All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் 'கண்சிமிட்டும் தென்றலே (நீ வேண்டும் நான் வாழ பகுதி 2) கதைக்கான கதைத்திரி

Status
Not open for further replies.

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24669


கண்சிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 15




யாதவ் அதிர்ந்து தன்னையே பார்ப்பதைப் பார்த்த கௌதம் புரியாமல், "டேய் எதுக்குடா இப்போ என்ன சைட் அடிக்கிற? அந்த உரிமை என் கவிக்கு மட்டும் தான் இருக்கு" என்று கோபத்துடன் கூற முதுகில் 'சுளீர்' என்று அடித்தான் யாதவ்.


"ஏதாவது கடுப்படிச்ச மவனே கொன்னுடுவேன். நீ என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறியா எருமை?" என்று கோபத்துடன் கேட்க, "நான் என்ன ஊர் உலகத்துல நடக்காததையா பேசினேன்? உண்மையை தானே சொன்னேன். இதுல என்ன தப்பு இருக்கு? என்ன இருந்தாலும் நீங்க இரண்டு பேரும் வாழ்ந்து குழந்தை பெத்துக்க போறிங்க. இதுல என்ன தப்பு?" என்றான்.


யாதவ், "டேய், நான் இதுவரைக்கும் இப்படியெல்லாம் கனவுல கூட நினைச்சு பார்க்கவும் இல்லைடா" என்று தடுமாற்றத்துடன் மொழிய, "லூசா மச்சான் நீ? வைஷூ இப்போ உன் மனைவி. எப்படியும் உனக்கு ஒரு நாள் குழந்தை பிறக்க போகுது. கொஞ்சம் யோசிச்சு பாரு" என்றவன், "முதல்ல கண்ணை மூடு" என்றான்.


யாதவும் அதே போல் கண்களை மூட, கௌதம், "நீ ஆசைப்பட்டது போல வைஷூவை அச்சுல வார்த்தது போல ஒரு குழந்தை. அந்த குழந்தையை உன் கையில கொடுக்குறாங்க. நீ வைஷூவை கையில தூக்கும் போது என்ன ஃபீல் பண்ணியோ அதே போல உணருர.


அந்த குழந்தை மேலே மத்தவங்களை விட உனக்கு தான் உரிமை அதிகம். ஏன்னா நீ தான் அவளோட அப்பா. அவ உன்னை விட்டு எங்கேயுமே போகாமல் உன் கைக்குள்ளேயே இருப்பா. நீ ஆசைப்பட்டது போல கொஞ்சலாம், தூக்கலாம் என்ட் இ.டி.சி (etc). எப்படி இருக்கு கற்பனை?" என்று அவன் கற்பனையைக் கலைக்க யாதவ் கண்களைத் திறந்தான்.


அவன் கண்களில் தெரிந்த மின்னலிலும் சந்தோஷத்திலும் கண்கள் கலங்கி இருந்தன. அந்த அளவிற்கு குட்டி வைஷூவின் பாசத்திற்காக ஏங்கி இருக்கிறான் என்பது தெளிவாகப் புரிந்தது கௌதமிற்கு. எப்போதுமே உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவன், குட்டி வைஷூவைப் பற்றி பேசும் போது அதிகமாக அவன் உணர்ச்சிவயப்படுவதை உணர்ந்தான்.


யாதவ், "வைஷூவை முதல்ல என் குடும்பமும் அவ குடு்ம்பமும் ஏத்துக்கனும்டா. அவ படிப்பை முடிக்கனும். இன்னும் அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கனும். அப்புறமா வாழ ஆரம்பிக்கலாம். அதைப் பத்தி இப்போ பேசுற ஐடியா எனக்கு இல்லைடா" என்றான் தெளிவாக.


கௌதம், "எனக்கு புரியிதுடா. எல்லாத்துக்குமே ஒரு காலம் வரும். அந்நாளுக்காக காத்து இருப்போம். என்ட், இப்போ கேசைப் பத்தி பேசலாம்" என்று யாதவும், கௌதமும் பெண்கள் காணாமல் செல்லும் வழக்கைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர்.


அடுத்த நாளும் அழகாய்ப் புலர ஆரம்பித்தது. வைஷூ காலையில் எழுந்து எப்போதும் வேலைகளை ஆரம்பிக்க காவ்யா அவளுக்கு உதவினாள். இருவருமே சேர்ந்து வேலைகளை முடித்து இருக்க ஆண்கள் இரவு நேரம் தாழ்த்தி உறங்கியதால் தற்போதே கண்விழித்து வந்தனர்.


அவர்களுக்கு வைஷூ காபியை வழங்கி விட்டு யாதவின் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். அவனுடைய காக்கி உடையை அயர்ன் செய்தவள் அவனுடைய ஷூவையும் பொலிஷ் போட்டு வைத்தாள். அவன் குளிக்க தேவையானவற்றை எடுத்து வைத்து தானும் குளித்து வெளியே வந்தாள்.


காவ்யாவும் தற்போதே கோயமுத்தூரிற்குச் செல்ல இருப்பதால் அவளும் தயாராகி வர நால்வருமே சாப்பிட்டு வீட்டிலிருந்து வெளியேறினர். காவ்யாவை கௌதம் அழைத்துச் செல்ல வைஷூவை யாதவ் அழைத்துச் சென்றான்.


வைஷூவை இறக்கி விட்டவன், "ஈவினிங் என்னால வர முடியுமான்னு தெரியல்லை நவி. வேலை இருக்கு. தனியா வரியா?" என்று வினவ, "அது பிரச்சனை இல்லை. நான் பஸ்ல பார்த்து வரேன்" என்று அவனிடம் இருந்து விடைப் பெற்றாள். அவர்கள் பேசுவதைக் கொண்டு யாதவே வைஷூவின் கணவன் என்பதை ஒரு பெண் அறிந்து புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.


வசுமதி விடுமுறையில் இருப்பதால் அவளுடைய பாடங்களை எடுப்பதற்காக ஒரு புதிய பேராசிரியரை வருவித்து இருந்தது கல்லூரி நிர்வாகம். அவள் காஞ்சனா. சிறுவயதில் தாய் இறந்து விட ஒற்றைப் பிள்ளையாய் இருந்த இவளை தாயாகவும், தந்தையாகவும் அரவணைத்துக் கொண்டார் அவளுடைய தந்தை.


தாய் இல்லாத குறையை நிவர்த்தி செய்ததோடு வேறு திருமணம் முடிக்காமல் மகளுக்காகவே வாழ்ந்து அவள் விரும்பிய படிப்பையும் படிக்க வைத்தார். அழகு, குணம் இரண்டுமே ஒன்றாய் சேர்ந்த பெண்ணை தந்தையே ஒரு நற் குணம் படைத்தவனை திருமணம் செய்து வைத்து இயற்கையை எய்தினார்.


அவனும் இவளைக் கண்மனி போல் காக்க திருமணம் செய்து இரு வருடங்கள் சந்தோஷமாக வாழ அவர்களின் காதலுக்கு அடையாளமாக அவளது மணி வயிற்றில் குழந்தை உதித்து இருந்தது. டாக்டரிடம் சென்று சந்தோஷத்துடன் திரும்பி வரும் வழியில் மழைக் காரணமாக மோட்டார் வண்டி வழுக்கிச் சென்று ஒரு லொறியுடன் மோத அவ்விடத்திலேயே கணவின் உயிரையும் குழந்தையின் உயிரையும் இழந்தாள்.


கண் முன்னே கணவன் இறந்ததை தாங்க முடியாமல் இரத்த வெள்ளத்தில் காஞ்சனா மயங்கிச் சரிய மூன்று மாதங்களுக்குப் பிறகு கண் விழித்தாள். கணவனுக்கும் உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதால் அவனுடைய பெற்றோரும் இவளை தங்கள் மகளாகவே பாவித்தனர்.


அவர்கள் வாடிவதங்கி கண்ணீரும் கம்பளையுமாக இருக்க அதன் பிறகே தன் குழந்தையையும் இழந்து விட்டாள் என்ற செய்தி அவளுக்கு பேரிடியாய் கிடைத்தது. துயரத்தில் மூழ்கி நான்கு மாதங்களில் உடல் நிலையில் சரியாகினாள். இருந்தும் அவளால் அத் துக்க சம்பவத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை.


அவளுடைய மனமாற்றத்திற்காக காஞ்சனாவின் மாமனார் தன்னுடைய நண்பரிடம் பேசி சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தனர். குடும்மத்திற்காக அவளுடைய மாமனார் கஷ்டப்படுவதை உணர்ந்து தானும் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தாள்.


அவள் வேலைக்கு தேடும் சந்தர்பத்திலேயே சாத்விக்கின் கல்லூரியில் வேலைக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்க இங்கே வந்தாள். தன்னுடைய கவலையில் இருந்து வெளியே வரவும் நிம்மதியான சூழலிற்காகவும் சந்தோஷமாக வருகைத் தந்தாள்.


முதல் பாட வேளையை முடித்து அடுத்தடுத்து பாடங்களை எடுக்க அவள் கற்பிக்கும் விதமும் அனைவருக்கும் பிடித்து இருந்தது. அவளுக்கும் மாற்றத்திற்காக பல வகையான குணங்களைக் கொண்ட மாணவர்களை சந்தித்ததில் சந்தோஷமாக இருந்தது. வைஷூவின் வகுப்பிற்கு வந்து கற்பிக்க அவர்களும் ஆசையாய் கற்றனர்.


இவ்வாறு இன்றைய தினம் அழகாய் கழிய அடுத்தடுத்து நாட்களும் வேகமாய் உருண்டோடின. அதற்கு இடையில் விஷ்ணு வசுமதியின் உறவில் பாரியளவு முன்னேற்றம் இல்லாவிடினும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து சிறு சிறு உதவிகளை தங்கள் இணைகளுக்கு புரியும் அளவிற்கு வந்திருந்திருந்தனர்.


வசுமதியும் கல்லூரியிற்கு வரும் முன் அங்கே வம்பிற்காகவே காத்திருக்கும் சிலருக்கும் தான் இரையாகாமல் இருக்க தன்னுடைய மனநிலையை முடிந்த அளவிற்கு சரிசெய்து தன் மனதை உறுதிப்படுத்தி விஷ்ணுவுடன் திருமணத்திற்குப் பிறகு முதல் நாள் கல்லூரியிற்குச் சென்றாள்.


விஷ்ணு வசுமதியின் பதட்டத்தை உணர்ந்து, "உங்களை கோப்படுத்தவே சில பேர் பேசுவாங்க வசுமதி. நீங்க தான் உங்களை கட்டுப்படுத்திக்கனும். அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று அறிவுரை கூற அவளும் சரியென்று தலை ஆட்டினாள்.


வசுமதி நேரடியாக ஓய்வறைக்குச் செல்ல சிலர் அவளை பரிதாபத்துடன் பார்க்க சிலர் இளக்காரமாய் பார்த்தனர். சிலர் வேண்டும் என்றே அவள் மனதை குறி வைத்து சொற்களால் தாக்கினர்.


'இவ கிட்ட என்ன இல்லை? அப்படி இருந்தும் இவளை கல்யாணம் பண்ணவன் இவ தங்கச்சி கிட்ட என்ன இருக்குன்னு கல்யாணம் பண்ணி இருப்பான்'


'இவளோட திமிருக்கும் அகம்பாவத்துக்கும் இது தேவை தான்'


'இவ பணக்காரன்னு சொல்லவும் கல்யாணத்தை ஒத்துகிட்டு இருப்பா'


'இவளை விட இவ தங்கச்சி ரொம்ப அமைதியான சொஃப்டான பொண்ணு. அதான் இவளை விட்டுட்டு அவளை பிடிச்சிருப்பான் இவ மாமா'


'தங்கச்சியும் கைக்காரி தான். இல்லைன்னா கல்யாண நேரமே தாலியோட தில்லா வந்திருப்பாளா?'


'இவ தங்கச்சி குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவ புருஷன் கூட எப்போவுமே கோலேஜ் வரா. இவளும் அதே போல புருஷன் கூட வரா. என்ன குடும்பமோ' என்றெல்லாம் காரி உமிழாத குறையாகப் பேசினர்.


முதலில் தன்னைக் கட்டுப்படுத்தியவள் நேரம் செல்லச் செல்ல தன்னைக் குறைவாகப் பேசி வைஷூவை உயர்த்திப் பேசியதிலும் இறுதியாக காதுபடவே பேசியதிலும் கொதித்தெழுந்தாள் வசுமதி. தான் கல்லூரியில் ஒரு பேராசிரியர் என்பதை மறந்து விட்டாள்.


முதல் வகுப்பே வைஷ்ணவியின் வகுப்பு என்பதால் கொதிக்கும் கோபத்தைக் குறைக்காமல் தன் கோபத்திற்கு வைஷ்ணவியை வடிகாலாக்கும் நோக்கத்தில் குதறும் வேகத்தில் நுழைந்தாள்.


மாணவர்கள் ஆவலாக வைஷ்ணவி, வசுமதியைப் பார்க்க வைஷ்ணவியோ எப்போதும் போல் அமர்ந்து இருந்தாள். அவள் தற்போது ஒரு மாணவியாக மட்டுமே இருக்க தங்கள் குடும்ப விஷயங்களை கல்லூரியில் எடுக்க விரும்பவில்லை.


வசுமதி அவளுக்கு குற்ற உணர்ச்சி சிறிதேனும் இல்லை என்று தவறாக நினைத்து கொழுந்து விட்டெறியும் கோபத்தில் எண்ணெய்யை அவளே இதைக் கொண்டு ஊற்றிக் கொண்டாள். அங்கே தான் ஒரு பேராசிரியர் மாத்திரமே வைஷ்ணவி தன்னுடைய மாணவி என்பதை மறந்து போனாள்.


வைஷ்ணவியிற்கு எப்போதும் மனதில் படியாத பாடங்களை எடுத்து அவளை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொருவரையும் எழுப்பி கேள்விகளைக் கேட்க இறுதியாக வைஷூவை எழுப்பி கேள்விகளைக் கேட்டாள். அவள் பதில் கூற சிரமப்படட்டாள் எப்போதும் போல்.


அவளை எழுப்பி நிற்க வைத்து வசுமதி, "இது ஒன்னும் தெரியாதே. படிக்கிறதை தவிர மத்த அத்தனை வேலையையும் பார்க்க வேண்டியது. அடுத்தவனுக்கு சொந்தமானதை திருடுறது உனக்கு நல்லா தெரியுதே. கொஞ்சமாச்சும் படிக்கிறதைப் பத்தி மட்டுமே யோசிச்சு இருந்தால் தான் கூடப் பிறந்த அக்கா கல்யாணம் பண்ண வேண்டியவனை மயக்கி தாலி வாங்கி இருப்பியா?


உன் கிட்ட இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? கேர்ள்ஸ் என்ட் போய்ஸ் இவ கிட்ட ஜாக்கிரதையாவே இருங்க. தயவு பண்ணி உங்க குடும்பத்து ஆளுங்களை இவளுக்கு அறிமுகப்படுத்தி வச்சிராதிங்க. அப்புறமா அவங்களை உங்களுக்கு எதிராவே திருப்பி விட்டு அவ பக்கம் இழுத்துப்பா.


இதைப் போல கேடு கெட்டவ எங்கேயும் இல்லை. உன்னைப் போல கேவலமானவளை என் கிளாசுல வச்சு படிப்பிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மத்தவங்களையும் நீ கெடுத்துடுவ. கெட் அவுட் ஃபுரொம் மை கிளாஸ்" என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கத்தி வெளியே அனுப்பி விட்டாள்.


வசுமதி கல்லூரியில் வைத்து தன்னை இந்த அளவிற்கு அவமானப்படுத்துவாள் என்பதை எதிர்ப்பார்க்கவில்லை. அவள் பேசிக் கொண்டே செல்ல கண்களில் இருந்து வெளியாகத் துடித்த கண்ணீரை அடக்கிக் கொண்டாள். இதழ்கடித்து கேவி வரும் அழுகையை அடக்கி வகுப்பில் இருந்து மௌனமாய் வெளியேறினாள்.


அவள் கோபத்தை வெளிக்காட்டிய பிறகே வசுமதியிற்கு மனநிலை இலகுவாகியது. ஆனால் அதன் விளைவுகளை நிச்சயமாக அவள் எதிர்ப்பார்த்து இருக்கமாட்டாள் என்பது திண்ணம்.


வைஷூவிற்கு தற்போது கத்தி அழுகக் கூட முடியாத நிலை. இருந்தும் கன்டீனில் அமர்ந்து தலைக் கவிழ்ந்துக் கொண்டாள். 'தன்னுடைய வாழ்க்கை மூன்று மணி நேரத்தில் திசைமாறும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லையே. இதில் எதுவுமே அவள் தவறு இல்லையே' என்று நினைக்க தன்னப் பற்றி எண்ணியே அவளுக்கு கழிவிரக்கம் தோன்றியது.


வசுமதியின் பாடம் முடிந்த பிறகு அடுத்த பாடங்களிற்குச் செல்ல வசுமதியின் பேச்சு காற்றோடு காற்றாக முழுக் கல்லூரிக்கும் பரவி இருந்தது. அதனால் அவளை அதிகமானோர் அருவெறுப்புடனும், சிலர் இகழ்ச்சியாகவும், ஓர் சிலர் வக்கிர நோக்கத்துடனும் பார்க்க கூனிக் குறுகிப் போய் விட்டாள்.


மற்ற பேராசிரியர்களும் வசுமதியே வைஷூவைப் பற்றிப் பேசிய தைரியத்தில் அவர்களுமே பாட நேரங்களில் கடும் சொற்களால் வைஷூவைக் குத்திக் கிழிக்க ஆரம்பித்தனர். அவளை வகுப்பிற்குள் எடுக்காமல் ஏதாவது காரணம் கூறி வெளியே அனுப்பி வைத்தனர்.


ஒவ்வொருவரின் சொற்களிலுமே அவள் உடைந்தாலும் அதை எதையுமே அவள் யாதவிடம் கூறவும் இல்லை. வெளிக்காட்டவும் இல்லை. இரவு அவன் உறங்கிய பிறகு படிப்பதாகப் பாசாங்கு செய்து சத்தம் வராமல் அழுது கரைந்தாள்.


இவ்வாறே வசுமதியும் மற்ற பேராசிரியர்களும் வைஷூவைக் காயப்படுத்துவதும் வகுப்பில் இருந்து வெளியேற்றுவதும் வாடிக்கையாகிப் போக அவள் மாணவர்கள் முதல் மற்ற மாணவர்களும் அவளைக் கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அனைத்திற்குமே பொறுமையாக இருந்தாள்.


அவளுக்கு ஆதரவாக இருந்தது வகுப்பில் ஒரேயொரு மாணவன் மட்டுமே. அவனுக்கு ஆரம்பத்தில் இருந்து வைஷ்ணவியின் அமைதியும், அறிவும் எப்போதுமே பிடிக்கும். அவள் மீது கொண்டிருக்கும் அன்பே தவிற காதலோ, ஈர்ப்பை இல்லை. அவனே தன்னுடைய நோட் புத்தகங்களை அவளுக்கு படிக்க வழங்கி உதவி செய்தான்.


ஒரு முறை அதைப் பார்த்த வசுமதி, "இவனையும் நீ விட்டு வைக்க இல்லையா?" என்று இகழ்ச்சியுடன் கூறி விட்டு செல்ல அதைக் கேட்ட மற்ற மாணவர்களும் வக்கிரமாய்ப் பேச காஞ்சனாவின் அதட்டலில் அடங்கினர். வசுமதியைப் பற்றி அவள் தவறாகக் கேள்வி உற்றாலும் அவளால் வைஷூவை தவறாக நினைக்க முடியவில்லை


இன்று அவளுடன் பேச வேண்டும் என்று வருகைத் தர வசுமதி பேசிச் சென்றதைப் பார்த்து அவளுக்கே கஷ்டமாக இருக்க அதன் பிறகு மாணவர்கள் கிண்டலடிக்க ஆரம்பிக்க அவளது அதட்டலில் நிறுத்தினாள்.


வைஷூவையும், அவளுக்கு உதவுபவனான ரஞ்சித்தையும் நெருங்கியவள், "உங்க இரண்டு பேருக்கும் இடையில இருக்கிறது தப்பான உறவு இல்லைன்னு எனக்கு புரியிது. மத்தவங்க ஆயிரம் பேசுவாங்க. அதை காது கொடுத்து வாங்காதிங்க. உங்க படிப்புல மட்டும் கன்சன்ட்ரேட் பண்ணுங்க. என்ன உதவி வேணூன்னாலும் கேளுங்க நான் பண்றேன்" என்று அறிவுரைக் கூறி நகர்ந்தாள்.


வசுமதியிற்கு மற்றவர்களும் வைஷூவை அவமானப்படுத்துவது காதை எட்டினாலும் ஏனென்று சென்று பார்க்க அவள் மனது இடம் கொடுக்கவில்லை. அவள் தனக்கு இழைத்த துரோகத்திற்கு இது தேவை தான் என்று அமைதியாக இருந்தாள். அவளுடைய வன்மம் கண்ணை மறைத்து இருந்தது உண்மையே.


"நான் தப்பான பொண்ணு இல்லை. தயவு செஞ்சு புரிஞ்சிக்கோங்க அக்கா. எல்லாருமே என்னை தப்பா பேசுறாங்க அக்கா. எனக்கு ரொம்ப வலிக்குது அக்கா" என்று ஒவ்வொரு நாள் இரவும் அழுது கண்ணீர் வடித்தாள் யாரும் அறியாமல்.


இவ்வாறே நான்கு நாட்கள் கடக்க அன்று யாதவ் கேஸ் விஷயமாக அலைந்துத் திரிய அவனுக்கு ஒரு மொபைல் அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று, "ஹலோ" என்றான். "சேர், நான் தேன்மொழி பேசுறேன் சேர்" என்ற குரல் கேட்க, "யாரது?" என்று குழம்பிக் கேட்டான்.


தேன்மொழி, "அன்னிக்கு நான் தனியா ரோட்ல போகும் போது ரௌடி பசங்க தொல்லை பண்ணும் போது காப்பாத்தினிங்களே சேர். மறந்துட்டிங்களா?" என்று வருந்திய குரலில் கேட்டாள்.


யாதவ், "ஓஓ சொரி மா. வேலையில மறந்து போயிட்டேன். சொல்லுங்க என்ன விஷயம்? மறுபடியும் அந்த ரௌடிப் பசங்க தொல்லைப் பண்றாங்களா?" என்று கோபத்துடன் வினவ, "அது இல்லை சேர். இது வேற. உங்க மனைவி வைஷ்ணவி பத்தின விஷயம்" என்றாள்.


தன்னையறியாது பதட்டத்தை குரலில் வெளிப்படுத்தி, "நவியிக்கு என்னாச்சு?" என்று வினவ தேன்மொழி தன் கல்லூரியில் நடப்பவற்றை அனைத்தையுமே கூறினாள்.


அன்று வைஷ்ணவி, யாதவைக் கல்லூரியின் வெளியே வைத்துப் பார்த்தது தேன்மொழி. தனக்கு சரியான நேரத்தில் உதவிய யாதவிற்கு அவனுடைய மனைவியைக் காப்பதற்காகவே அவனுக்கு அழைத்து விடயத்தைக் கூறினாள்.


அனைத்தையும் கேட்க கோபத்தில் முகமும் கண்களும் சிவந்து இரத்தக் கொதிப்புடன் நின்று இருந்தான். வைஷூ எதற்காக இத்தனை நாட்களாக தன்னிடம் இதைத் தெரிவிக்கவில்லை என்ற எண்ணம் மேலோங்க, "சரி மா. நீ அவளைப் பார்த்துக்கோ" என்று அழைப்பைத் துண்டித்தான்.


'நீயா சொல்றியா இல்லையான்னு பார்க்கலாம்' என்று மாலை வேலையை முடித்து வீட்டிற்குச் செல்ல வைஷூ அழுதவாறே களைப்பில் மேசையில் தலைவைத்துப் படுத்து இருந்தாள். காய்ந்த கண்ணீர் தடங்களை கன்னத்தில் பார்த்தவன் மெதுவாய் அதை வருடி விட்டு அறைக்குள் நுழைந்தான்.


குளித்து முடித்து வைஷூவை எழுப்பி காபியை வழங்க அவளும் முகம் கழுவி அதை எடுத்துக் கொண்டாள். இரவு உணவை சமைக்க காய்க்கறிகளை வெட்டியவாறே, "என்னாச்சு உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?" என்று வினவ, "சே சே ஒன்னும் இல்லையே" என்றாள் அவசரமாக.


'உன் அக்காவை எவளோ நாளைக்கு காப்பாத்துறன்னு நானும் பார்க்குறேன்' என்று மனதில் நினைத்தவாறே தன் வேலையில் கவனமாக வைஷூவும் அவசரமாக உதவி புரிந்து படிக்க வேண்டும் என்று கூறி அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.


யாதவ் இரவு ஒன்பது மணி போல், "நவி" என்று அழைக்க வைஷூவும் பதட்டத்தில் அடித்துப் பிடித்து ஓடி வந்தாள். ஏனெனில் இன்று யாதவின் பார்வையின் வித்தியாசத்தை அறிந்தே இருந்தாள். அதனாலேயே ஒரு படபடப்பு அவளோடு ஒட்டிக் கொண்டது.


அவன் முன்னே நிற்க யாதவ் அவளை அழுத்தமாகவே பார்க்க கை, கால்கள் அவளுக்கு நடுங்க ஆரம்பித்தன. சில நொடிகளுக்குப் பின், "வா சாப்பிடலாம்" என்று கைக் கழுவி உணவு மேசையில் அமர அவளும் தன் பயத்தை வெளிக்காட்டாது அவசரமாக சாப்பிட ஆரம்பித்தாள்.


தன் பயத்தை வெளிக்காட்டாது இருக்க மிகவும் சிரமப்பட்டாள் வைஷூ. அத்தோடு யாதவின் பார்வை வட்டத்தில் இருந்து மறைந்துக் கொள்ளவே உணவை அவசரமாக உள்ளே தள்ள புரையேறியது அவளுக்கு. தலையை தட்டி தண்ணீரை குடிக்க வழங்கினான் யாதவ்.


தண்ணீர் நிலத்திலும் சிறிது கொட்டியதை அறியாது உணவை விழுங்கி விட்டு அவசரமாக எழுந்து தண்ணீரைப் பார்க்காமல் நடக்க, தண்ணீரில் கால் வைத்து வழுக்க யாதவ் அவள் கரம் பற்றி அவளை தன் புறம் இழுக்க அவனுடைம மடியில் வீழ்ந்தாள் வைஷ்ணவி.


அவளை இடையோடு கரமிட்டு தாங்கியவன், "உனக்கு அப்படி என்ன அவசரம்? இன்னிக்கு என்ன வித்தியாசமா நடந்துக்குற?" என்று கேள்விக் கனைகளை அவளை விடாது தன்னோடு இறுக்கி தொடுக்க, அவளோ அவனது நெருக்கத்தில் மூச்சடைத்து அவஸ்தையாய் நெளிந்தாள்.


அவள் நிலையைப் பார்த்து யாதவின் இதழ்கள் புன்னகையைச் சிந்த அன்று கூறிய கௌதமின் சொற்கள் அவனுடைய காதில் எதிரொலித்தன. அவள் விடாது நெளிவதைப் பார்த்து தன் பிடியைத் தளர்த்தி, "பார்த்துப் போ" என்று அனுப்பி வைத்தான் சிறு சிரிப்புடன்.


அவளோ தப்பித்தோம் பிழைத்தோம் என்ற ரீதியில் அங்கிருந்து ஓடி ஒளிய, யாதவ், 'நாளைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டனும்' என்று முடிவெடுத்துக் கொண்டான். அவள் நிலையை உணர்ந்து அவளைச் சீண்டாது கழுவ வேண்டிய பாத்திரங்களை வாஷ்பேசனில் இட வைஷூவின் கரங்கள் இயந்திரத்தைப் போன்று கழுவ ஆரம்பித்தன.


வைஷூவிற்கு யாதவ் தொட்ட இடங்கள் குறுகுறுப்பை உருவாக்க அங்கேயுமே நெளிந்தவாறே வேலைகளை முடித்தாள். இன்னும் அவனுடைய கரங்கள் அவள் இடையை இறுக்கிப் பிடித்து இருப்பதைப் போன்று இருக்க, "கிருஷ்ணா" என்று முணகியவாறு தன் கன்னங்களின் சிவப்பை மறைக்கப்படாத பாடு பட்டாள்.


வேலையை முடித்து அடுத்த அறைக்குள் வைஷூ படிக்க வேண்டும் என்று நுழைய, "நவி இன்னிக்கு படிக்க தேவை இல்லை. வந்து தூங்கு" என்று அழைக்க சற்று முன் நடந்ததை நினைத்து, "இல்லை; இல்லை நான் படிக்கனும்" என்று அவசரமாக மறுத்தாள்.


யாதவ், "உன்னை வான்னு சொன்னேன்" என்று அழுத்தமாய் அழைக்க, அவள் திருதிரு என விழிக்க ஆரம்பித்தாள். அவளை நெருங்கியவன் அவளைக் கையிலேந்தி கட்டிலில் கிடத்தியவன் அவளை அணைத்தவாறே அவள் அருகில் படுத்தான்.


வைஷூவின் உடல் சில்லிட்டு அவள் உடல் முழுவதும் மெல்லிய நடுக்கம் பரவியது. அதை யாதவுமே உணர்ந்துக் கொண்டான். யாதவ், "உனக்கு என் மேலே நம்பிக்கை இருக்கா நவி?" என்று அவள் காதோரம் இதழ்கள் உரசியவாறு கிசுகிசுப்பாய் வினவ அவளுக்கு தொண்டை வரண்டு பேச நா எழவில்லை.


யாதவ், "உன்னோட அமைதியை நான் எப்படி எடுத்துக்க? ஆமான்னா? இல்லைன்னா?" என்று வினவ அவள் பதில் கூற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதைப் புரிந்து 'ஆம்' என தலை அசைத்தாள். அவளை தன்னோடு இறுக்கி அணைத்து தன் நெஞ்சில் அவளைச் சாய்த்தவாறு நிம்மதியாக கண்ணயர வைஷூவிற்கு உறக்கம் தொலை தூரம் ஓடிச் சென்றது.


வெகு நேரத்திற்குப் பின்பே அவள் நித்திரா தேவியின் பிடிக்குள் சிக்கிக் கொண்டாள். ஆனாலும் வெகு நாட்களுக்குப் பிறகு ஆழ்ந்த உறக்கமும் ஒருவித பாதுகாப்பையும் அவனுடைய அணைப்பில் உணர்ந்தாள்.


நாளை நடக்க இருப்பது தெரியாது இருவருமே நிம்மதியாக உறங்கினர். அடுத்த நாள் சவிதா என்ற பெண்ணை பதினைந்து நாட்களுக்கு முன் காணவில்லை என்ற தகவல் கிடைக்க அதை பார்க்கச் சென்றான்.


அவன் செல்லும் வழியில் யாதவிற்கு மொபைல் ஒலிற அதை ஏற்று காதில் வைக்க, 'வைஷ்ணவி கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முனைந்ததாகவும் தற்போது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து இருப்பதாகவும்' ஓர் பேரிடியை அவனுக்கு இறக்கியது அவ் அழைப்பு.



கருத்துக்களைப் பகிர,



 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24699


கண்சிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 16





தினகரன் தன் பணியைச் செவ்வென தொடர ஆரம்பிக்கும் அக் காலையில் திங்கள் தன் இல்லம் நோக்கி ஒய்வெடுக்கச் சென்றாள். விஷ்ணு நேற்று இரவு வேலையை முடித்து வர நேரம் நள்ளிரவைக் கடந்தது. அதனால் காலை வேளையில் அவன் கண்விழிக்கத் தாமதமாக வசுமதி அவன் இன்னும் எழவில்லை என்பதைப் பார்த்தாள்.


அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் பார்த்து அவனை எழுப்பி விட மனமில்லாது தன் வேலைகளைச் செவ்வென செய்ய ஆரம்பித்தாள். கரங்கள் தானாக அவளுடைய வேலைகளைச் செய்தாலும் வைஷ்ணவியை தற்போது அதிகமான நேரங்களில் அவள் அமரும் வேப்ப மரத்திற்கு கீழே காண்பதே உறுத்தலாக இருந்தது.


வைஷ்ணவியின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணமோ என்று அவளைப் பாராத நேரங்களில் மனம் அவளுக்கு உணர்த்தினாலும் அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவளும், யாதவும் தனக்கு இழைத்த துரோகத்திற்கு சிறிதளவேனும் குற்ற உணர்ச்சி இல்லாது இருப்பதற்கு அவளுக்குத் தகுந்த தண்டனை தான் இது இன்னொரு மனம் வாதிட்டது.


இவ்வாறு இரு மனநிலைகளில் இருக்க அவளுக்கு நிம்மதி என்பது எல்லையில்லா தூரத்திற்குச் சென்று இருந்தது. அவளுடைய நினைவைக் கலைந்தது விஷ்ணுவின் மொபைல் அழைப்பு. அதில் விஷ்ணுவும் கண்விழித்து அழைப்பை ஏற்க வைத்தியசாலையில் ஒரு பெண் மிகவும் தீவிர நிலையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் உடனே வருமாறும் அழைத்து இருந்தனர்.


அவனும் பதறியடித்து எழ வசுமதி, "என்னாச்சுங்க?" என்று வினவ, "ஒரு எமேர்ஜன்சி கேஸ். உடனே போகனும் வசுமதி" என்று அவசரமாக குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டான். விஷ்ணு தன்னுடைய வேலைகள் அனைத்தையுமே அவனே செய்துக் கொள்ளும் பழக்கம் உடையவன் என்பதால் வசுமதி அவனுக்காக இது வரையில் எவ் வேலையையுமே செய்யவில்லை.


இன்று அவனுக்கு நேரம் குறைவாக இருப்பதால் அவனுடைய சேர்ட் ஒன்றையும், ஜீன்சையும் எடுத்து அயர்ன் செய்ர ஆரம்பித்தாள். விஷ்ணு குளித்து வரும் போது அவன் அணிவதற்காக ஆடை தயாராக இருக்க அவனது இதழ்கள் பாராட்டுப் புன்னகையைச் சிந்தி அவசரமாக அதை அணிந்துக் கொண்டான்.


அவன் ஆடை அணிந்ததோடு காபியையும், உணவையும் வசுமதி அறைக்கே எடுத்து வர விஷ்ணு, "எனக்கு சாப்பிட நேரம் இல்லைங்க. நான் ஹொஸ்பிடல் போன பிறகு அங்கேயே சாப்பிட்டுக்குறேன். இப்போ காபியைக் குடிக்கிறேன்" என்று காபியைப் பருகிக் கொண்டே தன்னுடைய பொருட்களை எடுக்க வசுமதி மௌனமாய் வெளியேறினாள்.


அவன் தன்னுடைய பொருட்களை எடுத்து கீழே வர ஒரு டிஃபன் பொக்சை எடுத்து அவனிடம் நீட்டியவள், "பிரேக் கிடைக்கும் போது சாப்பிடுங்க" என்று உரைக்க நன்றியுடன் அதைப் பெற்று பெற்றோரிடமும் கூறி வீட்டிலிருந்து ஹொஸ்பிடலை நோக்கிச் சென்றான்.


வசுமதியிற்கு காலையில் இருந்தே வைஷ்ணவியின் நினைவாகவே இருக்க அதை ஒதுக்கித் தள்ளியவள் கல்லூரியிற்குச் செல்லத் தயாரானாள்.


இங்கே யாதவிற்கு மனம் காலை எழுந்ததில் இருந்து ஒரு நிலையில் இல்லாமல் தவிக்க ஜொகிங் சென்றவாறே 'என்னாச்சு எனக்கு? எதுக்கு ரெஸ்ட்லெஸ்ஸாக ஃபீல் பண்றேன்' என்று முகத்தைச் சுருக்கி சிந்தித்தவன், நேரடியாக ஜிம் போன்று உருவாக்கப்பட்ட வீட்டில் இருக்கும் அறைக்குச் சென்றான்.


ஒரு மணி நேரத்தை அங்கேயே செலவளித்து வர வைஷூ சமையலை ஆரம்பித்து இருந்தாள். காபியை அவனது முகம் பாராது வழங்கி மீண்டும் சமையலறைக்குள் புக இன்று காலையில் இருந்து அவள் தன்னிடம் முகம் காட்டாது இருப்பதைக் கண்டுக் கொண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.


அவளை நேற்று இரவு தன் கையணைவில் வைத்து உறங்கி காலையில் முதலிலேயே வைஷூ கண்விழிக்க இன்னும் அவன் கை அணைவிலும் மார்பிலும் தலை வைத்து உறங்குவதைப் பார்த்து வெட்கம் மேலிட அவனிடம் இருந்து அவசரமாகப் பிரிந்து குளியலறைக்குள் தன் ஆடையை எடுத்துப் புகுந்துக் கொண்டாள்.


அதன் பின்னர் யாதவ் ஜொகிங் செல்லும் வரையில் அவன் முன்னே காட்சியளிக்காமல் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடிக் கொண்டு இருந்தாள். காபியை வழங்கவே தற்போது அவன் முன்னே வந்தாலும் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை. அவளுடைய தயக்கத்தை அறிந்து அவளைச் சீண்டவும் இல்லை.


அவனும் காபியைக் குடித்து வைஷூவிற்கு சமையலறையில் உதவிகளைச் செய்தான். அப்போதும் இருவருமே மௌனத்தையே தங்களோடு இணைத்து இருக்க யாதவ், "இன்னும் கொஞ்ச வேலைகள் தான் இருக்கு. நீ போய் ரெடியாகு. ஈவீனிங் நானே உன்னை பிகப் பண்ணிக்கிறேன்" என்று உரைக்க அவளும் கர்ம சிரத்தையாக 'சரி' என்று தலையசைத்து தங்கள் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.


அவள் தயாராகி வர யாதவ் குளித்து காக்கி உடையில் தயாராகி வந்தான். இருவருமே ஒன்றாக சாப்பிட்டு பாத்திரங்களை அலசிவிட்டு வெளியேறினர். யாதவ் வண்டியில் செல்லும் போது, "பார்த்து பத்துரமா இரு. தனியா எங்கேயும் போகாத" என்று அறிவுரையை அள்ளவிட, ஒரு போதும் இது போன்று உரைத்து இருக்காததால் விசித்திரமாக அவனைப் பார்த்தாள்.


யாதவ், "வாயை மூடிட்டு என்னையே பார்த்தால் என்ன அர்த்தம்?" என்று அவன் எரிச்சலுடன் வினவ, "சரி" என்றாள் வாயைத் திறந்து. அவளை இறக்கி விட்டவன் அவள் போகும் முன் கைப்பிடித்து, "வேற எதைப் பத்தியும் யோசிக்காத. உன் படிப்புல மட்டுமே கன்சன்ட்ரேட் பண்ணு. உனக்கு நான் இருக்கேன்" என்று கூறி விடைப் பெற்றான்.


இன்று அவனுடைய வித்தியாசமான நடவடிக்கைகளில் குழம்பியவள் தோளை உலுக்கி அங்கிருந்து கல்லூரிக்குள் நுழைந்தாள். யாதவிற்கு இன்று வைஷ்ணவியை தனியாக விடுவதில் சிறு துளி விரும்பமும் இல்லை. தன்னுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான். அதனாலேயே பல அறிவரைகளை அள்ளி வீசிச் சென்றான்.


தனது அலுவலகத்திற்குள் நுழைந்து அவ் வழக்கு சம்பந்தமாகப் பார்க்க ஐ.ஜி அவனுக்கு அழைத்தார். அவன் அழைப்பை ஏற்று, "ஹலோ சேர் குட்மோர்னிங்" என்க, "குட் மோர்னிங் யங் மேன். உன் கிட்ட இருந்து ஒரு ஃபேவர் வேணும் யாதவ்" என்று உரைக்க, "சொல்லுங்க சேர்" என்றான் யாதவ்.


"என் ஒஃபீஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமா?" என்று வினவ, "இப்போவே வரேன் சேர்" என்றவன் தனது ஓட்டுனரை அழைத்து ஐ.ஜியின் அலுவலகத்திற்குச் சென்றான். அவன் அனுமதி பெற்று அறைக்குள் நுழைய அங்கே நடுத்தர வயது உடைய ஒருவர் ஐ.ஜியிற்கு முன்பே அமர்ந்து இருந்தார்.


அவருடைய முகத்தில் தெரியும் கலையும், ஆடையுமே அவரது செல்வச் செழிப்பைக் காட்டியது. புருவங்கள் இடுங்க யோசணையுடன் ஐ.ஜியைப் பார்க்க அவர், "இவரு காசியப்பன். பல வருஷமா ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் பண்றாரு. இவரோட தம்பி பொண்ணை பதினைஞ்சு நாளா காணோம்" என்றார்.


யாதவ் அதிர்ந்து, "வாட்?" என்று அதிர்ந்து எழ, "ஆமா யாதவ் பொண்ணை காணோம். இதைப் போல பொண்ணு காணாமல் போற கேசை நீ தான் ஹென்டில் பண்ற. அதான் உன்னை பார்க்க வர சொன்னேன்" என்றார் ஐ.ஜி. அவரிடம் கடுமையைக் காட்ட முடியாததால் கை முஷ்டியை இறுக்கியவன், "இந்த பதினஞ்சு நாளா இவங்க என்ன பண்ணிட்டு இருந்தாங்கலாம்?" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் வினவினான்.


ஐ.ஜி காசியப்பனைப் பார்க்க அவர், "சேர் எங்க வீட்டு பொண்ணுங்க எங்களோட கௌரவம். நாங்க அவளை காணோம்னு பொலிஸ்ல கம்பிளைன் கொடுத்தால் எங்களுக்கு மட்டுமில்லை, அவளோட வாழ்க்கைக்கும் பிரச்சனையா மாறும். அதனால எங்க பக்கத்துல இருந்து தேட ஆரம்பிச்சோம். ஆனால் எந்த தடையமுமே கிடைக்க இல்லை" என்றார் கவலையுடன்.


யாதவ், "உங்க பக்கத்துல கிடைக்க இல்லை. இதுக்கு மேலேயும் தாமதிக்கக் கூடாதுன்னு பொலிஸ் கிட்ட வந்திருக்கிங்க ரைட்?" என்று ஆத்திரத்துடன் வினவ, "ஆமா சேர்" என்றார் அவர். யாதவ், "முட்டாளா சேர் நீங்க? அவ காணாமல் போன போதே சொல்லி இருந்தால் அப்போவே தேட இருந்தது. பதினைஞ்சு நாளைக்கு அப்புறமா தேட சொல்லி வந்திருக்கிங்க? இப்போ நாங்க என்ன பண்ண முடியும்?" என்றான் பல்லைக் கடித்து.


காசியப்பன், "அப்படி சொல்லாதிங்க சேர். எந்த பெத்தவங்களும் தன் பிள்ளைங்க மேலே ரொம்ப நம்பிக்கை வச்சி இருப்பாங்க. அதே போல தான் நாங்களும். அவளை காணோம்னு சொன்னதும் எங்க எதிரி யாராவது எங்களை மிரட்ட கடத்தி இருப்பாங்களோன்னு தேடினால் பதில் இல்லைன்னு தெரிஞ்சு.


இப்படி சொல்லக் கூடாது சேர். இருந்தாலும் அவ யாரையாவது காதலிச்சு ஓடிப்போய் இருப்பாளான்னும் தேடினோம். ஓடிப் போறவ தன்னோட வீட்டுக்கு முன்னாடி அவளோட பொருட்களை வீசிட்டு போக மாட்டாளேன்னு மனசு சொன்னாலும் எங்க பொண்ணு தப்பு பண்ணி இருப்பாளோன்னு எங்க மனசு யோசிக்க வச்சது.


ஆனால் பதிமூனு நாளாகியும் எந்த பதிலுமே கிடைக்காததால இனியும் தாமதிக்கக் கூடாதுன்னு பொலிஸ் கிட்ட வந்திருக்கேன். எங்க வீட்டு தேவதை சேர் அவ. அவளை பெத்தவங்க உடைஞ்சி உட்கார்ந்து இருக்காங்க. கம்பீரமா சுத்திட்டு இருந்த தம்பி வீட்டுக்குள்ளேயே முடங்கி போயிட்டான்" என்று தன்னுடைய கவலைகளை இறக்கி கண்கலங்கி விட்டார்.


அதற்கு மேலும் அவனால் அவரிடம் கடுமையாகப் பேச முடியவில்லை. "நீங்க சொல்லி இருந்தால் இரகசியமா இதைப் பத்தி தேடி இருப்போமே சேர். நீங்க அவளோட பொருளை வீசினதுன்னு ஏதோ சொன்னிங்களே அது என்ன?" என்று புரியாமல் வினவ, "அவளோட திங்ஸ் மட்டும் தம்பி வீட்டு வாசல் முன்னாடி இருந்தது சேர்" என்றார்.


யாதவ், "யார் அதை முதல்ல பார்த்தது?" என்று கேட்க, "தம்பி மனைவி" என்றார். சிறிது நேரம் ஐ.ஜி, யாதவ், காசியப்பன் மூவருமே பேசிக் கொண்டனர். இறுதியாக யாதவ், "நான் உடனே உங்க தம்பி குடும்பத்துகிட்ட இன்வெஸ்டிகேட் பண்ணனும். என்ட், அவங்க வீட்டையும் செக் பண்ணனும். இனிமேலும் தாமதிக்கக் கூடாது" என்று அவசரப்படுத்தி ஐ.ஜியிடம் அனுமதி கேட்க அவரும் அனுமதியை வழங்கினார்.


காசியப்பனும் யாதவுடன் கிளம்ப கௌதமையும் மொபைல் மூலம் அழைத்து தன்னுடன் வருமாறு அழைக்க அவனும் அங்கேயே நேரடியாக வருவதாகக் கூறிவிட்டான். யாதவின் வண்டி காசியப்பனின் தம்பியின் வீட்டை நோக்கிச் செல்லும் நேரம் அவனது மொபைலின் ஒலி அதன் இருப்பை உணர்த்த அழைப்பை ஏற்றான் யாதவ்.


யாதவ், "ஹலோ" என்க, "சேர் நான் *** கோலேஜ் புரொஃப் காஞ்சனா பேசுறேன். உங்க வைஃப் வைஷ்ணவி கை நரம்பை அறுத்துகிட்டு சூசைட் அடெம்பட் பண்ணிட்டாங்க. நாங்க ஹொஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்துட்டோம். இப்போ அவங்க ஐ.சி.யூல இருக்காங்க சேர்" என்று அவனது தலையில் இடியை இறக்க அதிர்ச்சியில் சிலையாகிவிட்டான்.


கண்களை இறுகமூடியவன் தன்னைச் சமன்படுத்தி, "நான் வரேன்" என்று அழைப்பைத் துண்டித்த நேரம் யாதவின் ஜீப் காசியப்பனின் தம்பியின் வீட்டிற்கு முன்னே வந்து நின்றது. காசியப்பன் வாகனத்தில் இருந்து இறங்க கௌதமின் ஜீப்பும் அங்கே வந்து சேர்ந்தது. யாதவின் முகம் இறுகிக் கறுத்து இருப்பதைப் பார்த்த கௌதமிற்கு புருவங்கள் யோசணையில் முடிச்சிட்டன.


யாதவை நெருங்கிய கௌதம், "என்னாச்சுடா?" என்று வினவ, "வைஷ்ணவி கோலேஜ்ல கைநரம்பை கட் பண்ணி கிட்டு சூசைட் அடெம்ப்ட் பண்ணிட்டாளாம். இப்போ ஐ.சி.யூல அட்மிட் பண்ணி இருக்காங்களாம்" என்று இறுகிய குரலில் மொழிய "வாட்?" என்றான் அதிர்ச்சியாக.


காசியப்பனிடம் சென்ற யாதவ், "எனக்கு இப்போ ஒரு முக்கியமான வேலை வந்திருக்கு. கௌதம் இவன் டி.சி.பி. இவன் இப்போதைக்கு பார்த்துப்பான். நான் வேலையை முடிச்சதும் வரேன்" என்றவனின் குரலில் சற்று நேரத்திற்கு முன் தெரிந்த உற்சாகம் குறைந்து இருந்ததை காசியப்பனும் கவனித்தார்.


அவனது முகமும் வேதனையில் கசங்கி இருக்க அவனை எதிர்த்துப் பேசாது, "சரி சேர்" என்று முன்னே நுழைய, "அவளுக்கு எதுவும் ஆகாதுடா. தைரியமா இரு" என்று ஆறுதல் கூறி உள்ளே நுழைய தனது ஜீப்பை **** ஹொஸ்பிடலுக்கு விடுமாறு கூறினான்.


செல்லும் வழியில் முதலில் விஷ்ணுவை அழைத்து நிலமையைக் கூற வைஷூவை தனது ஹொஸ்பிடலுக்கே அழைத்து வருவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் பார்ப்பதாகவும், யாதவிற்கு ஆறுதலும் கூறி அழைப்பைத் துண்டித்தான்.


யாதவின் சிந்தனை முழுவதும் தான் எடுத்து இருக்கும் வழக்கிற்கும் வைஷூவின் தற்கொலை முயற்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று அவனது பொலிஸ் மூளைக் கூறுவதே ஓடிக் கொண்டு இருக்க மனம் ஒரு புறம் அவள் நல்ல படியாக பிழைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டது.


யாதவ் ஹொஸ்பிடலுக்குச் செல்ல விஷ்ணுவின் ஹொஸ்பிடலுக்குச் செல்வதற்காக வைஷ்ணவியை அம்பியூளன்சில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். அவசரமாக அவளை நெருங்கி பார்க்க முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து, மயங்கிய நிலையில் கையில் கட்டுடன் துவண்டு போய் இருந்தாள் வைஷ்ணவி.


அவளை நெருங்கியவன் அவளுடைய கட்டிட்ட கரத்தை வருடிக் கொடுக்க அவளுடன் வந்திருந்த இரு பேராசிரியரகளும் சில மாணவர்களும் வைஷ்ணவியின் கணவன் பொலிஸ் என்பதை அப்போதே அறிந்துக் கொண்டு அதிர்ந்தனர்.


விஷ்ணு யாதவிற்கு அழைக்க, "அவ உன் ஹொஸ்பிடலுக்கு தான் வரா மச்சான். அதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு நான் தெரிஞ்சிக்கனும். அவளைப் பார்த்துக்கோ. கௌதம் வேலையை முடிச்சிட்டு நேரா அங்க வருவான்" என்று அவள் பதில் அளிக்க முன் அழைப்பைத் துண்டித்து அங்கிருந்த மாணவர்களைப் பார்த்தான்.


அவர்களிடம் சென்றவன், "நவிக்கு என்னாச்சு?" என்று வினவ அவர்கள் 'யார் நவி?' எனப் புரியாமல் குழம்ப அதைப் புரிந்துக் கொண்ட யாதவ், "வைஷ்ணவிக்கு என்னாச்சு? காலையில நான் டிரொப் பண்ணும் போது நல்லா இருந்தாளே" என்று சந்தேகமாய் வினவினான்.


"தெரியல்லை சேர் நாங்க ஃபர்ஸ்ட் பீரியடுக்கு கிளாசுக்கு போனோம். எப்போவுமே வைஷ்ணவி கிளாஸ்ல சீக்கிரமா வந்திருப்பா. இன்னிக்கு கிளாஸ்ல இல்லாததைப் பார்த்து அவ அப்சன்ட்டுன்னு நினைச்சோம். இன்னிக்கு காஞ்சனா மேம் தான் பாடம் எடுக்க வந்தாங்க. வசுமதி மேம் வர இல்லை. அதனால காஞ்சனா மேம் வைஷூ எங்கன்னு கேட்டாங்க?


நாங்க தெரியல்லைன்னு சொன்னோம். அப்போ ரஞ்சித் தான் காலையிலேயே அவ ஸ்டாஃப் ரூமுக்கு வசுமதி மேம் கிட்ட புக்கை கொடுக்க போறதா சொல்லிட்டு போனா. இன்னும் வர இல்லைன்னு சொன்னான். அவளை கிளாஸ் புரொஃப் வெளியே அனுப்பாமல் கிளாசை கட் பண்ணமாட்டா.


அப்போ தான் எங்களுக்கும் டவுட்டா இருந்தது. காஞ்சனா மேம் ரஞ்சித்தை அனுப்பி அவளை பார்க்க சொன்னாங்க. அவ அங்கே இருக்க இல்லை. அவ போற இடமெல்லாம் தேடினான். எங்கேயுமே இல்லை. அதை காஞ்சனா மேம் கிட்ட சொல்லவும் அவங்களுக்கும் பயம் வந்திருச்சு.


உடனே பிரின்சிபல் கிட்ட சொல்லவும் அவரும் மைனர் ஸ்டாஃப்சை தேட சொன்னாரு. நாங்களும் தேடினோம். கொஞ்சம் பேர் லேடிஸ் டொயிளட்டுக்கு போய் பார்த்தால் அவ பாத்ரூம்ல கையை அறுத்து கிட்டு மயங்கி கிடந்தா. நாங்க ஷொக் ஆகிட்டோம் சேர். அப்புறமா உடனே பிரின்சிபலுக்கு இன்ஃபோர்ம் பண்ணோம். அவரு ஹொஸ்பிடல்ல அட்மிட் பண்ண வச்சாரு" என்றனர்.


வசுமதியின் பெயரைக் கேட்ட உடனேயே கோபத்தில் உள்ளம் கொந்தளிக்க தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டான் யாதவ். இருந்தும் அதில் வெற்றி பெற்று, "நான் வைஷூவோட ஹஸ்பன்னு யாருக்கும் தெரிய கூடாது. கொட் இட்? இதை நான் டீல் பண்ணிக்கிறேன்" என்று அவர்களுக்கு மறவாமல் நன்றியைக் கூறி விஷ்ணுவின் ஹொஸ்பிடலுக்குச் சென்றான்.


அங்கே வைஷூவிற்கு தீவிரமாக சிகிச்சை நடந்துக் கொண்டு இருக்க விஷ்ணு வெளியே வந்தவன் ஒரிடத்தில் வேதனையை சுமந்த முகத்துடன் விட்டத்தை வெறித்தவாறு அமர்ந்து இருந்த யாதவை நெருங்கி தோளிள் கரத்தினால் அழுத்தம் கொடுத்து ஆறுதல்படுத்தினான்.


யாதவ், "இப்போ அவளுக்கு எப்படி இருக்கு?" என்று கலங்கிய குரலில் வினவ, "ஹெவி பிளட் லொஸ் மச்சான். டென் ஹவர்சுக்கு அப்புறமா தான் எதுவும் சொல்ல முடியும். தைரியமா இரு" என்று ஆறுதல் கூறினான்.


யாதவ், "உன் பொன்டாட்டி எங்க இருக்கான்னு பாரு" என்று இறுகிய குரலில் கூற, விஷ்ணு புரியாமல் வசுமதியிற்கு அழைக்க மொபைலை எடுத்தான். அதே நேரம் தங்கம் அவனுக்கு அழைக்க அழைப்பை விஷ்ணு ஏற்க தங்க, "டேய் வசுமதி கோலேஜ்ல இருந்து வந்து நேரா போய் ரூமை அடைச்சிட்டாடா. கதவை திறக்க மாட்டேங்குறா. பயமா இருக்குடா" என்றார் பதட்டமாக.


வைஷூவின் இந்நிலைக்கும் வசுமதியிற்கும் ஏதோ தொடர்பு இருப்பதை உணர்ந்தவனதுக்கு மனம் வலித்தது. விஷ்ணு, "வீட்ல தான் இருக்கா. வா போலாம்" என்று அவனை அழைத்துக் கொண்டு செல்ல வைஷ்ணவியைப் பார்த்துக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டே வெளியேறினான்.



#####


திங்கட் கிழமை மீண்டும் சந்திக்கலாம்



########


கருத்துக்களைப் பகிர,





 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24769


கண்சிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 17





வைஷூவை விஷ்ணுவின் ஹொஸ்பிடலில் அனுமதித்து விட்டு யாதவ், விஷ்ணு இருவருமே விஷ்ணுவின் வீட்டிற்கு வசுமதியைப் பார்ப்பதற்காக வந்தனர். வசுமதி கல்லூரியில் அரைநாள் விடுப்பை எடுத்து அழுது கொண்டே வந்தவள் தங்களது அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.


வீட்டில் உள்ளோர் தட்டிப் பார்த்தும் அவள் திறக்காமல் இருக்க பயத்தில் விஷ்ணுவிற்கும், வசுமதியின் பெற்றோரிற்கும் தகவலைத் தெரிவித்து உடனடியாக வீட்டிற்கு வரவழைக்கப்பட்டனர். விஷ்ணு யாதவுடன் அவனுடைய வீட்டிற்கு வந்தான்.


யாதவின் மனது உலைக்கலன்கள் போன்று கொதித்துக் கொண்டு இருக்க வசுமதியின் மீது அளவுக்கு அதிகமான கோபத்தோடு விஷ்ணுவின் வீட்டிற்கு வந்தான் யாதவ். விஷ்ணுவின் மனது ஒரு நிலையில்லாது தவித்தது.


ஒரு புறம் தன் முதல் பெண் உயிர்த் தோழி உயிருக்காக போராட, இன்னொரு புறம் நண்பன் அவனுடைய மனைவியிற்காக தவிக்க, தன் மனைவி அவளுடைய தற்கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கிறாள். தன் வாழ்வில் முக்கிய அங்கத்தவர்கள் மூவரும் வெவ்வெறு திசையில் இருக்க மூவரையும் இணைக்கும் புள்ளியாக விஷ்ணு இருந்தான்.


அவனால் யாரிற்காக யாரையுமே விட்டுக் கொடுக்க முடியாது. அதற்காக மனைவி செய்யும் பிழையை ஏற்றுக் கொள்ளவும் அவனது ஞாயமான மனது இடம் கொடுக்கவில்லை. அனைத்தையுமே இறைவனிடம் முறையிட்டவாறே தன் போக்கில் சிந்தை வயப்பட்டான்.


விஷ்ணுவின் வீட்டிற்கு வந்தவுடன் யாதவ் கோபத்தில் விருட்டென்று இறங்கி வேகமாக உள்ளே நுழைய அவனை பிடிக்கும் முயற்சியில் விஷ்ணு வேகமாக ஓடி வந்தான். யாதவ் உள்ளே நுழையும் போது வசுமதியின் பெற்றோர் வசுமதி இருந்த அறையின் கதவைத் தட்டிக் கொண்டு இருந்தனர்.


யாதவை அங்கே பார்த்த பெரியவர்கள் குழம்ப அவன் பின்னே படிகளில் விஷ்ணு வேகமாக ஓடி வருவதைப் பார்த்து மேலும் குழம்பினர். யாதவ் எதையுமே பொருட்படுத்தாது கோபத்துடனும், ஆத்திரத்துடனும் கதவின் முன் வந்து நின்றவன் ஓங்கி ஒரு முறை அடிக்க அவ் தேக்கு மரத்தாலான கதவே ஒரு முறை அதிர்ந்தது.


யாதவ், "இன்னும் ஐஞ்சு நிமிஷத்துக்குள்ள நீ கதவை திறக்க இல்லை நான் மனிஷன இருக்க மாட்டேன்" என்று கதவிற்கு வெளியேயே உறுமியவன் விஷ்ணுவிடம், "இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல உன் பொன்டாட்டி கீழே இருக்கனும்" என்று வேகமாக படியிறங்கிச் சென்றான். மற்றவர்கள் அவனது அதிரடியில் அதிர்ந்து அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்.


அவன் சென்ற அடுத்த நொடி கதவு திறக்கப்பட அழுதழுது வீங்கிய முகத்துடனும் கண்கள் சிவந்து, தலைக் கலைந்து, சோர்வான முகத்துடன் வசுமதி வெளியே வந்தாள். விஷ்ணு அவளை உறுத்து விழிக்க, "நான் தப்பு பண்ண இல்லைங்க" என்று கதறி அழ, "முதல்ல அவன் கூட பேசு. அவன் தான் இப்போ உயிரை கையில பிடிச்சிட்டு இருக்கான். வைஷூ அங்கே சீரியசா இருக்கா" என்று கூறி கீழே சென்றான்.


பெரியவர்கள் நடப்பதேதும் புரியாமல் குழம்ப, வசுமதி கண்ணீரைத் துடைத்தவாறு கீழே இறங்கினாள். யாதவ் தன் கோபத்தையும், ஆத்திரம், வலி எதையுமே கட்டுப்படுத்த முடியாமல் வரவேற்பரையை நடந்தவாறு அளந்தான். அவன் முகத்தில் தெரியும் உணர்ச்சியற்ற தன்மையும், கைமுஷ்டிகளை இறுக்கி தளர்பதும் அவற்றை வெளிக்காட்டியது.


வசுமதி, "மித்து மாமா" என்று அழைக்க, யாதவின் "ஏய்" என்ற ஒற்றை வார்த்தையில் கர்ஜிக்க வசுமதி வெளிப்படையாகவே நடுங்கினாள். விஷ்ணு யாதவின் மனநிலையைப் புரிந்ததால் அவனை எதிர்க்காது வசுமதியின் நிலையையும் புரிந்து அவள் கரத்தோடு தன் கரத்தையும் கோர்த்து ஆறுதல் அளித்தான்.


யாதவ், "என்னை அப்படி கூப்பிடுற தகுதியை எப்போவோ இழந்துட்ட. என் நவிக்கு ஏதாவது ஆச்சு உன்னை கொன்னுடுவேன். அவ இன்னிக்கு உயிருக்கு போராடிட்டு இருக்கான்னா அதுக்கு முழுக் காரணமும் நீ மட்டும் தான். அவளுக்கு ஏதாவது பிரச்சனைன்னு தெரிஞ்சால் அடுத்த நிமிஷம் நீ என் ஸ்டேஷன்ல கம்பி எண்ணிட்டு இருப்ப.


இந்த யாதவ் மித்ரனை யாராலேயும் கட்டுப்படுத்த முடியாது. உன் மாமனாரோட அந்தஸ்தோ, இல்லை உன் புருஷனோட செல்வாக்கோ எதுவுமே உன்னை காப்பாத்தாதது. நான் விடவும் மாட்டேன். எதுக்கும் தயாரா இரு. என் பொன்டாட்டியா? நீயான்னு வரும் போது என் தெரிவு என் பொன்டாட்டி தான்.


உனக்கு சபோர்டா இவளோ பேர் இருக்காங்க. ஆனால் அவளுக்கு நானும் என் ஃபிரென்சும் மட்டும் தான் இருக்கோம். அவளைப் பத்தி என்னை விட உனக்கு நல்லா தெரிஞ்சுமே, மூனு நாளைக்கு மேலே அவளை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி மென்டல் டோச்சர் கொடுத்து இருக்க.


இதுக்கெல்லாம் சேர்த்து உன்னை முட்டிக்கு முட்டி தட்டி உன் தோலை உரிக்கனும் போல இருக்கு. விஷ்ணு அவன் குடும்பத்துக்காக மட்டும் தான் இப்போ அமைதியா இருக்கேன். ஆனால் என் நவிக்கு ஏதாவது ஒன்னு ஆச்சு என்னை தடுக்குற எல்லாத்தையுமே தூக்கி எறிஞ்சிட்டு நான் சொன்னதை செய்வேன்.


அவளுக்காக இல்லைன்னாலும் நீ ஜெயிலுக்கு போகாமல் இருக்க அவ பொழச்சிக்கனும்னு வேண்டிக்கோ" என்று ருத்ரதாண்டவத்தை ஆடி அவளை எச்சரித்து விட்டு நகர புயலுக்குப் பின்னான அமைதியைப் போன்று அவ்விடமே அமைதியைத் தத்தெடுத்து இருந்தது. பெரியவர்களோ யாதவின் சொற்களில் விக்கித்து நின்று இருந்தனர்.


நிலமையை தன் கையிலெடுத்த அமரநாத், "விஷ்ணு வைஷூவுக்கு என்னாச்சு? யாதவ் என்ன என்னமோ பேசிட்டு போறானே. என்ன நடக்குது?" என்று வினவ, "என்ன நடந்ததுன்னு எனக்கும் தெரியல்ல அப்பா. யாதவ் பேசும் போது புதுசா சிலதை பேசுறான். அது என்னன்னு எனக்கு அவன் சொல்ல இல்லை.


இன்னிக்கு காலையில நான் ஆபரேஷன் முடிச்சிட்டு வெளியே வரும் போது யாதவ் எனக்கு போன் பண்ணி கோலேஜ்ல வைஷூ கத்தியால கை நரம்பை வெட்டி சூசைட் பண்ண முயற்சி பண்ணிட்டாடான்னு சொல்லவும் நான் அவளை என் ஹொஸ்பிடல்ல வச்சு டிரீட்மன்ட் பண்ண ஏற்பாடு பண்ணேன்.


அவளை அட்மீட் பண்ணிட்டு செக் பண்ணோம் அப்பா. ஹெவி பிளட் லொஸ். கிரிடிகலா தான் இருக்கா. அதை சொன்னதும் வசுமதியை எங்க இருக்கான்னு பார்க்க சொன்னான். அதுக்குள்ள அம்மாவே வசுமதி கதவை அடைச்சிட்டு திறக்க மாட்டேங்குறான்னவும் நாங்க இங்கே வந்தோம்" என்றான் விரிவாக.


பானுமதி, "ஐயோ என் பொண்ணுக்கு என்னாச்சு? எதுக்காக இந்த முடிவு? கடவுளே நான் பெத்து வளர்த்தது இதுக்காக தானா?" என்று கதறி அழ சந்திரசேகரிற்கும் கண்கள் கலங்கி விட்டன. அவர் தளர்வாக சோஃபாவில் அமர அமரநாத் தோளோடு அணைத்து ஆறுதல் கூற தங்கம் பானுமதிக்கு ஆறுதல் கூறினார்.


தங்கம், "வைஷூ இப்போ எப்படி இருக்கா?" என்று வினவ, "இப்போ எதையுமே சொல்ல முடியாது. கடவுள் கிட்ட வேண்ட மட்டும் தான் முடியும்" என்றவன் பெருமூச்சை வெளியிட்டு, "யாதவ் தான் வைஷூவை அந்த நிலமையில பார்த்து ரொம்ப உடைஞ்சி போயிட்டான். எனக்கே அவனை பார்க்க பாவமா இருந்தது. எனக்கு வைஷூ மேலே தான் கோவம்" என்று வருத்தத்தில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தான்.


அமரநாத், "ஏன்டா? அந்த பொண்ணே உயிருக்கு போராடுது. அவ மேலே கோபப்படுற?" என்று வினவ, "எனக்கும் அவ நிலமையைப் பார்த்து வருத்தம் இருக்கு. எப்போவுமே ஏதாவது பேசிட்டு, சேட்டை பண்ணி, ஒரு இடத்துல நிக்காமல் துருதுருன்னு ஓடிட்டே இருப்பா.


இன்னிக்கு அவளை இந்த நிலமையில பார்த்ததும் நெஞ்சே வெடிச்சிருச்சி. கண்ணு கலங்கிரிச்சி அப்பா" என்று குரல் கமறக் கூறியவன் தன் குரலை சரி செய்து, "எந்த பிரச்சனைக்கும் தற்கொலை முடிவு இல்லை. இந்த பொண்ணு லூசத்தனமா இப்படி பண்ணி நம்ம எல்லாரையுமே கதி கலங்க வச்சிருக்கா" என்று உரைத்தான் கோபமாக.


தங்கம், "எனக்கு தெரிஞ்ச வரைக்கும் வைஷூ கோழையான பொண்ணு இல்லைடா" என்றார் யோசணையுடன். சந்திரசேகர், "மாப்பிள்ளை, வைஷூவோட இந்த நிலமைக்கு வசுமதி காரணம்னு மித்ரன் சொல்லிட்டுப் போறானே. அது என்ன?" என்று புரியாமல் கேட்க, இத்தனை நேரமாக சுவரை வெறித்த வசுமதி கேவி வந்த அழுகையை அடக்க பெரும்பாடுபட்டாள்.


இதற்கு மேலும் யாரையும் வருத்த வைக்க முடியாமல் விஷ்ணு, "அதைப் பத்தி அப்புறமா பேசலாம் மாமா. முதல்ல வைஷூ பிழைச்சிக்கனும்னு வேண்டிப்போம். நான் போய் வைஷூவை பார்க்குறேன்" என்று அனைவரிடமும் இருந்து விடைப் பெற்றான்.


அமரநாத் வசுமதியிடம் திரும்பி, "நீ பயப்படாத அம்மா. வைஷூ பிழைச்சிப்பா. இனிமேல் எல்லாமே நல்லதாவே நடக்கும்" என்று ஆறுதல் கூற தலையசைத்து ஏற்றவள் மீண்டும் சென்று தன் அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.


இவர்களின் கோபம், கலக்கம், வலி, அழுகை என அனைத்து உணர்விற்கும் தற்போது காரணமாக இருக்கும் வைஷ்ணவியோ அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கண் மூடி ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் தன்னைச் சுற்றி நடப்பது எதையுமே அறியாது.



யாதவ் அங்கிருந்து வெளியானவன் நேரடியாக வைஷ்ணவி இருந்த ஹொஸ்பிடலை அடைந்து அவள் இருந்த அறைக்குள் நுழைந்து அவளையே வெறித்துப் பார்த்தான். அவனது மொபைலை எடுத்து அவளைப் பார்த்தவாறே கௌதமிற்கு அழைக்க அவனும், '"மச்சான் வைஷூவுக்கு எப்படி இருக்கு? நல்லா இருக்காளா?" என்றான் எடுத்த எடுப்பிலேயே.


யாதவ் இறுகிய குரலில், "எங்க எல்லாரோட நிம்மதியையும் பறிச்சிட்டு அவ நிம்மதியா கண்மூடி இருக்காடா" என்று கோபத்துடன் உரைக்க, "டேய் என்னடா சின்னப் பிள்ளைத்தனமா பேசுற?" என்று கேட்டான் கௌதம். "வேற என்ன சொல்ல சொல்ற? ஹெவி பிளட் லொஸ் எதுவா இருந்தாலும் டென் அவர்சுக்கு அப்புறமா தான் சொல்ல முடியுமாம்" என்றான் கலங்கிய குரலில்.


யாதவ், "என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டா இராட்சசி" என்று புலம்ப எதிர்ப்புறம் இதைக் கேட்ட கௌதமின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. "அவளுக்கு எதுவும் ஆகாது மச்சான். திரும்பி நல்லபடியா வருவா" என்று கூற, "அவளுக்கு என் மேலே அக்கறையே இல்லைடா. என்னைப் பத்தி ஞாபகம் இருந்தால் லூசுத்தனமா இப்படி பண்ணி இருப்பாளா?" என்று மீண்டும் அவள் மீது கோபம் கொண்டான்.


"சரி விடு. அவ எழும்பினதுக்கு அப்புறமா அவளை வச்சு செய்யலாம். நீ அவளை டாச்சர் பண்றதுக்காகவாவது அவ பொழச்சி வருவா பாரேன்" என்று சிறு பிள்ளைக்கு கூறுவது போல் எடுத்து உரைத்தான்.


பெருமூச்சை வெளியிட்ட யாதவ், "அங்கே என்னாச்சுடா?" என்று வினவ, "அந்த பொண்ணு பேர் சவிதா. கோலேஜ்ல படிக்கிற பொண்ணு. அப்பா பேர் துரையப்பன் (இவரை ஞாகபகம் இருக்கா?) நல்ல பொண்ணு, எந்த வித கெட்ட நண்பர்களோ, பழக்கங்களோ இல்லை.


கடைசியா கோயிலுக்கு போயிருக்கா. அங்கிருந்து வரும் போது தான் அவளை கிட்னாப் பண்ணி இருக்கனும். என்ட் அவளோட திங்ஸ் அத்தனையும் அவ வீட்டு வாசல் முன்னாடி கிடந்து இருக்கு. அந்த திங்சை ஃபொரன்சிக் டிபார்ட்மன்டுக்கு புதிய ஃபிங்கர் பிரின்ட் ஏதாவது கிடைக்குதான்னு செக் பண்ண அனுப்பி வச்சிருக்கேன்.


உன் மொபைலுக்கு அவளோட ஃபோடோஸ் அவளைப் பத்தின மத்த டீடெய்ல்சையும் அனுப்பி வச்சிருக்கேன் பாரு. என்ட் ஈவீனிங் ஃடென் மினிட்சுக்கு அவங்க வீட்டு இருக்கிற வீதி பக்கம் எந்த ஒரு சி.சி.டி.வி கமெராவும் வேர்க் ஆக இல்லை" என்க யாதவ் அவனோடு பேசியவாறே அவன் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்தான்.


புருவம் இடுங்க அதையே கூர்ந்து கவனித்தவன், "மச்சான் இந்த பொண்ணை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன். எங்கன்னு ஞாபகம் இல்லை" என்று யோசணையுடன் கூறினான்.


கௌதம், "என்னடா சொல்ற?" என்று வினவினான். "ஆமா டா நான் இந்த பொண்ணை பார்த்து இருக்கேன். அனால் எங்கன்னு ஞாபகம் வர மாட்டேங்குது" என்று தன் நெற்றியை சுட்டு விரலால் நீவினான் யாதவ்.


"இந்த பொண்ணுன்னு சுயராடா?" என்று வினவ, "ஆமா மச்சான். சரி விடு பார்த்துக்கலாம்" என்றவன் விஷ்ணு அவ் அறைக்குள் நுழைவதைப் பார்த்து "விஷ்ணு வரான்டா. அவன் கூட பேசனும். இதைப் பத்தி நான் அப்புறமா உன் கூட டிஸ்கஸ் பண்றேன்" என்று அழைப்பைத் துண்டித்தான்.


விஷ்ணு வைஷூவைப் பரிசோதித்து யாதவைப் பார்த்தான். யாதவ், "என்னாச்சுடா?" என்று பதட்டமாக வினவ, "பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை. நீ முதல்ல வெளியே வா" என்று வெளியே அழைத்து வந்தான். விஷ்ணு, "வசுமதி என்ன பண்ணா?" என்று நேரடியாய் வினவ யாதவும் மறைக்காது கல்லூரியில் சில நாட்களாக நடந்த அனைத்தையுமே கூறினான்.


அவற்றைக் கேட்ட விஷ்ணுவிற்கே கோபம் எகிறியது. இருந்தும் வைஷூ பிழைக்கும் வரையில் அமைதியாய் இருக்க வேண்டும் என்று நினைத்து, "வைஷூ கண் விழிக்கட்டும்டா. மீதியை அப்புறமா பார்த்துக்கலாம்" என்று உரைக்க யாதவும் சரியென்றான்.


விஷ்ணு தன்னுடைய வேலையைப் பார்க்கும் நிர்பந்தத்தில் இருப்பதால் யாதவைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விடைப் பெற்றான். யாதவும் வைஷூவுடனான தனது இனிய தருணங்களை கண்கள் மூடி நினைக்க அதில் ஓரிடத்தில் அவசரமாக கண்விழித்தவன் உடனே கௌதமிற்கு அழைப்பை ஏற்படுத்தி ஹொஸ்பிடல் வருமாறு அழைத்தான்.


கௌதமும் பதறியடித்து வருகை தர, "டேய் அந்த பொண்ணை எங்க பார்த்தேன்னு ஞாபகம் வந்திருச்சு" என்றான் யாதவ். "இதை சொல்லவா என்னை அவசரமா வர வச்ச? இதை நீ மொபைலேயே சொல்லி இருக்கலாமேடா. நான் சாப்பாட்டுல கையை வைக்க போனேன். அதுக்குள்ள தலை தெறிக்க ஓடி வர வச்சிட்ட" என்று பாவமாக மொழிந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.


"நான் உன்னை சாப்பிட வேணான்னு சொல்ல இல்லையேடா" என்று யாதவ் அப்பாவியாய் கூற, "டேய் டேய் ஏதாவது பேசுன, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஒரு பச்சப் பிள்ளைய பசியில விடுறோமேன்னு மனசாட்சி உனக்கு உறுத்தல்ல?" என்றான்.


யாதவ், "இங்கே எனக்கு தெரிஞ்சி அப்படி யாரும் இல்லையே" என்று சீரியசாக மொழிய, "டேய் முடியல்லைடா. பசிக்குது. சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு ஒரு மணி நேரம் என்ன? பத்து மணி நேரம் நீ பேசுறதை கேட்குறேன்" என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு மொழிந்தான்.


யாதவ், "நவி கண்விழிக்கிற வரைக்கும் நான் சாப்பிட மாட்டேன். சாப்பாடு வாங்கி கொடுக்கவும் மாட்டேன். என் நாக்குல பச்ச தண்ணி படாது" என்று உரைக்க, "நீ சாப்பிடாததுல ஒரு ஞாயம் இருக்கு. நான் ஏன்டா சாப்பிடாமல் இருக்கனும்?" என்று பாவமான முகத்துடன் உதட்டைப் பிதுக்கினான்.


யாதவ், "நான் சாப்பிடாமல் இருந்தால் நீயும் சாப்பிடக் கூடாது. நண்பனுக்காக இதைக் கூட பண்ண மாட்டியா?" என்று சிறு பிள்ளை முகத்துடன் வினவ, "இஹூம் இஹூம்..." என்று உதட்டைப் பிதுக்கி சிணுங்கியவன், "அவன் அவன ஆயிரம் ஃபிரன்டை வச்சிட்டு சந்தோஷமா இருக்கான். நான் ஒரே ஒரு ஃபிரன்டை வச்சிட்டு படுற பாடு இருக்கே!!! ஐயையையோ!!!" என்று சந்தானத்தின் பானியில் மொழிய யாதவின் இதழ்கள் புன்னகையை சிந்தின.


கௌதம், "உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதுடா. உனக்கு நண்பனா இருக்கேன் பாரு, எனக்கு இதுவும் வேணூம். இன்னும் வேணூம்" என்று சத்தமாகப் புலம்பி வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொள்ள யாதவ், "நாளைக்கும் பட்டினி இருக்க போறியா மச்சான் எனக்காக?" என்றான் அப்பாவியாய்.


கௌதம், "டேய்" என்று கழுத்தை நெறிக்கும் வகையில் கரங்களை கொண்டுச் சென்றவன் சில நொடிகள் யாதவை உற்றுப் பார்த்து விட்டு கையை உதறிக் கொண்டான். கௌதம், "அந்த பொண்ணை எங்க பார்த்த?" என்று இயலாமையுடன் வினவ, "நானும், நவியும் ஷொபிங் மோல் போனோம் மச்சான். அப்போ ஒரு பொண்ணை இடிச்சிட்டு சொரி கூட சொல்லாமல் ஏதோ ஒரு ரோபோவை புரோகிரம் பண்ணது போல நடந்து போயிட்டே இருந்தா.


நானும் அடுத்தடுத்து ஷொபிங் பண்ணதுல இதை மறந்துட்டேன். நீ அந்த பொண்ணு காணாமல் போன டேட்டை அனுப்பினதும் நான் அவளை மீட் பண்ணதும் ஒரே நாள். சோ அந்த பொண்ணு அந்த ஷொபிங் மோலுக்கும் வீட்டுக்கும் இடையில போகும் போது கடத்தப்பட்டு இருக்கனும்" என்றான் யோசணையுடன்.


கௌதம், "நீ சொல்றதைப் பார்த்தால் அந்த பொண்ணு உன் ஐடியாவைப் போல தான் கடத்தப்பட்டு இருக்கனும். ஆனால் அவளோட ஸ்கூடி எங்கே? அவளோட திங்ஸ் மட்டும் எப்படி அவ வீட்டுக்கு முன்னாடி போச்சு?" என்று வினவ யாதவ், "கமெரா ஏன் வர்க் பண்ண இல்லைன்னு விசாரிச்சியா?" என்றான்.


கௌதம், "பத்து நிமிஷத்துக்கு ஜேமர் ஆன் பண்ணி இருக்காங்கடா. அதான் எந்த ஒரு இலக்டிரிக் டிவைசுமே வேர்க் பண்ண இல்லை பத்து நிமிஷமா" என்று விளக்கம் கொடுக்க, "ஃபிங்கர் பிரின்ட் என்னாச்சு?" என்று கேட்டான் யாதவ்.


கௌதம், "அவங்க ஃபெமிலி மெம்பர்ஸ், சவிதாவை தவிற வேற யாரோட ஃபிங்கர் பிரின்டும் கிடைக்க இல்லை" என்க, "அப்போ நாம அடுத்து இன்வெஸ்டிகேட் பண்ண வேண்டியது நான் போன ஷொபிங் மோல்ல. இன்னிக்கே அதோட ஓனர் கிட்ட பேசி நாளைக்கு இன்வெஸ்டிகேட் பண்றதைப் பாரு.


அங்கே இருக்கிற சி.சி.டி.வி புடேஜசை இன்னிக்கே யாருக்கும் தெரியாமல் அவங்க கிட்ட வாங்கிரு. எதுவுமே மிஸ் ஆக கூடாது. என்ட், எனக்கு இரண்டு மாசத்துக்கு உள்ள புடேஜஸ் அத்தனையுமே வேணூம். வெளியே இப்போதைக்கு நியூஸ் கசியாமல் இருக்கிறது பெடர்" என்று கட்டளையிட்டான் ஒரு ஏ.ஐ.ஜியாக.


கௌதம், "நான் பார்த்துக்குறேன். நீ வைஷூவைப் பார்த்துக்கோ" என்று அங்கிருந்து வெளியேறினான். யாதவ் அவனுக்கு மொபைலுக்கு 'போய் பிரியாணி சாப்பிட்டு வேலையை ஆரம்பி' என்று மெசேஜ் அனுப்ப, கௌதம் ஸ்மைலி முகத்தை அனுப்பி வைத்தான் பதிலாக.


பத்து மணி நேரமும் பத்து யுகங்களாக யாதவிற்கு கடந்தது. நேரடியாக வைஷூவைப் பார்க்கச் சென்றால் யாதவ் கோபமடைவான் என்று அவளுடைய பெற்றவர்கள் விஷ்ணுவின் மூலமாக அவளுடைய நலத்தை அறிந்துக் கொண்டனர். அனைவரையும் கலங்கடித்து பத்து மணி நேரத்திற்குப் பின் ஆபத்துக் கட்டத்தைக் கடந்து இருந்தாள் வைஷ்ணவி.


அதன் பிறகே விஷ்ணுவிற்கும், யாதவிற்கும் நிம்மதியாக மூச்சுவிட முடியுமாக இருந்தது. யாதவ் வைஷ்ணவியை ஒரு முறைப் பார்த்து விட்டு விஷ்ணுவை அவளை அரை மணி நேரத்திற்குப் பார்க்குமாறுக் கூறி தனது வீட்டிற்குச் சென்று குளித்து ஆடைமாற்றி அவளுக்குத் தேவையான பொருட்களை எடுத்து மீண்டும் வைத்தியசாலைக்கு வந்தான்.


யாதவ், "நீ போய் ரெஸ்ட் எடுடா. நீ ரொம்ப டயர்டாகிட்ட. நான் இவளை பார்த்துக்கிறேன். நல்லா சாப்பிட்டு நிம்மதியா தூங்கு. அப்போ தான் நாளைய நாளை ஃபிரஷ்ஷா ஆரம்பிக்க முடியும்" என்க மறுக்காமல் ஏற்றுக் கொண்டான்.


விஷ்ணு, "அவளைப் பார்த்துக்கோ. இப்போ பயப்பட தேவையில்லை. வைஷூவை செக் பண்றதுக்கு ஒரு டாக்டரை அபோய்ன் பண்ணி இருக்கேன். இடைக்கிட அவங்களும் இவளை செக் பண்ண வருவாங்கடா" என்று உரைத்து விடைப் பெற்றான்.


யாதவ் வைஷ்ணவியின் அருகில் அமர்ந்து அவள் கரத்தை தன் விரலால் வருடிவிட்டான். மற்றைய கரத்தால் நெற்றியை முத்தமிட்டுச் செல்லும் முடிக் கற்றையை விரலால் அகற்றி காதிற்கு பின்னே சொருகியவன் அவள் சுருங்கி இருந்த புருவத்தை தன் விரால் நீவி விட புருவத்தின் சுருக்கம் அகற்றப்பட்டது.


யாதவ், "உனக்கு என் மேலே நம்பிக்கை இருக்குன்னு சொன்னது பொய் தானே? நம்பிக்கை இருந்து இருந்தால் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி இருப்பியா? உன் மேலே அதிகளவான கோபம் இருக்கு. கண்ணை திற அப்புறமா காட்றேன் அதை" என்று பல்லைக் கடித்து மொழிந்தவன் நெற்றியில் தன் இதழைப் பதித்தான்.


அவளைப் பார்த்தவாறே இருக்க வெகு நேரத்தாற்குப் பிறகே நித்ரா தேவியின் பிடிக்குள் இன்றைய களைப்பினால் சிக்கிக் கொண்டான் விஷ்ணு வீட்டிற்குச் செல்லும் போது அவனது பெற்றோரும், வசுவின் பெற்றோரும், வசுவும் அவனுக்காக காத்து இருந்தனர்.


அவன் உள்ளே நுழைந்ததும் வைஷூவைப் பற்றிய தகவலை எதிர்பார்த்தனர் அவன் முகத்தையே பார்த்து. அதைப் புரிந்துக் கொண்டவன், "வைஷூ இப்போ நல்லா இருக்கா. ஆபத்தை கடந்து வந்துட்டா. சோ பயப்பட அவசியம் இல்லை. நிம்மதியா இருங்க. நீங்க யாருமே சாப்பிட்டு இருக்க மாட்டிங்க. சாப்பாடு எடுத்து வைங்க எல்லாருக்கும். நானும் குளிச்சிட்டு வரேன்" என்று தனது அறைக்குச் சென்றான்.


வசுமதி அவன் செல்வதையே ஏக்கமாகப் பார்த்தாள். ஏனெனில் அவன் வருகை தந்ததில் இருந்து வசுமதியின் முகத்தை தவறியேனும் பார்க்காமல் அனைவருக்கும் பொதுவாய் பதிலளித்து அறைக்குள் சென்று விட்டான். வசுமதி விஷ்ணுவையே பார்ப்பதைக் கண்டு கொண்ட தங்கம் அவள் அருகில் வந்தார்.


வசுமதி, "அவனுக்கு தேவையானதை போய் பண்ணுமா" என்று அனுப்பி வைக்க அவளும் விஷ்ணு என்ன மனநிலையில் இருக்கிறான் என்று தெரியாமல் குழம்பி அறைக்குள் சென்றாள் ஒரு வித தயக்கத்துடன்


#######




கருத்துக்களைப் பகிர,





 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24833

கண்சிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 18




அறைக்குள் வசுமதி நுழைய விஷ்ணு குளியலறைக்குள் குளிக்கும் சத்தம் கேட்டது. அவன் குளித்து முடித்து தலையைத் துவட்டியவாறு வெளியே வர கட்டிலில் சுவரை வெறித்தவாறு அமர்ந்து இருக்கும் வசுமதியைப் பார்த்தவன், "என்ன வேணும் வசுமதி?" என்றான்.


வசுமதி, "வைஷூவோட இந்த நிலமைக்கு நான் காரணம் இல்லைங்க....." என்று அடுத்து பேசும் முன், "நான் எதையும் கேட்க விரும்ப இல்லை வசுமதி" என்றான் கறாராக. வசுமதி, "நான் சொல்றதை யாருமே கேட்காமல் இருந்தால் நான் எங்கே போய் என் ஞாயத்தை சொல்றது? இதுக்கு முன்னாடி நான் அவளை தப்பா பேசினது உண்மை. ஆனால் இன்னிக்கு நான் எதுவுமே பேச இல்லைங்க. நம்புங்க" என்று கதறி அழுதாள்.


விஷ்ணு அவளுடைய அழுகையைப் பொறுக்காமல், "நீ தெளிவா சொல்லு" என்று அவள் முன்னே வந்து நிற்க, "இன்னிக்கு அவ என் கிட்ட நோட் புக்கை கொடுக்க காலையில வந்தா. இன்னிக்கு காலையில இருந்தே மனசு ஒரு மாதிரி இருந்தது. வைஷூ நினைப்பு அதிகமாவே வந்தது.


அவ வந்ததும் ஒன்னும் அவளைப் பேச தோண இல்லை. புக்கை வச்சிட்டுப் போன்னு அனுப்பினேன். அவளும் சரின்னு தலையாட்டி புக்கை என் கபோர்டுக்குள்ள வைக்க கபோர்ட் கிட்ட போனா. அவ இருக்கிற இடத்துல இருக்க முடியாமல் நான் வெளியே போயிட்டேன். கொஞ்ச நேரத்துல வைஷூ வந்தா.


அவ தலைக் குனிஞ்சிட்டே என்னைப் பார்க்காமல் போயிட்டா. நானும் பெரிசு படுத்த இல்லை. ஆனால் இரண்டு ஹவருக்குள்ள வைஷூ பாத்ரூமுக்குள்ள சூசைட் பண்ண டிரைப் பண்ணிட்டான்னு நியூஸ் கிடைக்கவும் நான் உடைஞ்சி போயிட்டேன். அவ என் கூட தான் கடைசியா பேச வந்தான்னு எல்லாருமே சொன்னாங்க.


என் மேலே செய்யாத தப்புக்காக பழி போடவும் என்னால் தாங்க முடியல்லை. அதே போல வைஷூவை இந்த நிலைமியில பார்க்கவோ ஏத்துக்கவோ முடியாமல் நான் லீவ் போட்டு வீட்டுக்கு வந்துட்டேன்ங்க" என்று நடந்ததைக் கூறி மறுபடியும் கதறி அழுதாள்.


விஷ்ணு, 'அப்போ வைஷூ சூசைட் டிரை பண்ணதுக்கு ரீசன் என்ன?' என தனக்குள் கேட்க விடை தெரியாத கேள்வியாக மாறியது. வைஷ்ணவி கண் விழித்தால் மாத்திரமே அனைத்து கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் என்பது திண்ணம்.


வசுமதியைப் பார்த்து, "தப்பு பண்ணாமல் பழியை சுமக்குறதோட வலி இப்போ உங்களுக்கு புரியிதா வசுமதி? இதே போல தான் இத்தனை நாளா வைஷூவும் தப்பு பண்ணாமல் பழியை சுமந்துட்டு இருந்தா. இதை நான் உங்களை குத்தி காட்ட சொல்ல இல்லை. உங்க தப்பை உணர சொல்றேன்.


கோலேஜ்ல வைஷ்ணவிக்கும் உங்களுக்கும் லெக்சர் ஸ்டூடன்டை தவிர வேற உறவு கிடையாது. அதை மறந்து போய் நீங்க உங்க பேர்சனலை அங்கே கொண்டு போய் அவளை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி மென்டல் டாச்சர் கொடுத்ததை என்னால் மன்னிக்க முடியாது வசுமதி.


நீங்க இந்த அளவுக்கு அவளைப் பழிவாங்க தரம் தாழ்ந்து போவிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இது உங்க பேரன்சுக்கு தெரிஞ்சால் உங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க தெரியுமா? என் பேரன்ஸ் என்ன நினைப்பாங்க? எப்போவுமே செய்யாத தப்புக்கு வைஷூ தண்டனை அனுபவிக்கிறா. இந்த முறை நீங்க அனுபவிங்க" என்று உரைத்து கீழே சென்று விட்டான்.


அவன் கூறிய ஒவ்வொன்றுமே நெற்றிப் பொட்டில் அடித்து தெளிவுபடுத்தியது போன்று இருந்தது. அவளுடைய தவறுகள் அனைத்துமே கண் முன் தோன்றி பூதாகரமாய் தெரிய ஸ்தம்பித்து நின்று விட்டாள் வசுமதி.


கீழே செல்லாவிட்டால் பல கேள்விகள் எழும்பும் என்பதால் முகத்தைக் கழுவி சாப்பிட அமர ஒரு வித நிம்மதியுடன் சாப்பிட்டனர் அனைவரும். வசுமதியின் பெற்றோர்களுமே அன்றிரவு அங்கேயே தங்கினர்.


அடுத்த நாளும் யாரிற்காகவும் நிற்காமல் விடிந்தது. விடிந்து சில நிமிடங்களில் விஷ்ணுவின் மொபைல் நேற்று போல் ஒலிற அதில் பதறி எழுந்து, "ஹலோ" என்றான். "டாக்டர் என்னை காப்பாத்துங்க டாக்டர்" என்று எதிர்புறம் அழ, "என்னாச்சு டாக்டர்?" என்றான் அவசரமாக.


"நீங்க பார்த்துக்க சொன்ன பேஷன்ட் வைஷ்ணவியோட ஹஸ்பன்ட் என்னை படுத்தி எடுக்குறாரு. என்னால முடியல்லை. நான் வீட்டுக்கே ஜொப்பை ரிசைன் பண்ணிட்டு போறேன். எனக்கு டாக்டருங்குற பட்டமே வேணாம். நான் ஊருக்கு போய் அப்பா கூட சேர்ந்து மாடே மேய்க்குறேன் சேர்" என்று வழியும் கண்ணீரைத் துடைத்தவாறே மொழிந்தான்.


யாதவ் கண்விழித்துப் பார்க்க வைஷ்ணவி இன்னும் கண்விழிக்கவில்லை. அவன் பயத்தில் வைஷூவைப் பார்த்துக் கொள்ள இருந்த டாக்டரை படுத்தி எடுத்துவிட்டான்.


நிமிடத்திற்கு ஒரு முறை எப்போது கண்விழிப்பாள்? இன்னும் தாமதமாகுமா? மருந்துகள் சரியாக வழங்கப்பட்டதா? தாம் கூறிய நேரத்துக்கு ஏன் கண்விழிக்கவில்லை? உண்மையான டாக்டரா நீ போலி டாக்டரா? உன் மருந்தில் ஏதாவது பிரச்சனையா?


என்ற கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டு வைத்தியத் தொழிலையே அவரை வெறுக்க வைத்து விட்டான். அவனிடம் இருந்து தப்பிப்பது புதிய டாக்டரிற்குச் சவாலாக இருந்தது.


"யாதவ்" என்று பல்லைக் கடித்தவன், "நான் ஹாஃப் என் அவர்ல அங்கே இருப்பேன்" என்று அழைப்பைத் துண்டித்து, அவசரக் குளியலுடன் டீசர்,ஜீன்ஸ் அணிந்து வேகமாக வந்தான். தங்கம், "காலையில எங்கடா போற?" என்று வினவினார்.


விஷ்ணு, "உன்னோட இன்னொரு பையன் யாதவ் வைஷூ கண் முழிக்க இல்லைன்னு அந்த டாக்டர் போலி டாக்டர்னு சொல்ற அளவுக்கு ஹொஸ்பிடல்ல கலாட்டா பண்றான். இந்த டாக்டர் என்னன்னா நான் ஊருக்கு போய் மாடு மேய்குறேன்னு அழறான். என்னால முடியல்லை" என்று புலம்ப காபியை நீட்டினாள் வசுமதி.


மற்றவர்களுக்கு இவன் கூறியதில் சிரிப்பு வர காபியைக் குடித்தவாறே அதை மறைத்தனர். விஷ்ணுவும் அவசரமாக காபியைக் குடித்து அங்கிருந்து ஹொஸ்பிடலிற்குச் சென்றான். அவன் செல்லும் போது அவ் டாக்டர் மேசை மீது தலைவைத்து படுத்திருக்க யாதவ் தன் துப்பாக்கியை அவனது தலையில் வைத்திருந்தான்.


விஷ்ணு பதறி, "டேய் என்னடா பண்ற?" என்றவாறு அவ் டாக்டரை விடுவித்தான். டாக்டர் அழுதவாறே விஷ்ணுவின் பின் மறைந்து, "நான் ஊருக்கு போய் அப்பா கூட மாடு மேய்க்குறேன் சேர். எனக்கு டாக்டர் பட்டமே வேணாம்" என்று அழுதான்.


யாதவ், "நீ போலி டாக்டர்னு ஒத்துகிட்டு மாடு மேய்க்குறன்னு போறியே ரொம்ப சந்தோஷம்" என்றான் கோபமாக. "நீ உள்ள போ" என்று மற்ற டாக்டரை அனுப்பி வைத்த விஷ்ணு, "நாங்க ஜோசியக்காரங்க இல்லைடா. டைம் முன்ன பின்ன ஆனதுக்கு ஹொஸ்பிடலையே ரணகளம் பண்ணுவியா" என்று கோபமாய் இரைந்து "நீ அமைதியா இருந்தாலே அவ கண் முழிச்சிருவா" என்று அனுப்பி வைத்தான்.


யாதவை வெளியே அனுப்பிய விஷ்ணு மற்ற டாக்டரைப் பார்க்கச் செல்ல அவனோ தனது அறையில் தலைக் கவிழ்ந்து அழுதுக் கொண்டு இருந்தான். அவனை நெருங்கிய விஷ்ணு, "இப்போ எதுக்கு நீ அழற?" என்று குரல் உயர்த்த, "போங்க சார். அவரோட வைஃப் கண் முழிக்காமல் இருக்க நான் என்ன பண்ணுவேன்.


கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சேர்னு சொன்னதுக்கு பொசுக்குன்னு துப்பாக்கியை தூக்கிட்டாரு. நான் டாக்டரா இருக்கிறதை தவிற எந்த பாவமுமே பண்ண இல்லை. என்னை இப்படி ஒரு டேன்ஜர் மேன் கிட்ட எதுக்கு மாட்டி விட்டிங்க? நான் ஊருக்கு போறேன். போய் மாடு மேய்க்குறேன்" என்று எழுந்து கண்ணீரைத் துடைத்தான்.


விஷ்ணு, "போடா போ. உனக்கு இந்த டாக்டர் பதிவியெல்லாம் செட்டாகாது. ஊருல மாடு மேய்க்கிறது, ஆடு மேய்க்கிறதுன்னு ஏதாவது ஒரு தொழில் கிடைக்கும் அதைப் பண்ணு" என்று நயன்தாராவின் ராஜா, ராணி ஸ்டைலில் மொழிய அவ் டாக்டரான ராம் புரியாமல் அவனைப் பார்த்தான்.


விஷ்ணு, "என்னை எதுக்கு இப்போ சைட் அடிக்கிற? இன்னும் ஊருக்கு போகாமல் என்ன பண்ற?" என்று கோபமாய் வினவ, "நீங்களும் என்னை விரட்டுறிங்க சேர்" என்று ராம் மறுபடியும் அழ ஆரம்பிக்க, "முருகா எனக்கு சக்தி கொடு.... சக்தி கொடு" என்று சத்தமாகவே வானத்தைப் பார்த்து தன் புலம்பலைப் பாடலாய் பாடினான் விஷ்ணு.


இவனை ஒரு விசித்திர ஜந்துவைப் பார்ப்பது போன்று மேலிருந்து கீழாக கேவலமான ஒரு பார்வையை ராம் விஷ்ணுவின் மீது வீச, "இதெல்லாம் ரொம்ப ஓவர் டா. அங்க போனா அவன் எட்டி மிதிக்கிறான். இங்க வந்தால் நீ அடிக்கிற. என்னால முடியல்லைடா" என்று பாவமாய் ராமின் சீட்டில் அமர, "நான் எப்போ சேர் உங்களை அடிச்சேன்" என்று பதறி ஓடி வந்தான் ராம்.


விஷ்ணு, "என்னால முடியல்லைடா. நீ வாய் சொல்லால அடிக்கிறதை சொன்னேன். நானும் பாவம்ல. நான் சொல்றதை வாயை மூடிட்டு கேட்கனும்" என்றவன், "அவன் சென்னை சிடியோட ஏ.ஐ.ஜி. அவன் மனைவி தற்கொலை முயற்சி பண்ணி இருக்கான்னு சொன்னதுமே உடைஞ்சி போயிட்டான். அதுல அவ சொன்ன நேரத்துக்கு கண்ணை முழிக்க இல்லைன்னதும் டென்ஷன் ஆயிட்டான்.


அவன் டீல் பண்ற கேசுமே அவனை இழுத்தடிக்குது. அந்த டென்ஷன், இந்த டென்ஷனும் மொத்த டென்ஷனா மாறி அந்த மொத்த டென்ஷனையும் உன் மேலே இறக்கி எங்களை மொத்தமா அவன் டென்ஷன் பண்ணிட்டான். புரிஞ்சிதா?" என்று பொறுமையுடன் எடுத்துக் உரைக்க, "சத்தியமா புரியல்லை சேர்" என்றான் ராம் அப்பாவியாய்.


விஷ்ணு, "சரி உனக்கு புரியல்லைன்னா விடு. அவன் உன் மேலே காட்டின அதே கோபத்தை அவன் பொன்டாட்டி மேலே காட்டுவான். அப்போ உனக்கு புரியும்" என்று சிறு சிரிப்புடன் மொழிந்து, "இதுக்கு அப்புறமா ஊருக்கு போறேன்; பாருக்கு போறேன்னு சுத்திட்டு இருந்த கழுத்தறுத்து கொன்னு பின்னாடி தோட்டத்துல புதைச்சிடுவேன். ஜாக்கிரதை" என்று எச்சரித்தான்.


ராம் அவசரமாக தனது கழுத்தை இரு கரங்களாலும் மூடி 'போக மாட்டேன்' என்று மிரட்சியுடன் தலை அசைக்க, "குட்" என்று விஷ்ணு ஒரு நெடிய மூச்சை வெளியிட்டு அங்கிருந்து நகர்ந்தான். 'உலக்கத்துல புனிதமான மனசுக்கு நிம்மதியான தொழில் இதுன்னு சொன்னாங்க. ஆனால் எனக்கு மட்டும் மொத்த நிம்மதியுமே போகுது' என தனக்குள் புலம்பினான்.


அவன் மனசாட்சி, 'உன் சேர்க்கை சரியில்லை' என்று உரைக்க, 'அது உண்மை தான். முதல்ல ஃபிரன்டுன்னு சுத்திட்டு இருக்கிற இந்த யாதவை டிவோர்ஸ் பண்ணனும். அப்புறமா எல்லாம் சரியாகிரும்' என்க, அவன் மனசாட்சியும் அதை ஆமோதித்தது.


யாதவைப் பார்க்கச் சென்றவன் விஷ்ணு, "லூசாடா நீ அவன் கிட்ட போய் துப்பாக்கியை நீட்டி இருக்க? அவனே ஒரு பயந்தாங்கொள்ளி. இதைப் போல லூசுத்தனமா ஏதும் பண்ணாத" என்று கத்த, "அவன் எல்லாம் எதுக்குடா டாக்டரா இருக்கான்?" என்று யாதவும் எகிறினான்.


"அவன் எங்க அம்மா ஊரைச் சேந்தவன். அவனோட அப்பா மாட்டு பண்ணை வச்சிருக்காரு. அம்மா இல்லை. சின்ன வயசுல இருந்தே டாக்டராகனும்னு ஒரு ஆசை அவனுக்கு. ஆனால் சரியான பயம். நான் அம்மா கூட ஊருக்கு போனப்போ அவனை மீட் பண்ணி அவன் நிலமையை புரிஞ்சிகிட்டேன்.


அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா தைரியத்தைக் கொடுத்து டாக்டருக்கு படிக்க வச்சேன். அவனை டாக்டராக்க நான் பட்ட பாடு எனக்கு மட்டும் தான் தெரியும். நான் ஆறு வருஷமா கஷ்டப்பட்டு உருவாக்கின டாக்டரை நீ ஒரு நிமிஷத்துல அந்த பட்டத்தை தூக்கி வீச வச்சிட்ட" என்று சொற்களைக் கடித்துத் துப்பினான்.


யாதவ், "விடு மச்சான். இனிமேல் பண்ண மாட்டேன். ஆனால் அவன் இந்த ஹொஸ்பிடலே விட்டு எங்கேயும் போகக் கூடாது. அவனை பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு" என்று கூறி வெளியேறியவன் கௌதமை அழைத்து வைஷூவுடன் இருக்குமாறு நவிழ்ந்து ஷொபிங் மோலில் விசாரணையை மேற்கொள்ளச் செல்வதற்காக வீட்டிற்குச் சென்றான்.


கௌதம் வருகைத் தந்து சிறிது நேரத்தில் வைஷூ கண் விழிக்க, "வைஷூ" என்றவாறே அவளை நெருங்கினான் கௌதம். வைஷூ, "அண்ணா" என்று சோர்வான முகத்தில் வலியான குரலில் முணுமுணுத்தாள்.


கௌதமைப் பார்த்து வலியுடன் வைஷூ புன்னகைக்க, "இப்போ எப்படி இருக்க?" என்றான். "நல்லா இருக்கேன் அண்ணா" என்று மெதுவான குரலில் மொழிய, "எதுக்காகமா இப்படி பண்ண? தற்கொலை பண்றது கோழைத்தனம்னு உனக்கு தெரியாதா?" என உரிமையுடன் கடிந்துக் கொண்டான்.


கசப்புடன் ஒரு புன்னகையைச் செலுத்தி தலையைக் குனிந்துக் கொண்டாள். கௌதம், "யாதவ் ரொம்ப பயந்துட்டான். அவன் உன் மேலே செம கோபத்துல இருக்கான். என்ன பண்ணுவான்னு எனக்கே தெரியல்லை" என்று பரிதாப்பத்துடன் அவளைப் பார்க்க வைஷூவிற்கும் பீதியானது.


வைஷூ, "என்ன அண்ணா சொல்றிங்க?" என்று ஒரு வித பயத்துடன் வினவ, "ஆமாடா. உன் மேலே கொலை வெறியில இருக்கான்" என்று யாதவ் பேசும் போது இருந்த கோபத்தை ஞாபகப்படுத்திக் கூற வைஷூவிற்கு அவனைப் பாராமலேயே அடிவயிறு கலங்க ஆரம்பித்தது.


வைஷூவை பரிசோதனை செய்வதற்கு எப்போதும் போல் விஷ்ணு உள்ளே வர வைஷூவும், கௌதமும் பேசுவதைப் பார்த்தவன், "அவ கண் விழிச்சிட்டான்னா வந்து சொல்ல மாட்டியா?" என்று திட்டி அவளைப் பரிசோதனை செய்தான். வைஷூவின் முகத்தைப் பார்க்கவோ ஒரு வார்த்தையேனும் பேசவோ இல்லை.


வைஷூ, "போலி டாக்டர்" என்று மெதுவாய் அழைக்க, "புருஷனும், பொன்டாட்டியும் என் ஹொஸ்பிடல்ல இருக்கிறவங்களை போலி டாக்டர்னு முத்திரை குத்தி இழுத்து மூட வச்சிருங்க" என்று முணுமுணுக்க விஷ்ணுவின் மொபைல் அலறியது.


அவன் அழைப்பை ஏற்று, "ஹலோ" என்றான். "ஆமா" என்று எதிர்ப்புறம் மொழிந்ததிற்கு பதில் அளிக்க அடுத்து உரைத்ததிற்கு, "சரி" என்று அழைப்பைத் துண்டித்தான்.


விஷ்ணு கௌதமைப் பார்த்து, "யாதவ் தான் பேசினான். அவன் பொன்டாட்டி கண் விழிச்சிட்டாளான்னு கேட்டான். நான் ஆமான்னு சொன்னேன். இப்போவே அவளைப் பார்க்க வரானாம்" என்று உரைத்து அறையிலிருந்து அவளைப் பாராமல் வெளியேறினான்.


வைஷூ சோகம் தாங்கிய முகத்துடன் தலைக் குனிய கௌதம், "நீ ஃபீல் பண்றதை பொறுமையா ஃபீல் பண்ணு. இப்போ யாதவ் கிட்ட இருந்து தப்பிக்கிற வழியைப் பாரு" என்று மொழிய யாதவின் கோபத்தை எண்ணி அவளுடைய கைகளும், கால்களும் இப்போதே நடுங்க ஆரம்பித்தது.


கௌதம், "சரி பார்த்துக்கலாம் விடு. இப்போ ரெஸ்ட் எடு" என்று அவள் மிரள்வதைப் பார்க்க முடியாமல் கூறி அறையில் இருந்து வெளியேறி கோரிடரின் பக்கமாகச் செல்ல யாதவின் கார் ஹொஸ்பிடலின் வளாகத்திற்குள் நுழைவது நன்றாகவே தெரிந்தது.


அங்கிருந்து வேகமாக மூச்சிறைக்க ஓடி வந்தவன் வைஷூவின் அறைக்குள் நுழைய இவன் ஓடுவதைப் பார்த்து விஷ்ணுவும், ராமும் என்னவோ ஏதோ என்று பயந்து வைஷூவின் அறைக்கு ஓடினர்.


வைத்தியாசாலையின் ஒரு அறையில் கட்டிலில் டிரிப்ஸை ஏற்றியவாறே படுத்துக் கொண்டு இருந்தாள் வைஷ்ணவி. கௌதம் வேக மூச்சுக்களை வெளியிட்டு, "வைஷூ, யாதவ் வந்துட்டான்" என்று அவசரமாக நுழைந்து நவிழ, "ஐயோ நான் மயங்கிட்டேன்" என்று கண்களை இறுக மூடிக் கொண்டாள் வைஷூ பயத்துடனும், பதட்டத்துடனும்.


யாதவ் கோபமாக கதவைத் திறந்து கௌதம், வைஷூவை மாறி மாறிப் பார்த்தவன் "மரியாதையா உன் தங்கச்சை கண்ணை திறக்க சொல்லு. இல்லை எனக்கு இருக்கிற கோபத்துக்கு நான் என்ன வேணூன்னாலும் பண்ணிருவேன்" என்ற அவனது கர்ஜனையில், வைஷூ நடுங்கியபடியே எழுந்து அமர அவள் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தான்.


விஷ்ணுவும், ராமும் யாதவிற்கு பின்னே நுழைய அவனது அறையில் இருவருமே தத்தமது கன்னங்களை கரங்களால் மறைத்துக் கொண்டு யாதவைப் பார்க்க வைஷூ அடித்த அதிர்ச்சியில் உண்மையாகவே மயங்கிவிட்டாள்.


கௌதம், "அறிவு இருக்கா உனக்கு? இப்போ தான் கண்ணு முழிச்சா. மறுபடியும் உன் அடியால மயங்கிட்டா" என்று திட்டித் தீர்க்க யாதவிடம் எவ்வித எதிர்வினையும் இல்லை. அவனது பார்வை முழுவதும் மயங்கிக் கிடந்த வைஷூவின் மீதே இருந்தது.


ராம் தன் மனதில், 'இந்த பொண்ணுக்கே இப்படி ஒரு அறை. எனக்கெல்லாம்...' என்று நினைக்கும் போதே கால்கள் நடுங்கி நெற்றியிலும் கழுத்திலும் வியர்வைப் பூக்கள் அரும்ப ஆரம்பிக்க, 'ஆளை விடுங்கடா சாமி' என்று பூனை நடையிட்டு வெளியே செல்ல முனைந்தான்.


யாதவ், "விஷ்ணு உன் டாக்டர் இப்போ வைஷூவை எழுப்பி விட்டே ஆகனும். இல்லை வெளியே போக முடியாது" என்ற மிரட்டலில், 'நான் என்னடா பாவம் பண்ணேன் உங்களுக்கு' என்று மனதுக்குள் கதறி அழுது அங்கே வேரோடி நின்றான் யாதவ் தன்னைக் கண்டு கொண்ட அதிர்ச்சியில்.


விஷ்ணு, "ராம் வைஷூக்கு என்னாச்சுன்னு பாரு" என்று கட்டளையிட அதை மீற முடியாமல் 'சரி' என்று தலையைக் கவிழ்ந்தவாறு வைஷூவின் அருகில் சென்று பரிசோதித்தவன், "சேர் அடிச்சதுல மயங்கிட்டாங்க டாக்டர். இன்னும் பத்து நிமிஷத்துல.." என்றவன் யாதவைப் பார்த்தான்.


குறிப்பிட்ட நேரத்தில் வைஷூ கண் விழிக்காமல் அவன் செய்த கலாட்டாக்கள் கண் முன் தோன்ற, "இல்லை இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்துல கண் விழிப்பாங்க" என்று உரைத்து அவசரமாக அங்கிருந்து ஓடிவிட்டான். இதைப் பார்த்த யாதவின் முகத்தில் மென்நகை ஒன்றும் மென்மையும் புகுந்தது.


அவனது நடவடிக்கைகளை வித்தியாசமாகப் பார்த்தனர் விஷ்ணு, கௌதம் இருவரும். அவனோ அதைப் பொருட்படுத்தாது வைஷ்ணவி கண்விழிக்கும் நேரத்திற்காகக் காத்துக் கொண்டு இருந்தான். ராம் கூறிச் சென்ற சிறிது நேரத்திலேயே வைஷூவும் கணவிழித்தாள்.


யாதவ் அவளை கோபமாக உறுத்து விழிக்க வைஷ்ணவி பயத்தில் எச்சிலை விழுங்கி பயத்தை மறைக்க முயன்றாள்.



அடுத்து வந்த நாட்களில் அபி - கார்த்திக், சனா, சாத்விக் என இரு ஜோடிகளும் தேனிலவில் இருந்து திரும்பி வர சாத்விக்கிற்கு டிடெக்டிவ் மூலம் சில அதிர்சியான தகவல்கள் கிடைக்கக் காத்திருந்து.


அத்தோடு மூன்று ஜோடிகளும் மித்ரன், ப்ரவீன், ஆர்யன் இவர்களது பேட்ச் மாணவர்களால் கல்லூரியில் புது வருடப் பிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க அங்கே சென்றனர். அங்கே அவர்களுக்கு காத்துக் கொண்டு இருப்பது என்ன?



தொடரும்...



#######


நாளை சந்திக்கலாம்



#######



கருத்துக்களைப் பகிர,



 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்சிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 19




யாதவ் அவளை கோபமாக உறுத்து விழிக்க வைஷ்ணவி பயத்தில் எச்சிலை விழுங்கி பயத்தை மறைக்க முயன்றாள்.


யாதவ், "என் மேலே உனக்கு நம்பிக்கை துளியளவும் இல்லை. ரைட்? அதான் முட்டாளா இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்க" என்று கத்த வைஷூ மௌனமாக தலைக் கவிழ்ந்தாள். "வாயைத் திறந்து பேசிடாத. பேசினால் முத்து கொட்டிரும். சாகும் போது என்னை பத்தி கொஞ்சமாச்சும் நினைச்சு பார்த்தியா?


எனக்குன்னு இருக்கிறது இப்போ நீ மட்டும் தான். எனக்கு அநியாயம் பண்றோம்னு மனசாட்சி உறுத்தல்ல? எனக்கு என்ன பைத்தியமாடி அன்னிக்கு என் குடும்பத்தை பூரா உனக்காக எதிர்த்து நின்னு அவங்க கூட போராடி உன்னை பொத்தி பொத்தி பாதுகாத்து நான் பார்த்து கிட்டா நீ ஒரு நிமிஷத்துல உன் வாழ்க்கையை முடிச்சிக்க பார்த்து இருக்க.


எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு என்ன பண்றதுன்னே தெரியல்லை. அவளோ கோபம் வருது. உன்னை யாரும் கோழையா வளர்க்க இல்லை. ஆனால் நீ உலகத்துலேயே அடி முட்டாள் தனமான முடிவை எடுக்குற அளவுக்கு பலவீனமா இருக்க. சரி இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லு?" என்று மார்பிற்கு குறுக்காகக் கையைக் கட்டி வினவினான்.


யாதவ், "இப்போ உன்னால பேச முடியுமா? முடியாதா?" என்று வார்த்தைகள் அழுத்தமாக வெளி வந்து விழுந்தன. "ஒரு சின்ன விஷயத்துக்கு போய் சூசைட் பண்ணனும்னு நினைச்சு இருக்க பாரு உன்னை எல்லாம்..." என்று யாதவ் மீண்டும் பேசி முடியும் முன் "எது சின்ன விஷயம்? நான் தப்பானவன்னு, இன்னொருத்தன் அவன் கூட படுக்க வர சொல்றது சின்ன விஷயமா?" என்று அகங்காரத்துடன் கண்கள் சிவக்கக் கத்தினாள்.


யாதவ் அவளை அழுத்தமாகப் பார்த்தவாறே அவளை நெருங்கியவன் அவள் கண்ணில் இருந்து வழியும் விழிநீரினைத் துடைத்துவிட்டான். "நான் தப்பான பொண்ணு இல்லைன்னு போராட எனக்கு தெம்பு இல்லை. நான் சோர்ந்து போய் இருக்கிற நேரம் இப்படி ஒருத்தர் சொல்லும் போது நான் என்ன பண்றது?


என் கற்பே கேள்விக்குறியானது போல ஆகிருச்சு. உயிரோட செத்துப் போயிட்டேன். இதுக்கு மேலேயுமே வாழனுங்குற எண்ணம் எனக்கு இல்லை. உங்க எல்லாரையும் பொறுத்தவரை இது சின்ன விஷயம் ஆனால் எனக்கு அப்படி இல்லையே" என்று தேம்பித் தேம்பி அழ அவளை தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டு ஆதரவாக முதுகை வருடினான்.


அவளுடைய அழுகை குறையாத போது, அவன் தன்னுடைய மொபைலை எடுத்து ஒருவருக்கு அழைத்து, "உள்ள வாங்க" என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். சிறிது நேரத்தில் அறைக்கதவு திறக்கப்பட, அனைவரின் கவனமும் அப்புறம் திரும்பியது.


இரத்தம் வழியும் முகத்துடன் நன்றாக அடி பிண்ணி எடுக்கப்பட்ட நடுத்தர வயதான ஆண் ஒருவனை இருவர் இழுத்து வந்து கீழே தள்ளி விட அவன் நிற்கத் தெம்பு இல்லாது விழுந்தான். வைஷூவிற்கு அவனைப் பார்த்ததுமே உடல் நடுங்க ஆரம்பிக்க யாதவ் அவளை மேலும் தன்னோடு இறுக்கி, "நான் உன் பக்கத்துல இருக்கும் போது உனக்கு என்ன பயம்?" என்று அவள் முகம் பார்த்தான்.


யாதவ், "இப்போ உண்மையை நீயா சொன்னால் இதோட விட்டு விஷயம் வெளியே கசியாமல் ஜெயிலுக்கு அனுப்புவேன். இல்லை, நான் தோளை உரிச்சு மேலே அனுப்பி இல்லாத கேசுல நீ தான் குற்றவாளின்னு புரூவ் பண்ணி கேசை குளோஸ் பண்ணுவேன். சொயிஸ் இஸ் யுவர்ஸ்" என்று இகழ்ச்சியுடன் அவனைப் பார்த்தான்.


அவன், "நான் சொல்லிடுறேன் சேர். நான் அந்த கோலேஜ் புரொஃப் தான். எனக்கு அங்கே நிறைய பொண்ணுங்க கூட தொடர்பு இருக்கு. அதுவும் நான் அவங்களை மிரட்டி என் ஆசைக்கு அடி பணிய வைப்பேன். அதே நேரம் இவளைப் பத்தி இவளோட அக்காவே தப்பான பொண்ணுன்னு பேசுனா.


நிறைய பேர் பேசினாங்க. அவ மேலே எனக்கு ஏற்கனவே ஒரு கண்ணு இருந்தது. இதை வாய்ப்பா பயன்படுத்த நினைச்சேன். வசுமதியோட கபோர்டுல புக்கை வைக்கும் போது நான் பக்கத்துல உட்கார்ந்து இருந்தேன்.


அவ கிட்ட தைரியமா இன்னிக்கு நைட்டுக்கு நான் சொல்ற இடத்துக்கு அவ எனக்கு கம்பனி கொடுக்க வராமல் இருந்தால் என் கூடவும் தொடர்பு இருக்குன்னு நியூசை பரப்பிடுவேன்னு மிரட்டினேன்.


அவ பயந்து வருவான்னு எதிர்பார்த்தால் அவ கோலேஜ் பாத்ரூமுக்கு போய் சூசைட் பண்ண டிரை பண்ணிட்டா. நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை. அவளோட புருஷன் பொலிஸ் ஓஃபீசர்ங்குறதையும் எதிர்பார்க்கவே இல்லை" என்று முடிக்கும் போது கௌதமின் கரத்தினால் மூக்கில் குத்து வாங்கி இருந்தான்.


மூக்கில் இருந்து வழியும் இரத்ததுடனும் வலியுடனும் அவன் சுருண்டு விழ விஷ்ணு, கௌதம் இருவரும் சேர்ந்து அவனை அடி, பின்னி எடுத்தனர். கௌதம், "உங்களை நம்பி தானேடா ஒவ்வொரு பெத்தவங்களும் கோலேஜூக்கு பொண்ணுங்களை அனுப்பி வைக்குறாங்க.


ஆசான் பள்ளிக் கூடத்துல இன்னொரு அப்பா. ஆனால் உன்னைப் போல கேவலமான ஜென்மங்களால நல்லா இருக்கிற ஸ்டாஃப்சுக்கும் கேடு. அதனால தான் யாருக்கும் யாரையுமே நம்ப முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கு. ஒவ்வொருத்தரையுமே சந்தேகமா பார்க்க வேண்டி இருக்கு. என்ன மனிஷங்க நீங்க" என்று வெறுப்புடன் உரைத்தான்.


விஷ்ணு, "உன்னைப் போல ஒருத்தன் உயிரோட இருக்கவே கூடாது" என்றவன் யாதவிடம் திரும்பி, "சாத்விக் கிட்ட பேசி இவனை கோலேஜை விட்டே டிஸ்மிஸ் பண்ண சொல்லு. இவன் எல்லாம் உயிரோட இருந்து யாருக்கும் பயனில்லை. சாகுறது மேல்" என்றான்.


"அவனை இப்போ டிஸ்டர்ப் பண்ண முடியாது விஷ்ணு. அவன் வரும் வரைக்கும் என் இடத்துலே வச்சு நல்லா டிரீட்மன்ட் கொடுக்குறேன். அவன் வந்ததுக்கு அப்புறமா இவனுக்கு ஏதாவது முடிவு எடுக்கலாம்" என்று மொழிந்தவன் மற்ற இருவரையும் பார்த்தான்.


யாதவ், "இவனுக்கு கொடுக்க போற டிரீட்மன்டுல பொண்ணுங்க பக்கமே இவன் தலை வச்சு படுக்கக் கூடாது" என்று ஆணையிட, "ஒகே சேர்" என்று சலீயூட் அடித்து அவனை இழுத்துச் சென்றனர்.


வைஷ்ணவியின் விழிகள் நீரினால் தளும்பி இருக்க அவளால் யாதவின் முகத்தை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. இமை மூட அணை கடந்த வெள்ளம் போல் தளும்பி இருந்த நீர் முழுவதுமே வடிந்து சென்றது.


மீண்டும் அவள் கண்களைத் திறக்கம் முன் அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள வைஷூவும் அதற்கு வாகாக சாய்ந்துக் கொண்டாள்.


இருவரையும் பார்த்த விஷ்ணு, கௌதம் இருவருமே நிறைவாக புன்னகையைச் சிந்தினர்.


கௌதம், "எப்படிடா இவனைக் கண்டு பிடிச்ச?" என்று ஆச்சரியமாய் வினவ, "நான் யாதவ் மித்ரன்டா" என்று கூற ஆரம்பித்தான்.


யாதவ் தேன்மொழியிடம் ஸ்டாஃப் ரூமில் நடந்தவற்றை விசாரிக்குமாறு கூறி இருந்தான். நேற்று இரவே தேன்மொழி வசுமதி இருந்த ஸ்டாஃப் ரூமில் அக்கயவனும் இருந்ததாக விசாரித்து வொயிஸ் நோட் அனுப்பி இருக்க அதை யாதவ் காலையில் வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே கேட்டான்.


அவனும் சந்தேகத்தின் பேரில் தன்னுடைய ஆட்களை வைத்து காலையில் ஜொகிங் சென்றவனைத் தூக்கிச் சென்று விசாரிக்க ஆரம்பத்தில் அவன் பயத்தில் ஒன்றும் கூறாமல் இருந்தான்.


அடுத்து வைஷூவின் புகைப்படத்துடன் யாதவின் திருமண புகைப்படமும், யாதவ் காக்கியில் இருக்கும் புகைப்படத்தையும் காட்ட பேச்சிலும், பார்வையிலும் தடுமாற்றம் வர ஆரம்பித்தது.


அவனது தடுமாற்றத்தில் சுதாகரித்தவர்கள் அடித்துக் கேட்க உண்மைகளை உளறி இருந்தான். யாதவ் காக்கியில் மீண்டும் அங்கே செல்ல அவனின் ஆட்களும் நடந்த உண்மையை உரைத்து இருந்தனர். அக்கயவன் மயக்கத்தில் இருக்க விஷ்ணுவிற்கு அழைத்து வைஷூவைப் பற்றி விசாரித்தான்.


அவள் கண்விழித்த செய்தி அவனைக் கிட்ட, ஹொஸ்பிடலுக்கு அக்கயவனை இழுத்துவருமாறு கூறி முன்னே சென்றான். குறித்த நேரத்தில் அவன் அவர்களுக்கு அழைத்து உள்ளே இழுத்து வருமாறு உரைத்து இருந்தான். அதே போல் அனைத்துமே நடந்தது.


விஷ்ணுவும், கௌதமும், "சூப்பர்டா மச்சான். பிளேன் பண்றதுல உன்னை அடிச்சிக்க ஆள் இல்லை. சரியான நேரத்துக்கு வைஷூ வாயால சில உண்மைகளை வர வச்சு, அவனையும் தூக்கி உண்மையை சொல்ல வச்சிட்ட" என்று மனம் திறந்து பாராட்ட சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டான்.


யாதவையே வைஷூ வைத்த கண் வாங்காமல் பார்க் கௌதம் தொண்டையைச் செருமி, "நாங்களும் இங்கே தான் இருக்கோம் வைஷூ. உன் புருஷனை யாருமே தூக்கிட்டு போக மாட்டாங்க. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க தேவையில்லை" என்று சீண்ட செங்கொழுந்தாய் கன்னங்கள் மாற முகத்தை வேறு புறம் திருப்பி அதை மறைக்க முயன்றாள்.


அதைப் பார்த்த மூவருமே இதழ் விரியா புன்னகையைச் சிந்தினர். நாகரிகம் கருதி கௌதம், விஷ்ணு இருவரும், "நாங்க போயிட்டு அப்புறமா வரோம். அவளைப் ஒழுங்கா பார்த்துக்கோ" என்று உரைத்தே வெளியேறினர்.


யாதவ், "அப்போ அன்னிக்கு இராத்திரி என் மேலே நம்பிக்கை இருக்குன்னு சொன்னது பொய்யா?" என்று தன் ஒற்றை விரலால் அவள் நாடியை உயர்த்தி வினவ, "இல்லை" என்றாள் அவன் கண்களைப் பார்த்தவாறே. "அப்புறம் எதுக்காக நீ இந்த முடிவை எடுத்த? எதுக்காக என் கிட்ட உடனே சொல்ல இல்லை?" என்று குற்றம் சாட்டினான்.


வைஷூ, "என்ன சொல்லுவேன்? இன்னொருத்தன் என்னை...." என்று வார்த்தைகளை மொழிய முடியாமல் விழுங்கி அழ ஆரம்பித்தாள். "இதை வார்த்தையால கூட எனக்கு சொல்ல முடியல்லை. எப்படி உங்க கிட்ட சொல்லுவேன். இப்போவுமே அருவெருப்பா இருக்கு" என்று கூறி கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.


அவள் கண்ணீரைத் துடைத்தவாறே, "சரி இதை விடலாம். இந்த பிரச்சனை நடந்ததுக்கு அப்புறமா நீ கோலேஜ்ல இருந்த. என்னை பார்க்கவும் முடியல்லை. நேரடியா பேசவும் உனக்கு அருவெருப்பா இருந்ததால விட்டாலும், வசுமதி பிரச்சனை பண்ணப்போ ஏன் சொல்ல இல்லை?" என்று ஒற்றைப் புருவமுயர்த்தி வினவினான்.


"ஆரம்பத்துல என்னால மேனஜ் பண்ணிக்க முடியும்னு நினைச்சேன். ஆனால் ஒவ்வொரு நாளும் அப்படி இருக்க இல்லை. நீங்களே கேஸ் விஷயமா ரொம்ப டென்ஷனாகி இருக்கிங்க. உங்க கிட்ட சொன்னால் இன்னும் டென்ஷனாகி நிம்மதியே இல்லாமல் போயிரும். இரண்டு பேர் கஷ்டபடுறதை விட ஒத்த ஆளா நானே கஷ்டபடுறது நல்லதுன்னு தோணுச்சு" என்று தலைக் கவிழ்ந்தவாறு நவிழ்ந்து முடித்தாள்.


யாதவ், "இதை ஆரம்பத்துலேயே சொல்லி இருந்தால் பிரச்சனை இந்த அளவுக்கு வந்திருக்காது நவி" என்று கடிந்துக் கொள்ள, "இப்போ புரியிது" என்று மௌனமானாள். தன்னிடம் இருந்து அவளைப் பிரித்து ஒழுங்காக படுக்க வைத்ததான்.


யாதவ், "நீ பண்ணதை இப்போவும் நான் சரின்னு சொல்ல மாட்டேன் நவி. தப்பு தப்பு தான். அந்த கோபம் இன்னும் இருக்கு. இதுக்கு மேலே உன்னை கஷ்டபடுத்த முடியல்லை. பார்க்க சோர்வா தெரியுற. கொஞ்சமா ரெஸ்ட் எடு" என்று அவள நுதழில் இதழ்பதித்து வெளியேறினான்.


வெளியேறி வந்தவன் விஷ்ணு, கௌதம் இருக்குமிடம் வந்து, "இன்னும் வன் வீக்ல எனக்கும், வைஷூவுக்கும் கல்யாணம் ஆனதுக்கு ஒரு பார்டி அரேன்ஜ் பண்ணலாம்னு இருக்கேன். உங்க ஃபெமிலியை கூட்டிட்டு வாங்க" என்றவன் விஷ்ணுவிடம் திரும்பி, "உன் பொன்டாட்டி கண்டிப்பா வரனும்" என்று அழுத்தமாகக் கூறி விசாரணையை மேற்கொள்ள கௌதமையும் இழுத்துச் சென்றான்.


விஷ்ணுவிற்கு அழைத்த வசுமதி, "நான் இன்னும் பத்து நிமிஷத்துல ஹொஸ்பிடல்ல இருப்பேன்ங்க. நான் வைஷ்ணவி கிட்ட ஒரு முறை பேசனும். ஏற்பாடு பண்ணி கொடுங்க" என்று கூறி அவன் முடியாது என்று கூறி விடுவானோ என்ற பயத்தில் அழைப்பைத் துண்டித்தாள்.


அதே நேரம் மும்பாயை நெருங்கும் ஓர் இடத்தில் பாதைகளில் இருக்கும் செக் போஸ்ட் ஒன்றில் பரிசோதனைகள் நடைப் பெற்றுக் கொண்டு இருந்தன. அதில் ஏழுமாத கருவைச் சுமந்த ஒரு பெண் எவ்வித களைப்பும் இல்லாது இயந்திரத்தை போல் பொலிஸ் கூறுவதைச் செய்ய சில நொடிகளில் மயங்கி விழுந்தாள்.


அவளின் மயக்கதை தெளிவிக்க முகத்திற்கு நீர் தெளிக்க சில நொடிகளில் கண்விழித்து மீண்டும் எழுந்தாள். அவள் உடல் ஓய்வுக்கு ஏங்குவதை மற்றவர்கள் உணர்ந்துக் கொணவடாலும் அவள் அதை உணரவில்லை போலும். பரிசோதனைகளை முடித்து காரில் அமர காரோட்டி தொடர்ந்து காரைச் செலுத்தினான்.


அவளுடைய இயந்திரத்தன்மையான நடவடிக்கைகளை விசித்திரமாக பொலிஸார் கண்டு கொண்டு புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஏனெனில் நடக்கும் போது மூச்சுவாங்குதல், மெதுவாக நடத்தல், வலியையும், களைப்பையுமவ சுமந்த முகம் எதுவுமே இல்லை.


சுருக்கமாகக் கூறினால் சாதாரண கர்பிணியில் இருந்து அவளிடம் அதிகமான வித்தியாசங்கள் தென்பட்டன. அதை விடுத்து அடுத்த பரிசோதனைகளில் கவனம் செலுத்த அப் பெண் தெரிந்தோ தெரியாமலோ அனைத்து பொலிஸாரின் மனதிலும் ஆழமாக பதிந்து போனாள்.


வசுமதி வைஷ்ணவியைப் பார்ப்பதற்காக விஷ்ணுவிடம் கூறி அவனது பதிலை எதிர்ப்பார்க்காது அழைப்பைத் துண்டிக்க விஷ்ணு, "இப்போ என்ன பிரச்சனை வர போகுதோ!! முருகா உதவி பண்ணுப்பா. இது யாதவுக்கு தெரிஞ்சால் என் தோலை உரிப்பான்" என்று மனதுக்குள் புலம்ப மட்டுமே அவனால் முடிந்தது.


வசுமதி ஹொஸ்பிடலை அடைந்தவுடன், விஷ்ணுவிற்கு அழைக்க, "தேர்ட் ஃபுளோருக்கு வாங்க" என்க, வசுமதியும் லிஃப்டை உபயோகித்து அங்கே விரைந்தாள். விஷ்ணு அவளுக்காக லிஃப்டின் அருகே காத்திருக்க வசுமதி வந்தவுடன் அவளை அழைத்துக் கொண்டு வைஷ்ணவி இருந்த அறைக்குள் சென்றான்.


கதவைத் திறந்து உள்ளே நுழைய கண்களை மூடி சோர்வும், களைப்பும், வலியும் தாங்கிய முகத்துடனும் தளர்ந்து துவண்டிருந்த உடலுடன் படுத்திருக்க இயல்பான தாய்க்குணம் வசுமதியிற்கு பெருக்கெடுத்தது. விழிகளில் இரு சிறு துளி நீர் வழிய அவசரமாக அதைத் துடைத்து மறைத்தாள்.


அவளின் நடவடிக்கைகளையே அணு அணுவாக பார்த்த விஷ்ணுவின் விழிகளில் இருந்து அச் செய்கை தப்பவில்லை. அவளை நெருங்கி தலை வருட கரத்தைக் கொண்டு செல்வதும், விரல்களை மடக்கிக் கொள்வதுமாக சில நிமிடங்கள் சென்றன.


வைஷ்ணவி சில நொடிகளில் இமைப் பிறிக்க அவசரமாக வசுமதி அவசரமாக அங்கிருந்து பின் நகர்ந்து விஷ்ணுவின் அருகில் நின்றுக் கொண்டாள். தன் தமக்கையை அங்கே பார்த்தவள் அதிர்ந்து விஷ்ணுவைப் பார்த்தாள். தன்னை நோக்கி மீண்டும் சுடு சொற்களை வீசி விடுவாளோ என்ற பயத்தில் விஷ்ணுவை மிரட்சியுடன் பார்த்தாள்.


வசுமதிக்கு அவளது செய்கைகளில் மனம் வலித்தாலும் அதை ஒதுக்கி விட்டு, "உன்னோட இந்த நிலமைக்கு நான் தான் முக்கிய காரணம். இதுல எந்த வித மறுப்புமே இல்லை. என்னை மன்னிச்சிரு வைஷ்ணவி. இதுக்கு அப்புறமா உன்னோட எந்த விஷயத்திலுமே நான் தலையிட மாட்டேன். ஐம் ரியலி சொரி" என்றவள், "உடம்பை பார்த்துக்கோ" என்று மொழிந்து வெளியேறிவிட்டாள்.


விஷ்ணுவிற்கு வசுமதியின் மீது இருந்த கோபம் அவள் யாரின் வற்புறுத்தலும் இன்றி அவளே உணர்ந்து மன்னிப்புக் கேட்டதில் கோபத்தினளவு குறைந்து இருந்தது. வைஷ்ணவி குழம்பி விஷ்ணுவைப் பார்க்க, "உன் புருஷன் என் வீட்டுக்கு வந்து வசுமதியை கிழிகிழின்னு கிழிச்சிட்டு வந்துட்டான். அதோட எஃபெக்ட் தான் இது" என்று சிறு சிரிப்புடன் மொழிந்தான்.


வைஷூ, "தயிர்சாதம் என் அக்காவை மன்னிச்சிட்டன்னு உன் சிரிப்பே சொல்லுது. என்னையும் மன்னிக்க கூடாதா?" என்று பாவமாய் வினவ, "அதைப் பத்தி நான் இன்னும் யோசிக்கனும். நீ பண்ணது தப்பு இல்லை. முட்டாள் தனத்தோட உச்ச கட்டம். நீ என்ன ரீசன் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது. எப்போ மன்னிக்க தோணுதோ அப்போ மன்னிக்கிறேன். இப்போ உடம்பை பார்த்துக்கோ" என்று கூறி அவனும் வெளியேறினான்.


வைஷ்ணவியிற்கு அப்போதே புரிந்தது தான் செய்த செயலின் தீவிரத்தின் அளவு. சரியான நேரத்திற்கு காப்பாற்றியதால் இந் நிலமை. இல்லையென்றால் தன்னுடைய நிலையை எண்ண கைகளும், கால்களும் நடுங்க ஆரம்பித்தன. யாதவ் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றுமே செவிகளில் எதிரொலிக்க விழி நீர் தளும்ப இமை மூடினாள்.


யாதவ், கௌதம் இருவருமே ஷொபிங் மோலிற்குச் சென்றனர் தங்கள் விசாரணைகளை மேற்கொள்ள. இருவருமே இரகசியமாக முன்னிரவு எடுத்த வீடியோ புடேஜையும் எடுத்துக் கொண்டே அங்கே சென்றனர். யாதவ் ஷொபிங்மோலின் கன்ட்ரோல் ரூமில் அமர்ந்து தனது மடிக் கணனியில் நேற்று இரவு கௌதமினால் எடுக்கப்பட்ட புடேஜை பார்த்தான்.


யாதவ் ஒவ்வொரு தளமாக கூர்ந்து கவனித்தவாறே வர அன்று அவளை தான் சந்தித்த நேரத்தையும், இடத்தையும் நினைவு கூர்ந்தவன் அவசரமாக அப் புடேஜைப் பார்க்க ஆரம்பித்தான். அவன் எதிர்பார்த்த காட்சியும் தென்பட உடனே சவிதா எங்கிருந்து வருகிறாள் என்பதை பார்க்கப் புடேஜில் தேட, அவள் ஒரு ஐஸ் கிரீம் பாலரில் இருந்து வெளியேறுவது தெரிந்தது.


அதைப் பார்க்க அதில் சவிதா ஒரு ஆணுடன் பேசுவதும் இருவரும் பின் பாடல் கேட்பதாகவும் இருந்தது. இருவருமே சாதாரணமாக இருப்பது போன்றே தென்பட யாதவ் ஜூம் செய்து இருவரையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அவளது உயிர்ப்புத் தன்மை அகன்று இயந்திரத் தன்மை உருவானது போன்று இருந்தது.


அவள் அங்கிருந்து பொருட்களை எடுத்து வெளியேற அவனோட சாவகாசமாக தன்னுடைய ஆடரைச் சாப்பிட்டு வெளியேறினான். அவனிடம் சிறிதேனும் தடுமாற்றமோ, பதற்றமோ தென்படவில்லை. இவற்றைப் பார்த்த யாதவின் நெற்றியில் சிந்தனைக் கோடுகளின் எண்ணிக்கை அதிகரித்தன.


கௌதமும் கன்ட்ரோல் ரூமில் இருந்த திரையைக் கூர்ந்து கவனித்து, "சேர்" என்று சத்தமாக அழைக்க யாதவும் திரையை நோக்கிச் சென்றான். கௌதம், "அந்த பொண்ணு ஷொபிங் மோலை விட்டு வெளியேறி கொஞ்ச தூரம் நடக்குறா. அங்கே தெரியிர பெரிய லொறி முன்னாடி ஒரு வெஹிகல்ல ஏறுரா.

அது வரைக்கும் தான் புடேஜ் இருக்கு. அந்த பெரிய லொறியால முன்னாடி என்ன வாகனம் இருந்ததுன்னு பார்க்க முடியல்லை. என்ட் இவங்க கமெராலயும் மாட்டாமல் அந்த வாகனத்தை நிறுத்தி இருக்காங்க. லொறி நிறுத்தி இருக்கிற இடத்துக்கு முன்னாடி ஒரு ஷொப் இருக்கு. அங்கே போனால் ஏதாவது குளூ கிடைக்கலாம்" என்றான் விரிவாக.


யாதவ், "கடத்தினவன் எந்த ஒரு சின்ன குளூவும் நமக்கு கிடைக்கக் கூடாதுன்னு நினைச்சு இருக்கான். சவிதாவை கடத்தினவன் பக்காவா பிளேன் பண்ணி கடத்தி இருக்கான். அவளோ ஈசீயா நமக்கு குளூவை கொடுத்துட்டுப் போவான்னு எனக்கு தோண இல்லை. இருந்தாலும் முயற்சி பண்ணி பார்க்குறது பெடர்" என்றவனின் குரலில் யோசணை படிந்து இருந்தது.


கௌதம், "ஒகே சேர். நான் போய் ஒரு முறை பார்த்துட்டு வரேன்" என்று மொழிந்து சில பொலிஸாருடன் வெளியேற யாதவ் அங்கே அமர்ந்து தொடர்ந்து புடேஜைப் பார்க்க ஆரம்பித்தான்.




## நாளை அடுத்த பதிவு ##




கருத்துக்களைப் பகிர,






 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24887


கண்சிமிட்டும் தென்றலே



அத்தியாயம் 20




யாதவ் அங்கே அமர்ந்து தொடர்ந்து புடேஜைப் பார்க்க ஆரம்பித்தான்.


அதில் ஒரு மாதகாலத்தில் தினமுமே சவிதா அங்கே வருவதைப் பார்த்தவன் அப் புதியவனும் அங்கே வருவதையும், ஒவ்வொரு தினத்தில் ஒவ்வொரு இடத்தில் அமர்வதையும் பார்த்தான். அவன் பார்க்கும் போதே அங்கே வேலை செய்வர்களை கான்ஸ்டேபள் அழைத்து வந்திருந்தார்.


யாதவ் அக் கான்ஸ்டேபளைப் பார்த்து, "எல்லாருமே வந்துட்டாங்களா?" என்று வினவ, "ஆமா சேர் வந்துட்டாங்க" என்றார் அவர். "ஒரு பொண்ணோட கிட்னாப் கேஸ் போயிட்டு இருக்கு. அதுல நீங்க வேலைப் பார்க்குற ஐஸ்கிரீம் பாலரும் சம்பந்தப்பட்டு இருக்கு. நான் கேட்குற கேள்விகளுக்கு உண்மையான பதிலை சொல்லனும்" என்றான் கறாராக.


அவர்களும் யாதவின் தோரணையில் மிரண்டு சரி என்று சிரம் அசைக்க யாதவ் தன்னுடைய மடிக் கணனியை அவர்கள் புறமாகத் திருப்பி, "இந்த பொண்ணை உங்களுக்கு தெரியுமா?" என்று சவிதாவின் புகைப்படத்தைக் காட்டினான்.


அவர்களில் ஒருவர், "ஆமா சேர் தெரியும். தினமும் அங்கே வருவாங்க. எப்போவுமே சொகலேட் ஐஸ்கிரீம் ஆடர் கொடுப்பாங்க" என்றான்.


யாதவ், "வேறென்ன இந்த பொண்ணைப் பத்தி கவனிச்சி இருக்கிங்க?" என்று வினவ, "இந்த பொண்ணை தான் காணோமா சேர்?" என்று ஒருவன் கேட்க யாதவ் பார்த்த பார்வையில் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டான். வேறு ஒருவன், "அந்த பொண்ணு அதிகமா ஃபிரென்ஸ் கூட தான் வரும். சில நாளைகளில் தனியா வரும் சேர்" என்றான்.


பின்பு, மடிக் கணினியில் சேவ் செய்து வைத்திருந்த அப் புதியவனின் (சரவணன்) புகைப் படத்தைக் காட்ட ஒருவன், "இந்த பையன் கொஞ்ச நாளா எங்க பாலருக்கு வந்தான் சேர் வித்தியாசமான பையன் சேர். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு இடத்துல உட்காருவான்" என்றான்.


யாதவ் புருவம் சுருக்கி, "சோ நீங்க சொல்றதை வச்சு பார்த்தால் இப்போ அவன் வாரது இல்லை சரியா?" என்று வினவ, "ஆமா சேர். அந்த பொண்ணும் வாரது இல்லை. அந்த பையன் பொண்ணு வராத ஒரு நாட்களில் ஒரு நாலு நாள் வந்திருப்பான். அப்புறமா அவன் ஆளையே காணோம்" என்றான்.


யாதவ், 'அவ காணாமல் போன அப்புறமாவும் இந்த பையன் அங்கே போயிருக்கான். அப்போ அவனுக்கு சவிதாவை கடத்திட்டாங்கன்னு தெரியாதா?' என தன் நெற்றியை ஒற்றை விரலால் நீவியவாறே தனக்குள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டான்.


யாதவ் திடீரென்று, "அந்த பொண்ணு, பையன் இரண்டு பேரும் அடிக்கடி பேசிப்பாங்களா? சந்திச்சிப்பாங்களா?" என்று கேள்வியை முன் வைக்க, "அவங்க இரண்டு பேரும் பேசி அதிகமா நாங்க பார்த்தது இல்லை சேர்" என்றான் ஒருவன்.


மற்றொருவன், "நான் ஓரே ஒரு முறைப் பார்த்தேன் சேர். அவங்க டேபளுக்கு அன்னிக்கு நான் தான் சேர்வர். அந்த பொண்ணு ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டே அந்த பையன் கூட பேசிட்டு இருந்தது. அந்த பொண்ணு போன அப்புறமா அந்த பையனும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு போயிட்டான். அதுக்கு அப்புறமா நான் அந்த பொண்ணை பார்க்கவே இல்லை" என்றான்.


யாதவிற்கு அவன் கூறுவது சவிதா காணாமல் சென்ற தினத்தையே என்பது தெளிவாகத் தெரிந்தது. 'வெளியோட்டத்தில் பார்த்தால் அப் புதியவனுக்கும், சவிதாவோட கடத்தலுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் உன் உள்மனசு ஏதோ ஒன்னு இருக்குன்னு சொல்லுதே. அந்த பையனை விசாரிச்சால் தான் என் மனசும் திருப்தியாகும்' என்று தனக்குள் முடிவெடுத்தான்.


மேலும் சில கேள்விகளைக் கேட்டு, பதில்களைப் பெற்று அவர்களை அனுப்பி வைத்து அமர கௌதமும் அவனோடு சென்ற பொலிஸாரும் திரும்பி வந்தனர். கௌதம், "சேர் அங்கே சி.சி.டிவி எதுவுமே இல்லை. நாங்களும் செக் பண்ணி பார்த்துட்டோம். அவங்களுக்கும் பெரிசா எதுவும் ஞாபகம் இல்லை" என்றான்.


யாதவ் சிறு புன்னகையைச் சிந்தி, "நான் எதிர்பார்த்தது தான்" என்றவன் தன் மடிக் கணனியை அவனது புறம் திருப்பி, "இந்த பையனோட ஃபுள் டீடெய்ல்சை கெலக்ட் பண்ணிடு. இவனை பிடிச்சால் ஏதாவது கிடைக்கலாம். சிடி பூரா தேட சொல்லுங்க" என்று கட்டளைகளைப் பிறப்பித்தான்.


அவர்களும் 'சரி' என்க, "நான் ஹொஸ்பிடல் போறேன் கௌதம். நீ போய் சாப்பிட்டு குளிச்சிட்டு வா. நான் உன் கிட்ட பேசனும்" என்று உரைத்து அவ்விடம் விட்டு நகர கௌதமும் மற்ற பொலிஸாரும் வெளியேறினர்.


யாதவ் ஹொஸ்பிடலுக்கு வந்தவன் வைஷூவைப் பார்க்கச் செல்லாமல் நேரடியாய் விஷ்ணுவின் அறைக்கு அனுமதியோடு உள்ளே நுழைந்தான். விஷ்ணு, "வாடா சாப்பிட்டியா?" என்று பாசத்துடன் வினவினான்.


யாதவ், "இன்னும் இல்லை. இன்னிக்கு வேலை அதிகம் சாப்பிட முடியல்லை. உன் பொன்டாட்டி என் மனைவியை பார்க்க வந்தாளாமே?" என்று நாற்காலியில் கால் மேல் கால் இட்டு தோரணையாய் அமரந்து ஒற்றைப் புருவம் உயர்த்தி வினவினான்.


விஷ்ணு அதிர்வுடன், "உனக்கு எப்படி தெரியும்?" என்று வினவ, "நான் பக்கத்துல இல்லைன்னாலும் அவளை பத்துரமா பார்த்துக்க வேண்டியது என் கடமை. இங்கே அவளை பாதுகாக்க ஆள் செட் பண்ணிட்டு தான் போய் இருக்கேன். என் கிட்ட எதையும் மறைக்க முடியாது" என்று உரைக்க விஷ்ணு சிரித்தான்.


விஷ்ணு, "அதானே உனக்கு தெரியாமல் ஏதாவது பண்ண முடியுமா என்ன?" என்றவன், "வைஷூ கூட பேசிட்டு போனா" என்று முடித்தான். யாதவ் மௌனமாய் வேறு புறம் திரும்ப விஷ்ணு, "நீ சாப்பிட்டு வாடா அப்புறமா பேசலாம். நான் போய் வைஷூவை பார்க்குறேன்" என்று அனுப்பி வைத்து வைஷூ இருந்த அறைக்குள் சென்றான்.


யாதவும் சாப்பிடச் செல்ல விஷ்ணு ஒரு முறை வைஷூவைப் பரிசோதித்துப் பார்த்தான். அவள் உடல் நலத்தில் நன் முன்னேற்றம் இருக்க, யாதவ் வந்தவுடன், "நாளைக்கு நீ கூட்டிட்டு போகலாம்" என்று விஷ்ணு உரைக்க யாதவ், "ராமை வர சொல்லு" என்றான்.


விஷ்ணு புருவ முடிச்சுடன் ராமை வரவழைக்க ராமும் பயத்துடனேயே அங்கே வந்தான். யாதவ், "இவளை செக் பண்ண நான் ஹொஸ்பிடலுக்கு வருவேன். நீ தான் இவளை செக் பண்ணனும். அதாவது வைஷூவுக்கு நான் அபோய்ன் பண்ற டாக்டர் நீ தான்" என்று அவனது வார்த்தைகள் உறுதியாய் வெளிவந்தன.


ராம் பாவமாய் விஷ்ணுவைப் பார்க்க அவனோ தோளை உலுக்கி கைக் கழுவி விட்டான். யாதவ், "புரிஞ்சிதா?" என்று வினவ, "ஆமா" என்று அவசரமாக தலை ஆட்ட, "குட்" என்றவன், "அவளைப் பார்த்துக்கோ நான் வரும் வரைக்கும்" என விஷ்ணுவையுமவ இழுத்துக் கொண்டு வெளியேறினான்.


விஷ்ணு, "நானே உன் கூட தனியா பேசனும்னு நினைச்சேன். வைஷூ டிப்ரஷன்ல ஆரம்ப கட்டத்துல தான் இப்போ இருக்கா. நம்ம கையை மீறி போக இல்லை. அவளை சந்தோஷமா பார்த்துக்கனும். என்ட் அவளுக்கு கவுன்சிலிங் கொடுக்குறதால இம்புரூவ்மன்ட் இன்னும் கூடும்" என்றான்.


யாதவ், "நானும் இதைப் பத்தி பேச நினைச்சேன். அவ கவுன்சிலிங் வாரதுன்னா பயந்துருவா. சோ, காவ்யாவை வச்சே கொடுத்தால் அவ சாதாரணமா பேசுறது போல இருக்கும். நீ இதைப் பத்தி வைஷூ கிட்ட பேசாதன்னு சொல்ல கூப்பிட்டேன். இன்னிக்கு கௌதம் கிட்டயும், காவ்யா கிட்ட பேசி ஒரு முடிவு எடுக்குறேன்" என்றான்.


விஷ்ணு, "எனக்கும் இது நல்ல ஐடியாவா இருக்கு. பார்த்துக்கோ" என்றவன், "எனக்கு வேலை இருக்குடா நான் அப்புறமா வரேன்" என்று கூறி அங்கிருந்து செல்ல யாதவ் வைஷூ இருந்த அறைக்குச் சென்றான். அவள் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து விரல்களை ஆராய்ந்தவாறு இருந்தாள்.


கதவைத் திறக்கும் சத்தத்தில் யாதவைப் பார்த்தவள் சிறு புன்னகையுடன், "சாப்பிட்டிங்களா அத்தான்?" என்று வினவ, "ஆமா கொஞ்ச நேரம் முன்னாடி தான். இப்போ உடம்பு எப்படி இருக்கு?" என்று இவன் கேள்வி எழுப்பினான். வைஷூ, "நல்லா இருக்கு. ஒரே இடத்துல இருக்கிறது கஷ்டமா இருக்கு. மத்தபடி வேற பிரச்சனை இல்லை" என்று உரைத்தாள்.


யாதவ், "வெளியே போலாமா?" என்று கேட்க, "போலாம்" என்றாள் உற்சாகமாய். யாதவ் அவளை தோளோடு அணைத்து மெதுவாக நடக்க வைத்து அங்கிருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். எப்போதும் போல் அவனது கையணைவில் பாதுகாப்பை உணர்ந்ததோடு வெளிக் காற்றை ஆழந்து சுவாசிக்க ஆரம்பித்தாள்.


யாதவ் வைஷூவையே பார்க்க அவளுள் மெல்லிய நடுக்கம் இழையோட அவனது அணைப்பின் இறுக்கத்தை அதிகரித்தவன், "என்னை விட்டுட்டு வெளி அழகை இரசிக்க ஆரம்பி" என்றான் கிசுகிசுப்புடன் அவள் செவியில் மீசை உரச.


அவள் பதிலளிக்காது இமை மூடி சூழலை உள்வாங்க யாதவ் கௌதமின் வருகைக்காக காத்து இருந்தான். கௌதமும் அவனை ஏமாற்றாது வருகைத் தர முதலில் அறைக்குச் சென்றவன் அவர்கள் அங்கே இல்லாது தோட்டத்திற்குச் சென்றதாக தகவல் கிடைக்க தோட்டத்திற்கு வந்தான்.


கௌதம், "இங்கே இருக்கன்னு மெசேஜ் போட மாட்டியா?" என்று கோபமாக கேட்டுக் கொண்டே வந்தவன் வைஷூ வெளிச் சூழலை இரசிப்பதைப் பார்த்து அமைதியானான். அவளின் கவனம் இங்கே இல்லை என்பதை உணர்ந்த யாதவ் அவளின் கவுன்சிலிங் சம்பந்தமாக கௌதமிடம் பேசினான்.


அவனும் காவ்யாவிடம் பேசிவிட்டு கூறுவதாக உரைத்தவன், "நீ போயிட்டு குளிச்சிட்டு வா. நான் வைஷூ கூட இருக்கேன்" என்று அனுப்பி வைக்க யாதவும் வைஷூ, கௌதம் இருவரிடமும் இருந்து விடைப் பெற்றுச் சென்றான்.


வைஷூ, "கேஸ் ரொம்ப இழுத்தடிக்குதா அண்ணா? இரண்டு பேருமே ரொம்ப சோர்வா தெரியிரிங்க?" என்று அக்கறையுடன் வினவ, "அப்படி சொல்ல முடியாது. ஆனால் ஏதோ பெரிய விஷயம் இதுக்கு பின்னாடி இருக்குன்னு மனசு சொல்லுது. அதைக் கண்டு பிடிக்கவும் வரைக்கும் இப்படி தான் ஓடிட்டே இருக்கனும்" என்றான்.


வைஷூ, "உங்க உடம்பையும் பார்த்துக்கனும்ல? அவரு எப்படி அண்ணா சாப்பிடுறாரு? நானும் சமைக்க இல்லை. அவரு சமைச்சு சாப்பிடுற அளவுக்கு நேரமும் இல்லையே" என்று கவலையாய் கேட்க, "இந்த அக்கறை முன்னாடி எங்க போச்சு?" என்று காட்டமாகக் கேட்க அமைதியாகி விட்டாள்.


கௌதம், "நான் உன்னை காயப்படுத்தனும்னு சொல்ல இல்லை. ஆனால் நீ பண்ண காரியத்தால மனசு ஆற மாட்டேங்குது. எனக்கே வலிக்கும் போது யாதவைப் பத்தி யோசிச்சியா?" என்று கோபத்துடன் வினவ, "சொரி அண்ணா பெரிய தப்பு பண்ணிட்டேன்னு புரியிது. இதைப் போல இனிமேல் பண்ண மாட்டேன். இந்த முறை என்னை நம்பலாமே" என்று கலங்கிய குரலில் மொழிந்தாள்.


அவளது உணர்வையும் புரிந்துக் கொண்டவன், "சரி மா நான் நம்புறேன். இதுக்கு அப்புறமா எங்க வைஷூ இதைப் போல தப்பா எதுவும் பண்ண மாட்டான்னு" என்று ஆதூரத்துடன் தலையை வருட விழி தளும்பி வழியும் நீரினைத் துடைத்துக் கொண்டாள் வைஷூ.


பழையதை விடுத்து இருவருமே சிரித்துப் பேச ஆரம்பித்தனர். கௌதமும் வைஷூவும் உலககக் கதைகளைக் கூறி வளவளக்க நேரம் சென்றதை அவர்கள் அறியவே இல்லை. யாதவும் வீட்டிற்குச் சென்று குளித்து திரும்பியவன் அவர்கள் இன்னும் அதே இடத்தில் அமர்ந்து சிரித்துப் பேசுவதைப் பார்த்து நிம்மதியுடன் அவர்களை நெருங்கினான்.


அவனும் ஓரிடத்தில் அவர்களோடு அமர்ந்து, "இன்னும் வன் வீக்ல நம்ம கல்யாணத்துக்காக ஒரு பார்டி அரேன்ஜ் பண்ணலாம்னு இருக்கேன். நாளைக்கு வீட்டுக்கு போகும் போது தேவையானதை பர்சஸ் பண்ணிக்கலாம்" என்று கூற வைஷூ புரியாமல் யாதவைப் பார்த்தாள்.


வைஷூ, "இப்போ எதுக்காக பார்ட்டி?" என்று வினவ, "நீ என்னோட வைஃப்னு தெரிஞ்சாலே பாதி பிரச்சனை குறைஞ்சிரும். என்ட் உன் ஃபிரன்டு ரஞ்சன் பேசினான். நீ வன் வீக் கோலேஜூக்கு வரமாட்டேன்னு சொல்லவும், உனக்காக நோட்சை கொடுக்குறேன்னு சொன்னான்.


என்ட் நல்லா ரெஸ்ட் எடுக்க சொன்னான். உங்க புது புரொஃப் காஞ்சனா உனக்கு டவுட் வந்தால் சொல்லி கொடுக்குறேன்னு சொன்னாங்களாம். சோ லீவ் போட்டு ரெஸ்ட் எடு. மத்ததை அப்புறமா பார்த்துக்கலாம். எதையும் யோசிக்காத" என்று மொழிய அவளும் சரியென்று தலை அசைத்து கேள்வியுடனும், தயக்கத்துடனும் யாதவைப் பார்த்தாள்.


யாதவ், "எனக்கு உன்னைப் பத்தி தெரியும் நவி. யாரு என்ன சொன்னாலும் அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை. நான் உன்னை நம்புறேன்" என்று உறுதியான குரலில் மொழிந்து கௌதமைப் பார்க்க அவனோ மொபைலில் சீரியசாக காவ்யாவுடன் செடிங் செய்தான்.


வைஷூ புன்னகையுடன் எழுந்துக் கொள்ள யாதவ் அவளுக்கு உதவி செய்தான். வைஷூ, "அண்ணா நாங்க உள்ள போறோம். நீங்க நிம்மதியா அண்ணி கூட பேசிட்டு வாங்க" என்று சிரிப்புடன் கூறி யாதவோடு உள்ளே செல்ல கௌதம் காவ்யாவுடன் வைஷூவைப் பற்றி பேச ஆரம்பித்தான்.


காவ்யாவும் நிலமையை உணர்ந்து தன்னுடைய சீஃப் டாக்டருடன் பேசி விட்டு கூறுவதாக உரைத்தாள். அதன் பின் காதல் புறாக்களாக வானில் பறந்தனர் மொபைலில் வளவளத்தவாறே.


அடுத்த நாளும் அழகாய்ப் புலர யாதவ் வீட்டிற்குச் சென்று குளித்து வந்தவன் விஷ்ணுவிடம் கூறி வைஷூவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்ல வைஷூவைப் பார்த்துக் கொள்வதற்காகவும், வீட்டு வேலைகளைச் செய்வதற்காகவும் ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து இருந்தான்.


வீட்டிற்குச் செல்லும் வழியில் வைஷூவை அழைத்து மிகப் பெரிய ஆடையகத்திற்குச் சென்று அவளுக்கும், தனக்கும் ஆடையை வாங்கியவன் நகைகளை தானே தெரிவு செய்வதாகக் கூறி வைஷூவிற்கு களைப்பு அதிகமாக இருக்கும் என்று அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.


யாதவ் இல்லாத நேரங்களில் அவரே வைஷூவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள யாதவ் வீட்டிற்கு வந்தவுடன் வைஷூவை கையில் வைத்து தாங்கினான்.


விஷ்ணுவிற்கு வசுமதியின் மீது இருந்த கோபத்தினளவு அவள் வைஷூவிடம் மன்னிப்பு கேட்டதால் குறைந்து இருப்பதை வசுமதி அறியவில்லை. மனதுக்குள் குற்ற உணர்ச்சி ஒரு புறம், விஷ்ணு தன்னிடம் இருந்து ஒதுங்குவதைப் பார்த்து மேலும் உடைந்து போனாள்.


அன்று மாலை நேரமே விஷ்ணு வேலைகளை முடித்து வீட்டிற்கு வர தோட்டத்தில் தனியாக சோகவடிவாய் அமர்ந்து வசுமதி இலக்கற்று வெறிப்பதைப் பார்த்வனுக்கு மனது பிசைந்தது. அவள் அதிகளவு பேசவிடினும் அவளது நடமாட்டம் உயிர்ப்பானதாக இருக்கும்.


ஆனால் இன்று அவள் ஒடிந்து இருப்பதைப் பார்க்க மனம் கேட்கவில்லை அவனுக்கு. அவளை நெருங்கி வந்தவன், "எனக்கு ஒரு காபி வேணூம் வசுமதி. நான் குளிச்சிட்டு வரேன். ரூமுக்கே கொண்டு வாங்க" என்று அனுப்பி வைக்க அவளும் தன்னுடன் விஷ்ணு பேசிவிட்டான் என்ற சந்தோஷத்தில் குதூகலத்துடன் சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.


அவனுக்குப் பிடித்தது போன்று காபியை எடுத்துக் கொண்டு தங்களது அறைக்குச் செல்ல விஷ்ணு குளித்து வெளியே வந்தான். அவனிடம் காபியை நீட்ட, அதைப் பெற்றுக் கொண்டு, "இன்னும் வைஷூவைப் பத்தி நினைச்சிட்டு இருக்கிங்களா?" என்று வினவினான்.


வசுமதி, "நினைக்காமல் எப்படி இருக்க முடியும்? முட்டாள் தனமான என் செய்கையால அவ இவளோ காயப்படுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. மனசு குற்ற உணர்ச்சில தவிச்சிட்டே இருக்கு. என் புத்தி எதுக்கு இப்படி போச்சுன்னு ஒவ்வொரு நிமிஷமும் நொந்துட்டே இருக்கேன்" என்றவளின் குரலும், கண்களும் கலங்கின.


விஷ்ணு, "தப்பு பண்ணாதவங்க உலகத்துல யாருமே இல்லை. நீங்க உங்க தப்பை உணர்ந்ததே பெரிய விஷயம். விடுங்க வைஷூவை யாதவ் பார்த்துப்பான்" என்று ஆறுதல் அளிக்க, "என்னால முடியல்லைங்க. அவளை ஹொஸ்பிடல்ல அந்த நிலமையில பார்த்ததும் உயிரோட செத்துட்டேன். மனசு வலிக்குது" என்று அழுதாள்.


விஷ்ணு அவளை நெருங்கி தன்னோடு அணைத்துக் கொள்ள அவன் மார்பினில் முகம் புதைத்து தன் மனதில் இருக்கும் கவலைகள் அனைத்தையுமே கொட்டித் தீர்க்கும் வகையில் கதறி அழ ஆதூரமாய் அவளுடைய முதுகை வருட அவனுடைய மனமோ தன்னுடைய டோலியை எண்ணியது.


"டோலி" என்று மெல்லிய குரலில் தனக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்துக் கொண்டான்.


சாத்விக் - சனா, கார்த்திக் - அஞ்சலி என இருஜோடிகளுமே இந்தியாவில் தங்கள் தேனிலவை முடித்து காலடி எடுத்து வைக்க அவர்களுக்காக காத்திருந்த அதிர்ச்சிகளில் வைஷூவின் செய்தி ஒன்றாக இருக்க சாத்விக்கிற்கோ டிடெக்டிவ் மூலமாக கிடைத்த செய்து பேரதிர்ச்சியாக இருந்தது.




கருத்துக்களைப் பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தனிப்பட்ட வேலை காரணமாக 15 நாட்களுக்கு பதிவுகள் எதுவும் இல்லை...


மீண்டும் விரைவில் சந்திக்கிறேன். அது வரையில் உங்களிடம் இருந்து விடைப் பெற்றுக் கொள்கிறேன்.


உங்கள் தோழி,
ஹாணி கார்திகன்.
 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரென்ஸ்,

எங்க ஆளையே காணோம்னு யோசிச்சு இருப்பிங்க. எனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது அதான் கொஞ்சநாளா ஃபேஸ்புக் பக்கமே வர முடியல்லை.

இப்போ ரமழான் ஆரம்பிச்சிருச்சு என்ட் என் ஹயர் ஸ்டடீசும் ஆரம்பிச்சதால டைப் பண்ண நேரமே கிடைக்குது இல்லை. ரமழான் முடிஞ்சு உங்களை கண்சிமிட்டும் தென்றலே கதையோட சந்திக்கிறேன்.

பாய்....
 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26277


கண்சிமிட்டும் தென்றலே


அத்தியாயம் 21




யாதவ் தன்னுடைய வேலைகளை அன்று முடித்து விட்டு வீட்டிற்கு வரும் வழியில் விஷ்ணு அவனை அழைத்தான். அவனும் அழைப்பை ஏற்க, "மச்சான் வைஷூவை அவங்க அப்பா, அம்மா பார்க்க ஆசைப்படுறாங்க. ஆனால் அவங்களால அதை நேரடியா வெளியே கேட்க முடியல்லை. அவங்க பாவம் மச்சான் பார்த்து பண்ணுடா" என்று உரைக்க பதில் அளிக்காமல் மௌனம் காத்தான்.


"டேய்" என்று விஷ்ணு அழைக்க, "அந்த பார்டிக்கு அவங்களை வர சொல்லு" என்றவன் கதையை மாற்றி வேறு கதைப் பேச விஷ்ணுவும் புரிந்து, இந்த அளவிற்கு அவன் இறங்கி வந்தது பெரிது என்று நினைத்து வளவளக்க ஆரம்பித்தான் யாதவிற்கு ஏற்றாற் போன்று.


யாதவ் வீட்டிற்கு வந்தவுடன் வைஷூவிற்கு உதவியாக இருந்த பெண்மனி வீட்டிலிருந்து யாதவிடம் இருந்து விடைப் பெற்றுச் செல்ல யாதவ் அவளைப் பார்க்கச் சென்றான். வைஷூவோ ரஞ்சித் அனுப்பி இருந்த குறிப்புகளை மும்முரமாக எழுதிக் கொண்டு இருந்தாள். அவளைக் குழப்பாது அவர்களது அறைக்குச் சென்று குளித்து வந்தான்.


உணவை மேசையில் எடுத்து வைத்து அவள் படிக்கும் அறைக்குச் சென்று, "சாப்பிடுற ஐடியா மேடமுக்கு இல்லையா? எனக்கு ரொம்ப பசிக்குது" என்று வினவ அவனது குரலில் திடுக்கிட்டுத் திரும்பி, "நீங்க எப்போ வந்திங்க அத்தான்?" என்றாள் ஆச்சரியமாக.


யாதவ்,"நான் வந்து ரொம்ப நேரமாச்சு. நீ சின்சியரா படிச்சிட்டு இருந்த. உன்னை குழப்ப வேணான்னு அமைதியா இருந்துட்டேன். சாப்பிட்டு மீதியை படி நவி. எனக்கும் சில வேலைகள் இருக்கு" என்று மொழிய மறுப்பேச்சு இல்லாது எழுந்தவள் சமையலறைக்குச் சென்று கைக்கழுவி உணவு மேசையில் அமர யாதவும் அமர்ந்தான்.


இருவருமே உணவை சாப்பிட யாதவ், "காவ்யா வன் வீக் இங்கே தங்க வரா நவி. அவளை பார்த்துக்கோ. நானும், கௌதமும் கேஸ் விஷயமா அலைஞ்சிட்டு இருப்போம். அதனால நீ தான் அவ கூடவே இருந்து பார்த்துக்கனும்" என்று கூற, "நான் பார்த்துக்குறேன். ஆனால் நான் கோலேஜ் போயிட்டா அண்ணி தனியா இருப்பாங்களே" என்றாள் அக்கறையுடன்.


யாதவ் அவளை முறைத்து, "அவ போகும் வரைக்கும் கோலேஜ் போக தேவையில்லை. உன் உடம்பு இப்போ தான் குணமாகிட்டு வருது. வன் வீக் முடியிறதோட புது வருஷமும் ஆரம்பிக்க காலமாகுது. சோ நிவ் இயர்ல இருந்தே போ" என்று உறுதியுடன் கூற அதை மறுக்க முடியாமல் வைஷூவும் தலையை சரி என ஆட்டினாள்.


இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன் வைஷூ அவள் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து முடிக்க யாதவ் வாஷ் பேசனில் இட்டவற்றைக் கழுவ ஆரம்பித்தான். அவளை அதிக வேலைகளை செய்விக்காது படிக்க அனுப்பி வைத்து மிகுதி வேலைகளையும் முடித்தவன் சோஃபாவில் அமர்ந்துக் கொண்டு இன்று காலையில் நடந்தவற்றை யோசித்தான்.


அன்று அப்புதியவனை (சரவணன்) அடுத்த நாளே தேடுவதற்கு கௌதமின் குழுவினர் செல்ல அவனுடைய பெயர் சரவணன் என்றும் வேலைத் தேடி சென்னை வருகை தந்துள்ள வாலிபன் எனவும் தெரியவர அவனுடைய வீட்டு விலாசத்திற்கு தேடிச் சென்றால் அவன் வீட்டிற்கு வருகை தந்தே வெகு நாட்களாகி விட்டது எனத் தெரிய வந்தது.


மேலும் வீட்டின் உரிமையாளரிடம் விசாரிக்க சவிதா காணமால் சென்று நான்காவது நாள் அவனும் காணாமல் சென்று உள்ளான் எனவும், சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அவன் இதுவரை நடந்துக் கொள்ளவில்லை; நல்லவன் என்றும் வீட்டு உரிமையாளர் மொழிய ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.


எங்கு சென்றாலுமே வழிகள் மூடி இருப்பதைப் போன்று உணர்ந்தனர் யாதவ், கௌதம் இருவருமே. கௌதம், "அவனையும் யாராவது கிட்னாப் பண்ணி இருப்பாங்களோ" என்று யோசணையாக கேட்க, "தெரியல்லைடா. அவன் நம்ம கையில கிடைச்சான்னா நமளோட கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கிடைக்குறானான்னு முழு மூச்சா தேடுங்க" என்று ஏ.ஐ.ஜியாக உத்தரவிட அவனும் தலையசைத்துச் சென்றான்.


அவற்றைப் பற்றியே யோசிக்க, 'இவன் தலைமறைவாகிட்டானா? இல்லை கடத்திட்டாங்களா? இவனைப் பத்தி தப்பா யாருமே ஒரு வார்த்தை சொல்ல இல்லை. அப்படி இருக்கும் போது ஏன் என் மனசு அதை ஏத்துக்கமாட்டேங்குது?' என்று பல கேள்விகள் தலையில் ஓடின.


நேரத்தைப் பார்க்க அது இரவு பதினொன்றைக் கடந்து இருந்தது. வைஷூவின் அறையை எட்டிப் பார்க்க அவள் இன்னும் படிப்பது தெளிவாகத் தெரிய தேநீர் தயாரித்து எடுத்து அவள் அருகில் கொண்டு சென்று வைத்தான். அவள் புரியாமல் யாதைவப் பார்க்க, "இதைக் குடிச்சிட்டு படி. ரொம்ப உன்னை கஷ்டபடுத்திக்காத. தூக்கம் வந்தால் தூங்கிரு" என்று அக்கறையாக உரைத்தான்.


"எனக்கு தூக்கம் வர இல்லை அத்தான். நான் கண்டிப்பா என்னை பார்த்துக்குவேன். நீங்க லேட் பண்ணாமல் போய் தூங்குங்க" என்று அனுப்பி வைக்க, அவனும் நாளை வேலை இருப்பதால் அவளை மீண்டு முறை அறிவுறுத்தி விட்டு உறங்கச் சென்றான்.


காலையில் சாத்விக் சனா, கார்த்திக் அபி ஜோடிகள் இரண்டுமே இந்தியாவை அடைந்தனர் தங்கள் தேனிலவை திகட்டத் திகட்ட அனுபவித்து முடித்து. நேரடியாகவே தங்கள் வீடுகளுக்குச் செல்ல சாத்விக்கின் வீட்டில் சனா பயணக் களைப்பின் காரணமாக உறங்கி விட்டாள்.


சாத்விக் தன்னுடைய டிடெக்டிவ் ஏஜென்சியிற்கு அழைக்க, அவன், "சேர் எனக்கு இன்னும் கொஞ்ச நாள் டைம் கொடுங்க சேர். சீக்கிரமா ரிபோர்டோட வருவேன். கொஞ்சம் பிசியா இருக்கேன். விஷயம் பெரிசு" என்று மட்டும் கூறி அழைப்பைத் துண்டிக்க, அவன் யோசணையுடன் தன் மொபைலின் திரையைப் பார்த்தான்.


சனா எழுந்து சாத்விக்கைத் தேட அவன் பல்கனியில் நின்று இருப்பதைப் பார்த்து அங்கே வந்தாள். அவனை பிண்ணிருந்து அணைத்தவள், "என்னாச்சுங்க ஒரு மாதிரி இருக்கிங்க?" என்று வினவ, "அதுவா? சீக்கிரமா ஹனி மூன்ல இருந்து திரும்பி வந்துட்டோமேன்னு ஃபீலிங்ல இருக்கேன்" என்று கவலையாய் மொழிந்தான்.


அவனது நக்கலில் சிரிப்புடன் அவனுடைய முதுகில் அடித்து, "உங்களுக்கு எந்ந நேரமும் அதே ஞாபகமா?" என்று முதுகில் முகம் புதைக்க, "மேடம் இப்படி இருந்தால் என்ன ஞாபகம் வருமாம்?" என்று சிணுங்கி அவளை அள்ளிக் கொண்டு அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.


அன்றைய தினம் அழகாய் அனைவருக்குமே நிறைவடைந்தது. கதிரவனும் தன் வேலையை நினைவுபடுத்தி பூமித் தாயிடம் வர, அவனோடு கோபம் கொண்டு இருந்த மதியவளோ அவன் பார்வையில் படக் கூடாது என்று எண்ணி வேகமாக தன்னை முகில் கூட்டங்களுக்கு இடையில் மறைத்துக் கொண்டாள்.


கௌதமிடம் காவ்யா இன்று வருகைத் தருவதாகக் கூறியிருந்ததால் கௌதம் காவ்யாவை அழைக்க பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்றான். அவன் பத்து நிமிடங்கள் காத்திருக்க காவ்யா வருகை தந்த பேரூந்தும் வந்தது. அதிலிருந்து காவ்யா சோகம் ததும்பிய முகத்ததுடன் இறங்கினாள்.


கௌதம், "என்னாச்சு காவ்யா?" என்று அவசரமாய் கேட்க, "ஒன்னும் இல்லைபா. கண்ணை மூடினாலே வைஷூ கையை வெட்டிட்டு இருக்கிறது போல இருக்கு. என்னாலயே நிம்மதியா இருக்க முடியல்லை. அண்ணா எவளோ கஷ்டபட்டு இருப்பாங்க?" என்றட வருந்தினாள்.


கௌதம் அவளுடைய துணிப் பையை கையில் எடுத்து அவளோடு நடந்தவாறே, "உண்மை தான். வைஷூவையும் குறை சொல்ல முடியாது. அவ டிப்ரஷன்ல இருக்கும் போது இப்படி ஒரு சம்பவம் நடக்க லூசுத்தனமா இந்த முடிவை எடுத்து இருக்கா. அவ கிட்ட இருக்கிற தப்பு என்னன்னா, என்ன விஷயம்னாலும் மனசுக்குள்ளேயே வச்சிக்கிறது எதையுமே வெளியில சொல்லாமல்" என்றான் கோபம் கலந்த வருத்ததுடன்.


காவ்யா, "நான் பார்த்துக்குறேன். நீங்க யாரும் அவளைப் பத்தி கவலைப்பட வேணாம்" என்று உறுதியுடன் கூறியவள், "நீங்க கேசுல கன்சன்ட்ரேட் பண்ணுங்க முதல்ல" என்றாள். கௌதம், "வா யாதவ் வீட்டுக்கே போலாம்" என்று யாதவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் தனது காரில்.


யாதவின் வீட்டில் வைஷூ இரவு வெகு நேரத்திற்குப் பிறகு உறங்கி இருந்ததால் கண் விழிக்கவில்லை. அதனால் யாதவே அவளை எழுப்பாது வேலைகளை ஆரம்பிக்க வைஷூவை பார்த்துக் கொள்ள வரும் வேலைக்கார அம்மாவும் வருகைத் தர வேலைகள் மள மள என்று நடக்க ஆரம்பித்தன.


கௌதமும் காவ்யாவும் உள்ளே நுழைய யாதவ் குளித்து காக்கியில் தயாராகி வெளியே வந்தான். இருவரையும் பார்த்தவன் புன்னகைத்து வரவேற்க, காவ்யா, "வைஷூ எந்திரிக்க இல்லையா அண்ணா இன்னும்?" என்று கோபமாய் வினவினாள். "இல்லைடா அவ நேத்து நைட் படிச்சிட்டு ரொம்ப நேரம் கழிச்சிட்டு தான் தூங்கினா. அதான் எழும்ப இல்லைடா" என்றான்.


காவ்யா அதன் பிறகு அமைதியாக யாதவ், "கௌதம் உன் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லி இருப்பான்னு நினைக்குறேன். அவ கிட்ட ஹார்ஷா பேசாதடா. அவளுக்கு டீர்மன்ட் பண்றது அவளுக்கே தெரியக் கூடாது. அந்த அளவுக்கு அவளை பார்த்துக்கனும்" என்று உரைக்க, காவ்யா "நான் அவளுக்கு பொறுப்பு அண்ணா. நீங்க நிம்மதியா இருங்க" என்று உறுதி அளித்தாள்.


யாதவ், "சரி போய் ஃபிரஷ்ஷாகிட்டு வா சாப்பிடலாம்" என்று காவ்யாவைப் பார்த்து மொழிந்து கௌதமின் புறம் திரும்பி அவனை சாப்பிட அழைக்க நினைக்க கௌதமோ அங்கிருக்கவில்லை. யாதவ் சுற்றும் முற்றும் அவனைத் தேட, "நான் டயனிங் டேபளுக்கு வந்து உட்கார்ந்து ரொம்ப நேரமாச்சு. இங்கே வா" என்று சத்தமாக குரல் கொடுத்தான்.


"சாப்பாட்டுக்கு பொறந்தவன்" என்று சத்தமாக காவ்யா முணுமுணுத்து பக்கத்து அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். யாதவ், "சாப்பாடுன்னு ஒரு வார்த்தை சொன்னால் உலகத்தையே மறந்திடுவியா?" என்று ஓங்கி அவனுடைய முதுகில் அடிக்க, "சாப்பாடு அதான்டா வாழ்க்கை" என்று தத்துவத்தை மொழிந்து சாப்பிட ஆரம்பித்தான்.


யாதவ், "நீயெல்லாம்..." என்று தலையில் அடித்து யாதவும் சாப்பிட அவர்கள் உணவு அருந்தி முடிக்கும் சமயத்தில் காவ்யா குளித்து வந்தாள். கௌதமை முறைத்தவாறே அமர்ந்து சாப்பிட, "ரொம்ப முறைக்காதமா கண்ணு தெறிச்சி வெளியில வந்துரும்" என்று கூறி நகர, "ஒரு வார்த்தை நீ சாப்பிடுறியான்னு கேட்டியாடா?" என்றாள் கோபமாக.


கௌதம், "நான் கேட்டாலும், கேட்காமல் இருந்தாலும் நீ சாப்பிடாமல் இருக்க போறியா என்ன? அதனால தான் கேட்க,இல்லை" என்று தோளை உலுக்க, "உன்னை போய் லவ் பண்ணேன் பாரு என் புத்தியை சொல்லனும்" என்று அவனை வசைப் பாடிக் கொண்டே சாப்பிட அவனும் அவளோடு வாயாடிக் கொண்டு இருந்தான்.


இவர்களது குட்டி கலாட்டாக்களில் வைஷூவிற்கு விழிப்பு தட்ட கண் விழித்துப் பார்த்தாள். நேரம் ஏழைக் கடந்து இருக்க அவசரமாக குளித்து வெளியே வர கௌதம், காவ்யாவின் குட்டி கலாட்டாக்களைப் பார்த்து புன்னகைத்தாள். நேரடியாக காவ்யாவின் அருகில் சென்று, "அண்ணி" என்று அழைத்து அவளை அணைத்துக் கொள்ள காவ்யாவும் அணைத்துக் கொண்டாள்.


அவள் தலையை வாஞ்சையாய் வருடிய காவ்யா, "இப்போ உடம்பு எப்படி இருக்கு?" என்று வினவ, "நல்லா இருக்கு அண்ணி. என் கூடவே இருக்க போறிங்கன்னு அத்தான் சொன்னாங்க. செம்ம ஹேப்பி" என்று மொழிந்து மீண்டும் அணைக்க, "ஆமாடா உன் கூட கொஞ்ச நாளைக்கு இருக்கலாம்னு வந்திருக்கேன்" என்று கன்னம் கிள்ளினாள்.


இவர்கள் கொஞ்சலை ஆண்கள் இருவருமே பொறாமையுடன் பார்த்து வைக்க யாதவ் தன்னை சுதாகரித்து, "சரி ஒகே நாங்க கிளம்புறோம். நீங்க இரண்டு பேரும் பத்துரமா இருங்க" என்று உரைத்து வெளியேற கௌதமும் அவன் பின்னே சென்றான்.


இருவருமே அங்கிருந்து வெளியேற காவ்யா அவளோடு அமர்ந்து சாப்பிட இருவருமே பேசியவாறே சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்டு முடித்து அவ்விடத்தை சுத்தம் செய்து இருவரும் வெளியே அமர்ந்து கதைகள் பேச ஆரம்பிக்க காவ்யா தன் மருத்துவத்தை பேச்சோடு ஆரம்பித்தாள். மெது மெதுவாக அவள் மனதில் அழுத்தி இருந்த பாரங்களை அவள் வாயாலேயே கூற வைத்தாள்.


திருமணம் முடித்ததில் இருந்து குடும்பத்தினரிடம் அவள் கேட்கும் தீப் பெயர்கள், அவள் மேல் இருந்த நம்பிக்கை இன்மை, அவர்களுடைய ஒதுக்கம், அவர்களுடைய குத்தல் பேச்சுகள், கல்லூரியில் அவள் மீதான பார்வை வித்தியாசம், தமக்கையின் குத்தீட்டிப் பேச்சு, அதன் பின்னான நாட்களில் ஏற்பட்ட மன அழுத்தங்கள், மனக்காயங்கள் என்பவற்றை மறைக்காது உரைத்தாள் வைஷ்ணவி.


இவர்கள் இவ்வாறு இங்கே உரையாட கார்த்திக்கிற்கு வைஷ்ணவியின் தற்கொலை முயற்சி தெரிய வர அபியிடம் மறைக்காது உரைத்தான். அபி, "என்ன மாமா சொல்றிங்க?" என்று அவள் அதிர்ந்து வினவ, "ஆமா. இப்போ அவ வீட்டுல இருக்காளாம். எனக்கு கேட்ட உடனே பக்குன்னு ஆகிருச்சு" என்று அதிர்ச்சி மாறாத குரலிலேயே மொழிந்தான்.


அபி, "வாங்க மாமா போய் சனா கிட்டயும், அண்ணா கிட்டயும் சொல்லி அவளைப் போய் பார்த்துட்டு வரலாம்" என்க அவ. யோசணையும் கார்த்திக்கிற்கு சரியாக இருந்ததால் விசாலாட்சியிடம் வெளியே அவசரமாக செல்வதாகக் உரைத்து சாத்விக்கின் வீட்டை நோக்கிச் சென்றான்.


அவர்களது வீட்டை அடைந்ததும் வேகமாக வீட்டிற்குள் நுழைய சாத்விக், சனா இருவருமே சிரித்துப் பேசியவாறு சாப்பிடுவதைப் பார்த்து சிறிது பொறுமை காத்தார்கள்.


அவர்களைப் பார்த்த சனா, "வாங்க அண்ணா, வா அபி" என்று குதூகலத்துடன் வரவேற்க இருவரும் புன்னகையுடன் அவர்களை நெருங்கி வந்தார்கள். நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து குசலம் விசாரித்து முதலில் தேனிலவைப் பற்றி விசாரித்து முடிய மெதுவாக கார்த்திக் பேச ஆரம்பித்தான்.


கார்த்திக், "நாம இல்லாத நேரம் இங்கே நிறைய நடந்து இருக்கு. எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடந்து இருக்கு சனா" என்று நிறுத்தி அபியைப் பார்க்க அடுத்து அபி பேச ஆரம்பித்தாள். அபி, "வைஷூ சூசைட் அடெம்ப்ட் பண்ணி இருக்கா. அவளை கஷ்டபட்டு காப்பாத்தி இருக்காங்க" என்று மௌனித்தாள்.


சாத்விக், சனா இருவருமே அதிர்ந்து அவளைப் பார்க்க, "ஆமா அண்ணா. இன்னிக்கு தான் நியூஸ் தெரிஞ்சது. அதுவும் அவ கோலேஜ்ல வச்சு தான் அடெம்ப்ட் பண்ணி இருக்கா. எப்படியோ விஷ்ணு அண்ணா அவளை காப்பாத்திட்டாங்க. கோலேஜ்ல நிறைய புரொப்ளம் அவளுக்கு நடந்திருக்கு" என்று அபி முடித்தாள்.


சனா, "என்னால நம்ப முடியல்லைடி. வைஷூ இப்படி பண்ணி இருக்காங்குறதை. எதைப் பத்தியும் யோசிக்காமல் எதுக்காக லூசுத்தனமா இப்படி பண்ணி இருக்கா? மித்து அண்ணா மொத்த பழியையும் அவர் மேலே போட்டுகிட்டு, கெட்ட பேர் எடுத்து அவளைப் பார்த்துகிட்டா எதையுமே யோசிக்காமல் இப்படி பண்ணுவாளா?" என்று கோபத்துடன் கேட்டாள்.


சாத்விக், "என்ன நடந்ததுன்னு தெரியாமல் நாங்களா ஒரு முடிவுக்கு வர முடியாது ஜானு. முதல்ல அவளைப் போய் பார்க்கலாம். அதுக்கு முன்னாடி மித்ரன் கிட்ட அவளை இப்போவே பார்க்கலாமான்னு கேளு ஆர்யன்" என சனாவில் ஆரம்பித்து கார்த்திக்கிடம் முடித்தான்.


கார்த்திக் யாதவிற்கு அழைக்க யாதவும் அழைப்பை ஏற்க , கார்த்திக், "இப்போ தான் மித்ரன் எல்லாமே கேள்விபட்டது. வைஷூவைப் போய் பார்க்கலாமா?" என்று வினவ, "ப்ரவீனை மறக்காமல் வர சொல்லு. நானும் வீட்டுக்கு வரேன். அவன் கூட முக்கியமா பேச இருக்கு. மறக்காத" என்று மொழிந்து அழைப்பை துண்டித்தான்.


சாத்விக் சனா, அபி கார்திக் என இரு ஜோடிகளுமே யாதவின் வீட்டை நோக்கிச் சென்றனர். அதற்குள் யாதவுமே தன்னுடைய வேலைகளை முடித்து வீட்டிற்கு வந்தான். காவ்யா வைஷுவிடம் அவளுடைய மனதில் இருப்பதை வெளிக்கொணர்ந்து உறங்க வைத்து இருந்தாள்.


யாதவ் வருகை தரும் போது வைஷ்ணவி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அவளை தொல்லை செய்யாது காயவ்யாவை யாதவ் மெதுவாக சத்தமில்லாது அறையில் இருந்து வெளியே அழைக்க அவளுமே வெளியே வந்தாள்.


யாதவ்,"காவ்யா நவி என்ன சொன்னா? அவ மனசுக்குள்ள இருக்கிறது எல்லாம் வெளியில கொட்டிட்டாளா? இப்போ நோர்மலா இருக்காளா?" என வினவ, காவ்யா, " அவ ரொம்ப கஷ்டபட்டு இருக்கா அண்ணா. யார் கிட்டவும் சொல்லவும் முடயாமல் மெல்லவும் முடியாமல் என்ன பண்ணுறதுன்னே தெரியாமல் இருந்தப்போ தான் அந்த ப்ரொஃப் வேற அவ கிட்ட தப்பா பேசி இருக்கான்.


அந்த நேரம் அவ மைன்டுல இருந்தது எல்லாமே ஒன்னு தான். எல்லோர் கிட்டயும் கெட்ட பெயரும், ஒழுக்கம் கெட்டவன்னும் பெயர் எடுத்து நான் வாழ வேண்டிய அவசியமே இல்லைன்னு கை நரம்பை கட் பண்னி இருக்கா. அவ மனசுல இருக்கிறது எல்லாம் கேட்கும் போது எனக்கு மனசே வலிச்சிது அண்ணா" என்று வருத்தத்துடன் முடித்தாள்.



யாதவ், " அவ என் கிட்டயுமே எதைப் பத்தியும் சொல்ல இல்லைடா. எனக்கு கோலேஜுல ஒரு பொண்ணு தான் ஃபோன் பண்ணி பேசுனா. அவ சொல்லும் போது எனக்கு கோபம், ஆத்திரம், வருத்தம் எல்லாமே வந்திச்சு. ஆனால் எதுக்காக நவி என் கிட்ட மறைக்குறாங்குர கோபமும் எனக்கு இருந்திட்டே இருந்தது.


அவளா சொல்லும் வரைக்கும் நான் எதையுமே கேட்கக் கூடாதுன்னு அமைதியா இருந்தேன். ஆனால் அடுத்த நாளே இப்படி நடக்கும்ன்னு எதிர்பர்கவே இல்லை. அவ சூசைட் பண்ண முயற்சி பண்ணான்னு தெரிஞ்சதும் என் உயிரே போயிருச்சு.


அவ கண்ணை திறக்கும் வரையில உசுர கையில பிடிசிட்டு இருந்தேன். அதைப் போல கொடுமையாமன நேரங்கள் வாழ்கையில மறக்கவே முடியாது" என்று உரைத்து தலையைப் பிடித்தவாறே தளர்வுடன் சோஃபாவில் அமர்ந்தான்.


அதே நேரம் மற்றவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். நால்வரும் உள்ளே நுழைய யாதவ் தளர்வுடன் தலையைப் பிடித்து அமர்ந்து இருப்பதைப் பார்க்கவே மற்றவர்களுக்கு பாவமாக இருந்தது.


கம்பீரம், ஆளுமை, மிடுக்கு என்பவற்றுடன் சுற்றித் திரிந்தவன் இன்று மனைவியை எண்ணி கவலையுடன் ஓரிடத்தில் இருப்பதைப் பார்க்க வருத்தம் மேலிட்டது அனைவருக்கும்.


சாத்விக்கும், கார்த்திக்கும் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, அவனுடய இரு பக்கமும் சென்று நின்று தோளை அழுத்தி ஆறுதல் அளித்தனர்.


அவனிடம் சென்றவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள சனா, "வைஷு எங்க அண்ணா?" என சுற்றும் முற்றும் பார்த்தவாறு தேட, அதற்கு காவ்யா, "அவளை இப்போ தான் பேச வச்சி தூங்க வச்சேன் சனா. அவ இவளோ நாளாக மனசுல வச்சி இருந்ததெல்லாம் கொட்டிட்டா. அவளுக்கு இப்போ கண்டிப்பா ஓய்வு தேவை" என்று உரைக்க அவர்களுமே சரி என்று தலை அசைத்தனர்.


சாத்விக், "என்ன நடந்தது மித்ரன்?" என்று வினவி யாதவை அழுத்தமாகப் பார்க்க,யாதவும் எதையுமே மறைக்காது நடந்த அனைத்தையுமே கூற வசுமதியின் மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தாலும் அதை விட அதிகமக அப் பேரசிரியர் மேல் அனைவருக்கும் கொலை வெறியே வந்தது.



தொடரும்...

கருத்துக்களைப் பகிர,







ஒன்றரை மாசத்துக்கு அப்புறமா உங்களை சந்திக்கிறேன். ரியலி சொரி ஃபொர் த டிலே. எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் அப்புறமா ரமழான், ஹயர் ஸ்டடீஸ்னு இந்த பக்கமா வரவே நேரம் இருக்க இல்லை எனக்கு.

எனிவேஸ் இப்போ ஹயர் ஸ்டடீஸ்ல பிசியா இருக்கேன். அதனால டெயிலி யூடி கொடுக்க முடியாது. சோ எவ்ரி டியூஸ் டே(செவ்வாய்), ஃபிரை டே, (வெள்ளி) நேரம் தவறாமல் அப்டேட் வரும்....

என்னை புரிஞ்சிப்பிங்கன்னு நம்புறேன்
 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26343


கண்சிமிட்டும் தென்றலே


அத்தியாயம் 22


சாத்விக் நடந்தவற்றைக் கேட்க யாதவும் மறைக்காமல் அனைத்தையுமே மொழிய கேட்டவர்களின் இரத்தம் கொதித்தது.



சாத்விக், "எவளோ தைரியம் இருந்தால் என் கோலேஜ்ல இருந்துட்டே அவன் இந்த வேலையப் பண்ணி இருப்பான் ராஸ்கல். அவனெல்லாம் உயிர் வாழவே தகுதி இல்லாதவன். இப்போ எங்க இருக்கான் அவன்?" என்று உறும, யாதவ், "அவனுக்கு நானே சவோட பயத்தை கட்டிட்டேன். அடுத்து நீ என்ன வேணூன்னாலும் அவனை பண்ணிக்கோ ஒரு கோலஜோட நிர்வாகியா.


பாதிக்கப் பட்ட பொண்ணுங்களுக்கு நியாயத்தைக் கொடுக்க வேண்டியது உன் பொறுப்பு. விஷயம் வெளியில கசியாமல் பார்த்துக்கோ ப்ரவீன். இதுல ஒரு பொண்ணு இல்லை பல பொண்ணுங்க சம்பந்தபட்டு இருக்கங்க. எந்த காரணத்தை கொண்டும் அவங்க வாழ்கை பாதிக்கப்படக் கூடாது" என்று அறிவுறுத்தினான்.



சாத்விக்," அவன் இப்போ எங்கே இருக்கான்னு மட்டும் சொல்லு மீதியை நான் பார்த்துக்குறேன்" எனக் கூற, யாதவ் தனது மொபைலை எடுத்து வாட்சப் மூலமாக இடத்தை (லொகேஷனை) அனுப்பி வைக்க, சாத்விக் உடனே தன்னுடய ஆட்களிடம் பேசி தன்னுடைய இடத்திற்கு அக்கயவனை வரவழைக்கும் வேலையில் ஈடுபட்டான்.


இனிமேல் அக்கயவனின் வாழ்வு சாத்விக்கின் கைகளில் என்பதால் அவனைப் பற்றிய எண்ணம் நமக்கு அவசியம் இல்லை. செய்த தவறிற்காக நிச்சயமாக தண்டனையை அனுபவிப்பான் பிற்காலத்தில் சிறைச்சாலையில்.


அபி, "அண்ணா அடுத்து என்ன பண்ண போறிங்க?" என வினவ, யாதவ், "இன்னும் மூனு நாளில் வைஷுவுக்கும் எனக்கும் சின்ன ரிசப்ஷன் போல ஒரு பார்டி அரேஞ்ச் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன்.


உங்க கிட்ட இன்ஃபோர்ம் பண்ண முடிவு பண்ணால் நீங்க நேரடியகவே வந்து இருக்கிங்க. மறக்காமல் வாங்க. எங்க வீட்டு ஆளுங்க, நவி குடும்பம், என் ஃபிரன்ஸ், அவளோட கோலேஜ் படிக்கிறவங்க, ஸ்டாஃப்ஸ் வருவாங்க. நவி என் மனைவின்னு தெரியிரது நிறைய பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வரும்" என்று தீர்க்கமாக மொழிந்தான்.


இதுவே முக்கிய பிரச்சனையில் அவளை இழுத்து வைக்கப் போகின்றது என்பது அவன் அறியாத ஒன்று. அதுவே அவளையும் அவனுடைய வழக்கையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தப் போகின்றது என்பதை யூகிக்க முடியதவனாக இருந்தது விதியின் சதிராட்டமோ!!!!


காவ்யா, "வைஷு எந்திரிச்சாலும் அவ கிட்ட பழையதைப் பத்தி பேச வேணாம். நோர்மலவே பேசுங்க. இட்ஸ் பெடர் ஃபொர் ஹெர் ஹெல்த்" என ஒரு மருத்துவராய் கூற அதை மறுக்காது அனைவருமே ஏற்றுக் கொண்டனர்.


சனா, "வசு அண்ணி இப்பிடி பண்ணுவாங்கன்னு எதிர்பார்கவே இல்லை. வைஷு அவங்க கூட பிறந்த தங்ககச்சி தானே. கோபம் கண்ணை இந்த அளவுக்கு மறைக்குமா?" என்று எரிச்சலுடனும், ஆதங்கத்துடனும் நவிழ, "கண்டிப்பா சனா. கோபமும், குரோதமும் கண்ணை மட்டும் இல்லை, அறிவையுமே மறைக்கும். அதுக்கு உதாரணமா நான் உன் முன்னாடி நின்னுட்டு இருக்கேன்" என்ரு உரைத்து முடித்தான் யாதவ்.


வைஷு கண் விழிக்கும் வரையில் மற்றவர்கள் பல கதைகள் பேசி வளவளக்க வெகு நேரத்துக்கு பிறகு ஆழ்ந்த நித்திரயில் இருந்து கண் விழிக்க வெளியே பேச்சுக் குரல்களின் எண்ணிக்கை அதிகமாக கேட்க, அவசரமாக முகம் கழுவி வெளியே வந்தாள். அங்கே தன் தோழிகள் அவர்களுடைய கணவர்களோடு தேனிலவை முடித்து வந்து இருப்பதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைய அவளுடைய முகமே அதைத் தெளிவாகக் காட்டியது.



வைஷு, " சனா, அபி" என சத்தமாக அழைத்தவாறே ஓடி வந்து இருவரையுமே அணைத்துக் கொண்டாள். அவளுடைய முகத்தில் வெகு நாட்களுக்குப் பிறகு தெரியும் குதூகலத்தில் அங்கே இருந்தோரின் மனதுமே நிறைந்தது.


வைஷு, "எப்பிடி உங்க ஹனிமூன் எல்லாம் போச்சு?" என வினவ, அதற்கு மற்ற இருவருமே, "சூப்பரா போச்சு. மேடமுக்கு எப்பிடி நாள் போச்சு?" என்று இவர்களுமே மறு கேள்வி எழுப்பினார்கள்.


வைஷூ சிறு புன்னகையுடன், "எப்படியோ போச்சு. அதை விடுங்க. எப்போ ரிடன் வந்திங்க? கோலேஜ் நோட்ஸ் எடுத்துட்டிங்களா?" என்று வினவ, "இன்னும் இல்லை. இதுக்கு அப்புறமா தான் அதைப் பத்தியே யோசிக்க ஆரம்பிக்கனும்" என்றார்கள் அபி, சனா இருவருமே கோரசாக.


வைஷூ, "நான் ஜனவரியில இருந்தே ஒழுங்கா படிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். அது வரைக்குமே ஜோலியா டைம் ஸ்பென் பண்ணனும்" என்று உரைக்க, "ஒவ்வொரு முறையும் இப்படி தான் பிளேன் பண்ணுவோம். அடுத்த நாள் அதை பண்ண கிடைக்க இல்லைன்னா அந்த நாளையும் தள்ளிப் போட்டு அடுத்த நாள் ஒழுங்கா படிப்போம்னு பிளேன் பண்றதே நம்ம வேலையா போச்சு" என்று மொழிந்து தங்களுக்குளஃ சிரித்துக் கொண்டனர்.


இவர்கள் சந்தோஷமாக சிரிப்பதைப் பார்த்த ஆண்களுமே, இவர்கள் இதே போல் சந்தோஷமாக ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டனர்.


கார்த்திக், "உன் ரிசப்ஷனுக்கு எங்களை கூப்பிடவே இல்லையே வைஷூ" என்று பொய்யாய் கோபித்துக் கேட்க, "அண்ணா நான் கூப்பிட முன்னாடியே அத்தான் உங்களை கூப்பிட்டு இருப்பாங்கன்னு தெரியும். பொய் பேசக் கூடாது. பேசினாலும் பொருந்தப் பேசனும்" என்று கூறி கிளுக்கிச் சிரித்தாள் வைஷ்ணவி.


அபி, 'இது தேவையா?' என்ற ரீதியில் பார்க்க, சாத்விக் நமட்டுப் புன்னகையுடன் அவனை ஏறிட, 'அசிங்கப்பட்டுட்டியே கார்த்தி! அசிங்கப்பட்டுட்டியே!!' என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.


இவ்வாறு கலகலப்புடன் இவர்களுடைய பொன் நேரமும் கடக்க கௌதமும் மாலை வேலை முடித்து இவர்களுடைய கூட்டத்தோடு இணைந்துக் கொண்டான். அனைத்து ஜோடிகளுமே வெகு நாட்களுக்குப் பிறகு பழைய பகை, துன்பங்கள், வலிகள், பிரச்சனைகள் என அனைத்தையுமே மறந்து ஒருவரோடு ஒருவர் சந்தோஷமாக நேரத்தைக் கடத்தினர்.


அன்று இவர்களே சமைத்து சாப்பிட்டு குதூகலித்து யாதவின் ரிசப்ஷனிற்கான திட்டத்தை அறிந்து அவனுக்கு உதவிகளைச் செய்ய ஆரம்பிக்க வைஷூவிற்கு மருதாணி இலைகளைப் பறித்து அம்மியில் அரைத்து மருதாணி இட்டனர்.


அத்தோடு நான்கு பெண்களுமே தங்களுக்கு மருதாணி இட்டுக் கொள்ள வீட்டு வேலைகள் அனைத்தையுமே செய்ய வேண்டிய பொறுப்பு ஆண்களின் தலை மேல் விழுந்தது.


சனா, "ஒழுங்கா போய் இன்னிக்கு டினரை ரெடி பண்ணுங்க" என்று நால்வரிடமும் கட்டளையிட்டு அபியின் விரல்களிற்கு மருதாணி இட, சாத்விக்கை மற்ற மூன்று ஆண்களும் எள்ளலாய்ப் பார்த்தனர்.


'உன் ஆளு அப்படி. எங்க ஆளுங்க எங்க மேலே ரொம்ப பாசம் வச்சிருக்காங்க. இதெல்லாம் சொல்ல மாட்டாங்க' என்று கௌதமும், கார்திக்கும் அவனைப் பார்த்தனர்.


அவர்களது சிறிது சந்தோஷத்தையும் பொறுக்காத காவ்யா, "என்ன நீங்க இரண்டு பேரும் மசமசன்னு நின்னுட்டு இருக்கிங்க? போங்க போய் யாதவ் அண்ணா, சாத்விக் அண்ணாவுக்கு உதவி பண்ணுங்க" என்று முறைப்புடன் மொழிந்தாள் கட்டளையாக.


அவர்கள் அதிர்வுடன் முதலில் பார்த்தவர்கள் பாவமாக இறுதியில் தம் துணையைப் பார்க்க அபி, "என்ன மாமா பார்க்குறிங்க? யாதவ் அண்ணா ரொம்ப நேரமா வேலை பார்க்குறாங்க. அவருக்கு போய் உதவி பண்ணுங்க" என்று அவளும் விடாமல் விரட்டியடித்தாள்.


யாதவ் வேலை செய்ய ஆரம்பித்து இருந்ததால் கண்களால் இவர்களுக்கு இடையில் நடைபெறும் சம்பாஷணைகளையுமே பார்த்துக் கொண்டு இருந்தான். இறுதியில் அபி, காவ்யா மொழிந்ததில் இத்தனை நேரமாக அவன் அடக்கி வைத்திருந்த மொத்தச் சிரிப்பையுமே சிதறி வெடிக்க விட்டான்.


சாத்விக்குமே சத்தமாக சிரித்தவாறே யாதவைப் பார்த்தான். யாதவ் சிரித்து இது வரையில் அவன் பார்த்தது இல்லை. அவன் சிரிக்கும் போது கன்னங்களில் விழும் கன்னக்குழிகளும்,முத்துப் பற்களும் அவனது வசீகரத்தை அதிகரித்து இருந்தது.


வைஷ்ணவி எப்போதும் போல் அவனது சிரிப்பை அதிசயத்தைக் காண்பது போல் பார்த்தாள். ஆனால் இம்முறை அவளது விழிகளில் சிறிது இரசணைத் தன்மையும் தெரிந்ததோ!!


தன்னை அனைவருமே பார்ப்பதை உணர்ந்தவன் அனைவரையும் ஒரு முறைப் பார்த்து விட்டு இறுதியாக வைஷூவின் புன்னகை வதனத்தை அவனது பார்வை தீண்டிச் சென்றது.


வைஷூவின் மீதான அவனது பார்வையின் மாற்றத்தை சில நாட்களாகவே கௌதம் அறிந்து இருக்க உடனடியாக காவ்யாவைத் பார்த்து கண்சிமிட்ட காவ்யாவும் கண்சிமிட்டிச் சிரித்தாள்.


இவ்வாறு குட்டி கலாட்டாக்களுடன் அவர்களுடைய நாள் நிறைவடைய இரவு உணவையும் முடித்து விட்டே அங்கிருந்து சென்றனர். இவர்களுடைய நாள் சந்தோஷமாக செல்ல விஷ்ணு, வசுவின் நாளுமே அழகாய் சென்றது.


மாலை வேளைகளில் அவனுக்கு தேநீர் இருவருக்கும் எடுத்துச் சென்று இருவருமே சிறிது நேரத்தை ஒன்றாக செலவளிக்க ஆரம்பித்து இருந்தனர். இருவருமே சிறு சிறு உதவிகளை தங்களுக்குள்ளே செய்துக் கொள்ள அவர்களின் உறவுக்குள்ளே முன்னேற்றம் வந்திருந்தது.


அதிலும் விஷ்ணுவின் அழைப்புமே ஒற்றையாக நீங்க என்பதிலிருந்து நீ என்று மாறி இருந்தது. அவர்களுடைய உறவின் முன்னேற்றத்தில் இதுவும் ஒரு படியாக இருந்தது.


அன்று மாலை நேரம் விஷ்ணு வேலையை முடித்து வந்திருக்க வசுமதி அவனுக்காக தேநீர் தயாரித்து சென்றாள். அவன் குளித்து வந்தவுடன் இருவருமே அறையின் பல்கனியில் உள்ள மரத்தாலான அலங்கார நாற்காளிகளில் அமர்ந்துக் கொண்டனர்.


இருவருமே ஒவ்வொரு கோப்பைகளை எடுத்து மிடறு மிடறாக அருந்த விஷ்ணு, "இன்னும் மூனு நாளில் யாதவ், வைஷ்ணவியோட ரிசப்ஷன் இருக்கு. நீயும் கலந்துக்குவல்ல?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்த வசுமதி பதிலளிக்காது அமைதியாக இருந்தாள்.


விஷ்ணு, "ஏன் வசுமதி நீ வரமாட்டியா?" என்று புருவம் இடுங்க அழுத்தமாய் கேள்வி வெளிவர, வசுமதி, "என்னால அவளுக்கு இப்போ நிறைய பிரச்சனை வந்து அவ இந்த நிலமையில இருக்கா. அந்த கில்டி ஃபீலிங்கே இன்னும் என் மனசை விட்டு போக இல்லை.


இந்த நேரத்துல அவங்களுக்கு முக்கியமான ஒரு நாளில் நான் அங்கே வந்தால் அவங்களுக்கு சங்கடமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் நான் அவங்களை விட்டு ஒதுங்கியே இருக்கனும்னு நினைக்கிறேன். என்ட் வைஷூ என்னைப் பார்த்தால் எப்படி ரியெக்ட் பண்ணுவான்னே தெரியாது" என்று மனதை மறையாது அவனிடம் தெரிவித்தாள்.


விஷ்ணு, "நீ அதுல கலந்துக்காமல் இருந்தால் தான் அவங்க தப்பா நினைப்பாங்க. இன்னும் நீ பழசை மனசுல வச்சிட்டு அவங்களை ஒதுக்குறன்னு. என்ட் யாதவ் நீ கண்டிப்பா பார்ட்டிக்கு வரனும்னு ஸ்டிரிட்டா சொல்லி இருக்கான். நீ நினைக்குறது போல எதுவுமே தப்பா நடக்காது.


எந்த பிரச்சனையை விட்டும் ஓடக் கூடாது வசுமதி. எதிர்த்து நின்னு போராடனும். அப்போ தான் அதுக்கு ஒரு முடிவு வரும். இல்லைன்னா சவ்வு போல அந்த பிரச்சனை இழுத்துட்டே வரும். உன்னால நிம்மதியாவே இருக்க முடியாமல் போயிரும்" என்று விளக்கினான்.


பதிலளிக்காது மௌனமாகவே இருந்தவள் சில நொடிகளில் தன் ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு, "நான் அவங்க பார்டிக்கு வரேன்" என்று ஒருவித தெளிவுடன் புன்னகைக்க விஷ்ணுவும் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.


இருவருமே பொதுவாகக் கதைப் பேசி முடித்து தேநீரையும் அருந்தி முடித்தனர். வசுமதி கோப்பைகளை எடுத்து சமையலறைக்குச் செல்ல, விஷ்ணு அவ் நாற்காலியில் சாய்ந்து கண்களை மூட அவளுடைய டோலி கண் முன் தோன்ற, சிறிது நேரத்திற்கு முன் புன்னகைத்த வசுமதியின் முகமும் கண்ணுக்குள் தோன்ற அவசரமாக கண்களைத் திறந்தான்.


ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவனுக்கு காரணமின்றி இதழ்கள் விரிய வானத்தை வெறிக்க ஆரம்பித்தான் அவ் விரிந்த இதழ்களை மாற்றாது. அவன் மனதில் ஓடுவதை அவன் மட்டுமே அறிந்து இருந்தான்.


அவ்வாறு இவ்வாறு என்று கூறிய கண்சிமிட்டும் நேரத்திற்குள் மூன்று நாட்களும் பறந்தோடிவிட யாதவ் வைஷ்ணவி இருவருடைய சிறிய அளவிலான வரவேற்பும் நாளும் அழகாய்ப் புலர்ந்தது. யாதவ் ஒரு அறையில் தயாராக வைஷ்ணவி ஒரு அறையில் தயாராகினாள்.


யாதவ் தங்க நிறக் கரைப் படிந்த வெள்ளை நிற வேஷ்டி சட்டையில் கம்பீரமாக மீசையை முறுக்கி தயாராகி வெளியே வந்தான். இடது கையில் பிரேன்டட் கடிகாரம், வலது கையில் தங்கக் காப்பூ, கழுத்தில் எப்போதுமே அணிந்திருக்கும் மெல்லிய தங்க செயின் அணிந்து ஆண்மைக்கு உரித்தான அனைத்து அம்சங்களுடன் தயாராகி வந்தான்.


யாதவ், 'இன்னும் என்ன பண்றா? பாலர் ஆளுங்க போயே வன் ஹவருக்கு மேலே ஆச்சு. என்ன தான் தனியா ரூமுக்குள்ள இருந்து பண்றாளோ கடவுளுக்கு தான் வெளிச்சம்' என்று புலம்பியபடி கடிகாரத்தை பார்த்து அங்குமிங்கும் நடக்க வைஷ்ணவி தனது அறையை திறக்கும் சத்தம் கேட்டது.


யாதவ் அரவம் கேட்கும் புறம் திரும்ப, அவ்வாறே ஸ்தம்பித்து நின்று விட்டான். அவன் தெரிவு செய்த தங்க நிற பட்டுச்சேலையுடன், அவன் தெரிவு செய்த நகைகளை அணிந்து ஒப்பனையாளர்களின் உதவியுடன் பேரழிகாய்த் தெரிய இமைக்க மறந்து அவளையே பார்த்தான்.


ஆளை அசரடிக்கும் அழகு என்பதை அவன் கேள்வியுற்று இருக்கிறான் இதுவே அவன் அனுபவிக்கும்; பார்க்கும் முதல் தடவை. வைஷ்ணவி அழகானவள் என்று அவன் அறிவான் ஆனால் மொத்த அழகையுமே இன்று வெளிக் காட்டி இருக்க அவளை விட்டு பார்வையை திருப்புவது அவனுக்கு கடினமாக இருந்தது.


வைஷ்ணவி யாதவ் முன் நிற்பதைக் கவனிக்காது சேலைமடிப்பை சரி செய்தவாறே தலைக் குனிந்து வர அவனோடு மோதி அவள் நெற்றி வகுட்டில் வைத்திருந்த குங்குமம் சிறிதளவு அவனது வெள்ளைச் சட்டையில் ஒட்டியது.


வைஷூ எப்போதும் போல் பயத்தில் ஓரடி பின்னே சென்று அவனை நோக்க, அப்போதே யாதவின் அசத்தலான தோற்றத்தைப் பார்த்து பிரம்மித்து நின்றாள்.


இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து விழி வழியே ஒருவரை ஒருவர் ஊடுருவ முனைய, இவர்களை வெளியில் இருந்தே சத்தமாக கௌதம், "இன்னும் இரண்டு பேரும் என்ன பண்றிங்க?" என்று கத்திக் கொண்டே வந்தான்.


அதில் ஒருவரை ஒருவர் தங்களை சுதாகரித்து சமன்படுத்திக் கொள்ள வெவ்வேறு புறம் திரும்பிக் கொண்டனர்.


கௌதம் உள்ளே நுழைய இருவருடைய தடுமாற்றத்தைப் பார்த்து, 'கரடி போல தப்பான நேரத்துக்கு என்டிரி கொடுத்துட்டோமோ' என்று தனக்குள் பேச, 'சே சே மச்சான் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான். இவன் எல்லாம் பழம். சான்சே இல்லை' என்று உறுதியாக நினைத்துக் கொண்டு இருவரையும் பார்த்தான்.


அப்போதே அவனுடைய வெள்ளை பட்டு சட்டையில் சனாவின் குங்குமம் இருப்பதைப் பார்த்து வாயில் கை வைத்து, "உன்னைப் போய் பழம்னு நினைச்சேன் பார்த்தியா? என்னை செருப்பால அடிக்கனும்" என்று கடுப்புடன் மொழிந்தான்.


யாதவ் முகத்தை சுருக்கி சலிப்புடன், "என்னடா உளறிட்டு இருக்க?" என்று வினவ, "அப்போ நான் எதைப் பத்தி பேசுறேன்னு உனக்கு தெரியாது. ரொம்ப நல்லா நடிக்கிறடா. உன்னைப் போய் நல்லவன்னு நினைச்சேனே. ஐயோ ஐயோ!!" என வெளிப்படையாகவே தலையில் அடித்தான் கௌதம்.


யாதவ், "டேய்" என்று அழைக்க, "ஒழுங்கா துடைச்சிட்டு வெளியில வா" என்று கோபமாக கத்திவிட்டு அவனது சட்டையை பார்த்தவாறே வெளியேறினான். யாதவ் புரியாமல் குழம்பி வைஷூவைப் பார்த்து, "அவன் லூசு மாதிரி பேசுறான். வா போலாம்" என்று முன்னே சென்றான்.


வைஷூவிற்கும் கௌதம் பேசுவது முதலில் புரியாமல் இருந்தாலும், அவன் இறுதியாக பார்த்ததைக் கொண்டு அவன் கண்கள் சென்ற திசையைப் பார்த்த பிறகே அவளுக்கும் கௌதம் கூறியதன் பொருள் புரிந்தது.


வைஷூ, 'அட கிருஷ்ணா!!' என தலையில் அடித்தவள், "அத்தான் ஒரு நிமிஷம்" என்று அவனுடைய கையைப் பிடித்தாள். யாதவ் புரியாமல் அவளையும் அவளுடைய கரத்தையும் பார்க்க அவளோ அதைக் கவனியாது தனது சேலை முந்தானையை எடுத்து அவனை நெருங்கி அவன் மார்புச் சட்டையில் படிந்த குங்குமத்தை துடைத்து விட்டாள்.


காரிகையவளின் அழகும், வாசமும் அவனை மூச்சடைத்து கிறங்க வைக்க தன்னை கட்டுப்படுத்த வகையறியாது நின்றவன் அவள் இடையைப் பிடித்து தன்னோடு சேர்த்து இறுக்கி அவள் இதழோடு தன் இதழைப் பொறுத்தி தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டான்.


முத்தத்தை முடித்தவன் அவள் நுதலில் இதழ் பதித்து மீண்டும் ஒரு முறை அணைத்தவன் அடுத்து ஒன்றுமே நடவாதது போன்று, "போலாமா?" என்று வினவ வைஷூ நடந்த சம்பவத்தில் இருந்து வெளிவராது திக்பிரம்மை பிடித்தது போன்று நின்று இருந்தாள்.


சிறு புன்னகை உதட்டில் எழ அதை மறைத்துக் கொண்டவன், "நவி" என்று தோளை உழுக்க சிறு குழந்தை என திருதிருத்தாள். அதில் மேலும் புன்னகை வர, "என்னாச்சு?" என்று வினவ, "ஆமா என்னாச்சு?" என்று அவளுமே எதிர்கேள்வி கேட்டாள் நடந்ததை நம்ப முடியாது.


"அதான் நானும் கேட்குறேன். நீ என்ன ஷொக் அடிச்சது போல ஒரே இடத்துல நின்னுட்டு இருக்க?" என்று அவனும் விடாமல் வினவ, "அப்போ கண்டதெல்லாம் கனவா?" என புலம்பி இதழை வருட, யாதவ், "என்ன கனவு கண்ட? இந்த கொஞ்ச நேரத்துல பகல் கனவும் கண்டியா?" என்றான் சிரிப்பை மறைத்து.


வைஷூ அவசரமாக, "ஆமா. அது...." என ஆரம்பித்து அடுத்து கூறுவது தெரியாமல் தடுமாறி, "கனவு தனே? விடுங்க போலாம்" என்று கன்னச் சிவப்பையும், செவிமடலின் சிவப்பையும் மறைக்க அவசரமாக அங்கிருந்து வெளியேற யாதவ் சிரிப்பை கடினப்பட்டு அடக்கி இரசணையாக அவளைப் பின்னிருந்து பார்த்தவாறே வெளியேறினான்.



யாதவ் புன்னகை மாறாத முகத்துடன் வைஷ்ணவியைப் பின்தொடர அவளோ அவன் முகத்தை மீண்டும் பார்க்கவே கூடாது என்ற எண்ணத்தில் தன் வெட்கத்தை மறைத்து வேக எட்டுக்களை வைத்து முன்னே நடந்தாள்.


இருவரின் முகத்தில் தெரியும் புன்னகையில் காவ்யா, கௌதம் இருவருக்குமே மனம் நிறைய ஒருவரை ஒருவர் பார்த்து பார்வையை பரிமாற்றிக் கொண்டனர். காரில் இருஜோடிகளும் அமர்ந்தவுடன் பார்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஹோட்டலை நோக்கி கார் பறந்தது.


அங்கே யாதவ் அழைத்திருந்த அனைவருமே வந்திருந்தனர் அவனுடைய குடும்பத்தினர் உட்பட. யாதவ் முதலில் காரில் இருந்து இறங்கி வைஷூவிற்காக மற்றைய கதவைத் திறந்து விட்டான். அவள் இறங்க தன் கரத்தை அவளுக்கு நீட்ட மறுக்காமல் அவளும் பிடித்துக்கொள்ள ஒருவரோடு ஒருவர் கைக் கோர்த்தவாறு இறங்கினர்.


யாதவ், வைஷ்ணவி ஜோடியைப் பார்த்த அனைவருமே வியந்து போனர் இருவருடைய ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து. இருவரும் உள்ளே நுழைய வைஷ்ணவி அவளுடைய குடும்பத்தையும், யாதவின் குடும்பத்தையும் பார்த்து பயந்து தடுமாற அதைப் புரிந்துக் கொண்டவன் அவளுடைய கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான்.


நிகழ்ச்சியும் ஆரம்பமாக அனைவரின் முன்னிலையில் மைக்கை எடுத்தவன், "எல்லோருக்கும் வணக்கம். ஃபர்ஸ்ட் ஒஃப் ஆல் நான் கூப்பிட்டதுக்கு மதிச்சி இந்த ஃபங்ஷன்ல கலந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி. எனக்கு கல்யாணமாயிடிச்சின்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.


ஆனால் என் மனைவியை உங்களுக்கு அறிமுகப்படுத்துற நேரம் இப்போ தான் வந்திருக்கு. மீட் மை டியர் வைஃப் மிஸஸ் வைஷ்ணவி யாதவ் மித்ரன்" என்று அவளை தோளோடு அணைத்தவாறு அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான். ஐ.ஜியின் மனைவியும் அவரும் வந்திருக்க வைஷ்ணவியைப் பார்த்த உடனேயே ஐ.ஜியின் மனைவிக்குப் பிடித்துப் போனது.


வைஷூ பதட்டமாக யாதவின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு புன்னகை புரிய அவனுமே அவளுக்கு ஆறுதலாக தன்னருகிலேயே நிறுத்திக் கொண்டான். ஒவ்வொருவராய் அவர்களுக்கு வாழ்த்தை தெரிவிக்க ஐ.ஜியின் மனைவி அவர்களை நெருங்கி மனதார வாழ்த்தை தெரிவித்தார் இருவருடைய சிரத்தையும் வாஞ்சையுடன் வருடி.


ஐ.ஜியின் மனைவி வைஷூவைப் பார்த்து, "ஒருத்தரோட கண்ணைப் பார்த்தே அவங்களோட கரெக்டரை சொல்ல முடியும். அந்த வகையில நீ ரொம்ப நல்ல பொண்ணுமா. எங்க யாதவுக்கு ஏத்த பொண்ணுமா நீ" என்று நெற்றியில் முத்தமிட மனமும், முகமும் பூரிக்க அவரை அணைத்துக் கொண்டாள் வைஷூ.


வைஷூ அவரிடம் ஆர்வத்துடன், "நான் உங்களை அம்மான்னு கூப்பிடட்டுமா?" என்று வினவ பிள்ளைப் பாசத்தை அறியாத, குழந்தை ஏக்கத்தை வெக வருடங்களாக மனதில் சுமந்த அத்தாய்க்கு அவளது வார்த்தை வயிற்றில் பாலை வார்த்தது போன்று இருந்தது. கண்கள் கலங்க, "தராளமா" என்று குரல் கமற மொழிந்தார்.


ஐ.ஜி, யாதவ் இருவருமே ஐ.ஜியின் மனைவியின் குழந்தை ஏக்கத்தைப் புரிந்து இருந்தமையால் இத்தருணம் அவர்களுக்கும் நெகிழ்ச்சியாய் மாறி அவர்களது வாழ்விழும் முக்கியமான ஒரு தருணமாகியது.


ஐ.ஜி, "அவ உனக்கு அம்மான்னா நான் உனக்கு யாரு?" என்று அன்புடனும் ஏக்கம் வழியும் குரலிலும் கேட்க, "எனக்கு இன்னொரு அப்பா. நான் உங்களையும் அப்பான்னு கூப்பிடுறேன்" என்று அழகாய்க் கண்சிமிட்டினாள் வைஷ்ணவி.


அவளுடைய குறும்புப் பேச்சில் இருவருமே ஈர்க்கப்பட யாதவ் அவர்களை புன்னகை மாறா முகத்துடன் பார்த்தான். வைஷூ அவர்களோடு பல வருடங்கள் பழகியது போன்று உரிமையுடன் பேச அவர்களுமே தன்னுடைய புத்திரியாக எண்ணி அவளோடு சேர்ந்து வளவளக்க அங்கே ஆழமான கண்ணிற்குத் தெரியாத பிணைப்பொன்று அழகாய் உருவானது.


ஐ.ஜி, "அம்சமா இருக்கிங்க இரண்டு பேரும். சந்தோஷமா கடைசி வரைக்கும் இருங்க ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து மாறாத காதலோட கடைசி மூச்சு வரைக்கும் வாழுங்க" என்று இருவரையும் மனமார அம்மூத்த தம்பதிகள் ஆசிர்வதிக்க யாதவ் வைஷ்ணவி இருவருமே அதை மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டு அவர்களை அணைத்துக் கொண்டனர்.



தொடரும்.....


கருத்துக்களைப் பகிர,




 
Status
Not open for further replies.
Top