது. நான் நவியைப் பத்தி யோசிச்சாலே டீபா அவசியமே இல்லாமல் யோசிக்கிறேன்னு எனக்கே புரியிது. என்ன பண்றதுன்னே தெரியல்லை. அதான் டொபிக்கை மாத்தினேன்" என்று தலையைப் பிடித்து அமர்ந்தான்.


யாதவின் மனதில் உள்ளவற்றில் உள்ள ஞாயங்களை உணர்ந்தே இருந்தான் கௌதம். சிறு வயதில் ஒரு குழந்தை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இன்னொரு குழந்தையை தன்னை விட்டு ஒதுக்கினாலும், தற்போது அவன் வாலிப வயதைக் அடைந்து முதிர்ந்து இருந்தாலும், தான் ஒதுக்கிய சிறு குழந்தையின் ஸ்பரிசம், அன்பு, பாசத்தை அனுபவிக்கவில்லையே என்னும் ஏக்கம் இன்னும் அவன் மனதில் ஓடுவதை உணர்ந்தான்.


சிறு குழந்தை என்றால் எவருக்குப் பிடிக்காது? தான் பாசத்திற்காக ஏங்கும் சிறு குழந்தை தன்னைப் பார்த்தாலே அஞ்சி நடுங்கும் போது உருவாகும் வலி மிகவும் கொடியது. அதை யாதவ் அனுபவித்து இருந்தான்; இன்னும் அனுபவிக்கிறான். அச்சிறு குழந்தையின் பாசத்திற்காக இன்னும் அவன் மனம் ஏங்குவது விந்தையிலும் விந்தை.


வசுமதி ஏன் யாதவின் விம்பத்தை வைஷ்ணவியின் மனதில் பயப்படும் வகையில் உருவாக்கி இருக்கக் கூடாது? என்ற எண்ணம் கௌதமிற்கும் தற்போது மேலோங்கி இருந்தது. ஆனால் முதலில் யாதவின் மனநிலையை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தான்.


கௌதம், "மச்சான் உன் ஆசை இன்னும் நிறைவேற சான்ஸ் இருக்குடா" என்று உரைக்க, "என்ன சொல்ற?" என்றான் யாதவ். "வைஷூ இப்போ உன்னோட மனைவி. அவ கிட்ட ஒரு முத்தம் ஆயிரம் முத்தம் வாங்கலாம். அவளை ஸ்பரிசிக்கிறதுல உன்னை தவிற வேற யாருக்கு உரிமை இருக்கு? அவளோட பாசத்தை இப்போவும் உன்னால அனுபவிக்கலாம்டா" என்றான்.


யாதவ், "டேய் இவ பெரிய பொண்ணுடா. நான் ஆசைப்படுறது குட்டி வைஷூவோட பாசத்துக்கு" என்று உரைக்க, "அதான்டா நான் சொல்றேன். இரண்டு பேருமே ஒரே ஆளு. கடவுள் என்ன பண்ணாலும் ஒரு நன்மை இருக்குடா. சின்ன வயசுல நீ இழந்ததை ஈடுகட்றதுக்காகவே அவளை உன் மனைவியாக்கி இருக்கலாமே" என்றான்.


யாதவ், "நான் சொல்றது உனக்கு புரியல்லைடா. இவ வேற டாபார்ட்மன்ட். அவ (குட்டி வைஷூ) வேற டிபார்ட்மன்ட்டா. உனக்கு இதை விட தெளிவா சொல்ல முடியாது" என்று கூறி வானத்தை வெறிக்க, "வைஷூ மறுபடியும் சின்ன குழந்தையா மாற வாய்ப்பு இல்லை. ஆனால் உனக்கும் அவளுக்கும் பிறக்குற வைஷூ சாயலில் இருக்கிற குழந்தையை நீ ஆசைப்பட்டது போல கொஞ்சலாம்.


பாசத்தைக் காட்டலாம். அவ அன்பை பெறலாம். அவளை ஸ்பரிசிக்கலாம். சின்ன வயசுல நீ எதை எல்லாம் பண்ண ஆசைப்பட்டியோ அதைப் பண்ணலாம். நீ இழந்ததை திரும்பப் பெறலாம்" என்று கௌதம் பேசிக் கொண்டே செல்ல யாதவ் அவனைப் பார்த்து அதிர்ந்து விழித்தான்.



#########

இனிமேல் டெய்லி போடுறேன். ஒரு பேர்சனல் வேலை அதான் யூ.டி போட முடியல்லை சொரி.

##########

கருத்துக்களைப் பகிர,


 
Status
Not open for further replies.
Top